நான் விரும்பி போகும் கோவில்களில் சிவன் கோவிலும் ஒன்று. மற்றகோவில்களில் கிடைக்காத ஒரு உணர்வு எனக்கு எப்பொழுதும் சிவன்கோவில்களில் கிடைக்கும். நான் சில ஊர்களில் போன சிவன் கோவில்களைபற்றிய ஒரு சின்ன தொகுப்பு தான் இது..
1.குலு மனாலி:
நான் சில வருடங்களக்கு முன்பு கல்லூரி சுற்றுலாவிற்காக குலு மனாலி சென்றுஇருந்தேன்.அருமையான ஊர். மணாலிக்கு ஒரு 20 -25 Km குலு வரும்.ஒருகாலை நேரத்தில் நாங்கள் சென்ற பஸ் குலுவில் நின்றது.அனைவரும் இறங்கிசற்று இளைப்பாறி கொண்டோம். ஒரு பக்கம் பிரமாண்டமாக ஓடும் ஆறுஇன்னொரு பக்கம் மலை. ஆற்றில் சற்று நேரம் கால் நனைத்து விட்டு வந்தேன். அந்த பக்கம் இருக்கும் மலையில் இருந்து ஒரு குடும்பம் இறங்கி வந்து கொண்டுஇருந்தது. அவர்களிடம் மேலே என்ன இருக்கிறது என்று வினாவினேன்.ஒருசிறிய சிவன் கோவில் என்றார்கள்.என் நண்பர்களை மேலே சென்று போய்பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்தேன். அவர்கள் சோர்வாக இருந்ததால் நீபோய் விட்டு வா என்றார்கள். நானும் சரி என்று விறு விறுவென்று அதற்குஅமைக்க பட்டு இருக்கும் படிக்கட்டு வழியாக மேலே ஏறி சென்றேன்.
மேலே சென்று பார்த்த பொழுது அங்கு ஒரு சிவன் கோவில் அழகாக இருந்தது. கோவிலின் உள் நுழைந்த பொழுது நான் மட்டுமே இருப்பதை உணர்ந்தேன். ஒருபூசாரி அமர்ந்து இருந்தார். நான் சிறிது நேரம் பிரார்த்தித்து விட்டு அமர்ந்தேன். அப்படி ஒரு அமைதியையை இது வரை நான் எந்த கோவிலிலும் உணர்ந்ததுஇல்லை.சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது நான் கண்ட காட்சிஇருக்கிறதே சொர்க்கம்.
ஒரு பக்கம் பார்த்தால் ஒரு பனி மலை கண்ணாடி மலை அல்லது ஸ்படிக மலைபோல் தென்பட்டது. வெள்ளி பனி மூடிய அழகான மலைசிகரங்கள்.கிழே அதல பாதாளத்தில் கங்கையின் எதோ ஒரு பிரிவு பிரமாண்டஆறாக ஓடி கொண்டு இருந்தது. உண்மையில் அது போல ஒரு இயற்கைகாட்சியை அதற்கு முன்பு நான் கண்டது இல்லை. கண்களில் உண்மையில்ஆனந்த கண்ணீர்.
ஒரு வித சிலிர்போடு பஸ்சில் வந்து அமர்ந்தேன். உண்மையில் அப்படி ஒருஅழகான தரிசனத்திற்கு என் நண்பர்கள் கொடுத்து வைக்கவில்லை என்றுநினைத்து கொண்டேன்.
