Monday, June 29, 2009

ஏழாம் உணர்வு

சிவா திடுக்கிட்டு எழுந்தான்.
முகம் எங்கும் வியர்வை துளிகள்..
"என்ன ஆச்சு.. ஏன் மூணு நாளா தொடர்ந்து இதே மாதிரி கனவு..."
புரியவில்லை ..

கடிகாரத்தை பார்த்தான் மணி 5:45.
இனிமேல் தூங்குவது கடினம் தான்..
பக்கத்தில் விமல் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான்.
சரி எதிர்ல போய் டீ சாப்பிட்டு வருவோம்.
எழுப்புலாம இவனை..வேணாம் தூங்கட்டும்.. நேத்து இரவு கூட லேட்டா தான்வந்தான்.

வெளியில் எழுந்து போனான்..சாலை அமைதியாக இருந்தது..

நாம் 8 மணிக்கு மேல் தினம் பார்க்கும் சாலை தானா இது என்று ஒரு சந்தேகம்..
எதிரில் ராஜா டீ ஸ்டால் இருந்ததை பார்த்து உறுதி செய்து கொண்டான்.

"அண்ணா ஒரு டீ"

"என்ன சிவா இவ்வளவு சீக்கிரம் கடை பக்கம்"

"தூக்கம் கலஞ்சிருச்சு அண்ணா அதான்"

"வேலை எல்லாம் எப்படிப்பா போது"

"அப்படியே போது அண்ணன் ஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்ல"

"ஊருக்கு போனியா"

"இல்ல அண்ணன் போய் 5 மாசத்துக்கு மேல ஆகுது பொங்கலுக்கு
போனதோடசரி இப்ப லீவ் எடுக்கறது கொஞ்சம் கஷ்டம்"

டீயை குடித்தான்.

டீயை குடித்து கொண்டே சிறிது பேப்பரை மேய்ந்தான்.

சற்று நேரத்தில் மனம் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தது.

ரூம் திரும்பிய பொழுது FM அலறி கொண்டு இருந்தது.
விமல் எதிரில் நின்று கொண்டு இருந்தான் .

" என்னடா சீக்கிரம் எழுந்துட்ட போல "

" ஆமாம் டா தூக்கம் கலஞ்சிருச்சு அதான் ..போய் டீ குடித்து வந்தேன் "

" என்னாச்சு நானும் கேக்கணும்னு நினைச்சேன் ஆளே 2 நாளா வித்தியாசமாஇருக்க "

"ஒன்னும் இல்லடா"

" நேத்து கூட கம்பெனில இருந்து சீக்கிரம் வந்துட்ட .. நீ ஆளே சரி இல்லையே "

"ம்ம் .. ரெண்டு நாளா கொஞ்சம் குழப்பம் அதான்"

" ஏன் ஆரண்யா கூட எதாச்சும் பிரச்சனயா "

" அதெல்லாம் ஒன்னும் இல்லடா..ஸ்மூத்தா தான் போய்கிட்டு இருக்கு"

" பின்ன என்ன பிரச்னை.."

" தொடர்ந்து மூணு நாளா காலைல ஒரே மாதிரி கனவுடா"

" என்ன கனவு "

" ரங்கபிள்ளை வீதி இருக்குல்ல அங்க ரோட்ல ஒரு ஆளு ரத்த வெள்ளத்துலஅடிப்பட்டு கிடக்குற மாதிரி அவன் மூஞ்ச சரியா பாக்க முடியுல இதான் முந்தா நேத்தி வந்த கனவு"

"டேய் இதே கனவு தான் மூணு நாளா வருதா என்ன.."

"இல்லடா நேத்து நீயும் நானும் அந்த தெருவுல போற மாதிரி ..உன்னோட பைக் கிழ விழுந்து கிடக்குது நீ கத்துற ..எனக்கு சரியா புரியுல "

விமல் திகிலடைத்து போய் நின்றான் .

" டேய் என்னை பத்தி ஒரு கனவு அதுவும் இதே மாதிரியா .."

" டேய் அது நீ இல்ல பயப்படதா"

" பயப்படுல..இருந்தாலும் காலைல கண்ட கனவு..இன்னிக்கு காலைல என்ன கனவு"

சிவா விமலை தீர்க்கமாக பார்த்தான் .

"இன்னிக்கும் அதே ரத்த வெள்ளம் தான்.. எல்லாம் பாக்குறாங்க ..பக்கத்துல ஒரேகூட்டம்..நம்ம ரூம் காலண்டர் ஜூலை 5 ..அக்ஷய திரிதை.."

"டேய் நம்ம வாரத்துக்கு ஒரு தடவை அந்த பக்கம் போறோம் ..டிவில வேற அடிக்கடி அக்ஷய திரிதை வரர்த்தால தங்க நகை வாங்கலையான்னு விளம்பரம் வேற ..அதோட பாதிப்பு தான் இது எல்லாம் ஒரு
DEJA VU தான் விட்டு தள்ளுடா"

"இல்ல மச்சான் இதுக்கு முன்னாடி இது மாதிரி வந்ததே இல்ல ..இது எல்லாத்துக்கும் லிங்க் இருக்குற மாதிரியே ஒருபீல் டா "

"இங்க பாரு குழப்பிக்காத வெறும் கனவு தான் ..விட்டு தள்ளு..இன்னிக்குஆரான்யா கூப்டிக்கிட்டு பீச்க்கு போய்ட்டு வா எல்லாம் சரி ஆகிடும் "

"பாப்போம்.."

சிவா வேலைக்கு கிளம்பி போனான்.

வேலையின் பளுவால் ஏறத்தாழ எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு திரும்பி இருந்தான்.வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில்..

ஆரன்யாவிடம் இருந்து போன்.

பேசி முடித்ததும் ரிலாக்ஸ் ஆக இருந்தது.

ரூம்க்கு திரும்பி சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று நினைத்து கொண்டே விமலுக்கு கால் பண்ணினான்.

மொபைல் அணைத்து இருந்தான்..

"எத்தனை மணிக்கு வருவான்னு தெரியலையே.."

அவன் சாப்பிட்டு விட்டு தூங்கினான். நல்ல தூக்கம்.

"ஐயோ கடவுளே எவ்வளவு ரத்தம்"

"யாராச்சும் காப்பாத்துங்க ப்ளீஸ்.."

"கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.." சிவா கதறினான்.

"இந்த எழவு எதுக்கு நமக்கு வந்த வேலைய பாப்போம்.." பக்கத்தில் ஒரு பெண்.

இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்தது.
மொபைல் அலறியது..

சிவா திடுக்கிட்டு எழுந்தான்..

பக்கத்தில் விமல் தூங்கி கொண்டு இருந்தான்..

அலாரத்தை அணைத்தான்.

தொடர்ந்து நான்காவது நாள் இதே மாதிரியே..
என்ன ஆச்சு..ச்சே..இந்த கனவால நிம்மதி தான் போகுது..

இதுக்கு என்ன தான் தீர்வு..

விமலும் முழித்து கொண்டான்.

"என்னடா ஆச்சு.."

"ஒன்னும் இல்லடா"

"டேய் சொல்லு.. முகம் எல்லாம் பயங்கரமா வேர்த்து விட்டு இருக்கு..என்ன திரும்ப அந்த கனவா.."

"ஆமாம் டா.."

"என்ன அதே ரத்த வெள்ளம்..அக்ஷ்ய திரிதையா.."

"ம்ம்ம்.."

"இந்த டீவில போடுற விளம்பரத்தை முதல்ல
நிறுத்தனும் "
சிவா காலெண்டரை பார்த்தான்..இன்னிக்கு..

"ஜூலை 5 ..ஞாயிறு..அக்ஷ்ய திரிதை..''

"டேய் இன்னிக்கு கடை எல்லாம் எத்தனை மணிக்கு ஓப்பன் பண்ணும்.." சிவா.

"இன்னிக்கு சண்டே..பொதுவா எல்லா கடையும் மூடி தான் இருக்கும்.. என்ன இன்னிக்கு அக்ஷ்ய திரிதை..அதனால நகை கடை எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் திறந்திரும்.." விமல்.

"சரி கிளம்பு.."

"எங்கடா.."..விமல்.

"ரங்கபிள்ளை வீதி"

" டேய்.. எதுக்கு டா.."

"இல்ல மச்சான் இது என்னனு தான் பாத்துருவோம்..வா போலாம்.."

"டேய்..இன்னிக்கு சண்டே..டீவி பாக்கலாம் டா..மேட்ச் வேற இருக்கு.."

"பயப்படுறியா என்ன.."

"யாரு நானா..சரி வா கிளம்புலாம்".. விமலுக்கு சற்று உதறலாக தான் இருந்தது.

இருவரும் விமலின் பைக்கில் ஏறி அமர்ந்தனர்..விமல் ஒட்ட சிவா பின்னால்அமர்ந்தான்.

ரங்கபிள்ளை வீதி..பெரும்பாலும் நகை கடை தான்..

நல்ல கூட்டம்..அக்ஷ்ய திரிதை முன்னிட்டு நகை கடைகளில்.

"இன்னிக்கு யாரயாச்சும் கூப்பிட்டு தர்மம் பண்ண அந்த புண்ணியம் பல மடங்கு பெருகும்னு சொல்லுவாங்க..ஆனா பாரு..இந்த தங்க நகை வியாபாரம் பண்ணுறவங்க இனிக்கு கால் பவுனு வாங்குனா கூட செல்வம் பல மடங்கு பெருகும்னு ஒரு பீட்ட போட்டு இதை கூட கமர்ஷியல் ஆக்கிடாங்க..அதனால நகை கடை எல்லாம் வருஷா வருஷம் கூட்டம்.."

சிவா விமல் சொன்னதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை.

"டேய் உங்கிட்ட தான் சொல்றேன்..நின்னுக்கிடே கனவு கானுரியாஎன்ன..இன்னிக்கு டைம் வேஸ்ட் இங்க வந்து நின்னுக்கிட்டு..

என்று சொல்லி முடிக்கும் முன்பே டமால் என்று ஒரு சப்தம்..

இவர்கள் நின்று கொண்டு இருந்த கடைக்கு 25அடி தள்ளி ரோட்டில் ஒரு லாரி ஒருவனை அடித்து போட்டு விட்டு
சென்று கொண்டு இருந்தது.

சிவாவும் விமலும் திகைத்து போய் அதிர்ச்சியில் அவன் அருகில் ஓடினர்..

சரியாக சைடு ஸ்டாண்ட் போடவில்லை என்பதால் விமலின் பைக் ரோட்டில் விழுந்தது.

அவன் அருகில் சென்று பார்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தான்.

அவனை சுற்றி ஒரு ஆறு பேர் தான் நின்று கொண்டு இருந்தனர்.
மக்கள் எல்லாம் கடையில் நின்றவாறே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

சிவா ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தான்.
விமல் நிற்காமல் சென்ற லாரி நம்பரை குறித்து கொண்டான்.
எதிர் கடையில் இருந்து ஒரு பெண் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தால்.

"ஐயோ கடவுளே..வண்டிய எதிர்ல பார்க் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு போன்னாரே..அதுக்குள்ள..ப்ளீஸ் யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.."

"பாவம் புது மண தம்பதி.."

"நமக்கு எதுக்கு இந்த எழவு..வாங்க போலாம்.."..ஒரு நடுத்தர வயது பெண்மணி அவள் கணவனை கையை பற்றி இழுத்து கொண்டு இருந்தால்..

அதற்குள் டிராபிக் போலீஸ் அந்த இடத்திற்கு விரைந்து இருந்தார்.

ஆம்புலன்ஸ் வந்தது.

சிவாவும் ஆம்புலன்சில் ஏறி கொண்டான்..ஒரே ரத்த வெள்ளம்..அவன் மனைவியை பார்க்க முடியவில்லை..அவள் ஏறக்குறைய மயக்க நிலையில்இருந்தால்..

விமல் போலீசிடம் நம்பரை கொடுத்து விட்டு..பேசி விட்டு..ஆம்புலன்சை பின்தொடர்ந்தான்.

பொது மருத்துவமனை.

"பயப்படாதிங்க ஒன்னும் ஆகாது..உங்க வீட்டுக்கு போன் செஞ்சிட்டேன்..வந்துட்டு இருக்காங்க.."

அவள் எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லை.

டாக்டர் வெளியே வந்து சிவாவை அழைத்தார்.

"நீங்க யாரு ரீலேட்
டிவா "..

"ஆமாம் சார் சொல்லுங்க.."

