நம் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் அப்பட்டமாக சில உலக நாயகர்களின் நடிப்பை அப்படியே நமக்கு தெரியாமல் காப்பி அடிகின்றனர்..அவர்கள் நடை, உடை, பாவனை இவை எல்லாம் கொஞ்சம் கூட மாறாமல் சில உலக நடிகர்களின் நடிப்பை ஒத்து போகின்றது..அட நடிப்பை கூட விடுங்கள் சில உலக திரைப்படத்தில் வரும் காட்சிகளை கூட அப்படியே காப்பி அடித்து விடுகின்றனர்..இவற்றை எல்லாம் கடைக்கோடி தமிழன் வரை கொண்டுப்போய் சேர்ப்பது தான் இந்த பதிவின் நோக்கம்..அவர்களின் முகமுடியை கிழித்து எறிவோம்..
அப்படிப்பட்ட நடிகர்களை பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.முதலில் சம்பந்தப்பட்ட நடிகர்களை பார்ப்போம்..
முதலில் நம் வடிவேலு:
வடிவேலு தன்னுடுய பல்வேறு நகைச்சுவையின் முலம் நம் மனம்கவர்ந்த நடிகர் ஆகிவிட்டார்..இன்று தன்னுடுய அசுர நடிப்பின் முலம் எங்கயோ போய்விட்டார்..
அவரின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்று நினைக்ரிர்கள்..அவர் நடிக்கும் பொழுது அவரின் முகவாய் கட்டையை (தாடை) உற்று நோக்குங்கள் உங்களுக்கே புரியும்..
அந்த நடிப்புக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை "கினோ செச்லி" (Gino Cekli ) என்ற புகழ்ப்பெற்ற இத்தாலிய நடிகரின் அப்பட்டமான தழுவல் நடிப்பு தான் இங்கே இவர் நமக்கு தருவது..
அவரின் பல நகைச்சுவை காட்சிகள் பல்வேறு இத்தாலிய திரைப்படத்தை தழுவியே எடுக்கப்பட்டது..
அதுவும் குறிப்பாக அந்த தலைநகரம் படத்தில் வரும் "யே என்னை வச்சி எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே" என்ற அந்த காட்சி "மிரகல மொரடோ"(Miracalo morado ) என்ற படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி..
இதே மாதிரி பல காட்சிகளை பல இத்தாலிய படங்களில் இருந்து தான் உருவி உள்ளார்..இது எல்லாம் தெரியமால் அவர் தோன்றும் காட்சிகளில் இங்கே நம் கை தட்டி விசில் அடித்து கொண்டு இருக்கிறோம்..மற தமிழனாய் இருந்த நாம் ஏன் எதற்கு என்று ஆராயமால் இன்று மட தமிழனாய் ஆகி வருகிறோம் என்பது தான் என் வேதனை..சரி விடுங்கள் அடுத்தவர் யார் என்று பார்ப்போம்..
வையாபுரி:
நமக்கு நன்கு பரிச்சயமான நகைச்சுவை நடிகர் தான் இவரும்..ஆரம்ப காலத்தில் இவரை நாம் கவனிக்க தவறினாலும் பின்பு ஓரளவு பிரபலம் ஆகிவிட்டார்..ஆனால் அந்த அந்தஸ்தை இவர் அடைவதற்கு உண்மையான காரணம்..
"லிங்க் சிக் டும்" (Link-Chik-Tum )என்ற ஜப்பானிய நடிகர் ஒருவரின் நடிப்பு தான் காரணம் என்றால் மிகை ஆகாது..அப்படியே செராக்ஸ் எடுத்ததை போல் அவரின் நடிப்பை இவர் பால்லோ பண்ணுகிறார்..
இவரின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளும் சரி ஜப்பானிய படமான "நிக்கோ ஈகா"(Nikko Eega ) என்ற படத்தில் வரும் காட்சிகளும் சரி ஒரே அமைப்பை சார்ந்தவை..
அவரின் நடையை வைத்து கண்டுப்பிடித்து விடலாம் இது அப்பட்டமாக "லிங்க் சிக் டும்" நடிப்பு என்று..
வையாபுரி வீட்டிற்கு சென்றிர்கள் என்றால் நீங்கள் கவனிக்கலாம் அந்த நடிகரின் படங்கள் மட்டும் அடங்கிய டீவீடி தொகுப்பை..
