Tuesday, September 15, 2009

பீலிங்க்ஸ் ஆஃ ப் இந்தியா..

போன வாரம் செவ்வாய்க்கிழமை காலையில் எழுந்து இருக்கும் பொழுது மனம் முழுவதும் ஒரு வெறுமை குடிக்கொண்டு இருந்தது..இன்னிக்கு மறுபடியும் ஊருக்கு(துபாய்) இல்லை ஜெயிலுக்கு செல்ல போகிறோம் என்ற உணர்வே என்னை எதிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறடித்து கொண்டு இருந்தது..மணித்துளிகளை எண்ண ஆரம்பித்து இருந்தேன்..

என் அம்மா வேறு "வினோத் கோவிலுக்கு சென்று விட்டு வந்து விடலாம்" என்று சொன்னப்பொழுது இன்னும் "பக்" என்று உணர்தேன்..கோவிலுக்குபோனா இன்னும் நேரம் விரயம் ஆகுமே என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன்..வண்டியில் செல்லும் பொழுது சாதரணமாக ரோட்டில் சிரித்து பேசிக்கொண்டு செல்பவர்களை பார்க்கும் பொழுது இன்னும் ஆத்திரமாக வந்தது.."எல்லாம் இன்னையோட போச்சே" என்று எனது ஆழ்மனம் அலறியது..மணக்குள விநாயகர் கோவிலையும், வேதபுரிஸ்வரர் கோவிலையும் அன்று வித்தியாசமான மன சிந்தனையோடு பார்த்தேன்..

திரும்பி வீட்டுக்கு வந்து சாப்பிடும் பொழுது என் அம்மா சாப்பாடு பார்த்து பார்த்து உபசரித்த விதம் வேறு இன்னும் எரிச்சலை தான் ஊட்டியது..உண்மையில் பரோலில் வந்த "ஜெயில் கைதி"மறுபடியும் ஜெயிலுக்கு போவதை போல் என் கண்ணோட்டத்தில் இருந்தது வீட்டில் இருந்த அனைவரின் பேச்சும் உபசரிப்பும்..

ஒரு வழியாக வீட்டில் இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்து எல்லோரிடமும் சொல்லி விட்டு கிளம்பினேன்..வழி அனுப்ப என் பெற்றோர் அப்புறம் சில உறவினர் வந்தனர்..வண்டியில் செல்லும் பொழுது நான் ஒரு மாதமாக விரும்பி கேட்ட சில பாடல்கள் அன்று கேட்ட பொழுது என் அழுகையை தூண்டும் விதமாக இருந்தது..என் அப்பா என் மனநிலையை அறிந்துக்கொண்டு என் "மூடை" மாற்றும் விதமாக சினிமாவை பற்றி "அஞ்சாதே. மிஷ்கின், wednesday , உன்னை போல் ஒருவன்" என்று பேசிக்கொண்டு வந்தார்..என் அப்பாவின் சினிமா அறிவும், இலக்கிய அறிவும் எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தும்..நானும் கூட சேர்ந்து உரையாடுவேன்(சினிமா டாபிக் மட்டும்)..ஆனால் அன்று "உம்" மட்டுமே கொட்டிக்கொண்டு வந்தேன்..

மனம் முழுவதும் சில கேள்விகள் திருப்பி போய் தான் ஆக வேண்டுமா..இங்கேயே வேலை தேடிக்கொள்ளலாமே போன்ற சிந்தனைகள் மறுப்படியும் ஆக்கிரமிக்க தொடங்கின..ஆனால் அதே எண்ணத்தை நண்பர்களிடமும், சில உறவினர்களிடமும் வெளிப்படுத்திய பொழுது அவர்கள் சொன்ன பதில்கள் என்னை அந்த எண்ணத்தை யோசிக்க செய்து இருந்தது.."ஐயோ வினோத் மறுபடியும் இங்க வேலை செய்யபோறியா வேணாம்டா வாழ்கையே போச்சு" என்கிற ரீதியில் தான் இருந்தது பெரும்பாலனவர்களின் பதில்கள்.."யே நீ படிச்சு இருக்க இங்கயே நல்ல வேலை கிடைக்கும்" என்று பதில் சொன்னவர்கள் ஒருவர் இல்லை இருவர்..

