Saturday, October 24, 2009
திங்கள் இனிதே-1
அடியேனும் இனிமேல் திங்கள்கிழமை திங்கள்கிழமை போன வார நியாபகங்களை 'நான் தூசி தட்டி உங்களை தும்ம விடலாம்னு' இருக்கேன் எதாச்சும் ஒரு பெயர் அதற்கு பொருத்தமா வைக்கனுமே..என்ன வைக்கிறது..'காபி வித் வினு' எப்படி இருக்கு..கொஞ்சம் ஓவரா இருக்கு இல்ல..சரி 'மொக்க முருகேசு' ..ம்ம்ம்..இதுக்கு மட்டும் எல்லாம் கோரசா ஓகே சொல்லுவிங்களே..அதுவும் இல்லை..திங்கள் இனிதே..இதான் சரி..இனி இனிதே ஆரம்பிப்போம்...
-------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி போன வாரமே முடிஞ்சு போனாலும் அதை பற்றி போன வாரம் எழுத முடியவில்லை..சரி அதனால என்ன இப்ப பார்க்கலாம்..பொதுவா தீபாவளினா எல்லாம் பொதுவா நம்ம ஊருல தீபாவளி கொண்டாடுற சுகமே தனின்னு சொல்லுவாங்க..யாரு சொன்னது..இல்ல யாரு சொன்னதுன்னு தான் கேக்குறேன்..நான் இங்க(அமிரகம்) வந்து இது இரண்டாவது தீபாவளி..துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..பட்டாசுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சப்ளை செய்யப்படும் நாம் வெடிக்கிறமோ இல்லையோ..ஒரு பெரிய திடலில் பந்தல் அமைத்து வருகிறவர் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு கறிசோறு பரிமாறுவார்கள்..தீபாவளி அன்று மட்டும் எல்லாருடய வீடு தண்ணீர் குழாய்களிலும் காலையில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க எதுவாக எண்ணையும் தண்ணீரும் மாற்றி மாற்றி வர ஆரம்பித்து விடும்..அன்னிக்கு மட்டும் எல்லா திரை அரங்குகளிலும் ரசிகர் மன்றகாட்சிகள் இலவசம் தான்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுபோதும் என்று நினைக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------- பேராண்மை படம் பார்த்தேன்..சத்தியமாக தியேட்டரில் இல்லை.எதோ ரஷ்ய மொழியோ இல்லை ஜெர்மனி மொழி தழுவல் என்கிறார்கள்..எனக்கு என்ன தெரியும்..தமிழில் இதுப்போல் ஒரு படத்தை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்..திரைக்கதையில் பெரிய தொய்வு என்றாலும் மிக வித்தியாசமான முயற்சி..இயக்குனர் முதல் அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பார்கள்..ஏன் என்றால் படம் முழுவதும் மலையும் அதை சார்ந்த இடங்களில் மட்டுமே எடுத்து உள்ளனர்..அயங்காரின் முதல் உருப்படியான படம்.ஜெயம் ரவிக்கும் இப்படம் ஒரு மைல்கல். அவரும் கடுமையாக ஹோம் வொர்க் செய்து இருப்பார்.வாய்ஸ் மாடுலேஷன் முதற்கொண்டு கவனம் செலுத்தி இருக்கிறார்..வித்யாசாகர் பாடல்களை 'இயற்கை' அளவிற்கு போட்டு கொடுத்து இருந்தால் கூட படம் இன்னும் பெரிய அளவில் பிக்-அப் ஆகி இருக்கும்..ஜனநாதன் தான் சொல்ல வந்த 'கருத்து' ஓவர் டோசாக போகாமல் பார்த்துக்கொண்டு மற்ற ரசிக்கும் அம்சங்களையும் சேர்த்து படத்தை தருவார்..(உதா - ஈ )..இந்த படத்திலும் அதே மாதரியே முயற்சி செய்து எங்கயோ கோட்டை விட்டு இருக்கிறார்..இருந்தாலும் ரசிக்கலாம்..
