Monday, November 9, 2009

திங்கள் இனிதே-2

பயணம்:

போன வாரம் அமீரக பதிவர்களின் கோர்ஃபக்கான் பயணம் இனிதே முடிந்தது.
பயணதூரம் கருதி முதலில் நான் போக தயங்கினாலும்..அதன்ப்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளும் அவர்கள் என்ப்பால் வைத்திருந்த அன்பும் என் மனதை வெகுவாக மாற்றி இருந்தன..என் இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அல்-அய்னில் இருந்து புறப்பட்ட நாங்கள் அங்கு இருந்து 'கோர்ஃபக்கான்க்கு' நேராக பேருந்து இல்லாததால் முதலில் 'மதாம்' என்கிற இடத்திற்கு சென்றோம்..அங்கு இருந்து 'புஜைரா' செல்லும் ஒரு டாக்ஸியில் ஏறியப்பிறகு "அப்பாடா" என்று மூச்சு விடுவதற்குள் ஒரு தெருவை சுற்றி வந்த டாக்ஸி டிரைவர் வேறு ஆள் கிடைக்காததால் எங்களையும் இறக்கி விட்டு விட்டான்..சரி மூன்று பேரை மட்டும் ஏற்றி செல்ல எவ்வளவு என்று கேட்ட தொகையை கேட்டு என் நண்பன் அங்கேயே மயங்கி விழாத குறை..சரி சிறிது நேரம் வேறு டாக்ஸி கிடைக்குமா என்று அங்கேயே சுற்றி சுற்றி வந்த நாங்கள் அதன்ப்பிறகு வேறு வழி இன்றி மறுப்படியும் அல்-அய்ன் டாக்ஸி பிடித்து ஊரு வந்து சேர்ந்தோம்..எப்படி இருந்தாலும் அடுத்த இது போன்ற ஒரு பயணத்தில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்று இப்பொழுதே முடிவே செய்து விட்டேன்.

சினிமா :

போன வாரம் சிறிது நேரம் கிடைத்தப்பொழுது எல்லாம் டவுன்லோட் பண்ண ஆங்கில படங்களையும், கார்த்தியிடம் இருந்து எடுத்து வந்த படங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தேன்..வரிசையில் சொல்வது என்றால் The shawshank redemption, A clockwork orange, Full metal jacket, Kite runner etc.,கிட்டதட்ட அனைத்து படங்களுமே நமை வேறு மாதிரியான மனநிலைக்கு எடுத்து செல்ல கூடியவை..சாதரணமாக நடந்து செல்லும் பொழுதும்,சாப்பிடும் பொழுதும், உக்கார்ந்து இருக்கும் பொழுதும் கூட அதை பற்றிய சிந்தனைகளே எழுந்தன..உண்மையில் நல்ல படங்கள் என்று பார்க்கும் பட்சத்தில் ஒன்றும் இல்லை ஆனால் அது நம் உளவியல் சிந்தனையை மாற்றி அமைக்கும் பட்சத்தில் கொஞ்சம் கஷ்டம்..இதை பிரேக் பண்ணவும் மறுபடியும் இயல்பான மனநிலைக்கு திரும்புவதர்க்காகவே திரும்பவும் தமிழ் படங்களை பார்க்க செய்தேன்.உலக சினிமா என்றாலே இதுப்போல் கசக்கி பிழிந்து காயப்போடும் வகையில் தான் இருக்குமா..பார்த்ததில் சுத்தமான மொக்கை படம் என்று சொல்லப்போனால் பைட் கிளப் தான்..நல்ல வேளை நம்மூர் தியேட்டர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் ஆகவில்லை..ஆகி இருந்தால் ஸ்க்ரீன் கிழிந்து இருக்கும்..மிகவும் ரசித்த படங்கள்
The shawshank redemption, A clockwork orange .

