கார்த்திகை மாதம் என்றால் என்ன நியாபகத்துக்கு வரும் கார்த்திகை தீபம், சிலருக்கு திருவண்ணாமலை, அப்புறம் கொஞ்சம் குளிரான சீதோஷன நிலை அப்புறம் மிக முக்கியமா ஐய்யப்ப சாமிகள். காய்கறி விற்பவர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர் வரை, காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனே மாலை போட்டுகொண்டு கருப்புவேஷ்டியில் வலம் வர தொடங்கி விடுவார்கள். அதுவும் "சபரிமலைக்கு" நம் தமிழ்நாட்டில் இருந்து போகும் "பக்தர்கள்" கூட்டம் தான் அதிகம். அதேப்போல் பழனிக்கு கேரளாவில் இருந்து வரும் "கூட்டம்" அதிகம்..காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். 'ஐயப்பன்' தமிழ்நாட்டை நோக்கி அருள்பாளிப்பதும்.."பழனிமலை ஆண்டவன்" கேரளாவை நோக்கி அருள்ப்பாளிப்பதும்.
தமிழ்நாட்டில் உள்ளோருக்கு இந்த "மாலைப்போடும்" ஆர்வத்தை தூண்டிவிட்டதில் "நம்பியாரின்" பங்கு அதிகம்.அதற்குமுன்பு எப்படி என்று தெரியவில்லை ஆனால் அவரின் தாக்கத்தினால் இந்த பழக்கம் மற்றவர்கள் இடையில் 'ஆர்வமாக' பரவியது.இதில் "உண்மையில்" பக்தியோடு 'மாலை' போடுபவர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை.ஆனால் வேற எதோ ஒரு காரணத்திற்காக மாலை அணிபவர்கள் அதிகம். வீட்டில் கிடைக்கும் "நானும் கடவுள்" என்ற "அந்த" பிம்பத்திற்கு கிடைக்கும் மரியாதை, அதிகமாகி போன "கெட்டபழக்கத்தை" தற்காலிகமாக ஒரு மண்டலத்திற்கு விட்டுவிடுவதால்..யப்பா நம்ம ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை..நம்மாலும் இந்த பழக்கத்தை நிறுத்தமுடியும் என்ற எண்ணத்தின் முலம் கிடைக்கும் அந்த நிம்மதி(நான் இதுவரை மாலை போட்டதில்லை), குறிப்பா நம்ம "அந்த சமயத்தில்" யார் மீது வேணாலும் அதிகாரம் செலுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இப்படி பல காரணங்கள் பலப்பேருக்கு. ஆனாலும் மாலை போட்டுக்கொண்டும் சிலபேர் "காமெடி" பண்ணுவார்கள்..கல்லூரி படிக்கும்ப்பொழுது 'மாலை அணிந்த' என் நண்பன் இன்னொரு நண்பனை திட்டுவதற்கு என்னை கூப்பிடுவான்.
உண்மையில் அந்த "ஒரு மண்டலத்தில்" நம் பின்ப்பற்றும் அந்த ஒழுக்கமான நடைமுறைகள் தரும் எண்ணங்கள், அதன்முலம் மாறும் நம் அன்றாட அமைப்பு..அதை நம் "மாலையை" கழட்டி வைத்தபின்பும் "அப்படியே" தொடர்வது தான் கான்செப்ட்.ஆனால் "ஃபாஸ்ட் புட்" கலச்சரம்ப்போல் கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் மாலை அணிந்துகொள்கிறோம். இந்த "பழக்கவழக்கங்களை" கூட விட்டு தள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். உண்மையான "கடவுள்பக்தி" என்பது நம் மற்றவர்கள் மீதும் செலுத்தும் அன்பே( அன்பே சிவம்)..இந்த "அன்பே சிவம்" மேட்டர் மாலைப்போடும் காலகட்டங்களில் மட்டும் அல்ல "பக்தியை" ஆராதிக்கும் எல்லோருக்கும் எல்லா காலகட்டங்களிலும் பொருந்தும். சிலப்பேர் "நாத்திகர்களாக" ஆவதற்கு "கடவுள்" என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம் என்றால்.."பொருள்ப்பித்து" பிடித்து அன்பில்லாமல் திரியும் சில "பக்திமான்களின்" செய்கையும் இன்னொரு காரணம். எதுக்கு இந்த "அன்பே சிவம்" மேட்டர் சொல்லுறேன்னு பாக்குறிங்களா..சொல்லுறேன்..
