Thursday, October 1, 2009
மனசாட்சியின் குரல்..
நம்ம எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுவது என்பது ரொம்ப கஷ்டம்..ஆமாம் அதுவும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க கிட்ட சில விஷயங்கள் அவங்க கேக்கும் பொழுது இல்லை எதாவது ஒரு விஷயத்தை பத்தி விவாதிக்கும் பொழுது நம்ம 'அவங்க மனசு கஷ்டப்பட பொழுதோ' இல்லை 'நம்ம பத்தி எதாவது தப்ப நினைச்சிக்க போறங்கனு' என்று எண்ணி சில "சின்ன சின்ன பொய்கள்" தேவை இல்லாமல் சொல்ல வேண்டியது வரும். ஆனா நம்ம மனசாட்சி சும்மா இருக்காது பட்டுன்னு அறையிற மாதிரி எதாவது நம்மகிட்ட சொல்லும்..அதாவது இப்படி கூட சொல்லலாம் "மனசு ஒன்னு சொல்லும் நம்ம ஒன்னு சொல்லுவோம்"..உதாரணத்திற்கு ஒரு "மொக்கை" பதிவு படிப்போம்..நம்ம மனச்சாட்சி "எப்பா என்னடா இப்படி மொக்கை போட்டு இருக்கானு".. அப்படின்னு சொல்லும். இருந்தாலும் வேற வழி இல்லாமல் "ஆஹா, அருமை,அட்டகாசம்,பின்னிடிங்க"..அப்படின்னு சொல்லிட்டு வருவோம்..
அதுப்போல் எனக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை தான் இங்கே தொகுத்து உள்ளேன்:
வீட்டுல அப்பா அம்மாவோடு பேசிக்கொண்டு இருக்கையில் ..
அம்மா ..:"வினோத் உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு முடிவு பண்ணியாச்சு"
நான்.."அதுக்குள்ள என்னமா அவசரம் பொறுமையா பார்க்கலாம்ல''..
மனச்சாட்சி.."எப்பா இப்பயாச்சும் அந்த எண்ணம் வந்துச்சே..சீக்கிரம் அதை பண்ணி தொலைங்க.."
அப்பா.."வினோத் பொண்ணு அமைஞ்சிருச்சினா அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் உனக்கு பண்ணிர்லாம்னு இருக்கோம்.."
நான்.."அப்பா அப்படி எல்லாம் ஒன்னும் அவசரம் இல்லை இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.."
மனசாட்சி.."அது எல்லாம் நீங்க அடுத்த மாசமே பண்ணி வச்சாலும் நான் பண்ணிக்க தயார் தான்.."
இதே மாதிரி நண்பர்களிடம் பேசுறப்ப கூட மனசாட்சி ஏடாகூடமா குறுக்கிடும்..
உதாரணத்திற்கு நம்ம கிஷோர் கூட பேசிக்கிட்டு இருக்கன்னு வையுங்களேன்..
"மச்சான் கண்ணாடி எப்படிடா இருக்கு புதுசா வாங்குனேன்"..கிஷோர்.
"மச்சான் சூப்பர்டா உனக்கு ஏத்த மாதிரியே இருக்கு"..நான்.
"த்தூ..இது ஒரு கண்ணாடி..அதை வேற "மனசாட்சியே" இல்லாமல் மாட்டிக்கிட்டு வந்து கேக்குறியேடா"..மனச்சாட்சி.
"மச்சான் இதை போட்டுக்கிட்டு போய் தான் தஞ்சாவூர் வரைக்கும் போயிட்டு
என் ........ பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்"..கிஷோர்.
"மச்சி..இந்த கண்ணாடி ஒன்னு போதும் உன் ....... மயங்கி விழுந்த்ரும்''...நான்.
"டேய்..இதை போட்டுக்கிட்டு நீ பக்கத்து தெரு வரைக்கும் போனாலே கல்ல விட்டு அடிப்பானுங்க இதுல தஞ்சாவூர் வரைக்கும் போறியா.."..மனசாட்சி.
"மச்சான் நீயும் தஞ்சாவூர் வரில.."..கிஷோர்.
"டேய்..நான் வரமலயா..கண்டிப்பா வரேன்டா நம்ம நட்புக்காக இதை கூட பண்ண மாட்டேனா என்ன"..நான்.