ஏர்போர்ட் உள்ளே நுழையும் பொழுது அங்கே பணிப்புரியும் அப்பாவின் நண்பர் நின்று கொண்டு இருந்தார்..அவர் வேறு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றும் விதமாக "என் பொண்ணு போன வாரம் தான் அவள் தோழிகளோடு நயாகரா நீர்வீழ்ச்சி சென்று விட்டு வந்தால்" என்று கனடாவில் பணிப்புரியும் அவர் பெண்ணை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்.."பெண் பிள்ளைகளே தேசம் கடந்து வேலை செய்கிறார்கள் ஆண் பிள்ளைகளுக்கு என்ன என்கிற ரீதியில் இருந்தது அவர் பேச்சு..அவருக்கு என்ன தெரியும் என் "பீலிங்க்ஸ்" என்று நினைத்துக்கொண்டேன்..

கடைசியாக கிளம்பும்ப்பொழுது அம்மாவின் முகத்தை ஒரு சில நிமிடங்கள் உற்று பார்த்துவிட்டு கிளம்பினேன்..இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்து இருந்தால் "ஓ"வென்று அழுது இருப்பேன் என்று மட்டும் தெரியும்..கடவுளே அடுத்த ஜென்மத்திலாவது என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்ளும்படியான தீர்க்கமான சிந்தனையை கொடு என்று விமானத்திற்கு காத்து இருந்தேன் சில மணி நேரங்களாவது போதையின் பிடியில் எண்ணங்களை சிதறடிக்க..

(டிஸ்கி: எதையும் யோசிக்காமல் வந்த என்னை சில மணிநேரங்கள் துபாய் விமான நிலையத்தில் காத்து இருந்த துபாய் பேருந்து நிலையத்தில் "ட்ராப்" செய்து அந்த நேரத்தில் "சில" உதவிகளும் செய்த சுந்தர்ராமன் சார்க்கு மனமார்ந்த நன்றிகளை சொல்ல இந்த நேரத்தில் கடமைப்பட்டு உள்ளேன்.."ரொம்ப நன்றி சார்"..)

((டிஸ்கி 2: ஏழு கழுதை வயசாகுது இன்னும் என்னடா "Home sick" என்று கூட சில பேர் கேக்கலாம் என்ன பன்னுறதுங்க எல்லாரோட எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருப்பதில்லை "அவங்க அவங்க பீலிங்க்ஸ் அவங்களுக்கு".))

43 comments:

நாகா said...

Welcome back to மாமியார் வீடு :)

geethappriyan said...

வினோத்,
வீட்டில் எல்லோரும் நலம் தானே?
ரொம்ப நல்ல பதிவு போட்டு துவங்கி உள்ளீர்கள்.
ஹோம் சிக் என்பது எத்தனை கழுதை வயதானாலும் போகாது.
என்ன? நீங்க சொல்லுவீங்க. நாங்க சொல்ல மாட்டோம்.
இன்னும் ஒருவாரத்தில் தெளிந்து விடும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை தானே?
ஓட்டு போட்டாச்சுப்பா...

Unknown said...

ரொம்ப பீலிங்க்ஸா போச்சு....இத படிச்ச உடனே..... :(((((
நான் மும்பைலதான் இருக்கேன்..ஆனா ஊருக்கு போயிட்டு திரும்பி வரும்போதும் இதே மாதிரி தான் இருக்கும்....எப்படா அப்பா அம்மாவோட சேர்ந்தது இருக்க போறோம்ன்னு இருக்கும்.....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்றது....

இராகவன் நைஜிரியா said...