2.கும்பேஸ்வரன் கோவில் ( கும்பகோணம் ) :
நான் கும்பகோணத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது அடிக்கடிசெல்லும் கோவில். ஊரே கோவில் மயம் தான் என்றாலும் நான் விரும்பிசெல்லும் கோவில் இதுவும் சுவாமி மலையும். கோவிலின் ஸ்தல புராணங்கள்எனக்கு அத்துப்படி இல்லை என்றாலும் அந்த சிவலிங்கம் ராஜ ராஜ சோழனால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று நண்பர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். மிகவும் சக்தி வாய்ந்த கோவில். நான் வாரத்தில் இரு தடவை கண்டிப்பாக சென்றுவிடுவேன். என் பெரியப்பா முறை உறவுக்காரர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். அவர் கூட சந்தேகமாக கேட்பார்.."என்னபா அடிக்கடி கோவிலுக்கு போற என்னவிஷயம் என்று"..உண்மையில் எனக்கு சிவன் மேல் இருந்த ஈர்ப்பு மட்டுமேஅதற்கு காரணம்..
3. பேரூர் ( கோவை ) :
ஒரு வேண்டப்படாத காலத்தில் ஒரு வேதனையான சூழலில் கோவை சென்றுஇருந்த பொழுது ஒரு நண்பருக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை..அவர்வருவதற்கு நேரம் ஆகும் என்பதாலும்..கோவையில் எனக்கு வேறு யாரையும்தெரியாது என்பதாலும்..மருதமலை அதற்கு முன்பே போய் விட்டேன்என்பதாலும்..பேரூர் சிவன் கோவில் போய் வரலாம் என்று முடிவு எடுத்துகாந்திபுரத்தில் இருந்து பஸ்சில் ஏறி கோவிலுக்கு சென்றேன்.அதுவும் அழகானகோவில் இருந்தாலும் வேதனையில் இருந்த எனக்கு அந்த கோவில் சென்றபொழுது மிகவும் ஆறுதலாக இருந்தது. மீண்டும் ஒரு இக்கட்டான சுழ்நிலையில்சிவன் என்னை அரவனைததை போல் உணர்ந்தேன். மறக்க முடியாத சூழலில்மறக்க முடியாத தரிசனம்.
4.வேதபுரிஸ்வரர் கோவில் ( புதுவை ) :
நான் மிக அதிகமாக சென்ற கோவில். பெரும்பாலும் நண்பர்களோடு செல்வேன். அதுவும் பிரதோஷ சமயங்களில் ஊரில் இருந்தால் கண்டிப்பாக கோவில் செல்லமுயற்சி எடுப்பேன். அழகான கோவில். மனச்சோர்வு ஏற்ப்பட்ட பல சமயங்களில்என்னை தேற்றி விட்ட கோவில். இதுவும் சமிப கால வரலாறு கொண்ட கோவில்தான்.அதுவும் என் அம்மாவோடு சென்றால் வெளியே வருவதற்கு ஒரு மணிநேரம்மாவது ஆகி விடும். அந்த அளவுக்கு சிவபக்தை. என்ன களைப்புடன்வேலையில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் மிக தீவிரமாக பல சமயங்களில்கோவிலுக்கு கிளம்புவார்கள் என் அம்மா. அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைஏற்படுத்தும்.
அந்த அளவுக்கு நான் தீவிர பக்திமான் இல்லை என்றாலும் எனக்கும் சிவனுக்கும்எப்பொழுதும் ஒரு நுட்பமான உணர்வு இருப்பதாய் போல பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன்..
62 comments:
arumai...yen thanthai kovil thurayil pani atriyathal niraya kovilhalukku sella vaipu kedaithathu...eppoluthume Sivan kovilhalil oru thanimayum andavonodu oru pidippum unarthirukkiren yen enru theriya villai.. athey pol sivan kovilhalil enakku ithu venum athu venum endru ketka thonravillai..valibadum antha nimida ananthame pothum enrirukirathu..
நல்லதொரு பகிர்வு...
என் நண்பன் கமலக்கண்ணனை நினைவுபடுத்தியது
உங்கள் பதிவு.
அவனும் ஒரு முரட்டு சிவபக்தன்..
அவனோடு பல தடவை நானும் சிவதலங்களுக்கு போயிருக்கிறேன்.
பழைய விசயங்கள் பல
நினைவுக்கு வருகின்றது
இதை படித்ததும்.
