Monday, December 14, 2009

திங்கள் இனிதே-4

அமீரகத்தில் ஒரு மழைக்காலம்:

எப்பொழுதும் கானல்நீரையே உமிழ்ந்துகொண்டு இருக்கும் சாலைகள் ஆச்சரியமாக இரு நாட்களாய் மழைநீரை தெறித்துக்கொண்டு இருக்கிறது...ச்சும்மா ஊரே மழையில் நனைந்த கொண்டு "சில்" என்று இருக்கிறது.. வெளியே கொட்டும் மழையை ஆர்வமாய் பார்த்தாலும் கொஞ்சம் மனசுக்குள் "திக் திக்"ன்னு தான் இருக்குது திடிர்னு தலைகாட்டும் சூரியனை பார்த்து..இதே மாதிரி ஒரு ஊரில் மழை பெய்வதே அபூர்வம்..அதனால் முடிந்தவரை ரசித்துக்கொள்ள வேண்டியது தான். என்னா கொஞ்சநேரம் மழை பெய்தாலே சாலையெங்கும் ஒரே வெள்ளக்காடாக ஆகிவிடுகின்றது..அது ஓன்று தான் குறை..நம்ம ஊரிலும் மழை என்று தான் கேள்விப்பட்டேன் "ஜமாய்ங்க".
....................................................................................................................

ஷார்ஜா அனுபவம்:

போன வாரம் "கலையரசன்" அறைக்கு சென்று இருந்தேன். சென்ஷி, நான் ஆதவன், கலை அப்புறம் நான் ஒன்றாக 'கூடி' வெகுநேரம் உலகஅரசியலையும் சமக்கால இலக்கியத்தை பற்றியும் விவாதித்து கொண்டு இருந்தோம்.நேரம் போவதே தெரியாமல் விடியும்வரை "உலக படங்களை" பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்புறம் அவரவர் இடங்களுக்கு கிளம்பினோம்.நிறையா தமிழ் முகங்களை ஷார்ஜாவில் பார்க்க முடிகிறது. ஷார்ஜா பேருந்து நிலையம் துபாயைப்போல் இல்லாமல் நான் சென்ற ரெண்டு தடவையும் சுலபமாக பஸ்சை பிடிக்க முடிந்தது.ஒரு வேளை நான் 'பிஸி' அல்லாத சமயத்தில் வந்தேனா என்று தெரியவில்லை.. "துபாய்" கூட ஒப்பிடும் பொழுது எவ்வளவோ தேவலாம்..துபாய் பேருந்து நிலையத்தை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..இருந்தாலும் இப்ப வேண்டாம்..இந்த ஊரைவிட்டு "வந்தப்பின்" போடுகிறேன்.
....................................................................................................................................................

கிரிக்கெட்:

இந்தியா "டெஸ்ட் ரேங்கிங்"கில் முதலிடம் பிடித்து இருக்கிறது தோனி தலைமையில். வாழ்த்துக்கள். ரெண்டு மேட்ச்சில் தொடர்ந்து இன்னிங்க்ஸ் வெற்றி அதுவும் இலங்கைக்கு எதிராக. சேவாக் அபார பார்மில் இருக்கிறார்..பின்னி பெடலெடுக்கிறார் மனிதர். உலக சாதனை படைப்பார் என்று மறுபடியும் ஒரு தடவை எதிர்ப்பார்த்து ஏமார்ந்துபோனோம்..இந்திய அணி "தோனி" தலைமையில் கொஞ்சம் துடிப்புடன் செயல்ப்படுவதுப்போல் தான் உள்ளது அல்லது "துடிப்பான அணி" அமைந்துள்ளது. இருந்தும் ஆஸ்திரேலியா அல்லது சவுத் ஆப்ரிக்கா போல ஒரு ஆல்-ரவுண்டு அணியாக இன்னும் இந்தியா வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். BCCI என்ற தனியார் அமைப்பு இன்னும் நிறையா செலவு செய்ய முன்வர வேண்டும் பல புதுமையான முறைகளை கையாள்வதற்கு. இந்தியா அணி இன்னும் சில மைல்கள் கடக்க வேண்டியது உள்ளது.
........................................................................................................................................................