-----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஜோக்..
ஒரு வெள்ளைக்கார சுற்றுலாப்பயணி டெல்லியை சுற்றிப்பார்க்க வருகின்றார்.
ஒரு 'கைட்'டை அழைத்துக்கொண்டு முதலில் தாஜ்மஹால் செல்லும் அவர்..
அந்த கைட்க்கிட்ட "இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆச்சு" என்று கேக்க..
"சுமார் 200 ஆண்டுகள் ஆனது".. கைட்
"எங்க ஊரா இருந்தா இதை 40 வருடத்திலேயே கட்டி முடித்து இருப்போம் என்ன ஊரோ இது"..வெள்ளைக்காரர்.
அதன்ப்பிறகு இருவரும் செங்கோட்டை செல்ல அங்கயும் அந்த வெள்ளைக்காரர் இதே கேள்வியை அந்த கைட்க்கிட்ட கேக்க..
"50 ஆண்டுகள் ஆனது" என்று கைட் சொல்ல..
மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "எங்க ஊரா இருந்தா இதை ஐந்து வருடத்தில் முடித்து இருப்போம் என்ன சோம்பேறி மக்களோ நீங்கள்"..என்கிறார்.
கடைசியாக இருவரும் குதூப் மினார் செல்கின்றனர்.
மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "இதை முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது".?
"நேத்து நான் இந்த இடத்துக்கு வந்தப்ப கூட இந்த இடம் காலியா தான் இருந்தச்சு..இன்னிக்கு தான் இது இந்த இடத்துல இருக்கு"..கைட்.
"....?!" ..வெள்ளைக்காரர்.
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
டேய் உனக்கு திங்கட்கிழமை ஜுரம் இப்போ திங்கள் புலம்பலா மாறிடிச்சா?
Dei unna naan enna panna sonnen nee enna panikkitu irukka..!
//துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..//
என்ன மச்சான் பிரிவோம் சிந்திப்போம் சினேகா மாதிரி ஆகிட்டியா? தனக்கு தானே பேசிக்கிற..
நடக்காதது எல்லாம் நடக்குற மாதிரி பேசிக்கிற? தனிமை ஒருத்தன இப்படி கூட மாத்திடுமா?
enna da?
Ur grandmma..!
yeah same to you.. ennanu sonna thaana theriyum
Nethu Msg Pannen Paarthiyaa..!!
paarthen.. ithayachum panni tholanu vanthuchu.. ennatha pannanumnu sollaliey.
kalaila pesum pothu kuda ne onnum sollaliey.. nanum keka maranthuten
தல நல்லா சொன்னீங்க
//KISHORE said...
paarthen.. ithayachum panni tholanu vanthuchu.. ennatha pannanumnu sollaliey
//
- வடிவேலு காமெடி மாதிரி இருக்குதே.. :)
நானும் பேராண்மை பார்த்தேன்.. எங்கயோ ஏதோ மிஸ் ஆகுது.. ஆனா கண்டிப்பா ஆதவனுக்கு எவ்வளவோ பரவாயில்ல..
ஜோக் அருமை!
சார்.. திங்கள் கிழமை.. தவறாம.. புலம்பியே ஆகனுமா? :) :)
-----
ஜோக் நல்லா இருந்தது. :)
கர்மம்.. ஒரு நிமிஷம்.. அந்த அமீரக தீபாவளி மேட்டரை உண்மைன்னே நினைச்சிட்டேன்! :) :)
நல்லா புலம்புறீங்க வினோத்..
நான் சொல்லுறது உங்க பின்னூட்டத்தை..
அப்போ இனிமே திங்க திங்க புலம்பல்கள் தானா..
நல்லா நிறைய தின்னுங்க ;)
@ புலவன் புலிகேசி ..
நன்றி புலவரே..
@ கார்ல்ஸ்பெர்க்..
ஆதவன் இன்னும் பார்க்கவில்லை நண்பா..
@ [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]..
நன்றி மச்சி..
