இந்த தொடர் பதிவிற்கு அழைத்த கலையரசனுக்கு நன்றிகள் பல..
பள்ளி நினைவுகள் பத்தி
சேரன் ஸ்டைல்ல சொல்றதுனா ..
வாழ்க்கையில பல கட்டங்களை ரொம்ப சாதரணமா கடந்து வந்த பிறகு ஒருஇடத்துல நின்னு திரும்பி பாக்குறப்ப சில விஷயங்களை ஏன்டா கடந்துவந்தோம்ன்னு இருக்கும், அந்த கட்டத்துலயே நம்ம வாழ்கை முழுவதும் இருந்துஇருக்குலம்னு தோணும்..
அப்படி ஒரு சந்தோசம் எங்க திரும்பினாலும் நம்ம எங்க ஓடி போய் ஒளிஞ்சாலும்நம்மள விடாமா நமக்கு தெரியமா நம்ம பின் தொடர்ந்து வந்து இருக்கும்..
பின்னாடி நம்ம மாட்டிக்கப்போற பெரும் சூறாவளி பத்தி தெரியாமலே அப்பபெய்த சாரல் மழையில் சந்தோஷமா அனுபவச்சி நனஞ்சி இருப்போம்..அப்படிஒரு பருவம் தான் அது..
கெளதம் மேனன் ஸ்டைல்ல சொல்றதுனா...
ம்ம்ம்..இன்னும் சில விஷயங்கள் நல்ல நியாபகத்துல இருக்கு..
I had some good friends,
enjoyed a lot, packed with fun.. With great passionate I have crossed that period.
என்னால சுலபமா மறக்க முடியாது actually those memories is a way of holding onto the things you love, the things you are, the things you never want to lose ..இன்னும்சொல்லிக்கிட்டே இருப்பேன்..எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமா wat a peaceful days I once enjoy'd! How sweet their memory still..
சசிகுமார் ஸ்டைல்ல சொல்றதுனா..
இப்ப வாழுற வாழ்கை எதோ ஒரு வித எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை,க்ரோதம்,வன்முறை இப்படி எதாவது ஒன்னு எதுக்காகவோ எதையோஎதிர்ப்பார்த்து நம்ம கையை பிடிச்சு அது கூடவே நம்மையும் இழுத்துக்கிட்டுபோகும்..ஆனா இப்படி எதுவே மனசுல இல்லமா சந்தோசம் மட்டுமே மனசுமுழுசா நிறைஞ்சு இருக்கும் பாரு அது தாண்ட மாப்பிள்ளை ஸ்கூல்லைப்..அடிச்சிப்போம், கடிச்சுப்போம் மறுப்படியும் புடிச்சிப்போம் அந்த நேர்மைதாண்ட நொண்ணைகளா எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும்..
இப்படியே சொல்லிகிட்டே போன எழுந்து ஓடிடுவிங்கனு தெரியும்..இப்பஎன்னோட அந்த பள்ளிக்கால நினைவுகள்:
அனுபவங்கள்:
எனக்கு நியாபகம் தெரிஞ்சு என்னோட பள்ளிக்கு போன நாட்கள் இப்படி தான்ஆரம்பிச்சிச்சு..நான் போகவே மாட்டேனு ஒரே அழுகாச்சி..எங்க அப்பா என்னைமிரட்டி கிரட்டி ஒரு வழியா அவரோட சைக்கிள்ல ஏத்தி உக்கார வச்சு கொஞ்சதூரம் போனதுமே ஒரே டைவ் அடிச்சு கிழே எகிறி விழுந்தேன்..அப்ப அடிச்சாருபாருங்க சும்மா ஊரே கூடி நின்னு பாக்குற மாதிரி துரத்தி துரத்தி அப்ப போகஆரம்பிச்சிது தாங்க அந்த பயணம்..
பரங்கிபேட்டை(கடலூர் மாவட்டம்) சேவாமந்திர் ஸ்கூல் தான் ஆறாப்புவரைக்கும் படிச்சேன்..
