Wednesday, November 18, 2009

காட்சிகளும் கதையும் - 1

கதை 1 :

விக்னேஷ் காரை வழக்கம்போல் பார்க் பண்ணிவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அழுத்த முற்ப்பட்டபொழுது தான் கவனித்தான் கதவு வழக்கத்திற்கு மாறாக மெலிதாக திறந்து இருந்ததை.
"இவளுக்கு என்ன ஆச்சு"..என்று நினைத்தான். வாணி என்று அழைத்தும் எந்த பதிலும் இல்லை. ஒரு வினோதமான நிசப்தம் வீடு முழுவதும் நிலவியது.. சமையலறையில் நுழைந்து பார்த்தான் ஆளை காணவில்லை..மெலிதாக ஒரு சந்தேகம் படர்ந்தது.."ஒரு வேளை..ச்சே..அப்படி நினைக்க கூட முடியாது..வாணி அப்படி இருக்கமாட்டா..அது வேற இல்லமா நேத்து தான் அவ கூட இரவு முழுக்க உக்கார்ந்து பேசினோம்..
கல்யாணத்திற்கு முன்பு காதல் என்பது பெரும்பாலனவங்க வாழ்கையில சகஜமானது..இப்ப அது குறுக்கிட்ட அதை நம்ம எதார்த்தமா எடுத்துக்கிட்டு கடந்து போய்டனும்..மனசுல அந்த நினைவுகள் எப்பயாவது வந்தா கூட அது உறுத்தலா இல்லாத மாதிரி நம்ம தான் பார்த்துக்கணும்..ஒரு கணவனா இதுக்கு மேல நான் எப்படி உனக்கு விளக்க முடியும்..அது வேற இல்லாமல் நமக்கு குடும்பம் குழந்தைன்னு ஆகிட்ட பிறகு"..என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே "குழந்தை" என்ற வார்த்தை..ஆமாம் மிருதுளா கூட இல்லையே எங்க என்று குழம்பினான்..அவள் மொபைலுக்கு ட்ரை பண்ணால் அனைக்கபட்டு இருந்தது.
"எங்க போய் தொலைஞ்சா.." என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அறையின் உட்புறம் இருந்த பாத்ரூமில் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது..உள்ளே நுழைந்து பார்த்தவன் முதலில் கண்ணாடியில் 'ரத்தத்தில்'எழுதி இருந்த வார்த்தைகளை பார்த்து மிரண்டு போனான்.."விலகி போகிறேன் விட்டு விடுங்கள்.."..அதற்கு மேல் பாத் டப்பின் பின்ப்புறம் நிழறுவமாய் ஸ்க்ரீனுக்கு பின் தெரிந்த குழந்தை மிருதுளாவின் உருவத்தை பார்த்தவுடன் தலை சுற்றியது..
(நிகழ்வுகளால் நிரப்பப்பட்டதே சம்பவம்..அனால் நிகழ்வுகளை மட்டும் வைத்தே நம் சம்பவத்தின் தன்மையை அறிவது கடினம்..ஏன் என்றால் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பார்வையில் மாறுப்படும்..பலரின் பார்வையை வைத்து தீர்மானிப்பதே நிகழ்வின் உண்மையை விளக்கும்)..

கதை 2 :

ராஜா அந்த நள்ளிரவிலும் தன் ஜீப்பை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான்..இங்கே "புதுசத்திரத்திற்கு" ட்ரன்ஸ்ஃபர் ஆகி பத்து நாட்கள் தான் ஆகி இருந்தது.வரிசையாக நடந்த நான்கு கொலைகள் தான் அவனை இந்த ஊருக்கு மாற்றி இருந்தது .மேலதிகாரிகள் இவன் மேல் வைத்து இருந்த நம்பிக்கை.முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் ஒரு அடி கூட இந்த கேசில் முன்னேற முடியாதது.இவை எல்லாம் காரணமாக இருந்து மூனே மூன்று நாட்களில் எல்லாம் முடிந்து ட்ரான்ஸ்ஃபர் நிறைவேற்றப்பட்டு இருந்தது.பத்து நாட்கள் ஆகியும் ராப்பகலாக அலைந்தும் ஒரு துப்பு கூட அவனுக்கும் கிடைக்கவில்லை..ஒரே ஒரு விஷயம் தவிர்த்து ..

