Sunday, August 22, 2010

நானும் இங்க தான் இருக்கேன் ..

ஹாய்..ஹாய்...


பாருங்க இங்க அபுதாபி பணி மாற்றம் ஆனதிலிருந்து ஏகப்பட்ட வேலைகள், பிஸி பிஸி பிஸி...இணையம், பேஸ் புக், பிளாக்கர் இதுக்கெல்லாம் நேரமே இல்லை..எப்பபாரு வேலை வேலை வேலை..இது ஒன்றே சிந்தனையா இருக்கு..(மேல நான் சொல்லியிருக்குறது உண்மைன்னு யாரும் நம்ப மாட்டிங்கன்னு தெரியும் ..சத்திய சோதனை) சமிபகாலமா எதுவும் எழுதமுடியல , எழுதவும் தோணல. அதுக்காக மத்தவங்க மாதிரி உலகம் ரொம்ப பெருசு, வெளியே கத்துக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு, இங்க குண்டு சட்டில குதிரை ஓட்ட விரும்பலன்னு நான் சொல்ல மாட்டேன்..என்ஜாய் மக்களே..எல்லாமே இலவசம் தான்..ஓகே..சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்..


அஜித்+கெளதம்:


ரொம்ப எதிர்ப்பார்த்த காம்பிநேஷன்..எதிர்ப்பார்த்த மாதிரியே புட்டுக்குச்சு. இனிமேல் சேர்வதற்கான வாய்ப்பே இல்லைங்கிற மாதிரி தான் தெரியுது. கெளதம் சொலுற மாதிரி அஜித்தை திசை திருப்பும் சக்திகள் அவர சுத்தியே இருக்கு..அதையெல்லாம் மீறி அந்த இமேஜ் வட்டத்தை விட்டு அவர் வெளியே வரணும்.காமெடி இயக்குனர்கள் கூட சேர்ந்துக்கிட்டு காமெடி பண்ண கூடாதுன்னு தான் என்னோட விருப்பம்.எனக்கு பிடிச்ச இயக்குனர்கள் கூட அஜித் எதோ ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறார்னு செய்தி கேள்விப்பட்டாலே எப்படியோ புட்டுக்க தான் போகுதுன்னு தோணுது ( முன்னாடி பாலா..இப்ப கெளதம்).


எந்திரன்+ ரெஹ்மான்:


எந்திரன் சாங்க்ஸ் பிடிக்கிற மாதிரி இருக்கு..இருந்தாலும் படம் பார்த்தவுடன் தான் தெரியும். ஆனா ரெஹ்மான் தமிழ் இசையில் மட்டும் ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து கொள்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்ல ஒரு டெல்லி-6 , ரங் தே பசந்தி மாதிரியான முயற்சிகள் பண்ண வேண்டும்..ஆனால் அதற்கான கதைக்களன் அமையவேண்டும்.அவரை மட்டும் என்ன சொல்லுவது..எல்லாம் உங்களுக்கு இது போதும்ன்னு நினைச்சிட்டாரோ. கடைசியா கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தது VTV.அதுக்கப்புறம் ராவணன் ஒரு பாட்டாச்சும் கேக்குற மாதிரி இருக்கணுமே..ம்ம்ஹும்ம். ரஹ்மான் ஆல்பத்தில் ஒரு சுமாரான ஆல்பம் எதுன்னு கேட்டா காதை மூடிக்கொண்டு 'ராவணன்' என்று சொல்லிவிடலாம்.


உலகப்படம் + நான்:


நான் ஒரு படம் பார்த்தேன் நண்பர் கார்த்திகேயன் உபயத்தில்..அது உலகப்படமான்னு தெரியுல ஆனா சோகமா இருந்துச்சு..என்னை பொறுத்தவரை சோகமா இருக்கிற எல்லா படமும் உலக படம் தான். சோகமா இருந்தா கூட பரவில்லை எளவு 'கொடூரமா அருவெறுக்கதக்க' வகையில் இருந்தது நான் பார்த்த அந்த கொரியன் படம் (Three Extremes )..தயவுசெய்து அந்த படத்தை பார்த்துறாதிங்க. அப்புறம் ''சே''ன்னு ஒரு படம் பார்த்தேன் ''ச்சே''ன்னு ஆயிடுச்சு..மகத்தான ஒரு தலைவனின் படம்.ஆனா அவனுங்க எடுதிருக்கானுங்க பாருங்க உலக மகா மொக்கைடா சாமி..பேசுறானுங்க பேசுறானுங்க பேசிக்கிட்டே இருக்கானுங்க. கொஞ்சம் விட்டா லேப்டாப் விட்டு இறங்கி வந்து நம்மக்கிட்டாயே பேசுவானுங்க போல. நானும் ஒரு வாரமா பார்கிறேன் படம் முடியும் முடியும்னு..ம்ம்ஹும்ம்ம்..வழியே இல்ல.


