யாரு யாரோ ஏது ஏதோ தொடர்ப்பதிவு ஆரம்பிக்கிறாங்க..நாம ஏன் ஒரு தொடர்ப்பதிவு ஆரம்பிக்கக்கூடாதுன்னு சிந்தித்ததின் விளைவு தான் இந்த பதிவு..அதாவது பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்களோட ஜாதி என்னவெல்லாம் இருக்கும்னு ஒரு குத்துமதிப்பா ஆராயறது..ஏன்னா இதுக்கப்புறம் அதை படிக்கபோறவங்க நிறையா விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு அதன்மூலம் அவங்க நடத்தைகளை சுலபமா யூகிக்கமுடியும் பாருங்க..அதுக்காகவே அவங்க குணநலனையும் கொடுத்துள்ளேன் அதுவேற இல்லமா எதிர்க்காலத்தில் எதாவது பிரச்னைனா அவங்க ஜாதி என்னனு தெரிஞ்சிக்க நாயா பேயா அலைய வேண்டியதில்லை..இந்த தொடர்ப்பதிவ ஒரு எட்டு பார்த்தாலே போதும்.. நான் ஒரு ஐந்து பேர் ஜாதிய யூகித்து சொல்றேன் ..அவங்க அப்படியே ஒரு ஐந்து பேர் ஜாதிய யூகிச்சு சொன்னாங்கனா அப்படியே எல்லோரடைய ஜாதியையும் ஓரளவு ஒரு ஒரு மாசத்துக்குள்ள யூகித்துவிடலாம்...தொடர்ப்பதிவும் ரொம்ப சிறப்பா போகும்..அவங்க ஜாதி அதுவில்லை என்னும் பட்சத்தில் பின்னூட்டதில் குறிப்பிடவும்..
முதல் போணி:
பதிவர் : 'சங்கு' சகடை
ஜாதி (யூகிப்பு) : ராஜப்பாளையம்
குணநலன்கள் : சும்மா இருக்கும் தெருவில் சங்கு ஊதுவது, போட்டு கொடுப்பது, நம்ப வைத்து கழுத்தறுப்பது.
இரண்டாம் போணி:
பதிவர் : 'பட்டாசு'
ஜாதி (யூகிப்பு): டால்மேஷன்
குணநலன்கள் : அமைதியாக இருக்கும் இடத்தில பட்டாசு கொளுத்தி போடுவது, எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்வது, கிடைத்த கேப்பில் எல்லாம் ஏறி அடிப்பது அதாவது சந்தில் சிந்து பாடுவது.
மூன்றாம் போணி:
பதிவர் : 'அல்லக்கை' அழகு
ஜாதி (யூகிப்பு): ஜெர்மன் ஷெபெர்ட்
குணநலன்கள்: கூச்ச படாம 'கூஜா' தூக்குவது, சொம்பு அடிப்பது, 'வெட்டி' செக்குலரிசம் பேசுவது, காசுக்கு தகுந்தமாதிரி ஆள் பார்த்து ஆப்பு அடிப்பது.
நான்காம் போணி:
பதிவர் : 'கோண' வாயன்
ஜாதி (யூகிப்பு): அல்சேஷன்
குணநலன்கள்: சாமி கும்பிட மாட்டாங்க ஆனா மாமிய கும்பிடுவாங்க, பெண்கள் என்றால் தெய்வமாக மதிப்பார்கள், அநியாயத்திற்கு எதிராக பொங்கி எழுவார்கள்.
ஐந்தாம் போணி:
பதிவர் : 'மென்டல்' முருக்கன்
ஜாதி (யூகிப்பு): பொமேரியன்
குணநலன்கள்: ரோட்ல போறப்ப டக்குனு காரி துப்புவாங்க ஆனா யாருமேல துப்புராங்க அப்படிங்கிறது அவங்க 'மூட்' பொருத்தது . ஒரு ஜாலிக்காக அப்பப்ப அவங்க மேலயும் துப்பிபாங்க..டிசைன் டிசைனா வேற துப்புவாங்க.
அம்புட்டு தான் இப்ப மேல நான் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் தான் நான் இந்த தொடர்ப்பதிவை மேற்கொண்டு எழுத அழைக்கும் பதிவர்களும்..ஜாதிவெறி இருந்துச்சுனா கொஞ்சம் வேகமா எழுதுங்க ப்ளீஸ்..