புதுவை என்று சொன்னால் பல பேருக்கு கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் என்று பிரபலமான இடங்கள் நினைவிற்கு வரும். இங்கு அந்த அளவுக்கு பிரபலம் அடையாத சில இடங்கள் குறிப்பிட்டு உள்ளேன்.
1.உளசுட்டேரி:
புதுவை முருகா தியேட்டர் சிக்னலில் இருந்து இரு சாலைகள் பிரியும். ஓன்று சென்னை செல்லும் சாலை இன்னோன்று விழுப்புரம் செல்லும் சாலை. அந்த சாலையில் தட்டாஞ்சவடி, கவுண்டம்பாளையம், மேட்டுபாளையம் போன்ற சில இடங்களை கடந்து சென்றால் உளசுட்டேரி வரும். பிரமாண்டமான ஏரி. புதுவையில் பெரும்பாலான இடங்களக்கு இங்கு இருந்து தான் குடி தண்ணீர் செல்கின்றது. இயற்கை சூழலோடு மிகவும் ரம்யமாக இருக்கும். படகு சவாரி கூட உள்ளது. சதுர வடிவில் உள்ள படகிலேயே சாப்பிட்டு கொண்டே ஏரியை ரசிக்க முடியும். கடைசியாக ஒரு மழை காலத்தில் அங்கு சென்று இருந்தேன். மறக்கவே முடியாத அனுபவம் அது. மழை காலத்தில் ஒரு முறை சென்று வாருங்கள் நல்ல அனுபவமாக இருக்கும்..
2.தாவரவியல் பூங்கா( Botanical Garden):
புதுவை பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் சாலையில் செல்ல வேண்டும். Newtone தியேட்டர் சிக்னலில் Newtone தியேட்டர் எதிர்புறம் இருக்கும். நிறைய மரங்களும் செடிகளும் தாவரங்களும் நிறைந்து இருக்கும் பூங்கா. மிகவும் தனிமையான இடம். ஒரு வித அமைதியை உள்ளே உணர்விர்கள் கூட்டமும் அவளவாக இருக்காது. உள்ளே ஒரு சிறிய ரயிலும் உண்டு டிக்கெட் வாங்கி கொண்டு பயணிக்கலாம். பிப்ரவரி, மார்ச் எதாவது ஒரு மாதத்தில் பூக்கள் கண்காட்சி 3 நாட்களக்கு நடக்கும்.அந்த சமயத்தில் போனிர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் சில நேரங்களில் மதிய வேளையில் செல்வேன். ஸ்கூல் காலேஜ் கட் அடித்து விட்டு மாணவ மாணவிகள் சுற்றி கொண்டு இருப்பார்கள், சில பேர் அமைதியாக படித்து கொண்டு இருப்பார்கள்,இன்னும் சில பேர் கடலை போட்டு கொண்டு இருப்பார்கள். நான் பெரும்பாலும் இயற்கையை ரசித்து விட்டு என் போக்கில் சென்று விடுவேன். உள்ளே ஒரு Aquarium கூட உண்டு.
3.ஆரோ பீச்:
இந்த இடம் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ECR ரோட்டில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் 10km தொலைவில் உள்ளது. ECR ரோட்டில் ஆரோவில் பிரியும் சாலையின் எதிர்புற சாலையில் செல்ல வேண்டும். ஒரு சாதரண கடற்கரை தான். என்ன இங்கு வெள்ளைகாரர்கள் குளித்து கொண்டு இருப்பார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட துரத்தில் நின்று கொண்டு தான் பார்த்து ரசிக்க முடியும் கடலை தான் சொல்கிறேன். பக்கத்தில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்து நடந்தால் தூரத்தில் இருந்து “தம்பி அங்க எல்லாம் போக கூடாதுன்னு ஒரு குரல் கேக்கும்” நம் மீனவ நண்பர்கள் அறிவிக்கப்படாத பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி கொண்டு இருப்பார்கள். அதையும் மீறி போக முயன்றால் “……….. சொல்றோம்ல கேக்க மாட்டியா” அப்படினு மறுபடியும் ஒரு குரல் கேக்கும். அதையும் மீறி போக முயன்றால் தைரியசாலியாக தான் இருக்க வேண்டும். Two wheelerல போன வசதியா இருக்கும். நான் MNGPயில் படிக்கும் பொழுது காலேஜ் ஸ்டிரைக் என்றால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து 10KM சைக்கிளில் பயணித்து செல்வோம். போய் மணிக்கணக்கில் குளிப்போம். ஆனால் தயவு செய்து குளிக்காதிர்கள். கொஞ்சம் ஆபத்து..
