Tuesday, November 10, 2009

பிடித்தது, பிடிக்காதது.

நம்ம "ஷார்ஜா புலி" "சிக்ஸ்பேக் சிங்கம்" "பதிவுலகின் இளம் சூறாவளி" "'ஆதவன்"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில் இந்த தொடர்ப்பதிவை(யும்) எழுதுகிறேன்..(இப்படி எல்லாம் எழுதுனா தான் உண்டுன்னு நினைக்குறேன்)

பிடித்தவர், பிடிக்காதவர்..பற்றி எழுத வேண்டும் குறிப்பா அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை..

என்னை பொறுத்தவரை எல்லா காலங்களிலும் பிடித்தவர், பிடிக்காதவர் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இல்லை சில பேரை தவிர்த்து. சூழ்நிலைகளையும், சந்தர்பங்களையும், காலத்தையும் பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும்..இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. இன்று நம் காரணமே இல்லாமல் வெறுக்கும் சிலரை கூட நாளையே நமக்கு மிகவும் பிடித்தவராக மாறலாம்.

தொழில்அதிபர் :

பிடித்தவர் :

எங்க ஏரியால இருந்த பானிபுரி கடைக்காரர்..எங்கயோ வடமாநிலத்தில்(தமிழர்) இருந்து பத்து வருடங்களுக்கு முன்பு வந்த அவர் தன்னுடுய கடின உழைப்பின் முலம் இன்று நல்ல நிலையில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு சொந்தக்காரர். என் கண் முன்னாடி அவர் வளர்ச்சியை கண்டு இருக்கிறேன். அவரும் இப்ப தொழில் அதிபர் தாங்க.

பிடிக்காதவர்கள் : இதான் பிரச்சினையே, பிடிக்காதவங்கன்னு உடனே யாரையும் சொல்ல முடியாது..இருந்தாலும் முயற்சி பண்ணுறேன்..

தன் முன்னேற்றத்தின் பின்னுள்ள எந்த ஒரு உழைப்பாளியின் நலனை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்கள் தான் இப்பேர்ப்பட்ட வளர்ச்சிக்கு காரணம் என்பதை மனதார உணராத எந்த ஒரு தொழில் 'அதிபனையும்' பிடிக்காது.

விஞ்ஞானி :

பிடித்தவர்:

அப்துல் கலாம்..இந்தியாவின் ஏவுகணை மனிதர்..எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய அறிவின்,திறமையின்,உழைப்பின் மற்றும் வாழ்வில் தான் கடைப்பிடித்த ஒழுக்கத்தின் முலம் நாட்டின் ஜனாதிபதியாக மாறியவர்..

எம்.எஸ்.சுவாமிநாதன்..(வேளாண்மை துறை விஞ்ஞானி)

நம்மாழ்வார்( இயற்கை அறிவியலாளர்)

பிடிக்காதவர் :

யாரும் இல்லை..

தமிழக கல்வியாளர் :

பிடித்தவர்: குறிப்பாக யாரையும் சொல்ல தெரியவில்லை..

பிடிக்காதவர்: கல்வியாளர்னா என்னனே தெரியமா தன்னை கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் ஜேப்பியார் போன்ற சிலர்கள்.

எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சிலர். தீவிரமான வாசிப்பனுபவம் என்று ஒன்றும் இல்லை..நான் படித்த வரைக்கும் இவர்கள் என் மனம் கவர்ந்தவர்கள்.

பிடிக்காதவர் : ஒருவன் சமுகம் சார்ந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த சமுகத்தின் மனிதர்களை நேசிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும்..அப்படி நேசிக்காமல் கர்வம் பிடித்து அலையும் எவனையும் பிடிக்காது.

இயக்குனர் :

பிடித்தவர் : அது பெரிய லிஸ்ட்..பாலா, அமீர், மிஷ்கின், மணிரத்னம்,கெளதம்,சேரன் மற்றும் சிலர்..

பிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.

நடிகர்:

பிடித்தவர் :

ஒரே ஒருவர்..தோல்விகளை அதிகமாக சுமப்பதால் மட்டுமே மற்றவர்களால் அதிகம் தூற்றப்படும் ஒருவர்..அதுவும் இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் தமிழ்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை இது வரை தக்கவைத்து கொண்டு இருக்கிறவர்..எத்தனை சோதனைகளை எதிர்க்கொண்டாலும் இதுவரை துணிவுடன் அதை எதிர்த்து களத்தில் உள்ளவர்..என்னுடுய உற்சாக டானிக்..மனிதாபிமானம் உள்ளவர்..குறிப்பாக மற்ற எந்த நடிகரையும் போல் இல்லாமல் திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்..பெயரை விட்டு விடுகிறேன்..அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்.முடிந்தால் இந்த லிங்க் போங்கள்.

பிடிக்காதவர் : நடிப்பால் நாட்டை ஆளத்துடிக்கும் அனைவரையும்..

நடிகை:

பிடித்தவர் : சிம்ரன் அப்புறம் த்ரிஷா.

பிடிக்காதவர் : அசின், சில படங்களை தவிர்த்து ஜோதிகா.

இசையமைப்பாளர்:

பிடித்தவர் : இந்தியாவின் இரண்டு பெரிய இசை சகாப்தங்கள் A.R ரெஹ்மான் மற்றும் இளையராஜா

பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை எந்த ஒரு இசையமைப்பளரின் ஒரு பாடலையாவது மிகவும் ரசித்து இருப்பேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்:

பிடித்தவர்:

முன்னாடி ZEE தமிழ்ல வந்தாங்க..அவங்க பெயர் தெரியாது அதாங்க வெண்ணிலா கபடிக்குழு படத்தில கூட வந்தாங்க..இப்ப கூட மதுரை டூ தேனீ அப்படிங்கிற மொக்கை படத்தில் நாயகியாக வந்தார்கள்..அவங்களை பிடிக்கும்.

பிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!) (ரொம்ப நேரம் யோசித்து எழுதியது)

வானொலி பண்பலை தொகுப்பாளர்

பிடித்தாவர் - சமிபத்தில் மறைந்த 'தென்கச்சி' சாமிநாதன்

அரசியல்வாதி:

பிடித்தவர்: அது மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப கருணாநிதி அப்புறம் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்..

பிடிக்காதவர்: அதுவும் மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப இந்த நிமிஷத்தில் சொல்வது என்றால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்காது.

அப்புறம் முக்கியமா இந்த தொடரை தொடர இந்த தளத்தின் சொந்தக்காரர்களை அழைக்கிறேன் இஷ்டம் இருந்தா எழுதுங்க இல்லைனா எழுதாதிங்க ..அவங்க தமிலிஷ்
மற்றும் தமிழ்மணம்.