இது தெரியாமல் அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் நம் சிரித்து மகிழ்ந்தோம்..இந்த உண்மை கூட அறியாத கூறுகெட்ட தமிழன் வாயில் தர்பையை போட்டு பொசுக்கினாலும் தகும்..
அடுத்து நம் வீர தளபதி "ஜே.கே.ரித்தீஷ்"..
இவரின் கானல் நீர், நாயகன் போன்ற படைப்பில் இவரின் நடிப்பை பார்த்து போய் பிரமித்து தான் அவரை நாம் பாராளுமன்றம் வரை அனுப்பினோம் என்பதை கடைக்கோடி தமிழன் வரை நன்கு அறிவான்..
ஆனால் அந்த நடிப்புக்கு மூல காரணம் யார் என்று யாரவது யோசித்து பார்த்து உள்ளிர்கள..
உலக திரைப்படங்கள் பார்த்தால் அதை பற்றிய அறிவு கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கும்..நீங்கள் எல்லாம் "உலகம்" என்று எழுத சொன்னாலே "உலோகம்" என்று எழுதகூடிய ஆட்கள் உங்களிடம் அதை எதிர்ப்பார்ப்பது என் தப்பு தான்..அதையும் நானே சொல்லி தொலைக்கிறேன்..கேட்டு தொலையுங்கள்..
ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள உமண்டா என்ற குட்டி தீவில் பிறந்து பிற்காலத்தில் தன் நடிப்பு திறமையால் ஆஸ்திரேலியா திரைதுறையையே தன் வசம் கட்டிபோட்ட "ஜாம் பக்"(Jam Buck ) என்ற ஈடு இணை அற்ற அந்த ஒப்பற்ற நடிகனின் தழுவல் தான் இந்த ரித்தீஷ் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..
நாயகன் படத்தில் வரும் "கேட்டக்க அள்ளி கொடு", "நிலா நிலா ஓடி வா" என்ற பாடல்களில் அவர் போடும் ஸ்டெப்பை கூர்ந்து கவனியுங்கள் உங்களுகே உண்மை புரியும்..அது அப்படியே ஆஸ்திரேலியா திரைப்படமான "தி ஃப்ரைடே நைட் பிவர்" (The Friday Night Fever )என்ற படத்தில் "ஜாம் பக்" ஒரு ஹிப்-ஹப் பாட்டில் அவர் போடும் ஸ்டேப் தான் அனைத்தும்..
இது தெரியமால் அவர் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் செய்து வேடிக்கை பார்த்தான் நம் தமிழன்..
நான் தெரியாம தான் கேக்குறேன் எதயையும் ஆராய தெரியாத தமிழனக்கு..எவன் திரையில் தோன்றினாலும் விசில் அடித்தான் குஞ்சிகளாக மாறி விசில் மட்டும் அடிக்கிறோம்..தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் ..உங்கள் அறிவை உலக திரைபடங்கள் பார்த்து வளர்த்து கொள்ளுங்கள்..இப்படியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டதிர்கள்..
டிஸ்கி: இது எதிர்ப்பதிவு இல்லை..உலக சினிமாவை கண் இமைக்காமல் தொடர்ந்து பார்பவர்களுக்கு உண்மை புரியும்..
56 comments:
உலோக திரைபடங்கள் சாரி உலக திரைபடங்கள் எல்லாம் எனக்கு தெரியாதுங்குங்க ஆனா நீங்க சொன்ன
//"இவரின் கானல் நீர், நாயகன் போன்ற படைப்பில் இவரின் நடிப்பை பார்த்து போய் பிரமித்து தான்" //
உண்மைங்க உண்மை
கலைக்கு எதிர் பதிவு போட்ட அண்ணன்
வினோத்கெளதம் வாழ்க
ஹா..நடு இரவில் ஒரு பின்னுட்டம்..நன்றி விஷ்ணு..
வசந்த் யாரு உங்கக்கிட்ட அப்படி சொன்னது..இது ச்சும்மா...
இதெல்லாம் ரொம்ப ஓவர் இத்தாலிப் படம் ஜப்பானிய படம் எல்லாம் நம்ம நாட்டில் டிவிடியில் கிடைக்காதுங்கோ.
இனிமேல நானும் வளர்த்துகிறேன்
என்னமோ
நடத்துங்க!!
நமக்கு
ஒன்னும்
புரியல!!
//பிற்காலத்தில் தன் நடிப்பு திறமையால் ஆஸ்திரேலியா திரைதுறையையே தன் வசம் கட்டிபோட்ட "ஜாம் பக்"(Jam Buck ) என்ற ஈடு இணை அற்ற அந்த ஒப்பற்ற நடிகனின் தழுவல் தான் இந்த ரித்தீஷ் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..
