Sunday, December 20, 2009

பாசில்-2

1991
முதல் தொடங்கி 2005 வரை தமிழில் பாசில் இயக்கிய படங்களில் வெற்றியடைந்ததுஒரே படம் தான். மலையாளத்தில் பத்து படங்களை இந்த இடைப்பட்டகாலங்களில் இயக்கி உள்ளார். தெலுங்கில் கில்லர் என்ற படத்தை நாகர்ஜுனவை வைத்தும் இயக்கினார். ஏனோ, மலையாளம் போல் அதன்ப்பிறகு தமிழில்வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தஇரண்டு திரையுலகிற்கும் இடையில் ஏற்ப்பட்ட 'தொழில்நுட்ப' மாற்றத்தின்காரணமாக கூட அவரால் மலையாளம் அளவுக்கு தமிழில் கவனம் செலுத்தமுடியாமல் இருந்து இருக்கலாம் அல்லது நேர பற்றாக்குறை காரணமாக இருந்துஇருக்கும். அதேப்போல் பிறமொழியில் இயக்கும்பொழுது தனக்கு தமிழில்கிடைத்த சுதந்திரமும்,திருப்தியும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். தமிழில் இயக்கும்பொழுது பெரும்பாலான காட்சிகளை இவர் இயக்குவதற்குமுன்பே "அந்த காட்சியை" பற்றிய ஒரு அனுமானம் இவரின் தமிழ்உதவியாளர்களுக்கு இருக்குமாம். ஏனென்றால் அந்த படத்தின் மலையாளபதிப்பை அவர்கள் முன்பே கண்டிருந்ததால். அதனால் 'தமிழில்' வேலைவாங்குவது இவருக்கு சுலபமாக இருந்தது என்று சொல்கிறார்.

ஒரு கானொளியில் குறிப்பிடும்பொழுது தமிழில் "சந்திரமுகி" படத்தை பார்த்தப்பொழுது, தான் எதிர்ப்பாராதவிதமாக "பலக்காட்சிகள்" இடைசொருகலாக இருந்தது எனவும், கதையின் அமைப்பையே சிதைத்துவிட்டது என்றும் வருத்தப்பட்டு உள்ளார். ஒருவேளை அதேபடத்தை பாசிலே 2005ல் இயக்கி இருந்தால் கூட வெற்றிப்பெற்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் "ரஜினிக்கு" ஏற்றமாதிரி படம் பண்ண கொஞ்சம் திணறி இருப்பார்.காலத்திற்கு ஏற்ற படங்களை தமிழில் இப்பொழுது தராவிட்டாலும் முன்பு தந்த படங்களின் மூலம் என்றென்றும் நம் மனதில் நிலைத்து நிற்பதே இவரின் சிறப்பு.


வருஷம் 16 ( 1989 ) :
தனது சொந்த ஊரில் ஒரு கோவில் விசேஷத்திற்காக கூடும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பையனுக்கும், முறைபெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் அதன் காரணமாக வரும் மோதல் தான் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் பாசில்க்கு மேலும் தமிழில் ஒரு மிகப்பெரிய ஹிட். சுவாரஸ்யமாக ஒரு குடும்பம் சார்ந்த படத்தை தந்து இருப்பார். கார்த்திக் மற்றும் குஷ்பு இருவருக்கும் அவர்களின் "எதிர்ப்பால் விசிறிகள்" அதிகரிக்க காரணமாக இருந்த இன்னொரு படம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை அங்கு வரும் "ஊர் சுற்றிகளுக்கு" வருஷம்16 வீடாகவே அடையாளம் காட்டபடுகின்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.


