Friday, November 13, 2009

எனக்கு பிடித்த நடிகர்

காயாத கானகத்தே..

எனக்கு பிடித்த நடிகர் M.K தியாகராஜ பாகவதர்
http://www.tamilnation.org/images/culture/music/mkt.jpg


ஒரு சம்பவத்தை என் அப்பா அடிக்கடி கூறுவர்..

அதாகப்பட்டது என் அப்பாவின் பாட்டி காலத்தில் அவரின் பக்கத்து ஊருக்கு ஒரு நாள் தியாகராஜ பாகவதர் வந்து இருக்கிறார்..அவரை பார்ப்பதற்கு என் அப்பாவின் பாட்டி ஊரே திரண்டு பக்கத்து ஊருக்கு சென்று இருக்கிறது.ஆனால் அதற்குள் தியாகராஜ பாகவதர் கிளம்பி சென்று விட்டார்.ஆர்வத்தோடு கிளம்பி சென்ற ஊர்க்காரர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி கிளம்பினர்.அந்த ஏமாற்றத்தை சற்றுக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத என் அப்பாவின் பாட்டி "சரி அவரை தான் பார்க்க முடியவில்லை..அவர் நடந்து சென்ற பாதையின் காலடி மண்ணையாவது எடுத்துக்கொண்டு செல்வோம் என்று "அந்த தெய்விகத்தன்மை வாய்ந்த மண்ணை" ஒரு கவலம் எடுத்து புடவையில் ஒரு முடிச்சு போட்டு அதை வீட்டுக்கு பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தார். ஃபிளாஷ் பேக் இதோடு ஓவர்.

ஆமாம் இதுக்கு இப்ப என்ன அப்படிங்கிரிங்கள..அந்த நாளில் இருந்து என் பரம்பரையில் வந்த அனைவரும் அந்த மண்ணை ஒரு பொக்கிஷமாக பாதுக்காத்து வருகிறோம்.எங்கே வெளியே சென்றாலும் அந்த மண்ணை 'தொட்டு' கும்பிட்டு விட்டு தான் கிளம்புவோம்..நான் இங்கே அமிரகம் கிளம்பி வருவதற்கு முன்பு என் தந்தை அந்த மண்ணின் கொஞ்சம் எடுத்து என் கையில் கொடுத்து "இது உனக்கு துணையா இருக்கும் வினோத்..பாகவதர் அய்யா எப்பொழுதும் உனக்கு பக்கத்தில் இருக்கார்னு நினைச்சிக்கோ" அப்படினாரு.நானும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அதை தொட்டு கும்பிட்டு விட்டு தான் செல்வேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டாலும்..எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை தலைமுறை தலைமுறையாக அவர் தான் எங்கள் ஆதர்ச நாயகன்.."காயாத கானகத்தே" என்று இன்றளவும் அவரின் குரலை கேக்கும் பொழுது எனக்குள் இன்ப வெள்ளம் உற்சாக ஊற்றெடுக்கும்.அவரின் "பவளக்கொடி" தொடங்கி ஒரு படத்தை விட்டு வைத்தது இல்லை. அவரின் தன்னம்பிக்கை வாய்ந்த வாழ்கை எனக்கு உற்சாக டானிக்.

சுருக்கமா சொல்லபோன்னா அவர் தான் எனக்கு "ரோல் மாடல்".."தல" எல்லாமே. அதாவது தலைவன் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற வேற எதாச்சும் நினைச்சிக்க போறீங்க. சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு விட்டு வருகிறேன்.

என் அப்பாவின் ஆயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

33 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புன்னியமின்றி விலங்குகள் போல்.
காமனும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லம் அடிந்திடபோ.
உத்தம மானிடராய் பெறும் புன்னிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்.
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே.

உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையேல் இல்லர ஜன்மமிதே.
மண்மீதிலோர் சுமையே பொதிதாய் தாங்கிய
பாழ்மனமே வெறும் பாமரமே.