தற்போது அமிரகத்தில்???
என்ன செய்வது.
தஞ்சை பிரகதீஸ்வரரை தரிசித்தது
இல்லையா?
சிவனை பிடிகலனாலும் உங்க பதிவை பிடிச்சிருக்கு...
வாழ்த்துகள்
நன்றி
ம்ம்ம்... புள்ள கோவிலுக்கு எல்லாம் போது ...சிதம்பரம் கோவிலுக்கு போய் இருக்கீங்களா? தஞ்சாவூர் கோவிலுக்கு?
Repost Vinoth Gowtham,ur faith of Sivan is good.
//நாகா said...
ஹூம்.. அப்போ கோவைல யாரோ இருக்காங்க போல. Anyway உங்களை அந்த சிவன் தான் காப்பாற்றணும்.. :)//
டேய் யாருடா அது எனக்கு தெரியாம? இதுக்கு தான் வேல இருக்கு வேல இருக்குனு போனியா?
நான் தீவிர பக்திமான் இல்லை என்றாலும் எனக்கும் சிவனுக்கும்எப்பொழுதும் ஒரு நுட்பமான உணர்வு இருப்பதாய் போல பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன்..
எனக்கும் பல சமயங்களில் இதே போன்று தோன்றியுள்ளது வினோத்
ஒரு பக்கம் பார்த்தால் ஒரு பனி மலை கண்ணாடி மலை அல்லது ஸ்படிக மலைபோல் தென்பட்டது. வெள்ளி பனி மூடிய அழகான மலைசிகரங்கள்.கிழே அதல பாதாளத்தில் கங்கையின் எதோ ஒரு பிரிவு பிரமாண்டஆறாக ஓடி கொண்டு இருந்தது. உண்மையில் அது போல ஒரு இயற்கைகாட்சியை அதற்கு முன்பு நான் கண்டது இல்லை. கண்களில் உண்மையில்ஆனந்த கண்ணீர்.
நீங்கள் விவரித்து உள்ள விதம் எங்கள் மனக்கண் முன் அந்த இயற்கை சூழலை கொண்டு வருகின்றது ....
அருமை
திரு வினோத் கெளதம்,
உங்களின் பதிவு போலித்தனம் இல்லாத உங்களின் இதய உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
கோவிலை பற்றி கூறாமல்,ஆன்மீக விஷயங்களை ஜோடிக்காமல் கோவிலில் உங்களுக்கு ஏற்பட்டதை விவரித்திருக்கும் பாங்கு அருமை.
நம்மலான்டையும் இது போல நிறைய மேட்டர் இருக்கு... அது எல்லாம் இங்க சொல்லபோறேன்
http://maargalithingal.blogspot.com/
திருச்சிற்றம்பலம் -:)
நான் கும்பகோணத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த பொழுது அடிக்கடிசெல்லும் கோவில். ஊரே கோவில் மயம் தான் என்றாலும் நான் விரும்பிசெல்லும் கோவில் இதுவும் சுவாமி மலையும்..////
நானும் இந்த கோவில்கள் சென்றுள்ளேன்!!
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
-------------------------------
பல நாடுகளில் சிவன் கோவில்கள்
-------------------------------
* சுமத்திராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்திசிலை உள்ளன.
* சியாம் நாட்டிலும் கம்போடியாலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது.
* போர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன் சிலை உள்ளது.
* பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வராய்ச்சியில் 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயங்களும் சிவாலயத்தின் வழிபாடுகளும் கிடைத்துள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் சிவன் என்ற பெயர் காணப்படுகிறது.
* சிரியா நாட்டில் சிவன் சிலையும் சிவன் உருவமும் பொறித்த வெண்கலத் தட்டும் கிடைத்துள்ளன. இத்தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர்.
* ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் உள்ளன.
* எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர் வழங்கி வருகிறது.
* கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களை பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர்.
* இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருவுருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகின்றது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அருமை பகிர்வு "ஸ்வாமி கொளதம் ஜி" அவர்களே, மேலும் பல சிவன் கோவில்களுக்கு சென்று வர வாழ்த்தும், ஆசீர்வாதமும்!
வணக்கம் வினோத் , உங்கள் அனுபவம் மிக நன்றாக எழுத்தில் வந்திருக்கிறது ...வாழ்த்துக்கள்
வினோத் பற்றி ஒரு சிறு தகவல்...
குழந்தைல இருந்தே அவனுக்கு கடவுள் பக்தி அதிகம்... வழில ஒரு கல்ல வச்சி குங்குமம் வச்சி இருந்தா கூட கன்னத்துல போட்டுப்பான் ... பாக்கு போடுறது முதல் அபின் ,கஞ்சா அடிக்கிற வரைக்கும் எல்லா பழக்கமும் இருந்தாலும்.. கோவிலுக்கு போகனும்னா போது.. அந்த அளவுக்கு சுத்தமா மாறிடுவான்.. கடவுளுகே சில சமயம் சந்தேகம் வந்துடும் இவன் தானான்னு... கடவுள் விஷயத்துல அவன் ஒரு ஆன்மீக அரசன்...
Wow machan super Travel experience athai alagha post seithu engalodu share seithathrukku nandri da ;)
@ Karna..
//eppoluthume Sivan kovilhalil oru thanimayum andavonodu oru pidippum unarthirukkiren yen enru theriya villai.. //
வருகைக்கு நன்றி கர்ணா..
நிறையா கோவிலுக்கு சென்று இருக்கிங்களா..அதுவெல்லாம் ஒரு கொடுப்பினை..
அதே தான் எனக்கும் சிவன் கோவிலில் என்னை அறியமால் மனம் ஒரு பக்தியில் மூழ்கி விடும்..தானாக கடவுள் மீது என்னையும் மீறி ஒரு ஈடுப்பாடு வந்து விடும்..
வினு ரொம்ப நல்லாயிருக்கு திருத்தலங்கள் சுற்றுலா போன மாதிரியிருக்கு இந்த பதிவு அந்த சிவன் படம்.............ரொம்ப அம்சமாயிருக்கு.....
@ Sarathy..
//நல்லதொரு பகிர்வு...//
நன்றி நண்பா..
//பழைய விசயங்கள் பல
நினைவுக்கு வருகின்றது
இதை படித்ததும்.//
:))
//தற்போது அமிரகத்தில்???
என்ன செய்வது.//
இது தான் நம் நேரம் நண்பா..நான் ஊரில் இருக்கும் பொழுது கோவில்களில் மட்டுமே வழிப்பட்டு வழக்கம்..
அனால் இங்கு சிறிய அறையில், புகைப்படத்தில் அது இன்னமோ என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..சாமி கும்பிடுவதே இல்லை..நினைத்து பார்பதோடு சரி..
கோவிலில் இருக்கும் அந்த மன ஈடுப்பாடு..அது வேறு..
//தஞ்சை பிரகதீஸ்வரரை தரிசித்தது
இல்லையா?//
இரண்டு தடவை போய் இருக்கிறேன்..ஆனால் இரண்டு தடவையும் வழிப்பட்ட நேரம் குறைவு தான்..ஒரு முறை அதற்கு என்று தனியாக செல்ல வேண்டும்..
@ என் பக்கம்..
// உங்க பதிவை பிடிச்சிருக்கு...
வாழ்த்துகள்
நன்றி//
நன்றி பிரதீப்..
@ Muniappan Pakkangal..
//Repost Vinoth Gowtham,ur faith of Sivan is good.//
Thanks sir..Always Itz a pleasure to remember such things..
@ sakthi..
