கொஞ்சம் சீரியஸ் :
இனிமேல் இவர்களை பற்றி எழுத கூடாது என்று இருந்தேன் ஆனால்முடியவில்லை..தன்னை அறிவாளிகளாக மட்டுமே முன்னிறுத்துவதிலும், தமிழ்சமுகத்தின் மீது எப்பொழுதும் குறை சொல்லி கொண்டு இருப்பதிலும்இவர்களுக்கு என்ன திருப்தி என்பது கொஞ்சம் மனோதத்துவரீதியாக யோசித்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டும் என்னால் சொல்லமுடியும் ஆனால் அது இப்பொழுது வேண்டாம்..
சீரியஸ் ஆக காரணம் ஓன்று:
தேக்கடியில் நடந்த படகு விபத்துக்கு காரணம் அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப அந்தஅறிவாளிகள் காரணம் சொல்லுவது அது சென்னையில் தயாரிக்கப்பட்ட படகுஎன்றும் அதனால் தான் அப்படி ஆச்சு என்றும். கடைசியாக "ம்ம்ம்..தமிழ்நாட்டுல இருந்து போட் அனுபிச்சு சாக அடிச்சிட்டிங்க"..என்றுஎன்னிடமே சொல்லுகிறார்கள்..
காரணம் ரெண்டு:
எதோ ஒரு விஷயத்தை நண்பர் அறையில் நானும் அவரும் விவாதித்து கொண்டு இருந்தப்பொழுது அங்கே இருந்த அறிவாளி ஒருவர் சம்பந்தமே இல்லாமல் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதற்கு அவரே சொன்ன பதில்.."இதுஎல்லாம் எங்கே உங்களுக்கு தெரிய போகிறது..அது எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் ஆகும்".. என்றார்..இத்தனைக்கும் அவர் கேட்ட கேள்வி ரொம்ப சாதரணமான ஒரு கேள்வி தான்..
எங்கே இருந்து இவர்களுக்கு நம் மீது இப்படி ஒரு எண்ணமும் காண்டும்..நான் அறிவாளிகள் என்று சொல்லுவது யாரை என்பது புரிந்து இருக்கும்..நான் பார்த்த வரையில் நிறைய அறிவாளிகளுக்கு இதேப்போல் எண்ணம் இருக்கின்றது..
சத்தியமாக தனிப்பட்ட முறையில் எந்த காண்டும்அவர்கள் மேல் எனக்கு இல்லை..நல்லவிதமாகவும் பழகுகிறார்கள்..ஆனால் எல்லா சமயத்திலயும் வாலை நிமிர்த்த முடிவதில்லை.
கொஞ்சம் சினிமா:
The shining .."ஹாலி பாலி" எழுதிய விமர்சனம் அப்பொழுதே படம் பார்க்க தூண்டியது.ஆனால் இப்பொழுது சமிபத்தில் தான் பார்த்தேன்.."டேய்.. Horror ஃபிலிம்னா இப்படி தாண்ட இருக்கணும்" என்று சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நெத்தியடி அடித்து இருக்கிறார் அதன் இயக்குனர் அப்பொழுதே(1980) . இது வரை நீங்கள் எது மாதிரி ஹாரர் அல்லது த்ரிலர் படம் பார்த்து இருந்தாலும் கண்டிப்பாக இது வேறு ஒரு வகையான அனுபவத்தை உங்களுக்கு கொடுத்து விடும்..காட்சிகள் ஒவ்வொன்றும் ஒளிப்பதிவும் மற்றும் ஒலிப்பதிவும் நம்மை இணைந்து கொண்டு மிரட்டி இருக்கின்றன...அருவெறுக்கதக்க காட்சிகள் எதுவும் இல்லாமலேயே மூன்று பிரதான கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் நம்மை மிரட்டி இருப்பது பிரமிப்பை ஏற்படுத்துக்கிறது. படம் பார்க்கும் நமக்கும் உளவியல்ரீதியாக அந்த திரைக்கதை அமைப்பு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அந்த கதையின் ஊடே அழைத்து செல்வது தான் இந்த படத்தின் வெற்றி..
அந்த சிறுவன் அந்த "சகோதிரிகளை" பார்ப்பது, நம் புருஷன் விடிய விடிய அப்படி என்ன தான் உக்கார்ந்து டைப் பண்ணிட்டு இருக்கான் என்று அந்த பெண்மணி அந்த பேப்பரை பார்ப்பது(சில பதிவர்கள் வீட்டுல கூட இதே மாதிரி நினைக்க வாய்ப்பு உண்டு), அந்த சிறுவன் RedruM என்ற வார்த்தையை கண்ணாடியில் பார்த்து கொண்டே அலறுவது இப்படி நிறையா காட்சிகள் அட்டகாசம் குறிப்பாக க்ளைமக்ஸ்.