ஏழு கழுதை இல்லை 70 கழுதை வயசானாலும், இதை மாற்ற முடியாதுங்க.

ஓவ்வொரு தடவை ஊருக்கு போய் வரும் போது இது மாதிரித்தான் இருக்கும். ஒரு மாசம் போனா, உப்பும் தண்ணியும் சேர சேர மரத்துப் போயிடுங்க...

ஓட்டுப் போட்டாச்சுங்க.

sarathy said...

சரி வந்தது வந்தாச்சு, இனிமே அடுத்து எப்போ ஊருக்கு போகலாம்னு திட்டம் போட வேண்டியது தான்...

பொண்ணு பார்த்தாச்சா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வினோத் ஜெயிலுக்கு ;) ( பாஸ்போர்ட் வாங்கி வச்சிட்டாங்களா ஆபீசுல? ). நல்ல பதிவு. மன ஓட்டங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

வினோத் கெளதம் said...

@ நாகா..

நன்றி தல..:)

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

கார்த்திக் ஆமாம் Home Sick என்பது common தான் ஆனால் எனக்கு எப்பொழுதும் கொஞ்சம் அதிகம்..

வீட்டில் அனைவரும் நலம்..தங்களின் அன்பிற்கு நன்றி..:)

@ Kamal..

கமல் ரொம்ப நன்றி உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டதற்கு..

@ இராகவன் நைஜிரியா ..

//ஏழு கழுதை இல்லை 70 கழுதை வயசானாலும், இதை மாற்ற முடியாதுங்க.//

ரொம்ப சரி சார்..
நாட்கள் செல்ல செல்ல தான் பார்க்க வேண்டும்..

@ Sarathy..

அதுக்கு தான் திட்டம் போட்டு கொண்டு இருக்கிறேன்..

பொண்ணு பாக்கறதா..அப்படினா என்ன சாரதி..:))

@ ச.செந்தில்வேலன்..

நன்றி செந்தில்..

பாஸ்போர்ட் வாங்கி வச்சிடாங்க அந்த கொடுமை வேறு..அது கையில் இருந்தாலாவது ஒரு மன ஆறுதல் இருக்கும்..

பாலா said...

எனக்கு பாஸ்போர்ட் கையிலிருந்தே ஊருக்கு வர முடியாத நிலமை.

புது கம்பெனியில்.. இன்னும் ஒரு வருசத்துக்கு லீவ் எடுக்க முடியாது.

ஆறு வருசமாச்சி.. ஊருக்கு போய்..!

அந்த அளவில்.. நீங்க கொடுத்து வச்சவங்க.. வினோத்..!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்?? வரவு வினோத் நலமா?

Natraj said...

I`am working in Saudi, I too had the same feeling when i was in my last vacation,

அப்துல்மாலிக் said...

வெல்கம் பேக்

என்ன பண்ணுறது என்று சொல்லி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு வேலையை பார்க்க போய்விடுவோம்.. இதுதான் இயல்பு

Raju said...

:(

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன்
உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

S.A. நவாஸுதீன் said...

வாங்க வினோத். இதெல்லாம் நமக்கு வருடம் ஒருமுறை நடக்குறதுதானே. விடுங்க. சீக்கிரம் மிச்சர் பொட்டலம், ஸ்வீட் பாக்ஸ பிரிங்க தல.

கோபிநாத் said...

வாய்யா..வா ;))

தேவன் மாயம் said...

.கடவுளே அடுத்த ஜென்மத்திலாவது என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்ளும்படியான தீர்க்கமான சிந்தனையை கொடு என்று விமானத்திற்கு காத்து இருந்தேன் சில மணி நேரங்களாவது போதையின் பிடியில் எண்ணங்களை சிதறடிக்க..//

சூழ்நிலைகளின் கைதிதான் மனிதன்!!! ஓட்டும் போட்டாச்சு!!

☀நான் ஆதவன்☀ said...

வெல்கம் பேக் வினோத் :)

சென்ஷி said...