"தலையில பலமா அடிப்பட்டு இருக்கு..நிறைய ப்ளீட் ஆகி இருக்கு..ஒரு சின்னஆபரேஷன் பண்ணியே ஆகணும்.. ரத்தம் தேவைப்படுது..ஆனா
பாருங்க blood bank செக் பண்ணிட்டேன்..எங்க தொடர்புல இருக்குற எல்லா blood bankலையும்சொல்லி இருக்கேன்.. கிடைக்குல ரொம்ப Rare group.."

"என்ன குரூப் சார்.."

"O -Ve.."

"
சார்God grace, நானும் O -Veதான்.."

"Really..very good. சீக்கிரம் லேப்க்கு போங்க..''

சிவா லேப்க்கு விரைந்தான்.

விமல் வெளியே கையை பிசைந்து கொண்டு இருந்தான்..

அதற்குள் அந்த பையனின் மற்றும் பெண்ணின் உறவினர்களும் வந்து அந்த இடத்தை உண்டு இல்லை என்று பண்ணி கொண்டு இருந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்து.."இனிமே ஒன்னும் பிரச்னைஇல்லை அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.."

அந்த பெண்ணின் உயிரும் திரும்பி வந்தது..

லேப்பில் இருந்து வெளியே வந்த சிவாவை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பற்றிகொண்டனர்.

எல்லாவற்றையும் முடித்து கொண்டு சிவா விமலை நோக்கி வந்தான்.

"டேய் என்னால நம்பவே முடியுலடா"..விமல்.

"ஆமாம் டா என்னாலையும் தான் ஆனா எதோ ஒரு விஷயம் தான் என்னை உன்னை இங்க இழுத்துட்டு வந்து இந்த நல்ல காரியத்தை பண்ண வச்சு இருக்கு..
அது Sixth sense,இல்ல Final destination, இல்ல Deja vuவோ..எதோ ஒன்னு..ஆனாஅந்த விஷயம் தான் ஒரு உயிரை காப்பாத்தி இருக்கு மச்சான்..

"நம்ம எல்லாத்தையும் மீறி எதோ ஒன்னு இருக்குல"..சிவா.

"ஆமாம்டா சத்தியமா"..

இருவரும் பைக்கில் ஏறி அமர்ந்தனர்.

சிவா ஒரு வாரம் கழித்து ஒரு வித மகிழ்ச்சியான அமைதியை அனுபவித்தான்.

அஜித்,விஜய் அப்புறம் கொஞ்சம் பியர்..பாகம்-2


இருவரும் ஜீப்பில் ஏறி அமர்ந்தனர்..கான்ஸ்டபிள் வண்டிய ஒட்டி கொண்டு வந்தார்.
"நீ போயிருக்கலாமே டா"..விஜய் கேட்டான்.
"போயிருப்பேன்.. உங்க வீட்டுக்கு நான் தனியா போக முடியாது..ஊருக்கு போலாம்னு பார்த்தா கூட முப்பது ரூபா தான் இருக்கு அதான் ஜீப்லையே ஏறிட்டேன்.."


"த்த்தூ.."

"டேய் இப்படி மாட்டிகிட்டோமே என்னடா பண்றது..கொஞ்சமாச்சும் பீல் பண்றியா நீ.."..விஜய்.

"நான் அப்பயே சொன்னேன் படத்துக்கு போனுமானு..கேட்டியா"..அஜித்.
"டேய் பரதேசி குடிக்கலாம்னு சொன்னது நீ தாண்டா வென்ன"
"சரி விடு..இந்த 30 ரூபாவா லஞ்சமா வச்சிகுங்க சொல்லி கொடுத்து பாரு..என்ன சொல்ரங்கனு பாப்போம் "
"டேய் இந்த சமயத்துல எப்படிடா காமெடி பண்ற..அசிங்கமா இருக்குடா.."
"இரு எதாச்சும் யோசிப்போம்"
"நீ யோசிச்சு முடிக்றத்துகுள்ள ஸ்டேஷன் வந்துடுடும்.."

ஜீப் ஸ்டேஷன்ல் நின்றது..

கான்ஸ்டபிள் விஜயை பார்த்து "இங்க பாருப்பா உண்மைய ஒத்துக்கோ நாளைக்கு கோர்ட்ல வந்து பைன் கட்டு..வண்டிய எடுத்துக்கோ "

"சார் தெரியமா பண்ணிடோம் சார்.."

"தெரியமா பண்ணிங்களோ தெரிஞ்சு பண்ணிங்களோ..ஆனா ஒரு தடவ ஃபைன் கட்டுன தான் புத்தி வரும்..கான்ஸ்டபிள் அந்த பையன் மேல சார்ஜ் சீட் போட்டுகொடுங்க..தம்பி இங்க பாருங்க நாளைக்கு வந்து கோர்ட்ல பைன் கட்டிட்டு வண்டிய ஸ்டேஷன் வந்து எடுத்துக்கோ இப்ப வீட்டுக்கு கிளம்புங்க"..
எப்பா வீட்டுக்கு கிளம்புலமா.. அஜித் பெருமூச்சு விட்டான்..

இருவரும் ஆட்டோவை பிடித்து கிளம்பினார்.

"டேய் அசிங்கமா இருக்குடா..நாளைக்கு கோர்ட்ல பைன் கட்டுரப்பா எவனாச்சும் பாத்தான்னு அவளோ தான் கதையே முடிஞ்சு போச்சு"..விஜய்.
"அப்ப ஃபைன் கட்ட போறியா..அது சரி உன் வண்டி நீ கட்டுற ..காலையில என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு அதுக்கு அப்புறம் தானே கோர்ட்கு போவ..இல்ல வண்டிய எடுத்துட்டு வந்து விடுறியா.."..அஜித்.
"என்னது நாளைக்கு நீயும் தாண்டி கோர்ட்கு வர"
"வரேன் வரேன் குடிகாரன் கூட சேர்ந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..நேர ஊர பாத்து போய் இருக்கனும் தப்பு பண்ணிட்டேன்.."
"சொல்லுவடா சொல்லுவ"
"வீட்டுல வண்டி எங்கனு கேட்டா என்னடா சொல்றது"..அஜித் கேட்டான்.
"பஞ்சர் அதுனால ப்ரென்ட் வீட்டுல வச்சிட்டு வந்தோம்னு சொல்லி சமாளிப்போம் வேற வழி இல்ல.."
வீடு போய் சேர்ந்து இருவரும் உறங்கினார்..

மறுநாள் காலையில் அரக்க பரக்க விஜய் கிளம்பினான்.

அஜித்தை எழுப்பி " எப்படிடா எந்த கவலையும் இல்லாம தூங்குற..எழுந்திரு கோர்ட்க்கு போலாம்"..
அஜித் " மச்சான் நான் ஊருக்கு கிளம்புலம்னு நினைக்கிறேன் அத பத்தி நீ என்ன நினைக்குற"..
"செருப்பு பிஞ்சிக்கும்"

இருவரும் முதலில் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தனர்..

இன்ஸ்பெக்டர் பார்த்து விட்டு வாங்கப்பா என்றார்..

கான்ஸ்டபிள் பார்த்து "இவங்களை கோர்ட்க்கு கூப்ட்டு போங்க பைன் கட்டுனஅப்புறம் வண்டிய கொடுத்துங்க". கோர்ட்க்கு போவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டது..

"மச்சான் உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்த கூப்ட்டு வந்து சொல்லிட்டு வண்டிய இப்படியே எடுத்துட்டு போக முடியாதாடா"..அஜித் கேட்டான்.
"வேற எதாச்சும் மேட்டரா இருந்தாலும் பரவா இல்லடா DRUNKEN டிரைவ்மேட்டற்கு எப்படிடா நான் தெரிஞ்சவங்கள கூப்ட்டு வர முடியும் வேற வழியேஇல்ல கோர்ட்டுக்கு போய் பைன் கட்டி தான் ஆகணும்..நீ சும்மா கூட வாடா அதுபோதும்"
"சரி வரேன்"..
"எவனாச்சும் தெரிஞ்சவன் கோர்ட்ல பார்த்தானா அசிங்கமா போய்டும்டா"
"இத நேத்து குடிக்கறப்பவே யோசிச்சு இருக்கனும்" விஜய் முறைத்து பார்க்க அஜித் திரும்பி கொண்டான்.

விஜய் பதுங்கி பதுங்கி கோர்ட்க்குள் சென்றான்.
விஜய் அஜித்தை பார்த்து " டேய் இங்க வந்து நில்லுடா"..
"மச்சான் நீ என்ன தான் பதுங்கி நின்னாலும் ஜட்ஜ் உள்ள உன் பேரை சொல்லி கூப்புடுற அப்ப எல்லார் முன்னடியும் போய் தான் ஆகணும்..அப்ப என்ன தலைல துண்டா போட்டுகிட்டா போவ.."
"டேய் நேத்து வண்டிய நீ ஓட்டி இருக்கனும்..இப்ப இதே மாதரி காமெடி டயலாக் உன் வாயுல இருந்து வந்து இருக்கும்..எல்லாம் எம் நேரம்"
"அதான் நானும் நினச்சேன் நல்ல வேல வண்டிய நேத்து நான் ஒட்டுல்ல..God is Great.." "ச்சே இனிமே குடிக்கவே கூடாதுடா"
"பாத்தியா என்ன காமெடி பண்ண வேணாம்னு சொல்லிட்டு நீ காமெடி பண்ற.."
கான்ஸ்டபிள் வேற எங்கப்பா அந்த DD கேஸ்ல மாட்டுன தம்பினு எல்லோர் முன்னடியும் கேட்டு அடிக்கடி கடுப்பு ஏற்றி கொண்டு இருந்தார்..
திடிர் என்று விஜய் அலறினான்..

"டேய் எங்க பக்கத்து வீட்டுக்காரன் வரான்டா"
"எங்கடா.."
"அங்க பாரு".. ஒரு பெரிய மனிதர் நாலைந்து பேர் புடை சூழ வந்து கொண்டு இருந்தாரு.. "டேய் அவரு எதுக்குடா இங்க வராரு"..அஜித் கேட்டான்.
"டேய் அவரு மா.மூ.தீ.கல இருக்காரு டா.இப்படி தான் கோர்ட் கேஸ்னுஅலைஞ்சிக்கிட்டு இருப்பாரு..அய்யோ சனியன் சுத்தி சுத்தி அடிக்குதே"..
"சரி விடு அந்த ஆளு கன்னுல படாத இப்படி வந்து நில்லு" ..
அந்நேரம் பார்த்து கான்ஸ்டபிள் விஜயை கூப்பிட்டார்.. "தம்பி எங்கயும் போய்ட போற இன்னும் 20 நிமிஷத்துல Magistrate கூப்பிடுவாரு".. விஜய் கான்ஸ்டபிள் கூட பேசி கொண்டு இருந்ததை அந்த பெரிய மனிதர் பார்த்துவிட்டு சரியாக அவனருகில் வந்தார்..

தம்பி என்னப்ப இங்க..டக்கென்று ஒரு பொய்யை உதிர்த்தான்..
"சார் ஃபிரென்ட் லைசென்ஸ் இல்லாம மாட்டிக்கிட்டான்.அதான் பைன் கட்ட வந்தோம்".. "ஏன்பா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல எதுக்கு கோர்ட்க்குல்லாம் வர நான் இன்ஸ்பெக்டர்க்கிட்ட பேசி அப்படியே வண்டிய வாங்கி கொடுத்து இருப்பேனே"..
"இல்ல சார்..சரி பைன் கட்டிர்லாம்னு அவன் சொன்னதால தான் இங்கேயேவந்துடோம்"
"சரி விடு அடுத்த தடவ எதாவது பிரச்சனைனா சொல்லுப கூச்ச படாத என்று சொன்னவர் திரும்பி தனது சகாக்களிடம் நல்ல பையன் என்று சொன்னார்.
அஜித்க்கு சிரிப்பு அடக்க முடியவில்லை..

இருவரும் அவர் கண்ணில் படாமல் ஒதுங்கி நின்றனர். 10 நிமிடம் கழித்து DD கேஸ்ல மாட்டுனுவங்கள Magistrate கூப்பிட்டார்.. முதல் ஆளே விஜய் தான்.. ரெண்டாவது ஆளு அந்த பக்கத்து வீட்டுக்காரர்.. இருவருக்குமே மூஞ்சில் ஈயாடவில்லை.. அஜித் வெளியில் தூண் மறைவில் நின்று கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.. விஜய் பைன்ஐ கட்டி விட்டு வெளியே வந்தான்..அஜித் சிரித்து கொண்டே எதிரில்வந்து..
" என்ன மச்சான் என்ன சொன்னாரு பக்கத்து வீட்டு பெரிய மனுஷன்.."
"ஏன்டா எனக்கு ஒரு நிமிஷம் ஹார்ட் அட்டாக் வராத கொற..நீ இங்க சிரிக்கிறியா.." "பயப்படாதடா கண்டிப்பா அந்த ஆளு சொல்ல மாட்டாரு..திருடனுக்கு தேள் கொட்டுன மாதரி தான்.."
"சொல்ல மாட்டார்னு தான் நினைக்கிறேன்"..
"ஏன்டா உங்க ஏரியால எல்லோருக்கும் இதான் பொழப்பா"..அஜித் நக்கலாக கேட்டான்.

