Wednesday, May 27, 2009

வினோத்கெளதம்..இதான்..இம்புட்டு தான்..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெற்றோர் வைக்க வேண்டும் என்று நினைத்த பெயர் வினோத்..

என் அம்மாவுக்கு புத்தர் என்றால் விருப்பம் ஆதலால் வினோத்கெளதம் என்று சேர்த்து வைத்து விட்டார்கள்..சில பேருக்கு வினோத் என்றும் சில பேருக்கு கெளதம் என்றும் தான் தெரியும் சிலர்க்கு தான் முழுப்பெயர் தெரியும்..எனக்கு பிடித்த பெயர் தான்..என்ன பேருக்கு ஏற்ற போதி மரம் இன்று வரை கிடைக்கவில்லை..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியாக ரொம்ப அழுதது என் போன பிறந்த நாள் அன்று ..!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சில
சமயம் ரொம்ப பிடிக்கும்.. சில சமயம் என்னடா இது கையெழுத்து வர வர இவ்வளவு மோசமாக இருக்கின்றதே என்று நினைத்து கொள்வேன்..
ஆனால் கல்லூரி சமயங்களில் வேறு எதற்கு பாராட்டு வாங்கி இருக்கிறேனோ இல்லையோ என் கையெழுத்துக்காக நிறைய முறை பாராட்டப்பட்டு இருக்கிறேன்..

4).பிடித்த மதிய உணவு என்ன?

பிடித்த மதிய உணவு என்று ஒன்றும் இல்லை..ஏன் என்றால் இப்பொழுது எல்லாம் எது கிடைக்கிதோ அதை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..

ஆனால் வீட்டு சாப்பாட்டை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்..குறிப்பாக என் அம்மாவின் சமையல்..அவர்களே சில சமயம் கேட்பார்கள் "ஏண்டா ரசத்துல உப்பே போடுல எப்படி ஒன்னும் சொல்லாம சாப்டுரன்னு..நம்மோட சாப்பட்டு ஆர்வம் அவ்வளவு தான்..

இருந்தாலும் சைனீஸ் புட்ஸ் கொஞ்சம் பிடிக்கும்..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சமயங்களையும் சந்தர்பங்களையும் பொறுத்து..இங்கு அமிரகம் வந்து ஒரு நல்ல நட்புக்காக ஏங்கிய நாட்கள் அதிகம்..ஆனா ஒருவன் நண்பன் என்று முடிவு எடுத்து விட்டால்..நான் தான் தளபதி, கர்ணன் எல்லாமே..(கொஞ்சம் ஓவரா இருக்கோ)..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே பிடித்தமானது தான்..அருவி குளியல் ரொம்ப பிடிக்கும்..கடைசியாக அருவியில் குளித்தது மங்கி பால்ஸ், ஆழியார்.அப்புறம் திற்பரப்பு அருவியில் ஒரு தடவை நாங்கள் குடும்பத்துடன் சென்ற பொழுது யாருமே இல்லாத அருவில் தனியாக ரொம்ப நேரம் குளித்தோம்..மறக்க முடியாத அனுபவம்..

கடலில் கடைசியா துபாய் ஜுமைரா பீச்ல குளித்தேன் சுளீர் என்று அடிக்கும் வெயிலில்...ச்சும்மா சொல்ல கூடாது அழகான பீச்..


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்டிப்பாக கண்கள் தான்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை., அவ்வளவு எளிதில் கோபம் வராது.

பிடிக்காத விஷயம் :பயங்கரமான சோம்பேறி..யாராச்சும் உலகின் மிக சிறந்த சோம்பேறிகள் போட்டி வைத்தார்கள் என்றால் கண்டிப்பாக முதல் பத்து இடங்களில் வந்து விடுவேன்..

அப்புறம் சில பழைய கசப்பான நினைவுகளை இன்று வரை மறக்காமல் நியாபகம் வைத்து உள்ளது..:((

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?பிடித்தவிசயம்?