"நாயே நாயே ..நீ வாங்கி தரப்போற ரெண்டு பீர்க்கு அவசரம் என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு பாரு.."..மனச்சாட்சி.
இப்ப இங்க எதாவது ஒரு பதிவர் மற்றும் நண்பர் கூட போன்ல பேசிக்கிட்டு இருக்கன்னு வையுங்க..
உதாரணத்திற்கு நம்ம கலை மாதிரி ஆளுங்க கூட...
"டேய்..ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் படிச்சிட்டு வோட்டு போட்டுரு"..கலை.
"ஹை..போட்டுடிங்களா..எப்பா உங்க பதிவை படிக்காம ரொம்ப போர் அடிச்சது..உடனே படிச்சிடுறேன்.."..நான்..
"ஆரம்பிச்சிடியா உன் இம்சைய..கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன் அது பொறுக்கலையா இவனுக்கு.."..மனச்சாட்சி.
படித்து முடித்தவுடன் மறுப்படியும் போன்..
"டேய்..அந்த கடைசி பத்திய படிச்சியா அதான் அட்டகாசம் இல்லை.."..கலை.
"ஏங்க..உங்களலால மட்டும் எப்படிங்க இப்படி எல்லாம் எழுத முடியுது..சூப்பருங்க"..நான்.
"யோவ்..முதல் பத்திய படிக்கறுத்துக்கே மூக்கால அழுதேன்..இதுல கடைசி பத்தி வேறயா..போய போ அழுதுருவேன்.."..மனச்சாட்சி.
பதிவர் சந்திப்புல கூட நம்மையும் மீறி சில சமயம் மனசாட்சி பேசிடுது..
"வினோத் வடை சாப்பிடிருயா"..பிரபல பதிவர்.
"இல்லை வேணாம்ங்க..இப்ப தான் சாப்டேன்.."..நான்.
நீட்டின வடை டப்பாவை எடுத்து தன் பக்கத்தில் சட்டென்று அந்த "பிரபலம்" வைத்து கொள்ளும்.
"ஏங்க..சும்மா பேச்சிக்கு சொன்ன உடனே வடை டப்பாவ எடுத்து பக்கத்துல வச்சிக்கிறதா..அட்லீஸ்ட் ஒரு வடயாவது தாயா..வந்ததுக்கு வடயாவது மிஞ்சட்டும்"..மனச்சாட்சி.
"இப்ப எல்லாம் அதிகமா சாப்பிடிறது இல்லை.."..பிரபல பதிவர்.
"ஆமாங்க ஆளை பார்த்தாலே தெரியுது ரொம்ப இளைச்சு போய்ட்டிங்க.."..நான்.
"வடை டப்பாவ ரவுண்டு கட்டி அடிச்சிட்டு..பேசுற டயலாக் பாரு..நல்லா இருங்கப்பு.."..மனச்சாட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
வ(டை)லை பதிவர் சந்திப்புல கூட நம்மையும் மீறி சில சமயம் மனசாட்சி பேசிடுது.
:-)))
சூப்பர்டா மச்சி!!
மானசாட்சி பேசுறது எல்லாம் சரிதான்.
ஆனா, அத மனசாட்சி உள்ளவன்தானே எழுதனும்?
(என் மனசாட்சி என்ன சொல்லுதுன்னு தனியா வேற சொல்லனுமா?)
நீ சொன்னது எல்லாம், நான் சொன்னதுன்னு எழுதிய உன் மொள்ளமாறிதனம் எனக்கு பிடிச்சிருக்கு!!
கடைசியில நீ குசும்பன்னு டைரக்டாவே எழுதியிருக்கலாம். பி.ப. ன்னு சொல்லியும், அவருதான்னு கண்டுபுடிக்காம இருக்க நாங்க என்ன கே.ப. வா?
நல்ல மனசாட்சி..
"ஆஹா, அருமை,அட்டகாசம்,பின்னிடிங்க"
;-)
பிரபல பதிவரை இப்படி அசிங்கப்படுத்துனதால அடுத்த சந்திப்புல உனக்கு வடை கட்டு!
