Sunday, August 22, 2010

நானும் இங்க தான் இருக்கேன் ..

ஹாய்..ஹாய்...


பாருங்க இங்க அபுதாபி பணி மாற்றம் ஆனதிலிருந்து ஏகப்பட்ட வேலைகள், பிஸி பிஸி பிஸி...இணையம், பேஸ் புக், பிளாக்கர் இதுக்கெல்லாம் நேரமே இல்லை..எப்பபாரு வேலை வேலை வேலை..இது ஒன்றே சிந்தனையா இருக்கு..(மேல நான் சொல்லியிருக்குறது உண்மைன்னு யாரும் நம்ப மாட்டிங்கன்னு தெரியும் ..சத்திய சோதனை) சமிபகாலமா எதுவும் எழுதமுடியல , எழுதவும் தோணல. அதுக்காக மத்தவங்க மாதிரி உலகம் ரொம்ப பெருசு, வெளியே கத்துக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு, இங்க குண்டு சட்டில குதிரை ஓட்ட விரும்பலன்னு நான் சொல்ல மாட்டேன்..என்ஜாய் மக்களே..எல்லாமே இலவசம் தான்..ஓகே..சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்..


அஜித்+கெளதம்:


ரொம்ப எதிர்ப்பார்த்த காம்பிநேஷன்..எதிர்ப்பார்த்த மாதிரியே புட்டுக்குச்சு. இனிமேல் சேர்வதற்கான வாய்ப்பே இல்லைங்கிற மாதிரி தான் தெரியுது. கெளதம் சொலுற மாதிரி அஜித்தை திசை திருப்பும் சக்திகள் அவர சுத்தியே இருக்கு..அதையெல்லாம் மீறி அந்த இமேஜ் வட்டத்தை விட்டு அவர் வெளியே வரணும்.காமெடி இயக்குனர்கள் கூட சேர்ந்துக்கிட்டு காமெடி பண்ண கூடாதுன்னு தான் என்னோட விருப்பம்.எனக்கு பிடிச்ச இயக்குனர்கள் கூட அஜித் எதோ ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறார்னு செய்தி கேள்விப்பட்டாலே எப்படியோ புட்டுக்க தான் போகுதுன்னு தோணுது ( முன்னாடி பாலா..இப்ப கெளதம்).


எந்திரன்+ ரெஹ்மான்:


எந்திரன் சாங்க்ஸ் பிடிக்கிற மாதிரி இருக்கு..இருந்தாலும் படம் பார்த்தவுடன் தான் தெரியும். ஆனா ரெஹ்மான் தமிழ் இசையில் மட்டும் ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து கொள்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்ல ஒரு டெல்லி-6 , ரங் தே பசந்தி மாதிரியான முயற்சிகள் பண்ண வேண்டும்..ஆனால் அதற்கான கதைக்களன் அமையவேண்டும்.அவரை மட்டும் என்ன சொல்லுவது..எல்லாம் உங்களுக்கு இது போதும்ன்னு நினைச்சிட்டாரோ. கடைசியா கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தது VTV.அதுக்கப்புறம் ராவணன் ஒரு பாட்டாச்சும் கேக்குற மாதிரி இருக்கணுமே..ம்ம்ஹும்ம். ரஹ்மான் ஆல்பத்தில் ஒரு சுமாரான ஆல்பம் எதுன்னு கேட்டா காதை மூடிக்கொண்டு 'ராவணன்' என்று சொல்லிவிடலாம்.


உலகப்படம் + நான்:


நான் ஒரு படம் பார்த்தேன் நண்பர் கார்த்திகேயன் உபயத்தில்..அது உலகப்படமான்னு தெரியுல ஆனா சோகமா இருந்துச்சு..என்னை பொறுத்தவரை சோகமா இருக்கிற எல்லா படமும் உலக படம் தான். சோகமா இருந்தா கூட பரவில்லை எளவு 'கொடூரமா அருவெறுக்கதக்க' வகையில் இருந்தது நான் பார்த்த அந்த கொரியன் படம் (Three Extremes )..தயவுசெய்து அந்த படத்தை பார்த்துறாதிங்க. அப்புறம் ''சே''ன்னு ஒரு படம் பார்த்தேன் ''ச்சே''ன்னு ஆயிடுச்சு..மகத்தான ஒரு தலைவனின் படம்.ஆனா அவனுங்க எடுதிருக்கானுங்க பாருங்க உலக மகா மொக்கைடா சாமி..பேசுறானுங்க பேசுறானுங்க பேசிக்கிட்டே இருக்கானுங்க. கொஞ்சம் விட்டா லேப்டாப் விட்டு இறங்கி வந்து நம்மக்கிட்டாயே பேசுவானுங்க போல. நானும் ஒரு வாரமா பார்கிறேன் படம் முடியும் முடியும்னு..ம்ம்ஹும்ம்ம்..வழியே இல்ல.


புத்தகம்+நான்(சத்தியமா நான் தான்)

காடு..நம்ம ஜெமோ எழுதுனது..நண்பர் கார்த்திகேயன் உபயத்தில் படித்தது(எதையும் காசு போட்டு வாங்க மாட்டியடா வெண்ண அப்படின்னு கேக்காதிங்க). காடு பற்றி நுட்பமா அவ்வளோ தகவல்கள்..பல வருடங்கள் அலைந்து திரிந்து காடை நம் வாழ்வின் ஒரு அங்கமாக உருவாக்கி மனதில் ஏற்றினால் ஒழிய இப்படி விரிவாக எழுத முடியாது. ஆனா பாருங்க நிறைய இடத்துல ஒன்னுமே புரியல..இருந்தாலும் படிக்கிறேன் படிக்கிறேன் படிச்சிக்கிட்டே இருக்கேன். நேத்து படிக்கிறப்ப தான் எதோச்சையா கடைசி பக்கம் பார்த்தா 'ஒரு தேர்ந்த வாசகனுக்குக்கான' படைப்பு அப்படின்னு போட்டிருக்கு..அப்புறம் எப்படி எனக்கு புரியும். எனக்கெல்லாம் ஆத்துல தண்ணி ஓடுதுன்னு சொன்ன தான் புரியும்..அத விட்டுட்டு வானத்தில் இருந்து கரைத்து ஊற்றிய பல பிம்பங்கள் ஓன்று சேர்ந்து மண்ணில் கனத்தோடு உறவாடி ஓடியது அப்படின்னு சொன்னா ஒரே சமயத்துல நாலு உலகப்படம் பார்த்த மாதிரி தலைய சுத்தி ஸ்டார் ஸ்டாரா பறக்கும். இருந்தாலும் அந்த புஸ்தகத்தை படிக்காம இருக்க முடியல.கிரியோடு சேர்ந்து நானும் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம்.