Saturday, December 12, 2009

உலக சினிமாவும், உள்ளூர் சினிமாவும்.

உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும்..

http://ecx.images-amazon.com/images/I/41V9VCY174L._SL500_AA240_.jpg

உலக சினிமா..உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்க..நம்ம தமிழ் சினிமாவை பற்றி பேசுனாலே டெரரா பாக்குறாங்க
..நானும் சரி உலக சினிமா உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்களே ''அதுல'' அப்படி என்ன தான் இருக்குனு சில உலகசினிமாக்களை பார்த்தேன்.. நம்ம ஊரு சினிமாவுக்கும் அந்த "உலக" சினிமாவுக்கும் உள்ள வேறுப்பாடுகளை முடிந்தவரை பட்டியலிட்டுள்ளேன் ..

நம்ம ஊரு
சினிமா: ஹீரோ படத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல மூச்சே விடாமடயலாக் பேசுறதை காட்டுவாங்க..
உலக சினிமா: ஹீரோ மூச்சு பிடிக்கறதை மட்டும் பத்து நிமிஷம் "க்ளோஸ்-அப்" காட்டுவாங்க..அதுக்கு அப்புறம் தான் அவரு வசனமே பேச ஆரம்பிபாரு.(படத்துல டயலாக் எல்லாம் கம்மியா தான் இருக்கும்..எல்லாமே "உணர்வுபூர்வமான" வெளிப்பாடுகள் தான்)

நம்ம சினிமா: எதாச்சும் சில கதாபாத்திரங்கள் புரிஞ்சிக்கவே முடியாத,எந்தசமயத்துல எதாச்சும் ஏடாகூடமா லூசுத்தனமா பண்ணப்போறன்களோ என்பதைபோல் இருப்பார்கள்.
உலக சினிமா: இங்க பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் "அதேமாதிரி" தான் அலைந்துகொண்டு இருக்கும்.

நம்ம சினிமா : பாட்டு ஃபைட்ன்னு இசை நம்ம காதுல கடைசி வரைக்கும் "நங்குநங்கு"ன்னு வந்து விழும்.
உலக சினிமா: ஒரு உடைஞ்சப்போன வயலின் இசை படம் முழுவதும் கூடவே வந்துக்கிட்டு இருக்கும். இசையமப்பாளர் எதோ "கருமாதிக்கு" வாசிக்கிற மூட்லையே கடைசி வரைக்கும் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு.

நம்ம சினிமா: குடும்பத்தோடு பார்க்கிறப்ப சில இடங்களில் கொஞ்சம்பயந்துக்கொண்டே இருக்க வேண்டும்..எதாவது "ஏடக்கூட" காட்சிகள் வந்துவிடபோகிறதோ என்று.
உலக சினிமா: இங்க எந்நேரமும் கையுல ரிமோட்டை கெட்டிய புடிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்கணும்..கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும்..வீட்டுல பார்த்தோம் அப்படிங்கிற பட்சத்தில் நம்ம கதை முடிஞ்சது.

நம்ம சினிமா: படம் முடியறதுக்கு முன்னாடியே எழுந்து வீட்டுக்கு ஓடுறதுக்கு தயாரா இருப்போம்..ஏன்னா படம் முடிய போகுதுன்னு முன்னாடியே யூகித்து வைத்து இருப்போம்..
உலக சினிமா: இங்க "ரோலிங் டைட்டில்" போட்ட தான் "ஓஹோ, படம் முடிஞ்சிருச்சா" அப்படிங்கிறதே தெரியும்..ஏன்னா "கதை" அந்த அளவுக்கு தெள்ள தெளிவா இருக்கும்.

நம்ம சினிமா: மத்தவங்க எல்லாம் ஆடுவாங்க..ஓடுவாங்க..கேமரா மட்டும் ஒரே இடத்தில நிற்கும்
( விஜயகாந்த் படத்தில் வரும் பாடல் காட்சிகளை தவிர்த்து..அவர் பட பாட்டுல மட்டும் தான் அவரோடு சேர்ந்து காமெராவும் ஆடும்..உதாரணம்: "உன்ன நினைச்சேன் நான் உன்ன நினைச்சேன்" பாட்டு)
உலக சினிமா: இங்க மத்தவங்க எல்லாம் ஒரே இடத்தில நின்னாலும்..கேமரா மட்டும் "குளிர் ஜுரம்" வந்த மாதிரி நடுங்கிகிட்டே இருக்கும் .