என்னத்த சொல்ல... மனசாட்சி.. அத பத்தி யாரு பேசுறது.. அய்யா நல்லா கேட்டுகங்க.. எனக்கும் இந்த நாய் சொல்லி இருகுறதுகும் எந்த சம்பந்தமும் இல்லங்க.. மனச்சாட்சி பேசுறத கேக்கணும்னு நினைகிரவங்க .. வேணும்னா கோயம்புத்தூர் ஏற்காடு சேலம் போன்ற இடங்களுக்கு போய் வினோத்னு பேர மட்டும் சொல்லுங்க.. அப்போ தெரியும் மனசாட்சி எப்படி பேசும்னு.. (குறிப்பு.. பேர சொன்ன உடனே வந்து விழும் காரி துப்பல்களுக்கு கம்பெனி பொறுப்பு அல்ல. )
நல்லவேளை என் மானம் போகல :)
நன்றி மச்சி, நல்லா சிரிச்சேன் (நெசமாத்தான் )
@ கலையரசன்
மச்சி இவன் மொள்ளமாரி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம் கேளு..
காலேஜ்ல இவன் கைடு இவனுக்கு போன் பண்ணுவாருன்னு சிக்னல் கிடைக்காம இருக்க பாட்டில்க்குள்ள போன போட்டு மூடிட்டு அது பக்கத்துல குப்புற அடிச்சி படுத்துகிட்டு.. பார்த்துக்கிட்டு இருப்பான்.. மறு நாள் அவர்கிட்ட போனா ரெண்டு மணி நேரம் நிக்க வச்சி அவரு இவன திட்டுவாரு பாரு.. நம்மளயே காது கொடுத்து கேக்க முடியாது.. ஆனா இவன் மூஞ்சில ஒரு ரிஆக்ஷனும் இருக்காது..
இப்போ இவனெல்லாம் மனச்சாட்சி பத்தி பேசறான்..
மச்சான் இந்த பதிவ காப்பி பண்ணி உங்க வீட்ல குடுக்கலாம்னு நினைக்கிறேன் (குறிப்பா முதல் பாதி).. அதை பத்தி நீ என்ன நினைக்கிற.. ?
படிச்சி முடிச்சதும் என்னோட மனசாட்சி ஒன்னு சொன்னது அதை பப்ளிக்குல சொல்ல முடியாது :)
என் ........ பார்த்துட்டு வரலாம்னு ////
கிஷோரு சொல்லவே இல்ல பாத்தீங்களா!
மனசாட்சி - இந்தப் பதிவப் பாக்குறதுக்கு தான் லிங்க் கொடுத்தயா?
ஹி.. ஹி...:)
உங்களிம் மனசாட்சியின் அலசல் நல்லாயிருக்கு
மனசாட்சி: பதிவுக்கு.. தலைப்பா கொடுக்க வேண்டியதை, லேபிளா கொடுத்திருக்காரு! :) :)
:-))))))
வினோத், உங்க மனசாட்சிய எனக்கு நிரம்பப் பிடிச்சிருக்கு. கலக்கல் பதிவு.
இரு வினு இந்த பதிவை அப்படியே உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்
பாவி மனசாட்சி பேசியதுன்னு உண்மையை எல்லாம் போட்டு உடைச்சிருக்க இனிமேல் யார்கிட்ட என்ன பேசினாலும் இந்த பதிவு தான் நினைவுக்கு வரும் செம கலக்கல்...வாழ்க நீயும் உன் மனசாட்சியும்
ரொம்ப அம்சமான பதிவு,
என் மேல எதாவது கோபம் இருந்தால் நேர்லயே திட்டுங்க எசமான்
(அருமையான) என்று போட்டால் அதுக்கும் கலாய்பீங்க.
ஓட்டுக்கள் போட்டாச்சு.