//
அப்ப நம்ம அண்ணாச்சியும் அந்த அளவு வளருவாருண்ணு சொல்றீங்களாண்ணா..,
தல
சின்ன குழந்தைகள் பெரியவங்கள பார்த்துதான் கத்துக்கும் தல..
அது தப்புக் கிடையாது.
நம்ம நடிகர்கள் இவ்ளோ உலகப் படங்கள் பார்க்கறாங்க அப்படிங்கறதே எவ்ளோ நல்ல செய்தி
ஓட்டுக்கள் போட்டாச்சு
Ungal thedal nalla irukku thambi.Rithish nadippai paarthu piramichu -hihihi,ungal kindalukku Rithish right, aana kindal alavu pathaathu.
வர வர உன் நக்கலுக்கு அளவே இல்லாம போச்சி... இத ஸீரியஸ் பதிவுன்னு நெனச்சு கமெண்ட் வேற பண்றாங்க.. என்ன கொடும இது..
என்ன தைரியம் இருந்து இருந்த காமடி லிஸ்ட்ல எங்க அண்ணன் ரித்திஷ் பேர சேர்த்து இருப்ப?
//இவரின் கானல் நீர், நாயகன் போன்ற படைப்பில் இவரின் நடிப்பை பார்த்து போய் பிரமித்து தான் அவரை நாம் பாராளுமன்றம் வரை அனுப்பினோம் என்பதை கடைக்கோடி தமிழன் வரை நன்கு அறிவான்..//
ஒரு திருத்தம்.. பிரமித்து போய் இல்ல பயந்து போய் ...
super satire,Vinoth.Keep it up.
நண்பா இரவு படிக்கிறேன்.
voted.. i will meet u back @ office
நடக்கட்டும் உன் ஆங்கில பிட் அறிவு தெரியுது ;)
படம் பார்க்கவே பொருமை தேவைப்படும் காலம் எப்படி இவ்வளவு பொருமையா எல்லாவற்றையும் தேடி தக்க விளக்கத்தோடு.....ய்ப்பா கவிதை எழுதுவது தான் ஈஸிப்பா....
@ விஷ்ணு..
@ thevanmayam ..
@ SUREஷ் (பழனியிலிருந்து)..
@ Muniappan Pakkangal..
@ Suresh said..
@ தமிழரசி..
அனைவர்க்கும் நன்றி..
இந்த பதிவில் உள்ள விஷயங்கள் யாவும் உட்டாலக்கடி, டுபகூர்ர் சுருக்கமா பொய்..
பதிவில் நான் கொடுத்து உள்ள கலைஞர்கள் அனைவரும் தன் சொந்த திறமையாலும் விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த அளவுக்கு முன்னேறி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள்..
அவர்கள் யாரையும் பின்பற்றி நடிக்கவில்லை என்பதே நிஜம்..தங்களுக்கு என தனி பாணியை கொண்டு உள்ளார்கள்..
இது ச்சும்மா விளையாட்டுக்கு நான் எழுதிய பதிவு..
என் முலம் தவறான தகவல்கள் உங்களை வந்து சேர்ந்து விட கூடாது என்பதற்க்காகவே இந்த விளக்கம்..மறுபடியும் நன்றிகள் பல..
@ அனானி..
அன்பு அனானி மேலே நான் கொடுத்து உள்ள தகவல்கள் அனைத்தும் உத்தலக்கடி..
@ நசரேயன் said...
//இனிமேல நானும் வளர்த்துகிறேன்//
அண்ணா நீங்களுமா..!!!
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
@ ஷண்முகப்ரியன்..
Thanks sir..
@ ஆ.முத்துராமலிங்கம்..
நன்றி நண்பா..
@ கலையரசன்..
நன்றி மச்சி..
@ KISHORE said...
//வர வர உன் நக்கலுக்கு அளவே இல்லாம போச்சி... இத ஸீரியஸ் பதிவுன்னு நெனச்சு கமெண்ட் வேற பண்றாங்க.. என்ன கொடும இது..//
நீ தான் மச்சான் என் நண்பன் பல வருடம் என் கூட பழகியதால் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறாய்..
//என்ன தைரியம் இருந்து இருந்த காமடி லிஸ்ட்ல எங்க அண்ணன் ரித்திஷ் பேர சேர்த்து இருப்ப?//
டேய் அவரு நம்ம அண்ணன் டா..