இது வரை அப்படி யாரும் இல்லை ஆனால் எதிர்பார்ப்புகள் உண்டு..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

My fAMiLy and My fRIenDs கொஞ்சம் இல்லை ரொம்ப நிறையா மிஸ் பண்ணுறேன்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஒரு வெள்ளை கலர் ஷார்ட்ஸ் அப்புறம் சாம்பல் கலர் டி-ஷர்ட்..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டிங் டாங் கோவில் மணி..ஜி படத்தில் இருந்து..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானத்தின் நீலம்..

14.பிடித்த மணம்?

புதுவையில் அடிக்கடி ஆரோ அஷ்ரமின் ஊதுப்பத்தி நிலையத்திற்கு செல்வேன் அங்கே எல்லாம் கலந்து கட்டி ஒரு மணம் வரும் பாருங்கள் அப்படியே ஆளை தூக்கும்..
புதுவை வந்தால் போய் பாருங்கள் ரங்கபிள்ளை தெரு கடைசியில் ..

அப்புறம் சின்ன வயதில் பெட்ரோல் மணம் பிடிக்கும்..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிஷோர்: முற்போக்குவாதி, பின் நவினத்துவ எழுத்தாளர்..சமகால சே..

சத்தியமாக இது எல்லாம் என்னவென்று அவனுக்கு தெரியாது ..எனக்கும் தான்..ஆனா எல்லோரும் ரசிக்கும்படி எழுதுறான்..

ஷன்முகப்ரியன் சார்..:

இவருக்கு அறிமுகம் தேவை இல்லை.இயக்குனர்...நிஜமாகவே பிரமிக்க வைக்கும் எழுத்து நடை..
பலரும் ரசிக்கும்படி எழுத கூடியவர்..

கண்ணா: நம்மை போல் புதியவர்..அமிரக வாசி..அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக்காரர்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

சகோதரி சக்தியின்
கவிதைகள் எல்லாமே கருத்து ஆழம் மிக்கவை..சில சமயம் நான் ரெண்டு தடவை படித்த பின் தான் புரியும்..

உனக்கான ராஜபாட்டையில் நீ நட சொல்லலாம்..ஆனால் உண்மையில் எல்லாமே பிடிக்கும்..

அவர் சிறுகதை ஏரியாவில் கூட சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யலாம் ஆனால் கவிதை மட்டுமே எழுதுகிறார்..


17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், ஹாக்கி அப்புறம் கேரம்..

18.கண்ணாடி அணிபவரா?

இது வரை இல்லை..ஆனால் இதே மாதிரியே கணினியை உற்று பார்த்தப்படி உக்கார்ந்து இருந்தால் கூடிய விரைவில் அணிய வேண்டிய நிலைமை வரும்..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்கள்..

இப்ப சமிபத்தில் வெண்ணிலா கபடி குழு, அபியும் நானும், ராமன் தேடிய சீதை..
பார்த்தேன் நன்றாக தான் இருந்தது..

அப்புறம் டில்லி-6 பார்த்தேன் அதுவும் ok.

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஊரில் அடிக்கடி திரையரங்கு சென்று விடுவேன்..ஆனால் இங்கு வாய்ப்பு இல்லை கடைசியாக திரை அரங்கில் பார்த்த படம் அயன்..

21.பிடித்த பருவ காலம் எது?

புதுவையில் நான் அனுபவித்த ஒவ்வொரு மழைக்காலமும் மற்றும் பனிக்காலங்களும்..
மறக்கமுடியாத அனுபவம் எப்பொழுது பேய் மழை அடித்தாலும் ஊரில் இருந்தால் பைக்கை எடுத்துக்கொண்டு பீச் சென்று விடுவேன்..
மழைக்காலத்தில் ஆர்பரிக்கும் கடல் அலைகள் வாய்ப்பே இல்லை..அதுவும் புதுவை பீச் மழைக்காலத்தில் சான்சே இல்லை போங்க..


22. படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இப்பொழுது எதுவும் இல்லை நண்பர் கிருஷ்ணாவிடம் சில புத்தங்கங்கள் பரிந்துரைக்க சொன்னேன்..அவரும் சொல்லி இருக்கிறார் வாங்க வேண்டும்..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி கிடையாது எப்பொழுதாவது..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : மழலை சத்தம்..
பிடிக்காத சப்தம்:ஓவர் உதார் சப்தம்..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்பொழுது இருக்கும் அமிரகம்..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சத்தியமாக எதுவும் இல்லை..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்..

எத்தனை முறை போனாலும் சலிக்கவே சலிக்காத ஊர்..
ஒரு அமானுஷ்ய அழகு எல்லா இடத்திலும் ஒளிந்து கொண்டு இருக்கும்..
யாராவது பதிவர் கொடைக்கானல்ல இருக்கிங்களா..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்தவரை மற்றவர்களை இம்சை படுத்தாமல்...

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இப்ப எதுவும் இல்லை..கல்யாணம் ஆச்சுனா அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.. :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....

67 comments:

kishore said...

கலக்கல் மச்சி... குறிப்பா வாழ்க்கை பற்றிய வரி... நிஜமான வார்த்தைகள்...

Suresh said...

சூப்பாரா இருக்கு டா நிதானமா எல்லாத்தையும் படித்தேன்...

நீ அழைத்த நண்பர்களுக்கு வாழ்த்துகள்

Suresh said...

மூவருமே நம்ம நண்பங்கள்....

கிஷோர்:

ஷன்முகப்ரியன் சார்.

கண்ணா:

:-)

Suresh said...

உங்க அம்மா கெளதம் என்று வைக்க சொன்னதாய் சொன்னதுக்கு அப்புறம் உங்க அம்மா மீது ரொம்ப மதிப்பும் மரியாதையும் வந்துடுச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))//


ரொம்ப நல்லவரா இருக்கீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?பிடித்தவிசயம்?

இது வரை அப்படி யாரும் இல்லை ஆனால் எதிர்பார்ப்புகள் உண்டு..//


நல்லது நடக்கும் தல..,

sakthi said...

சொன்னதும் பதிவிட்டு அசத்திய வினோத்திற்கு என் நன்றிகள்

sakthi said...

பிடிச்ச விஷயம்: தன்னம்பிக்கை., அவ்வளவு எளிதில் கோபம் வராது.

பிடிக்காத விஷயம் :பயங்கரமான சோம்பேறி..யாராச்சும் உலகின் மிக சிறந்த சோம்பேறிகள் போட்டி வைத்தார்கள் என்றால் கண்டிப்பாக முதல் பத்து இடங்களில் வந்து விடுவேன்..

அப்புறம் சில பழைய கசப்பான நினைவுகளை இன்று வரை மறக்காமல் நியாபகம் வைத்து உள்ளது..:((

ஆஹா ஓரே ரத்தம் தம்பி

sakthi said...

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?பிடித்தவிசயம்?

இது வரை அப்படி யாரும் இல்லை ஆனால் எதிர்பார்ப்புகள் உண்டு.

சீக்கிரம் அமைய வாழ்த்துக்கள்

sakthi said...

என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

டிங் டாங் கோவில் மணி..ஜி படத்தில் இருந்து..

அழகிய பாடல்

sakthi said...

பிடித்த மணம்?

புதுவையில் அடிக்கடி ஆரோ அஷ்ரமின் ஊதுப்பத்தி நிலையத்திற்கு செல்வேன் அங்கே எல்லாம் கலந்து கட்டி ஒரு மணம் வரும் பாருங்கள் அப்படியே ஆளை தூக்கும்..
புதுவை வந்தால் போய் பாருங்கள் ரங்கபிள்ளை தெரு கடைசியில் ..