hai vinood
super issue
one doubt
mokkai pathivu inu sonnathu ennodathu illayay
eppadi ellam kavalaip pada vendiyathu irukku sollunga vinodh
then vinodh now im in dubai
wat ever u say abt indi in feelingsa are correct
we had gone to see the film unnaip pol oruvan in tha dhoniya cineplex theatre
on the way we saw motor city and global city and pineapple towers ... during travel we saw only date trees and sand and too much of hot sun that we can't get down frm the a/c car
then i realise ur previous issue is true
sorgamey endrallum athu namooru polaguma
கலக்கல் வினோத்
(மனசாட்சி: அடப்பாவி இந்த மாதிரி மொக்கை பதிவுக்கெல்லாம் என்ன கமெண்ட் போடுறது. ”கலக்கல்” எல்லாம் டூ மச்)
//"நாயே நாயே ..நீ வாங்கி தரப்போற ரெண்டு பீர்க்கு அவசரம் என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு பாரு.."..மனச்சாட்சி.//
ரெண்டு பீருக்காக எல்லாம் தஞ்சாவூர்.... நீ எல்லாம் பாண்டிசேரி காரனா?:)))
அப்புறம் அடுத்த முறை நேரில் பார்க்கும் பொழுது இருக்குடி... வடை டப்பாவுக்கு என்ன வெச்சா காமெடி பன்னுற:)
@ புதுவை சிவா..
நன்றி தல..ஃபிரான்சில் இருந்து வந்தாச்சா..
@ கலையரசன் ..
உன் மனச்சாட்சி என்ன சொல்லும்னு எனக்கு தெரியும் நீ அதை சொல்லவே வேணாம்.
//கடைசியில நீ குசும்பன்னு டைரக்டாவே எழுதியிருக்கலாம்.//
அது அவர் தானா..
@ தீப்பெட்டி..
//நல்ல மனசாட்சி..//
ஆஹா..உண்மை தானா..நீங்க சொல்லுறது..
@ சென்ஷி ..
//பிரபல பதிவரை இப்படி அசிங்கப்படுத்துனதால அடுத்த சந்திப்புல உனக்கு வடை கட்டு!//
அதை நான் நேரா சுந்தராமன் சார்க்கிட்ட இருந்தே வாங்கிப்பேன்..:))
@ Kishore..
//மனச்சாட்சி பேசுறத கேக்கணும்னு நினைகிரவங்க .. வேணும்னா கோயம்புத்தூர் ஏற்காடு சேலம் போன்ற இடங்களுக்கு போய் வினோத்னு பேர மட்டும் சொல்லுங்க..//
எதுக்கு நீ சம்பந்தமே இல்லாம கூவுற..
@ [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]
// நல்லவேளை என் மானம் போகல :)//
நீயும் ஒரு நாள் மாட்டுவ மச்சி..:)
@ kishore..
// மச்சான் இந்த பதிவ காப்பி பண்ணி உங்க வீட்ல குடுக்கலாம்னு நினைக்கிறேன்//
பிச்சு..பிச்சு..:))
@ மின்னுது மின்னல்
//படிச்சி முடிச்சதும் என்னோட மனசாட்சி ஒன்னு சொன்னது அதை பப்ளிக்குல சொல்ல முடியாது :)//
அது என்னங்க அப்பேர்ப்பட்ட வார்த்தை..:))
@ Pappu..
//மனசாட்சி - இந்தப் பதிவப் பாக்குறதுக்கு தான் லிங்க் கொடுத்தயா?//
பிரபு..பப்ளிக் ..பப்ளிக்..:)
@ தமிழினி ..
நன்றி தமிழினி..
@ ஆ.ஞானசேகரன் ..
நன்றி தல..
@ ஹாலிவுட் பாலா..
//மனசாட்சி: பதிவுக்கு.. தலைப்பா கொடுக்க வேண்டியதை, லேபிளா கொடுத்திருக்காரு! :) :)//
தல ..விழுந்து விழுந்து சிரிச்சேன்..:)))
@ கார்த்திகைப் பாண்டியன..
நன்றி கார்த்தி..
@ ச.செந்தில்வேலன்..
நன்றி செந்தில்..
@ தமிழரசி..
//இரு வினு இந்த பதிவை அப்படியே உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்//
தமிழ் அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடதிங்க..:))
//வாழ்க நீயும் உன் மனசாட்சியும்//
நன்றி தமிழ
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
சும்மா விளையாட்டுக்கு எழுதுனது கார்த்தி..நல்லா இருந்துச்சுனா உண்மையில் நல்லா இருக்குன்னு சொல்லிடுவேன்..:))
@ thenammailakshmanan ..
துபாய் வந்து இருக்கிங்களா..ரொம்ப சந்தோஷம்ங்க..
துபாயில் கொஞ்சம் இடங்கள் இருக்கின்றது சுற்றி பார்க்க..அதே மாதிரி ஷாப்பிங் சொர்க்கம்..