//எனக்கும் பல சமயங்களில் இதே போன்று தோன்றியுள்ளது வினோத்//
நிறையா பேருக்கு அப்படி தான் இருக்கு..ஆச்சரியம்..:)
//நீங்கள் விவரித்து உள்ள விதம் எங்கள் மனக்கண் முன் அந்த இயற்கை சூழலை கொண்டு வருகின்றது ....
அருமை//
நன்றி சக்தி..
@ ஸ்வாமி ஓம்கார்
திரு வினோத் கெளதம்,
//உங்களின் பதிவு போலித்தனம் இல்லாத உங்களின் இதய உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.சுவாமிஜி..
//கோவிலை பற்றி கூறாமல்,ஆன்மீக விஷயங்களை ஜோடிக்காமல் கோவிலில் உங்களுக்கு ஏற்பட்டதை விவரித்திருக்கும் பாங்கு அருமை.//
மறுபடியும் நன்றிகள் பல..
ஆன்மிக விஷயங்களில் நீங்கள் ஆற்றி வரும் பணி மேன்மேலும் வளர வேண்டும் எனபதே என்னை போன்ற சிறியவனின் ஆசை..
@ பித்தன்..
//நம்மலான்டையும் இது போல நிறைய மேட்டர் இருக்கு... அது எல்லாம் இங்க சொல்லபோறேன்..
http://maargalithingal.blogspot.com//
பித்தா உன் பதிவுகள் கடல் போன்றது..
இன்னும் நிறையா எதிர்ப்பார்கிறேன்..
@ Thevanmayam..
//நானும் இந்த கோவில்கள் சென்றுள்ளேன்!!//
ஆமாம் சார் கும்பகோணத்தில் அணைத்து கோவில்களும் தரிசிக்க வேண்டியவை..
@ கலையரசன்..
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
தகவல் களஞ்சியமே..
அது எப்படி எந்த மைதானமாக இருந்தாலும் ஏறி வந்து சிக்ஸர் அடிக்கிற..எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி கொடு..:)
@ அது ஒரு கனாக் காலம்..
//வணக்கம் வினோத் , உங்கள் அனுபவம் மிக நன்றாக எழுத்தில் வந்திருக்கிறது ...வாழ்த்துக்கள்//
வணக்கம் சுந்தர் சார்,
ரொம்ப நன்றி..
@ Suresh..
//Wow machan super Travel experience athai alagha post seithu engalodu share seithathrukku nandri da ;)//
நன்றி மச்சி..:))
@ தமிழரசி..
//வினு ரொம்ப நல்லாயிருக்கு திருத்தலங்கள் சுற்றுலா போன மாதிரியிருக்கு இந்த பதிவு அந்த சிவன் படம் ரொம்ப அம்சமாயிருக்கு//
ரொம்ப நன்றி தமிழ்..சிவன் படம் பதிவில் முழுமையாக வரவில்லை..
மிகவும் அருமையான படம் அது..
எல்லாக் கோவில்களுக்கும் மூலமான ஆதிச் சிவன் கோவில் என்று காஞ்சிப் பெரியவரால் கூறப் படும் திருவண்ணமலையானைத் தர்சித்ததில்லையா,வினோத் நீங்கள்?
@ kISHORE..
//ம்ம்ம்... புள்ள கோவிலுக்கு எல்லாம் போது ..//
எதோ அப்ப அப்ப சமயம் கிடைக்குரப்ப போறது தான்..
//சிதம்பரம் கோவிலுக்கு போய் இருக்கீங்களா? தஞ்சாவூர் கோவிலுக்கு?//
ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் போய் இருக்கிறேன்..
//டேய் யாருடா அது எனக்கு தெரியாம? இதுக்கு தான் வேல இருக்கு வேல இருக்குனு போனியா?//
நான் எத்தனை தடவை கோவை போய் இருக்கனு சொல்ல வரிங்க..
//பாக்கு போடுறது முதல் அபின் ,கஞ்சா அடிக்கிற வரைக்கும் எல்லா பழக்கமும் இருந்தாலும்.. //
இது மட்டும் தான இன்னும் சொல்ல வேண்டியது எதாவது பாக்கி உள்ளதா..