ஆரம்பத்துல வினோத்,ரஜனி அப்புறம் ஜாபர்,காமில்,நகுதா இப்படி நிறையாநண்பர்கள் வந்து சேர்ந்தங்க..குட்டையில மீன் பிடிக்கிறதுல இருந்து பனைமரத்துல கல் எரிஞ்சு பனம்ப்பழம் சாப்பிட ஆரம்பிச்சு மசூதியுல வெள்ளை குல்லாபோட்டுக்கிட்டு நோன்பு கஞ்சி குடிக்கிற வரைக்கும் அப்படியே போச்சு..
அப்புறம் கிளாஸ் லீடர் கல்பனா என் கையுல கட்டுன சாமி கயிறு பிரிஞ்சு திரிஞ்சுகறுத்து போற வரைக்கும் என் கையுல கட்டி இருந்தேன்..
நான் முதல்ல அடிச்ச நசுருதீன், என்னை முதல்ல அடிச்ச இம்தியாஸ் இப்படி சிலபேர் இன்னும் நியாபகத்தில் இருக்காங்க..
அப்புறம் காட்சிகள் மாறின..
எழாவதுல இருந்து புதுவை திருவீகா பள்ளி ..படிப்பில் என்னையும் அறியாமல்ஈர்ப்பு..
அம்மாவையும் அப்பாவையும் பிரிந்து இருந்த தனிமை என்னை இன்னும்வேகமாக படிப்பில் தன்னை இழுத்து கொண்டது..அப்ப கிடைத்த நண்பர்கள் தான்இது வரை என் புதுவை நண்பர்கள் பழனி,விஜய்,ரகு இன்னும் நிறையா..பெரியவிஷயங்கள் சொல்ற மாதிரி எதுவும் இல்லை ஆண்கள் பள்ளி அதனால் வேறுவழி இல்லாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியநிலைமை..பத்தாவது வரைக்கும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயரோடும்புகழோடும்(நம்புங்க) படித்தேன்..
மறக்கவே முடியாத ஆசிரியர்கள் :
பரங்கிபேட்டை சேவாமந்திர்:
என் மேல ரொம்ப பாசமா இருந்த செந்தமிழ் செல்வி மிஸ் அவங்க அன்பு மறக்கமுடியாதது இப்ப எங்க இருக்காங்கனே தெரியுல..
இவ்வளவு அழகா கூட ஒரு மிஸ் இருப்பாங்களா என்று நினைத்த
மாலதி மிஸ்..அவங்க கடைசியா எங்க கிளாஸ்க்கு வந்தப்ப பக்கத்துல இருந்தபையன் சொல்லி தான் கவனிச்சேன் அவங்க அழுவதை..அன்றோடு போனவர்தான் இதுவரை அவர் அழுததற்கான காரணமும் தெரியவில்லை..எங்கேஇருக்கிறார் என்றும் தெரியவில்லை..
அப்புறம் மேரி மிஸ்..மார்கழி மாசத்துல நடுங்குற குளிர்ல காலையில அஞ்சுமணிக்கும் டியூஷன் வச்சப்பவும் நான் விறைப்பா சுவட்டர் மாட்டிகிட்டுபோனதுக்கு காரணம் உண்மையுல படிப்பு மேல இருந்த ஆர்வமா இல்லை மேரிமிஸ் வர சொல்லிடாங்க
அப்படிங்கிற ஒரே காரணமா என்று இன்று வரை தெரியவில்லை.
புதுவை திரு.வி .க :
இங்கு பல ஆசிரியர்கள் இருந்தாலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆசிரியைஹேமலதா மேடம்.
மிகவும் நேர்மையானவர், கண்டிப்பானவர் , கடமை தவறாதவர்..
பல ஆசிரியர்களும் சுயநோக்குடன் மட்டுமே செயல்ப்படும் இக்காலத்தில்கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல் எல்லா மாணவர்களும் நல்வழியில் நல்லமதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடுய பல மணிநேரங்களைமாணவர்களோடு மட்டுமே தியாகம் செய்தவர்..நான் பத்தாவது படிக்கும் பொழுதுபல ஆசிரியர்களும் டியூஷன் வைத்து வருமானம் பார்த்து கொண்டு இருந்தநேரத்தில் ஒரு சிறிய பலன் கூட எதிர்ப்பார்க்காமல் எங்கள் வகுப்பு மாணவர்கள்அனைவரையும் ஆங்கில மட்டும் கணித வகுப்புகள் சிறப்பு வகுப்புகள் எடுத்துநல்ல மதிப்பெண்களில் தேற செய்தவர்.