அடுத்த மாதத்தில் இருந்து குளிர் காலம் தொடங்கி விடும்..பிப்ரவரி வரை நீடிக்கும்..அப்பொழுது அருமையான காலநிலை இருக்கும்..
இங்கு நான் இருக்கும் ஊரில்(Al ain) ஒரு சின்ன மலை உள்ளது...துபாயில் இருந்து 120 Kms..
அதுவும் ரசிக்கும்ப்படியாக இருக்கும்..நேரம் கிடைத்தால் அந்த மலையும் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.
//sorgamey endrallum athu namooru polaguma//
ஆமாங்க உண்மையான வரிகள்..
@ நான் ஆதவன்..
//அடப்பாவி இந்த மாதிரி மொக்கை பதிவுக்கெல்லாம் என்ன கமெண்ட் போடுறது. ”கலக்கல்” எல்லாம் டூ மச்//..
வரேன் வரேன் ஷார்ஜாவுக்கு நேரில் வந்தால் தான் சரிப்படும்..:))
@ குசும்பன்..
//ரெண்டு பீருக்காக எல்லாம் தஞ்சாவூர்.... நீ எல்லாம் பாண்டிசேரி காரனா?:)))//
அது எல்லாம் இன்னொருத்தன் வாங்கி தரேன்னு சொன்ன நான் டெல்லி வரைக்கும் கூட போவேன்..:))
//அப்புறம் அடுத்த முறை நேரில் பார்க்கும் பொழுது இருக்குடி... வடை டப்பாவுக்கு என்ன வெச்சா காமெடி பன்னுற:)//
தல சும்மா தமாசு..ஹீ ஹீ ஹீ...:))
இந்த பதிவுக்கு மனசாட்சியோட பின்னூட்டம் போடவா! இல்ல மனசாட்சி இல்லமால் போடாவா! ;)
செம காமெடி..!
அப்பறம், கலை அது கே.ப. இல்லை. கே......!
:-)
http://www.uaetamilsangam.com/jobopening.asp
இதை படிக்கும்போது எனக்குள்ளும் மனசாட்ட்சி ஒன்னு சொன்னுச்சி
"இதை படிச்சி நல்லாயிருக்குனு வேறு கமெண்ட் போடனுமா"
ஹி ஹி சும்மா
உண்மையிலேயே ரசிச்சி படிச்சேன்
@ கோபிநாத்
//இந்த பதிவுக்கு மனசாட்சியோட பின்னூட்டம் போடவா! இல்ல மனசாட்சி இல்லமால் போடாவா!//
எதோ ஒன்னு..நீங்க பின்னுட்டம் போட்ட மட்டும் போதும்..போட்ட மட்டும் போதும்..:))
@ ♠ ராஜு ♠
//செம காமெடி..!
அப்பறம், கலை அது கே.ப. இல்லை. கே......!//
நன்றி ராஜு..
கலை சொன்னது கேனை பதிவர்ன்னு நினைக்கிறேன்..
@ அபுஅஃப்ஸர்..
நன்றி அபு...:))
குசும்பரை திட்டுவதற்காக இந்த பதிவு என்று தெள்ளதெளிவாகிறது. பாராட்டுகள் வாழ்த்துகள். :-)
@ ஜெஸிலா ..
வாங்க அக்கா..ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..இது சும்மா தமாசுக்கு..:))
//"டேய்..ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் படிச்சிட்டு வோட்டு போட்டுரு"..கலை.
"ஹை..போட்டுடிங்களா..எப்பா உங்க பதிவை படிக்காம ரொம்ப போர் அடிச்சது..உடனே படிச்சிடுறேன்.."..நான்..
"ஆரம்பிச்சிடியா உன் இம்சைய..கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன் அது பொறுக்கலையா இவனுக்கு.."..மனச்சாட்சி.//
மச்சி பேக் டூ பார்ம் கலக்கல்
கலை தேவையா உனக்கு?
உங்கிட்ட சாட் பண்ணனும் நினைக்கிறேன் கலை பிளீஸ் சாட் இன்வைட் பண்ணுடா
@ பிரியமுடன்...வசந்த்..
வாப்பா வசந்த்..ஏன் கலை கூட மட்டும் தான் Chat பண்ணுவியா...:)
Post a Comment