Sunday, May 1, 2011

வாழ்த்துக்கள் தல ..

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்..


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/12/Mankatha_Poster1.jpg


1. அந்த நபர் முதலில் ஒரு கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு இருந்தார்..தான் எடுத்து வரும் பைக்கில் ஃ பிரன்ட் வீல் பிரேக் கேபிள் வயரை வேண்டும் என்றே துண்டித்து வைத்து இருப்பார்..உடன் பணி புரியும் நபர்கள் ஏன் இப்படி என்று கேக்கும் பொழுது.."அண்ணா நான் ஒரு ரேசர்,அப்புறம் பேசிக்கா ஒரு மெக்கானிக் எனக்கு எப்பொழுதும் இதே மாதிரி வண்டி ஓட்டுவதில் ஒரு த்ரில் இருக்கும்".. என்று சொல்லும்பொழுது மற்றவர்கள் சிறிது ஆச்சரியப்பட்டனர்..

2. அப்புறம் மாடலிங் துறையில் வந்து..சினிமாவில் நடிக்க வந்து கொஞ்சம் காலம் போன பிறகு வாய்ப்பு இல்லாமல் மறுபடியும் ரேஸ் என்று சுற்றி கொண்டு இருந்தவர்..அடுத்து அடுத்து சந்திதது எல்லாம் பயங்கரமான விபத்துக்கள்..வாழ்விலும், ரேசிலும்..அப்புறம் மறுபடியும் தேறி வந்து நடிக்க ஆரம்பித்து கொஞ்சம் பிரபலம் ஆனார்..

3. நடிக்க ஆரம்பித்து பிரபலம் ஆனா பிறகும் வாழ்வில் ஒரு பிடிப்பு இன்மை..நண்பர்களோடு சுற்றுவது..

கிடைத்த சில நடிகைகளின் நட்ப்பும்,
காதலா நட்ப்பா என்றே தெரியாமல் அல்லாடி கொண்டு இருந்தார்..

அப்பொழுது தன்னுடன் ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்து இருந்தாலும் நடிகை ரோஜாவின் குடும்பத்தோடு கொஞ்சம் நட்பு வைத்து இருந்தார்..

நடிகையை சிஸ்டர் என்று தான் அழைப்பார்..

ஒரு மனம் வெறுத்து போன காலகட்டதில் அவரின் வீட்டுக்கு சென்று ரோஜவிடமும், ரோஜாவின் கணவர் பிரபல டைரக்டர் செல்வாமனியிடமும் .."ஏன் சிஸ்டர் எனக்கு மட்டும் இப்படி நடக்குது".. என்று அழுதவரை தேற்றி சீக்கிரம் கல்யாணம் செய்து கொள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

4.மறுபடியும் சினிமாவில் ஒரு படம் முலம் ஓரளவு நல்ல பெயர் எடுத்து விறுவிறுவென்று வளர்ந்து கொண்டு இருந்த சமயம்..ஒரு படத்தின் ஷூட்டிங் பொழுது தன்னுடன் நடித்த நடிகையின் கையை கத்தியால் கிழிப்பது போல் ஒரு காட்சியில் நிஜமாகவே தவறுதலாக கிழித்து விட்டார்..அங்கு தோன்றிய பாசம் காதலாக உருவெடுத்து திருமணத்தில் போய் முடிந்தது..

5. ஒரு நாள் ஒரு புகழ் பெற்ற ஆடை நிறுவனம் ஒன்றில் தம்பதி சகிதமாய் இருவரும் சென்று ஷாப்பிங் செய்து வீட்டுக்கு வந்த பின் ஒரு தொலைபேசி.. அழைத்தவர் கடையின் உரிமையாளர்.."தங்களுக்கு தவறாக அதிகமாக பில் போட்டு விட்டோம்..பணத்தினை திருப்பி தர வருகிறேன்"..என்று கூறியவரிடம் நீங்கள் இருங்கள் நான் அங்கே வருகிறேன் என்று சென்றவர்..அவரின் நேர்மையை பாராட்டி இன்னும் மேலும் ஒரு தொகையை சேர்த்து கடையில் உள்ள அனைவர்க்கும் பிரித்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு விருட்டேன்ற்று சென்றார்..

6. எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் அந்த நடிகரோட நட்பு வட்டாரத்தில் இருக்க கூடிய எழுத்தாளர் மற்றும் நிருபர். ஒரு சமயம் அவர் வெளியிட்ட ஒரு செய்தியின் காரணமாக கொஞ்சம் கடுமையகவே மனுஷ்யப்புதிரனிடம் நம் நடிகர் கோபித்து கொண்டு உள்ளார்.அதன் பிறகு நீண்ட நாள் இருவரும் சந்திக்கவில்லை..ஒரு பொது நிகழ்ச்சியில் எதிர்பாரதவிதமாக மானுஷ்யவை சந்திக்க நேர்ந்த பொழுது அவரிடம் திரும்ப திரும்ப நான் அன்று அப்படி நடந்து கொண்டு இருக்க கூடாது என்று வலுகட்டயமாக சென்று அவர் பக்கத்தில் அமர்ந்து மன்னிப்பு கேட்டு உள்ளார்..மனுஷியவே நெகிழ்ந்து போகும் அளவுக்கு..

7. ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் அவர்களுக்கு என்று ஒரு தனி உடற்பயிற்சி மையம் ஆரம்பித்த சமயத்தில் அதற்கு என்று உதவி பண்ணியதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு..

அந்த திறப்பு விழாவுக்கு நம்மை தொழில்ரீதியாயாக பார்க்காமல் சக மனிதனாக மட்டுமே பார்க்கும் நபரை தான் கூப்பிட வேண்டும் முக்கியமாக இதை வைத்து அவர்கள் விளம்பரம் தேடிக்கொள்ள கூடாது..யாரை கூப்பிடலாம் என்று யூனியன் ஆட்கள் யோசித்து கொண்டு இருந்த வேலையில் எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்ன ஒரே பெயர் இவர் பெயர் மட்டும் தான்.அழைத்தபொழுது அவரும் சந்தோஷமாக கலந்து கொண்டார்.

8. பிரபல நட்சத்திர ஹோட்டல் அது பெரும்பாலும் அங்கு வரும் நட்சத்திர நடிகர்கள் அங்கு பணிபுரியும் வெயிட்டர்கள் சிரித்தால் கூட சிரிக்காமல் முகத்தை திருப்பி கொள்பவர்கள்..வரும் நட்சத்திர குடும்பதினர் ஒரு வித அமைதியை எப்பொழுதும் கடைப்பிடிபார்..அனால் நம் நடிகரின் குடும்பம் அப்படி இல்லை..போனால் ஒரே அமர்க்களம் தான்..சகஜமாக பழகுவார்கள்..

இப்படி ஒரு புது வருட சிறப்பு நிகழ்ச்சிக்கு கிச்சன்னில் வேகமாக தயார் பண்ணி கொண்டு இருந்த ஊழியர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காமல் ஒரு காரியம் நடந்தது..திடிர் என்று கிச்சன்னில் உள்ளே நுழைந்த நம் நடிகர் அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர் வரை கைப்பிடித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்..


9. நம் நடிகர் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் தன் நண்பரின் காரில் அவரை ஓட்ட சொல்லி ஊர் சுற்றுவார்.அப்படி சமிபத்தில் சென்ற பொழுது கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது..உடனே இறங்கிய நமது ஆள் அந்த நண்பரை ஸ்டேரிங் பிடிக்க சொல்லி விட்டு கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர்கள் பெட்ரோல் பங்க் வரை தள்ளி சென்று இருக்கிறார்..இருட்டு சமயம் என்பதால் மற்றவர்கள் கண்ணில் படாமல் பார்த்து கொண்டார்.

10. ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடுய கல்யாணத்திற்கு அழைத்த பொழுது முடிந்தால் வருகிறேன் என்று சொன்னவர்..தன் மனைவி குழந்தையுடன் கலந்து கொண்டார்...இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ஓட்டுனர் சற்று ஆனந்த அதிர்ச்சியில் "என்ன தல, நீ முன்னாடியே வரனு சொல்லி இருந்த ஏற்பாடு எல்லாம் தடபுடலா பண்ணி இருப்பானே"..என்று சொல்ல அதற்கு தல சொன்ன ஒரே வார்த்தை.."அதனால் தான் சொல்லவில்லை."

நான் யாரை பற்றி சொல்கிறேன் என்று கண்டிப்பாக இந்நேரம் தெரிந்திருக்கும்.


நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதர்..கவனிக்கவும் நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்ற அளவில் அவர் பல லட்சம் பேரின் மனம் கவர்ந்தவர்..தன்னம்பிகையின் சிகரம்..

எனக்கு தெரிந்து கலை உலகம் என்று இல்லை..

மற்ற எந்த துறையில் இருந்து இருந்தாலும் பல பேர் மதிக்கும் நபராக தான் இருந்து இருப்பார்..பல பேரின் ரோல் மாடலாக..

இருந்தும் ஒரு ஆதங்கம் இன்னும் கதையில் கூடுதல் கவனம் செலுத்தி வேறு ஒரு அருமையான பாதையில் செல்லலாம்..வாலி,முகவரி இப்படி ஏன் கிரீடம் கூட எடுத்து கொள்ளலாம்..

தடைகள் வந்தாலும் அதை உடைத்து எரியும் தன்மை கொண்டவர்..அவரே சொல்வது போல் "வாழ்கையில் ஏற்படும் தோல்வியை கண்டு எனக்கு பயம் இல்லை ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் அல்ல ஆயிரம் முறை தோற்றவன்..".


அவரின் பிறந்தநாள் இன்று..
வாழ்த்துக்கள்..