ஏப்பா உண்மைய தான் சொல்றியா!
இல்ல வாய்க்கு வந்த பேர உளறி வைக்குறியா!
ஒன்னும் புரியலையே!
பாத்தியா மக்கா... நீ காமெடி பன்னறது கூட தெரியாம,
எப்டி பின்னூட்டம் வருது பாரு...
1. இது ஒரு காமெடி பதிவு, அப்டின்னு தலைப்பு போட்டுரு..
2. நீ சீரியசா எழுது, அவங்களே அத காமெடின்னு நினைச்சு சிரிப்பாங்க!
3. நடு நடுவுல ஹா..ஹா.. ஹா., கி..கி..கி. ன்னு நீயே சிரிக்கற மாதிரி பிராகெட்டுல போட்டுகோ!
இது நல்லா இருக்கே
இதுக்கு பேருதான் நக்கலா
அருமை வினேத்
வாழ்த்துகள்
வினோத், நல்ல வேலை. பதிவு முழுவதும் படிச்சிட்டு அதோட பின்னூட்டம் அனைத்தையும் படிச்சதால தப்பிச்சேன். இல்லேன்னா நானும்ல மாட்டி இருப்பேன்.
சுரேஷோட பிறந்த நாள் பதிவ படிச்சதில் இருந்து இன்னும் தெளிவா ஆயிட்டேன்பா. என்னா வில்லத்தனம்? ஹா ஹா ஹா
//நீ தான் மச்சான் என் நண்பன் //
அந்த கொடுமைய தன் நெனச்சா தான்...
//பல வருடம் என் கூட பழகியதால் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறாய்..//
டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் நாம யாருன்னு இந்த உலகத்துகே தெரியும்... நமக்கு எதுக்கு விளம்பரம்... ?
@ வால்பையன் said...
//ஏப்பா உண்மைய தான் சொல்றியா!
இல்ல வாய்க்கு வந்த பேர உளறி வைக்குறியா!
ஒன்னும் புரியலையே!//
வால்ஸ் நீங்களுமா புரிந்து கொள்ளவில்லை என்ன ஒரு சோதனை ..
@ kalai..
//பாத்தியா மக்கா... நீ காமெடி பன்னறது கூட தெரியாம,
எப்டி பின்னூட்டம் வருது பாரு...//
உண்மையில் இதை நான் எதிர்ப்பர்கவில்லை கலை..
நீ சொல்ற மாதிரி மேல இது காமெடி பதிவு என்று நான் எழுத வேண்டும் போல் இருக்கிறது..
@ என் பக்கம் said...
//இது நல்லா இருக்கே
இதுக்கு பேருதான் நக்கலா
அருமை வினேத்
வாழ்த்துகள்//
கான்செப்ட் புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பா..
நான் கூட சீரியஸ் பதிவுன்னு நினைத்துவிட்டேன். இத்தாலி பட்ம் பார்க்கும் எங்கள் கைபுள்ள வாழ்க!
அடுத்து ரித்திஷ் நடிக்கும் படத்தில் மைகேல் ஜாக்ஸன் பாடலை உல்டா செய்கிறாரம்
@ S.A. நவாஸுதீன் said...
//வினோத், நல்ல வேலை. பதிவு முழுவதும் படிச்சிட்டு அதோட பின்னூட்டம் அனைத்தையும் படிச்சதால தப்பிச்சேன். இல்லேன்னா நானும்ல மாட்டி இருப்பேன்.
சுரேஷோட பிறந்த நாள் பதிவ படிச்சதில் இருந்து இன்னும் தெளிவா ஆயிட்டேன்பா. என்னா வில்லத்தனம்? ஹா ஹா ஹா..//
தல உண்மையில் இதை நான் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்ட பதிவு கிடையாது..எல்லோரும் அதில் இருக்கும் நக்கல் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்..அனால் பாதி பேருக்கு மேல் இது ஒரு சீரியஸ் பதிவு என்று நினைத்து பின்னுட்டம் இட்டது தான் ஆச்சரியம் சுரேஷையும் சேர்த்து..
@ ஷாகுல் said...
//நான் கூட சீரியஸ் பதிவுன்னு நினைத்துவிட்டேன். இத்தாலி பட்ம் பார்க்கும் எங்கள் கைபுள்ள வாழ்க!//
முதல் வருகைக்கு நன்றி தல..