Delete பண்ணாலும் அப்புறம் அதுக்கு வேற லபோ திபோன்னு வந்து அடிச்சிப்ப..
//கடவுள் விஷயத்துல அவன் ஒரு ஆன்மீக அரசன்...//
கண்ணை கட்டுகின்றதே..
//சிதம்பரம் கோவிலுக்கு போய் இருக்கீங்களா? தஞ்சாவூர் கோவிலுக்கு?//
//ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் போய் இருக்கிறேன்..//
ஆயிரம் அர்த்தம் சொல்லும் அழகிய வார்த்தை...
//நான் எத்தனை தடவை கோவை போய் இருக்கனு சொல்ல வரிங்க..//
வேல இருக்குன்னு போனன்னு சொனேன் நீ கோவைக்கு போனான சொனேன்?
//இது மட்டும் தான இன்னும் சொல்ல வேண்டியது எதாவது பாக்கி உள்ளதா..
Delete பண்ணாலும் அப்புறம் அதுக்கு வேற லபோ திபோன்னு வந்து அடிச்சிப்ப..//
இப்படி எல்லாம் சொன்னா நீ நல்லவன்னு இந்த உலகம் நம்பும்னு எதிர்பாக்குற ... உன் ஆசை ஏன் கெடுக்கணும் ? டெலிட் பண்ணிடு
@ ஷண்முகப்ரியன் said..
//எல்லாக் கோவில்களுக்கும் மூலமான ஆதிச் சிவன் கோவில் என்று காஞ்சிப் பெரியவரால் கூறப் படும் திருவண்ணமலையானைத் தர்சித்ததில்லையா,வினோத் நீங்கள்?//
நான் பல முறை சென்று இருக்கிறேன் சார்..
திருவண்ணமலை பக்கத்தில் தான் படித்தேன்..
அது ஏன்னோ அந்த மண்ணில் கால் வைக்கும் பொழுதே எனக்கு ஒரு Vibration ஏற்ப்படும்..
இதை நான் உணர்ச்சி வசப்பட்டு சொல்லவில்லை..உண்மையில் சொல்கிறேன்..
மற்ற ஊர்களில் எல்லாம் கோவில் உள் மட்டுமே ஏற்ப்படும் அந்த தாக்கம்..அந்த ஊரில் எல்லா இடங்களிலும் உணர்ந்து இருக்கிறேன்..ஒரு வேளை அங்கு இருக்கின்ற சூழ்நிலை ஏற்ப்படுத்திய பாதிப்பா என்று தெரியவில்லை..!!
சில முறை கிரிவலம் கூட போய் இருக்கிறேன்..அப்புறம் ஊரில் இருந்தவரை நிறைய தடவை கார்த்திகை தீபம் அன்று குடும்பத்தோடு சென்று இருக்கிறேன்..
வால்பாறைல ஒரு கோவிலுக்கு கூட்டிகிட்டு போனல..அது என்ன கோவில்..?
@ Kishore..
//இப்படி எல்லாம் சொன்னா நீ நல்லவன்னு இந்த உலகம் நம்பும்னு எதிர்பாக்குற ... உன் ஆசை ஏன் கெடுக்கணும் ? டெலிட் பண்ணிடு//
இப்ப என்ன சொல்ல வர ..ஆமாங்க நான் கெட்டவன் தான் அப்படின்னு உன் ஆசைக்கு அடுத்து ஒரு பதிவு போட்டுறேன்..
//வால்பாறைல ஒரு கோவிலுக்கு கூட்டிகிட்டு போனல..அது என்ன கோவில்..?//
பாலாஜி கோவில்..
நல்ல அனுபவப் பகிர்வு.
நன்றி.
http://www.youtube.com/watch?v=Te1dMYRWXOc
பதிவு நன்றாக இருந்தது. குளு மனாலி பயணத்தில் சென்ற கோவிலின் புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன்.