52 comments:

நாகா said...

தல போல வருமா??????? யாருங்க அந்த உறவினர்? லிங்க் எங்கயுமே போக மாட்டேங்குதே...

thiyaa said...

நல்ல தெரிவுகள்

தினேஷ் said...

சூப்பர் - "தல"

பாலா said...

/// திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்.///

ரொம்ப குசும்பு உங்களுக்கு! :)

லிங்க் வொர்க் ஆகலீங்கோவ்

Prabhu said...

பிடிக்காதவர் : ஒருவன் சமுகம் சார்ந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த சமுகத்தின் மனிதர்களை நேசிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும்..அப்படி நேசிக்காமல் கர்வம் பிடித்து அலையும் எவனையும் பிடிக்காது./////////

ஹி... ஹி... ஐ நோ. திஸ் இஸ் அ இன்சைட் பஞ்ச். அதாவது உள்குத்துங்கோ!

ஜோ பிடிக்காதா? என்ன மனுஷனய்யா நீர்? சிம்ரன் பிடிக்குமா :(

வினோத் கெளதம் said...

@ நாகா

//தல போல வருமா??????? யாருங்க அந்த உறவினர்? லிங்க் எங்கயுமே போக மாட்டேங்குதே...//

அது..அந்த லிங்க் இப்ப சரி பண்ணிடேங்க..


@ தியாவின் பேனா

நன்றிங்க..

@ சூரியன்

நன்றி சூரியன்.

@ ஹாலிவுட் பாலா..

/// திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்.///

//ரொம்ப குசும்பு உங்களுக்கு!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....:)

//லிங்க் வொர்க் ஆகலீங்கோவ்//

மாத்திட்டேன் தல..

@ பப்பு..

//ஹி... ஹி... ஐ நோ. திஸ் இஸ் அ இன்சைட் பஞ்ச். அதாவது உள்குத்துங்கோ!//

என்னது உள்குத்தா..உள்குத்தும் இல்லை வெளிக்குத்தும் இல்லை..:)

//ஜோ பிடிக்காதா? என்ன மனுஷனய்யா நீர்? சிம்ரன் பிடிக்குமா//

ஜோ அந்த அளவுக்கு இஷ்டம் இல்லா..சிம்ரானு கொஞ்சம் இஷ்டப்பட்ட நடிகை.

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல் நண்பா,... அதைவிட அந்த லிங் நல்லாவே இருக்கு

kishore said...

//இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. //

சுய ஆதாயத்திற்காக ஒருவரோடு பழகும் போது மட்டும் தான் நீ சொன்னது நடக்கும்.. உண்மையான அன்போடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒருவரை பிடித்துவிட்டால் அவர் நண்பரோ, காதலரோ, இல்ல நாம இதுவரை பழக்கம் இல்லாத ,நேரில் சந்திக்காத நபரோ( உதா.. அப்துல் கலாம் ) அவர்கள் தவறே செய்கிறார்கள் என்று தெரிந்தாலும் "வெறுப்பு" என்பது எந்த சூழ்நிலையிலும் வராது. ( என்னை பொறுத்த வரை..)

//பிடித்தவர்:
அப்துல் கலாம்
எம்.எஸ்.சுவாமிநாதன்..
நம்மாழ்வார்..//

ஒரு முறை பல்கலைகழகத்தில் உலக அறிவியல் மாநாடு நடந்த போது
எம். எஸ். சுவாமிநாதன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இனிமையான "மனிதர் ".

ஆமா லிஸ்ட்ல Dr. கிஷோர் பேர காணோம்..?

//தன்னை கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் ஜேப்பியார் போன்ற சிலர்கள்.//
மச்சான் "எம். எ. எம். ராமசாமி" ய விட்டுடியே ..

//திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்//
என்ன பண்றது.. நம்ம தாத்தா காலத்துல இருந்தே நடிகன் பின்னாடி கொடி பிடிச்சிகிட்டு போய் பழக்கபடுத்திட்டாங்க.. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.. யாரா இருந்தாலும்.. குடுக்குற பணத்துக்கு அவனுங்கள படத்துல ரசிகிறதோட நிறுதிக்கங்கடா ..
so sad of you.

Raju said...

ஷோக்காகீது நைனா...!

கலையரசன் said...

//இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்//
அப்ப உன்னை, எனக்கு பிடிக்காம போயிடுமா? அவ்வ்வவவ்்

//எங்க ஏரியால இருந்த பானிபுரி கடைக்காரர்//
ஏன் எங்க இருக்குற புண்ணாக்கு விக்குறவரை எழுத மாட்டியா?

கலையரசன் said...

//பிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.//

ஏன் அவர பிடிக்காது? அவரு உனக்கு சோத்துல விஷம் வச்சிட்டாரா? சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற அருமையான படங்கள் எடுத்தவர் அவரு! மரியாதையா அவர பிடிக்குன்னு மாத்தி எழுதிடு..

//அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்//
டேய்.. நாங்க என்ன பேப்பரா? எரியிரத்துக்கு...

//ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.. யாரா இருந்தாலும்.. குடுக்குற பணத்துக்கு அவனுங்கள படத்துல ரசிகிறதோட நிறுதிக்கங்கடா ..//

கிஷோர் எழுதினதிலேயே எனக்கு பிடிச்சது இதுதான்டா! சூப்பர் தோழா...

சென்ஷி said...

:-)

ம்ம்ம்!

கலையரசன் said...

/// திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்.///
ரொம்ப குசும்பு உங்களுக்கு! :)//

விடுங்க பாலு... கொயந்த இப்பதான் வளருது, அப்படிதான் காமெடியா பேசும்.!!


//போன்ற சிலர்கள்//
//எவனையும் பிடிக்காது//
//மற்றும் சிலர்//
//ஆளத்துடிக்கும் அனைவரையும்//
//சில படங்களை தவிர்த்து//
//அனைத்து காட்டேரிகளும்//

உன்னைய பிடித்த, பிடிக்காத ஒருத்தரைதான் எழுத சொன்னாங்க! நீ என்னடானா சில, பல, அனைத்து ன்னு பலமையில எழுயிருக்க? நிஜமா சொல்லு... உனக்கு தமிழ் புரியுமா?

கலையரசன் said...

டேய் இந்த சென்ஷி பய தமிழ்மணத்துல ஓட்டு போடாம போயிட்டான்! நீ அவன் பதிவுக்கு போனா ஓட்டு போடாம வந்துடு!!