கொஞ்சம் கவிதை:
நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..
38 comments:
நீ சொன்ன அந்த அறிவாளிக தொல்லை இங்கேயும் தாங்க முடியலை மச்சி இவிங்கள என்ன பண்ணலாமுன்னு துபாய் ராஜாகிட்ட கேட்டா கூட அவரு என்ன சொல்லுவாரு தெரியுமோலியோ..
நோக்காம்....ஹ ஹ..ஹா
ஹாலி பாலி-யா.. ஹா.. ஹா.. எல்லாரும் நல்லா பேரு வைக்கறீங்களே?! :)
இனிமே.. கவிதை.. அரசியல் எல்லாம் எழுதக் கூடாது தெரியுமில்ல? :(
பர்மிஷன் வாங்கனுமாம்.
//நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..//
்ம்ம்ம் நல்லாயிருக்கே
கவிதை சூப்பர் ... வாரியார் சொன்ன ஒரு சிறு துளி, மனைவியின் முடி சாப்பாட்ல பார்த்தவுடன் குதிக்கும் /கொதிக்கும் கணவர்கள் தான் நிறைய உண்டு..இதுக்கு போய், ஏன்யா இப்படி கத்துறீங்க, .... அதையே " கண்ணே , இந்த முடி இந்த ஆகராதில் இருப்பதை விட உன் தலையில் இன்னும் அழகாக இருக்கும் " ..அப்படின்னு சொன்னா - .மனைவியின் ரீஆக்க்ஷன் எப்படின்னு சொல்லனுமா என்ன !!!!!
///////
கண்ணே , இந்த முடி இந்த ஆகராதில் இருப்பதை விட உன் தலையில் இன்னும் அழகாக இருக்கும்
////////
அதுக்கு பதிலா...
கண்ணே.. உன் தலையில் முடியாவது இருக்கட்டும் -ன்னு
சொன்னா... ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு நினைக்கறீங்க?
பேச்சிலர் லைஃப்!!!! ஹுஹ்ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!! :) :)
//வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..//
என்ன ஒரு கால் கிலோ தேறுமா?
என்னாங்கடா? 1 முடின்னா பரவாயில்ல...
கற்றாமுல்ல, கற்று!!
வினோத்... இவங்க எல்லாம் அன்பால் சேர்ந்த கூட்டம்-ன்னு தெரியுது. ஆனா.. எப்படி.. நச் நச்-ன்னு இப்படி ஓட்டு போடுறாங்க?
எனக்கு 4-ஐ தாண்டுறதே பெரிய மேட்டரா இருக்கு! :) :) :)
//நான் அறிவாளிகள் என்று சொல்லுவது யாரை என்பது புரிந்து இருக்கும்//
யாரை சொல்ற? எனக்கு தெரியலை! நான் மரமண்டை.
"பப்பரப்பா"ன்னு ஓப்பனா சொல்லுங்க பிரதர்...
வினோத்...
நீ சொன்ன அந்த அறிவாளிக தொல்லை இங்கேயும் தாங்க முடியலை :)
கவிதை சூப்பர் ...
நல்லா இருக்கு நண்பா.. நம்மால எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது.. நாம் அறிவாளின்னு யாருக்கும் ப்ரூப் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது நண்பா.. படம் பத்தின அறிமுகங்கள் இன்னும் நிறைய எழுதுங்க.. அப்புறம் அந்தக் கவிதை.. ஏதாவது விசேஷம் இருக்காப்பா?
அந்த அறிவாளிகள் நம்மக்களை மட்டும் ஒரு எதிரியான கோணத்துலேயே பாக்குறானுங்க அது மட்டும் ஏன் என்று விளங்கவில்லை.... தமிழ் நாட்டிலே எத்தனையோ மக்கள் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க அதையும் அவங்க காதுலே போட்டு வைங்க
அந்த அறிவாளிக தமிழர்களை எப்பவுமே இளக்காரமாதான் பாக்குறாங்க பாஸ்..
சூப்பர்ருங்கன்னோவ்.. உங்க பதிவர் சந்திப்பு பற்றி ஒருத்தரும் பதிவு போடல?
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
\\நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..\\
மாப்பி என்டா ஆச்சு..! ;))
@ பிரியமுடன்...வசந்த்..