இருவரும் ஸ்டேஷன் வந்து வண்டியை எடுத்தனர்.. விஜய் " எப்ப இப்ப தாண்டா நிம்மதியா இருக்கு காலைல இருந்து நாயா பேயா அலைஞ்சிடேன்"

"எதோ என்ன மாதரி ஆளு இருந்தா தால எல்லாம் பட் பட்னு முடிஞ்சு போச்சு.."
"தயவு செஞ்சு என்கிட்ட இருந்து அசிங்கமா திட்டு வாங்காத டா"..
"சரி உன்ன பஸ் ஸ்டாண்ட்ல விட்ருவா"..விஜய் அஜித்திடம் கேட்டான்.

"என்ன மச்சான் இவளோ பெரிய சாதனை பண்ணிட்டு வந்து இருக்க பார்ட்டிஎல்லாம் இல்லையா.."
விஜய் அஜித்தை பஸ்சில் ஏற்றி விட்டு தான் வீட்டுக்கு திரும்பினான்.

Saturday, June 27, 2009

அஜித், விஜய் அப்புறம் கொஞ்சம் பியர்..பாகம் 1


"இன்னிக்கு செகண்ட் ஷோ போய் தான் ஆகணுமா "..அஜித்.

"போய் தான் ஆகணுமா .. கண்டிப்பா போறோம்.. "..விஜய்.

"சொன்ன கேக்க மாட்டியே ..மொக்க படம்னு கேள்விபட்டேன். மவனே படம் மட்டும் நல்ல இல்லன்னு வையு அதோட நீ தீர்ந்த.."

"அட இது வரைக்கும் நம்ம மொக்க படம் பார்த்ததே இல்லையா என்னமூடிக்கிட்டு வாடா.."

"வரேன் சரி.. ..அதுக்கு முன்னாடி..ஒரு பீர் அடிச்சிட்டு போன நல்ல இருக்கும்னு ஃபீல் பண்றேன்.."

"என்னது பீரா... உன்ன படத்துக்கு கூப்ப்ட்டு போறதே அதிகம் ..இதுல பியர் வேறயா.."

"சொல்லுவடா உன்ன பாக்குறத்துக்கு அவசரம் தஞ்சவூர்ல இருந்து சென்னை போற நான் நேரா போகமா சிதம்பரம் வந்துட்டு போறன் பாரு இதுவும் பேசுவஇதுக்கு மேலயும் பேசுவடா நீ.."

"மச்சான் கோவிச்சிக்காத டா உனக்கு பீர் தானே வேணும் வா பார்க்கு போலாம் .."

"என்னது பாருக்கா அங்க எல்லாம் வேணாம்.. டைம் ஆயிடும்.. பக்கத்துலஇருக்குற டாஸ்மாக்ல வாங்கு.. அங்கேயே மறைவுல நின்னு அடிச்சிட்டுஅப்படியே படத்துக்கு போயருலம்.."

"டேய் எவனாச்சும் பாத்த பிரச்சனைடா .."

"யாரும்
பாக்க மாட்டாங்க.. அப்டியே அடிச்சிட்டு படத்துக்கு போய்ருவோம்"

"கேக்க மாட்டியே நீ"..விஜய்.

"நீ மட்டும் கேட்டுருவ பாரு.."அஜித்.

இருவரும் மாரியப்பா தியேட்டர் சந்தில் பீர் அடித்து விட்டு படத்துக்கு செல்கின்றனர்..

"டேய் படமா டா இது.." அஜித் புலம்ப ஆரம்பித்தான்..

"மச்சான் கொஞ்ச நேரம்டா படம் முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுலாம்.." விஜய்..

"வீட்டுல நிம்மதியா தூங்கி இருப்பேன் அதையும கெடுத்த நீ.."

"ஆமாம் இதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் செகண்ட் ஷோ பாத்ததே இல்ல பாரு.."

"அதுக்கு சொல்லல நான் தான் முன்னாடியே சொன்னேன் படம் நல்லஇல்லைன்னு கேள்வி பட்டேன் வேணாம்னு"


"சரி விடு வந்து தொலைச்சிட்டோம் பாத்துட்டு போய்ருவோம்.."

அஜித்தால் இடைவேளைக்கு பிறகு கட்டுப்படுத்தவே முடியவில்லை..

"மச்சான் நீ வர்றியா இல்ல நான் ஆட்டோ புடிச்சு போய்ரவா"..அஜித்

"டேய் கொஞ்சம் பொறுத்துக்கோ டா..படம் இன்னும் அரை மணி நேரத்துல முடிஞ்சுரும் உயிர வாங்காத.."..விஜய்.

விஜயலும் உக்கார முடியவில்லை அந்த அளவுக்கு மொக்க படம்..படம் முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வண்டியை எடுத்துகொண்டு இருவரும் கிளம்பினர்..

விஜய் ஓட்ட அஜித் அமர்ந்து கொண்டான்..

"டேய்
நாயே
வண்டியுல தூங்காத டா "..விஜய் சப்தம் போட்டான்..

"இல்லைடா ச்ச்செரி"..

விஜயின் வீட்டுக்கு ஒரு அரை கிலோமீட்டர் முன்பு ஒரு வளைவில்..

http://www.d.umn.edu/~gril0026/5250/revision/police_night.jpeg


"மச்சான் எதோ ஜீப் நிக்குற மாதரி தெரியுல.."விஜய்..

"எங்கடா.."

டேய் போலீஸ் டா...என்று சொல்லும் போதே..ஜீப் அருகில் நெருங்கி விட்டு இருந்தனர்..

கான்ஸ்டபிள்..
"நில்லுப்பா" ..விஜய் வண்டியயை நிறுத்தினான்..
" தம்பி எங்க போயிட்டு வாரிங்க."

"சினிமாவுக்கு சார்.."..விஜய்.
"எங்க டிக்கெட் காட்டு "..

"இந்தாங்க சார்.."விஜய் ரொம்ப பயபக்தியோடு எடுத்து நீட்டினான்..

"லைசென்ஸ்..??".. அதையும் காட்டினான்..

அதற்குள் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்து இறங்கினார்..

"படம் எப்படிப்பா இருக்கு".. நக்கல் தொனிக்கும் பாணியில் கேட்டார்..

"நல்ல இருக்கு சார்" விஜய்..

அடப்பாவி என்று அஜித் மனசுக்குள்ளேயே கருவினான்..

"என்ன பண்றீங்க"

"சார் நான் Universityல வொர்க் பண்றேன்.."விஜய்..

"தம்பி நீப்பா"

உண்மைய சொல்ல கூடாது என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அவர் கேட்ட வேகத்தில் கரெக்டா.."சார் நான் தஞ்சாவூர்ல வொர்க் பண்றேன்".. என்று அஜித் உளறி கொட்டினான்.

"அதெல்லாம் சரி உங்க ரெண்டு பேரையும் பாத்த எதோ தப்பு பண்ணிட்டு வந்த மாதரியே தெரியுதே.."..இன்ஸ்.

"சார் படத்துக்கு தான் போயிட்டு வரோம்"..விஜய்..
கொஞ்சம் விட்ட காலில் விழுந்து இருப்பான்.அப்படி ஒரு பணிவு அவன் வார்த்தையில் தெரிந்தது.

"தம்பி இங்க வா வாய ஊது"

விஜய்க்கு அடி வயுறு கலங்கியது..இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

"ஊதுப்பா"..விஜய் கிட்டே போய் ஊதினான்..


"அதன்ன பாத்தேன்..
ஏன்டா டேய் குடிக்கரிங்க சரி..குடிச்சிட்டு ஏன்டா ஊர சுத்துரிங்க..எங்கயாச்சும் அடிப்பட்டு செத்திங்கினா..எவன்டா பதில் சொல்றது"..

விஜய் அழுதே விடுவான் போல் இருந்தது..

அஜித் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "சார் நாங்க ரெகுலர் கிடையாது எப்பயச்சும்"..

"எப்பயச்சும் அடிச்சிட்டு ஊர சுத்துவிங்க போற வரவன் மேல எல்லாம் வண்டியை வுட்டு ஏத்துவிங்க அதானே.."

"இல்ல சார்.. சாரி சார்.."..விஜய்.

"இன்னத்துக்கு சாரி உங்கள எல்லாம் உள்ள புடிச்சு உக்கார வச்சா தான்அடங்குவிங்க.."

"சார் இல்லை சார்.."..அஜித்.

"
என்ன இல்லை நொல்லைநு..தம்பி வண்டி ஓட்டிட்டு வந்த தம்பி வந்து ஜீப்புல ஏறு..உக்கந்துட்டு வந்த தம்பி நீ கிளம்பரதுனா கிளம்பு"

விஜய் மனசுக்குள்ளேயே.." யோவ் அந்த நாய் தான் குடிக்க ஐடியாவே குடுத்துச்சு.."

"இல்ல சார் நானும் வரேன்"..அஜித்..

விஜய் அஜித்தை பெருமிதத்தொடு பார்த்தான்..
(தொடரும்)..

Tuesday, June 23, 2009

நகைச்சுவை நடிகைகள் பற்றி ஒரு சின்ன பார்வை..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் உள்ளார்கள்..ஆனால் நகைச்சுவை நடிகைகள் என்று பார்க்கும் பொழுது அவர்களின் பட்டியல் சிறியதே..நடிகைகள் நடிப்பதற்கே வாய்ப்பு குறைவாக உள்ள நம் படங்களில் சில நடிகைகள் நகைச்சுவையின் முலம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தங்களுக்கு என்று தனி முத்திரை பதித்தனர்..அப்படி நான் பார்த்த என்னை கவர்ந்த நகைச்சுவை நடிகைகள் பற்றியும் நகைச்சுவை காட்சிகள் பற்றிய ஒரு தொகுப்பு தான் இது..

இந்த லிஸ்டில் யாரை கேட்டாலும் கண்டிப்பாக அவர்கள் சொல்லும் முதல் பெயர் இவரின் பெயராக தான் இருக்கும்..நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்து தனித்து நிற்பவர்..ஆம் ஆயிரம் சினிமாவிற்கு மேல் கண்ட நம் "ஆச்சி" மனோரமா தான் அவர்..


அற்புதமான நடிகை..நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்ப்படுத்தி மக்கள் மனதில் அழிய இடம் பெற்றவர்.. நாகேஷ் தொடங்கி பல நகைச்சுவை நடிகர்களோடு இணைந்து நடித்து விட்டார்..
இடைப்பட்ட காலத்தில் சின்ன தம்பிக்கு பிறகு என்று நினைக்கிறேன்..அம்மா வேடம் என்றால் மனோரமா தான் என்ற நிலைமையை ஏற்படுத்தியவர்..

சில படங்களில் பாடியும் உள்ளார்..அவரோடைய திறமைக்கு சான்றாக எனக்கு தெரிந்து ரெண்டு பாடல்கள் சொல்வேன்.."வா வாத்தியாரே வூட்டாண்டா..நீ வரான்காட்டி நான் விட மாட்டேன்"..படம் பெயர் தெரியவில்லை..
அப்புறம் மே மாதம் படத்தில் வரும் "மெட்ராஸ்சை சுத்தி காட்ட போறேன்" பாடலில் இடையில் வரும் அந்த குரல் ..
இந்த பாடல்கள் உடனடியாக நியாபகத்தில் வரும்..

படம் என்று எடுத்துக்கொண்டால் சொல்லிகொண்டே போகலாம்..
ஆனால் உண்மையில் "தில்லானா மோகனம்பாள்" படத்தில் வரும் அந்த கதாப்பாத்திரம் "ஜில் ஜில் ரமணி" தான் மாஸ்டர் பீஸ்..கொஞ்சம் ஏமாந்து இருந்தால் சிவாஜி பத்மினி இவர்களை எல்லாம் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு இருப்பார்..அவ்வளவு படு இயல்பாக அந்த பாத்திரத்தை கையாண்டிருப்பார்..
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் அம்மாவாக அவர் சொல்லும் வசனம் "அய்யோயோ அய்யோ"..அந்த வசனம் மறக்க முடியுமா..அப்புறம் நடிகன் படத்தில் அட்டகாசம் செய்து இருப்பார்..பின் "பாட்டி சொல்லை தட்டாதே" படத்தின் பிரதான பாத்திரமே இவர் தான்..
"சம்சாரம் அது மின்சாரம்"..படத்தில் அவர் சொல்லும் "கம்முனு கிட" இன்று வரை நம் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது..