- Behalf of அதே கார்த்திகேயன்

ப்ரியமுடன் வசந்த் said...

////அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்//
டேய்.. நாங்க என்ன பேப்பரா? எரியிரத்துக்கு...//

கலைக்கு ஒரு ரிப்பீட்டேய்..

☀நான் ஆதவன்☀ said...

//சில படங்களை தவிர்த்து ஜோதிகா//

இதுக்காகவே மைனஸ் ஓட்டு குத்தலாம்னு நினைச்சேன்...ஆனா

//நம்ம "ஷார்ஜா புலி" "சிக்ஸ்பேக் சிங்கம்" "பதிவுலகின் இளம் சூறாவளி" "'ஆதவன்"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில்//

இது தடுத்திருச்சு..... பொழச்சு போ ஒரு ஓட்டு போடுறேன் :)

☀நான் ஆதவன்☀ said...

அஜித் பற்றிய தகவல்கள் இப்ப தான் படிக்கிறேன். :)

ஆனா நமெக்கென்னவோ யாரையும் பிடிக்க மாட்டேங்குது. ரசிகர்களை கட்டுக்குள் வைக்க தெரியாதவனெல்லாம் என்னய்யா நடிகன். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம்னு.......

வால்பையன் said...

பிடிக்காத விஞ்ஞானி:
ராமர் பிள்ளை

Anbu said...

:-)

கோபிநாத் said...

\\சிக்ஸ்பேக் சிங்கம்\\

அடப்பாவி எம்புட்டு கொடுத்தான்...அவன் சிக்ஸ்பேக் வச்சா அது சிங்கம் இல்லைடா ஆசிங்கம் ;))

அப்துல்மாலிக் said...

நான் நினைத்த மாதிரியே சிறு விளக்கத்துடன் ஏன் பிடிக்கும்/பிடிக்காது பதிவு, அருமை நண்பா

Anonymous said...

நேர்த்தியாய் இருக்கு பதில்கள் திடமாகவும் உள்ளது...யாரையும் புண்படுத்தாமால் இயல்பா இருக்கு வினு...

வினோத் கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன்..

நன்றிங்க..அது அஜித் பிறந்தநாள் அன்று எழுதியது...

@ ♠ ராஜு ♠ ..

நன்றி ராஜு..

@ சென்ஷி

நன்றி மாப்பி..

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்..

ஏனப்பா வசந்த் ..தினம் ஒரு குழந்தை படம் வைக்கிறியே...எதோ மேட்டர் ஓடுதுன்னு நினைக்குறேன்...:)

@ ☀நான் ஆதவன்☀..

//இதுக்காகவே மைனஸ் ஓட்டு குத்தலாம்னு நினைச்சேன்...ஆனா//

யோவ்..அந்த சூர்யா கோபப்பட்ட சரி..ஏன் இந்த சூர்யா கோபப்படுது..:)

//அஜித் பற்றிய தகவல்கள் இப்ப தான் படிக்கிறேன். :)//

இப்பயாச்சும் படிச்சியே..

@ வால்பையன்..

ஏன் வால்ஸ் அவர் தான் பெட்ரோல் கண்டுப்பிடிச்சரே..:)

வினோத் கெளதம் said...

@ அன்பு..

நன்றி அன்பு.

@ கோபிநாத்..

//அடப்பாவி எம்புட்டு கொடுத்தான்...அவன் சிக்ஸ்பேக் வச்சா அது சிங்கம் இல்லைடா ஆசிங்கம் ;)) //

ஒரு பதிவுக்கு ரெண்டு ஒட்டு..அப்புறம் வாரத்துக்கு ஒரு தொடர்ப்பதிவு..:)

@ அபுஅஃப்ஸர்..

நன்றி நண்பா..;)

@ தமிழரசி ..

நன்றி தமிழ்..
ஏன் சமிபக்காலமா அதிகமா எழுத மாட்டுறிங்க.

வினோத் கெளதம் said...

@ kishore..

//சுய ஆதாயத்திற்காக ஒருவரோடு பழகும் போது மட்டும் தான் நீ சொன்னது நடக்கும்.. //

ஓஹோ...

//எதிர்பார்ப்பும் இல்லாம ஒருவரை பிடித்துவிட்டால் அவர் நண்பரோ, காதலரோ, இல்ல நாம இதுவரை பழக்கம் இல்லாத ,நேரில் சந்திக்காத நபரோ( உதா.. அப்துல் கலாம் ) அவர்கள் தவறே செய்கிறார்கள் என்று தெரிந்தாலும் "வெறுப்பு" என்பது எந்த சூழ்நிலையிலும் வராது. ( என்னை பொறுத்த வரை..)//

ஆஹா...

//ஒரு முறை பல்கலைகழகத்தில் உலக அறிவியல் மாநாடு நடந்த போது
எம். எஸ். சுவாமிநாதன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இனிமையான "மனிதர் ".//

அது சரி..

//ஆமா லிஸ்ட்ல Dr. கிஷோர் பேர காணோம்..?//

மறந்துட்டேன்..

//மச்சான் "எம். எ. எம். ராமசாமி" ய விட்டுடியே ..//

ரொம்ப வாஸ்தவம்..

//என்ன பண்றது.. நம்ம தாத்தா காலத்துல இருந்தே நடிகன் பின்னாடி கொடி பிடிச்சிகிட்டு போய் பழக்கபடுத்திட்டாங்க.. //

அதுவும் சரிதாங்க..அந்த முட்டாபசங்க குரூப்ல நானும் ஒருத்தனா போய்டேன் என்ன பண்றது..

//ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.. யாரா இருந்தாலும்.. குடுக்குற பணத்துக்கு அவனுங்கள படத்துல ரசிகிறதோட நிறுதிக்கங்கடா//

நீங்க சொன்ன சரி பாஸ்.

வினோத் கெளதம் said...

//அப்ப உன்னை, எனக்கு பிடிக்காம போயிடுமா? அவ்வ்வவவ்்//

அங்க சிலர் தவிர்துன்னு சொல்லி இருக்கேன்ல..அதுலேயே பலப்பேர் அடக்கம் நீ உட்ப்பட..

//ஏன் எங்க இருக்குற புண்ணாக்கு விக்குறவரை எழுத மாட்டியா?//

எனக்கு நாக்குல-புண் அதான் அந்த புண்ணாக்கு விக்குறவரை பத்தி எழுத மறந்துட்டேன்..

//ஏன் அவர பிடிக்காது? அவரு உனக்கு சோத்துல விஷம் வச்சிட்டாரா? //

அவர் வீட்டுக்கு போனப்ப சோறே வைக்கல அதான்..

//சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற அருமையான படங்கள் எடுத்தவர் அவரு! //

ஓஹோ..அவரா இவரு..

//மரியாதையா அவர பிடிக்குன்னு மாத்தி எழுதிடு.. //
முடியாது என்ன வேனாலும் பண்ணிக்கோ..(அதுகாக உன்னை பார்க்க வரப்ப அந்த ஆளு படத்தை போட்டு காட்டாத.)

//டேய்.. நாங்க என்ன பேப்பரா? எரியிரத்துக்கு...//

அப்ப..அதுல நீயும் ஒருத்தன்னு ஒத்துக்குற..

//கிஷோர் எழுதினதிலேயே எனக்கு பிடிச்சது இதுதான்டா! சூப்பர் தோழா...//

அது சரி..நீங்க சொல்லிட்ட சரி தான்..

//விடுங்க பாலு... கொயந்த இப்பதான் வளருது, அப்படிதான் காமெடியா பேசும்.!!//

ஆமாம்..தயவு செஞ்சு விட்டுடுங்க..:)

//உன்னைய பிடித்த, பிடிக்காத ஒருத்தரைதான் எழுத சொன்னாங்க! நீ என்னடானா சில, பல, அனைத்து ன்னு பலமையில எழுயிருக்க? நிஜமா சொல்லு... உனக்கு தமிழ் புரியுமா?//

இதை நான் எழுதுறப்பவே..நீ தான் இதேப்போல் கேக்கபோரன்னு நினைச்சேன்..கேட்டுட்ட..:)

//நடிகர்:
பிடித்தவர் : சூஸ்
பிடிக்காதவர் : பஞ்ச் பேசும் அனைத்து கபோதிகளும்//

தலைவா இது நீங்க எழுதியது இதுக்கு மட்டும் கொஞ்சம் என்ன அர்த்தம்னு விளக்குங்க..அதவது மேலே உள்ள வரிக்கும் கிழே உள்ள வரிக்கும் இடையில் உள்ள முரணை..

வினோத் கெளதம் said...

எனக்கு ஒன்னு மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்க புன்னியவான்ஸ்களா..

இந்த துறையை சேர்ந்தவரை தான் ஒருவன் ரோல்மாடலாக எடுக்க வேண்டும் என்று எதாவது சட்டம் இருக்கிறதா..நடிப்பு துறையை சேர்ந்தவரை எடுக்க கூடாதா..
அப்படி சொல்லிடிங்கனா சரி தான்..

இந்த இடத்தில அஜித் அல்லது விஜய் போன்றவர்களின் பெயரை குறிப்பிடுவது மட்டும் தான் உங்கள் பிரச்சனையா..இல்லை சூர்யா விக்ரம் போன்றவர்களுகுமா.
அதாவது, இவர்கள் ரெண்டு பேரின்(அஜித்&விஜய்) வளர்ச்சிக்கும் பின்பும் எந்தவிதமான சோதனைகளும் இல்லை..எல்லாம் 'லக்' தான் என்று நினைக்குரிர்களா..

நான் சொன்ன அந்த மனிதர் திரைத்துறையில் மட்டும் அல்ல வேறு எந்த துறையில் இருந்து இருந்தாலும் நான் அவரை ரசித்து இருப்பேன் நேசித்து இருப்பேன்..அதற்கு நான் என்ன உழைப்பு மன்னங்கட்டினு காரணம் சொன்னாலும் நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவதில்லை..அதுக்கு தான் நான் அப்பயே சொல்லி விட்டேன் 'எரிந்து விழுவிர்கள்' என்று..நீங்கள் அவரை வெறுப்பதற்கு நூறு காரணம் இருக்கலாம்..நான் அவரை நேசிப்பதக்ற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன..வெறும் ரசிகனாக மட்டுமே இல்லாமல்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகா சொல்லியிருக்கீங்க வினோத்

geethappriyan said...

டேய் இந்த சென்ஷி பய தமிழ்மணத்துல ஓட்டு போடாம போயிட்டான்! நீ அவன் பதிவுக்கு போனா ஓட்டு போடாம வந்துடு!!

- Behalf of அதே கார்த்திகேயன்

டேய் கலை மாப்பி நான் ஓட்டுக்கள் போட்டாச்சு, சென்ஷி எப்பவுமே கருத்து போடும் முன்னரே ஓட்டுக்கள் போடும் நல்லவன். அவனை போய் போட்டு விடுறியே குப்பா.

geethappriyan said...

குரு, ரொம்ப நல்ல பிடித்தபிடிக்காதபதில்கள்,
முக்கியமா அந்த பெப்சி உமா காட்டேரிகள் நிரம்பவே ரசித்தேன், கலையும் இதையே போட்டிருக்கான்.

எனக்கும் ஜேபியாரை பிடிக்காது

நீங்க சாருவை தானே சொன்னீங்க?
ஹலோ எப்புடி கண்டுபிடிச்சோம்?

தல எப்போவுமே டாப்புதான்.
அழகா இருக்கும் ஹீரோ இல்லையா?
கல்லடி பட்த்தான் செய்யும்

பரவாயில்லைய்யா அறிவியலாளர் பேர் எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கெ?

இ லைக் கிஷோர் கமெண்ட் யூசீ.

//திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்//
என்ன பண்றது.. நம்ம தாத்தா காலத்துல இருந்தே நடிகன் பின்னாடி கொடி பிடிச்சிகிட்டு போய் பழக்கபடுத்திட்டாங்க.. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.. யாரா இருந்தாலும்.. குடுக்குற பணத்துக்கு அவனுங்கள படத்துல ரசிகிறதோட நிறுதிக்கங்கடா ..
so sad of you.//

kishore said...

//எனக்கு ஒன்னு மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்க புன்னியவான்ஸ்களா..

இந்த துறையை சேர்ந்தவரை தான் ஒருவன் ரோல்மாடலாக எடுக்க வேண்டும் என்று எதாவது சட்டம் இருக்கிறதா..நடிப்பு துறையை சேர்ந்தவரை எடுக்க கூடாதா..
அப்படி சொல்லிடிங்கனா சரி தான்..//

ரோல் மாடல் எந்த துறைய சேர்ந்தவரா வேணா இருக்கலாம். ஆனா அவரு அதுக்கு தகுதியானவர்னு எதை வச்சி முடிவு பண்றீங்க பாஸு? அழகு? நடிப்பு? இல்ல அவரு வெளி உலகத்துல நடந்துகுற முறைய வச்சா? போங்க பாஸு.. அவரு சினிமாக்கு வந்த புதுசுல ஒரு நடிகையும் விடாம..அவரு கதையே காரி துப்புற மாதிரி தான் இருந்துச்சி... யாரு தான் சினிமா துறைல இப்படி நடந்துக்கலன்னு கொழந்த தனமா கேக்காதிங்க பாஸு.. அமரர் "நம்பியார்" விட ஒரு நல்ல உதாரணம் உங்களுக்கு சொல்ல வேண்டுமா? இன்னைக்கு வேணா அவருக்கு சில பக்குவம் வந்து இருக்கலாம். அப்படியும் தன் ரசிகர்கள தன்னோட சுயநலத்துக்கு பயன்படுத்துற எவனும் மனுஷனா கூட இருக்க தகுதி கிடையாது.