4. New Harbour( Tunnel):
இந்த இடம் அவளவாக வெளியுர்வாசிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.நியூ ஹர்பர் என்று கேட்டால் சொல்லுவார்கள். வங்காள விரிகுடாவில் இருந்து வரும் Backwaterன் கிழே ஒரு Tunnel வைத்து இரு கரையை இனைத்திருபார்கள் Tunnel வழியாக கிழே சென்று அக்கரையின் மேலே வரலாம். Tunnel உள்ளே கும்மிருட்டாக இருக்கும். Torch அல்லது Lighter வெளிச்சம் ஏற்படுத்தி போனால் நலம். ஆனால் போகிற வழியும் சரி Tunnel உள்ளேயும் சரி கொஞ்சம் சுத்தமில்லாமல் தான் இருக்கும் ( ஒரு சாராய கடை , ஒரு கல்லறை , ஒரு Light house கடந்து செல்ல வேண்டும். தனிமை விரும்பிகள் தாரளமாக போகலாம். Outdoorல் Beachஐ ரசித்துக்கொண்டே மது அருந்துவதற்கு நல்ல இடம் (பிறர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்)..
5. லாஸ்பேட்( Lawspet):
நான் படித்த பல காலேஜ்ல ஒரு காலேஜ் இங்கு தான் உள்ளது (MNGP). மிக அருமையான Atmosphere.
Tagore Arts College
Kanchimamunivar Centre for Post Graduate Studies
Mothilal Nehru Government Polytechnic
Women’s Polytechnic
Community College
Teacher Training Institute
Government Technical Higher Secondary School
இப்படி அந்த இடத்தில் புதுவையின் பிரதான கல்லூரிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து ஒரு 200 அல்லது 250 அடி மேலே இருக்கும். அதுவும் Tagore Arts College அருகில் இருக்கும் ஒரு கிரௌண்டில் நின்று கொண்டு பார்த்தால் வெகு தூரத்தில் நீல வண்ணத்தில் கடற்பரப்பு மிக அழகாக தெரியும். இங்கு தான் புதுவையின் மிக சிறிய விமான நிலையமும் உள்ளது. நான் படிக்கும் காலத்தில் ஒரு காலேஜில் ஆரம்பிக்கும் ஸ்டிரைக் அப்படியே லாஸ்பேட்ல் இருக்கும் எல்லா கல்லூரிக்கும் பரவும். அடிக்கடி அதனால் லீவ் கிடைக்கும். அப்படியே ஒரு ரோந்து போநோம்னா எல்லா காலேஜ்யும் வரிசையாக பார்க்கலாம் இடமும் மரங்கள் சூழ அருமையாக இருக்கும். அதன் பிறகு நான் சில காலேஜ் பார்த்து விட்டாலும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நான் படித்தலியேயே எனக்கு பிடித்த இடம் இந்த இடம் தான்.
6.குபேர் பஜார் & சண்டே பஜார்( Sunday Bazar) :
குபேர் பஜார் :இந்த இடம் ரத்னா தியேட்டர் எதிரில் உள்ளது. சில Foreign பொருட்கள் கிடைக்கும். Dvd player, Mobile phone etc., அப்புறம் மிக முக்கியமாக எல்லா விதமான DVDகளும் கிடைக்கும் உலக திரைப்படம் முதல் வேற்று கிரக திரைப்படம் வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்கள் பழைய புது படங்கள் அனைத்தும் கிடைக்கும்.