போன வாரம் அப்படி திரும்பவும் என்னை உற்சாக மனநிலைக்கு கொண்டு வர நான் பார்த்த படத்தில் மிகவும் ரசித்த வசனம்:

"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க.."..

என்ன படம்னு சொல்லுங்க பாப்போம்..

இந்த கொசு தொல்லை பெரும் தொல்லைடா சாமி..

என் ரூம்மேட் ஹிந்திக்கார பய..எப்பொழுதும் டிவில இந்த 'ரியாலிட்டி ஷோவும்','சீரியலும்' தான் பார்த்துக்கிட்டு இருப்பான்..சீரியல்ல அழுவுற மாதிரி இப்ப எல்லாம் ரியாலிட்டி ஷோல கூட யாராச்சும் ஒருத்தர் அழுதுக்கிட்டே இருக்காங்க..
தமிழ் சீரியல் கூட பார்த்துரலம் ஆனா இந்த 'ஹிந்தி சீரியல்' கொடுமை இருக்கு பாருங்க..ஆண்கள் முதல் பெண்கள் வரை எப்பொழுதும் ஃபுல் மேக்அப்பில் தான் திரிவார்கள்..எப்ப பார்த்தாலும் 'சென்டி' டயலாக் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்..இப்படி பார்த்துகிட்டு இருந்த அவன் போனவாரம் you tubeல் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்..என்னடா பாக்குறனு நான் கேட்டதுக்கு அவன் சொன்னான் பாருங்க.."சாந்தி"ன்னு..நியாபகம் இருக்கிறதா வருடக்கணக்கில் தூர்தர்ஷனில் போட்டு தாக்கிய சீரியல்..இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண..ஒரே ஆறுதல் அவன் விடுமுறையில் ஊருக்கு செல்வது தான்..

ஒரே ஒரு ஜோக்:

மகன் அழுவதை பார்க்கும் அம்மா அவனிடம் சென்று..

"ஏண்டா அழுவுற.."
"கீழ விழுந்துட்டேன்ம்மா.."
"எப்ப விழுந்த.."
"அரை மணி நேரம் ஆச்சு.."
"அப்ப விழுந்ததக்கு இப்ப அழுவுறியா.."
"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்.."

டிஸ்கி:

எப்ப இருந்து இந்த திங்கள் இனிதே ஆரம்பித்தேனோ அப்பயில இருந்து வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடுறேன்..இந்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..



22 comments:

Prabhu said...

"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க.."..////

வெண்ணிலா கபடி குழு? சரியா தெர்ல.

என்னங்க பைட் க்ளப் மொக்கன்னு சொல்லிபுட்டீங்க. ச்சே.... shawshank redemption செம படம்... பாத்துட்டே இருக்கலாம்.

Admin said...

முதல் வரவு....

வந்தேன் வாசித்தேன்... தொடர்ந்து வருகிறேன் நல்லதை தாருங்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

//"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்.."//

:)

பாலா said...

ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயயயயயயயாய்....,

யார்ர்ர்ரப் பாத்து, fight club மொக்கை படம்னு சொன்னீங்க? வுடுறா வண்டிய... ஜப்பானுக்கு!

====

The Clockwork Orange -ஐ 18+ னு எழுதி வச்சிருக்கேன். Swingers -க்கு நீங்க எல்லாம் போட்ட போட்டில்... அப்படியே டீல்ல வுட்டுட்டேன்.

நீங்க இன்னா நினைக்கறீங்கோவ்?

kishore said...

//"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க.."..//

"நினைத்தாலே இனிக்கும்" பாக்கியராஜ் பேசுன வசனம்.. மொக்க படம்
"வெண்ணிலா கபடி குழு " கிஷோர் பேசுன வசனம்.. ஓரளவு ஓடுன படம்

Raju said...

ரைட்டு..!

என்னாது டயலாக்காம் படமாம். படத்துல டயலாக்கெல்லாமா கேட்டுட்டு இருப்பாங்க.
நாங்கல்லாம் ஒன்லி ஆக்ஸன்தான்.