இறந்தவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள்..குறிப்பாக கல்யாணம் ஆன பெண்கள்..அதுவும் அந்த உள்ளுர் "பிரபல சாமியாரை" பார்த்துவிட்டு வந்தப்பிறகு தான் அனைத்து கொலைகளும் நடந்து உள்ளது..ஆனால் எதனால்?..இதற்கு மட்டும் ராஜாவால் அத்தனை எளிதாக விடை கண்டுப்பிடிக்கவில்லை இவ்வளவு விசாரனைக்களுக்கு பின்பும்..

வண்டியில் வேகமாக வந்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது ரோடு ஒரமாக நின்று கொண்டு லிஃப்ட் என்று கேட்டவனின் செயல்..இந்த நள்ளிரவில்..அதுவும் இந்த இடத்தில் யார் அது என்று ஜீப்பை மெதுவாக அவன் அருகே செலுத்திய பொழுது ஜீப்பின் வெளிச்சத்தில் அவன் 'ரத்தம்' வடியும் முகத்தை கவனித்தான்..அந்த முகம்..அந்த முகம்..இதற்கு முன்பு அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட முகம் ..ஜீப்பை அவன் அருகில் சென்று நிறுத்தினான்..

(ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன் இருக்ககூடும்..ஆனால் நாயகனை தீர்மானிப்பது கதை இல்லை..எவன் ஒருவன் சிந்தனையில் இருந்து அந்த கதை உருவகிறதோ அவனே அந்த கதையின் நாயகன்)

கதை 3 :

நெருக்கடி மிக்க அந்த தெருவின் உள்ள "ஆதர்ஷ் மந்திர்" என்ற பிரபலமான பள்ளியின் மாடியில் நின்று கொண்டு இருந்தனர் சரவணனும் கனகவேலும்..

"டேய் இந்த இடத்தை எதுக்கு முடிவு பண்ண..எனக்கு இன்னமோ எங்கயோ தப்பு பண்ணுரமோன்னு தோனுது.."..வேலு.

"இல்லை வேலு இந்த இடம் தான் சரியா வரும்..அவனை பல நாளா ஃபாலோ பண்ணதால சொல்லுறேன்.."..சரவணன்.

"நம்ம ரெண்டு பேரு பசங்களும் இங்க தான் படிக்கிறங்க அது நியபகம் இருக்குல..பார்த்துட்டங்கனா ரொம்ப கஷ்டம். சொல்லி புரிய வைக்கவும் முடியாது"..வேலு.

"ம்ம்..அது கூடவா மறந்து இருப்பேன்..ஆனா இந்த இடத்தை விட்டா அவனை அடிக்கிறது ரொம்ப கஷ்டம்..அதான்..".சரவணன்.

"வாட்ச்மேனை கரெக்ட் பண்ணி இங்க வந்துட்டோம்..ஆனா எனக்கு இன்னமோ ரொம்ப சந்தேகமா இருக்கு அவன் மேல.."..வேலு.

"எல்லாத்துலயும் சந்தேகம் தான் உனக்கு..போலிஸா போக வேண்டியவன்டா நீ.." என்று சொல்லிக்கொண்டே கிழே அந்த பள்ளியின் மைதனத்தை நோக்கினான் சரவணன்.

அங்கே கூட்டம்மாய் நின்று கொண்டு இருந்த மாணவர்களுக்கு மத்தியில்..அவனிடம் சற்று நேரத்திற்கு முன்பு காசு வாங்கி சென்ற வாட்ச்மேன் 'ரத்த' வெள்ளதில் துடித்துகொண்டு இருந்தான்.

(ஒருவன் விளக்கும் காட்சிகள் யாவும் மெய் என்று சொல்லமுடியாது..ஏன் என்றால் கண்ணால் கானும் காட்சியே பொய்த்து போக கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது)

டிஸ்கி : மிக முக்கியமா மூன்று கதையும் ஒரே கதை தான்.