அப்புறம் சின்ன வயதில் பெட்ரோல் மணம் பிடிக்கும்..

கண்டிப்பாக முயற்சி செய்து போய் பார்க்கிறேன்

sakthi said...

கிஷோர்: முற்போக்குவாதி, பின் நவினத்துவ எழுத்தாளர்..சமகால சே..

சத்தியமாக இது எல்லாம் என்னவென்று அவனுக்கு தெரியாது ..எனக்கும் தான்..ஆனா எல்லோரும் ரசிக்கும்படி எழுதுறான்..

குட்

sakthi said...

ஷன்முகப்ரியன் சார்..:

இவருக்கு அறிமுகம் தேவை இல்லை.இயக்குனர்...நிஜமாகவே பிரமிக்க வைக்கும் எழுத்து நடை..
பலரும் ரசிக்கும்படி எழுத கூடியவர்..

கண்ணா: நம்மை போல் புதியவர்..அமிரக வாசி..அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக்காரர்..

வாழ்த்துக்கள்

sakthi said...

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))


ஆஹா இது சூப்பரான பதில்

sakthi said...

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....

வாவ் அருமை

sarathy said...

// பிடித்த மதிய உணவு என்று ஒன்றும் இல்லை..ஏன் என்றால் இப்பொழுது எல்லாம் எது கிடைக்கிதோ அதை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.. //


என்ன செய்யுறது எல்லாம் நம்ம நேரம்..

Anonymous said...

ஓ... இதான் வி.க!?

ஆ.ஞானசேகரன் said...

கலக்கலா இருக்கு நண்பா

Muniappan Pakkangal said...

Good personal detailing Vinoth.

சென்ஷி said...

நல்லா எழுதியிருக்கீங்க வினோத்!

வினோத் கெளதம் said...

@ Kishore..

நன்றி நன்றி நன்றி..

வினோத் கெளதம் said...

@ Suresh..

நன்றி நண்பா..

//உங்க அம்மா கெளதம் என்று வைக்க சொன்னதாய் சொன்னதுக்கு அப்புறம் உங்க அம்மா மீது ரொம்ப மதிப்பும் மரியாதையும் வந்துடுச்சு//

:) நன்றிகள் பல..

வினோத் கெளதம் said...

@ SUREஷ்..

//ரொம்ப நல்லவரா இருக்கீங்க//

பிறவி குணம் தல..:)

//நல்லது நடக்கும் தல..,//

நடக்கட்டும்..

வினோத் கெளதம் said...

@ sakthi..

//சொன்னதும் பதிவிட்டு அசத்திய வினோத்திற்கு என் நன்றிகள்//

டூட்டின்னு வந்துட்ட நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட்ட்டு..:))

//ஆஹா ஓரே ரத்தம் தம்பி//

ரத்தத்தின் ரத்தமே..:))

//சீக்கிரம் அமைய வாழ்த்துக்கள்//

நன்றி சக்தி...

//கண்டிப்பாக முயற்சி செய்து போய் பார்க்கிறேன்//

நல்ல இடம் கண்டிப்பாக பாருங்கள்..

//வாவ் அருமை//

நன்றிங்க..

வினோத் கெளதம் said...

@ Sarathy..

//என்ன செய்யுறது எல்லாம் நம்ம நேரம்..//

Bad time..:(

வினோத் கெளதம் said...

//கவின் said...
ஓ... இதான் வி.க!?//

வி. கௌ ங்க..

வினோத் கெளதம் said...

//ஆ.ஞானசேகரன் said...
கலக்கலா இருக்கு நண்பா//

நன்றி நண்பா..

வினோத் கெளதம் said...

//Muniappan Pakkangal said...
Good personal detailing Vinoth.//

ரொம்ப நன்றி சார்..

வினோத் கெளதம் said...

//சென்ஷி said...
நல்லா எழுதியிருக்கீங்க வினோத்!//

நன்றி சார்.:)

கண்ணா.. said...

