பிரிவு பல சமயங்களில் மிக கொடுரமான வலியாக இருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல நமக்கு பிரியப்பட்ட சூழலை விட்டு பிரியும்ப்பொழுதுக்கூட அதற்கு சமமான வலியை அனுபவிக்க தான் செய்கிறோம். ஒன்று அதேப்போல் நாம் கடந்து போகவேண்டிய சூழலை வலுக்கட்டயமாக ஏற்றுக்கொள்கிறோம் இல்லை பழக்கப்படுத்தி கொள்கிறோம். போகும் சூழல் நமக்கு பழக்கப்படாத, நம்மில் எளிதில் உள்வாங்க முடியாத சூழலாக இருப்பின், இன்னும் கதை கந்தல் திருவிழாவில் காணாமல்ப்போன குழந்தையைப்போல் மனநிலை எதையோ தேடிக்கொண்டிருக்கும். யாரவது தெரிந்தவர்கள் கண்ணில் படமாட்டார்களா, ஆறுதல் வார்தைகள் கிடைக்காதா என்று கண்ணில் தேக்கிவைத்த கண்ணிறோடு அதுவரை அலைந்துக்கொண்டே தானிருப்போம்..
கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு மனநிலையோடு இரண்டொரு நாளாக அலைந்துக்கொண்டிருக்கிறேன்..நான் அமீரகம் வந்து இரண்டு வருடங்களாக தங்கியிருந்த இடத்தை விட்டு வேறு ஒரிடத்திற்க்கு மாறவேண்டிய நிர்பந்தம் மாறியும் விட்டேன்..
ஆனால் ஏதோ மிக நெருங்கிய நண்பனை பிரிந்து வந்து விட்டதைப்போல் ஒருணர்வு நெஞ்சின் மீது சிறுபாரமாய் இருந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது..அந்த பழைய சூழலின் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது..அதுவும் புதிய இடத்தின் தனிமை இன்னும் கொடியதாக உணர்கிறேன்..தனிமை சில சமயங்களில் மட்டுமே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்துக்கிறது..பல சமயங்களில் யோசிக்க வைக்கிறது..ஏற்ப்படும் சிந்தனைகள் யாருமில்லாத பொழுதுகளில் இன்னும் என்னை பலவினமாக்குக்கிறது..இருக்கும் சூழலை ஏற்றுக்கொண்டு வாழும் மனிதர்களை பார்க்கும்பொழுது சற்று பயமாகவும், என்னை திரானியற்றவனாகவும் உணர்கிறேன்..
அதுவும் அந்த பழைய இடத்தை விட்டுபிரியும் கடைசி மணிநேரங்களில், இந்தியாவிலிருந்து விடுமுறை கழித்து ஆமீரகம் வந்தப்பொழுது உணர்ந்த அதே அதிர்வுகள்..இத்தனைக்கும் அந்த பழைய சூழலை பலமுறை வெறுத்துள்ளேன்..ஆனால் இன்று அது நினைவுப்படுத்தும் எண்ணங்கள் இனிமையனதாகவே இருக்கின்றது.இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையோடு ஏற்கனவே வலுக்கட்டயமாக கடந்துவந்த சில சூழலைப்போல் இதையும் கடக்கதான் போகிறேன்.
Tuesday, March 30, 2010
Sunday, March 7, 2010
திங்கள் இனிதே - 6
இங்கிருக்கும் என் நண்பர் ஒருவர் ஊருக்கு சென்று திரும்பிவந்து விட்டார். அவர் ஊரில் இருக்கும்பொழுது "நான் எதாவது அவரிடம் கொடுத்து அனுப்பட்டுமா, சாப்பிட எதாவது வேணும்னா சொல்லுடா கொடுத்து அனுப்புறேன்.." என்று என்அம்மா போன் பண்ணும் பொழுதெல்லாம் கேட்டுகொண்டே இருந்தார். நான் எப்பொழுதும்போல் "இல்லை ஒன்றும் வேண்டாம், எல்லாமே இங்க கிடைக்குதுமா" என்றே சொல்லிவந்தேன். ஆனால் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை ஒரு நாள் அப்படி கேக்கும்பொழுது "அம்மா காரக்குழம்பு சாப்பிடனும்போல் இருக்கும் அதுமட்டும் வேண்டுமானால் கொடுத்துஅனுப்புங்கள், ஆனால் அதற்காக நீங்கள் சென்னை வரவேண்டியஅவசியமில்லை யாரவது சென்னை போனால் அவரிடம் கொடுத்து என் நண்பரிடம் கொடுக்க சொல்லிவிடுங்கள்'' என்றேன்.
ஆனால் என் அம்மாவே புதுவைலிருந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து அவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.புதுவை திரும்பிய கையோடு வேலைக்கு வேறு செல்லவேண்டும்.இது தெரிந்து தான் நான் 'அப்பவே' வேணாம்னு சொன்னேன். நான் என்னத்த சொல்லுறது..!! நான் ஊரில் இருந்தால் இதற்கெல்லாம்அவசியமே இல்லை.

(''ஏன்டா டேய், இவ்வளோ பேசுற நீ ஊர்ல போய் வேலை பார்க்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு அம்மா பிளைட்ல குழம்பு கொடுத்து அனுப்புனாங்க, ஆயா கப்பல்ல ரசம் கொடுத்து அனுப்புனாங்கன்னு சொல்றியேன்னு "..நீங்க சொல்லுறது கேக்குது மக்களே, அதற்கான முயற்சிகளும் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன்).
....................................................................................................................