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் அவர் படத்தை பற்றி சொல்வது என்றால்..

கோவை சரளா :


மனோரமாவுக்கு பிறகு நமக்கு தெரிந்து நல்ல நகைச்சுவை நடிகையாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் "கோவை சரளா" மட்டுமே..
ஆச்சி மாதிரி பலத்தரப்பட்ட கேரக்டர்கள் இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த பாத்திரத்தை எல்லாம் அழகாகவே கையாண்டார்..
கமல் இவரை சதி லீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக போட்டப்பொழுது அனைவரும் ஆச்சரியப்பட்டனர் ஆனால் கமல் இவரின் முழு திறமையும் அறிந்தே இந்த கதாப்பாத்திரத்தை அவருக்கு கொடுத்தார் என்று படம் வெளி வந்தப்பின் அனைவரும் தெரிந்து கொண்டனர்..தன்னுடுய அலட்சியமான உடல் மொழியாலும்,
நக்கலான கோவை வட்டார மொழி வழக்கிலும் அந்த படத்தில் நகைச்சுவையில் பின்னி இருப்பார்..
அதன் பிறகு வடிவேலோடு இணைந்து நடித்த பல படங்கள் இவருக்கு பெயர் வாங்கி தந்தன..மாயி படத்தை உதாரணத்திற்கு சொல்லலாம்..இரண்டு பேருக்கும் கவுண்டமணி செந்தில் மாதிரி இவர்களின் டைமிங் ஓரளவுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது..

விவேக் கூட சாஜகான் படத்தில் வரும் அந்த பிச்சைக்காரி பாத்திரம் மறக்க முடியுமா..
அப்புறம் தெலுங்கு பக்கம் கொஞ்ச நாள் வலம் வந்தார்..இன்று வரை நடித்து கொண்டு தான் இருக்கிறார்..

இவர்கள் இருவரை தவிர்த்து நகைச்சுவை நடிகைகளாக மட்டும் மற்றவர்களை அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினம்..
இருந்தும் இவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னை வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் தன் நடிப்பின் முலம் வெளிப்படுத்தி கொண்டவர் காந்திமதி..


நல்ல உடல் மொழி, அலட்சியமான பேச்சு , அசால்ட்டான பார்வை என்று பல படங்களில் வந்து உள்ளார்..குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "சின்ன தம்பி பெரிய தம்பி" படத்தில் வரும் பாத்திரம் நல்ல டைமிங்கோடு செய்து இருப்பார்..அப்புறம் மண் வாசனை படத்தில் வரும் வயதான கேரக்டர் இதுவும் பெயர் வாங்கி தந்தது..

முத்து,விருமாண்டி போன்ற படங்களிலும் குறிப்பிடும் படியான பாத்திரங்களில் வந்து போனார்..

இதன் பிறகு நியாபகத்தில் வருவது ஊர்வசி மட்டுமே..அவரும் நகைச்சுவை நடிகை மட்டும் அல்ல..கதாநாயகியாக பல படங்களில் நடித்து உள்ளார்..


அதுவும் "வனஜா கிரிஜா " படத்திற்கு பிறகு கேயார் இயக்கத்தில் இவர் நடித்து வந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன..எல்லா படத்திலும் தனக்கு என்று ஒரு பாணியை கையாண்டிருப்பார்..குறிப்பாக பேசும் விதம் ஒரு மாதிரி மழலைத்தனம் கலந்து இருந்ததால் அப்பொழுது சின்ன பசங்க மத்தியில் நல்ல ரீச் ஆனார்..அப்புறம் மகளிர் மட்டும் கேரக்டர் கூட சொல்லலாம்..
அதன் பிறகு ஆளை காணவில்லை..
இவர் நினைத்தால் இப்பொழுது கூட ஒரு குணசித்திர நடிகையாக ஒரு ரவுண்டு வரலாம்..


டிஸ்கி: வேறு யாரவது குறிப்பிடும் படியான நடிகை என்றால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்துங்கள் NSK அவர்களின் மனைவி மதுரம் கூட நகைச்சுவை நடிகை தான் ஆனால் அந்த அளவுக்கு அவர்களில் படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை..

Saturday, June 20, 2009

தளபதிக்கு தலயின் சார்பில் வாழ்த்து..


http://www.extramirchi.com/wp-content/uploads/2007/11/vijay_27main.jpg



அண்ணாத்தே வணக்கம்,

நான் தான் தல ரசிகன் பேசுறேன்..

முதல்ல இந்தா வாழ்த்து புடி..நீ இன்னும் பல ஆண்டுகள் வாழனும்..இன்னும் நிறையா வெற்றி படங்கள் தரனும்..

என்னடா தலயோட பேன் அப்படிங்கிறான் நம்மள வாழ்த்துரானே அப்படின்னு பாக்குறியா..
தல பாலிசி தான்ப்பா நமக்கும்..யாரா இருந்தாலும் நல்லா இருக்கணும் என்னிக்கும் சந்தோசமாகினும்....

நீயும் தலையும் இப்ப நல்லா தோஸ்தாகிறீங்க..பாக்க சொல்ல சந்தோசமா தான்கீது..ஆனா பாரு நீங்க ரெண்டு பெரும் கட்டி பிடிச்சு போஸ் கொடுத்தாலும் அது இன்னமோ உன் ரசிகர்களும், நம்ம தல ஆளுங்களும் கட்டி பிடிச்சு உருண்ட தான்ப்பா ஒரு மன திருப்தி..
உன் படம் ரிலீஸ் ஆகா சொல்ல நாங்க சீண்டுறது, இங்க ரிலீஸ் ஆகா சொல்ல அங்க வெறுப்பு ஏத்துறது அது ஒரு குஜால் தான்..

சரி எதோ சொல்ல வந்து எங்கயோ போறன் பாரு..அது இன்னமோ உன்னை பத்தி இப்படி சொல்றப்ப எனக்கு கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது..என்ன மேட்டர்ன்னு கேக்குறியா..
அப்பா உதவி இல்லாமா நீ இந்த அளவுக்கு வந்துருக்க முடியாதுன்னு..அது எல்லாம் சும்மா உன்ன வெறுப்பேத்த சொல்றது அவ்வளவு தான்..

எத்தனையோ பேரு..அவங்க அப்பா ஹெல்ப் பண்ணியும் இன்னும் பப்பு வேலைக்கு ஆகாம இருக்காங்க..எதோ ஆரம்பத்துல உனக்கு உன் நைனா சப்போர்ட் கொடுத்து இருக்கலாம்..ஆனா அதுக்கப்புறம் வந்தது எல்லாம் உன் திறமை தான் பாஸ்..

எத்தனை பேன், சின்ன பசங்கள்ள இருந்து வீட்டு பெருசு வரைக்கும் உன் படத்தை டிவீ ல
காட்டுனா வச்ச கண்ணு வாங்கமா பாக்குதுங்க..அவங்க மனச சும்மா புடிச்சுற முடியுமா..
உன் பாட்டு வந்தாலே அல்லாம் எதோ நாடி நரம்பு எல்லாம் முறுக்கு ஏறி ஆடுதுங்க..என்னவா காமெடி வேற பண்ணுற..அது போதுமே எல்லோரு மனசையும் லீஸ் எடுக்க..

எனக்கும் உன்னோட கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாம் புச்ச படம் தான்..அப்படியே கெலிச்சிட்டு போய்க்கினே இரு வாத்தியாரே..நீயும் இருக்கணும் தலயும் இருக்கணும் அப்ப தான் நமக்கு ஒரு திரில்..இப்ப கொஞ்சம் படம் சரியா போலனு மெர்சல் ஆயிடாத..தல கொடுக்காத பிளாப்பா..நாங்க எல்லாம் தல இப்ப நடிக்கிறத விட்டுட்டு இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு ஆக்ட் கொடுத்தாலும் அப்படியே தல பின்னாடி தான் நிப்போம் அதே மாதிரி தான் உன்ன பிடிச்சவங்களும் உன் பின்னாடி தான் எப்பொழுதும்..

எதோ உன்ன பத்தி நம்ம ஏரியவாணட ஒரு டாக் அடிப்படுது..அரசியலுக்கு வரப்போரியமே..
வேணாம் நைனா நிம்மதி போய்டும்..நீ அரசியலுக்கு வா வேணாமுன்னு சொல்லல நல்லது பண்ணனும்னு நினைக்கிற யாரையும் மக்க ஏத்துக்கும்..ஆனா இப்ப வேணாம்..எல்லார் மாதிரியும் நடிச்சு முடிச்சு ஆஞ்சு ஓஞ்சு அதுக்கப்புறம் என்ட்ரி கொடு..

கூட இருக்குற ஜால்ரா பசங்க நின்டி வுட்டுக்குனே இருப்பானோ..அவனுங்க பேச்ச கேக்காத..நீயா முடிவு பண்ணி வா..

இந்த பொறந்த நாள் இல்ல எல்லா நாளும் நீ சந்தோசமா இருக்கணும்..
அதான் இந்த தல ரசிகனோட வாழ்த்து..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நானும் சிவனும்..


நான் விரும்பி போகும் கோவில்களில் சிவன் கோவிலும் ஒன்று. மற்றகோவில்களில் கிடைக்காத ஒரு உணர்வு எனக்கு எப்பொழுதும் சிவன்கோவில்களில் கிடைக்கும். நான் சில ஊர்களில் போன சிவன் கோவில்களைபற்றிய ஒரு சின்ன தொகுப்பு தான் இது..



1.குலு மனாலி:

நான் சில வருடங்களக்கு முன்பு கல்லூரி சுற்றுலாவிற்காக குலு மனாலி சென்றுஇருந்தேன்.அருமையான ஊர். மணாலிக்கு ஒரு 20 -25 Km குலு வரும்.ஒருகாலை நேரத்தில் நாங்கள் சென்ற பஸ் குலுவில் நின்றது.அனைவரும் இறங்கிசற்று இளைப்பாறி கொண்டோம். ஒரு பக்கம் பிரமாண்டமாக ஓடும் ஆறுஇன்னொரு பக்கம் மலை. ஆற்றில் சற்று நேரம் கால் நனைத்து விட்டு வந்தேன். அந்த பக்கம் இருக்கும் மலையில் இருந்து ஒரு குடும்பம் இறங்கி வந்து கொண்டுஇருந்தது. அவர்களிடம் மேலே என்ன இருக்கிறது என்று வினாவினேன்.ஒருசிறிய சிவன் கோவில் என்றார்கள்.என் நண்பர்களை மேலே சென்று போய்பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்தேன். அவர்கள் சோர்வாக இருந்ததால் நீபோய் விட்டு வா என்றார்கள். நானும் சரி என்று விறு விறுவென்று அதற்குஅமைக்க பட்டு இருக்கும் படிக்கட்டு வழியாக மேலே ஏறி சென்றேன்.

மேலே சென்று பார்த்த பொழுது அங்கு ஒரு சிவன் கோவில் அழகாக இருந்தது. கோவிலின் உள் நுழைந்த பொழுது நான் மட்டுமே இருப்பதை உணர்ந்தேன். ஒருபூசாரி அமர்ந்து இருந்தார். நான் சிறிது நேரம் பிரார்த்தித்து விட்டு அமர்ந்தேன். அப்படி ஒரு அமைதியையை இது வரை நான் எந்த கோவிலிலும் உணர்ந்ததுஇல்லை.சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது நான் கண்ட காட்சிஇருக்கிறதே சொர்க்கம்.

ஒரு பக்கம் பார்த்தால் ஒரு பனி மலை கண்ணாடி மலை அல்லது ஸ்படிக மலைபோல் தென்பட்டது. வெள்ளி பனி மூடிய அழகான மலைசிகரங்கள்.கிழே அதல பாதாளத்தில் கங்கையின் எதோ ஒரு பிரிவு பிரமாண்டஆறாக ஓடி கொண்டு இருந்தது. உண்மையில் அது போல ஒரு இயற்கைகாட்சியை அதற்கு முன்பு நான் கண்டது இல்லை. கண்களில் உண்மையில்ஆனந்த கண்ணீர்.

ஒரு வித சிலிர்போடு பஸ்சில் வந்து அமர்ந்தேன். உண்மையில் அப்படி ஒருஅழகான தரிசனத்திற்கு என் நண்பர்கள் கொடுத்து வைக்கவில்லை என்றுநினைத்து கொண்டேன்.