கிட்டதட்ட ஐம்பது வயது ஆகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல்கல்விக்க்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.
கலை அவர் கூட படித்த தம்பியை பற்றி சொல்லியதால் நானும் கூட படித்த என் தங்கையை பற்றி சில வார்த்தைகள்..
ஆறாவது வரை ஒரே ஸ்கூல், ஒரே டியூஷன், ஒரே வேன், வேற வேற கிளாஸ்..
நான் கல்லை எடுத்துக்கொண்டு துரத்தி கொண்டுப்போனால் அது பதிலுக்குகடப்பாரையை எடுத்துக்கொண்டு துரத்தும்..அவ்வளவு பாசக்கார பசங்களாபள்ளிக்கு போய்க்கொண்டு வந்துக்கொண்டு இருந்தோம்..இப்ப நிலைமைஅப்படியே தலைக்கிழ் ஒரு பொறுப்பு உள்ள குடும்ப பெண்மணி ஆயிட்டாங்க..
தங்கை உடையான் தோல்வி அடையான் (இது நம்ம பழமொழிங்க)..
நான் கூப்பிடப்போகும் நண்பர்கள்..
நாகா
செந்தில்வேலன்
கார்த்திகேயன்
ஜப்பான் ஜோ
பித்தன்
கிஷோர்
44 comments:
தங்கள் பள்ளி வாழ்க்கையை சிறப்பாக கூறியுள்ளீர்கள் வினோத்
தங்கை உடையான் தோல்வியடையான்
நல்ல பழமொழி
அப்போ என்ன மாதிரி தங்கை,அக்கா,தம்பி,அண்ணன் இப்பிடி யாருமே இல்லாதவங்களுக்கு.....
:-(
சுவாரஸியமா இருக்கு உங்க டைரி! இருந்தாலும் நீங்க ஆசிரியர்களைப் பற்றி சொல்லியிருக்கிறதால, நீங்க என்னோட வலைப்பதிவுக்கு வரணும்னு நான் அடம் பிடிக்கிறேன்.
Konja naalaa kaname appadinnu paathaa,nalla Malarum Ninaivuhalla moozhkittiyeppa.Good Vinoth Gowtham,niece detailing of ur School Days.Is ur sister chasing u still with Kadappaari? School friends are exceptional and they remain so,till the last.Late aanalum urupadiyaa vanthirukkappaa.
உனக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு...
என்னுடைய பால்ய நன்பன் பேரும் ரஜனி,
என்னுடைய மிஸ் பேரும் மேரி,
நீயும் ஏழாவது(!?) வரைக்கும் படிச்சுருக்க..
//இவ்வளவு அழகா கூட ஒரு மிஸ் இருப்பாங்களா என்று நினைத்த
மாலதி மிஸ்..//
ஹி.. ஹி.. அவங்க போட்டோ இருக்குமா?
//எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை.. //
கூகிள்ல மாலதி மிஸ்சுன்னு டைப் பண்ணி சர்ச் பண்ணிப்பாத்தியா?
ம்.. அழகா எழுதிட்ட பள்ளி நினைவுகளை!
அதுக்குன்னு 6 பேரையாடா கூப்பிடுவ?
-:) ippadiyaa maatividuva..
கெளதம் மேனன் super -:)
//தங்கை உடையான் தோல்வி அடையான் (இது நம்ம பழமொழிங்க)..//
நல்லாயிருக்கே
அப்பறம் உங்கள் பள்ளி வாழ்க்கையை சுவைபட எழுதியிருக்கீங்க நண்பா
மலரும் நினைவுகள் - சுவாரசியம்
//தங்கை உடையான் தோல்வி அடையான் (இது நம்ம பழமொழிங்க)..//
அது சரி, ஆனா எல்லோரும் அப்படி இல்லையே!
மற்றுமொரு தரமான கொசுவத்தி :)
நண்பர் கவுதம் காலையிலேயே கருத்து எழுத நினைத்து நேரம் கிடைக்கவில்லை.