அரங்கேற்ற வேளை ( 1990 ) :
வேலைக்காக பட்டணபிரவேசம் செய்யும் ஒருவன், அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டில் ஏற்கனவே தங்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையில் வாழ்கைக்காகவும், பணத்துக்காகவும் நடக்கும் "ஜாலி சடுகுடு" தான் படம் முழுவதும். பணத்தின் பொருட்டு இவர்கள் மூவரும் இணைந்து பண்ணும் 'தில்லாலங்கடி' வேலை தான் படத்தின் உச்சம். இன்றளவும் டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் அப்படியே உக்கார்ந்து விடுவேன். காரணம் இயல்பாக இருக்கும் நகைச்சுவை. அதுவும் வீ.கே. ராமசாமி, பிரபு, ரேவதி இணைந்து நடத்தும் 'காமெடி மேளா" பார்த்தவர்கள் உணர்த்து இருப்பார்கள். அதுவும் போதாகுறைக்கு கடைசியில் 'ஜனகராஜ்' வேறு வந்து சேர்ந்துகொள்வார். "ஆகாய வெண்ணிலவே" இன்றளவும் மறக்கமுடியாத பாடல்.


கற்பூர முல்லை ( 1991 ) :
மலையாளத்திலும், தமிழிலும் ஒன்றாக வெளிவந்த படம். உறவை அறிந்த அம்மாவுக்கும், உறவே அறியாத மகளுக்கும் இடையில் நடக்கும் கதை. அம்மாவாக ஸ்ரீவித்யா, மகளாக அமலாவும் நடித்து இருந்தனர். மறுப்படியும் ஒரு "பூவே பூச்சுடவா'' மாதிரியான முயற்சி. ரிசல்ட் வேறுவிதமாக. தமிழில் எதிர்ப்பாராத 'அடி'. வழக்கம்போல் ராஜாவின் இசை இதிலும் சுகம்.


கிளி பேச்சு கேக்க வா ( 1993 ) :
வாத்தியார் வேலை வேண்டும் என்றால் 'போனசாக' ஒரு பேய் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஊருக்கு வேலைக்கு வரும் மம்முட்டிக்கும், 'பேயாக' நடிக்கும் கனகாவுக்கும் இடையில் நடக்கும் காதலும் இடையில் ஊர் பொல்லாப்பும் தான் கதை.
இதிலும் மறுப்படியும் 'சறுக்கல்'.பாடல்கள் மறுபடியும் ஹிட்.


காதலுக்கு மரியாதை ( 1997 ) :
விஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம். தயரித்தர்வர்களே இந்த வெற்றியை எதிர்ப்பார்தர்களா என்று தெரியவில்லை. வந்த சமயத்தில் பலப்பேருக்கு 'காதலை' தூண்டிவிட்ட படம். தமிழ்நாட்டில் அந்த சமயத்தில் காதல்வயப்பட்ட பலப்பேர் விஜயாகவும்,ஷாலினி அஜித்தாகவும் தான் வலம் வந்துக்கொண்டு இருந்தனர். கதை என்னவென்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன..அல்லது இந்த கதை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரவது உண்டா..காதல்னா இப்படி தான் இருக்கணும் என்று பல பெற்றோர்களே 'சான்றிதழ்' கொடுத்தார்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு. காதலை கண்ணியமாக சொன்ன படத்தில் இந்த படத்திற்கு எப்பொழுதும் தனி மரியாதை உண்டு. "என்னை தாலாட்ட வருவாயா" என்று எல்லோரும் ஒரு காலத்தில் இல்லை இப்பொழுதும் முனுமுனுக்கும் பாடலே இசைக்கு சான்று.


கண்ணுக்குள் நிலவு ( 2000 ) :
எதோ ஒரு பெண்ணை தேடும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்..அவனை 'சுயநினைவுக்கு' கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெண்.
விஜய் & ஷாலினி அஜித்..மறுப்படியும் அதே காதலுக்கு மரியாதை என்று எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம். கதையின் தெளிவில்லாத போக்கு ஒரு காரணம். சில பேருக்கு பிடித்து இருந்தது அதுவும் பாடல்களுக்காக. இன்றளவும் இந்த பாடல்கள் கேக்க மிக இனிமையாக இருக்கும்.


ஒரு நாள் ஒரு கனவு ( 2005 ) :
இந்த படத்தை மட்டும் நான் பார்க்கவில்லை..பார்த்தவர்கள் விருப்பபட்டால் கதை சொல்லவும். கதாபாத்திர தேர்விலேயே பாசில் தப்பு பண்ணிய படம். வேறு என்ன சொல்லுவது.


டிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. "கை" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும்.

35 comments:

இராகவன் நைஜிரியா said...

// டிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. "கை" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும். //

இந்த விஷயத்தில் அண்ணன் உ.த. வை யாருமே அடிச்சுக்க முடியாது. பக்கம் பக்கமா எப்படித்தான் அடிக்கின்றாரோ மனுஷன்.

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொன்ன படங்களில் வருஷம் 16 ம் அரங்கேற்ற வேலையும் பார்த்து இருக்கேன்/

மற்ற படங்கள் எதுவும் பார்த்த ஞாபகம் இல்லீங்க.

பாலா said...

அறங்கேற்ற வேளை, மளையாலத்தில் 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்'-னு சித்திக்-லால் இயக்கினப் படம்.

எனக்கும் அது ரொம்ப பிடிச்சப் படம். :)

-----

a-z எல்லாம்.. வெட்டிப் பசங்க எழுதுறது. அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க! :)

Prabhu said...

இந்த நாமக்கல் காரர் எப்படி இத்தனை மலையாளப் படம் பாத்திருக்காரு?

கண்ணா.. said...

//டிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. "கை" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும்.//

பாசில் படம் எடுக்காம விட்டதை சாக்கா வச்சு நீ பாலாவையும், கார்த்திகேயனையும் ஓரண்டை இழுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.



இவண்


உலக சினிமா கொலைவெறி சங்கம்

அமீரகம்

சென்ஷி said...

;)))))))))))))))

ரைட்டு

வரதராஜலு .பூ said...

சட்டுன்னு முடிச்சிட்டிங்க

மகா said...

really a nice one .... keep it UP...

பூங்குன்றன்.வே said...

வருஷம் 16 & காதலுக்கு மரியாதை-இந்த இரண்டு படங்களும் தலா மூன்று முறை விரும்பி பார்த்தவை..அதுக்கப்புறம் பலமுறை டிவியில் போட்டாலும் பார்க்க பிடிப்பதில்லை.

அதிரடி அலசல் !!

☀நான் ஆதவன்☀ said...

//அறங்கேற்ற வேளை, மளையாலத்தில் 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்'-னு சித்திக்-லால் இயக்கினப் படம்.

எனக்கும் அது ரொம்ப பிடிச்சப் படம். :)//

எனக்கும் தான். அதிலேயே செகண்ட் பார்ட் கூட வந்திருக்கும். ஹிந்தியில அக்‌ஷய்குமார், சுனில்ஷெட்டி, பாரஷ் ராவல் நடிச்சு பிரியதர்ஷன் இயக்கி சக்கை போடு போட்ட படம்.

ஆனா என்ன.... தமிழ்ல மட்டும் ரேவதி ரோல். பாக்கி எல்லா படத்திலேயும் ரேவதி ரோலும் ஆண் தான் :)

//
ஒரு நாள் ஒரு கனவு ( 2005 ) :
இந்த படத்தை மட்டும் நான் பார்க்கவில்லை..//

நல்ல வேளை :)

kishore said...

சூப்பர் அப்பு.. நல்லா தான் சொல்லிருக்க.. கற்பூர முல்லை அமலாவுக்காக எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம்.

kishore said...

நாமக்கல்காரர் வேற "வழி" இல்லாம மலையாள படம் பார்த்ததால தான் காலம் முழுதும் "மலையாள" காற்று இவரு பக்கம் வீசுது .

கலையரசன் said...

- யாருமே அடிச்சுக்க முடியாது..

- ரொம்ப பிடிச்சப் படம். :)

- ரைட்டு

- keep it UP...

- really a nice one ....

- அதிரடி அலசல் !

- சக்கை போடு போட்ட படம்.

- சூப்பர் அப்பு..

- எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம்.

*****அனைவருக்கும் நன்றி!!*****

Prabhu said...

@கிஷோர்
// காலம் முழுதும்//
லைட்டா புரியுராப்ல இருக்கு. 1+1=2 னு கால்குலேட் பண்ணிக்குறேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

வினோத் கெளதம் said...

@ இராகவன் நைஜிரியா

//இந்த விஷயத்தில் அண்ணன் உ.த. வை யாருமே அடிச்சுக்க முடியாது.//

ஆமாம் தல அவரை மாதிரி எல்லாம் வாய்ப்பே இல்லை..