சண்டே பஜார்:
புதுவை மகாத்மா காந்தி வீதியின் இருபுறமும் லால் பகதூர் சாஸ்திரி வீதியில் ஆரம்பித்து காமாட்சி அம்மன் கோவில் வீதி வரை சிறு கடைகள் ஞாயறு கிழமை அன்று மட்டும் முளைத்திருக்கும். நிறைய பொருட்கள் சலிசாக கிடைக்கும். Sunday மட்டுமே இருப்பதால் sunday bazar என்று அழைக்க படுகின்றது.
7.ரோமன் ரோலாந்து நூலகம்( Roman Rolland Library) :
இது புதுவை கடற்கரையின் அருகிலேயே உள்ள ஒரு அற்புதமான நூலகம். புதுவை மாணவர்கள் மற்றும் புத்தக பிரியர்களுக்கு ஒரு நல்ல இடம். அனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்கும்.
இன்னும் பல இடங்கள் உண்டு. இது நான் பார்த்து ரசித்த இடங்கள். உங்களக்கும் நேரம் கிடைத்தது என்றால் போய் பாருங்கள்..இன்னும் சில பேருக்கு சில “முக்கியமான” இடங்கள் விட்டு போய் இருக்கலாம்..கோபித்து கொள்ளாதிர்கள்..
டிஸ்கி: இது ஒரு மீள்ஸ்..
27 comments:
ஆகா.... புதுவை பற்றிய பிரமாதமான பதிவு... வாழ்த்துகள்
எங்க எங்க எங்க ஏரியாவ காணோம்?
அந்த பொருள் வாங்க சிறந்த பார் எது?
நல்ல அறிமுகம்.. நான் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று!
டேய் எல்லா பதிவையும் இந்த ப்லாக்ல போடுடா...
புதுவை பற்றி அறிமுகம் நன்று
நல்ல பதிவு வினோத்...
ஆனா புதுவை புகழ் சரக்கு மேட்டர் ஒன்னும் காணலையே............. :(
புதுவை பற்றி அவ்வளவாத் தெரியாது.. நல்ல பகிர்வு நண்பா
//டிஸ்கி: இது ஒரு மீள்ஸ்..//
ஃபுல் மீள்ஸா ?? ஹாஃப் மீள்ஸா ??
@ ஆ.ஞானசேகரன் said...
//ஆகா.... புதுவை பற்றிய பிரமாதமான பதிவு... வாழ்த்துகள்//
நன்றி நண்பா..
@பிரியமுடன் வசந்த்..
//எங்க எங்க எங்க ஏரியாவ காணோம்?
அந்த பொருள் வாங்க சிறந்த பார் எது?//
எனக்கு அதை பத்தி பெருசா ஐடியா இல்லை..ஏன்னா அந்த பக்கம் கூட நான் போனது கிடையாது.. அதை பற்றியும் அலசி ஆராய்ந்து ஒரு பதிவு போட்டுருவோம்..:)
@ ஆபிரகாம் said...
//நல்ல அறிமுகம்.. நான் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று!//
வருகைக்கு நன்றி ஆபிரகாம்..கண்டிப்பாக பாருங்கள்..
@ KISHORE said...
//டேய் எல்லா பதிவையும் இந்த ப்லாக்ல போடுடா...//
போட்ருவோம்..
@ ஆ.முத்துராமலிங்கம் said...
//புதுவை பற்றி அறிமுகம் நன்று//
நன்றி நண்பா..
@ கார்த்திகைப் பாண்டியன் said...
//புதுவை பற்றி அவ்வளவாத் தெரியாது.. நல்ல பகிர்வு நண்பா//
நன்றி நண்பா..
@ Kanna said...
//நல்ல பதிவு வினோத்...