நன்றி வினோத்,

தொடர் பதிவுக்கு என்னை அழைத்ததற்கு.

ஆனா எனக்கு ஓரு சந்தேகம்.இதுல நான் எவ்ளோ கேள்விக்கு பதில் சொல்லனும்.? .இதுக்கு சாய்ஸ் ல்லாம் கிடையாதா...?

நான் மூணு பேரை கூப்பிடனும் குண்டை தூக்கி போடுற .. எனக்கு பதிவுல தெரிஞ்சதே நீ, சுரேஷ், கிஷோர் தான்..இதுல கிஷோரையும் நீ கூப்பிட்டுட்டே...

கிஷோர், சுரேஷை நீ கூப்பிடனும்னு நினைச்சுருந்தேன்னா அதை லப்பர் வச்சு அழிச்சிரு.. நான் சுரேஷை கூப்பிட்டாதான் ஓரு ஆளாவது எனக்கு கிடைக்கும்..

மிச்சம் ரெண்டு பேருக்கு என்ன பண்ணலாம்னு ரோசனை பண்ணிபாத்தா ஓண்ணும் சிக்கல.. பேசாம யாருக்காவது அனுப்பி இதுக்கு நீ ரிப்ளை பண்ணலைனா ரத்தம் கக்கி சாவேன்னு பயமுறுத்தலாம்னு இருக்கேன்...

வினோத் கெளதம் said...

//நான் சுரேஷை கூப்பிட்டாதான் ஓரு ஆளாவது எனக்கு கிடைக்கும்//

ஏற்கனவே சுரேஷ்ஷ ஒருத்தரு கூப்டச்சு..
இருந்தாலும் கூபிடுங்கள் தப்பு இல்லை..


//ஆனா எனக்கு ஓரு சந்தேகம்.இதுல நான் எவ்ளோ கேள்விக்கு பதில் சொல்லனும்.? .இதுக்கு சாய்ஸ் ல்லாம் கிடையாதா...?//

இல்லவே இல்லை..
எல்லாத்துக்கும் சொல்லணும்..

//பேசாம யாருக்காவது அனுப்பி இதுக்கு நீ ரிப்ளை பண்ணலைனா ரத்தம் கக்கி சாவேன்னு பயமுறுத்தலாம்னு இருக்கேன்...//

ஹா ஹா ஹா சரியான காமெடி..
என்ன தள பதிவர்களுக பஞ்சம்..

கலையரசன் said...

வாழ்த்துக்கள் வினோத்..
உன்னை புரிந்துகொள்ள, உன் பதில்கள்!
கலக்கு நன்பா!

வினோத் கெளதம் said...

//வாழ்த்துக்கள் வினோத்..
உன்னை புரிந்துகொள்ள, உன் பதில்கள்!
கலக்கு நன்பா!//

நன்றி நண்பா..

தீப்பெட்டி said...

//முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....//

நல்லாயிருந்தது வினோத்...

வினோத் கெளதம் said...

நன்றி கணேஷ்..

ஷண்முகப்ரியன் said...

sakthi said...

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))


ஆஹா இது சூப்பரான பதில்//

நான் சொல்ல நினைத்தையே சக்தி சொல்லி விட்டார்கள்,வினோத்.
என்னைப் பற்றிய குறிப்புக்கு நன்றி.அத்ற்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள மேலும் முயல்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியாக ரொம்ப அழுதது என் போன பிறந்த நாள் அன்று ..!

பிறந்தபோது அழுதீங்க சரி, பிறந்த நாள் அதுவுமா ஏன் தல.

S.A. நவாஸுதீன் said...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?பிடித்தவிசயம்?

இது வரை அப்படி யாரும் இல்லை ஆனால் எதிர்பார்ப்புகள் உண்டு..

இருக்கத்தானே செய்யும். இறைவன் அருளால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறட்டும் வினோத்.

S.A. நவாஸுதீன் said...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானத்தின் நீலம்..