2.கும்பேஸ்வரன் கோவில் ( கும்பகோணம் ) :

நான் கும்பகோணத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது அடிக்கடிசெல்லும் கோவில். ஊரே கோவில் மயம் தான் என்றாலும் நான் விரும்பிசெல்லும் கோவில் இதுவும் சுவாமி மலையும். கோவிலின் ஸ்தல புராணங்கள்எனக்கு அத்துப்படி இல்லை என்றாலும் அந்த சிவலிங்கம் ராஜ ராஜ சோழனால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று நண்பர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த கோவில். நான் வாரத்தில் இரு தடவை கண்டிப்பாக சென்றுவிடுவேன். என் பெரியப்பா முறை உறவுக்காரர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். அவர் கூட சந்தேகமாக கேட்பார்.."என்னபா அடிக்கடி கோவிலுக்கு போற என்னவிஷயம் என்று"..உண்மையில் எனக்கு சிவன் மேல் இருந்த ஈர்ப்பு மட்டுமேஅதற்கு காரணம்..

3. பேரூர் ( கோவை ) :

ஒரு வேண்டப்படாத காலத்தில் ஒரு வேதனையான சூழலில் கோவை சென்றுஇருந்த பொழுது ஒரு நண்பருக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை..அவர்வருவதற்கு நேரம் ஆகும் என்பதாலும்..கோவையில் எனக்கு வேறு யாரையும்தெரியாது என்பதாலும்..மருதமலை அதற்கு முன்பே போய் விட்டேன்என்பதாலும்..பேரூர் சிவன் கோவில் போய் வரலாம் என்று முடிவு எடுத்துகாந்திபுரத்தில் இருந்து பஸ்சில் ஏறி கோவிலுக்கு சென்றேன்.அதுவும் அழகானகோவில் இருந்தாலும் வேதனையில் இருந்த எனக்கு அந்த கோவில் சென்றபொழுது மிகவும் ஆறுதலாக இருந்தது. மீண்டும் ஒரு இக்கட்டான சுழ்நிலையில்சிவன் என்னை அரவனைததை போல் உணர்ந்தேன். மறக்க முடியாத சூழலில்மறக்க முடியாத தரிசனம்.

4.வேதபுரிஸ்வரர் கோவில் ( புதுவை ) :

நான் மிக அதிகமாக சென்ற கோவில். பெரும்பாலும் நண்பர்களோடு செல்வேன். அதுவும் பிரதோஷ சமயங்களில் ஊரில் இருந்தால் கண்டிப்பாக கோவில் செல்லமுயற்சி எடுப்பேன். அழகான கோவில். மனச்சோர்வு ஏற்ப்பட்ட பல சமயங்களில்என்னை தேற்றி விட்ட கோவில். இதுவும் சமிப கால வரலாறு கொண்ட கோவில்தான்.அதுவும் என் அம்மாவோடு சென்றால் வெளியே வருவதற்கு ஒரு மணிநேரம்மாவது ஆகி விடும். அந்த அளவுக்கு சிவபக்தை. என்ன களைப்புடன்வேலையில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் மிக தீவிரமாக பல சமயங்களில்கோவிலுக்கு கிளம்புவார்கள் என் அம்மா. அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைஏற்படுத்தும்.

அந்த அளவுக்கு நான் தீவிர பக்திமான் இல்லை என்றாலும் எனக்கும் சிவனுக்கும்எப்பொழுதும் ஒரு நுட்பமான உணர்வு இருப்பதாய் போல பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன்..

Tuesday, June 16, 2009

உட்டாலக்கடி தமிழ் நாயகர்களும்..உலக மகா நடிகர்களும்..

நம் தமிழ் சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் அப்பட்டமாக சில உலக நாயகர்களின் நடிப்பை அப்படியே நமக்கு தெரியாமல் காப்பி அடிகின்றனர்..அவர்கள் நடை, உடை, பாவனை இவை எல்லாம் கொஞ்சம் கூட மாறாமல் சில உலக நடிகர்களின் நடிப்பை ஒத்து போகின்றது..அட நடிப்பை கூட விடுங்கள் சில உலக திரைப்படத்தில் வரும் காட்சிகளை கூட அப்படியே காப்பி அடித்து விடுகின்றனர்..இவற்றை எல்லாம் கடைக்கோடி தமிழன் வரை கொண்டுப்போய் சேர்ப்பது தான் இந்த பதிவின் நோக்கம்..அவர்களின் முகமுடியை கிழித்து எறிவோம்..

அப்படிப்பட்ட நடிகர்களை பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.முதலில் சம்பந்தப்பட்ட நடிகர்களை பார்ப்போம்..

முத
லில் நம் வடிவேலு:
http://mimg.sulekha.com/vadivelu/Stills/vadivelu_070601_f3.jpg


வடிவேலு தன்னுடுய பல்வேறு நகைச்சுவையின் முலம் நம் மனம்கவர்ந்த நடிகர் ஆகிவிட்டார்..இன்று தன்னுடுய அசுர நடிப்பின் முலம் எங்கயோ போய்விட்டார்..
அவரின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்று நினைக்ரிர்கள்..அவர் நடிக்கும் பொழுது அவரின் முகவாய் கட்டையை (தாடை) உற்று நோக்குங்கள் உங்களுக்கே புரியும்..

அந்த நடிப்புக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை "கினோ செச்லி" (Gino Cekli ) என்ற புகழ்ப்பெற்ற இத்தாலிய நடிகரின் அப்பட்டமான தழுவல் நடிப்பு தான் இங்கே இவர் நமக்கு தருவது..

அவரின் பல நகைச்சுவை காட்சிகள் பல்வேறு இத்தாலிய திரைப்படத்தை தழுவியே எடுக்கப்பட்டது..
அதுவும் குறிப்பாக அந்த தலைநகரம் படத்தில் வரும் "யே என்னை வச்சி எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே" என்ற அந்த காட்சி "மிரகல மொரடோ"(Miracalo morado ) என்ற படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி..

இதே மாதிரி பல காட்சிகளை பல இத்தாலிய படங்களில் இருந்து தான் உருவி உள்ளார்..இது எல்லாம் தெரியமால் அவர் தோன்றும் காட்சிகளில் இங்கே நம் கை தட்டி விசில் அடித்து கொண்டு இருக்கிறோம்..மற தமிழனாய் இருந்த நாம் ஏன் எதற்கு என்று ஆராயமால் இன்று மட தமிழனாய் ஆகி வருகிறோம் என்பது தான் என் வேதனை..சரி விடுங்கள் அடுத்தவர் யார் என்று பார்ப்போம்..

வையாபுரி:
http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/actors/Vaiyapuri/6.jpg


நமக்கு நன்கு பரிச்சயமான நகைச்சுவை நடிகர் தான் இவரும்..ஆரம்ப காலத்தில் இவரை நாம் கவனிக்க தவறினாலும் பின்பு ஓரளவு பிரபலம் ஆகிவிட்டார்..ஆனால் அந்த அந்தஸ்தை இவர் அடைவதற்கு உண்மையான காரணம்..

"லிங்க் சிக் டும்" (Link-Chik-Tum )என்ற ஜப்பானிய நடிகர் ஒருவரின் நடிப்பு தான் காரணம் என்றால் மிகை ஆகாது..அப்படியே செராக்ஸ் எடுத்ததை போல் அவரின் நடிப்பை இவர் பால்லோ பண்ணுகிறார்..

இவரின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளும் சரி ஜப்பானிய படமான "நிக்கோ ஈகா"(Nikko Eega ) என்ற படத்தில் வரும் காட்சிகளும் சரி ஒரே அமைப்பை சார்ந்தவை..
அவரின் நடையை வைத்து கண்டுப்பிடித்து விடலாம் இது அப்பட்டமாக "லிங்க் சிக் டும்" நடிப்பு என்று..

வையாபுரி வீட்டிற்கு சென்றிர்கள் என்றால் நீங்கள் கவனிக்கலாம் அந்த நடிகரின் படங்கள் மட்டும் அடங்கிய டீவீடி தொகுப்பை..

இது தெரியாமல் அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் நம் சிரித்து மகிழ்ந்தோம்..இந்த உண்மை கூட அறியாத கூறுகெட்ட தமிழன் வாயில் தர்பையை போட்டு பொசுக்கினாலும் தகும்..

அடுத்து நம் வீர தளபதி "ஜே.கே.ரித்தீஷ்"..

http://cinesouth.com/images/new/05022007-THN14image1.jpg


இவரின் கானல் நீர், நாயகன் போன்ற படைப்பில் இவரின் நடிப்பை பார்த்து போய் பிரமித்து தான் அவரை நாம் பாராளுமன்றம் வரை அனுப்பினோம் என்பதை கடைக்கோடி தமிழன் வரை நன்கு அறிவான்..
ஆனால் அந்த நடிப்புக்கு மூல காரணம் யார் என்று யாரவது யோசித்து பார்த்து உள்ளிர்கள..
உலக திரைப்படங்கள் பார்த்தால் அதை பற்றிய அறிவு கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கும்..நீங்கள் எல்லாம் "உலகம்" என்று எழுத சொன்னாலே "உலோகம்" என்று எழுதகூடிய ஆட்கள் உங்களிடம் அதை எதிர்ப்பார்ப்பது என் தப்பு தான்..அதையும் நானே சொல்லி தொலைக்கிறேன்..கேட்டு தொலையுங்கள்..

ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள உமண்டா என்ற குட்டி தீவில் பிறந்து பிற்காலத்தில் தன் நடிப்பு திறமையால் ஆஸ்திரேலியா திரைதுறையையே தன் வசம் கட்டிபோட்ட "ஜாம் பக்"(Jam Buck ) என்ற ஈடு இணை அற்ற அந்த ஒப்பற்ற நடிகனின் தழுவல் தான் இந்த ரித்தீஷ் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..

நாயகன் படத்தில் வரும் "கேட்டக்க அள்ளி கொடு", "நிலா நிலா ஓடி வா" என்ற பாடல்களில் அவர் போடும் ஸ்டெப்பை கூர்ந்து கவனியுங்கள் உங்களுகே உண்மை புரியும்..அது அப்படியே ஆஸ்திரேலியா திரைப்படமான "தி ஃப்ரைடே நைட் பிவர்" (The Friday Night Fever )என்ற படத்தில் "ஜாம் பக்" ஒரு ஹிப்-ஹப் பாட்டில் அவர் போடும் ஸ்டேப் தான் அனைத்தும்..

இது தெரியமால் அவர் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் செய்து வேடிக்கை பார்த்தான் நம் தமிழன்..



நான் தெரியாம தான் கேக்குறேன் எதயையும் ஆராய தெரியாத தமிழனக்கு..எவன் திரையில் தோன்றினாலும் விசில் அடித்தான் குஞ்சிகளாக மாறி விசில் மட்டும் அடிக்கிறோம்..தயவு செய்து உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் ..உங்கள் அறிவை உலக திரைபடங்கள் பார்த்து வளர்த்து கொள்ளுங்கள்..இப்படியே குண்டு சட்டியில் குதிரை ஓட்டதிர்கள்..

டிஸ்கி: இது எதிர்ப்பதிவு இல்லை..உலக சினிமாவை கண் இமைக்காமல் தொடர்ந்து பார்பவர்களுக்கு உண்மை புரியும்..


Sunday, June 14, 2009

வேலைக்கு போறவங்க Vs வேலையே இல்லாத வெட்டிபய..

(முழுக்க முழுக்க ஒரு மொக்கை பதிவு)..

வேலை கிடைக்காம ராஜேஷ் படுற கஷ்டம் இருக்கே. கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க.இந்த வேலைக்கு போற பசங்க மத்தியுல வேலைக்கே போகமா வேல கிடைக்காம ஒருத்தன் இருப்பான் பாருங்க.. அவன் பாடு எப்பா சொன்ன புரியாதுங்க..பட்டா தான் தெரியும்..கிட்டதட்ட அதே மாதரி ஒரு கேரக்டர் தான் நம்ம ராஜேஷ்.

ரகுவும் பழனியும் பீச்ல் காந்தி சிலைக்கு சற்று தள்ளி அமர்ந்து இருந்தார்கள்.ரகு,பழனி இருவரும் ஒரு MNC கம்பெனியின் நல்ல வேலையில் ஓரளவு நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள்.

ரகு " மச்சான் எங்கட இவனுங்கள இன்னும் காணோம்"..
பழனி" டேய் இப்ப தான் கால் பண்ணேன் ஆன் த வே"..
"விஜயும் வரான் இல்ல"
"ம்ம்ம்..ராஜேஷும் அவனும் தான் வந்துகிட்டு இருக்குங்க"
"டேய் ராஜேஷ் எதோ Interview இன்னிக்கு போறன்னு சொன்னனனே என்ன ஆச்சு கேட்டியா"..
"இல்லடா வந்த தான் கேக்கணும்"..சொல்லி முடிக்கும் பொழுது ராஜேஷ் எதிரில் பைக்கை பார்க் செய்து கொண்டு இருந்தான்.