நன்றாக பள்ளி நாட்களையும்,சிறு பருவத்தையும் எழுத்தில் பகிர்ந்தீர்கள்.இன்னும் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.இயக்குனர்கள் பார்வையில் முன்னுரை கலக்கலாக இருந்தது.
பாருங்கள் நம்மிடம் பள்ளி பருவ போட்டோக்கள் இல்லாமல் போய்விட்டது,இருந்தால் அதையும் போட்டு கலக்கிஇருக்கலாம்.
என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.நிறைய எழுத வேண்டியிருக்குமே?
மற்றுமொரு நல்ல பதிவு உங்களிடமிருந்து.
இப்ப வாழுற வாழ்கை எதோ ஒரு வித எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை,க்ரோதம்,வன்முறை இப்படி எதாவது ஒன்னு எதுக்காகவோ எதையோ எதிர்ப்பார்த்து நம்ம கையை பிடிச்சு அது கூடவே நம்மையும் இழுத்துக்கிட்டு போகும்..ஆனா இப்படி எதுவே மனசுல இல்லமா சந்தோசம் மட்டுமே மனசு முழுசா நிறைஞ்சு இருக்கும் பாரு அது தாண்ட மாப்பிள்ளை ஸ்கூல் லைப்
யப்பா என்ன ஒரு தத்துவம்
வினோத் அசத்தல்
இப்படியே சொல்லிகிட்டே போன எழுந்து ஓடிடுவிங்கனு தெரியும்..இப்ப என்னோட அந்த பள்ளிக்கால நினைவுகள்:
அழகான நினைவுகள்
பத்தாவது வரைக்கும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயரோடும் புகழோடும்(நம்புங்க) படித்தேன்..
அப்போ பதினொன்னாவதுல
மேரி மிஸ் வர சொல்லிடாங்க
அப்படிங்கிற ஒரே காரணமா என்று இன்று வரை தெரியவில்லை.
நம்பிட்டோம்
நாகா
செந்தில்வேலன்
கார்த்திகேயன்
ஜப்பான் ஜோ
பித்தன்
கிஷோர்
வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் மலரும் நினைவுகளை படிக்க ஆவலாயிருக்கின்றோம்
நல்லா இருக்கு.இதிலும் சினிமாகாரங்களை பாதிச்சு எழுதனமா?
வாழ்த்துக்கள்!
தங்கச்சிய வெச்சு புதுமொழி...கலக்கல்........
@ பிரியமுடன் வசந்த்.
நன்றி வசந்த்.
//அப்போ என்ன மாதிரி தங்கை,அக்கா,தம்பி,அண்ணன் இப்பிடி யாருமே இல்லாதவங்களுக்கு.....//
ஏங்க யாரு நினைத்தாலும் வெற்றியாளர்கள் ஆகலாம்..சும்மா ஒரு ரைமிங்ல அடிச்சேன் அது..
@ ஜெகநாதன்..
//சுவாரஸியமா இருக்கு உங்க டைரி!//
நன்றி ஜெகன்
@ Muniappan Pakkangal..
/Konja naalaa kaname appadinnu paathaa,nalla Malarum Ninaivuhalla moozhkittiyeppa./
ஆமாம் சார் கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்..
/Is ur sister chasing u still with Kadappaari?/
Sir,
She got married.Nw she is chasing her hubby..:))
@ கலையரசன்..
//உனக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு...
என்னுடைய பால்ய நன்பன் பேரும் ரஜனி,
என்னுடைய மிஸ் பேரும் மேரி,
நீயும் ஏழாவது(!?) வரைக்கும் படிச்சுருக்க..//
Hii..same pinch.
//ஹி.. ஹி.. அவங்க போட்டோ இருக்குமா? //
எதுக்கு பூஜை அறையில் வைத்து கும்பிடவா..
//கூகிள்ல மாலதி மிஸ்சுன்னு டைப் பண்ணி சர்ச் பண்ணிப்பாத்தியா?//
ஏன் காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுறேனே..:)
//ம்.. அழகா எழுதிட்ட பள்ளி நினைவுகளை!
அதுக்குன்னு 6 பேரையாடா கூப்பிடுவ?//
நன்றி..நான் பத்து பேரை கூப்பிடிலம்னு நினைத்தேன்..
@ பித்தன்..
/ippadiyaa maatividuva/
யான் பெற்ற இன்பம் ......