Same Blood

S.A. நவாஸுதீன் said...

சகோதரி சக்தி

அவர் சிறுகதை ஏரியாவில் கூட சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யலாம் ஆனால் கவிதை மட்டுமே எழுதுகிறார்..

சக்திமா!. கேட்டியா வினோத் சொன்னதை. முயற்சி செய்யவும்.

S.A. நவாஸுதீன் said...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))

ஹா ஹா ஹா ரசித்தேன்

S.A. நவாஸுதீன் said...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்தவரை மற்றவர்களை இம்சை படுத்தாமல்...

நல்ல ஆசை.

S.A. நவாஸுதீன் said...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....

அழகாச் சொன்னீங்க வினோத்

வினோத் கெளதம் said...

@ ஷண்முகப்ரியன் :

//ஆஹா இது சூப்பரான பதில்//

நன்றி சார்..

//என்னைப் பற்றிய குறிப்புக்கு நன்றி.அத்ற்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள மேலும் முயல்கிறேன்.//

ஆஹா..நீங்களே இப்படி சொன்னால் எப்படி..
நிறைகுடம் தளும்பாது என்பது இது தானா..:))

வினோத் கெளதம் said...

//S.A. நவாஸுதீன் said... //

//பிறந்தபோது அழுதீங்க சரி, பிறந்த நாள் அதுவுமா ஏன் தல.//

அது ஒரு சோககதை தல ஒரு நாள் சொல்றேன்..


//இருக்கத்தானே செய்யும். இறைவன் அருளால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறட்டும் வினோத்.//

ரொம்ப நன்றி தல..

//Same Blood//

Pinch..

//நல்ல ஆசை.//

அப்படின முதல்ல பதிவு எழுதுறதா நிறுத்து அப்படின்னு தானே நினைச்சிங்க..:))


//அழகாச் சொன்னீங்க வினோத்//

Thanks..:))

Anonymous said...

1. நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்டிப்போட்டோம்
2.ஏன் பிறந்தோம் என்றா?
8. நம் இனத்தோரி எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது
12. எனக்கும் மிகவும் பிடித்தபாடல்...
16. அப்ப எனக்கு கமெண்ட்ல நல்லாயிருக்குன்னு சொல்லறது எல்லாம்(சும்மா சொன்னேன்...முஞ்சியா தூக்கி வைச்சிக்கபடாது)
28. நம் இனம்
32. superbbbbbbbbbbbbbbbbbb

வினோத் கெளதம் said...

//நீங்க எல்லாம் திருந்தக்கூடாதுன்னுல்ல நாங்க வெட்டிப்போட்டோம்//

போதி மரம் இல்லைனா என்னங்க..எதோ வேப்பமரமோ இல்லை புளிய மரத்திற்கு அடியுல போய் உக்காந்துக்குறேன்..

//2.ஏன் பிறந்தோம் என்றா?//

இந்த நக்கல் தானே வேண்டம்ன்கிறது..:))


//நம் இனத்தோரி எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது//

//28. நம் இனம்//

ஆமாம் ஆமாம் அதே இனம் தான்..நீங்க சொல்றத பார்த்த டாப் டென் போட்டியில் எனக்கு மூணு இடத்துக்கு முன்னாடி இருப்பிங்க போல் இருக்கு..

//எனக்கும் மிகவும் பிடித்தபாடல்...//

தல பாட்டு பிடிக்காம இருக்குமா..

//அப்ப எனக்கு கமெண்ட்ல நல்லாயிருக்குன்னு சொல்லறது எல்லாம்(சும்மா சொன்னேன்...முஞ்சியா தூக்கி வைச்சிக்கபடாது)//

ஏங்க நல்ல தான் இருக்கு மெய்யாலுமே ஆனா ஏன் சிறுகதை முயற்சியில் ஈடுபடுவதில்லை..!!