//மற்ற படங்கள் எதுவும் பார்த்த ஞாபகம் இல்லீங்க.//

நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்..பார்க்க கூடிய படங்களே.

@ ஹாலிவுட் பாலா

//அறங்கேற்ற வேளை, மளையாலத்தில் 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்'-னு சித்திக்-லால் இயக்கினப் படம். //

அந்த படத்துக்கு ஃபாசில் இயக்குனர் இல்லையா..நானும் அந்த படத்தின் காட்சிகள் சிலவற்றை பார்த்து உள்ளேன்.

//a-z எல்லாம்.. வெட்டிப் பசங்க எழுதுறது. அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க! :)//

அப்படி பார்த்தா நாங்க தானே அதிகமா எழுதி தள்ளனும்.:)

@ pappu..

//இந்த நாமக்கல் காரர் எப்படி இத்தனை மலையாளப் படம் பாத்திருக்காரு?//

வரலாறு தெரியாம பேசுறியே பப்பு..தலயோட ரசிகர் மன்றத்தில் இருந்து உன்னை தற்காலிகமாக தள்ளி வைக்கிறேன்..:)
தலைக்கும் 'தல'க்கும் ஒரு ஒற்றுமை உண்டு..

வினோத் கெளதம் said...

@ கண்ணா..

//பாசில் படம் எடுக்காம விட்டதை சாக்கா வச்சு நீ பாலாவையும், கார்த்திகேயனையும் ஓரண்டை இழுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.//

பழுத்த மரம் தான் கண்ணா கல்லடிப்படும்..

@ சென்ஷி

நன்றி அண்ணா..;)

@ வரதராஜலு .பூ

ஆமாங்க..வேகம் வேகமா எழுதுனேன்..இரவு நேரம் வேற ஆகிடுச்சு அதான் வேகமாவே முடிச்சிட்டேன்.

வினோத் கெளதம் said...

@ மகா

நன்றி மகா..

@ பூங்குன்றன்.வே

//அதுக்கப்புறம் பலமுறை டிவியில் போட்டாலும் பார்க்க பிடிப்பதில்லை.//

ஆமாம் நண்பா..சில காட்சிகளை தவிர படம் முழுவதையும் உக்கார்ந்து பார்க்க முடியாது..

@ ☀நான் ஆதவன்☀

//ஆனா என்ன.... தமிழ்ல மட்டும் ரேவதி ரோல். பாக்கி எல்லா படத்திலேயும் ரேவதி ரோலும் ஆண் தான் :)//

ஆனா ரேவதி நல்லா தானே பண்ணி இருந்தாங்க..ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் தான் இருந்தது..ஆமாம் இப்ப கூட இந்தியில் இரண்டாம் பாகம் வந்துச்சு..

வினோத் கெளதம் said...

@ KISHORE

//கற்பூர முல்லை அமலாவுக்காக எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம்.//

உன் வயசுக்கு ஸ்ரீவித்யான்னு தானே சொல்லி இருக்கணும்..:)

//நாமக்கல்காரர் வேற "வழி" இல்லாம மலையாள படம் பார்த்ததால தான் //

இப்படி மொட்டையா சொல்லாதே பசங்க எல்லாம் வேற எதோ மலையாளம் படம்னு நினைச்சிக்க போறாங்க..

@ கலையரசன்

திணற திணற அடிக்கிரனுங்களே..:)

@ pappu

//லைட்டா புரியுராப்ல இருக்கு. 1+1=2 னு கால்குலேட் பண்ணிக்குறேன்.//

ஸ்கூப் சொன்னா அனுபவிக்கனும் இப்படி கணக்கு போட்டுக்கிட்டு உக்கார்ந்து இருக்ககூடாது..

@ [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]

நன்றிடா..:)

Thenammai Lakshmanan said...

வருஷம் பதினாறு நல்ல படம் //யாரு அந்த ராதிகா //என்று என் மகன் பாடிக் கொண்டிருப்பான்

அரங்கேற்ற வேளை சிரித்து சிரித்து வயிறு புண்ணான படம்

காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ் மறக்கவே மறக்காது

கோபிநாத் said...

