Thursday, March 22, 2012

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு..

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு..

அமீரக வாழ்க்கைக்கு ''டாட்டா'' காட்டிவிட்டு வந்து மாதங்கள் கடந்து விட்டன. குடும்ப வாழ்க்கை மிக வேகமாக , ஜோராக சென்று கொண்டிருப்பதால் 'இந்த' பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியவில்லை. சரி எழுதுவோமே அப்படின்னு போன நிமிடம் முடிவெடுத்து இந்த நிமிடம் எழுத ஆரம்பிக்கிறேன்.

பசங்க..

விரிவுரையாளனாக மாறிய பிறகு கொஞ்சம் கோபப்பட ஆரம்பித்து விட்டேன் இல்லை மாற்றப்பட்டு விட்டேன். கல்லூரி எளிதாக என் மனநிலையை மாற்றி விட்டது. பல ஆசிரியர்களுக்கே உரிய அந்த சர்வதிக்காரப்போக்கு என்னையும் பிடித்துவிட்டது (வினோத்து நீ 'யூத்து'டா ஒரு யூத்தோட பீலிங்க்ஸ் இன்னொரு யூத்துக்கு தான் தெரியும் என்று மனசு சொன்னாலும்). அவங்க பண்ணுகின்ற சின்ன சின்ன காரியங்கள் கூட என்னை நம்பியார் போல பாவிக்க வைக்கின்றன (.ம்) ஒரு பெண் மாணவர்களை கடந்து செல்லும்பொழுது அவர்கள் எதாவது சிரித்து பேசினால் கூட அவர்களை முறைத்து பார்க்கிறேன். பசங்க அப்படி தான் இருப்பாங்க என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது.சிம்பிள் லாஜிக், கல்லூரியில் புதிதாக சேரும் மாணவன் ''யப்பா, தப்பிச்சோம்டா ஸ்கூல் லைப்லிருந்து இனி ஜாலி தான்'' என்கின்ற மனநிலையோடு தான் வருகின்றான். தப்பிதவறி அவர்கள் அடியெடுத்து வைக்கும் காலேஜ் ஒரு முதன்மை கல்லூரியாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மாணவர்களை ''ஏன்டா இந்த காலேஜ்க்கு வந்தோமென்று'' யோசிக்க வைத்து விடுகின்றது. அவ்வளவு கெடுபிடிகள், கட்டுப்பாடுகள். எல்லாமே ரிசல்ட் என்னும் மாய மோகினிக்காக. அதனால் அவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் எங்களை போன்ற ஆசிரியர்களையும் ஒரு கட்டத்தில் அடக்கிவிடுகிறது. அந்த கட்டுப்பாடுகளே என்னை போன்றவர்களையும் மாற்றி விடுகிறது. அதுவும் முன்பு இருந்தது போல இல்லாமல் பசங்களுக்கு வெளியுலக விஷயங்களும், தொடர்புகளும் குறுகி போய்விட்டன. வீட்டுக்கு போனால் மொபைல், FB இவை இரண்டும் போதும். கல்லூரியில் படிப்பின் வழியாக திணிக்கப்படும் அழுத்தம், அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் தொழில்நுட்பத்தின் மூலம் திணித்து கொள்கிறார்கள். பாவம் பசங்க.

புதுச்சேரி..


ஏன் இந்த ஊரு இப்படி மாறுச்சுன்னு தெரியல. புதுவை என்றாலே ஏதோ ஒரு தனித்துவம் வாய்ந்த அழகு என்று யார் சொல்லியும் கேக்கலாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்வரை. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்.எங்கே போனாலும் கூட்டம், நெருக்கம், டிராபிக், கடுப்பு..பாண்டிச்சேரி இன்னொரு சென்னையாக மாறிக்கொண்டு வருகிறது. ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த புதுவையை நினைத்து மனது ஏங்குகிறது.இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி பக்கத்து வீட்டு அல்லக்கை நாய் வரை ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து ஊரையே பாதி மறைத்து கொள்கிறார்கள். இதில் இந்த சினிமாக்காரர்கள் வேறு ஆனாஊனா கையில் கேமராவை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுகிறார்கள்(இனிமேல் அதுவும் இருக்காது 'தானே'க்கு பிறகு மரமெல்லாம் முக்கால்வாசி காணாமல் போய்விட்டது).இனிமேல் நினைத்தாலும் பழைய பாண்டியை பார்க்கமுடியாது..முழுவதும் வர்த்தக மயம்மாக்கப்பட்டு நிறையவே சிரழிந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு இன்னும் மோசம். எந்த கடை திறக்குதோ இல்லையோ காலையில் 8 மணிக்கெல்லாம் இந்த BARரை திறந்து வைத்துகொள்கிறார்கள். அதற்காவது இந்த நேரத்தில் தான் திறக்க வேண்டுமென்ற கட்டுப்பாடை கொண்டு வரலாம்.ஊரிலிருக்கும் பெருபான்மையான தியேட்டர்களை இடித்து தள்ளிவிட்டு ஒரே தியேட்டரில் ஒன்பது படத்தை ஓட்டுகிறார்கள்.இப்படி சகலவிதத்திலும் பாண்டி திராபையாக மாறிவிட்டது.

8 comments:

Raju said...

ரொம்பநாள் கழிச்சி...
வாங்கய்யா..வாத்தியாரய்யா..!
:-)

வினோத் கெளதம் said...

வந்துட்டேன் ராஜு வந்துட்டேன் ..

கோபிநாத் said...

வாய்யா வாத்தியாரே ;-))

வினோத் கெளதம் said...

வந்துட்டேன் வந்துட்டேன்..:)

இராஜராஜேஸ்வரி said...

பாண்டிச்சேரி இன்னொரு சென்னையாக மாறிக்கொண்டு வருகிறது.

வருத்தமான செய்தி..

வினோத் கெளதம் said...

ஆமாம்ங்க வருத்தமான விஷயம் தான்..

kishore said...

wat an article... excellent

Sivaranjani said...

//"கல்லூரியில் படிப்பின் வழியாக திணிக்கப்படும் அழுத்தம், அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் தொழில்நுட்பத்தின் மூலம் திணித்து கொள்கிறார்கள். பாவம் பசங்க."//
இதை ஒரு வாத்தியாரிடமிருந்து கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது :)
நீங்க ஒருத்தராவது எங்களைத் தெளிவாக புரிந்து வைத்திருகிறீர்களே !! நன்றி..