@ ஆ.ஞானசேகரன்..
நன்றி நண்பரே..
@ S.A. நவாஸுதீன்
நன்றி நண்பா..
@ வால்பையன்..
/அது சரி, ஆனா எல்லோரும் அப்படி இல்லையே!/
ஒரு ரைமிங்ல சொன்னதுங்க..சாத்தியமாகவும் வாய்ப்புகள் இருக்கு.
@ நாகா ..
நன்றி நண்பா..மறக்காமல் நீங்களும் எழுதி விடுங்கள்
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
நன்றி நண்பா..
தங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும்..
நீங்களும் சீக்கிரம் எழுதி விடுங்கள்..
உங்கக்கிட்ட இருந்து அதிகம் எதிர்ப்பர்கிறோம்..
@ Sakthi..
//யப்பா என்ன ஒரு தத்துவம்
வினோத் அசத்தல்//
//அழகான நினைவுகள்//
//வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் மலரும் நினைவுகளை படிக்க ஆவலாயிருக்கின்றோம்//
நன்றிகள் பல சக்தி..
//அப்போ பதினொன்னாவதுல//
நான் பதினொன்னாவது படிக்கில..
படிச்சு மட்டும் இருந்தேன் State first தான்..:))
//நம்பிட்டோம்//
நம்புங்க..
@ கே.ரவிஷங்கர்..
//நல்லா இருக்கு.இதிலும் சினிமாகாரங்களை பாதிச்சு எழுதனமா?//
நன்றி சார்..
அது அப்படியே எழுதிட்டேன்..:)
@ செந்தழல் ரவி..
/தங்கச்சிய வெச்சு புதுமொழி...கலக்கல்..//
நன்றி தல..
உங்கள் பள்ளி நாள் நினைவுகள் பசுமையாய் இருந்தது....
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்....
வினோத், உங்க கனாக்காலம் நல்லா இருக்கு..
அந்த சைக்கிள்ல இருந்து குதிச்சீங்க பாருங்க.. அது ரொம்ப ரசிக்கற மாதிரி இருந்தது.. ஹாஹாஹா..
நம்ம இயக்குனர்கள் மாதிரி வசனங்கள் எழுதியது மாறுபட்ட முயற்சி. நல்ல இருந்தது.
இனி நம்ம கனாகாலமா? ம்ம்.. எழுதீடுவோம்...
நான் வன்மையா கண்டிக்கிறேன், "மாப்பிள்ளை" னு நீங்க சொற்குற்றத்தோட எழுதியிருக்கீங்க!
'மாப்ள" ன்னு தான் போடனும்.
இது மதுரை மண்ணின் தமிழுக்கு இழுக்கு. டேய், பஸ்ஸ கொழுத்துங்கடா!
நான் வன்மையா கண்டிக்கிறேன், "மாப்பிள்ளை" னு நீங்க சொற்குற்றத்தோட எழுதியிருக்கீங்க!
'மாப்ள" ன்னு தான் போடனும்.
இது மதுரை மண்ணின் தமிழுக்கு இழுக்கு. டேய், பஸ்ஸ கொழுத்துங்கடா!
நீங்க நிறைய nostalgia மாதிரியாவே எழுதுறீங்களே!
@ சப்ராஸ் அபூ பக்கர்
/உங்கள் பள்ளி நாள் நினைவுகள் பசுமையாய் இருந்தது
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்/
நன்றி அபூ வாழ்த்துக்கு..
@ ச.செந்தில்வேலன்..
நன்றி செந்தில்..
சீக்கிரம் பதிவை எழுதுங்கள் படிக்க ஆர்வமாய் உள்ளேன்.
@ Pappu..
/"மாப்பிள்ளை" னு நீங்க சொற்குற்றத்தோட எழுதியிருக்கீங்க!
'மாப்ள" ன்னு தான் போடனும்./
எலே மதுரக்கார தம்பி அடுத்த தடவை அதே மாதிரி வரமா பாத்துக்குறேன்..
/நீங்க நிறைய nostalgia மாதிரியாவே எழுதுறீங்களே!/
ஆமாம் இல்லை அதை நானும் யோசித்தேன்..இனிமேல் ரூட் மாற்ற வேண்டியது தான்..