தொடரும் ..

Sunday, November 15, 2009

திங்கள் இனிதே -3

அண்ணன் கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
....................................................................................................................................................................

ஒரு இருபது நாளுக்கு மேலேயே அலுவலகத்தில் இணைய தொடர்பு இல்லை கொஞ்சம் பிரச்னை. ஆனா பாருங்க இப்ப தான் வேலை எல்லாம் ஒழுங்கா செய்யுற மாதிரி ஒரு ஃபீலிங்..இதுவும் நல்லா தான் இருக்கு(டேய் கதை விடுறியா அப்படின்னு சொல்றது காதுல கேக்குது) அப்ப அப்ப வீடியோ கேம்ஸ் விளையாதடறோடு சரி. ரூம்க்கு வந்து அதுக்கப்புறம் முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடித்து விட்டு தூங்குவதற்கு 12 மணி ஆகுது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூக்கம்.(ஏழு மணி நேரத்துக்கு குறைவா தூங்குற தூக்கம் எல்லாம் தூக்கமே இல்லைங்க அப்படி என்ன பெருசா சாதிக்க போறோம்) இப்பயும் 24 மணி நேரமும் இந்த கணினியை கட்டிக்கொண்டு அழுவதைப்போல் ஒரு ஃபீலிங். ஊரில் இருந்தப்பொழுது வெறும் டிவி பார்ப்பதோடு சரி இங்க வந்து கிட்டதட்ட இதுக்கு(கணினி) கொஞ்சம் 'அடிக்ட்' ஆனா மாதிரியே இருக்கு.ஆனாலும் வேறு வழி இல்லை. என்னை கேட்டா நான் இதை தான் "இடியட் பாக்ஸ்" என்பேன்.
....................................................................................................................................................................

தினம் இரவு 11:30 மணிக்கு(இந்திய நேரம்) ..வசந்த் டீவியில் "ரகசிய கேள்விகள்" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகின்றது. Dr.காமராஜ் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்..
அவ்வளவு உபயோகமாக இருக்கின்றது. கண்டிப்பாக நேரம் கிடைத்தால் பாருங்கள் தனியாக.கல்யாணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. எவ்வளவோ தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வாரம் "இன்டர்நெட்டால் எவ்வாறான பிரச்சனைகள்" டீன்-ஏஜ் பசங்களுக்கு ஏற்ப்படுகின்றது என்பதை பற்றிய டாபிக்.ஆனால் டாபிக் அது சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை..நீங்களே பார்த்த தெரிஞ்சிங்க.

அவர் சொன்ன ஒரு விஷயம்..

"குழந்தை இல்லை என்ற பிரச்னை என்றால் பெண்களையும், "உறவு" சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்..இது ஒரு மாதிரி 'ட்ரிக்கி'யான விஷயம்"..எந்த பிரச்னை என்றாலும் இருவரும் சேர்ந்தே வர வேண்டும்"..என்றார். யோசிச்சிப்பார்தால் அப்பட்டாமான உண்மை தான்.
....................................................................................................................................................................
நாணயம் ட்ரைலர் பார்த்தேன். மேக்கிங் அசத்தி இருக்கிறார்கள்..எதோ ஒரு ஆங்கில படம் உல்ட்டா மாதிரி தெரிஞ்சாலும்..பார்க்க நல்லா இருக்கு..எப்படி இருந்தாலும் படம் வெளியே வந்தப்பிறகு நம்மோட சில பதிவர்கள் அந்த படத்தை கிழிகிழி என கிழித்து காயப்போட்டு தொங்கவிட்டு அது என்ன "ஆங்கில படம்" என்று சொல்வார்கள் அப்பொழுது தெரிந்துக்கொள்கிறேன். S.P சரண் ஓரளவு வித்தியாசமான கதை களத்தையே தேர்ந்து எடுத்து படம் பண்ணுகிறார்.


.......................................................................................................................................................................