@ வால்பையன்..
நன்றி வால்ஸ்..
@ ஹாலிவுட் பாலா..
தல கண்டிப்பா திங்கள் திங்கள் இருக்கு..:)
//கர்மம்.. ஒரு நிமிஷம்.. அந்த அமீரக தீபாவளி மேட்டரை உண்மைன்னே நினைச்சிட்டேன்!//
அம்புட்டு அப்பாவியா நீங்க..
@ தீப்பெட்டி..
//நல்லா புலம்புறீங்க வினோத்..
நான் சொல்லுறது உங்க பின்னூட்டத்தை..//
ஆமாம் கணேஷ் அவ்வளவு சுலபத்துல தப்பிக்க முடியாது நீங்க எல்லாம்..:)
புலம்பல் கம்மியா இருக்கு
நல்லா இருக்கு வினோத்
//ஆதவன் இன்னும் பார்க்கவில்லை நண்பா..//
- பார்க்காம இருக்குற வரைக்கும் உங்களுக்கு நல்லது :)
என்னய்யா இது? ரெண்டு பேரும் காமெடி பண்ண கமெண்ட்ஸ்தான் கிடைச்சதா.
அபூர்வ ச்கோதரர்கள்ல வர்ற மாதிரி,
சம்பவம் நடந்தன்னைக்கு சம்பவம் நடந்தப்போ சம்பவம் நீ என்ன பண்ணிகிட்டிருந்த?
இந்த சம்பவம் சம்ப்வம்னு சொல்லுறீங்களே என்ன சம்பவம் சார் அது?, மாதிரியா காமெடி பண்ணுறீங்க!
அடப்பாவி நீயும் ஆரம்பிச்சாச்சா?
நாந்தான் பாக்கியா?
இன்னா கிஷோர் ஆரம்பிச்சுடலாமா நம்ம புலம்பல்களை...
மச்சி என்டா ஆச்சு...நல்லா தானே இருக்கே!??
\\KISHORE said...
enna da?
வினோத்கெளதம் said...
Ur grandmma..!
\\
குட்..குட்... ;)))
ம்ம்ம் புலம்பலும் நல்லாதான் இருக்கு..
Joke - :))
Pathivu - righttu
// pappu said...
என்னய்யா இது? ரெண்டு பேரும் காமெடி பண்ண கமெண்ட்ஸ்தான் கிடைச்சதா.அபூர்வ ச்கோதரர்கள்ல வர்ற மாதிரி,சம்பவம் நடந்தன்னைக்கு சம்பவம் நடந்தப்போ சம்பவம் நீ என்ன பண்ணிகிட்டிருந்த?
இந்த சம்பவம் சம்ப்வம்னு சொல்லுறீங்களே என்ன சம்பவம் சார் அது?, மாதிரியா காமெடி பண்ணுறீங்க!//
LOL..:-)))))இன்னும் கொஞ்சம் அழுத்தி புலம்புப்பா..
@ என் பக்கம்..
வாங்க ப்ரதீப்..எங்க ஆளை காணோம்..
போவ போவ இன்னும் அதிகமா புலம்புறேன்..:)
@ கார்ல்ஸ்பெர்க்..
//பார்க்காம இருக்குற வரைக்கும் உங்களுக்கு நல்லது :)//
அவ்வளவு மோசமா ..:(
@ pappu..
ஆமாம் அப்படியும் சொல்லாம் ஆனா அப்படி இல்லை..:))
@ பிரியமுடன்...வசந்த்..
//இன்னா கிஷோர் ஆரம்பிச்சுடலாமா நம்ம புலம்பல்களை...//
ஆளு ஆளுக்கு புலம்புங்க..நொம்பா நன்னா இருக்கும்..:)
@ கோபிநாத் said...
//மச்சி என்டா ஆச்சு...நல்லா தானே இருக்கே!??//
ஏன் இந்த சந்தேகம் மச்சி..
@ ஆ.ஞானசேகரன்..
நன்றி தல..:)
@ Varadaradjalou .P..