ஆமாம் மச்சி கொஞ்சம் விட்ட துபாய் ராசவையே மாத்திடுவனுங்க..இந்த கொசுங்க தொலை தாங்க முடியுல..
@ஆ.ஞானசேகரன்
நன்றி தல..
@ ஹாலிவுட் பாலா..
//இனிமே.. கவிதை.. அரசியல் எல்லாம் எழுதக் கூடாது தெரியுமில்ல? :(
பர்மிஷன் வாங்கனுமாம். //
யாருக்கிட்ட தல..!!!
@ அது ஒரு கனாக் காலம் ..
சுந்தர் சார் சூப்பர் மேட்டர் சொல்லி இருக்கீங்க...வாரியார் சொன்ன தகவல் பற்றி..நன்றி..:)
@ ஹாலிவுட் பாலா.
//பேச்சிலர் லைஃப்!!!! ஹுஹ்ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!! :) :) ///
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரியுதடா..
ரொம்ப லேட்..:))
@ கலையரசன்..
//என்னாங்கடா? 1 முடின்னா பரவாயில்ல...
கற்றாமுல்ல, கற்று!!//
யோவ்..நானே ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடைவைனு எப்பயாச்சும் கவிதை எழுதுறேன்..அதையும் குறுக்க புகுந்து கலைக்கிற..எல்லோரும் சிரிப்ப அடக்கிட்டு "ரொம்ப நல்லா இருக்கு தம்பின்னு" சொல்லிட்டு போலியா அதே மாதிரி சொல்லிட்டு கிளம்பு..
@ ஹாலிவுட் பாலா..
//ஆனா.. எப்படி.. நச் நச்-ன்னு இப்படி ஓட்டு போடுறாங்க?//
தல..நாங்க எல்லாம் இங்க ஒரு குரூப்பா இருக்கோம்..யாராச்சும் ஒருத்தர் வோட்டு போடுலலானும்..அடுத்த நிமிஷமே ஒரு போன் கால்..அதுக்கு பயந்து தான் எல்லோரும் சட்டு சட்டுன்னு போடுறாங்க..:)))
//எனக்கு 4-ஐ தாண்டுறதே பெரிய மேட்டரா இருக்கு!//
நிறை குடம் என்னிக்கு தழும்பி இருக்கு..
@ கலியரசன்..
//யாரை சொல்ற? எனக்கு தெரியலை! நான் மரமண்டை.//
உனக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா...:))
@ ச.செந்தில்வேலன்..
நன்றி செந்தில்..:)
@ கார்த்திகைப் பாண்டியன்..
இருந்தாலும் சில சமயம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பார்த்து எரிச்சல் வருகிறது..
படங்கள் பற்றி இனி விரிவாக செய்கிறேன்..
//அந்தக் கவிதை.. ஏதாவது விசேஷம் இருக்காப்பா?//
அப்படி எதாவது இருந்தா அதையும் சொல்லி இருப்பேன் :))
@ அபுஅஃப்ஸர் ..
//தமிழ் நாட்டிலே எத்தனையோ மக்கள் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க அதையும் அவங்க காதுலே போட்டு வைங்க//
அதே தான் அதை வசதியாக மறந்து விடுகிறார்கள் ..
@ தீப்பெட்டி..
ஆமாம் கணேஷ் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..:(
@ Kishore..
//உங்க பதிவர் சந்திப்பு பற்றி ஒருத்தரும் பதிவு போடல?//
டேய் கலை போட்டோ அனுப்ப மாட்றான்..
@ பிரபா ..
கண்டிப்பா வரேன் பிரபா வருகைக்கு நன்றி..
@ கோபிநாத்..
நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை மச்சி..சும்மா ஒரு தமாசுக்கு எழுதினேன்..
வினோத் அதென்ன கொஞ்சம் சீரியஸ்.... நிறைய சீரியஸாவே இரு அந்த விசயத்துல. நமக்கு அனுபவம் நிறைய :)
அந்த படம் இன்னைக்கு டவுண்லோடு போட்டுடவேண்டியது தான்.
கவிதை : ங்கொய்யால.......