இந்த "ஐயப்ப சாமிகளில்" பெரும்பாலான மக்கள் தங்கள் தற்காலிமாக ஏற்றுக்கொண்ட அந்த "கதாப்பாத்திரத்தின்" காரணமாக எப்பொழுதும் 'உர்ரென்று' திரிவது, எதாவது ஒரு விஷயம் மற்றவர்கள் "சொதப்பினாலும்" மாலைபோட்ட காரணத்தை சாக்காக வைத்து அவர்கள் மீது எரிந்துவிழுவது..பெரும்பாலும் இந்த "இருமுடி" கட்டும்ப்பொழுது இந்த 'குருசாமிகள்' பண்ணும் ஆர்ப்பாட்டம் இருக்கும் பாருங்கள்..கண்டிப்பா எதாவது ஒரு கோவிலில் பார்த்து இருப்போம்..என்னா இதெல்லாம்.."அன்பா இருங்க..சகஜமா பழகுங்க"..இதான் "அந்த நாட்கள்" நமக்கு போதிக்கும் முக்கியமான விஷயம்..அதுவும் "அரசு அலுவகங்களில்" மாலைபோட்டு கொண்டும் 'கை' நீட்டுவர்..மற்ற நாட்களில் "கை" நீட்டினால் தவறில்லையா என்று கேக்ககூடாது..அந்த சமயத்தில் அந்த "ஒழுக்கமான வாழ்க்கை" கொடுக்கும் அனுபவம் தான் நமக்கு பாடம்..அதன்ப்பிறகு அதை தொடர்ந்தால் 'கடவுளும்' நம்மை எப்பொழுதும் பின் தொடர்வார்.
அதுவும் வீட்டில் இருக்கும் "சின்ன பசங்களக்கு" கூட மாலை அணிவித்து விடுவார்கள்..அந்த "ஒரு மண்டல" கட்டுக்கோப்பான வாழ்கை அவர்களுக்கு "ஒரு பாதையாக" அமைந்தால் பரவில்லை..ஆனால் பெரும்பாலனவர்கள் ஏற்ப்படுத்தும் 'நான் கடவுள்' பிம்பம் பெரியவர்களின் செய்கையால் அந்த சிறுவனின் "மனதிலும்" பதிந்து விட்டால்.."அன்பை போதியுங்கள்" ..வேறு சில விஷயங்களை தினிக்காதிர்கள்.(அப்படி பார்த்தால் "சாமி கும்பிடுவதே" பெரியவர்கள் கற்றுக்கொடுக்கும் திணிப்பு என்று சொல்லலாம்.ஆனால் அது நம் கலச்சரத்தின்ப்பால் இயற்கையாக அமைந்தது 'திணிப்பு' அல்ல). மாலை அணியும் சமயத்தில் அந்த செய்கையை மற்றவர்கள் மேல் காட்டும் 'அன்பாலும்' செய்யும் 'நேர்மையான செய்கையாலும்' நியாயப்படுத்துங்கள். அது தான் சரியான வழி.
(டிஸ்கி: நான் நாத்திகன் இல்லை சாமிகளா ஆத்திகன் தான்..என்னோடைய மதத்தில் நான் "அபத்தங்களாக"..அதுவும் மாலை போடும் சமயத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து, எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களின்ப்பால் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன். கருத்து கொஞ்சம் அதிகமா சொல்லிட்டனோ..)
20 comments:
மாலை போட்ட ரைட்டு...
பக்கத்து சீட்டுல காலை போட்டீயயயா???
பாசு.. சாமிங்க சரக்கடிக்கிறப்ப மாலையை தலைக்கு மேல தூக்கி பிடிச்சிகிட்டு அடிக்குமே.. அத சொல்லவேயில்ல?
இப்ப எல்லாம் உருப்படியா இருக்குற எது மாலை போடுது? மாலைபோட்டாலே பொருக்கின்னு ஆகிடுச்சு!!
சரி... சரி.. பிசாசு பின்னூட்டத்துல வருதுன்னு திட்டாத!!
ஒரு சின்ன சந்தேகம்....
அடைப்புகுறி ஏகப்பட்ட இடத்துல அடைச்சிகிட்டு இருக்குதே, ஏன் பாஸ்?
நான் கூட கார்த்திகை மாசம்னு பார்த்ததும்.. உன்னை பத்தின பதிவுன்னு தப்பா நெனச்சிட்டேன் நண்பா..
நீ ஊருக்கு வரும் போது "பாரின் சரக்கு" வாங்கிட்டு வருவன்னு நெனச்சேன்.. வெறும் விபூதி பொட்டலம் தான் கிடைக்கும் போல இருக்கு..
சாமியெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா...
கலாச்சாரத்தில் எல்லாம் எதுவும் ’இயற்கை’ கிடையாதுங்க.