தெரியுமா இந்தபாட்டு கேட்டுப்பாருங்க வினோத்...

angel said...

apo
pidithathu pidikathathu 10
athil avaga name kuduka maranthutingala
mudinja add panikonga
bye

கோபிநாத் said...

ஆகா!!

வால்பையன் said...

எஜமான் காலடி மண்ணெடுத்து!


ஏன் தமிழகம் உருப்படலைன்னு இப்ப புரியுதா!?

வினோத் கெளதம் said...

இது ஒரு கொடுக்கல் வாங்கல் பதிவு மத்தப்படி இதுல இருக்குற மேட்டர் எல்லாம் டுபாக்கூர்..

Thenammai Lakshmanan said...

//தமிழ் சீரியல் கூட பார்த்துரலம் ஆனா இந்த 'ஹிந்தி சீரியல்' கொடுமை இருக்கு பாருங்க..ஆண்கள் முதல் பெண்கள் வரை எப்பொழுதும் ஃபுல் மேக்அப்பில் தான் திரிவார்கள்..எப்ப பார்த்தாலும் 'சென்டி' டயலாக் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.//

:-))))

superb vinodh

ippathaan unga 3 issues im parthen so ithil than comments

kishore said...

//தெரியுமா இந்தபாட்டு கேட்டுப்பாருங்க வினோத்...//
இதுக்கு அவனை அசிங்கமா திட்டி இருக்கலாம் வசந்த்..

//ஏன் தமிழகம் உருப்படலைன்னு இப்ப புரியுதா!?//
வினோத் ஏன் உருப்படலைனு இப்போ புரியுது ..

//இது ஒரு கொடுக்கல் வாங்கல் பதிவு//

ஆமாங்கோவ்.. கொடுத்துட்டாரு.. சீக்கிரம் வாங்கிடுவாரு..

Thenammai Lakshmanan said...

//முன்னாடி ZEE தமிழ்ல வந்தாங்க..அவங்க பெயர் தெரியாது அதாங்க வெண்ணிலா கபடிக்குழு படத்தில கூட வந்தாங்க..இப்ப கூட மதுரை டூ தேனீ அப்படிங்கிற மொக்கை படத்தில் நாயகியாக வந்தார்கள்..அவங்களை பிடிக்கும்.//

SARANYA va ?

Thenammai Lakshmanan said...

//சுருக்கமா சொல்லபோன்னா அவர் தான் எனக்கு "ரோல் மாடல்".."தல" எல்லாமே. அதாவது தலைவன் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற வேற எதாச்சும் நினைச்சிக்க போறீங்க. சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு விட்டு வருகிறேன்.//

கொடுக்கல் வாங்கலா
என்ன வினோத் இது
உங்க பதிவை எல்லாம் உண்மைனு நம்பி ஏமாறுறேன் நான்

:-))))

Anonymous said...

சுப்பர் உங்க அடுத்த பரம்பரைக்கும் இதையே பொல்லொவ் பண்ண சொல்லி குடுங்கோ

kishore said...

//சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு விட்டு வருகிறேன்.//

அப்போ ரெண்டு வருஷம் கழிச்சி தான் வருவன்னு சொல்லு..

kishore said...

பதிவ விட லேபில் டெர்ரர்ரா இருக்கு மச்சி.. .. யாரு மேல மச்சான் உனக்கு இவ்ளோ கோபம்? கொடுக்கல் வாங்கல் பதிவு எல்லாம் போடுற?

யாரா இருந்தாலும் ஒழுங்கா வினோத் கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுடுங்க.. இல்ல அமீரக அஜி.. ஐயோ..ச்சே..இல்ல .. இல்ல... தப்பு.. தப்பு.. சிங்கத்தோட சினத்துக்கு ஆளாகி சின்னாபின்னம் ஆகிடுவிங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா தல..,

geethappriyan said...