இப்ப உலக சினிமா ரசிகர்களையும், நம்ம ஒரு சினிமா ரசிர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டை பார்ப்போம்:

http://www.ajithfans.com/article-uploads/2007/12/billa-tamilcinema-fans.jpg

நம்ம சினிமா ரசிகர்கள்
: தியேட்டர்ல ஆடுவாங்க, பாடுவாங்க, ஓடுவாங்க, சத்தமா சிரிப்பாயிங்க
..ஒரு "உணர்ச்சி மிகுதில" தான் எப்பொழுதும் இருப்பார்கள்..
உலக சினிமா ரசிகர்கள்: எந்த உணர்ச்சியும் காட்டமா கடைசி வரைக்கும் "கட்டிப்போட்ட" மாதிரியே உக்கார்ந்து இருப்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டம் தான்.
உலக சினிமா ரசிகர்கள்: அந்த மாதிரி நடிகர்களின் போஸ்டரை பார்த்தாலே "டாரு டாரை கிழித்து'' தொங்கவிட்டு விடுவார்கள்.

நம்ம ரசிகர்கள்
: பெரும்பாலும் ஒரு "எடக்கூடமாய்" காட்சி வந்தால் உள்ளே ரசித்தாலும் பிடிக்காத மாதிரி வெளியே காட்டி கொள்வார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: தமிழ் படங்களில் எதாவது "அதே மாதிரி" காட்சி அமைப்புகள் வந்தால் "வக்கிரம்" என்று சொல்லிவிட்டு..கிட்டதட்ட "உறவுகளையே" வக்கிரமாக சித்தரிக்கிற "உலக படங்களை" "கலைப்படங்கள்" என்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: ஆனந்த விகடன், குமுதம், கேபிள் சங்கர் அவர்களின் "தமிழ்ப்பட" விமர்சனங்களை படித்துவிட்டு ஓடியே போய் விடுவார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: IMBD, Rotten tomatoes என்று இரவெல்லாம் "கண் விழித்து" ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.
சுருக்கமா

நம்ம சினிமா ரசிகர்கள்
கே.எஸ்.ரவிக்குமார் பட "ஹீரோ" மாதிரினா
உலக சினிமா ரசிகர்கள் செல்வராகவன் பட "ஹீரோ" மாதிரிங்க ..

டிஸ்கி: சும்மா ஒரு "இதுவா" தான் எழுதி இருக்கேன் யாராவது "அதுவா" எடுத்துக்க போறீங்க..


20 comments:

கலையரசன் said...

ஆரரரரராய்ச்சி...? ம்?

சில பாயின்ட் படிக்க அருமை!
சில பாயின்ட் படிக்க வேணும் பொறுமை!!

டிஸ்கியில நன்றி ஹாலிவுட் பாலான்னு போட்டியிருக்கனும்... பின்ன? உன்னை எல்லாம் உலக சினிமாவை பார்க்க வைச்சு, ஒரு பதிவுக்கான மேட்டரை ரெடி பண்ணி குடுத்த மகான்டா அவரு!!

கலையரசன் said...

அடுத்தது என்னா மச்சி...?

உலக ஹனிமாவும்!... உள்ளூர் முனிமாவும்!! -மா?

ஆ.ஞானசேகரன் said...

//டிஸ்கி: சும்மா ஒரு "இதுவா" தான் எழுதி இருக்கேன் யாராவது "அதுவா" எடுத்துக்க போறீங்க.. //

ஓஒ... இதுவா!

Prabhu said...

டிஸ்கியில நன்றி ஹாலிவுட் பாலான்னு போட்டியிருக்கனும்... பின்ன? உன்னை எல்லாம் உலக சினிமாவை பார்க்க வைச்சு, ஒரு பதிவுக்கான மேட்டரை ரெடி பண்ணி குடுத்த மகான்டா அவரு!!////

இப்படி பாலாவ பெரிய ஆள் ஆக்கிடாதீங்க... ஹி... ஹி... அவரு ஹாலிவுட் படம் மட்டும்தான். நோ உலகம்ஸ். பட்டர்ப்ளை சூர்யாதான் இதெல்லாம்.

பாலா, ஹாலிவுட் விஜய் படங்களை போடுறார்னு தப்பான பிரசாரம் பண்ணி அவரை இங்கே ஓட்டுவதை என் கடமையாக எடுத்து கொள்கிறேன்.

Prabhu said...

ஹா... ஹ..... எப்புடிய்யா இப்படியெல்லாம் யோச்சிக்கிறீங்க!

சென்ஷி said...

//
டிஸ்கியில நன்றி ஹாலிவுட் பாலான்னு போட்டியிருக்கனும்... பின்ன? உன்னை எல்லாம் உலக சினிமாவை பார்க்க வைச்சு, ஒரு பதிவுக்கான மேட்டரை ரெடி பண்ணி குடுத்த மகான்டா அவரு!!//

அப்படியே கார்த்திக் பேரையும் கோர்த்துக்கோ மச்சி :-)

ஷண்முகப்ரியன் said...