வளைகுடால இருக்குற எல்லாரும் அவனுங்க மேல ஒரு காண்டுலதான் இருக்கீங்க! எவனாவது ஓவரா பேசுனான்னா ஷகீலா படத்த பாத்தோமா போனமான்னு இல்லாம அறிவப் நீ எல்லாம் பேசாதன்னு சொல்லிருங்க :)
///கண்ணே.. உன் தலையில் முடியாவது இருக்கட்டும் -ன்னு
////
வரவர ஹாலியோட டபுள் மீனிங் தாங்கல! சில சமயம் புரிய மாட்டேங்குது! :( (சின்னப் பையங்க)
வினோத் தல் ஏன் இப்படி கவிதை எல்லாம்... நான் கூட கடசியா கெட்ட வார்த்தைல முடியுற மாதிரி ஒரு இங்கிலிபீசு கவித வச்சிருக்கேன். பப்ளிஷ் பண்ணிக்கிட்டா இருக்கோம். போங்க பாஸூ!
//நான் கூட கடசியா கெட்ட வார்த்தைல முடியுற மாதிரி ஒரு இங்கிலிபீசு கவித வச்சிருக்கேன். //
அந்த கெட்ட வார்த்தை என்னான்னு எனக்கு தெரியும்.. "p" ல ஆரம்பிச்சி"u" ல முடியும் நடுவுல ஒரு "a" ரெண்டு "p" தவிர எதுவும் இல்ல.. முடிஞ்சா கண்டு பிடிச்சிகொங்க ..
ஸ்டேன்லி குப்ரிக்கின் “க்ளாக் வொர்க் ஆரஞ்ச்” பாருங்கள், இன்னும் அருமை!
Serious correct,cinema-ok,Kavithai pinniputtiyeppa.
///ஸ்டேன்லி குப்ரிக்கின் “க்ளாக் வொர்க் ஆரஞ்ச்” பாருங்கள், இன்னும் அருமை!///
எழுதி வச்சி மாசக் கணக்கா, ட்ராஃப்டில் இருக்கு. சரியான நேரம் வரட்டும்னு வெய்ட்டிங். நவம்பரில் 18+ எழுதும்போது இதையும் பப்ளிஷ் பண்ணிட வேண்டியதுதான்.
=====
அப்புறம் வினோத். பொட்டலம் பிரியாணியும், 500 ரூபாயும் கொடுத்தா... நமக்கும் ஓட்டுப் போடுவாங்களா? :) :) :)
ச்ச்சே.. இப்படி அத்துவான ஃப்ளோரிடாவுல நான் மட்டும் மாட்டிகிட்டேனே..!
நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..//
சூப்பர்,வினோத்.உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?
shining நெற்று blue ray வாங்கி வந்தேன்.ஆனால் நீங்கள் எழுதியதைப் படித்தவுடந்தான் நான் ஏற்கனவே பார்த்த படம் என நினைவுக்கு வருகிறது.
உங்கள் முதல் சீரியஸ் மேட்டர் பற்றி எனக்கு அனுபவமில்லை.
நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..//
என்ன அற்புதமான வரிகள்
ஐந்து முறை படித்தேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சுப்பா குரு.
இனி தொடர்ந்து விமர்சனத்தில் இறங்கவும். மிக கலை நயத்துடன் எழுதப்பட்ட வித்தியாசமான விமர்சனம்
அடிக்கடி எழுதனும் என்ன?
பாலாண்ணே , நீங்க வேற. நான் தமிழ்நாட்டுல இருந்துட்டே அதுவும் மதுரைல இருந்துட்டே ஓட்டு வாங்க முடியாம தவிக்கிறேன். நீங்க என்னடான்னா புளோரிடால் இருந்துட்டு நம்ம ஊரு டெக்னிக் சொல்றீங்க.
நியாயமான கேள்விதான் பப்பு. பிரேம்ஜி, ஒருநாள் கேட்டாரு!!
“என்னது உங்க ப்ளாக் இப்பல்லாம் வலையுலக ஜோதி தியேட்டர் மாதிரி ஆய்டுச்சி”-ன்னு (ஆனா ஃபர்ஸ்ட் அட்டண்டன்ஸ் போடுறது அவருதான் :D ).
அதான் வேலைக்கு ஆகும்போல!
@ நான் ஆதவன்..
//நமக்கு அனுபவம் நிறைய//
ஒஹொ ரைட்டு ..
//கவிதை : ங்கொய்யால.//
என்னமா ஃபீல் பண்ணி ஒரு கவிதை எழதுனா அவ்வளவு சுலபத்துல விட மாட்டிங்கலே :))
@ Pappu..
//சில சமயம் புரிய மாட்டேங்குது! :( (சின்னப் பையங்க)//
யாரு நீயீ சின்னப்பையன்..உலகம் நம்பிடும்..