குரு,
உங்க குடும்பமே கலைக்கு கோவில் கட்டும் குடும்பமா?
கண்ணீர் பெருகுது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆனால் இவர் வாழ்க்கயை ஒருத்தன் பார்த்தாலே போதும் , அடங்குவான்.
நல்ல தேஜஸ்.
ஒட்டுக்கள் போட்டாச்சு

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த் ..

//தெரியுமா இந்தபாட்டு கேட்டுப்பாருங்க வினோத்...//

கேக்குறேன் வசந்த் இதை விட வேறு என்ன வேலை இருக்கு..:)

@ angelintotheheaven..

//apo
pidithathu pidikathathu 10
athil avaga name kuduka maranthutingala
mudinja add panikonga
bye//

இது சும்மா எழுதுனதுங்க..வருகைக்கு நன்றி..:)

@ கோபிநாத்..

ஓஹோ..

@ வால்பையன்..

//ஏன் தமிழகம் உருப்படலைன்னு இப்ப புரியுதா!?//

புரியுது புரியுது..ஏன் என்று புரியுது..:)

வினோத் கெளதம் said...

@ thenammailakshmanan ..

//SARANYA va ?//

அவங்க பேரு சரண்யாவா..நல்லா தான் இருக்கு..பேரை சொன்னேன்..:)

//கொடுக்கல் வாங்கலா
என்ன வினோத் இது
உங்க பதிவை எல்லாம் உண்மைனு நம்பி ஏமாறுறேன் நான் //

அதுக்கு தான் கிழே கம்மென்ட்ல சொல்லிட்டேன்க..ஆனா 99% நான் உண்மையை தான் எழுதுறேன் உண்மை விரும்பி..:))

@ Anonymous

//சுப்பர் உங்க அடுத்த பரம்பரைக்கும் இதையே பொல்லொவ் பண்ண சொல்லி குடுங்கோ//

அடுத்த பரம்பரைக்கு வேறயா விளங்கிடும்..நீங்க சொன்ன சரி தான்..:)

@ முரளிகண்ணன் ..

நன்றி தல..:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத்... முடியல.. எப்படிப்பா இப்படியெல்லாம் :))

வினோத் கெளதம் said...

@ kishore..

//ஆமாங்கோவ்.. கொடுத்துட்டாரு.. சீக்கிரம் வாங்கிடுவாரு..//

எப்படி பார்த்தாலும் ரெண்டு வாரம் வரமாட்டில..

//பதிவ விட லேபில் டெர்ரர்ரா இருக்கு மச்சி.. .. யாரு மேல மச்சான் உனக்கு இவ்ளோ கோபம்? கொடுக்கல் வாங்கல் பதிவு எல்லாம் போடுற?//

அது ஒரு வீணாப்போன நாதாரிங்க கிஷோர்..:)

//யாரா இருந்தாலும் ஒழுங்கா வினோத் கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுடுங்க.. இல்ல அமீரக அஜி.. ஐயோ..ச்சே..இல்ல .. இல்ல... தப்பு.. //

த்தூ..ஒன்னும் இல்லை வாயுல கொசு அதான்..

@ SUREஷ் (பழனியிலிருந்)

கண்டிப்பா படிக்கிறேன் தல..

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

//குரு,
உங்க குடும்பமே கலைக்கு கோவில் கட்டும் குடும்பமா?
கண்ணீர் பெருகுது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நாங்க ஏன் குரு 'கலைக்கு' கோவில் கட்டப்போறோம்..ஆமாம் நீங்க சொன்னது நம்ம வடலூரனை தானே..

//ஆனால் இவர் வாழ்க்கயை ஒருத்தன் பார்த்தாலே போதும் , அடங்குவான்.//

ஒவ்வொருத்தன் வாழ்கையும் யாரோ ஒருத்தனுக்கு பாடமா தான் இருக்கு குரு.. தத்துவம் நம்பர் 8123.
நல்ல தேஜஸ்.

வினோத் கெளதம் said...

@ ச.செந்தில்வேலன்.

//வினோத்... முடியல.. எப்படிப்பா இப்படியெல்லாம் :))//

அதுவா வருது தல.:)

kishore said...