//இந்த இடத்தில அஜித் அல்லது விஜய் போன்றவர்களின் பெயரை குறிப்பிடுவது மட்டும் தான் உங்கள் பிரச்சனையா..இல்லை சூர்யா விக்ரம் போன்றவர்களுகுமா.
அதாவது, இவர்கள் ரெண்டு பேரின்(அஜித்&விஜய்) வளர்ச்சிக்கும் பின்பும் எந்தவிதமான சோதனைகளும் இல்லை..எல்லாம் 'லக்' தான் என்று நினைக்குரிர்களா..//

இந்த இடத்துல விஜய், அஜித் மாதிரி இன்னொரு நாயோ பேயோ இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல.. அது சூர்யா,விக்ரம்மா இருந்தாலும்..
அவங்க ரெண்டு பேரு வளர்ச்சிக்கு பின்னாடி நிச்சயம் சோதனை இருந்துச்சி தான் அதை மறுக்க முடியாது.. ஆனா வளர்ந்த பின்னாடி ஒரு சாதனையும் இல்ல அதை தான் நாங்க சொல்றோம். தொடர்ந்து 10 படம் பிளாப் குடுக்குறதும்.. விஜய் படத்துல அஜித்த திட்டி பாடுறதும் அஜித் படத்துல விஜய திட்டி பேசுறதும், ரெண்டு ரசிகர்களும் அடிச்சிக்கிட்டு சாவும் போது அமைதியா வேடிக்கை பாக்குறதும் தான் இவங்க சாதனைனா.. போங்கடாங்..ஐயோ மன்னிசிகிங்க பாஸு ஒரு வேகத்துல சொல்லிட்டேன்.. உடனே "உனக்கென்ன..உனக்கென்ன" ன்னு பாட ஆரம்பிசிடாதிங்க..

//நான் சொன்ன அந்த மனிதர் திரைத்துறையில் மட்டும் அல்ல வேறு எந்த துறையில் இருந்து இருந்தாலும் நான் அவரை ரசித்து இருப்பேன் நேசித்து இருப்பேன்..//

ஒருவரை நேசிப்பது உங்களோட தனிப்பட்ட விஷயம் பாஸு..

//அதற்கு நான் என்ன உழைப்பு மன்னங்கட்டினு காரணம் சொன்னாலும் நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவதில்லை..//

அவரின் உழைப்பு தான் அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்தது என்பதை மறுக்க முடியாது.. ஆனா அதற்கு பிறகு அவரின் கவனம் உழைப்பில் மட்டும் இருந்து இருந்தால்.. இத்தன பிளாப் எதுக்கு பாஸு? ஒருவேளை அவருகிட்ட ஒரு கதை சொல்லிட்டு படம் எடுக்கும் போது வேற கதை எடுதுடுறான்களோ?

//அதுக்கு தான் நான் அப்பயே சொல்லி விட்டேன் 'எரிந்து விழுவிர்கள்' என்று..//

சுயலாபத்திற்காக ரசிகர்களை பகடைகாயாக பயன்படுத்துபவர்களை பத்தி சொன்னா மத்தவங்க எரிந்து தான் விழுவாங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்கு பாஸு..

//நீங்கள் அவரை வெறுப்பதற்கு நூறு காரணம் இருக்கலாம்..நான் அவரை நேசிப்பதக்ற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன..வெறும் ரசிகனாக மட்டுமே இல்லாமல்..//

நீங்க ரசிகனாக மட்டும் இல்லாம அவரை நேசிப்பதற்கு லட்சம் காரணம் கூட இருக்கலாம்.. ஆனா.. அட போங்க பாஸு.. சொன்னா ஏதுக்கவா போறீங்க.?
நீங்க சொன்னா சரி தான் பாஸு..

பாஸு.. நீங்க எப்படியும் இந்த கமெண்ட் தூக்கிடுவிங்க .. உங்க "தல" மற்றும் "தள" க்கு இப்போ வந்துருக்குற பக்குவம் கூட உங்களுக்கு எல்லாம் இன்னும் வரலைனு அவங்க பின்னாடி அலையும் போதே தெரியுது பாஸு.. ஆனா பாஸு..
டெலிட் பண்ணினாலும் திரும்ப திரும்ப கமெண்ட் பண்ணுவேன் பாஸு..

வினோத் கெளதம் said...

இதை எல்லாம் சொல்றதுக்கு முன்னாடி உங்க கணிபொறியிலும் மொபைல்லிலும் ஒரு நடிகரின் படம் இருக்குமே அதை கொஞ்சம் அழித்து விடுங்கள் பாஸ்..
அவரை தியேட்டரில் மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடுங்கள்..
இவர் மேல் உங்களுக்கு இந்த அளவுக்கு வெறுப்பு இருக்கும் என்று இன்று தான் முழுமையாக தெரிந்துக்கொண்டேன்..

சினிமாத்துறை என்று இல்லைங்க..எந்த துறையா இருந்தாலும் அவங்க அவங்களுனு பல மைனஸ் இருக்கும்.
ஏன் என்(என்னை மட்டும் தான் சொல்றேன்) எழுத்தை மட்டும் வைத்து இவர் இப்படி தான் என்று என்னை கணிக்க முடியுமா..நான் என்னோடைய பலவினங்களை மட்டும் பார்த்தேன் ஆனால் என்னையே என்னால் முழுமையாக நேசிக்க முடியாது..

