டிசம்பர் 23 காலை 6 மணி :
ஒரு நாளிதழ் : ஒரு பெண், ஒரு வாலிபர் அடித்து கொலை..கள்ளகாதல் காரணமா..சென்னையை சேர்ந்த வாலிபர் கைது.
டிசம்பர் 22 மாலை 6 மணி :
கேமராக்களில் இருந்து வெளிப்பட்ட பிளாஷ்க்கள் என் முகத்தில்ப்பட்டு கண்களை கூச செய்தன..உண்மையில் கண்களை மட்டும் அல்ல..விதியின் செயல் என்று கூச்சப்படாமல் என்னால் பொய் சொல்லமுடியவில்லை..விருப்பபட்டு செய்த காரியத்தின் விளைவுகள் விபரிதமாக போகும்பொழுது விதியின் மீது பழியை போட்டு செல்ல நான் விரும்பவில்லை.. ஆம் இது நான் விருப்பபட்டே செய்த கொலைகள் தான்..அதற்க்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராகி விட்டேன்.
டிசம்பர் 22 மதியம் 12:30 மணி :
எதிர்ப்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த என்னை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க வாய்ப்பில்லை..கற்பனை கூட செய்துப்பார்க்க முடியா காட்சியை அன்று நேரில் கண்டதும் என்னுள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கொலைவெறி..கையில் அப்பொழுது கிடைத்த அந்த இரும்பு தடியால் அவனை கண்மூடிதனமாக தாக்கினேன்..அவன் ரத்தவெள்ளத்தில் மிதக்கும் வரை..அடுத்து என் கோபமும் வெறியும் என் மனைவியின் மேல் சென்றது..உறைந்துப்போனஅவளை பேசுவதற்கு கூடவிடாமல் அவளையும் தாக்கினேன்..நிமிடங்கள் கரைந்தது..அங்கேயே மணிக்கணக்காக உக்கார்ந்து இருந்தேன்..போலீஸ் வந்து என் தோள்களை உலுக்கியப்பொழுது தான் மறுபடியும் சுயநினைவு வந்தது.
டிசம்பர் 10 இரவு 11:30 மணி :
ரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.
ரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.
நவம்பர் 15 மதியம் :
தி.நகரில் அன்று சவாரிக்காக நின்றுகொண்டு இருந்தப்பொழுது தான் ஏரியா டாக்டரை எதிர்ப்பாராமல் சந்தித்தேன். சவாரியின் பொழுதே அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது..நான் இதுவரையில் 'எதிர்ப்பாராத' நடந்த சம்பவம் என்று நினைத்தது எதிர்பாராமல் நடந்தது இல்ல..அவள் வேண்டுமென்றே செய்துக்கொண்ட கருக்கலைப்பு தானென்று.இதைப்பற்றி அவளிடம் கேக்கலாமா.
ஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.
ஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.
நவம்பர் 2 இரவு 8 மணி :
வீட்டுக்குள் நுழைந்தபொழுது அழுதுக்கொண்டு இருந்தாள்..என்னவென்று கேட்டபொழுது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அவள் 'கலைந்துவிட்டது' என்று சொன்னபொழுது..கொஞ்சம் நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்தினேன்..ஒருவேளை அன்று செய்த செய்கையின் வினையோ என்றுகூட யோசிக்க தோன்றியது.
செப்டம்பர் 4 :
அன்று தான் அந்த வீட்டுக்கு புதுசாக குடியேறி இருந்தேன்..வீடு என்று சொல்லமுடியாது வீட்டில் ஒரு பகுதி..நானும் அவளும் என்பதால் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளலாம் ஒன்றும் பிரச்னை இல்லை..மேல்வீட்டை மூன்றாக பிரித்து வாடகை விட்டு இருந்தனர். இன்னொரு குடும்பமும் இருந்தது. அப்புறம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பையன் ஒருவனும் தங்கி இருக்கிறான். அவனே வந்து முதல்நாள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். இடம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று தான் தோன்றுகிறது.
ஆகஸ்ட் 29 :
சென்னைக்கு வந்ததில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தெரிந்த நண்பன் ஒருவனின் அறையிலேயே கழித்துவிட்டோம்.அவனுக்கு எங்க கதை தெரியும் ஒன்னும் பிரச்னை இல்லை..அடுத்தமாதம் இந்த ஏரியாவிலியே வீடு கிடைத்துவிடும் என்று சொல்லி இருக்கான் பார்ப்போம்..எனக்கும் இந்த ஏரியா தான் ஆட்டோ சவாரிக்கு எல்லாம் வசதியாக இருக்கும்னுப்படுது.
ஆகஸ்ட் 3 இரவு 10:30 :
ரொம்பநேரம் நின்றுகொண்டு இருந்தேன் ஆரப்பாளையம் பஸ்-ஸ்டாப்பில்..நேரம் இப்பொழுதே பத்து ஆகிடுச்சு..ஒருவேளை எதாச்சும் பிரச்னை ஆகியிருக்குமோ..இருக்காது..ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..ஆனால் நான் எதிர்ப்பார்க்காமல் கையில் குழந்தையுடன் வந்து இருந்தாள்..அவக்கிட்ட 'நம்ம ஆரம்பிக்கப்போறது புது வாழ்க்கை, நீ எதுக்கு கையில் குழந்தையே வேற தூக்கிட்டு வந்த, புருஷனையே விட்டுட்டு வந்துட்ட அப்புறம் எதுக்கு குழந்தை வேற'.. என்று குழந்தையை பறித்தேன். அவளிடமும் எதிர்ப்பு இல்லை. இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.