வெல்கம் மாம்ஸ் :-)))

வரதராஜலு .பூ said...

நீங்க பாண்டிச்சேரியா? நானும் தான்.

உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே புரியவில்லை. என்ன செய்வது. கூடிய விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்.

டேக் கேர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளில் வலி தெறிக்குது நண்பா.. மறுபடி திரும்பி வரும் வரை இங்க வந்து போன நினைவுகளை தூக்கி சுமப்பதைத் தவிர வேறு வழி இல்லை..

வினோத் கெளதம் said...

@ ஹாலிவுட் பாலா..

//ஆறு வருசமாச்சி.. ஊருக்கு போய்..!//

தல இது கொஞ்சம் கஷ்டம் தான்..:(
இருந்தாலும் வளைகுடா நாட்டில் இருக்கும் உணர்வு என்பது வேறு அமெரிக்க என்பது வேறு என்பது என் கருத்து..

@ பிரியமுடன்...வசந்த்..

நன்றி வசந்த் யாவரும் நலம் ..நீங்கள் நலமா..

@ Natraj..

ஆமாம் நடராஜ் நம் போன்றோரின் நிலை கொஞ்சம் கஷ்டம் தான்..

@ அபுஅஃப்ஸர்..

நன்றி அப்ஸர் உங்களின் ஆதரவிற்கு..

வினோத் கெளதம் said...

@ ராஜு..

:(((

@ Ram..

Tx Ram.


@ S.A. நவாஸுதீன்..

ஆமாம் என்ன பண்ணுவது நண்பரே..

வினோத் கெளதம் said...

@கோபிநாத்..

//வாய்யா..வா ;))//

வந்துட்டேன் வந்துட்டேன்..:)

@ தேவன் மாயம் ..

ஆமாம் சார்..நீங்கள் சொல்லுவது சரி தான்..

@ ☀நான் ஆதவன்☀..

நன்றி சூர்யா..

@ சென்ஷி..

வந்துட்டேன் மாம்ஸ்..:))

வினோத் கெளதம் said...

@ Varadaradjalou .P ..

நன்றி நண்பரே..

ஆமாம் நான் பாண்டி தான் நீங்கள் எந்த ஏரியா ..நான் சாரம் ..
முடிந்தால் மெயில் பண்ணவும்..
vin.gowtham@gmail.com

@ கார்த்திகைப் பாண்டியன்..

ஆமாம் கார்த்திகை திரும்பி வரும் வரை நினைவுகளை தேக்கி கொள்ள வேண்டியது தான்..

வால்பையன் said...

என்ன நண்பா!
சொல்லாமலேயே கிளம்பிட்டிங்க!

kishore said...

no comments pls

கலையரசன் said...

ஹா.. ஹா.. ஹா
ஹி.. ஹி... ஹீ...
ஊகு.. ஊ.. ஹூ..
ஏக....ஏ.... ஏக்க்..
இக்கி...இக்...கி...

இப்படிக்கு,
பாண்டியில சிரிச்சிகிட்டு ரோட்டு மேல போனவன்.

அது ஒரு கனாக் காலம் said...

என்னா வினோத் ..இப்படி நன்றி எல்லாம்.

இது ஒரு மாதரியான ( நாட்டை விட்டு லீவு முடிந்து வருவது ) நேரம், ...எதுவுமே சரியாக தெரியாது / புரியாது ... என்ன பண்றது, எல்லாம் ..அந்த பணம் பண்ற வேலை.. மனம் அது வேற எதையோ தேடுது ...

Muniappan Pakkangal said...

Home sickness ella vayasilaum undu.Enna seyya,kanji kudikanumeppa! Airportla entha kaalai eduthu vachuppa eranguna ? Expecting interesting articles from you Kanna.

வினோத் கெளதம் said...

@ வால்பையன்..

ஆமாம் வால்ஸ் நாட்கள் நெருங்க நெருங்க எனக்கு ஒன்னும் புரியவில்லை..
மறந்து விட்டேன்..மன்னிப்பிராக..