நல்ல உங்களின் அனுபவம்,
நல்ல பகிர்வு
@ Kathir..
// நல்ல அனுபவப் பகிர்வு.
நன்றி.//
நன்றி கதிர்..அந்த சலங்கை ஒலி வீடியோ ..!!
//பதிவு நன்றாக இருந்தது. குளு மனாலி பயணத்தில் சென்ற கோவிலின் புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன்.//
நன்றி நண்பா..ஆனால் என்னிடம் புகைப்படம் எதுவும் இல்லை..எல்லாம் நண்பர்கள் காமெராவில் எடுத்தது..அதுவும் அப்பொழுது டிஜிட்டல் கேமரா இல்லை..பிலிம் ரோல்..
@ ஆ.ஞானசேகரன் said...
//நல்ல உங்களின் அனுபவம்,
நல்ல பகிர்வு//
நன்றி நண்பா..
சிவனின் திருவிளையாடல்...!
நல்ல அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள் கௌதம்.
சிவன்..
என் அப்பனுக்கே அப்பன்..!
வணங்குகிறேன்..!
@ ஆ.முத்துராமலிங்கம்..
நன்றி நண்பா..
@ உண்மைத் தமிழன்..
//சிவன்..
என் அப்பனுக்கே அப்பன்..!
வணங்குகிறேன்..!//
வருகைக்கு நன்றி முருகா..
மும்மையில் கல்யாணுக்கு அடுத்து அம்பர்நாத் என்றொரு இடம் உண்டு. அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் மலையில் ஒரு சிவன் கோவில் உண்டு, சிலை கிடையாது ஒரு சிறு லிங்கம் மட்டுமே உண்டு. ஆன்மீகத்தை விட்டு இன்று வெகுதூரம் வந்துவிட்டாலும் அந்த இடம் ஒரு அற்புதமான உணர்வை தந்த இடம் என்பதை மறக்க முடியாது. நீங்களே வழிபடலாம், பூஜைகள் செய்யலாம், கட்டித் தழுவிக்கொள்ளலாம். ஒரு வேளை அதனால்தான் அந்த இடம் பிடித்ததோ என்னவோ.
எல்லாம் சிவ மயம்
எல்லாம் சிவ மயம்
எல்லாம் சிவ மயம்
ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்
@ முத்துகுமரன்..
//மும்மையில் கல்யாணுக்கு அடுத்து அம்பர்நாத் என்றொரு இடம் உண்டு. அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் மலையில் ஒரு சிவன் கோவில் உண்டு, //
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க முத்துகுமரன்..
சந்தர்ப்பம் அமையும் பொழுது செல்ல வேண்டும் என்பது தான் ஆசை..
@ பிரியமுடன்..வசந்த்..
நன்றி வசந்த்..
@ SUREஷ் (பழனியிலிருந்து)..
//ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்//
நன்றி தல..
பாண்டிச்சேரிக்கு எப்போ போலாம்னு சொல்லுங்க!
நல்ல பகிர்வு மற்றும் பதிவு.
சிவன் கோவிலில் கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிடைப்பதில்லை .
அன்புடன்,
பாஸ்கர் .
@ வால்பையன் said...
//பாண்டிச்சேரிக்கு எப்போ போலாம்னு சொல்லுங்க!//
வால்ஸ் ஜூலை கடைசி வாரம் தொடங்கி ஒரு மாதம் ஊரில் இருப்பேன்..அப்பொழுது கண்டிப்பாக..
@ அருப்புக்கோட்டை பாஸ்கர்..
//சிவன் கோவிலில் கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிடைப்பதில்லை //
ஆமாம் நண்பா உணர்வுகள் பல சமயங்களில் பல பேரோடு ஓன்று படுகிறது..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
நல்லதொரு பகிர்வு...
நண்பா
Post a Comment