ஒரு 100 வருசம்.. இதை திணிச்சிகிட்டே இருந்தீங்கன்னா... அது ஆட்டோமேட்டிக்கா ‘இயற்கை’யா தெரியும்.
பாலா சொல்வது கரெக்ட். எல்லாமே மனிதன் உருவாக்கியதுதான். தனது தேவைக்கேற்ப அதனை கூட்டியோ குறைத்து அதனை மாற்றிவைத்துக்கொள்கிறான். அவ்வளவுதான்.
சபரிமலைக்கு மேட்டரை படிச்சதும் போனவாரம் ஆனந்தவிகடன்ல வந்த ஒரு ஜோக் நினைவுக்கு வருது...
மாணவன்: சார் என் பரீட்சை பேப்பர்ல முட்டை மார்க் போடாதீங்க சார்.
ஆசிரியர் : ஏன்டா ?
மாணவன் : எங்கப்பா சபரிமலைக்கு மாலை போட்டுருக்காரு.
ஓகே தல.... நல்லபதிவு வர்ட்டா....
@ கலையரசன்
//பாசு.. சாமிங்க சரக்கடிக்கிறப்ப மாலையை தலைக்கு மேல தூக்கி பிடிச்சிகிட்டு அடிக்குமே.. அத சொல்லவேயில்ல? //
அனுபவமோ..:)
//சரி... சரி.. பிசாசு பின்னூட்டத்துல வருதுன்னு திட்டாத!!//
நான் என்னா அவரா..மனசுக்குள்ள நினைக்கிறதோட சரி..;)
@ KISHORE
//நான் கூட கார்த்திகை மாசம்னு பார்த்ததும்.. உன்னை பத்தின பதிவுன்னு தப்பா நெனச்சிட்டேன் நண்பா..//
என்னை பத்தி நினைக்கும்பொழுது சம்பந்தமே இல்லாம "தப்பா" யோசிப்பியே..
@ ஹாலிவுட் பாலா
//ஒரு 100 வருசம்.. இதை திணிச்சிகிட்டே இருந்தீங்கன்னா... அது ஆட்டோமேட்டிக்கா ‘இயற்கை’யா தெரியும்.//
"பஞ்ச் பாலா"..ரொம்ப கரெக்ட் தல..
@ நாஞ்சில் பிரதாப்
//எல்லாமே மனிதன் உருவாக்கியதுதான். தனது தேவைக்கேற்ப அதனை கூட்டியோ குறைத்து அதனை மாற்றிவைத்துக்கொள்கிறான். அவ்வளவுதான். //
இதுவும் சரி தான்..
ஜோக் சூப்பர்..
நன்றி பிரதாப்..
பாலாவுக்கு ஆமோதிப்பு!
2ஆயிரம் வருஷம் முன்னாடி எகிப்து, மலையாளம் எல்லாம் பெண்கள் சார் சமூகம். இப்ப எகிப்துல இஸ்லாம். மேல் விளக்கம் தேவையில்லை.
2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம்.
100 வருஷம் முன்னாடி பொண்ண உயிரோட எரிக்கறது கலாச்சாரம்.
இப்ப சொல்லுங்க எது கலாச்சாரம்?
அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச்சு போவாங்க. பசங்க உட்கார்ந்துட்டு என்பது ஒரு கேள்வி. உறுதியா தெரியல. யாரேஉம் தெளிவு படுத்தவும்.!
2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம். - இது எகிப்துல ந்னு சொல்லிருக்கனும்... ஹி.. ஹி..
பப்பு எல்லாம் ரைட்டு..அந்த கலச்சரதுக்குள்ள நான் போகல..பட்..ஒரு சாதாரண குடும்ப பையனா எத்தனை காலம் போனாலும் இந்த சாமி கும்பிடுவது என்ற பழக்கத்தை 'தாண்டி' வர முடியாது இல்ல..
//2ஆயிரம் வருஷம் முன்ன ஆட்சி குடும்பத்தை விட்டுப் போகக் கூடாதென தங்கச்சிய கல்யாணம் பண்ணுறது கலாச்சாரம். //
நான் இப்ப தான் Caligula பார்க்கிறப்ப தெரிஞ்சிக்கிட்டேன்..ஏன் இவன்(ஹீரோ) எகிப்தை அடிக்கடி வம்புக்கு இழுக்குரானு..
ஆமாம் Research எதாச்சும் பண்ணுறியா..சும்மா புகுந்து விளையாடுற..