ஆனா புதுவை புகழ் சரக்கு மேட்டர் ஒன்னும் காணலையே..//
நன்றி..நான் தான் அந்த பக்கம் கூட போக மாட்டேனு நல்லவே தெரியும்..அப்படி தெரிஞ்சும் இப்படி ஒரு கேள்வி..என்ன ஒரு வில்லத்தனம்..
//டிஸ்கி: இது ஒரு மீள்ஸ்..//
//ஃபுல் மீள்ஸா ?? ஹாஃப் மீள்ஸா ??//
முக்கா மீள்ஸ்..:)
கொய்யயயல... ,
ஹாட் & கோல்ட், டிஃபுசி, சிகல்ஸ்,
அண்ணாமலை, தனலட்சுமி போன்ற
முக்கியமான இடங்களை விட்ட
வினோத்தை,
"சரக்கடிச்சு சாயாத சங்கதில்"
இருந்து கடும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் என்பதை
"ஸ்டடியாக" சொல்லிக்கொள்கிறேன்!!
இந்த முறை போனால் நீங்க சொன்ன மத்த இடங்களையும் பார்க்கிறேன்.......
உசுடேரியை தவிர மீதி இடங்களை எல்லாம் அங்குலம் அங்குலமாக சுற்றியிருக்கிறேன். நானும் லாஸ்பேட்டையில் தான் வினோத் படித்தேன். தாகூர் கலை கல்லூரி. புதுவையை பார்த்த மாதிரியே இருந்தது. பதிவிட்டமைக்கு நன்றி
இம்புட்டு இடம் இருக்கா!
சீக்கிரம் வந்து கூப்பிட்டு போங்க தலைவா!
நாகா id
http://naga-thoughts.blogspot.com/2009/06/blog-post_10.html
@ கலையரசன்..
//ஹாட் & கோல்ட், டிஃபுசி, சிகல்ஸ்,
அண்ணாமலை, தனலட்சுமி //
இது எல்லாம் என்ன ஆப்ப கடை பெயர்களா..
@ தமிழரசி said...
//இந்த முறை போனால் நீங்க சொன்ன மத்த இடங்களையும் பார்க்கிறேன்..//
பாருங்கள் தமிழ்..இந்த இடத்திற்கு எல்லாம் செல்லும் பொழுது உடன் ஊரை பற்றி தெரிந்தவர் ஒருவரை அழைத்து சென்றால் இன்னும் சுலபமாக இருக்கும்...
@ ச.பிரேம்குமார் ..
நன்றி பிரேம்..
தாகூர்ரா நீங்கள்..மகிழ்ச்சி..:)
@ வால்பையன்..
//இம்புட்டு இடம் இருக்கா!
சீக்கிரம் வந்து கூப்பிட்டு போங்க தலைவா!//
ஆமாம் வால்ஸ்..
சீக்கிரம் வருகிறேன்..
மீண்டும் புதுவை போகும் போது பயனுள்ள தகவல்களாக இருக்கும்.நன்றி,வினோத்.
@ ஷண்முகப்ரியன்..
கண்டிப்பா போய் பாருங்கள் சார்..ஒவ்வொரு இடமும் ஒரு அனுபவம் தரும் அதுவும் எதாவது மழைக்காலத்தில் செல்லுங்கள் அந்த அனுபவம் தரும் சுகமே தனி..
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
" சில “முக்கியமான” இடங்கள் விட்டு போய் இருக்கலாம்..கோபித்து கொள்ளாதிர்கள்.."
1.சுன்னாம்பாறு படகு நிலையம்
2.வீராம்பட்டினம் கோயில் , இந்த கோயில் 150 வருட பழைமையானது . மற்றும் தேர் திருவிழா ,கோயில் எதிரே அமைந்த கடற்கரை.
3.சின்ன வீராம்பட்டின சினிமா புகழ் கடற்கரை இங்கு பல பாடல் காட்சிகள் படமாக்கபட்டுள்ளன ( உ.ம் - யாரடி நீ மோகினியில் வரும் நெஞ்சை கசைக்கி பிழிந்து விட்டு போகும் கிளியே..........)