நம்ம சினிமா: படம் முடியறதுக்கு முன்னாடியே எழுந்து வீட்டுக்கு ஓடுறதுக்கு தயாரா இருப்போம்..ஏன்னா படம் முடிய போகுதுன்னு முன்னாடியே யூகித்து வைத்து இருப்போம்..
உலக சினிமா: இங்க "ரோலிங் டைட்டில்" போட்ட தான் "ஓஹோ, படம் முடிஞ்சிருச்சா" அப்படிங்கிறதே தெரியும்..ஏன்னா "கதை" அந்த அளவுக்கு தெள்ள தெளிவா இருக்கும்.

ஹா!ஹா! சூப்பர்,வினோத்.

என்னைப் பொறுத்தவரையில் எப்படி குழந்தைகளில் உலகக் குழந்தை,உள்ளூர்க் குழந்தை என்பது இல்லையோ அதே போல் சினிமாவிலும் உள்ளூர்,உலகம் என்றெல்லாம் லேபிள்களை ஒட்டுவது நான் ஒவ்வாத ஒன்று.

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு....வேலைவெட்டி இல்லைன்னா என்னமா யோசிக்கிறீங்கப்பா :))

//சில பாயின்ட் படிக்க அருமை!
சில பாயின்ட் படிக்க வேணும் பொறுமை//

அதே அதே!

kishore said...

சரியா சொன்ன மச்சி.. ஆனா.. நீ சொன்னா மட்டும் யாரு கேக்க போறா ? முதல்ல இந்த "கலை" பயல திருந்த சொல்லு.. என்னை பொறுத்த வரைக்கும் உலக சினிமானா அது.. "பிட்டு " படம் தான் .. சரி மச்சி.. பிரண்ட் ஒருத்தன் ஒரு உலக சினிமா குடுத்தான்.. நான் பாக்க போறேன்.. வர்ட்டா..

kishore said...

டேய் எவண்டா எங்க அண்ணன் " ஹாலிவுட்பாலா "வை தப்பா பேசுறது..? பாலா அண்ணா இவனுங்க்ளுகாகவே யாருக்கும் புரியாம தொடர்ச்சியா "மிக்ஸ்சர் " பத்தி 10 பதிவு எழுதுங்க அண்ணா.. அப்போ தான் அடங்குவனுங்க..

Thenammai Lakshmanan said...

//நம்ம சினிமா : பாட்டு ஃபைட்ன்னு இசை நம்ம காதுல கடைசி வரைக்கும் "நங்குநங்கு"ன்னு வந்து விழும்.
உலக சினிமா: ஒரு உடைஞ்சப்போன வயலின் இசை படம் முழுவதும் கூடவே வந்துக்கிட்டு இருக்கும். இசையமப்பாளர் எதோ "கருமாதிக்கு" வாசிக்கிற மூட்லையே கடைசி வரைக்கும் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு.

நம்ம சினிமா: குடும்பத்தோடு பார்க்கிறப்ப சில இடங்களில் கொஞ்சம்பயந்துக்கொண்டே இருக்க வேண்டும்..எதாவது "ஏடக்கூட" காட்சிகள் வந்துவிடபோகிறதோ என்று.
உலக சினிமா: இங்க எந்நேரமும் கையுல ரிமோட்டை கெட்டிய புடிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்கணும்..கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும்..வீட்டுல பார்த்தோம் அப்படிங்கிற பட்சத்தில் நம்ம கதை முடிஞ்சது.//

வினோத் இந்த ரெண்டு பாயிண்ட்டுமே சூப்பர்ப்

ரொம்பக் கரெக்ட் :-)))

வினோத் கெளதம் said...

@ கலையரசன் ..

//சில பாயின்ட் படிக்க அருமை!
சில பாயின்ட் படிக்க வேணும் பொறுமை!! //

இது என்ன T.R கம்மென்ட் மாதிரி இருக்கு

//உன்னை எல்லாம் உலக சினிமாவை பார்க்க வைச்சு, ஒரு பதிவுக்கான மேட்டரை ரெடி பண்ணி குடுத்த மகான்டா அவரு!!//

உலக சினிமா மட்டுமா பார்க்க வச்சாரு..பல "கண்களை விட்டு அகலா காவியங்களை" அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சேரும்..

//உலக ஹனிமாவும்!... உள்ளூர் முனிமாவும்!! -மா?//

இல்லை "உலக அழகியும்..உள்ளூர் கிழவியும்"..

@ ஆ.ஞானசேகரன் ..

//ஓஒ... இதுவா!//

அதே தான் தல..

@ pappu ..