முதல் முறையாக எதிர்ப்பதிவு போட்டு ..அதற்கு வேறு மாதிரியான எதிர்மறை பின்னுட்டங்கள்..பாதிப்பேருக்கு மேல் இதை ஒரு சீரியஸ் பதிவு என்று நினைத்து விட்டார்கள்..நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லைங்க மக்களே..மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன் இது முழுக்க முழுக்க ஒரு டக்கால்டி பதிவு..:))
Blogger// வினோத்கெளதம் said...
முதல் முறையாக எதிர்ப்பதிவு போட்டு ..அதற்கு வேறு மாதிரியான எதிர்மறை பின்னுட்டங்கள்..பாதிப்பேருக்கு மேல் இதை ஒரு சீரியஸ் பதிவு என்று நினைத்து விட்டார்கள்..நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லைங்க மக்களே..மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன் இது முழுக்க முழுக்க ஒரு டக்கால்டி பதிவு..:))//
நானும் ரவுடி தான் ரவுடி தான் ரவுடி தான் ...அப்படி இருக்கு...
@ KISHORE..
//நானும் ரவுடி தான் ரவுடி தான் ரவுடி தான் ...அப்படி இருக்கு...//
கடவுளே உண்மையா சொன்ன அதுக்கு ஒரு எதிர்குரல்..
@ Kishore..
நான் சொன்னது எனக்கு பின்னுட்டம் இட்ட பாதிப்பேர் பதிவுலகத்தில் இருக்கும் பாதிப்பேர் இல்லை..அட்லீஸ்ட் அவங்களுக்கு Explain பண்ண வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது..:))
'Padikkadhavan' padathuls vivek koda walking style kooda yedho hollywood nadigarin bani yendru nanbar oruvar solla kelvi pattirikren...adahanala naanum indha padhiva "serious" nu nenaichen...Krish
நீங்கள் எல்லாம் "உலகம்" என்று எழுத சொன்னாலே "உலோகம்" என்று எழுதகூடிய ஆட்கள் உங்களிடம் அதை எதிர்ப்பார்ப்பது என் தப்பு தான்..அதையும் நானே சொல்லி தொலைக்கிறேன்..கேட்டு தொலையுங்கள்..
Lollu?????
அட ஆண்டவா வினோத்து....இப்புடி போட்டு தாக்குறியே... சும்மா சொல்லு.. இது கலைக்குப் போட்ட எதிர்ப்பதிவு தானே
@ Anonymous said...
//'Padikkadhavan' padathuls vivek koda walking style kooda yedho hollywood nadigarin bani yendru nanbar oruvar solla kelvi pattirikren...adahanala naanum indha padhiva "serious" nu nenaichen...//Krish//:
நன்றி கிருஷ்..விவேக் காப்பி அடித்தாரா முன்னாடியே தெரியாமல் போய் விட்டதே..
@ Keith Kumarasamy said...
//அட ஆண்டவா வினோத்து....இப்புடி போட்டு தாக்குறியே... சும்மா சொல்லு.. இது கலைக்குப் போட்ட எதிர்ப்பதிவு தானே//
எப்பா கீத்..நீயாவது கண்டுப்பிடித்தையே..
இது ச்சும்மா விளையாட்டுக்கு நான் எழுதிய பதிவு..
என் முலம் தவறான தகவல்கள் உங்களை வந்து சேர்ந்து விட கூடாது என்பதற்க்காகவே இந்த விளக்கம்..மறுபடியும் நன்றிகள் பல..
யப்பா ஒரு வாரம் கழித்து வந்தாதால மாட்டிகலை.....
எல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க....
இவரின் கானல் நீர், நாயகன் போன்ற படைப்பில் இவரின் நடிப்பை பார்த்து போய் பிரமித்து தான் அவரை நாம் பாராளுமன்றம் வரை அனுப்பினோம் என்பதை கடைக்கோடி தமிழன் வரை நன்கு அறிவான்..
இது தான் செம காமெடி
உட்டாலக்கடி ஓகே. நம்ம கமலின் சில காமெடி படங்கள் சார்லி சாப்பிளனை காப்பி அடித்திருப்பார்.
@ Sakthi..
//யப்பா ஒரு வாரம் கழித்து வந்தாதால மாட்டிகலை.....
எல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க....//
ச்சும்மா தமாசுங்க..:))
@ கே.ரவிஷங்கர் said...