சென்ஷி said...

கடுப்ப கெளப்பறான் போடா அங்கிட்டு..! ஃபுஜைராலேந்து கெளம்பி கோர்ஃபக்கான்ல எறங்கியும் அண்ணாச்சி வினோத் வரலையா கலைன்னு கேட்டதைப் பாத்து நாஞ்சில் பிரதாப் கதறிக் கதறி அழுதுட்டான். நீதான் அதைப் பார்க்க வரலை. (வந்திருந்தா இதைப் பார்த்திருக்க முடியாதோ!)

சென்ஷி said...

//"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்.."//

:)

குட் ஜோக்!

வரதராஜலு .பூ said...

சென்ஷி கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத், நீங்க வராதது எங்களுக்கு வருத்தம் தான். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.

நாகா said...

அடுத்த ட்ரிப்ல பாத்துக்கலாம் வினோத், எல்லோரும் அல் எய்ன் வந்துட்டா உங்களுக்கு வர்றது சிரமமா இருக்காதே :)

மணிஜி said...

ரைட்டு..!

கலையரசன் said...

மறுபடியும் உன்னிடமிருந்து ஒரு கலக்கலான விமர்சனம்...

சரி... சரி.. ரூம்லையே படுத்துகிட்டு மதாம் வந்தேன்.. பாதாம் குடிச்சேன்னு கதை சொல்லுறியா? ரைட்டு, அடுத்த தடவை பேசிப்போம்!

இன்னா கொயந்த.. பைட் கிளப் மொக்கபடமா? அடிங்... உன் மூணாவது தலைப்பை ஒரு தடவை நீயே படிச்சிக்கோ!! (உன் லேப்டாப்புல உள்ள தமிழ்படங்களின் லிஸ்டை ரிலீஸ் பண்ணட்டுமா? டாரரரராயிடுவ..)

"சாந்திைய பார்த்துகிட்டு இருந்தானா? இதுல என்ன பெரிய ஆச்சரியம் வேண்டிகிடக்கு? உன் ரூம்மெட் உன்னை மாதிரிதான்டா இருப்பான்!

சோக்கு... ம்?

டிஸ்கிக்கு டிஸ்கி : வாரத்துக்கு ஒரு தடவ எழுதுற டாப்ஸ்க்கு ஏன் போர்வை?

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம் அடுத்த டூர்ல பார்த்துகலாம்.

விமர்சனம் நல்லாயிருக்கு மக்கா. விமர்சனத்தை ஒரு பதிவாவே போட்டிருக்கலாம்ல!

நல்லவேளை ஜோக்குன்னு முன்னாடியே சொல்லி தலைப்பை கொடுத்துட்ட இல்லைனா அது என்னான்னு கண்டுபிடிக்க கஷ்டமாகியிருக்கும் :)

கோபிநாத் said...

அட போ மச்சி...

விமர்சனத்தை தனியாக எழுதுதேன்.

போன வாரம் போல இந்த வாரமும் கலக்கல் ராசா ;))

விக்னேஷ்வரி said...

போகாத பயணத்துக்கு தான் இவ்ளோ கதையா...

அட, நினைத்தாலே இனிக்கும் பார்த்தீங்களா...

ஹாஹாஹா... பாவம் தாங்க நீங்க, சீரியல் மனிதருடன் வாழ்வதற்கு.

ஜோக் நல்லா இருக்கு.

வினோத் கெளதம் said...

@ Pappu..

//வெண்ணிலா கபடி குழு?//
ரொம்ப சரி..

//என்னங்க பைட் க்ளப் மொக்கன்னு சொல்லிபுட்டீங்க. ச்சே.... shawshank redemption செம படம்... பாத்துட்டே இருக்கலாம்.//
Fight club சுமாரா தான் இருந்தச்சு பப்பு எனக்கு..கரணம் என்னனு தெரியுல..