இது ஒரு பதிவர் பற்றிய "புதிர்" மாதிரி சின்னதா ஒரு "ட்ரை"..வார வாரம் எழுதுலம்னு இருக்கேன்..என்னா மேட்டர்ன்னா அது யார்னு நீங்களே கண்டுப்பிடிச்சிக்க வேண்டியது தான்..

CATக்கு படிக்கிறேன்னு சொல்லுவாரு
ஆனா எப்பொழுதும் Mouseம் கையுமா தான் உக்கார்ந்து இருப்பாரு..

படிக்கிற மேஜைக்கு பக்கத்துலையே Window இருந்தாலும்
இவரு நூலு விடுறது எல்லாம் Windows வழியா தான்..

GOD பற்றி எழுத ஆரம்பிச்சிட்டாலும்..
இவரு Blog மேட்டர்ல ஒரு பெரிய Devil..

இவரு எழுதறதை பார்த்தா Futureல பெரிய விஞ்ஞானியா வருவார்னு எல்லாம் நினைக்கலாம்
ஆனா நான் இன்னமோ இவர்
"அனு" விஞ்ஞானியா வருவார்ன்னு தான் நினைக்கிறேன்.

Friday, November 13, 2009

எனக்கு பிடித்த நடிகர்

காயாத கானகத்தே..

எனக்கு பிடித்த நடிகர் M.K தியாகராஜ பாகவதர்
http://www.tamilnation.org/images/culture/music/mkt.jpg


ஒரு சம்பவத்தை என் அப்பா அடிக்கடி கூறுவர்..

அதாகப்பட்டது என் அப்பாவின் பாட்டி காலத்தில் அவரின் பக்கத்து ஊருக்கு ஒரு நாள் தியாகராஜ பாகவதர் வந்து இருக்கிறார்..அவரை பார்ப்பதற்கு என் அப்பாவின் பாட்டி ஊரே திரண்டு பக்கத்து ஊருக்கு சென்று இருக்கிறது.ஆனால் அதற்குள் தியாகராஜ பாகவதர் கிளம்பி சென்று விட்டார்.ஆர்வத்தோடு கிளம்பி சென்ற ஊர்க்காரர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி கிளம்பினர்.அந்த ஏமாற்றத்தை சற்றுக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத என் அப்பாவின் பாட்டி "சரி அவரை தான் பார்க்க முடியவில்லை..அவர் நடந்து சென்ற பாதையின் காலடி மண்ணையாவது எடுத்துக்கொண்டு செல்வோம் என்று "அந்த தெய்விகத்தன்மை வாய்ந்த மண்ணை" ஒரு கவலம் எடுத்து புடவையில் ஒரு முடிச்சு போட்டு அதை வீட்டுக்கு பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தார். ஃபிளாஷ் பேக் இதோடு ஓவர்.

ஆமாம் இதுக்கு இப்ப என்ன அப்படிங்கிரிங்கள..அந்த நாளில் இருந்து என் பரம்பரையில் வந்த அனைவரும் அந்த மண்ணை ஒரு பொக்கிஷமாக பாதுக்காத்து வருகிறோம்.எங்கே வெளியே சென்றாலும் அந்த மண்ணை 'தொட்டு' கும்பிட்டு விட்டு தான் கிளம்புவோம்..நான் இங்கே அமிரகம் கிளம்பி வருவதற்கு முன்பு என் தந்தை அந்த மண்ணின் கொஞ்சம் எடுத்து என் கையில் கொடுத்து "இது உனக்கு துணையா இருக்கும் வினோத்..பாகவதர் அய்யா எப்பொழுதும் உனக்கு பக்கத்தில் இருக்கார்னு நினைச்சிக்கோ" அப்படினாரு.நானும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அதை தொட்டு கும்பிட்டு விட்டு தான் செல்வேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டாலும்..எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை தலைமுறை தலைமுறையாக அவர் தான் எங்கள் ஆதர்ச நாயகன்.."காயாத கானகத்தே" என்று இன்றளவும் அவரின் குரலை கேக்கும் பொழுது எனக்குள் இன்ப வெள்ளம் உற்சாக ஊற்றெடுக்கும்.அவரின் "பவளக்கொடி" தொடங்கி ஒரு படத்தை விட்டு வைத்தது இல்லை. அவரின் தன்னம்பிக்கை வாய்ந்த வாழ்கை எனக்கு உற்சாக டானிக்.