நன்றிங்க..
@ கார்த்திகைப் பாண்டியன்..
//இன்னும் கொஞ்சம் அழுத்தி புலம்புப்பா..//
போக போக அழுத்துவோம் நண்பா..:)
முதல்வரியில நீங்க புலம்பியிருக்கீங்க. கடைசி வரியில யாரோ ஒரு வெள்ளைக்காரர் புலம்ப ஆரம்பிச்சிருக்கார்.
உங்கள் புலம்ப்லே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தால்,உங்கள் மகிழ்ச்சி இன்னும் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்,வினோத்.
அது நீடிக்கட்டும்.
இன்னும் கொஞ்சம் மேட்டர் சேர்த்து புலம்பியிருக்கலாம்.
தீபாவளி புலம்பல் தான் மனதின் அடி ஆழத்திலிருந்து வந்த புலம்பல் :)))
@ R.selva kumar
ஆமாம் தல..கரெக்ட் தான் ..:)
@ ஷண்முகப்ரியன்..
ரொம்ப நன்றி சார்..:)
@ ☀நான் ஆதவன்☀..
//தீபாவளி புலம்பல் தான் மனதின் அடி ஆழத்திலிருந்து வந்த புலம்பல் //
ஹ ஹ ஹா ஹா..ரொம்ப கரெக்ட்..:)
இந்த புள்ள பொழச்சிக்கும்பா!
புலம்பறதுக்குன்னே ஒரு கிழமை வச்சிருக்காரே நம்ம வினு!
விஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. ச்ச்சீயர்ஸ் சொல்லி நாம ஐக்கியமாவோம்..!
நான் சோடா (மட்டும்) கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க... மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாம். சரியா?
நல்லா புலம்பிருக்கீங்க.
@ ஜெகநாதன் ..
//விஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. //
இது கூட நாளா தாங்க இருக்கு..:)
//நான் சோடா (மட்டும்) கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க...//
நல்ல வேளை கிளாஸ் மட்டும் எடுத்துட்டு வரேன்னு சொல்லாம விட்டிங்களே..:))
@ விக்னேஷ்வரி .
நன்றி விக்கி..தொடர்வதற்கும் ..:)
உங்கள் புலம்ப்லே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தால்,உங்கள் மகிழ்ச்சி இன்னும் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்,வினோத்.
அது நீடிக்கட்டும்.//
ஐயா சொன்னது போல உங்கள் புலம்பலில் நல்ல கலகலப்பு கைகூடியுள்ளது.
அது உங்களுக்கே தெரியாமல் எட்டிப்பார்க்கிறது.
அதை படைப்பிலக்கியத்தில் திருப்பிவிடவும்.
ஓட்டுக்கள் போட்டாச்சு,
என் பதிவை பார்த்து ஏதாவது சொல்லுங்க குருவே!
ஜெகநாதன் said...
இந்த புள்ள பொழச்சிக்கும்பா!
புலம்பறதுக்குன்னே ஒரு கிழமை வச்சிருக்காரே நம்ம வினு!
விஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. ச்ச்சீயர்ஸ் சொல்லி நாம ஐக்கியமாவோம்..!
நான் சோடா (மட்டும்) கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க... மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாம். சரியா?//
மூத்த அண்ணன் ஜெகநாதன் கருத்தை மிகவும் ரசித்தேன்.
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
//அதை படைப்பிலக்கியத்தில் திருப்பிவிடவும்.//
குரு உன் Speciallity என்ன தெரியுமா சீரியஸா கருத்து சொல்ற மாதிரியே காமெடி பண்ணிட்டு போறப்பாரு அதான்..:)
வினோத் உங்க மனைவி வந்தப்புறம் காபி வித் வினு என்று வச்சுக்கலாம்..
அதுக்குள்ள தலை தீபவளி முடிஞ்சுருச்சா அமீரகத்துல...
நாமளும் தானே அங்கே இருந்தோம்.. அப்பிடி எதுவும் வெடிச் சத்தம் கேட்கலியேன்னு நினேச்சேன் ..