4.புராத நகரமான அரிக்கமேடு அகழ்வாரச்சி இடம்
5.ரோமன் ரோலாந்து நூலகம் அருகில் அமைந்த வரலாற்று நினைவகம் (மிசியம்)
6. பாரதி,பாரதிதாசன், சுப்பையா நினைவு இல்லம்
7. நாடக தந்தை சமாதி
8. அரோபுட் போகும் வழியில் இருக்கும் அனுமார் கோயில்
9.ஊசுட்டெரி அருகில் அமைந்த சம்பூர்ணா தீம் பார்க்
10. பூரனாங்குப்பத்தில் உள்ள கில்மா ஓட்டல்
11.உலக புகழ் பெற்ற அபேஷகபாக்கம் நரசிமர் கோயில் மற்றும் இந்த பகுதியில் பல தலைமுறையாக செய்யும் எலும்பு முறிவுக்கான பச்சை இலை வைத்தியம்.
12.. 30க்கு மேற்பட்ட சித்தர் சமாதிகள்
13 சேழர் கால வில்லியனுர் ஆலையம்.
14. பீச்-ல் பிரன்ச் பேர் நினைவு சின்னம் பின்புரம் அமைந்துள்ள 200 பழைமையான கிருஸ்துவ சர்ச், மற்றும் மிஷின் வீதயுள்ள சம்பா கோயில்,( சிவன் கோயில் பிரஞ் ஆட்சி காலத்தில் கிருத்துவ கோயிலாக இடித்து கட்டப்பட்ட சர்ச் ஆனால் சிவன் கருவரை கீழ்தளத்தில் உள்ளதாக செவி வழி செய்தியும் பல சக்தி மிக்க பழங்கால யந்திரம் அதில் உள்ளதாக தகவல் உண்டு.
15.பீச் ரோட்டில் அமைந்த பிரஞ் தூதரகம் அருகில் உள்ள நூலகம் இதை நேரடி தூதரகம் கட்டுபாட்டில் நடைபெறுகிறது பல அறியவகை நூல்கள், ஓலை சுவடிகள் உள்ளன. இது புதுவையின் யாழ்பானநூலகம் போன்றது.
கவுதம் வேறு எதாவது விட்டு போச்சா?
தல
உண்மையில் நான் இந்த அளவுக்கு யோசிக்கவில்லை ..அவ்வளவு இடங்கள் கொடுத்து இருக்கிறிகள்..நீங்கள் ஏன் ஒரு பதிவு இட கூடாது...
இதையே நீங்க ஒரு பதிவா போட்டு இருக்கலாம்..
"இதையே நீங்க ஒரு பதிவா போட்டு இருக்கலாம்"
கவுதம் "புதுவையில் சில இடங்கள்..Part IIல் " இதை பத்தி எழுதுங்க வேறு சில இடங்கள் விட்டு இருந்தாலும்அதைப்பத்தியும சேர்த்து எழுதுங்க.
பஸ்டாண்டில் இருந்து கடற்கரை செல்லும் சாலையில் லெப்ட் நாலாவது தெருவை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..
//கவுதம் "புதுவையில் சில இடங்கள்..Part IIல் " இதை பத்தி எழுதுங்க வேறு சில இடங்கள் விட்டு இருந்தாலும்அதைப்பத்தியும சேர்த்து எழுதுங்க.//
கண்டிப்பா பதிவு பண்ணி விடுவோம் தல..
@ செந்தழல் ரவி said...
// பஸ்டாண்டில் இருந்து கடற்கரை செல்லும் சாலையில் லெப்ட் நாலாவது தெருவை பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..//
நீங்க எந்த "ஏரியா"வ பத்தி சொல்லிரங்கனு தெரியலையே..:)
சகா புதுவைன்னாலே நான் ஒரு மாதிரி ஆயிடுவேன்.. ஏன் தெரியுமா?
@ கார்க்கி said...
ஏன் சகா அப்படி எதாவது Something something..!!!
Post a Comment