@ சந்ரு..
நன்றி சந்ரு..தொடர்ந்து வாருங்கள்.

@ பிரியமுடன்...வசந்த்..
நன்றி வசந்த்..

@ ஹாலிவுட் பாலா..

//fight club மொக்கை படம்னு சொன்னீங்க?//
அது இன்னமோ எனக்கு பிடிக்கல..

//The Clockwork Orange -ஐ 18+ னு எழுதி வச்சிருக்கேன். Swingers -க்கு நீங்க எல்லாம் போட்ட போட்டில்... அப்படியே டீல்ல வுட்டுட்டேன்.//
தல சீக்கிரம் எழுதுங்க உங்க விமர்சனத்துக்கு waiting..

//swingers//

நாங்க என்ன சொன்னோம் தல..நாங்க கேள்விப்பட்ட விஷயத்தை சொன்னோம்..நீங்க பட்டும் எதாச்சும் எழுத வந்து எழுதமா போயடடிங்க எதா இருந்தாலும் கூச்ச நாச்ச படாமல் எழுதவும்..:))

@ Kishore..

//"நினைத்தாலே இனிக்கும்" பாக்கியராஜ் பேசுன வசனம்.. //

பாக்யராஜ் சொன்னாரா..அது எனக்கு தெரியவில்லை..ஆனா நான் சொன்னது "நீ" சொன்னது..

@ ♠ ராஜு ♠..
//நாங்கல்லாம் ஒன்லி ஆக்ஸன்தான்.//

என்ன ஆக்ஷன்..நீ சொல்ற ஆக்ஸன் 'வேற மாதிரி' தெரியுதே..:)

@ சென்ஷி..

//அண்ணாச்சி வினோத் வரலையா கலைன்னு கேட்டதைப் பாத்து நாஞ்சில் பிரதாப் கதறிக் கதறி அழுதுட்டான்//

அப்படியா அம்புட்டு பாசக்கார பயப்புளையா பிரதாப்..தெரியமே போய்டுச்சே..தெரிஞ்சு இருந்த நடை பயணமவே வந்து இருப்பேனே..

//குட் ஜோக்!//

நல்லது ..:)

@ Varadaradjalou .P..
நன்றி தல..

@ ச.செந்தில்வேலன்..

கண்டிப்பா அடுத்த தடவை நான் இருப்பேன் செந்தில்..:)

@ நாகா..

//எல்லோரும் அல் எய்ன் வந்துட்டா உங்களுக்கு வர்றது சிரமமா இருக்காதே :)//

கரெக்ட் தல..அதான் நானும் சொல்றேன்..:)
அடுத்த தடவை நீங்களும் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும்..

@ தண்டோரா ..

நன்றி தல..:)

@ கலையரசன் ..

//மறுபடியும் உன்னிடமிருந்து ஒரு கலக்கலான விமர்சனம்..//
இது ரொம்ப நக்கல் நான் விமர்சனமே பண்ணல..

//சரி... சரி.. ரூம்லையே படுத்துகிட்டு மதாம் வந்தேன்.. பாதாம் குடிச்சேன்னு கதை சொல்லுறியா? ரைட்டு, அடுத்த தடவை பேசிப்போம்! //

சரி சரி..எதுக்கு ரகசியத்தை வெளியே சொல்ற..விடு விடு..(சும்மா சொல்றேன்)..

//(உன் லேப்டாப்புல உள்ள தமிழ்படங்களின் லிஸ்டை ரிலீஸ் பண்ணட்டுமா? டாரரரராயிடுவ..)//

அது எல்லாம் சும்மா ஒரு காமெடி..நீ எதுக்கு கோபப்படுற..:)

//உன் ரூம்மெட் உன்னை மாதிரிதான்டா இருப்பான்! //

இல்லையே அவன் ரொம்ப நல்லவன் ஆச்சே..:)

//டிஸ்கிக்கு டிஸ்கி : வாரத்துக்கு ஒரு தடவ எழுதுற டாப்ஸ்க்கு ஏன் போர்வை?//

போத்திக்கிட்டு படுக்க தான்..:)

@ ☀நான் ஆதவன்☀ ..