//அதே காலகட்டத்தில் எகிப்து பெண்கள் நின்னுட்டு சூச்சு போவாங்க. பசங்க உட்கார்ந்துட்டு என்பது ஒரு கேள்வி. உறுதியா தெரியல. யாரேஉம் தெளிவு படுத்தவும்.!//
தெரியலையே..காலதிர்க்கேற்ப உடல் பரிணாம வளர்ச்சியில் எதாவது மாற்றம் ஏற்ப்பட்டிருக்குமோ..
ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சாரம். உங்களுக்கு முன்னடி இருக்குறவன் சொல்லிக் குடுத்ததால தான் பேண்ட் போட்டவன் எல்லாம் நின்னுக்கிட்டு அடிக்கிறோம். சொல்லிக் கொடுக்குறதுதான்.
நம்ம கலாச்சாரத்தில் தாலி இருந்தது கிடயாது, வேட்டிக்கு சட்டை கிடையாது.... ராமதாஸ் குரூப்ஸ் ஏன் தாலிக்காக குஷ்பூவோட சண்ட போட்டாங்களோ? பாலிடிக்ஸ் பழம்.
முலைங்கிற வார்த்தைய 50 வருஷம் முன்னாடி வந்த கந்த புராணத்துல அசால்ட்டா முலைப் பால்னு யூஸ் பண்ணிருக்காங்க.
ஆராய்ச்சியான்னு கேக்காதீங்க. சும்மா அப்பப்ப கேட்டாது, பார்த்தது.
அண்ணே..உள்குத்துல பிண்றியேண்ணே
தமிழ்நாடு-பக்தர்கள்-கேரளா-கூட்டம்.
பப்பு அண்ணே,'
இப்போ நம்ம கெட்ட வார்த்தைன்னு நினைச்சுட்டு இருக்குற வார்த்தைகளையெல்லாம் நம்ம பழைய கவிஞர்கள்
அசால்ட்டா யூஸ் பாண்னிருக்காங்கன்னு கேள்விப்படேன்.
என்னய்யா இது...
மாலை போடுறத பத்தி பதிவு போட்டுட்டு..
கீழே கலாச்சாரத்தை பத்தி கும்மிருக்கீங்க...
கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல தலைப்பெல்லாம் பாத்தா அடிப்பாய்ங்க!
//pappu said...
கும்மி முடிவு பண்ணியாச்சு... இதுல தலைப்பெல்லாம் பாத்தா அடிப்பாய்ங்க!
//
ரைட்டு விடு
@ Pappu
//ஹி... ஹி... பரிணாமம்லாம் இல்ல. கலாச்சாரம். //
இதை சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்..
//சொல்லிக் குடுத்ததால தான் பேண்ட் போட்டவன் எல்லாம் நின்னுக்கிட்டு அடிக்கிறோம். சொல்லிக் கொடுக்குறதுதான்.//
சொல்லிகொடுத்தாலும் எதை நம்மால் சுலபமாக பின்பற்ற முடிகிறதோ..அதை மட்டும் தான் நாம் "பிடித்துகொள்கிறோம்".
\\முலைங்கிற வார்த்தைய 50 வருஷம் முன்னாடி வந்த கந்த புராணத்துல அசால்ட்டா முலைப் பால்னு யூஸ் பண்ணிருக்காங்க.//
ஆமாம் நான் கூட நிறையா பழைய செய்யுள்களில் படித்து உள்ளேன்..ஆனால் இப்பொழுது உள்ள திரைப்பாடல்களில் அதே வார்த்தையை தைரியமாக உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை..
@ ♠ ராஜு ♠
//அண்ணே..உள்குத்துல பிண்றியேண்ணே
தமிழ்நாடு-பக்தர்கள்-கேரளா-கூட்டம்.//
கரெக்டா கவனிச்சிட்டியே..
//இப்போ நம்ம கெட்ட வார்த்தைன்னு நினைச்சுட்டு இருக்குற வார்த்தைகளையெல்லாம் நம்ம பழைய கவிஞர்கள்
அசால்ட்டா யூஸ் பாண்னிருக்காங்கன்னு கேள்விப்படேன்.//
அதே தான்
@ கண்ணா..
//மாலை போடுறத பத்தி பதிவு போட்டுட்டு..
கீழே கலாச்சாரத்தை பத்தி கும்மிருக்கீங்க...//
நாங்க அப்படி தான் பண்ணுவோம்..:)
நீங்கள் கூற வந்த விஷயம் அனைத்தும் உண்மையே. பக்தியை விட மாலை போட்டிருப்பதாக கூறி ஆடும் ஆட்டமே அதிகம்.
முக்கியமா கன்னி மாலை போடுறவங்க speaker வச்சு பாட்டு போட்டு ஊரையே கலங்கடிப்பது ரொம்ப கஷ்டம்
Post a Comment