அட்டகாசம் மச்சி ;)

பா.ராஜாராம் said...

wel done!

பாலா said...

அடப்பாவிகளா..

இன்னிக்குத்தான்... நானும் அதை நினைச்சுப் பார்க்கறேன்.

தல’யோட வொய்ஃபை.. தமிழ் பொண்ணாவே நினைச்சு வளர்ந்தாச்சா..

மறந்தே போச்சி!!!

கும்மியடிக்க நாந்தான் சிக்கினேனா..! )

நடத்துங்க..!!

Nathanjagk said...

மறக்க முடியாத இயக்குநர்தான் ஃபாசில்!

Nathanjagk said...

இப்படிப்பட்ட கதைதான் வரும் என்று எப்போதும் எதிர்பார்க்க முடியாத ஒரு இயக்குநர் ஃபாசில்.

பின்னோக்கி said...

வருஷம் - 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை - கிளாசிக்ஸ்.

பெஸ்ட் - வருஷம்-16. பார்த்துவிட்டு (18 வருடங்களுக்கு முன்) 10 நாள் இந்த படத்தைப் பற்றிய நினைவு அகலவில்லை.

வினோத் கெளதம் said...

@ thenammailakshmanan

//வருஷம் பதினாறு நல்ல படம் //யாரு அந்த ராதிகா //என்று என் மகன் பாடிக் கொண்டிருப்பான் //

உங்க பையனிடம் கேளுங்கள் 'யாரு அந்த ராதிகான்னு'..சும்மா தமாசுக்கு சொன்னேன்..:)
நன்றிங்க..

@ கோபிநாத்

நன்றி மச்சி..;)

@ பா.ராஜாராம்

நன்றி தல..:)

வினோத் கெளதம் said...

@ ஹாலிவுட் பாலா

//கும்மியடிக்க நாந்தான் சிக்கினேனா..! )//


தல எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா சொல்லுங்க..:)


@ ஜெகநாதன்

//இப்படிப்பட்ட கதைதான் வரும் என்று எப்போதும் எதிர்பார்க்க முடியாத ஒரு இயக்குநர் ஃபாசில்.//

ஆமாம் மாறுப்பட்ட கதையமைப்பாளர்..

@ பின்னோக்கி

//வருஷம்-16. பார்த்துவிட்டு (18 வருடங்களுக்கு முன்) 10 நாள் இந்த படத்தைப் பற்றிய நினைவு அகலவில்லை.//

ஆமாம் கண்டிப்பாக இளமையில் அந்த படத்தை பார்த்த யாவருக்கும் அது வேறு ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும்..

divyahari said...

நீங்கள் சொன்ன எல்லா படத்தையும் பார்த்திருக்கிறேன் ஒரு நாள் ஒரு கனவு தவிர.. பாசில் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர்..

வினோத் கெளதம் said...

நன்றி திவ்யஹரி முதல் வருகைக்கு..

Prathap Kumar S. said...

தல இதை எப்பப்போட்டீங்க நான் கவனிக்கவே இல்லையே தல...அதுக்குள்ள வந்து கும்மி அடிச்சுடாய்ங்களா??? ரைட்டு

இதுல எல்லாப்படங்களும் பாத்துட்டேன். எனக்கு ரொம்பபிடிச்சப்படம் வருஷம் 16. படுசூப்பர் திரைக்கதை. அப்புறம் குஷ்பு ஸ்லிம்மா அழகா இருந்த ஒரேபடம். ம்ஹும் எப்படி இருந்த குஷ்பு...

கண்ணுக்குள் நிலவு பழைய கார்த்திக் அம்பிகா நடிச்ச கண் சிமிட்டும் நேரம் படம் மாதிரி இருக்கும்.
ஒருநாள் ஒருகனவு உலக மகா மொக்கை... நான் அனைக்குசொன்னா மாதிரி அது பாசில் படமான்னு சந்தேகமே வந்துடுச்சு. அப்புறம் கிளிப்பேச்சு கேட்கவா படம் ஓடியிருக்கனும்..ஆனா ஓடல சீரியஸ் மம்முட்டி நடிச்ச நல்லஒரு காமெடி படம். கற்பூரமுல்லை படம் ஓடாததற்கு காரணம் பூவே பூச்சடவா தாக்கம் இருந்தது.அப்பறம் படம் ஸ்லோ.