//பாலா, ஹாலிவுட் விஜய் படங்களை போடுறார்னு //

ஊய்..யார பார்த்து என்ன வார்த்தை சொன்ன க்கிச்சுருவேன் கீச்சு..:)

//ஹா... ஹ..... எப்புடிய்யா இப்படியெல்லாம் யோச்சிக்கிறீங்க!//

அதுவா வருதுப்பா..

வினோத் கெளதம் said...

@ சென்ஷி..

//அப்படியே கார்த்திக் பேரையும் கோர்த்துக்கோ மச்சி :-)//

என் குரு இல்லாமலா..

//என்னைப் பொறுத்தவரையில் எப்படி குழந்தைகளில் உலகக் குழந்தை,உள்ளூர்க் குழந்தை என்பது இல்லையோ அதே போல் சினிமாவிலும் உள்ளூர்,உலகம் என்றெல்லாம் லேபிள்களை ஒட்டுவது நான் ஒவ்வாத ஒன்று.//

அதே தான் சார் என் கருத்தும்..ஆனால் சிலர் "நம் வீடு குழந்தையை" திட்டும் பொழுது எரிச்சலாக வருகிறது..

//வேலைவெட்டி இல்லைன்னா என்னமா யோசிக்கிறீங்கப்பா :))//

யோவ்..என்ன மாதிரி "வேலை பளு"விலும் பதிவு போட்டு இருக்கேன்..காமெடி பண்ணுற காமெடி..:)

//என்னை பொறுத்த வரைக்கும் உலக சினிமானா அது.. "பிட்டு " படம் தான் //

எல்லாம் ஒன்னு தான்..

//பாலா அண்ணா இவனுங்க்ளுகாகவே யாருக்கும் புரியாம தொடர்ச்சியா "மிக்ஸ்சர் " பத்தி 10 பதிவு எழுதுங்க அண்ணா..//

டேய் நீ விளையாட்ட சொல்றதை சீரியஸ்சா எடுத்துக்கிட்டு அவரு பாட்டும் எழுதுறதுக்கு உக்காந்திர போறாரு..
ஏற்கனவே PIXAR பாதிப்புல இருந்தே இன்னும் மீள முடியல..

@ thenammailakshmanan ..

ரொம்ப நன்றிங்க..:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத், நீங்க ஒரு இதுக்கு எழுதியதை நான் அதுவா நினைக்காம மிகவும் ரசித்தேன். கலக்கல் பதிவு. உங்க ஆயா பதிவு நினைவிற்கு வந்தது.

//கலையரசன் said...
அடுத்தது என்னா மச்சி...?

உலக ஹனிமாவும்!... உள்ளூர் முனிமாவும்!! -மா?//

கலையோட பின்னூட்டத்திற்கு நான் ரசிகன் :)) கலக்கறாரு மனுசன் :))

geethappriyan said...

யோவ் குரு கலக்குற போ.

வரதராஜலு .பூ said...

செம ஆராய்ச்சி விநோத். நல்லாயிருக்கு

வால்பையன் said...

நல்லாயிருக்குங்க!

வினோத் கெளதம் said...

@ ச.செந்தில்வேலன்

நன்றி செந்தில்..
கலை பின்னுட்டம்..மற்றவர்களை காண வைக்கும் ஆட்டம்..:)

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

நன்றி குரு..

@ வரதராஜலு .பூ..

நன்றி தல..வேலைபளு குறைந்ததா..!!

@ வால்பையன்..

நன்றி வால்ஸ்..

பாலா said...

அடப்பாவிகளா...

என்னை வச்சி... ஒரு பெரிய கும்மியே.. இங்க நடந்து முடிஞ்சிருச்சா!

கலையைத்தான்.. கும்க்கனும்! சும்மாயிருக்க மாட்டாம.. என் பேரை இழுத்து விட்டு... மிக்ஸ்சர் வரைக்கும் வந்து விட்டுடீங்களே! :) :) :)

--

நடத்துங்க.. நடத்துங்க. அப்புறம் மழை வந்ததுக்கு காரணம்.. க்ளோபல் ‘வார்மிங்’-ன்னு டெமாக்ரெட்ஸ் சொல்லுறாங்களே!! :)

எல்லாம்.. `ஹரிகேன்’ பதிவு எழுதிய நேரம்தான்.

வினோத் கெளதம் said...

//க்ளோபல் ‘வார்மிங்’-ன்னு டெமாக்ரெட்ஸ் சொல்லுறாங்களே!! :)//

தல அடிச்சு பின்னுற மழை எல்லாம் இல்லை..எப்பொழுதுமபோல் சும்மா ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வர்ற மழை..
பதிவு போட்ட நேரம் நின்னே போச்சு..