விஜயும் ராஜேஷும் இவர்கள் அருகில் வந்தனர்.

"டேய் எவளோ நேரம்டா வெயிட் பண்ணறது"..பழனி எகிறினான்..
ராஜேஷ் " ஏய் என்கிட்ட இன்னமோ எகிறுற..இவன் வீட்டுல அரை மணி நேரம் உக்காந்து இருந்தேன்..ஆபீஸ்ல இருந்து வந்து அரை மணி நேரம் மூஞ்ச கழுவுறான்..
ரகு.."சரி விடு கண்டிப்பா உன்னால லேட் அயிருக்காதுனு தெரியும்..சரி எதோ Interview போறன்னு சொன்னியே.. என்ன கம்பெனி, என்ன ஆச்சு.."
ராஜேஷ் " ஆமாம்டா காலையுல தான் போயிட்டு வந்தேன்..ஒரு சின்ன திருத்தம் கம்பெனி இல்ல காலேஜ்.."

"என்னது காலேஜ்க்கு Interview போனியா..என்னடா சொல்லுற.." மூவரும் கோரசாக கேட்டனர்..

"ஆமாம் ஆமாம் ஒரு Lecturer போஸ்ட் தெரிஞ்சவரு ஒருத்தரு சொல்லி இருந்தார் அதான் போய் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்.."
"என்ன ஆச்சு..""We will call u backனு சொல்லி இருக்காங்க பாப்போம்."
"இதுவும் புட்டுக்குச்சா"..பழனி..
"த்தூ வாய Phenol ஊத்தி கழுவுடா..கிடைக்கும்னு நினைக்குறேன்..பாப்போம்.."

"என்னடா ஆச்சு திடிர்னு லெக்ச்சரர் அது இதுனு..வீனா ரிஸ்க் எடுக்காதா..வேணாம்..நீ நினைக்குற மாதரி இல்ல அந்த வேலை..கிளாஸ் எடுக்கணும்..பசங்க நடுவுல வேணும்னே கேள்வி கேப்பானுங்க..அவன் என்ன கேள்வி கேட்டான்னு உனக்கு புரியறத்துக்கே ஒரு மணி நேரம் ஆயிடும்..இதுல நீ அவனக்கு பதில் சொல்லி அவனுக்கு புரிஞ்சு பாஸ் ஆகி..இதுல்லாம் நடக்குற கதையா டா"...ரகு.

"டேய் என்ன நினைச்ச நீ..மாமா காலேஜ்ல செமினார் எடுத்து நீ பாத்தது இல்ல.." ராஜேஷ்..
"உங்க மாமாவும் உன் கூட தான் படிச்சாரா சொல்லவே இல்ல"..பழனி.
" ஹலோ என்ன தான் சொன்னேன்"..ராஜேஷ்.

" இந்த உலகத்துலேயே தன்ன மாமான்னு ஒருத்தன் ஒத்துக்கிறனா அது நீயா தாண்ட இருப்பே மச்சான்"..பழனி.
"டேய் பேசுங்கடா எப்படியும் செலக்ட் ஆவ போறேன் அப்ப என்ன சொல்றிங்கனு பாப்போம்.."
"கண்டிப்பா நடக்க போறது இல்ல"..பழனி..

"டேய் எங்க மேனேஜர்க்கு உன்னோட Resume பார்வர்ட் பண்ண சொன்னனனே பண்ணியா"..விஜய்.
"பண்ணேன் பண்ணேன்.. 20வது தடவையா நீ சொல்ற ஆளுக்கு பார்வர்ட் பண்ணேன்.."
"டேய் ரொம்ப சல்லிச்சிக்காத எப்படியும் கூப்பிடுவங்க.."

ராஜேஷ் " எப்ப 50 வயசுலையா.. மச்சான் என் அனுபவத்துல ஒன்னு சொல்றேன்.. Interviewல" I will call u backன்னு சொல்றவன கூட நம்பலாம் ஆனா Resume பார்வர்ட் பண்ணுங்க முடிச்சிர்லாம்ம் கிழிச்சிர்லாம்ம்னு சொல்ல்ரானுங்க பாரு அவனுங்கள மட்டும் நம்ப கூடாது..நான் முடிவு பண்ணிட்டேன் லெக்ச்சரர் வேலை கிடைச்ச்சிச்சுனா கண்டிப்ப போய் சேந்துருவேன்.."

"மச்சான் லெக்ச்சரர் வேலை எதிர் காலத்தை நினைச்சு பாத்தியா"..ரகு.
"ஏன் லெக்ச்சரர் வேலைக்கு என்ன நல்ல Future தான்.."
" உன் Future தான் பின்னாடி ஒளிவட்டமா பிரகாசமா தெரியுதே..அத பத்தி சொல்லுல.. நீ பாடம் நடத்த போறியே அந்த பசங்க Future பத்தி சொல்றேன்.."
"பேசுங்க இன்னும் கொஞ்சம் நாளைக்கு தான்.."

"நான் ஒன்னு சொல்றேன் கோச்சிக்க மாட்டியே.." பழனி..
"எப்படி இருந்தாலும் எதாச்சும் மொக்கத்தனமா தான் சொல்லுவா சொல்லு"..ராஜேஷ்.
"நீ எதுக்குடா வேலைக்கு போற இப்பயே பிஸியா தான் இருக்க..காலையில அப்பாவ போய் பஸ் ஸ்டாண்ட்ல விடுற..அம்மாவ ஆபீஸ்ல விடுற..தம்பிய ஸ்கூல்ல விடுற..தம்பிக்கு மதியம் சாப்பாடு கொடுக்க போற..அநேகமா வீட்டுல கூட்டி பெருக்கறது கூட நீயா தான் இருக்கணும்ங்க்கறது என்னோட ஒரு கணிப்பு..மதியம் தோட்டத்துல தண்ணி ஊத்துற..அன்னிக்கு ஒரு நாளு பாத்தா உங்க வீட்டு நாயா புடிச்சிக்கிட்டு ரோட்டுல திரியுற..அத கூட Veterinary Hospital கூப்பிட்டு போறன்னு கூட கேள்வி பட்டேன்..பேசாம உங்க அம்மாகிட்ட ஒரு 1500 ரூபா அப்பாகிட்ட ஒரு 1500 ரூபா வாங்கிட்டு இந்த வேலையே தொடர்ந்து பண்ணா என்ன.."
ராஜேஷ் " வேலை வாங்கி குடுக்க துப்பு இல்ல இந்த நக்கல்க்கு ஒரு கொற மயுரும் இல்ல.."
ரகு.." மச்சான் தம்பிக்கு சாப்பாடு கூட நீ தான் ஸ்கூல்ல கொண்டு போய் தரியா..உன் தம்பி தோஸ்துங்க எல்லாம் பாத்துட்டு அண்ணன் என்ன பன்றார்ன்னு கேப்பங்கலே டா என்னடா சொல்லுவான் அவன்.."

ராஜேஷ்..".............."

"மச்சான் எங்க அக்கா கூட பாவம் அவங்க பையனுக்கு மதிய நேரத்துல கஷ்டப்பட்டு சாப்பாடு கொடுத்துட்டு வராங்க..நாளையுல இருந்து அந்த சாப்படயும் வாங்கிட்டு அப்படியே போய் கொடுத்துட்டு வந்துறேன்.."..ரகு.

ராஜேஷ்.."....".

"மச்சான் கோச்சிகிட்டியா என்ன..பேசவே மாட்டுற.."..பழனி.

ராஜேஷ்.."என்னடா கேட்ட கவனிக்கல..ஒரு மஞ்சள் கலர் சுடிதார் கிராஸ் பண்ணுச்சு பாத்தியா". "உருப்படவே மாட்ட.."விஜய்..

சரி அத விடு இன்னிக்கு சனிக்கிழமை வேற என்ன பிளான்"..ரகு
"வழக்கம்போல தான் அப்புறம் என்ன பண்றது" விஜய்..
"ஓகே டார்கெட் 200 ஆளுக்கு 50 ரூபா போதும் ''
ராஜேஷ் தயங்கினான்.

"என்ன மச்சான் யோசிக்கிற வர விருப்பம் இல்லையா"..பழனி.
"அது இல்ல மச்சான் 20 ரூபா தான் இருக்கு.." ராஜேஷ்.
"சரி 20 ரூபாய குடுத்து தொல.." ரகு..
"தம்பி அப்படி ஒன்னும் சகிச்சிக்க வேணாம்..உங்களக்கு காசு தானே வேணும் நாளைக்கு தரேன்.."
"எது நாளைக்கு பெட்ரோல் போட வீட்டுல 50 ரூபா கொடுப்பாங்க அதை எங்ககிட்ட கொடுப்பா..எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போறப்ப பைக் நின்னுரும்..எங்க வண்டியுல இருந்து கொடுத்த காச மறுபடியும் டுயுப் போட்டு பெட்ரோலா உறிஞ்சுருவ''..ரகு.

"மச்சான் என்ன அமைதியா சிரிக்கிற"..விஜய் ராஜேஷை பார்த்து..
"ம்ம்..உலகத்த நினைச்சு சிரிக்கிறேன் டா"..ராஜேஷ்.
"அதான் உன்னை நினைச்சு உங்க ஏரியாவே சிரிப்பா சிரிக்குதே இதுல நீ வேற சிரிக்கிறியா"..ரகு.

நால்வரும் அரட்டையை முடித்து கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவார்கள்.
ராஜேஷ் சொன்ன மாதிரியே அவனுக்கு வேலை கிடைத்தது..ஆனா லெக்ச்சரர் வேலை சேர்ந்து அவன் அடிச்சா கூத்து இருக்கே அதுக்கு தனியா ஒரு பதிவு போட வேண்டும்..

டிஸ்கி: முழுக்க முழுக்க கற்பனை கதை..

Thursday, June 11, 2009

மழைக்கால இரவுகள்..


ஒரு மழை கால இரவில்தனிமையில் சென்று கொண்டு இருந்தேன்..சில நினைவுகளின் சில தூரல்களுடன்..என் மனதில் அழமாய் படிந்து விட்ட உன் நினைவுகளுடன்..
என் நினைவு அலைகளை காலில் பட்ட நீர் அலைகள் கலைத்தது..

யாரோ இருவர் தூரத்தில் குடை பிடித்து நிற்கின்றனர்..இன்னும் சிலர் வண்டியில் வேகமாய் செல்கின்றனர்..
“சோமாரி பாத்து போக மாட்டியா”..திட்டியவனை பார்த்து சிரித்தேன்..
“மூஞ்ச பாரு”..மறுபடியும் சிரித்தேன்..

இன்னும் தூறல் வேகமாக..மழையாக..
சாலையில் அனைவரும் ஒதுங்க..
என்னை மட்டும் இன்னும் வேகமாக வழி நடத்தி கொண்டு இருந்தது உன் நினைவுகள்..
நடந்தேன்..
சாலையின் பள்ளத்தின் கால் வைத்து குப்புற விழுந்தேன்..ஓடி வந்த சில பேர் தூக்கி விட்டனர்..

“தம்பி பாத்து போலாம்ல” ..தூக்கி விட்ட பெரியவர் என்னை பார்த்து சொல்ல .. மறுபடியும் சிரித்தேன்..
பக்கத்தில் இருந்த பூத்தில் ஒரு பெண்
” ஏன்டா போன் பண்ண மாட்டியா செல்லம்”..ஆமாம் பெண் தான் ..உற்று பார்த்த என்னை பார்த்தாள்..
”சரி வீட்டுக்கு போய் Missed call கொடுக்குறேன் பேசு தெரியுதா”..மறுபடியும் அவள்..போனை வைத்து விட்டு..என்னை பார்த்தாள்..சிரித்தேன்..அவள் முறைத்தாள்..

சேறும் சகதியும் பரவி கிடந்த சட்டையுடன் எங்கோ நின்று கொண்டு இருந்தேன்.. மொபைல் சிணுங்கியது..எடுக்க முயன்றேன்..இல்லை..

“போன் இந்தங்ண்ணா..ஒரே சேத்து தண்ணி..அதான் தொடச்சேன் இந்தாங்க”..அழுக்கு சட்டை பையன்..
மொபைல் லை என் கையில் தந்தான்..மொபைல் சிணுங்கி கொண்டு தான் இருந்தது..எடுத்தேன்..

அப்பா “எங்கடா இருக்க..மழை நல்ல பெயுது..சீக்கிரம் வந்துடுவில்ல..”
“ம்ம்ம்…”
மொபிலை அணைத்தேன்..

“தம்பி இந்தப்பா “.. தூக்கி விட்ட பெரியவர் கையில் டீயுடன் நின்று கொண்டு இருந்தார்.வாங்கி கொண்டு அவரை பார்த்து சிரித்தேன் டீக்கடையில் நின்று கொண்டு இருந்தோம்.
“தம்பி பாத்து போப்பா”.. என்றார்..
மறுபடியும் நடக்க தொடங்கினேன்..