புத்தகம்+நான்(சத்தியமா நான் தான்)

காடு..நம்ம ஜெமோ எழுதுனது..நண்பர் கார்த்திகேயன் உபயத்தில் படித்தது(எதையும் காசு போட்டு வாங்க மாட்டியடா வெண்ண அப்படின்னு கேக்காதிங்க). காடு பற்றி நுட்பமா அவ்வளோ தகவல்கள்..பல வருடங்கள் அலைந்து திரிந்து காடை நம் வாழ்வின் ஒரு அங்கமாக உருவாக்கி மனதில் ஏற்றினால் ஒழிய இப்படி விரிவாக எழுத முடியாது. ஆனா பாருங்க நிறைய இடத்துல ஒன்னுமே புரியல..இருந்தாலும் படிக்கிறேன் படிக்கிறேன் படிச்சிக்கிட்டே இருக்கேன். நேத்து படிக்கிறப்ப தான் எதோச்சையா கடைசி பக்கம் பார்த்தா 'ஒரு தேர்ந்த வாசகனுக்குக்கான' படைப்பு அப்படின்னு போட்டிருக்கு..அப்புறம் எப்படி எனக்கு புரியும். எனக்கெல்லாம் ஆத்துல தண்ணி ஓடுதுன்னு சொன்ன தான் புரியும்..அத விட்டுட்டு வானத்தில் இருந்து கரைத்து ஊற்றிய பல பிம்பங்கள் ஓன்று சேர்ந்து மண்ணில் கனத்தோடு உறவாடி ஓடியது அப்படின்னு சொன்னா ஒரே சமயத்துல நாலு உலகப்படம் பார்த்த மாதிரி தலைய சுத்தி ஸ்டார் ஸ்டாரா பறக்கும். இருந்தாலும் அந்த புஸ்தகத்தை படிக்காம இருக்க முடியல.கிரியோடு சேர்ந்து நானும் காட்டில் அலைந்து கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம்.

27 comments:

வினோத் கெளதம் said...

கடவுளே இந்த ப்ளாக்ல என்ன பிரச்சனைன்னு தெரியுல Fonts எல்லாம் ஒழுங்காவே வர மாட்டது ..Template மாத்தனுமோ

கவி அழகன் said...

ஆஹா சூப்பர்

வினோத் கெளதம் said...

Bloggerல எதுவும் Update ஆகா மாட்டது..

கண்ணா.. said...

அபுதாபி மாறியாச்சா ரைட்டு....

அப்புறம் ஜெமோ புக்கெல்லாம் தூங்காம படிக்க ஆரம்பிக்குறே... பெரிய இலக்கியவாதி ஆயிட்டு இருக்கேன்னு நினைக்குறேன்...

நீ வேலை வேலை வேலைன்னு வேலையை மட்டும்தான் பாத்துகிட்டு இருக்கேன்னு எனக்கும் தெரியும்... (இன்னும் கல்யாணத்துக்கு எவ்ளோ நாள் இருக்கு)

☀நான் ஆதவன்☀ said...

vவெல்கம் பேக் மாம்ஸ் :) நான் கூட காடு வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன். முடிக்கிறேனான்னு பார்க்கலாம் :)

geethappriyan said...

காடு வாசிபோர் கவனத்துக்கு.
ஜெயமோகன் 80க்கும் மேறபட்ட சாதியினரையும்,உட்பிரிவுகளையும் அங்கதம்[cheap humour or sick joke] என்னும் மட்டமான சிலேடை கொண்டு வாரி தூற்றியிருப்பார்,அது வட்டார மொழி இடையே ஒளிந்திருக்கும்,நீங்கள் படிக்கும் பக்கத்திலுள்ள சாதி சம்பந்தப்பட்ட சொற்றொடர்களையும்,வாக்கியங்களையும் தயவுசெய்து பக்கம் எண் முதற்கொண்டு குறித்து வைக்கவும்.
அதை நான் ஒரு பக்கத்துக்கு 10 திர்காம் கொடுத்து நான் வாங்கிகொள்கிறேன்.
==
இது சாதி வெறியர்களுக்கு சாவு மணி யடிக்க வசதியாக இருக்கும்.யார் படிக்கப்போகிறார் என்று எதை வேண்டுமானாலும்,யாரை வேண்டுமானாலும் வேசி மகன்கள்,கள்ள உறவு கொள்ளும் வம்சம்,கெட்ட குடி என்று எழுதலாம் என்னும் இது போல எறும்பு தின்னிகளை,கையும் களவுமாக பிடிக்க உதவுங்கள்.
சாதியம் ஒழிப்போம் நல்ல மனிதம் வளர்போம்.

geethappriyan said...