//அவருக்கு சில பக்குவம் வந்து இருக்கலாம். அப்படியும் தன் ரசிகர்கள தன்னோட சுயநலத்துக்கு பயன்படுத்துற எவனும் மனுஷனா கூட இருக்க தகுதி கிடையாது.//

இது டாபிக் வேற எங்கயோ போகுது..இதுக்கும் என்னால் விளக்கம் தர முடியும்..
ஆனால் வேண்டாம்..எனக்கு அவரை பிடித்து இருக்கு தட்ஸ் ஆல்..இதுக்கு நான் இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு..இது தான் மாற்றவர்கள் அவர் மீது காட்டும் வெறுப்பு தான் மேலும் மேலும் என்னை அவரை நேசிக்க வைக்கிறது...ரசிகர்கள்,சினிமா,அழகு,நடிப்பு..இதை எல்லாம் தவிர்த்தும் எனக்கு அவரை பிடிக்க காரணங்கள் இருக்கின்றன..ஆனால் நீங்கள் மறுபடியும் மறுபடியும் அதே கோணத்தில் இருந்தே பார்த்து கொண்டு இருக்கிறிர்கள்..

//ஆனா வளர்ந்த பின்னாடி ஒரு சாதனையும் இல்ல அதை தான் நாங்க சொல்றோம். தொடர்ந்து 10 படம் பிளாப் குடுக்குறதும்.. விஜய் படத்துல அஜித்த திட்டி பாடுறதும் அஜித் படத்துல விஜய திட்டி பேசுறதும், ரெண்டு ரசிகர்களும் அடிச்சிக்கிட்டு சாவும் போது அமைதியா வேடிக்கை பாக்குறதும் தான் இவங்க சாதனைனா..//

திரும்பவும் சொல்றேன் அவர் இதனை ஹிட் கொடுத்து இருக்காரு இதனை ஃபிளாப்
கொடுத்து இருக்காரு..இல்லை சினிமாவுல இந்த நிலையில் இருக்காரு என்பதை தாண்டியும் எனக்கு சில காரணங்கள் இருக்கின்றன..நான் இந்த டாபிக் பத்தி எல்லாம் பேசுனா..இதை சாக்காக வைத்து கொண்டு பல விஜய் ரசிகர்களோடு சண்டை போட முடியும்..சோ திரும்பவும் சொல்றேன் இது சினிமாவுக்கு அப்பர்ப்பட்டது..

அதான் நான் வேற யாரை சொல்லி இருந்தாலும் இந்த டாபிக் இவ்வளவு தூரம் போய் இருக்காது..மேலே நீங்கள் போட்டு உள்ள பின்னுட்டத்தை திரும்பவும் நீங்களே ஒரு முறை படித்து பாருங்கள்..உங்களுடுய கோபம் காரணமே இல்லாமல் அவர் மேல் இருப்பது சாரி அந்த நடிகர் மேல் இருப்பது உங்களுக்கு தெரியும்..

அப்புறம் நான் ரோல் மாடல் என்று நினைத்து சொன்ன ஒருவரின் மேல் நீங்கள் பிரயோகித்த வார்த்தைகள் பிரமாதம்..

திரும்பவும் பேச வைகிறிங்க..ஒருவன் ரஜினியயோ இல்லை உதரணத்துக்கு கருனநீதியையோ ரோல் மாடல் என்று சொன்னால் அதில் உள்ள தன்மையை மட்டும் பாருங்கள்..அதாவது அவர்கள் எந்த அர்த்தத்தில் அப்படி சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்..அதை விட்டு விட்டு உங்களுக்கு அவர்களின் மேல் இருக்கும் வெறுப்பை இவரிடம் காட்டடிர்கள்..

அப்புறம் மிக முக்கியமா உங்கள் கம்மென்ட் அப்படியே தான் இருக்கு..இதற்கு முன்னாடி பல தடவை உங்கள் கம்மேன்ட்டை வேண்டும் என்றே பல தடவை உள்நோக்கத்தோடு அழித்து உள்ளேன் அதற்கும் சேர்த்து மனித்து விடுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

அடச்சே..

எவனுக்காகவோ

ரெண்டு நல்ல ஃப்ரண்ட்ஸ் அடிச்சுகிறீங்களேப்பா

வருத்தம்மா இருக்குடா..

காலையில ரெண்டுபேரும் குட்மார்னிங் சொல்லி மெச்சேஜாச்சும் பண்ணிக்கங்கடா..

இன்னொருவாட்டி சண்டை போட்டீங்க

கொன்னுடுவேன்...

kishore said...

//இதை எல்லாம் சொல்றதுக்கு முன்னாடி உங்க கணிபொறியிலும் மொபைல்லிலும் ஒரு நடிகரின் படம் இருக்குமே அதை கொஞ்சம் அழித்து விடுங்கள் பாஸ்..//

என்னோட கணிப்பொறியிலும் மொபிளிலும் இருக்கும் நடிகரின் படம் அவரை நடிகராக மட்டும் ரசிப்பதால் உள்ள படம் பாஸ் .. நாளைக்கு இன்னொரு நடிகரோ இல்ல நடிகையோ கூட என்னோட கணிப்பொறி மற்றும் மொபைல்அ இருப்பாங்க இருப்பாங்க.. அதுக்காக..அவர நான் ரோல்மாடல் ஆ எடுத்துக்குறேன் நீங்க நினைக்கிறது பைத்தியகாரதனம்னு உங்களுக்கு தெரியாததா பாஸ்..?

//இவர் மேல் உங்களுக்கு இந்த அளவுக்கு வெறுப்பு இருக்கும் என்று இன்று தான் முழுமையாக தெரிந்துக்கொண்டேன்..//

இவர் மேல் எந்த வெறுப்பும் காட்டியதாக எனக்கு தெரியல பாஸ்.. இவரின் படங்கள் நான் நிறைய முறை தியேட்டர்ல போய் பார்த்து இருக்கேன் பாஸ் . என்னோட பேவரிட் படங்கள்ல இவரோட "முகவரி"யும் ஒண்ணுனு உங்களுக்கு தெரியுமே பாஸ்.. இவரு தன்னோட ஆரம்ப காலத்துல இப்படி இருந்தாரு.. இப்போ இப்படி இருக்காருன்னு சொன்னா அது வெறுப்புன்னு எப்படி சொல்றிங்க பாஸ்.?

//சினிமாத்துறை என்று இல்லைங்க..எந்த துறையா இருந்தாலும் அவங்க அவங்களுனு பல மைனஸ் இருக்கும். //

உண்மை தான் பாஸ்.. ஆனா மைனஸ பிளஸ் ஆ மாத்தினவங்க மட்டுமே உன்ன்மையா ஜெய்கிறாங்க.. ஆனா மைனஸ மறச்சவங்க...?

kishore said...
This comment has been removed by the author.
kishore said...