அரங்கேற்றவேளை எடுக்கப்பட்ட எல்லா மொழியிலயும் சூப்பர் ஸீட்.

நல்ல அலசல்...

//இப்படி மொட்டையா சொல்லாதே பசங்க எல்லாம் வேற எதோ மலையாளம் படம்னு நினைச்சிக்க போறாங்க//

நானும் அப்படித்தான் நினைச்சேன். ஷகிலாக்கா ஞாபகம் வந்துடுச்சு

Raji said...

Arumaiyaana Pathivu...
Mudinthaal K.Balachandar sir patri oru pathivu podavum.

Raji

நாடோடி இலக்கியன் said...

ஒரு நாள் ஒரு கனவைத் தவிர மற்ற எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்.
வருஷம் 16,அரங்கேற்ற வேளை இரண்டும் ஆல் டைம் ஃபேவரைட் படங்கள்.

”கிளி பேச்சுக் கேட்கவா”,”கற்பூர முல்லை” இரண்டும் ஓடாத நல்ல படங்கள்.

காதலுக்கு மரியாதை கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது வெளிவந்தது,தொடர்ந்து 7 நாட்கள் பார்த்த படம்.

கண்ணுக்குள் நிலவு சொதப்பலான ஸ்கீன் பிளேவாலும்,ஏகப்பட்ட எதிரபார்ப்பாலும் அட்டர் ஃபிளாப்பான படம்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இயக்குனரைப் பற்றி தரமான பதிவு.


மோகன்லால்,நயந்தாரா நடிப்பில் ஃபாசில் இயக்கிய விஸ்மயதும்பத்து பார்த்திருக்கீங்களா நண்பரே.ரொம்ப நல்ல டைரக்‌ஷன்.

வினோத் கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப்

//அப்புறம் குஷ்பு ஸ்லிம்மா அழகா இருந்த ஒரேபடம். ம்ஹும் எப்படி இருந்த குஷ்பு...//

சின்ன தம்பி, குரு சிஷ்யன் இதுல எல்லாம் கூட கொஞ்சம் 'ஸ்லிமா' தான் இருப்பாங்க..:)

//கண்ணுக்குள் நிலவு பழைய கார்த்திக் அம்பிகா நடிச்ச கண் சிமிட்டும் நேரம் படம் மாதிரி இருக்கும். //

பிரதாப் ஆனா அது ஒரு த்ரிலர்..இதுல Screenplay சுத்த சொதப்பல்..

//அப்புறம் கிளிப்பேச்சு கேட்கவா படம் ஓடியிருக்கனும்..ஆனா ஓடல சீரியஸ் மம்முட்டி நடிச்ச நல்லஒரு காமெடி படம். //

இதுலயும் கொஞ்சம் மெதுவான கதையமைப்பு..ஆனா பார்க்கிற மாதிரி தான் இருந்தது..

@ Raji

கண்டிப்பா நேரம் கிடைக்கும்ப்பொழுது எழுதிவிடுகிறேன் தல..எனக்கும் பாலச்சந்தர் அவர்களின் படங்களை பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று ஒரு ஆசை..நன்றி..:)

@ நாடோடி இலக்கியன்

//கண்ணுக்குள் நிலவு சொதப்பலான ஸ்கீன் பிளேவாலும்,ஏகப்பட்ட எதிரபார்ப்பாலும் அட்டர் ஃபிளாப்பான படம்.//

நன்றி தல முதல் வருகைக்கு..:)
ஆனா இந்தப்படம் எனக்கு கொஞ்சம் பிடித்து இருந்தது அப்பொழுது பார்க்கும்பொழுது.

//மோகன்லால்,நயந்தாரா நடிப்பில் ஃபாசில் இயக்கிய விஸ்மயதும்பத்து பார்த்திருக்கீங்களா நண்பரே.ரொம்ப நல்ல டைரக்‌ஷன்.//

இல்ல தல பார்த்தது இல்லை..
நீங்கள் மலையாளத்தில் பாசில் படங்கள் பற்றி ஒரு பதிவு போட்டுவிடுங்கள்..:)