விஜய் & விஜய் அந்தோணி

விஜய் அந்தோணி பாடல்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை ..துள்ளலான இசை. "நினைத்தாலே இனிக்கும்" வரை பட்டையை கிளப்பி உள்ளார். அப்பேர்ப்பட்டவர் விஜய் படத்தில் இணைந்து உள்ளார் என்றால் பாடல்கள் சாதரணமாக அமைந்து விடுமா..
"வேட்டைக்காரன்" பாடல்களை கேக்கும்ப்பொழுது 'உச்சிமண்டை' ச்சும்மா கிர்ர்ருனு' தான் இருக்கு. படமும் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புவோமாக..ஒரு "மாஸ் ஹீரோ"வின் படம் தொடர் தோல்வியடைவது சினிமாவிற்கும் நல்லது அல்ல. படம் வெற்றிப்பெற்றால் மற்ற வளரும் படங்களுக்கும் ஒரு "நம்பிக்கை" பிறக்கும்..படம் லாபகரமான வகையில் இருந்தால் சன் பிக்சர்ஸ்ம்
வணிகரீதியான படங்களை மட்டும் எடுக்காமல் இன்னும் சில சோதனை முயற்சிகள் கூட பண்ணி பார்க்க வாய்ப்புண்டு.
................................................................................................................................

ஆனந்த விகடன்:

ரொம்பநாள் கழித்து "ஆனந்த விகடன்" வாங்கினேன்..ஏனோ "சின்ன புத்தகமாய்" வந்தப்பொழுது இருந்த மனதுக்கு நெருக்கமான "ஃபீல்" இப்ப அவ்வளவாக இல்லை..எங்கும் ஒரே வண்ணமயமாக உள்ளது "ரங்கோலி" கோலபுத்தகத்தை திறந்ததுப்போல். இந்த மாற்றம் அவர்கள் வரும் தலைமுறையை கவர கொஞ்சம் முன்கூட்டியே வைத்த "அடி"(ஸ்டேப்) போல் தான் உள்ளது. எது எப்படியோ இந்த "ப்ளாக்" பக்கம் வந்ததில் இருந்து கொஞ்ச நஞ்சம் இருந்த புஸ்தகம் படிக்கும் பழக்கமும் அறவே ஒழிந்தது. அந்தவகையில் "ப்ளாக்" பல புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு உள்ளது.
..................................................................................................................................................................

கவிதை(அப்படியும் சொல்லலாம்)

சாலையின்
ஓரங்களில் உள்ள மரங்களை கடக்கையில்
வேதனையாக உள்ளது இன்னும் சில தினங்களில் வரப்போகும்
"சாலை விஸ்தரிப்பை நினைத்து".


26 comments:

பா.ராஜாராம் said...

இங்கும்தான் வினோ..நல்ல மழை! ஊரில் இருந்தது போலான காற்று கிடைத்தது.ஆட்டுப்புழுக்கை வாசனை மட்டும் காற்றில் கலந்து வந்திருந்தால் போதும்.அட,ஊர் வந்திருச்சு போல என நிறைந்து கொண்டிருந்திருக்கலாம்!

ஆனந்த விகடன் விஷயம் எனக்கும் முன்பே தோன்றியது.

நல்லா எழுதுறீங்க வினோ.

ஆ.ஞானசேகரன் said...

வினோத்,.. நல்ல பகிர்வு நன்றிபா

kishore said...

நீ ரெண்டு நாளா ஒரு மார்கமா பேசும் போதே நெனச்சேன் நீ "உலக" படம் பார்த்து இருப்பன்னு .. அருமையான பகிர்வு..

Prabhu said...

இதெல்லாம் கவிதைங்கிறது உங்களுக்கே ஓவரா தெரில! அநியாயம்!

கலையரசன் said...

- "சில்" என்று
- "திக் திக்"ன்னு
- "திடிர்"னு தலைகாட்டும்

யப்பா... பேய் கதையோன்னு பயந்துட்டேன், முதல் பாராவை படிக்கும்போது! அப்புறமா.. "ஜமாய்ங்க"ன்னு படிச்சவுடனேதான் நிம்மதியா இருந்துச்சு!!

Raju said...

\\சமக்கால இலக்கியத்தை \\

சமக்கால இலக்கியமா..? இல்ல "சமாக்"கால இலக்கியமா..?
:-)

வரதராஜலு .பூ said...

//நம்ம ஊரிலும் மழை என்று தான் கேள்விப்பட்டேன்//

அப்படி ஒண்ணும் அதிகமா இல்ல விநோத். மொத்தமா போன ஒரு வாரத்துல 0.2 செ.மீ. மழை பெய்ஞ்சி இருந்தாலே அதிகம். எப்பபாரு ஒரு மேகமூட்டமாவே இருக்கு, ஆனா மழையே கிடையாது.

geethappriyan said...