//32. superbbbbbbbbbbbbbbbbbb//

Thanksssssssssss...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

முற்றுபுள்ளி இருப்பது தெரிந்தும் பல ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் நிறைந்த ஒரு வரி....//

உங்கள் சிந்தனையை பாராட்டி, குப்புற படுத்து யோசிபோர் சங்கத்திலிருந்து... "குப்புற வினோ" என்ற பட்டத்தை கொடுக்கின்றோம்...

அப்பறம் துபாய்ல என்ன விவேகானந்தர் தெருவுலையா தங்கிருக்கிங்க.. ?

வால்பையன் said...

ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!

உங்க நண்பர்களின் பதிலையும் தெரிஞ்சிக்க ஆவாலாய் இருக்கிறேன்!

குமரை நிலாவன் said...

கலக்கல் நண்பா

உங்களை பற்றி தெரிந்து கொண்டேன்

கிஷோர்:

ஷன்முகப்ரியன் சார்.

கண்ணா:


இவர்களுக்கு வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

@ பித்தன்

//உங்கள் சிந்தனையை பாராட்டி, குப்புற படுத்து யோசிபோர் சங்கத்திலிருந்து... "குப்புற வினோ" என்ற பட்டத்தை கொடுக்கின்றோம்...//..

தங்கள் சித்தம் என் பாக்கியம் அப்படியே பட்டத்தை ஏற்று கொள்கிறேன்..
வேறு எதாவது டாக்டர் பட்டம் தரும் யோசனை இருந்தாலும் சொல்லுங்கள் கூச்சப்படாமல் வாங்கி கொள்கிறேன்..

//அப்பறம் துபாய்ல என்ன விவேகானந்தர் தெருவுலையா தங்கிருக்கிங்க.. ?//

அங்க தான் ரூம் கேட்டேன் தர மாட்டேனு சொல்லிடாங்க..இப்ப அல்-அய்ன்ல இருக்கேன் நண்பா..

வினோத் கெளதம் said...

//வால்பையன் said...
ஓட்டு போட்டுட்டேன் பாஸ்!

உங்க நண்பர்களின் பதிலையும் தெரிஞ்சிக்க ஆவாலாய் இருக்கிறேன்!//

நன்றி வால்ஸ்..

நானும் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன்..

வினோத் கெளதம் said...

//குமரை நிலாவன் said...
கலக்கல் நண்பா

உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் //

நன்றி நண்பா..
ரொம்ப நாள் கழிச்சு வரிங்க..:))

பாலா said...

கலக்கல் பதில்கள் வினோத்..! :))

ஆளையே காணாமேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ப்ளாக் தொலைஞ்சது இன்னைக்குதான் (கிஷோர் பதில்கள்) தெரியும். :(

முதல் பாராவிற்கு வாழ்த்துக்களும்.. இரண்டாவதுக்கு வருத்தங்களும்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தங்கள் சித்தம் என் பாக்கியம் அப்படியே பட்டத்தை ஏற்று கொள்கிறேன்..
வேறு எதாவது டாக்டர் பட்டம் தரும் யோசனை இருந்தாலும் சொல்லுங்கள் கூச்சப்படாமல் வாங்கி கொள்கிறேன்..//

இப்ப கொடுத்த பட்டம் டிரையல் வெர்சன் மாதரி... டாக்டர் பட்டம் எல்லாம் காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்... ஆப்பர் போடுறப்ப சொல்லுறேன்..

டாக்டர் பட்டத்தோட, தம்மாந்தூண்டு தளபதி, அழகுநென்சேன்,,, கருணைக்கடல் அப்படின்னு இலவசங்கள் கூட கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_28.html

//அங்க தான் ரூம் கேட்டேன் தர மாட்டேனு சொல்லிடாங்க..இப்ப அல்-அய்ன்ல இருக்கேன் நண்பா..//

நான் கூட அங்க இருந்து நடந்து போற தூரத்துல தான் இருக்கேன்... என்ன நடந்தா நானூறு நாள் தான் ஆகும் என் இடத்துக்கு போக.