சுருக்கமா சொல்லபோன்னா அவர் தான் எனக்கு "ரோல் மாடல்".."தல" எல்லாமே. அதாவது தலைவன் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற வேற எதாச்சும் நினைச்சிக்க போறீங்க. சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு விட்டு வருகிறேன்.

என் அப்பாவின் ஆயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Tuesday, November 10, 2009

பிடித்தது, பிடிக்காதது.

நம்ம "ஷார்ஜா புலி" "சிக்ஸ்பேக் சிங்கம்" "பதிவுலகின் இளம் சூறாவளி" "'ஆதவன்"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில் இந்த தொடர்ப்பதிவை(யும்) எழுதுகிறேன்..(இப்படி எல்லாம் எழுதுனா தான் உண்டுன்னு நினைக்குறேன்)

பிடித்தவர், பிடிக்காதவர்..பற்றி எழுத வேண்டும் குறிப்பா அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை..

என்னை பொறுத்தவரை எல்லா காலங்களிலும் பிடித்தவர், பிடிக்காதவர் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இல்லை சில பேரை தவிர்த்து. சூழ்நிலைகளையும், சந்தர்பங்களையும், காலத்தையும் பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும்..இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. இன்று நம் காரணமே இல்லாமல் வெறுக்கும் சிலரை கூட நாளையே நமக்கு மிகவும் பிடித்தவராக மாறலாம்.

தொழில்அதிபர் :

பிடித்தவர் :

எங்க ஏரியால இருந்த பானிபுரி கடைக்காரர்..எங்கயோ வடமாநிலத்தில்(தமிழர்) இருந்து பத்து வருடங்களுக்கு முன்பு வந்த அவர் தன்னுடுய கடின உழைப்பின் முலம் இன்று நல்ல நிலையில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு சொந்தக்காரர். என் கண் முன்னாடி அவர் வளர்ச்சியை கண்டு இருக்கிறேன். அவரும் இப்ப தொழில் அதிபர் தாங்க.

பிடிக்காதவர்கள் : இதான் பிரச்சினையே, பிடிக்காதவங்கன்னு உடனே யாரையும் சொல்ல முடியாது..இருந்தாலும் முயற்சி பண்ணுறேன்..

தன் முன்னேற்றத்தின் பின்னுள்ள எந்த ஒரு உழைப்பாளியின் நலனை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்கள் தான் இப்பேர்ப்பட்ட வளர்ச்சிக்கு காரணம் என்பதை மனதார உணராத எந்த ஒரு தொழில் 'அதிபனையும்' பிடிக்காது.

விஞ்ஞானி :

பிடித்தவர்:

அப்துல் கலாம்..இந்தியாவின் ஏவுகணை மனிதர்..எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய அறிவின்,திறமையின்,உழைப்பின் மற்றும் வாழ்வில் தான் கடைப்பிடித்த ஒழுக்கத்தின் முலம் நாட்டின் ஜனாதிபதியாக மாறியவர்..

எம்.எஸ்.சுவாமிநாதன்..(வேளாண்மை துறை விஞ்ஞானி)

நம்மாழ்வார்( இயற்கை அறிவியலாளர்)

பிடிக்காதவர் :

யாரும் இல்லை..

தமிழக கல்வியாளர் :

பிடித்தவர்: குறிப்பாக யாரையும் சொல்ல தெரியவில்லை..

பிடிக்காதவர்: கல்வியாளர்னா என்னனே தெரியமா தன்னை கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் ஜேப்பியார் போன்ற சிலர்கள்.

எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சிலர். தீவிரமான வாசிப்பனுபவம் என்று ஒன்றும் இல்லை..நான் படித்த வரைக்கும் இவர்கள் என் மனம் கவர்ந்தவர்கள்.