//ஏன் என்(என்னை மட்டும் தான் சொல்றேன்) எழுத்தை மட்டும் வைத்து இவர் இப்படி தான் என்று என்னை கணிக்க முடியுமா..நான் என்னோடைய பலவினங்களை மட்டும் பார்த்தேன் ஆனால் என்னையே என்னால் முழுமையாக நேசிக்க முடியாது..//

உண்மையான வார்த்தை பாஸ்.. தன்னை முழுதாக நேசிக்காத முடியாத ஒருத்தனால கண்டிப்பாக அடுத்தவன நேசிக்க முடியாது பாஸ்..

//இது தான் மாற்றவர்கள் அவர் மீது காட்டும் வெறுப்பு தான் மேலும் மேலும் என்னை அவரை நேசிக்க வைக்கிறது...//ரசிகர்கள்,சினிமா,அழகு,நடிப்பு..இதை எல்லாம் தவிர்த்தும் எனக்கு அவரை பிடிக்க காரணங்கள் இருக்கின்றன..ஆனால் நீங்கள் மறுபடியும் மறுபடியும் அதே கோணத்தில் இருந்தே பார்த்து கொண்டு இருக்கிறிர்கள்..//
பாஸ்.. நீங்க ஊருக்கு வந்திங்கனா ..நாலு பசங்க கிட்ட கேட்டு பாருங்க.. யாரும் அவர பிடிக்காதுன்னு சொல்லமாட்டாங்க.. ஆனா இன்னொருத்தரையும் பிடிசிருகுன்ன்னு சொன்னா மட்டும் அதை ஏத்துகுற மனபக்குவம் உங்க கிட்ட ஏன் இருக்க மாட்டுது?
மற்றவர்கள் அவர் மீது வெறுப்பு காண்பிக்கிறார்கள்ன்னு நீங்களே நெனச்சிக்கிட்டு..அதுக்கு தான் நான் இப்படி இருக்கேனு சொல்றது.. உங்கள என்னனு நெனைக்க வைக்கிது..psych.. freak..perverted mind? அட போங்க பாஸ்..


//திரும்பவும் சொல்றேன் அவர் இதனை ஹிட் கொடுத்து இருக்காரு இதனை ஃபிளாப்
கொடுத்து இருக்காரு..இல்லை சினிமாவுல இந்த நிலையில் இருக்காரு என்பதை தாண்டியும் எனக்கு சில காரணங்கள் இருக்கின்றன..நான் இந்த டாபிக் பத்தி எல்லாம் பேசுனா..இதை சாக்காக வைத்து கொண்டு பல விஜய் ரசிகர்களோடு சண்டை போட முடியும்..சோ திரும்பவும் சொல்றேன் இது சினிமாவுக்கு அப்பர்ப்பட்டது..//

பாஸ் உங்களுக்கு சினிமாவுக்கு அப்பாற்ப்பட்டு அவர பிடிச்சி இருக்கு தான்.. ஆனா எங்களுக்கு அவர நடிகராக மட்டும் தான் தெரியும் பாஸ்..அந்த துறைய்ல அவரு இப்படி இருக்காருன்னு சொன்னா அது தப்புங்களா ?

//அதான் நான் வேற யாரை சொல்லி இருந்தாலும் இந்த டாபிக் இவ்வளவு தூரம் போய் இருக்காது..மேலே நீங்கள் போட்டு உள்ள பின்னுட்டத்தை திரும்பவும் நீங்களே ஒரு முறை படித்து பாருங்கள்..உங்களுடுய கோபம் காரணமே இல்லாமல் அவர் மேல் இருப்பது சாரி அந்த நடிகர் மேல் இருப்பது உங்களுக்கு தெரியும்..//
இவர பத்தி சொன்னதால தான் இப்படி பேசுறாங்கன்னு நீங்க நினைகிரிங்க பாருங்க.. இது தான் பாஸ் கொழந்தபுள்ள தனமா இருக்கு..
என்னோட பினூட்டம் நான் பல முறை படித்த பின் தான் உங்க ப்லாக்ல போட்டேன் பாஸ். தனிப்பட்ட முறையல அவர் மீது சாரி அந்த நடிகர் மீது நான் கோபப்பட ஒரு காரணமும் இல்லாதபோ நான் எப்படி அவர் மீது கோபபட முடியும்..?

kishore said...

//அப்புறம் நான் ரோல் மாடல் என்று நினைத்து சொன்ன ஒருவரின் மேல் நீங்கள் பிரயோகித்த வார்த்தைகள் பிரமாதம்..//

பொதுவாக "நாயோ" "பேயோ" என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்.. நீங்க ஏன் அஜித மட்டும் எடுதுகிறிங்க.. அதே வரில.. விஜய் சூர்யா விக்ரம் பேரும் இருக்கு.. அவங்களையும் அப்படி சொன்னேன்னு சொல்விங்களா?

//திரும்பவும் பேச வைகிறிங்க..ஒருவன் ரஜினியயோ இல்லை உதரணத்துக்கு கருனநீதியையோ ரோல் மாடல் என்று சொன்னால் அதில் உள்ள தன்மையை மட்டும் பாருங்கள்..//

நான் பேச வைக்கல பாஸ்.. ரசிகர்கள் நடிகர்கள் பின்னால் போவதை பற்றி ஒரு பொதுவான கருத்து சொன்னேன்.. அதற்கு நீங்க அஜித மட்டும் சொன்னதா நெனச்சிகிட்டு சொன்னா காட்டமான பதிலுக்கு.. நான் கூறிய மறுப்பு செய்தி அவ்ளோ தான்.

// எந்த அர்த்தத்தில் அப்படி சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்..அதை விட்டு விட்டு உங்களுக்கு அவர்களின் மேல் இருக்கும் வெறுப்பை இவரிடம் காட்டடிர்கள்..//

நீங்க அவர ரோல் மாடல்ன்னு சொன்னது உங்களுக்கு பிடித்த நடிகர் என்ற பதிலுக்கு .. ஒரு நடிகரை பத்தி கேள்விபட்டத சொன்னா தப்புங்களா ? நீங்க வேற எந்த அர்த்தத்துல சொன்னிங்கன்னு சொல்லி இருந்தா எனக்கும் இவ்ளோ நேரம் வீண் ஆகி இருக்காது. இதை நீங்க வழக்கம் போல வெறுப்புன்னு சொன்னா நான் எந்த வகையிலும் காரணம் ஆக முடியாது பாஸ்.