ஹாக்கி உலககோப்பை இந்தியாவில் நடக்கும்ப்பொழுதே, இந்திய அணியால்'அரையிறுதிக்கு' கூட முன்னேற முடியவில்லை. இங்கிலாந்து முதல் ஆளாக அரையிறுதிக்கு தகுதிபெற்று விட்டது.(அது தான் கோப்பையை தட்டிசெல்லும் என்று நினைக்கிறேன்).வீராவசேமாக பாகிஸ்தானை வீழ்த்தியோதோடு நாமும் வீழ்ந்து விட்டோம். சொல்லிவைத்தார் போல் அதற்கடுத்து மோதிய ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளிடம் 2-5 , இங்கிலாந்துடன் 3-2 என்ற கணக்கில் தோற்றோம். அணியில் பிரச்சனையா, ஹாக்கி சங்கத்தில் பிரச்சனைகளை களைய வேண்டுமா, அரசாங்கம் நம் தேசிய விளையாட்டின் மீது 'தீவிர' கவனம் செலுத்த வேண்டுமா, இல்லை 'நம்' அணுகுமுறை மாற வேண்டுமா?!. என்ன ஆனா என்ன அடுத்து ஐபிஎல் வரப்போகிறது, அதில் கவனத்தை செலுத்துவோம்.
.....................................................................................................................
அடுத்து நம்ம 'நித்தி'யை பற்றி பார்ப்போம். ’வீடியோ’ சுமார்னு கூட சொல்லமுடியாது.
ரொம்ப மோசம். சன் டீவி பண்ணது அதுக்கு மேல மோசம்.
பொதுவாகவே நமக்கு இந்த 'ஒழுக்க கட்டுப்பாடுகளில்' இருந்து மீறி 'தப்பை' செய்வதில் ஆர்வம் இருக்கும், ஆனால் சமூக கட்டுப்பாடுகள் காரணமாக அடக்கியே வாசிப்போம். அதையும் மீறி யாராவது செய்தால் அதை 'தெரிந்துகொள்வதில்' ஒரு ஆர்வம் காட்டுவோம்(கிட்டதட்ட தினசரியில் 'கள்ளக்காதலை' பற்றி படிக்கும் விஷயத்தில் இருக்கும் ஆர்வம்). அதுவும் 'சாமியார்' என்கின்ற பட்சத்தில் அவருக்கு நாம் வகுத்திருக்கும் 'ஒழுக்க விதிமுறைகள்' இன்னும் அதிகம். சாமியாரே அவருடுய இந்த 'விதிகளை' மீறுகின்ற பொழுது நம்ம பண்ணுறது எல்லாம் ஒரு 'மேட்டரே' இல்லை என்கின்ற அல்ப சந்தோஷம் ஒருப்புறம்.
ஸோ,'மேட்டர்' என்னனா தனிமனித ஒழுக்கங்களும், விதிகளும் தான். அது எந்த மதத்தை சேர்ந்த 'பெரிய மனிதர்களாக' இருந்தாலும் சரி.ஆனா எப்ப எவன் மாட்டுவான்னு காத்திருந்து 'அந்த மதத்தை' தூற்றுவது சின்னபிள்ளத்தனம். அதுவும் நம் பதிவுலக 'அதிமேதாவிகள்' இந்த விஷயத்தில் காட்டும் அக்கறை அவர்கள் குடும்பத்தில் கூட காட்டமாட்டார்கள்.
....................................................................................................................
ஷார்ஜாவை பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் பொறாமை தான்.நிறையா தமிழ் மக்கள், தமிழ்ப்படங்கள் ரீலிஸாகும் தியேட்டர்கள்,அப்புறம் அமீரகத்தின் பிரபல பதிவர்கள் எல்லாம் அங்கே தான் இருக்கின்றனர் முக்கியமா 'தமிழ்' உணவகங்கள். நான் இருக்கும் ஊரில்(அல்-அய்ன்) ஒரு உருப்படியான உணவகம் கூடயில்லை.ஷார்ஜாவில் எங்கு போகினும் நல்ல உணவு கிடைக்கின்றது.ஊரில் இருக்கும்ப்பொழுது 'சாப்பாடு' எல்லாம் எனக்கொரு பொருட்டே இல்லாமல் இருந்தது ஆனால் இங்கு வந்து சிலசமயம் மனது அதை எதிர்ப்பார்கின்றது. சரி, அதையும் மீறி சிலசமயம் நானே சமைத்துப்பார்க்கலாம் என்று 'ரிஸ்க்' எடுத்தாலும் அதன்ப்பிறகு எந்த சாப்பாட்டை பார்த்தாலும் கொஞ்சநாட்களுக்கு ஒருவித 'பீதியா' தான் இருக்கு.
..........................................................................................................................
வேலை வேலை வேலை..இந்த ரெண்டு மாசமா இப்படி தான் போகுது. இரவு வீடு திரும்பி ப்ளாக்ல எதாச்சும் கிறுக்கலாம்னு பார்த்தாலும் ''இந்த ரணக்களத்துலயும்ஒரு கிளுகிளுப்பான்னு'' மனசாட்சி கேக்குது..இன்னும் முடிக்கவேண்டிய பணிகள் நிறையா இருக்கு.பார்ப்போம் வரும் மாதங்கள் எப்படி அமைக்கிறது என்று.
...........................................................................................................................

தல cool down and get relaxed for some minutes ..உங்களின் இனிமையான சில நினைவுகளை மீட்க ஒரு அருமையான பாட்டை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பாட்டை பாருங்கள் நினைவுகளை 'மீட்க' முடியாவிட்டால் நான் பொறுப்பல்ல..எத்தனையோ பாட்டு இருக்கறப்ப 'இந்த பாட்டு' மட்டும் எதுக்கு!! பாருங்க உங்களுக்கே தெரியும்.
Subscribe to:
Posts (Atom)