//உட்டாலக்கடி ஓகே. நம்ம கமலின் சில காமெடி படங்கள் சார்லி சாப்பிளனை காப்பி அடித்திருப்பார்.//
ஆமாம் சார் நான் கூட சில படங்களில் பார்த்து உள்ளேன்..எனக்கு கமல் சில சோக காட்சிகளில் பார்க்கும் பொழுது கூட சார்லி சாப்ளின் ஞயபகம் வரும்..
//இது எதிர்ப்பதிவு இல்லை..உலக சினிமாவை கண் இமைக்காமல் தொடர்ந்து பார்பவர்களுக்கு உண்மை புரியும்..//
அதெல்லாம் எனக்கு புரியாது நண்பா
@ ஆ.ஞானசேகரன்..
//அதெல்லாம் எனக்கு புரியாது நண்பா//
நண்பா நான் மட்டும் உலக சினிமாவை கரைத்து குடித்தவனா.:))
இந்த பதிவுல எல்லாம் மேட்டர் டுபாக்கூர்...
@ பிரதீப்..
கண்டிப்பாய் வருகிறேன் நண்பா..
@ gonzalez..
U have been alredy added in my list buddy..
ஆனா வெளையாட்டுக்கு கூட 'நம்ம' அண்ணன் , ரித்தீஷை கிண்டல் பண்ணி இருக்க வேண்டாம்..
இவரோட நடிப்பை பாத்து சமீபத்துல ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் அவங்களோட பாடத்திடத்துல அதையும் சேர்க்கப்போறதா நம்பத்தகுந்த வட்டரங்கள்ள இருந்து செய்தி வருது.. அவரே பொய் கலாய்ச்சுட்டீங்கலே வினோத் !!
நீங்கள் எல்லாம் "உலகம்" என்று எழுத சொன்னாலே "உலோகம்" என்று எழுதகூடிய ஆட்கள் உங்களிடம் அதை எதிர்ப்பார்ப்பது என் தப்பு தான்..அதையும் நானே சொல்லி தொலைக்கிறேன்..கேட்டு தொலையுங்கள்.. //
இது போன்ற எழுத்து நடையை தவிர்க்கலாம் வினோத்.
நல்ல விஷயங்களை நல்ல விதமாகவும் சொன்னால் அதற்கு தனி அழகுண்டு.
good work goutham, i dont know this before all thiese stuff. not onl y comedy scene many of the A.R rehman, deva tha music directors also copied many music from other foreign films.
hi goutham avaraley ungal blog linkai naan ennudaya blogil link seithullane.
parkavum http://eradini.blogspot.com/
athey pol neengaullum en blogai linkai ungal blogil podavum. if you do that our page rank will go higher in google rank search emgine. we get more visitors to our blog.
@ செந்தில்குமார் said...
//ஆனா வெளையாட்டுக்கு கூட 'நம்ம' அண்ணன் , ரித்தீஷை கிண்டல் பண்ணி இருக்க வேண்டாம்.. //
ரித்தீஷ் நடிப்பை பார்த்து போய் பிரமித்த பல பல்கலைகழகங்களில் Oxford University ஓன்று..:))
@ விக்னேஷ்வரி said...
//இது போன்ற எழுத்து நடையை தவிர்க்கலாம் வினோத்.
நல்ல விஷயங்களை நல்ல விதமாகவும் சொன்னால் அதற்கு தனி அழகுண்டு.//
இல்லை விக்கி..அந்த வரிகள் மட்டும் இல்லை இந்த பதிவில் பல வரிகளில் தமிழர்களை கொஞ்சம் திட்டும் தொனியில் தான் எழுதி உள்ளேன்..
பதிவின் நோக்கம் தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்..
எல்லாமே பொய்..
நம் தமிழ் சினிமாவின் திறமையாளர்கள் உலக சினிமாவின் திறமைக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதே பதிவின் நோக்கம்..அதை நான் வேறு மாதிரி சொல்லி உள்ளேன்..ஆனால் நிறையா பேர் இதை ஒரு சீரியஸ் பதிவு என்று எடுத்து கொண்டார்கள்..முழுக்க முழுக்க காமெடி(நானே சொல்லி கொண்டல் தான் உண்டு)..நீங்கள் பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக அது தவறான வார்த்தையாக தெரிய வாய்ப்பு இல்லை..
கலை நீ வந்து கொஞ்சம் கம்மென்ட் பண்ணா புரிஞ்சிக்க வாய்ப்பு உண்டு..இல்லை அவர் சொல்லியும் நான் அந்த வரியை நீக்கவில்லை என்பது போல் ஆகிவிடும்..
Post a Comment