//அப்புறம் மிக முக்கியமா உங்கள் கம்மென்ட் அப்படியே தான் இருக்கு..இதற்கு முன்னாடி பல தடவை உங்கள் கம்மேன்ட்டை வேண்டும் என்றே பல தடவை உள்நோக்கத்தோடு அழித்து உள்ளேன் அதற்கும் சேர்த்து மனித்து விடுங்கள்.//

என்ன பாஸ்.. மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு? சின்ன புள்ளைங்க செய்யுறத எல்லாம் நான் சீரியஸ் ஆ எடுத்துக்க மாட்டேனு உங்களுக்கு தெரியாதா? ரொம்ப பீல் பண்ணி டென்ஷன் ஆகாதிங்க உடம்புக்கு எதாவது ஆகிட போது.. உடம்ப பார்த்துக்குங்க பாஸ்.. வரேன் பாஸ்.

வினோத் கெளதம் said...

No Comments. நான் பிடிச்சி இருக்குன்னு சொன்ன அர்த்தம் வேற, ரோல் மாடல் அப்படின்னு சொன்ன அர்த்தம் வேற..ஆனா அதுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் வேறு. அதுக்கு நீங்க எனக்கு கொடுத்த பட்டங்களுக்கு நன்றி..குறிப்பா எனக்கு என்னை பற்றி தெரியும் அதனால...Good bye.

வினோத் கெளதம் said...

இன்னொரு விஷயம் இப்படி எல்லாம் நான் பேசுறதுக்கு காரணம் மற்ற நடிகர்கள் மேல் உள்ள வெறுப்பு தான் என்றால் அதுக்கு ஒன்றும் பண்ண முடியாது..

அது ஒரு கனாக் காலம் said...

ரைட்டு ..... சாரி லேட்டு .

கலையரசன் said...

//நான் சொன்ன அந்த மனிதர் திரைத்துறையில் மட்டும் அல்ல வேறு எந்த துறையில் இருந்து இருந்தாலும் நான் அவரை ரசித்து இருப்பேன் நேசித்து இருப்பேன்..//

ஏன் பாஸ்? அவரு உங்க சொந்தகாரரா? இப்டியெல்லம் பேசாதடா.... மில்க் "சீன் பென்" ஆக்கிடபோறாங்க!!

கலையரசன் said...

//நீங்கள் அவரை வெறுப்பதற்கு நூறு காரணம் இருக்கலாம்..நான் அவரை நேசிப்பதக்ற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன..வெறும் ரசிகனாக மட்டுமே இல்லாமல்..//

இதை படிக்கும்போது கவுண்டமணி சொன்ன வசனம்தான் ஞாபகம் வருது...
"இந்த பொழப்பு பொழக்கிறதத்துக்கு நாலு தெரு பிச்ச எடுத்து சாப்பிடலாம்..."
...போய் எடு!!

கலையரசன் said...

அய்யா வினோத்து.. உனக்கு ஏன் இந்த அடிமட்ட ரசிகன் போல கோபம் வருது? அசீத்தை பிடிக்கும்.. ரைட்டு! அதை... அசீத்தை பிடிக்கும்ன்னு ஒத்த வரியல எழுதிட்டு போயிட்டே இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல.. அதை விட்டுட்டு!!

அவரு தன்னம்பிகையில மேல ஏறுனாருன்னா? மத்தவனுங்க எல்லாம் ஆயா கைய புடிச்சிகிட்டா மேல ஏறுனாங்க? அவனை ரசிக்கிறதோட மட்டும் நிறுத்திக்கோ! அவனுக்காக எங்க தலைவன் கிஷோர் கிட்ட சண்ட போட்ட... உன் அசீத்து மாதிரி உனக்கும் அடுத்தடுத்து ஆப்பு.. சாரி.. ஃப்ளாப்பு வரும்!!

விக்னேஷ்வரி said...

நல்ல பதில்கள். அஜீத் எனும் ஒரு மனிதரைப் பற்றிய அழகான செய்தித் தொகுப்புகள். நல்லா இருந்தது வினோத்.

kishore said...

//No Comments. நான் பிடிச்சி இருக்குன்னு சொன்ன அர்த்தம் வேற, ரோல் மாடல் அப்படின்னு சொன்ன அர்த்தம் வேற..ஆனா அதுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் வேறு. அதுக்கு நீங்க எனக்கு கொடுத்த பட்டங்களுக்கு நன்றி..//
ஓஹோ..
//இன்னொரு விஷயம் இப்படி எல்லாம் நான் பேசுறதுக்கு காரணம் மற்ற நடிகர்கள் மேல் உள்ள வெறுப்பு தான் என்றால் அதுக்கு ஒன்றும் பண்ண முடியாது..//
ஆஹா..
//எனக்கு என்னை பற்றி தெரியும் அதனால...Good bye//
YOUR WISH..

kishore said...

கலை..
நல்லா தான் இருக்கு . இருந்தாலும் என் பேர வச்சி அவன திட்டாத.. becoz he is MY friend and he is much more important to me.i dont want to lose him for anyone and at anycst. so pls dont mistake.

Prabhu said...

வழக்கம் போல விளையாட்டுக்கு சண்டை போடுறீங்கன்னு நினைச்சேன். என்னங்க இது சீரியஸ் மாதிரி தெரியுது. புலவர்களே அமைதி. ரெண்டு பேரும் ஃபோன் போட்டு 'பழம்' விட்டுக்கோங்க! உங்க சண்டை எனக்கு 'டெரரா' இருக்கு பாஸ்! :(

மத்த படி நடுவுல விழுந்து அடி வாங்கிக்காதன்னு அப்பா சொன்னத ஃபாலோ பண்ணுறேன். :)

kishore said...

இதற்காக தானே ஆசைபட்டாய் "பப்பு " குமரா ?

Nathanjagk said...

​ரொம்ப திருப்தியா இருக்கு! ஆனா ஏன் ஒருத்த​ரை பிடிக்காதுன்னு ​சொல்லணும்! பழகனவங்க​ளை​யே பிடிக்காதுன்னு ​சொல்ல மாட்​டோம். பழக்க​மே(!?) இல்லாத ​ஜோதிகா, அசின், ​டாக்டர்.பெப்சி உமா, விஜயப்பா இவங்க​ளை நமக்கு பிடிக்காம ​போறதில என்னங்க இருக்கு வினு?

Prathap Kumar S. said...

//நம்ம "ஷார்ஜா புலி" "சிக்ஸ்பேக் சிங்கம்" "பதிவுலகின் இளம் சூறாவளி" "'ஆதவன்"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில் இந்த தொடர்ப்பதிவை(யும்) எழுதுகிறேன்//

அதுக்கு ஏங்க ஆதவனை இப்படி கலாயக்கிறீங்க...

//பிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.//

இது உருப்படியா இருந்துச்சு தல..

வினோத் கெளதம் said...

வாங்க பிரதாப்..நீங்க சொன்னா சரி தான்..:)