வழக்கம் போல திங்கள் இனிதே குரு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//.துபாய் பேருந்து நிலையத்தை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..இருந்தாலும் இப்ப வேண்டாம்..இந்த ஊரைவிட்டு "வந்தப்பின்" போடுகிறேன்.//

"நிறைய விசயங்கள சொல்லனும் நினைக்கறன்..ஆனா முடியலயே பெரியப்பா"னு ஒரு வசனம் வரும் ராசுக்குட்டி படத்துல :))

உண்மைதான்.. சார்ஜாவின் தமிழர்கள் பெருகிவருவது.. கடைகளில் மலையாளம் மட்டுமே கேட்க முடியும். இப்பொழுது தமிழும்.

விஜய் & விஜய் அந்தோனி - ??

ஆ.வி. அடி(ஸ்டெப்)பை ரசித்தேன் :))

நல்ல இடுகை வினோத்.

கண்ணா.. said...

ஐயா சாமிகளா...!!

நான் ஊருல இருந்து துபாய் வந்து ஒரு மாசம் ஆச்சு....


ஏதோ ப்ளாக் பக்கம் வரலைங்குறதுக்காக... இப்பிடியா இந்தியாலயே இருக்கேன்னு புரளியை கிளப்புறது........


நம்ம பிரதீப் சாட் வந்து சொன்னதும்தான் எனக்கே தெரியுது....

இப்பிடி புரளியை கிளப்பின நம்ம கலைக்கு கருடபுராணம் படி என்ன பண்ணலாம்..????????????!!!!!!!!!!!!!



அளவில்லா ஆத்திரத்துடன்....


கண்ணா

☀நான் ஆதவன்☀ said...

என்னப்பா இது வர்ர மழைய ரசிக்காம வெயில நினைச்சு பயந்துகிட்டு.....


//சென்ஷி, நான் ஆதவன், கலை அப்புறம் நான் ஒன்றாக 'கூடி' வெகுநேரம் உலகஅரசியலையும் சமக்கால இலக்கியத்தை பற்றியும்//

அவ்வ்வ்வ்வ். வாலி, மின்னலே படத்தை பத்தி பேசனது தப்பாயா?

அப்புறம் தூரத்துல இருக்குறதால கவிதைன்னு பேரு போட்டுட்ட போல. நேர்ல வா உனக்கு இருக்குது :)

சம்பத் said...

நல்ல பகிர்வு...

thiyaa said...

நல்லா எழுதுறீங்க வினோ.

நல்ல முயற்சி

வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

@ பா.ராஜாராம்

//இங்கும்தான் வினோ..நல்ல மழை! ஊரில் இருந்தது போலான காற்று கிடைத்தது//

தல இப்ப நீங்க எந்த ஊர்ல இருக்கிறிங்க..
தொடர் ஆதரவிற்கு நன்றிங்க..:)

@ ஆ.ஞானசேகரன்

நன்றி நண்பரே ..:)

@ Kishore

நான் எப்ப உன்கிட்ட "ஒருமாதிரி" பேசுனேன் ..டேய் நீ பாட்டும் பொத்தம்பொதுவுல இதே மாதிரி சொல்லுற..பாக்குறவங்க தப்பா எடுத்துக்குவாங்க..

வினோத் கெளதம் said...

@ Pappu..

//இதெல்லாம் கவிதைங்கிறது உங்களுக்கே ஓவரா தெரில! //

பப்பு இதுக்கே கொந்தளிச்சா எப்படி..இன்னும் நிறையா சரக்கு கைவசம் இருக்கு..

@ கலையரசன்..

//ப்பா... பேய் கதையோன்னு பயந்துட்டேன், முதல் பாராவை படிக்கும்போது!//

நல்லவேளை தப்பிச்சேன் உன் கருத்து கணிப்பை முதல் பாரவோடு நிறுத்திக்கிட்ட..:)

@ ♠ ராஜு ♠

//"சமாக்"கால இலக்கியமா..?//

ஆமாம் அப்படினா ..!!

வினோத் கெளதம் said...

@ வரதராஜலு .பூ

//அப்படி ஒண்ணும் அதிகமா இல்ல விநோத். மொத்தமா போன ஒரு வாரத்துல 0.2 செ.மீ. மழை பெய்ஞ்சி இருந்தாலே அதிகம். //

அப்படியா அதிகமா பெய்யுதுன்னு சொன்னாங்களே தல..!!