”ஏய் செல்லம் சீக்கிரம் போடா மழை இன்னும் அதிகம் ஆவும் போல இருக்கு”..உன் குரல் என்னை பின் தொடர்ந்தது..

வீட்டு கதவை திறந்தேன்..
அப்பா பார்த்தார்..
“என்னடா இந்த கோலத்துல வர”..வாசலுக்கு போனவர் திரும்பி வந்தார்..
“பைக் எங்கடா”..
“பஞ்சர்”..உள்ளே போனேன்..

தம்பி எதிர்பட்டான்..சிரித்தேன்..வேகமாக போன என் தம்பி அப்பாவிடம் கத்தினான்..
அறையில் நுழைந்தேன்..குளித்தேன் ..துணியை மாற்றினேன்..
அப்பா வந்தார்..
” சாப்டியடா”..
“ம்ம்ம்ம்”..
அப்பாவை நோக்கினேன் அவருடைய கண்கள் தழும்பி இருந்தது..

கதவை சாத்தி விட்டு சென்றார்..பாயயை விரித்து படுத்தேன்..திரும்பினேன்.. அருகில் நீயும் படுத்து இருந்தாய்..

“ஏன்டா செல்லம் தூக்கம் வரலியா”..
“ம்ம்ம்ம்”..மறுபடியும் நான்..
“கண்மூடி எந்த சிந்தனையும் இல்லாம தூங்கு தூக்கம் வரும்..”

இன்று அவளிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும்..

“யே”..
“என்னடா”..
“என்னால ரெண்டு பேர மட்டும் அவளோ சீக்கிரத்துல மறக்க முடியாதுடி”..
“தெரியும்.. ஒன்னு சின்ன வயுசுல செத்து போன உங்க அம்மா”..
“இன்னொன்று..”
"3 மாசத்துக்கு முன்னாடி செத்து போன நான் கரெக்டா”..
“ம்ம்ம்ம்..”

அவளும் அதை உணர்ந்து தான் இருந்தால் போல் இருக்கு..
கலங்கி இருந்த அவள் கண்களை துடைத்து விட்டேன் ..ஏனோ இந்த முறை என்னால் எப்போதும் போல் சிரிக்க முடியவில்லை ..

புதுவையில் சில இடங்கள்..

புதுவை என்று சொன்னால் பல பேருக்கு கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் என்று பிரபலமான இடங்கள் நினைவிற்கு வரும். இங்கு அந்த அளவுக்கு பிரபலம் அடையாத சில இடங்கள் குறிப்பிட்டு உள்ளேன்.

1.உளசுட்டேரி:

புதுவை முருகா தியேட்டர் சிக்னலில் இருந்து இரு சாலைகள் பிரியும். ஓன்று சென்னை செல்லும் சாலை இன்னோன்று விழுப்புரம் செல்லும் சாலை. அந்த சாலையில் தட்டாஞ்சவடி, கவுண்டம்பாளையம், மேட்டுபாளையம் போன்ற சில இடங்களை கடந்து சென்றால் உளசுட்டேரி வரும். பிரமாண்டமான ஏரி. புதுவையில் பெரும்பாலான இடங்களக்கு இங்கு இருந்து தான் குடி தண்ணீர் செல்கின்றது. இயற்கை சூழலோடு மிகவும் ரம்யமாக இருக்கும். படகு சவாரி கூட உள்ளது. சதுர வடிவில் உள்ள படகிலேயே சாப்பிட்டு கொண்டே ஏரியை ரசிக்க முடியும். கடைசியாக ஒரு மழை காலத்தில் அங்கு சென்று இருந்தேன். மறக்கவே முடியாத அனுபவம் அது. மழை காலத்தில் ஒரு முறை சென்று வாருங்கள் நல்ல அனுபவமாக இருக்கும்..


2.தாவரவியல் பூங்கா( Botanical Garden):

புதுவை பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சாலையில் செல்ல வேண்டும். Newtone தியேட்டர் சிக்னலில் Newtone தியேட்டர் எதிர்புறம் இருக்கும். நிறைய மரங்களும் செடிகளும் தாவரங்களும் நிறைந்து இருக்கும் பூங்கா. மிகவும் தனிமையான இடம். ஒரு வித அமைதியை உள்ளே உணர்விர்கள் கூட்டமும் அவளவாக இருக்காது. உள்ளே ஒரு சிறிய ரயிலும் உண்டு டிக்கெட் வாங்கி கொண்டு பயணிக்கலாம். பிப்ரவரி, மார்ச் எதாவது ஒரு மாதத்தில் பூக்கள் கண்காட்சி 3 நாட்களக்கு நடக்கும்.அந்த சமயத்தில் போனிர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் சில நேரங்களில் மதிய வேளையில் செல்வேன். ஸ்கூல் காலேஜ் கட் அடித்து விட்டு மாணவ மாணவிகள் சுற்றி கொண்டு இருப்பார்கள், சில பேர் அமைதியாக படித்து கொண்டு இருப்பார்கள்,இன்னும் சில பேர் கடலை போட்டு கொண்டு இருப்பார்கள். நான் பெரும்பாலும் இயற்கையை ரசித்து விட்டு என் போக்கில் சென்று விடுவேன். உள்ளே ஒரு Aquarium கூட உண்டு.

3.ஆரோ பீச்:

இந்த இடம் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ECR ரோட்டில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் 10km தொலைவில் உள்ளது. ECR ரோட்டில் ஆரோவில் பிரியும் சாலையின் எதிர்புற சாலையில் செல்ல வேண்டும். ஒரு சாதரண கடற்கரை தான். என்ன இங்கு வெள்ளைகாரர்கள் குளித்து கொண்டு இருப்பார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட துரத்தில் நின்று கொண்டு தான் பார்த்து ரசிக்க முடியும் கடலை தான் சொல்கிறேன். பக்கத்தில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்து நடந்தால் தூரத்தில் இருந்து “தம்பி அங்க எல்லாம் போக கூடாதுன்னு ஒரு குரல் கேக்கும்” நம் மீனவ நண்பர்கள் அறிவிக்கப்படாத பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி கொண்டு இருப்பார்கள். அதையும் மீறி போக முயன்றால் “……….. சொல்றோம்ல கேக்க மாட்டியா” அப்படினு மறுபடியும் ஒரு குரல் கேக்கும். அதையும் மீறி போக முயன்றால் தைரியசாலியாக தான் இருக்க வேண்டும். Two wheelerல போன வசதியா இருக்கும். நான் MNGPயில் படிக்கும் பொழுது காலேஜ் ஸ்டிரைக் என்றால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து 10KM சைக்கிளில் பயணித்து செல்வோம். போய் மணிக்கணக்கில் குளிப்போம். ஆனால் தயவு செய்து குளிக்காதிர்கள். கொஞ்சம் ஆபத்து..

4. New Harbour( Tunnel):

இந்த இடம் அவளவாக வெளியுர்வாசிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.நியூ ஹர்பர் என்று கேட்டால் சொல்லுவார்கள். வங்காள விரிகுடாவில் இருந்து வரும் Backwaterன் கிழே ஒரு Tunnel வைத்து இரு கரையை இனைத்திருபார்கள் Tunnel வழியாக கிழே சென்று அக்கரையின் மேலே வரலாம். Tunnel உள்ளே கும்மிருட்டாக இருக்கும். Torch அல்லது Lighter வெளிச்சம் ஏற்படுத்தி போனால் நலம். ஆனால் போகிற வழியும் சரி Tunnel உள்ளேயும் சரி கொஞ்சம் சுத்தமில்லாமல் தான் இருக்கும் ( ஒரு சாராய கடை , ஒரு கல்லறை , ஒரு Light house கடந்து செல்ல வேண்டும். தனிமை விரும்பிகள் தாரளமாக போகலாம். Outdoorல் Beachஐ ரசித்துக்கொண்டே மது அருந்துவதற்கு நல்ல இடம் (பிறர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்)..

5. லாஸ்பேட்( Lawspet):

நான் படித்த பல காலேஜ்ல ஒரு காலேஜ் இங்கு தான் உள்ளது (MNGP). மிக அருமையான Atmosphere.

Tagore Arts College
Kanchimamunivar Centre for Post Graduate Studies
Mothilal Nehru Government Polytechnic
Women’s Polytechnic
Community College
Teacher Training Institute
Government Technical Higher Secondary School


இப்படி அந்த இடத்தில் புதுவையின் பிரதான கல்லூரிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து ஒரு 200 அல்லது 250 அடி மேலே இருக்கும். அதுவும் Tagore Arts College அருகில் இருக்கும் ஒரு கிரௌண்டில் நின்று கொண்டு பார்த்தால் வெகு தூரத்தில் நீல வண்ணத்தில் கடற்பரப்பு மிக அழகாக தெரியும். இங்கு தான் புதுவையின் மிக சிறிய விமான நிலையமும் உள்ளது. நான் படிக்கும் காலத்தில் ஒரு காலேஜில் ஆரம்பிக்கும் ஸ்டிரைக் அப்படியே லாஸ்பேட்ல் இருக்கும் எல்லா கல்லூரிக்கும் பரவும். அடிக்கடி அதனால் லீவ் கிடைக்கும். அப்படியே ஒரு ரோந்து போநோம்னா எல்லா காலேஜ்யும் வரிசையாக பார்க்கலாம் இடமும் மரங்கள் சூழ அருமையாக இருக்கும். அதன் பிறகு நான் சில காலேஜ் பார்த்து விட்டாலும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நான் படித்தலியேயே எனக்கு பிடித்த இடம் இந்த இடம் தான்.

6.குபேர் பஜார் & சண்டே பஜார்( Sunday Bazar) :

குபேர் பஜார் :இந்த இடம் ரத்னா தியேட்டர் எதிரில் உள்ளது. சில Foreign பொருட்கள் கிடைக்கும். Dvd player, Mobile phone etc., அப்புறம் மிக முக்கியமாக எல்லா விதமான DVDகளும் கிடைக்கும் உலக திரைப்படம் முதல் வேற்று கிரக திரைப்படம் வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்கள் பழைய புது படங்கள் அனைத்தும் கிடைக்கும்.
சண்டே பஜார்:
புதுவை மகாத்மா காந்தி வீதியின் இருபுறமும் லால் பகதூர் சாஸ்திரி வீதியில் ஆரம்பித்து காமாட்சி அம்மன் கோவில் வீதி வரை சிறு கடைகள் ஞாயறு கிழமை அன்று மட்டும் முளைத்திருக்கும். நிறைய பொருட்கள் சலிசாக கிடைக்கும். Sunday மட்டுமே இருப்பதால் sunday bazar என்று அழைக்க படுகின்றது.

7.ரோமன் ரோலாந்து நூலகம்( Roman Rolland Library) :

இது புதுவை கடற்கரையின் அருகிலேயே உள்ள ஒரு அற்புதமான நூலகம். புதுவை மாணவர்கள் மற்றும் புத்தக பிரியர்களுக்கு ஒரு நல்ல இடம். அனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்கும்.
இன்னும் பல இடங்கள் உண்டு. இது நான் பார்த்து ரசித்த இடங்கள். உங்களக்கும் நேரம் கிடைத்தது என்றால் போய் பாருங்கள்..இன்னும் சில பேருக்கு சில “முக்கியமான” இடங்கள் விட்டு போய் இருக்கலாம்..கோபித்து கொள்ளாதிர்கள்..

டிஸ்கி: இது ஒரு மீள்ஸ்..

Tuesday, June 9, 2009

குற்றங்கள்..('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' )

கலையின் ஏ.கே-7 துப்பாக்கியில் இருந்து வந்த கடைசி ரவுண்டு புல்லட்டுக்கள் சரமாரியாக அந்த இளைஞனின் உடம்பில் துளைத்தது..

அந்த இளைஞன் கடைசியாக கடவுளின் பெயரில் உச்சரித்த நாமங்கள் காதில் பட்டும் படாமல் ஒலித்து சென்றது..

பாரமுல்லா மாவட்டத்தின் சில்க் பகுதயில் ஏறத்தாழ பதினெட்டு மணி நேரமாக நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்து இருந்தது..

அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களின் முன்னால் இறந்த தீவிரவாதிகளின் உடல்கள் கம்பளி போர்வையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது..

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஜெனரல் விடாமல் பதில் அளித்து கொண்டு இருந்தார்..
கலை கிடத்தி வைக்கபட்டு உடல்களை விடமால் வெறித்து பார்த்தப்படி நின்று இருந்தான்..

