Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Wednesday, December 9, 2009

டிசம்பர் 10


















"Composite materials எக்ஸாம்க்கு எப்படி படிச்சாலும் புட்டுக்க தான் போகுது..தூக்கி போட்டுட்டு வாடா சீர்காழி வரைக்கும் போய்ட்டு வரலாம்" என்று பார்த்திபன் அழைக்க..எனக்கும் அதுவே சரி என்றுப்பட வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.


திருப்பி சிதம்பரத்துக்கு வர்றப்ப எல்லாம் வடிந்து இருந்தது. "மச்சான் திருப்பி சாப்பிட்டு ரூம்க்கு போயிறலாம் என்ன சொல்ற"..என்று பார்த்தி கேக்க..


"அதான் சரி..ஆனா ரெண்டு பேருகிட்டயும் அஞ்சு ரூபா கூட இல்லை என்ன பண்ணுறது..என்று நான் சொல்ல..

"மச்சான் என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவனை போய் பார்த்து காசு வாங்கிட்டு போலாம் வா.." பார்த்தி சொன்னான்.

"டேய்..இந்த சமயத்துல போறியே..உன் கூட சாதாரணமா வந்தாலே எவனா இருந்தாலும் காரி துப்புவான்..அதுவும் "தீர்த்தவாரிக்குனு" காசு கேட்டு போய் நின்னா
கண்டிப்பா என்னை கேவலாமா நினைப்பான் உன் ஃபிரெண்ட்.." ..நான்.

"அதுல்லாம் அவன் எந்த சமயத்தில் போய் கேட்டாலும் கொடுப்பான் வா.." என்று என்னை கிஷோர் வீட்டுக்கு அழைத்து போனான்..அது தான் எங்களுக்கான முதல் சந்திப்பு..சத்தியமா அன்னிக்கு என்னை பத்தி என்ன நினைச்சன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாது..

அப்புறம் இரண்டாவது சந்திப்பு எதோ ஒரு மருத்துவமனையில் சந்தித்தோம்..பின் "ராம்" படம் பார்க்க "வடுகநாதன்'க்கு"அவன் "செலவில்" அனைவரையும் அழைத்து சென்றது..இது வரை மட்டுமே என்னால் "கிஷோரை" பார்த்திபனின் நண்பனாக பார்க்க முடிந்தது.. "

இந்த ஐந்து வருடங்களில் என் வாழ்வில் நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளிலும் உடனிருந்து இருக்கிறான்..முக்கியமாக "மனம் உடைந்துபோன" பல தருணங்களில் உடனிருந்து ஆறுதல் கொடுத்திருக்கிறான். அதுவும் பலசமயங்களில் "எக்ஸாம் ஃபீஸ்" எல்லாம் கூட "அவன் இருக்கிறான் பார்த்துக்கொள்ளுவான்"..என்று நானும் பார்த்திபனும் கடைசி சமயம் வரை கட்டாமல் இருந்திருக்கிறோம். அவன் கூட பழகியவர்களுக்கு அவன் "இயல்பு" புரியும்..நான் கூட என்னால் ஏன் "இதே மாதிரி இருக்க முடியவில்லை" என்று பல சமயங்களில் அவனை பார்த்து நினைத்ததுண்டு. அவன மாதிரி ஒரு கேரக்டர் சான்சே இல்லை பழகி பாருங்க தெரியும்..

அவன் நன்றி சொல்றானோ இல்லையோ..அவனை மாதிரி ஒரு ஆளை இந்த டிசம்பர் 10ல் பிறக்க வைத்து..அவனை சந்திப்பதற்க்கான வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுத்த இறைவனுக்கு நான் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

Last but not least "Many more happy returns of the Day Machi"

உன் வாழ்வு சிறக்கவும் உன் மேல் பிறரின் அன்பு மென்மேலும் படரவும்..

(கிஷோர் இதை நீ மட்டும் படி : மச்சி கொடுக்கறன்னு சொன்ன காசுக்கு மேலே ஓவரா கூவிட்டேன்..சொன்ன மாதிரியே என் அக்கௌன்ட்க்கு பணம் வந்துடனும் சொல்லிப்புட்டேன்)