பிடிக்காதவர் : ஒருவன் சமுகம் சார்ந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த சமுகத்தின் மனிதர்களை நேசிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும்..அப்படி நேசிக்காமல் கர்வம் பிடித்து அலையும் எவனையும் பிடிக்காது.

இயக்குனர் :

பிடித்தவர் : அது பெரிய லிஸ்ட்..பாலா, அமீர், மிஷ்கின், மணிரத்னம்,கெளதம்,சேரன் மற்றும் சிலர்..

பிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.

நடிகர்:

பிடித்தவர் :

ஒரே ஒருவர்..தோல்விகளை அதிகமாக சுமப்பதால் மட்டுமே மற்றவர்களால் அதிகம் தூற்றப்படும் ஒருவர்..அதுவும் இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் தமிழ்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை இது வரை தக்கவைத்து கொண்டு இருக்கிறவர்..எத்தனை சோதனைகளை எதிர்க்கொண்டாலும் இதுவரை துணிவுடன் அதை எதிர்த்து களத்தில் உள்ளவர்..என்னுடுய உற்சாக டானிக்..மனிதாபிமானம் உள்ளவர்..குறிப்பாக மற்ற எந்த நடிகரையும் போல் இல்லாமல் திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்..பெயரை விட்டு விடுகிறேன்..அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்.முடிந்தால் இந்த லிங்க் போங்கள்.

பிடிக்காதவர் : நடிப்பால் நாட்டை ஆளத்துடிக்கும் அனைவரையும்..

நடிகை:

பிடித்தவர் : சிம்ரன் அப்புறம் த்ரிஷா.

பிடிக்காதவர் : அசின், சில படங்களை தவிர்த்து ஜோதிகா.

இசையமைப்பாளர்:

பிடித்தவர் : இந்தியாவின் இரண்டு பெரிய இசை சகாப்தங்கள் A.R ரெஹ்மான் மற்றும் இளையராஜா

பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை எந்த ஒரு இசையமைப்பளரின் ஒரு பாடலையாவது மிகவும் ரசித்து இருப்பேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்:

பிடித்தவர்:

முன்னாடி ZEE தமிழ்ல வந்தாங்க..அவங்க பெயர் தெரியாது அதாங்க வெண்ணிலா கபடிக்குழு படத்தில கூட வந்தாங்க..இப்ப கூட மதுரை டூ தேனீ அப்படிங்கிற மொக்கை படத்தில் நாயகியாக வந்தார்கள்..அவங்களை பிடிக்கும்.

பிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!) (ரொம்ப நேரம் யோசித்து எழுதியது)

வானொலி பண்பலை தொகுப்பாளர்

பிடித்தாவர் - சமிபத்தில் மறைந்த 'தென்கச்சி' சாமிநாதன்

அரசியல்வாதி:

பிடித்தவர்: அது மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப கருணாநிதி அப்புறம் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்..

பிடிக்காதவர்: அதுவும் மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப இந்த நிமிஷத்தில் சொல்வது என்றால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்காது.

அப்புறம் முக்கியமா இந்த தொடரை தொடர இந்த தளத்தின் சொந்தக்காரர்களை அழைக்கிறேன் இஷ்டம் இருந்தா எழுதுங்க இல்லைனா எழுதாதிங்க ..அவங்க தமிலிஷ்
மற்றும் தமிழ்மணம்.

Monday, November 9, 2009

திங்கள் இனிதே-2

பயணம்:

போன வாரம் அமீரக பதிவர்களின் கோர்ஃபக்கான் பயணம் இனிதே முடிந்தது.
பயணதூரம் கருதி முதலில் நான் போக தயங்கினாலும்..அதன்ப்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளும் அவர்கள் என்ப்பால் வைத்திருந்த அன்பும் என் மனதை வெகுவாக மாற்றி இருந்தன..என் இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அல்-அய்னில் இருந்து புறப்பட்ட நாங்கள் அங்கு இருந்து 'கோர்ஃபக்கான்க்கு' நேராக பேருந்து இல்லாததால் முதலில் 'மதாம்' என்கிற இடத்திற்கு சென்றோம்..அங்கு இருந்து 'புஜைரா' செல்லும் ஒரு டாக்ஸியில் ஏறியப்பிறகு "அப்பாடா" என்று மூச்சு விடுவதற்குள் ஒரு தெருவை சுற்றி வந்த டாக்ஸி டிரைவர் வேறு ஆள் கிடைக்காததால் எங்களையும் இறக்கி விட்டு விட்டான்..சரி மூன்று பேரை மட்டும் ஏற்றி செல்ல எவ்வளவு என்று கேட்ட தொகையை கேட்டு என் நண்பன் அங்கேயே மயங்கி விழாத குறை..சரி சிறிது நேரம் வேறு டாக்ஸி கிடைக்குமா என்று அங்கேயே சுற்றி சுற்றி வந்த நாங்கள் அதன்ப்பிறகு வேறு வழி இன்றி மறுப்படியும் அல்-அய்ன் டாக்ஸி பிடித்து ஊரு வந்து சேர்ந்தோம்..எப்படி இருந்தாலும் அடுத்த இது போன்ற ஒரு பயணத்தில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்று இப்பொழுதே முடிவே செய்து விட்டேன்.

சினிமா :

போன வாரம் சிறிது நேரம் கிடைத்தப்பொழுது எல்லாம் டவுன்லோட் பண்ண ஆங்கில படங்களையும், கார்த்தியிடம் இருந்து எடுத்து வந்த படங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தேன்..வரிசையில் சொல்வது என்றால் The shawshank redemption, A clockwork orange, Full metal jacket, Kite runner etc.,கிட்டதட்ட அனைத்து படங்களுமே நமை வேறு மாதிரியான மனநிலைக்கு எடுத்து செல்ல கூடியவை..சாதரணமாக நடந்து செல்லும் பொழுதும்,சாப்பிடும் பொழுதும், உக்கார்ந்து இருக்கும் பொழுதும் கூட அதை பற்றிய சிந்தனைகளே எழுந்தன..உண்மையில் நல்ல படங்கள் என்று பார்க்கும் பட்சத்தில் ஒன்றும் இல்லை ஆனால் அது நம் உளவியல் சிந்தனையை மாற்றி அமைக்கும் பட்சத்தில் கொஞ்சம் கஷ்டம்..இதை பிரேக் பண்ணவும் மறுபடியும் இயல்பான மனநிலைக்கு திரும்புவதர்க்காகவே திரும்பவும் தமிழ் படங்களை பார்க்க செய்தேன்.உலக சினிமா என்றாலே இதுப்போல் கசக்கி பிழிந்து காயப்போடும் வகையில் தான் இருக்குமா..பார்த்ததில் சுத்தமான மொக்கை படம் என்று சொல்லப்போனால் பைட் கிளப் தான்..நல்ல வேளை நம்மூர் தியேட்டர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் ஆகவில்லை..ஆகி இருந்தால் ஸ்க்ரீன் கிழிந்து இருக்கும்..மிகவும் ரசித்த படங்கள்
The shawshank redemption, A clockwork orange .

போன வாரம் அப்படி திரும்பவும் என்னை உற்சாக மனநிலைக்கு கொண்டு வர நான் பார்த்த படத்தில் மிகவும் ரசித்த வசனம்:

"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க.."..

என்ன படம்னு சொல்லுங்க பாப்போம்..

இந்த கொசு தொல்லை பெரும் தொல்லைடா சாமி..