கண்ணாவும் அருகில் நின்று கொண்டு இருந்து மேஜர் பதில் அளிக்கும் விதத்தை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான்..
கண்ணா கலையையும் கவனிக்க தவறவில்லை..

கண்ணா மற்றும் கலை இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தமிழக கம்மேண்டோக்கள்..

வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் அணைத்து ராணுவ வீரர்களும் கேம்பை நோக்கி பயணித்தனர்..

கண்ணா குளித்து முடித்து கொஞ்சம் ஓய்வு எடுத்தபின் காஷ்மீர் குளிரில் நடுங்கி கொண்டே கலையின் அறையை நோக்கி சென்றான்..

கலை அவன் அறையில் அமைதியாக கையில் எதோ புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்து கொண்டு இருந்தான்..

"டேய் வரியா..கான்டீன் வரைக்கும் போயிட்டு டீ சாப்பிட்டு வருவோம்"..கண்ணா..

"ம்ம்ம்..போலாம்.."..கலை..

காண்டீனில் கையில் டீ கோப்பையை பிடித்துகொண்டு இருந்த கலையிடம்..

"டேய்..என்ன ஆச்சு உனக்கு காலையில இருந்து நான் பார்கிறேன்..எப்பொழுதும் ஆபரேஷன் முடிஞ்சவுடனே இருக்கிற சந்தோசம் உன் முகத்தில் டோட்டல் மிஸ்ஸிங் அதன் கேக்குறேன்..ஊருக்கு போயிட்டு வந்தியே வீட்டுல எதாச்சும் பிரச்சனையா.."..கண்ணா.


"அது எல்லாம் ஒன்னும் இல்லைடா..இன்னிக்கு சண்டையில செத்த ஆளுங்கள பார்த்தியா எல்லாம் சின்ன பசங்க.."..கலை..

"அதான் அவங்க விதிடா..சின்ன வயசுல மூளை சலவை செய்யப்பட்டு இப்படி ஆகிடுறாங்க..நம்ம என்ன பண்ண முடியும்.."..கண்ணா..

"இல்லை அவங்க கொள்கையை பற்றி பேசல..அவங்க உயிரை எடுக்குற நம்ம எப்படி எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லமா இருக்க முடியுது.."..கலை.

"யே, லூசு மாதிரி பேசாத அவங்கள சாவடிகிறதுக்கு எதுக்கு குற்ற உணர்ச்சி வரப்போகுது..அவன் ஒரு தீவிரவாதி..அவன் கதையா நம்ம முடிக்கல நாளைக்கே அவன் பலப்பேர் கதையை முடிச்சுடுவான்..அதுக்கு எல்லாம் பார்க்க முடியுமா..நம்ம நாட்டுக்கு பண்ணுறோம் அப்படின்னு திருப்தி ஒன்னு போதும்டா.."..கண்ணா..

"அப்ப ராணுவம்கிற பேர்ல நமக்கு கொடுத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு பண்ணும் உயிர் வதத்துக்கு நம்ம மனச்சாட்சி பீல் பண்ணவே பண்ணதுன்னு சொல்றியா.."..கலை..

"டேய்..அப்படி பார்த்த நம்ம கும்பிடுற சாமியே புராணத்தில கெட்டவங்களுக்கு எதிரா சண்ட போட்டு வதம் பண்ணி இருக்கு..கான்செப்ட் கெட்டது ஒழியனும் அவ்வளவு தான்..அப்ப கடவுளுக்கு மனச்சாட்சி இல்லங்க்ரியா.."..கண்ணா.

"ஒருவேளை அவர் கடவுளுங்கரதலேயே மனச்சாட்சி பெண்டுலம் மாதிரி ஆடமா குற்ற உணர்ச்சி இல்லாம இருந்துட்டாரு ஆனா என்னால முடியுலடா.."..கலை..


"ஏய் என்ன ஆச்சுடா உனக்கு..இதுக்கு முன்னாடி பல ஆபரேஷன் பண்ணி முடிஞ்ச அப்புறம் நீ தான் ரொம்ப திருப்தியா இருப்ப..இப்ப இன்னமோ இப்படி பேசுற.."..கண்ணா.

"இல்லடா போன மாசம் ஊருக்கு போய் இருந்தப்ப பைக்ல போறப்ப ஒரு பையன் மேல மோதி ஆக்சிடேன்ட் பண்ணிட்டேன்..பையன் ரொம்ப சீரியஸா போய்டான்..அன்னிக்கு அவன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு அவனுக்கு என்ன ஆகுமோன்னு நான் அனுபவிச்ச நரக வேதனை எனக்கு தான் தெரியும்..நல்லா வேளை பையன் பொழச்சிக்கிடான்..இப்படி தெரியாத ஒரு விஷயத்தை பண்ணி வருத்தப்பட்ட எனக்கு தெரிஞ்சே பல உயிரை எடுத்து இருக்குமேனே நினைச்சப்ப வந்த குற்ற உணர்ச்சி இன்னிக்கு வரைக்கும் அடங்குல.."..கலை.

"டேய்..அந்த பையன் உயிரும் நாம கொல்லுற தீவிரவாதி உயிரும் ஒண்ணுனு நினைக்கிறியா.."..கண்ணா..

"இல்லைடா..ஆனா அந்த சம்பவத்திற்கு பிறகு என்னால உயிரை வேறுப்படுத்தி பார்க்க முடியுல..குற்ற உணர்ச்சி என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது..இப்படியே போன பைத்தியக்காரன் மாதிரி ஆகிடுவேன்..ஒரே வழி வேலைய விட்டு போயடலாமுனு இருக்கேன்..அப்ப தான் அதுல இருந்த மீள முடியும்னு நம்பிக்கை இருக்கு.."..கலை..

"டேய்..ஊருக்கு போன நல்லா வேலை கிடைக்குமா..சரி..நீ இத முடிவு பண்ணதுக்கு அப்புறம் ஊர்ல இருந்து ஏன் வந்த அங்கேயே இருந்து இருக்க வேண்டியது தானே..."கண்ணா..

"அது ஜெனரல் என் பேர்ல வச்சி இருந்த நம்பிக்கைக்கு வந்தது..வலியோட தான் இந்த ஆபரேஷன்ல கலந்துக்கிட்டேன்..ஜெனரல்க்கு என்னோட ராஜினமா கடிதத்தை பார்வர்ட் பண்ணிட்டேன்..தகுந்த காரணங்கோளோடு..அவரு கண்டிப்பா விடுவிப்பர்னு நம்பிக்கை இருக்கு..அப்புறம் வேலை டிகிரி படிச்சு இருக்கேன்..கண்டிப்பா நல்ல வேலை கிடைக்குமுன்னு நம்பிக்கை இருக்கு..அதனால இன்னும் அதிகபட்சம் ஒரு வாரத்துல கிளம்பிடுவேன்.."


"சரி கிளம்புலமா..டைம் ஆகிடுச்சு.."..என்று எழுந்த கலையை பார்வை விலகாமல் ஆச்சரியத்துடன் கண்ணா பார்த்து கொண்டு இருந்தான்..

டிஸ்கி: சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள எழுதியது..படித்துவிட்டு வோட்டு போட்டுவிடுங்கள்..

Sunday, June 7, 2009

அமீரக பதிவர்கள் சந்திப்பு..05.06.2009

காலையில் 8:30 மணிக்கு அடிக்க தொடங்கிய அலாரத்தை 9:30 மணிக்கு ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து கிளம்பி தயாராகி பஸ் பிடித்து துபாய் சத்வா பஸ் ஸ்டாப்பில் போய் இறங்கிய பொழுது மணி ஓன்று.அதன் பிறகு வந்த கண்ணா என்னை அடையாளம் கண்டுக்கொண்ட பின் அவருடன் அவர் அறைக்கு சென்றேன்.

அதன் பிறகு ஐந்து மணிக்கு நங்கள் இருவரும் கிளம்பி கரமா பார்க்கை சென்று அடைந்தோம்..எங்களை கவனிக்கும் முன்பு தூரத்தில் நின்று கொண்டு இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்த கலை நாங்கள் வருவதை பார்த்தபின் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை போல் உக்கார்ந்து இருந்தார்..

அதன்பிறகு சுந்தர் சார் வடையுடன் வந்து சேர்ந்தார்..அது வரை என்னுடன் பேசிக்கொண்டு இருந்த வெங்கியும்,கலையும் அதன் பிறகு தங்கள் முழுகவனத்தையும் வடையின் மீது செலுத்த ஆரம்பித்தனர்..

அப்புறம் ஒரு அரை மணிநேர கேப்பில் குசும்பன்,சிவராமன்,பிரதீப்..இவர்களும் வந்து சேர்ந்தனர்..

அப்புறம் நம்ம ஆசாத் அண்ணாச்சி, அயனார், ஜெயக்குமார், லியோ சுரேஷ் அண்ணாத்தே,அசோக்குமார், செந்திவேலன்,நாகா என்று வந்தபின் கச்சேரி களைக்கட்டியது..

பின்னுட்டம்,அரசியல், இலக்கியம்,பதிவர்கள் என்று பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கரமா பார்க்கில் இருக்கும் மரங்களின் கிளையில் தொங்கப்போட்டோம்..

அப்புறம் எனக்கும் நேரம் ஆனதால் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதாலும் சொல்லிவிட்டு விடை பெற்றேன்..

அண்ணன் ராகவன் நைஜீரியாவில் இருந்து வர இருப்பதால் அனைத்து பதிவர்களும் மறுபடியும் சந்திக்க உள்ளதால் அனைவரும் அப்பொழுது வந்து விடவும்..

மேலும் இதில் தீவிரமாக இறங்கி பதிவர் சந்திப்பை ஏற்ப்பாடு செய்த கலை மற்றும் வெங்கிக்கு நன்றிகள்..



கலந்துகொண்ட பதிவர்கள் -

1. குசும்பன்
2. அயனார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. வினோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன்
11. லியோ சுரேஷ்
12. அஷோக் குமார்
13. தியாகு என்கிற நாகா
14. ஜெயக்குமார்..

அனைவருக்கும் நன்றிகள்..

சில துளிகள்..

1. சுந்தர் சார் வந்தவுடன் "அது சரி யாரு அது அந்த சிம்ரன்" என்று கேட்டார்..சிம்ரனின் தீவிர விசிறியான கண்ணாவின் இதயம் இதை கேட்டவுடன் படார் என்று வெடித்தது..

2. குசும்பனார் மனைவி ஊருக்கு போய் இருக்கும் சந்தோஷதில் போட்டோவில் பார்த்ததை விட ஒரு சுற்று பெருத்து இருந்தார்..அதுவும் அவர் முகத்தில் இன்ச் பய் இன்ச் பூரிப்பு கலை கட்டி இருந்தது..

3. பிரதீப் மிகுந்த சாதுவாக அமர்ந்து இருந்தார்..நான் வந்தப்பின் தான் தெரிந்தது கலை & கோ..அவரை அழைத்து சென்று அஞ்சப்பரில் தண்டம் அழுவ வைத்தது..

4. செந்தில்வேலன்லின் ஒவ்வொரு அனுகுமுறையிலும் ஒரு நேர்மை தெரிந்தது..

5. ஆசாத் மற்றும் அய்யனார் தீவிர இலக்கியம் பற்றி விவாதித்து பொளந்து கட்டி கொண்டு இருந்தனர்..

6. கண்ணா மற்றும் கலையும் வடையை காலி செய்வதில் குறியாக இருந்தனர்..

7. கண்ணாவின் ரூமில் தான் மதியம் சாப்பிட்டேன்..அருமையாக மோர்குழம்பு அப்புறம் உருளை பொறியல் செய்து இருந்தார்..எனக்கு ரொம்ப நாள் கழித்து வீட்டில் சாபிட்டது போன்ற உணர்வு..(எப்பா..அடுத்த தடவை போனாலும் சாப்பாடு உறுதி)..

8. லியோ சுரேஷ் அண்ணாத்தே என்னை பர் துபாய் பஸ் ஸ்டாப்பில் விடுவதற்கு தன்னுடுய காரில் அவ்வளவு டிராபிக்யும் பொறுதுப்படுதமல் வந்து விட்டு சென்றார்..

9. சிம்ரன் ஆப்பகடை என்று சொல்லிவிட்டு கடைசி வரை எனக்கு ஆப்பத்தையும் கண்ணில் காட்டவில்லை சிம்ரனையும் கண்ணில் காட்டவில்லை..:((

10. கிளம்பும் நேரத்தில் உலக திரைப்படங்கள் அடங்கிய இரண்டு CD க்களை கலை என் கையில் கொடுத்தார்..உண்மையில் உலக திரைப்படங்கள் தாங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை..

மேலும் விவரங்களுக்கு மற்றும் புகைப்படங்களுக்கு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/06/05062009.html

http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_07.html