இதை டைப்பவே வெறுப்பா இருக்கே?
எப்புடித்தான் மைல் கணக்கா புரியாதபடிக்கு எழுதுறானுங்களோ?மக்கா.

====

மக்களே அதுவும் தவிர இன்ஸெஸ்ட் என்னும் சைக்கோத்தனமும் இவரின் படைப்புகளில் புனைவுகளாக வெளிப்பட்டிருக்கும்.அதையும் கவனித்து வாசியுங்கள்,இன்செஸ்ட் என்றால் என்ன என்று விக்கியில் பாருங்கள்.incest
====
யோவ் குரு.
என்ன நீ.
த்ரீ எக்ஸ்ட்ரீம்.
பேரே,சொல்லுதுல்ல,படம் அதீத வெறிச்செயல் சம்பவங்களின் கோர்வை என்று.

தவிர இது ஆசிய சினிமா ஜாம்பவான்கள் மூவரின் படைப்பு.
கொழுக்கட்டை-டம்ப்ளிங்
பாத்தியா?அது ஹாங் காங்-கண்டோநீஸ்

கட்-இது கொரியன்

பாக்ஸ்- இது ஜப்பான்.

===
படம் மிக அருமையான ஹாரருக்கு எடுத்துக்காட்டு.ஹாரர் விரும்பாத நீ எதற்கு இதை பார்த்தாய்?
நீ பூக்களை நேசி.:))
ரொமாண்டிக் ட்ராமாவா பார்த்து தள்ளுவதை விட்டுவிட்டு?
===

geethappriyan said...

நீ வலையுலகில் இருந்தி ரிடயர்டு ஆகிவிட்டாய் என்று நினைத்தேன்.
இல்லை என்று நிரூபிச்சுட்டே,வாரம் ஒரு பதிவாவது போடு.இல்லாட்டி நானே உன்னை திட்டி கமெண்ட் போடுவேன் .எப்புடி வசதி

Anonymous said...

வினோத் கவுதம் சார்.
உங்க நீண்ட நாள் காணாமல் தவித்தேன்.பழையபடி,சினிமா,பாடல்கள்,சிறுகதைன்னு எழுதுங்க,சார்,நான் ஒரு பெண்வாசகி என்பதால் எனக்கு ஆண்பதிவர்களின் பதிவுகளை படித்தாலும் ,பின்னூட்ட மாட்டேன் சார்.ஆனால் உங்களுக்கு மட்டும் வந்து அனானியா பினூட்டுவேன்.
அதுவும் ஆறு மாசமா முடியாம பண்ணிட்டீங்களே சார்.
உங்களுக்கு திருமணம் என்று தெரிந்து கொண்டேன் சார்.வாழ்த்துக்கள்,யார் அந்த அதிர்ஷ்டசாலி?எங்களுக்கு பத்திரிக்கை உண்டா?

கோபிநாத் said...

;))

பாலா said...

வினோத் + தலைகாணி -ன்னு நீங்க எழுதியிருக்கறதா கார்த்திக்கேயன் சொன்னாரே???

தலைகாணி எங்க போச்சிங்க சார்???

=======

அக்டோபருக்கு ரொம்ப நாள் இல்லை. அதான் பையன் கிறுக்கு புடிச்சித் திரியுது. :) :)

பாலா said...

”தலகாணியை படித்துத் தூங்குவதால்”

ஓஹோ... ஜெமோ மேட்டரா??? :) ஹா. ஹா.. ஹா.. ஹா


பாவங்க நீங்க! உங்களாண்ட அந்த புத்தகத்தை கொடுத்து.... ஹும்.. கிறுக்குப் புடிச்சித் திறியறதுக்கு அக்டோபர் காரணமில்லை.

வினோத் கெளதம் said...

@ யாதவன்

வருகைக்கு நன்றி யாதவன்..

@ கண்ணா.

அபுதாபி மாறி மூணு மாசம் ஆகுது..ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல பாளையம்கோட்டை ஜெயில்ல இருந்து வேலூர் ஜெயில்க்கு மாத்தி இருக்காங்க அவ்வளோ தான்


//அப்புறம் ஜெமோ புக்கெல்லாம் தூங்காம படிக்க ஆரம்பிக்குறே//

அதான் படிச்சாலே தூக்கம் வருதே..

//பெரிய இலக்கியவாதி ஆயிட்டு இருக்கேன்னு நினைக்குறேன்...//

இதுக்கு எதாச்சும் அசிங்கம திட்டி இருக்கலாம்..:))

//(இன்னும் கல்யாணத்துக்கு எவ்ளோ நாள் இருக்கு)//

ஒரு 40 நாட்கள்..