-பித்தன்

வினோத் கெளதம் said...

// ஹாலிவுட் பாலா said...

கலக்கல் பதில்கள் வினோத்..!//

தல ரொம்ப நாள் கழிச்சு..

நன்றி தல..

ஆமாம் தல காணப்பூச்சு..என்ன பண்றது..

வினோத் கெளதம் said...

//டாக்டர் பட்டத்தோட, தம்மாந்தூண்டு தளபதி, அழகுநென்சேன்,,, கருணைக்கடல் அப்படின்னு இலவசங்கள் கூட கிடைக்கும்.//

இலவசமனாலே கூச்சப்படமா வாங்கிப்பேன் அதனால் தரலாமா கொடுங்கள்..

//நான் கூட அங்க இருந்து நடந்து போற தூரத்துல தான் இருக்கேன்... என்ன நடந்தா நானூறு நாள் தான் ஆகும் என் இடத்துக்கு போக.

-பித்தன்//

கண்ண கட்டுதே..

ஆ.சுதா said...

உங்களை பற்றி நிரைய இல்லாவிட்டாலும் கொஞ்சம் நல்லா தெரிந்து கொள்ள முடிந்தது கௌதம்.

|அவ்வளவு எளிதில் கோபம் வராது.|
நல்ல விசயம்,

பெட்ரோல் வாசனை' எனக்கும் பிடிக்கும்

கண்ணா.. said...

வினோத்,

தொடர் பதிவை போட்டாச்சு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/05/blog-post_29.html

Sanjai Gandhi said...

எங்கள மாதிரி இல்லாம ரொம்ப சமத்தா பதில் சொல்லி சக்தி சித்திக்கு பெருமை தேடித் தந்துட்டிங்க போங்க.. ;)

வினோத் கெளதம் said...

@ ஆ.முத்துராமலிங்கம்..

நன்றி நண்பா..

உங்களின் ஒரு ப்ளாக் உள்ளே நுழைய முடியவில்லை..

வினோத் கெளதம் said...

//Kanna said...

வினோத்,

தொடர் பதிவை போட்டாச்சு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/05/blog-post_29.html//

On the way..

வினோத் கெளதம் said...

// $anjaiGandh! said...

எங்கள மாதிரி இல்லாம ரொம்ப சமத்தா பதில் சொல்லி சக்தி சித்திக்கு பெருமை தேடித் தந்துட்டிங்க போங்க.. ;)//

எல்லோரும் என்ன மாதிரி வேலை வெட்டி இல்லமால் சும்மாவா இருக்கிறார்கள்..
அதான் அக்கா சொன்னவுடன் உடனே பதிவிட்டு விட்டேன்..

உங்களுக்கு சித்தியா அவங்க கொஞ்சம் ஓவர்ரா இல்லை..:))

வினோத் கெளதம் said...

@ $anjaiGandh! ..

தல உங்க Face book கொஞ்சம் ஓபன் பண்ணி பாருங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத் கௌதம்,

உங்க பதில்கள் எல்லாமே சூப்பருங்க, எல்லாமே எதார்த்தமா இருக்குங்க

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னை தவிர யார் பொய் சொன்னாலும் பிடிக்கவே பிடிக்காது..:))//

இன்னிக்கு தான் பதிவர் கலையரசன் கிட்டே பேசினேன். பதிவர் சந்திப்பு பற்றி சொன்னார்.

எதிர்பார்ப்போட இருக்கேன் நம்ம சந்திப்பிற்காக :)

நேரம் கிடைச்சா நம்ம பக்கத்திற்கும் வந்திட்டுப் போங்க..

http://senthilinpakkangal.blogspot.com/

வினோத் கெளதம் said...

நன்றி செந்தில்..கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல தெளிவான பதில்கள்... சந்திப்போம் கூடிய சீக்கரம்