என் ரூம்மேட் ஹிந்திக்கார பய..எப்பொழுதும் டிவில இந்த 'ரியாலிட்டி ஷோவும்','சீரியலும்' தான் பார்த்துக்கிட்டு இருப்பான்..சீரியல்ல அழுவுற மாதிரி இப்ப எல்லாம் ரியாலிட்டி ஷோல கூட யாராச்சும் ஒருத்தர் அழுதுக்கிட்டே இருக்காங்க..
தமிழ் சீரியல் கூட பார்த்துரலம் ஆனா இந்த 'ஹிந்தி சீரியல்' கொடுமை இருக்கு பாருங்க..ஆண்கள் முதல் பெண்கள் வரை எப்பொழுதும் ஃபுல் மேக்அப்பில் தான் திரிவார்கள்..எப்ப பார்த்தாலும் 'சென்டி' டயலாக் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்..இப்படி பார்த்துகிட்டு இருந்த அவன் போனவாரம் you tubeல் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்..என்னடா பாக்குறனு நான் கேட்டதுக்கு அவன் சொன்னான் பாருங்க.."சாந்தி"ன்னு..நியாபகம் இருக்கிறதா வருடக்கணக்கில் தூர்தர்ஷனில் போட்டு தாக்கிய சீரியல்..இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண..ஒரே ஆறுதல் அவன் விடுமுறையில் ஊருக்கு செல்வது தான்..

ஒரே ஒரு ஜோக்:

மகன் அழுவதை பார்க்கும் அம்மா அவனிடம் சென்று..

"ஏண்டா அழுவுற.."
"கீழ விழுந்துட்டேன்ம்மா.."
"எப்ப விழுந்த.."
"அரை மணி நேரம் ஆச்சு.."
"அப்ப விழுந்ததக்கு இப்ப அழுவுறியா.."
"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்.."

டிஸ்கி:

எப்ப இருந்து இந்த திங்கள் இனிதே ஆரம்பித்தேனோ அப்பயில இருந்து வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடுறேன்..இந்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..Monday, November 2, 2009

தொடர்கிறேன்..

1. A- Available/single - single.

2. B - Best friend - நிறையா உண்டு.

3. C- Cake or pie - ரெண்டும் தான்..பார்பி கேக் அப்புறம் மஞ்சள் பை ..

4. D - Drink of choice - நண்பர்களுக்கு தெரியும் எதுன்னு..இருந்தாலும் 'டீ' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.

5.E - Essential items you use everyday - Water

6. F- Favorite colour - கருப்பு மற்றும் சாம்பல்.

7. G - Gummy bears or worms - அட போங்க நானும் எத்தனை தடவை தான் டிக்ஷனரிய பாக்குறது.

8. H - Hometown - பரங்கிபேட்டை .

9. I - Indulgence - தெரியுல ..!!

10. J - January/February - பொங்கல் அப்புறம் பெப்ரவரில எப்பயாச்சும் வரும் மாசி மகம் ரொம்ப பிடிக்கும்.

11. K - Kids and their names - செல்லாது செல்லாது ..

12. L - Life is incomplete with out - Friends

13. M - Marriage date - செல்லாது செல்லாது ..

14. N - Numberof siblings - 2

15. O - Oranges or Apples - ரெண்டும்..இலவசமா கிடைக்குற பட்சத்தில்.:)

16. P - Phobias/ Fears - ஒரு பெரிய பட்டியலே போடலாம்..

17. Q - Quotes for today - உப்பு விக்க போன மழை பெய்யுது..மாவு விக்க போன காத்து அடிக்குது..
இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண ..

18. R - Reason to smile - Friends & Friends only.

19. S - Season - Winter

20. T- TAG 4 PEOPLE - கிஷோர், கார்த்திகேயன், Varadaradjulu.P, 'காலடி' ஜெகநாதன்.

21. U- Unknown fact about me - Most Laziest guy in the world.

22. V - vegetables you dont like - கத்திரிக்காய்.

23. W - Worst habbit - நிறையா இருக்கு குறிப்பா சோம்பேறித்தனம்.

24. X - Xrays you had - எதுவும் இல்லைன்னு சொல்லறதுக்கே பயமா இருக்கு..

25. Y - Your favourite food - இப்போதைக்கு எங்க வீட்டு சாப்பாடு கிடைத்தாலும் என்னோட விருப்பமான உணவு தான்.

26. Z - Zodiac sign -
virgo

தொடர்ப்பதிவிர்க்கு அழைத்த thenammailakshmanan அவர்களுக்கு நன்றிகள் பல..