@ Kishore..

ரைட்டு..

@ கலையரசன்..

சிரிப்பா சிரி சிரி..
நம்ம ஒரு பிளான் போட்டோமே அதை எப்ப நிறைவேத்துறது..

@ அது ஒரு கனாக் காலம் ..

ஆமாம் சார் மனம் வேறு எதையோ தான் தேடுகிறது..
கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும் சார்..அந்த சமயத்தில் நீங்கள் வந்ததற்கு..

@ Muniappan Pakkangal ..

கண்டிப்பா சார் கூடிய விரைவில் எழுதி விடலாம்..

Thenammai Lakshmanan said...

hai vinod
unga july kaRRil superb.
simple and sweet.
enga aayavidam enakku pidikkatha pathu---sirichu sirichu kaN ellam thanneer.nalla iyalbana narration.
short stories im nalla varuthu
good keep it up
all the best

வினோத் கெளதம் said...

@ thenammailakshmanan ..

ரொம்ப நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்..

Nathanjagk said...

உண்மையிலேயே இந்த புறப்பாடு எனக்கு மனக்கஷ்டமா இருக்கு! பிரிவு ஆறாதது இல்லியா?? இருந்தாலும் இனி ​ரெகுலரா உங்களைப் படிக்கலாங்கிறது சந்தோஷமா இருக்கு! பாட்டி எப்படியிருக்காங்?

Nathanjagk said...

//கடவுளே அடுத்த ஜென்மத்திலாவது என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்ளும்படியான தீர்க்கமான சிந்தனையை கொடு //
நிச்சயம் ​கொடுப்பார், இல்லாவிட்டால் நீங்களே எடுத்துக் ​கொள்ளுங்கள்!

வினோத் கெளதம் said...

@ ஜெகநாதன்..

தொடர் வருகைக்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் நன்றி நண்பரே..

SK said...

ம்ம்ம்ம்ம்

பெருமூச்சுடன் :(

வினோத் கெளதம் said...

வாங்க SK

மணிகண்டன் said...

வினோத், ஒரு வாரத்துல சரியாயிடும் ! இல்லாட்டி கல்யாணம் பண்ணிக்கோங்க :)-
வளைகுடாவுல இருக்கீங்களேன்னு சந்தோஷப்படுங்க. நம்ப வூருக்கு 5 மணிநேரத்துல போகமுடியும்.

ரொம்ப அழகாவே எழுதி இருக்கீங்க.

வினோத் கெளதம் said...

நன்றி மணிகண்டன் ..

கல்யாணமா..அது வேறயா...முடியுல..:))

Thenammai Lakshmanan said...

manushangaLukku velaiyay kidaikka mattenguthu

ithula 10 naalaikku mela feelings veraya?

aduththa feelings eppo vinod veli varum

வினோத் கெளதம் said...

@thenammailakshmanan

கண்டிப்பாக விரைவில் வெளிப்படும்..:)

குமரை நிலாவன் said...

மறுபடி திரும்பி வரும் வரை இங்க வந்து போன நினைவுகளை தூக்கி சுமப்பதைத் தவிர வேறு வழி இல்லை..

இப்படி நினைச்சுக்க வேண்டியதுதான் நம்ம
என்ன செய்ய நண்பா

Anonymous said...

இந்த மாதிரியான பல சந்தர்ப்பங்களில் நான் வாய் விட்டு அழுததுண்டு. ஆனால் காலம் ஒரு சிறந்த மருந்து. இந்த உணர்வு ஊருக்கு கிளம்பும் சமயங்களில் மேலோங்கும். வீமானம் கிளம்பிய சிறிது நேரத்திற்கு பிறகு இந்த உணர்வு மெல்ல குறைய துவங்கும். இந்த பதிவின் பின்னுட்டத்தை படித்தபின் என்னை போல் பலர் உள்ளார்கள் என அறிய முடிகிறது.
-பயபுள்ள