//விமர்சனம் நல்லாயிருக்கு மக்கா. விமர்சனத்தை ஒரு பதிவாவே போட்டிருக்கலாம்ல!//

யோவ் என்ன ஆளு ஆளுக்கு நக்கல் பன்னுரிங்கள..நான் விமர்சனமே எழுதுல..குருட்டான் போக்குல எல்லாத்தையும் கோத்து அடிச்சு விட்டு இருக்கேன்..:))

//ம்ம்ம்ம் அடுத்த டூர்ல பார்த்துகலாம். //

கண்டிப்பா மக்கா..:)

//நல்லவேளை ஜோக்குன்னு முன்னாடியே சொல்லி தலைப்பை கொடுத்துட்ட//

சோக்கு..இதை யாரவது சொல்லுவிங்கன்னு நினைச்சேன் நீ சொல்லிட்ட..:)

@ கோபிநாத்..

//விமர்சனத்தை தனியாக எழுதுதேன்//

நான் என்ன 'கார்த்தியா' இல்லை 'ஹாலி பாலியா' வச்சிக்கிட்ட வஞ்சனை பண்ணுறேன்..:)

@ விக்னேஷ்வரி ..

அதே அதே அவங்களை சமாதனப்படுத்த தான்..:)

//அட, நினைத்தாலே இனிக்கும் பார்த்தீங்களா...//

பார்த்தேன்..பழசு ரொம்ப பிடிக்கும்..புதுசு சுமார் தாங்க..

//ஹாஹாஹா... பாவம் தாங்க நீங்க, சீரியல் மனிதருடன் வாழ்வதற்கு.//

என்னடா பேர மாத்திகிட்டே இருக்க..:)
அதன் ஏன் கேக்குறிங்க கொடுமையிலும் கொடுமை..

//ஜோக் நல்லா இருக்கு.//

நன்றி விக்கி..:)

//[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-க//

வினோத் கெளதம் said...

கடைசியில் பேர மாத்திக்கிட்டே இருக்கேனு இருக்குற கம்மென்ட் பித்தனுக்கு..:)

geethappriyan said...

குரு,
அநியாயத்துக்கு நல்லா இருக்கு பதிவு.
புதிருக்கு விடை கிஷோர் சொன்னது தான் அதான் கிஷோர் பேசிய வசனம்
எப்புடி அமைந்தது பாருங்க?
ஷஷான்க் ரிடெம்ப்ஷன் ஆல்டைம் ஃபேவரைட். ஆரஞ்சு இன்னும் பாக்கலை,
ஆமா ஏன் ஃபைட் க்ளப் பிடிக்கலை?
ப்ராட் பிட் பிடிக்காதா?
ஜோக்கும் பழசுன்னாலும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சு குரு

திங்கள் இனிதே என்னும் பெயர் நன்றாக உள்ளது, கதை எப்போ எழுதப்போறீங்க?

வினோத் கெளதம் said...

கதை எழுதுறேன் குரு கூடிய விரைவில்..

சத்ரியன் said...

//இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. இன்று நம் காரணமே இல்லாமல் வெறுக்கும் சிலரை கூட நாளையே நமக்கு மிகவும் பிடித்தவராக மாறலாம்.//

கெளதம்

ம்ம்ம்ம்... நம்ம ஊரு ஆசிரமத்துக் காரய்ங்க மாதிரியே ... சொல்றீங்களே சாமி.

நிஜமாவே... அனைவருக்கும் பிடிக்கும்படியான பதில்கள்! வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

ரொம்ப நன்றிங்க சத்ரியன்..