@ ☀நான் ஆதவன்☀

//நான் கூட காடு வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன். முடிக்கிறேனான்னு பார்க்கலாம் //

ஒரு மாமாங்கம் ஆகும் ..

வினோத் கெளதம் said...

@ |கீதப்ப்ரியன..

குரு,

ஜெமோ மேல செம காண்டுல இருக்கீங்க போல..ரைட்டு..ஒரு பக்கத்துக்கு 10 திர்காம் !! ..ரொம்ப நல்லது.

Extremes பேர வச்சிக்கிட்டு Extreme levelல திங் பண்ணி இருக்காங்கனு தெரியுது..ஆனா ஏத்துக்கவே முடியல..

//கொழுக்கட்டை-டம்ப்ளிங்
பாத்தியா?அது ஹாங் காங்-கண்டோநீஸ்//

கடவுளே நான் படம் பார்த்து முடிச்சிட்டு படத்தை Delete செய்துவிட்டேன் ..அந்தளவுக்கு அருவெறுப்பா இருந்துச்சு.

நான் ஒன்னு ஜப்பான், ரெண்டு கொரியன் படம்ன்னு நினைத்தேன்..இரண்டாவது படம் மட்டும் சுலபமாக கொரியன் மொழி என்று கண்டுபிடிக்க முடிந்தது.

ஹாரர் பார்ப்பேன் தல..ஆனா இது பிடிக்கவே இல்ல அதுவும் அந்த கொழுக்கட்டை படம்..ஐயோ.

இனிமேல் கொஞ்சம் எழுதலமன்னு தான் இருக்கேன் கொஞ்சம் மனமாற்றம் தேவைப்படுது.. :)

வினோத் கெளதம் said...

@ Anonymous

அன்பு Mr.அனானி..

ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி குதுகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிக்குறது தான் உங்க வேலையா..:)

வினோத் கெளதம் said...

@ கோபிநாத்

மச்சி இருக்கியா...:)


@ ஹாலி பாலி

//தலைகாணி எங்க போச்சிங்க சார்//

ஆனா தலகாணி மாதிரி தான் இருக்குது ..


//அக்டோபருக்கு ரொம்ப நாள் இல்லை. அதான் பையன் கிறுக்கு புடிச்சித் திரியுது.//

அஹம் பிரம்மஸ்மி ..:)

kishore said...

ஐ..........! மீண்டும் வினோத்.. :)

kishore said...

நீண்ட நாள் கழிச்சு வந்தாலும் மொக்கையா இல்லாம எழுதி இருக்கடா..

Unknown said...

hai...vinoth...just now i saw ur blog.its nice..this is mahesh- jaga friend.i think i saw u when i am working in AVCCE.see also my blog www.eiyalpanavan.blogspot.com

Yoganathan.N said...

வினோத்கௌதம் அவர்களுக்கு வணக்கம். தல + கௌதம் கூட்டணி கண்டிப்பா சேரும், நம்பிக்கையோடு இருப்போம். :)

Welcome back and best wishes for your marriage. :)

- நா.யோகா (மலேசியா)

வினோத் கெளதம் said...

@ Kishore..

அனானியா ஒரு கம்மென்ட் ..இப்ப வேற ஒரு கம்மென்ட் நீ நடத்து..

@ மின்னல்

மகேஷ் உங்களை மறக்க முடியுமா..நல்லா நியாபகம் இருக்கு..எப்படி இருக்கீங்க..கல்யாண வாழ்க்கை எப்படி போகுது..
உங்க ப்ளாக்ல சேர்ந்தாச்சு.

@ Yoganathan.N

வணக்கம் நண்பரே..
பாப்போம் என்ன ஆகுதுன்னு..
நன்றிங்க வாழ்த்துக்கள்க்கு..:)

Anonymous said...

i like your label vinoth sir..

Muniappan Pakkangal said...

Aijith mela avalavu paasama,Ravanan songs - everyone knows,athu ennappaa pusthaham ?

priyamudanprabu said...

எனக்கெல்லாம் ஆத்துல தண்ணி ஓடுதுன்னு சொன்ன தான் புரியும்..அத விட்டுட்டு வானத்தில் இருந்து கரைத்து ஊற்றிய பல பிம்பங்கள் ஓன்று சேர்ந்து மண்ணில் கனத்தோடு உறவாடி ஓடியது அப்படின்னு சொன்னா ஒரே சமயத்துல நாலு உலகப்படம் பார்த்த மாதிரி தலைய சுத்தி ஸ்டார் ஸ்டாரா பறக்கும்
///

என் இனமய்ய நீ

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

tamil cinema said...

hi friend your blog is simply superb.. share your information.

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com