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

நன்றி குரு..:)


@ ச.செந்தில்வேலன்

//"நிறைய விசயங்கள சொல்லனும் நினைக்கறன்..ஆனா முடியலயே பெரியப்பா"//

ஆமாம் தல அதே தான் நிறையா விஷயம் சொல்லனம்ன்னு நினைக்கிறேன்..ஆனா முடியுல..

//விஜய் & விஜய் அந்தோனி - ??//

நடிகர் மற்றும் இசையமைப்பாளர்..

நன்றி செந்தில் ..:)

வினோத் கெளதம் said...

@ கண்ணா..

கண்ணா எப்ப வந்திங்க..
சொல்லவே இல்லை ஒரு காலும் இல்லை..
Welcome Back..:)

@ ☀நான் ஆதவன்☀

//என்னப்பா இது வர்ர மழைய ரசிக்காம வெயில நினைச்சு பயந்துகிட்டு//

அட அதானே..

//அப்புறம் தூரத்துல இருக்குறதால கவிதைன்னு பேரு போட்டுட்ட போல.//

கிட்ட இருந்தாலும் அது கவிதை தான் என்று பெருங்குரலேடுத்து சொல்லுவேன்..:)

@ சம்பத் ..

வருகைக்கு நன்றி சம்பத்..:)

@ தியாவின் பேனா ..

தொடர் ஆதரவிற்கு நன்றிங்க..:)

Thenammai Lakshmanan said...

சாலை விஸ்தரிப்பும் விகடன் படிக்கும் பழக்கம் குறைந்து போனதும் யதார்த்தமான உண்மை வினோத்

வண்ணமயமான கோலப் புத்தகம்
:-))))

அருமை

வினோத் கெளதம் said...

ஆமாங்க..விகடன் இப்பொழுது எல்லாம் எப்பயாச்சும் தான் படிக்க தோணுது.
நன்றி..:)

ப்ரியமுடன் வசந்த் said...

//"வேட்டைக்காரன்" பாடல்களை கேக்கும்ப்பொழுது 'உச்சிமண்டை' ச்சும்மா கிர்ர்ருனு' தான் இருக்கு. படமும் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புவோமாக..ஒரு "மாஸ் ஹீரோ"வின் படம் தொடர் தோல்வியடைவது சினிமாவிற்கும் நல்லது அல்ல. படம் வெற்றிப்பெற்றால் மற்ற வளரும் படங்களுக்கும் ஒரு "நம்பிக்கை" பிறக்கும்..படம் லாபகரமான வகையில் இருந்தால் சன் பிக்சர்ஸ்ம்
வணிகரீதியான படங்களை மட்டும் எடுக்காமல் இன்னும் சில சோதனை முயற்சிகள் கூட பண்ணி பார்க்க வாய்ப்புண்டு.
...//

டேய் நீ வாழ்த்துறியா திட்டுறியா?

இருடி அசல் வரட்டும் ஊரெல்லாம் அதப்பத்தி நகல் போட்ருவோம்...

கண்ணா.. said...

// கண்ணா..

கண்ணா எப்ப வந்திங்க..
சொல்லவே இல்லை ஒரு காலும் இல்லை..//

யோவ் எனக்கு ரெண்டு காலும் இருக்குய்யா..

நீ வேற இன்னொரு புரளிய கிளப்பாத..

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்

//டேய் நீ வாழ்த்துறியா திட்டுறியா?//

அடப்பாவி ஒரு நல்ல எண்ணத்துல சொல்லி இருக்கேன்..

@ கண்ணா

//நீ வேற இன்னொரு புரளிய கிளப்பாத..//

ஏற்கனவே நீங்க ஆஸ்திரேலியா போய்ட்டதா ஒரு புரளி இருந்துச்சு..அதை கிளப்பிவிட்டவன் சத்தியமா நான் இல்லை..;)

பாலா said...

நான் போட்ட கமெண்ட் எங்கே... எங்கே.. எங்கே.. எங்கே...????

வினோத் கெளதம் said...

தல போனப்ப்திவுல பதிவுல போட்டு இருக்கீங்க..

பாலா said...

மை.. பேட்!

எல்லாத்தையும் சேர்த்து வச்சிப் படிச்சிட்டு ஒரே இடத்தில் போட்டுட்டேன்.

நீங்க பெரிய மனுசனா?? ;)

வினோத் கெளதம் said...

//நீங்க பெரிய மனுசனா?? ;)//

தல இதுக்கு ஒரு மன்னிப்பா..ஏன்..;)