நல்லா கலாய்ச்சீங்க போங்க...
சூப்பர் பஞ்ச் கடசிலதான்...
நாம இந்தியன்களாச்சே விட்டுக்கொடுக்க முடியுமா......
//அதுக்குள்ள தலை தீபவளி முடிஞ்சுருச்சா அமீரகத்துல...//
தலை தீபாவளியா..?? அதுக்கு இன்னும் ஒரு தீபாவளி ஆகும்னு நினைக்குறேன்..:)
"திங்கள் திங்க்கர்"னு உங்களுக்கு பட்டமே கொடுக்கலாம்.
-Toto
www.pixmonk.com
Nice info on Deepavali in Ameeraham Vinoth.Osi pattaasu,osi kari soru-naanum anga vaaren.Nice review on Peraanmai.Joke also nice.
வினோத் கௌதம்
உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைச்சு இருக்கேன்
உங்க ஹியுமரஸ் எழுத்து எனக்குப் பிடிக்கும்...
மிகச் சிறப்பாக எழுதுவீர்கள்
இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கின்றேன் ..
@ Toto
அட இந்த டைட்டில் நல்லா இருக்கே..
வருகைக்கு நன்றி Toto..:)
@ Muniappan Pakkangal ..
கண்டிப்பா வாங்க சார்..அதுவும் தீபாவளி கலை கட்டும்..:))
@ thenammailakshmanan ..
என் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நன்றிங்க..
கண்டிப்பா எழுதுறேன்..:)
சாரி..அனானி( PS ) அந்த கமெண்ட் Delete பண்ணிட்டேன்..
ஏனோ அது கொஞ்சம் பொதுவுல இருக்கற மாதிரி நான் feel பண்ணதால..
வினோத்
கலாய்க்கிறதுக்கெல்லாம் உங்க கிட்ட நாங்க கத்துக்கணும்
சீக்கிரம் எழுதிடுங்க
திங்கள் எதிர்பார்க்கலாம்னு நினைக்குறேன்
வரதட்சணை.. வாங்காத.. அண்ணாத்த.. அடுத்த திங்கள் புலம்பலுக்கு.. ரெடியாகிட்டீங்களா???
நானும்தான்.. வரதட்சணை வாங்கலை. யாராவது... அதுக்கு பாராட்டு விழா எடுங்கப்பா!!!
நல்ல ஜோக்.
திங்கள் திங்களாய் போகிறது...
தல நீங்களுமா நான் அதை விளம்பரப்படுத்த கொடுக்கவில்லை ..ஆனால் அது விளம்பர பாணியில் அமைந்து விட்டது.. :(
என்னோட எல்லா விஷயங்களும் ரொம்ப வெளிப்படையா இருக்கு..
மெயில் வேற சம்பந்தேமே இல்லாம வந்துக்கிட்டு இருக்கு..
ஏண்டா கொடுத்தன்னு இருக்கு..:(
நான் சற்றும் இதை எதிர்ப்பர்கவிலை..:(
வினோத்.. என்ன ஆச்சி?
எனக்கு அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது. திங்கள் புலம்பல் எங்கேன்னு கேட்க வந்து... அந்த மேட்டரையும் (அப்பதான் அதை பார்த்தேன்) ஜாய்ன் பண்ணிட்டேன்.
எனக்கு என்ன பிரச்சனைன்னு புரியலை. ஆனா.. உங்க மனம் வருத்தப் பட்டிருந்தா... மீ ரியல்லி ஸாரி! :(
@ அன்புடன் மலிக்கா ..
நன்றிங்க வருகைக்கு ..:)
//எனக்கு என்ன பிரச்சனைன்னு புரியலை. ஆனா.. உங்க மனம் வருத்தப் பட்டிருந்தா... மீ ரியல்லி ஸாரி! :(//
தல நான் உங்கள் மேல் வருத்தத்தை சொல்லவில்லை..
Post a Comment