//நான் கூட கடசியா கெட்ட வார்த்தைல முடியுற மாதிரி ஒரு இங்கிலிபீசு கவித வச்சிருக்கேன். பப்ளிஷ் பண்ணிக்கிட்டா இருக்கோம். போங்க பாஸூ!//
அப்ப என்ன இதை கெட்ட வார்தை கவிதைன்னு சொல்லுறியா..டேய் நான் ஒரு அர்த்ததுல எழதுனா நீ ஒரு அர்த்தம் பன்னுற..பிச்சு பிச்சு ..:)
இருந்தாலும் அந்த இங்கிலிபீசு கவித எனக்கு மட்டும் Mail பண்ணு ..
@ Kishore..
Is it a WOrk..??
@ வால்பையன்
//ஸ்டேன்லி குப்ரிக்கின் “க்ளாக் வொர்க் ஆரஞ்ச்” பாருங்கள்,//
கண்டிப்பா பார்க்கிறேன் வால்ஸ்..:))
//நவம்பரில் 18+ எழுதும்போது //
ஹை November மாதம் ஜாலீ ..
//பிரியாணியும், 500 ரூபாயும் கொடுத்தா... நமக்கும் ஓட்டுப் போடுவாங்களா?//
ஒன்னும் இல்ல தல..எனக்கு ஒரு 500 US $ மாசம் மாசம் அனுப்புங மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறென்.
@ ஷண்முகப்ரியன்..
//சூப்பர்,வினோத்.உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?//
நன்றி சார்..ஏன் எதாச்சும் ஸோகமா எழதுன மாதிரி இருக்கா இன்னும் ஆகவில்லை சார்..:)
//ஏற்கனவே பார்த்த படம் என நினைவுக்கு வருகிறது.//
கண்டிப்பா பார்த்து இருப்பிங சார்.
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
//என்ன அற்புதமான வரிகள்
ஐந்து முறை படித்தேன்.//
//இனி தொடர்ந்து விமர்சனத்தில் இறங்கவும். மிக கலை நயத்துடன் எழுதப்பட்ட வித்தியாசமான விமர்சனம்
அடிக்கடி எழுதனும் என்ன?//
இது எல்லாம் எதோ கிண்டல் பண்ணுற மாதிரியே இருக்கே குரு..
உண்மையா சொல்றீங்க..
ennamonga.. andha maathiriyaana arivaaligala naan enoda vazhkaila paathathu illa...
Chennai-laye irukkurathu naalayo ennavo...
Kavidhai nach-nu irundhudu..
andha padatha seekram paakanum... :)
நன்றி கனகு..பார்க்காத வரைக்கும் நல்லதுன்னு நினசிக்குங்க..:))
கலக்கறியே வினோத்! :-)))
தமிழரை இப்படி பேசும் அந்த அறிவாளிகள் யாரென அறியலாமா வினோத்...
The Shining - பார்த்திட்டு சொல்றேன்.
கவிதை நல்லாருக்கு. நீங்க எழுதினதா....
நன்றி சென்ஷி...:)
@ விக்னேஷ்வரி ..
நன்றி விக்கி..
அந்த அறிவாளிகள் நம் பக்கத்து மாநிலத்தின் சொந்தக்காரர்கள்..
அந்த படம் உண்மையில் ஒரு Superb Thriller கண்டிப்பா பாருங்கள்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
நன்றி வினோத்
இனி அடுத்த இந்திய விசிட் எப்ப
கலையரசன் சொன்னது
ஏன்டா நீ இந்தியாவை விட்டு இன்னும் வரலையா
hahaha
ஆமா யாரொட முடி அது
வீணையை எங்கேருந்து எடுத்து வந்தீங்க
ரியலி நைஸ்
பொண்ணு பார்த்துட்டு வந்து இருக்கீங்கன்னு நினக்குறேன்
சில பேரோட வாலை நிமிர்த்தமுடியலைதான்
அதும் சூப்பர் பன்ச்
தெ ஷைனிங் சூப்பர்ப்
நிறைய முறை பார்த்து பயந்து இருக்கிறேன்
அந்த எழுத்தாளர் , அவரது மகன் மற்றும் மனைவி
நல்ல படம்
@ thenammailakshmanan..
நன்றிங்க..
இனி அடுத்த இந்திய விசிட் எப்ப வேணாலும் இருக்கலாம் மூன்று மாதமும் ஆகலாம் ஆறு மாதமும் ஆகலாம்..
அய்யோ..பொண்ணு எல்லாம் ஒன்னும் பார்கலிங்க..அது ஒரு Flowல வந்த கவிதை..
Post a Comment