உனக்கு ஹாப்பி கொயந்தைங்க தினம் வாழ்த்துக்கள் நண்பா..

Anonymous said...

ம்ம்ம் இந்த காலத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை ஆச்சிரியமா இருக்கு வினு...சந்தோஷமாகவும் இருக்கு...

கலையரசன் said...

///ம்ம்ம் இந்த காலத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை ஆச்சிரியமா இருக்கு வினு...சந்தோஷமாகவும் இருக்கு...//

ங்கொக்கமக்கா... இதுக்குமேல உன்னைய அசிங்கபடுத்த முடியாதுடா!!

யக்காவுக்கு ஒரு மானாவரி ரீப்பீட்ட்ட்டடேடடட!!

Prabhu said...

என்னங்கய்யா இது? காமெடி பண்றாய்ங்களா, சண்டை போடுறாய்ங்களா? ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது. எப்பா, அமீரகம் நண்பர்களே, இது என்ன்னு நீங்களாவது உளவு பண்ணி சொல்லுங்க! மண்டை காயுது!

- அடுத்தவன் வம்பு தும்புக்கு போகாமல் குழந்தைகள் தினத்தை லாலி பாப்புடன் கொண்டாடும் பப்பு.

வினோத் கெளதம் said...

@ kishore

//உனக்கு ஹாப்பி கொயந்தைங்க தினம் வாழ்த்துக்கள் நண்பா..//

உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து விடுங்கள் அங்கிள்..

@ தமிழரசி..

//இந்த காலத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை ஆச்சிரியமா இருக்கு வினு...சந்தோஷமாகவும் இருக்கு...///

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..இது சும்மா தமாசுக்கு எழுதுனது தமிழ்..:)

@ கலையரசன் ..

//ங்கொக்கமக்கா... இதுக்குமேல உன்னைய அசிங்கபடுத்த முடியாதுடா!!//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்....

@ pappu

//அடுத்தவன் வம்பு தும்புக்கு போகாமல் குழந்தைகள் தினத்தை லாலி பாப்புடன் கொண்டாடும் பப்பு.//

ஆரு நீயப்பா பப்பு..அது சரி கொண்டாடு கொண்டாடு..

Nathanjagk said...

//இது ஒரு கொடுக்கல் வாங்கல் பதிவு மத்தப்படி இதுல இருக்குற மேட்டர் எல்லாம் டுபாக்கூர்..//
உஸ்ஸப்பாடா... இப்படித்தான் பின்னூட்டத்தில் ​ஊறுகா​யை ஒளிச்சு ​வைக்கிறதா வினு?

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னாது.. டுபாக்கூரா? அடப்பாவிகளா..-)))))))

ஆ.ஞானசேகரன் said...

என்னப்பா இது..... இப்படியும் இருக்குமா?????

வினோத் கெளதம் said...

@ ஜெகநாதன்..

//உஸ்ஸப்பாடா... இப்படித்தான் பின்னூட்டத்தில் ​ஊறுகா​யை ஒளிச்சு ​வைக்கிறதா வினு?//

சைடு டிஷ்யையும் பக்கத்துல வச்சி இருந்தா சுவாரசியம் இல்லமா போய் இருக்கும் தலைவா..(இப்ப மட்டும் என்ன சுவாரசியம் வாழதுனு சொல்றிங்களா.:) )

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன்..

நல்ல வேலை நீங்க அந்த கம்மேன்டை பார்த்துட்டிங்க.. :))

வினோத் கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன்..

//என்னப்பா இது..... இப்படியும் இருக்குமா?????//

சும்மா தமாசுங்க..:)

பா.ராஜாராம் said...

ஒண்ணுமே புரியலை..ஒலகத்துல.

வினோத்...:-))

நேசமித்ரன் said...

நல்லா எழுதுறீஙக பாஸ்

வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

@ பா.ராஜாராம்..

Enna thala puriyalayaa..:)

@ நேசமித்ரன் ..

Thanks brother .:)