//நானும் கூட படித்த என் தங்கையை பற்றி சில வார்த்தைகள்..
ஆறாவது வரை ஒரே ஸ்கூல், ஒரே டியூஷன், ஒரே வேன், வேற வேற கிளாஸ்..
நான் கல்லை எடுத்துக்கொண்டு துரத்தி கொண்டுப்போனால் அது பதிலுக்கு கடப்பாரையை எடுத்துக்கொண்டு துரத்தும்..//
த்தோ.. போட்டுகுடுக்க கிளம்பிட்டேன்...
// அப்பா என்னை மிரட்டி கிரட்டி ஒரு வழியா அவரோட சைக்கிள்ல ஏத்தி உக்கார வச்சு கொஞ்ச தூரம் போனதுமே ஒரே டைவ் அடிச்சு கிழே எகிறி விழுந்தேன்..அப்ப அடிச்சாரு பாருங்க சும்மா ஊரே கூடி நின்னு பாக்குற மாதிரி துரத்தி துரத்தி அப்ப போக ஆரம்பிச்சிது தாங்க அந்த பயணம்..//
இன்னும் அந்த பயணம் தொடர்கிறது... எப்பா என்னா அடி?
கலக்கிடீங்க ..மாப்பள .... வழக்கம் போல நல்லா இருந்துச்சு
//நீங்க என்னோட வலைப்பதிவுக்கு வரணும்னு நான் அடம் பிடிக்கிறேன்//
ஹிஹி.. வந்ததிற்கு ரொம்ப நன்றி!
யாரது ஜப்பான் ஜோ?
நான் இந்தியா திரும்பி வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. அது வேறு யாரோ?
(ஏண்டா ஒருத்தன் இன்னொருத்தனை அழைச்சா பத்தாதா? அதென்னா அஞ்சு பேரு? இந்த தொடர்பதிவு மண்டையனுங்க இம்சை தாங்க முடியலப்பா! ஹீ ஹீ)
இது வரை வெளி வந்த பள்ளி அனுபவக் கட்டுரைகளில், சிறந்த பத்துக் கட்டுரைகளில் இதுவும் வரலாம்.
வாழ்த்துக்கள்.
@ Kishore..
நன்றி கிஷோர் அவர்களே ..
உங்களுக்கு போட்டு கொடுக்கவா கற்று கொடுக்க வேண்டும்..
(அது என்ன புகைப்படம் சாஞ்சு இருக்கு )
@ அது ஒரு கனாக் காலம்..
நன்றி சுந்தர் சார்..
@ ஜெகநாதன்..
நன்றி ஜெகன் இனிமேல் அடிக்கடி வருவேன்..
@ Japan joe..
//யாரது ஜப்பான் ஜோ?
நான் இந்தியா திரும்பி வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. அது வேறு யாரோ?//
ரஜனிகாந்த் நடிக்கிறதை விட்டுடா
Super Star இல்லைன்னு ஆயுடுமா,
சச்சின் விளையாடுவதை நிறுத்தி விட்டால்,
Master Blaster இல்லைன்னு ஆயுடுமா,
அதே போல் தான் நீங்கள் ஜப்பான்ல இருந்து வந்துட்டாலும்,
எங்களை பொறுத்த வரை "ஜப்பான் ஜோ" தான்..
சீக்கிரம் பதிவை போடுங்கள்..ஆமாம் சொல்லிபுட்டேன்..
//இது வரை வெளி வந்த பள்ளி அனுபவக் கட்டுரைகளில், சிறந்த பத்துக் கட்டுரைகளில் இதுவும் வரலாம்//
உங்களின் நகைச்சுவை உணர்வு எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது..
//நன்றி கிஷோர் அவர்களே ..//
பார்ரா பயபுள்ள ஊட்ல நடிக்குற மாதிரியே என்கிட்டயும் நடிகிது ...
//உங்களுக்கு போட்டு கொடுக்கவா கற்று கொடுக்க வேண்டும்..//
எனக்கு குருவே நீ தானா...
//(அது என்ன புகைப்படம் சாஞ்சு இருக்கு )//
சும்மா தான இருக்க ... நிமித்தி வை..
நல்லாயிருக்கு வினோத்.
மலரும் நினைவுகளில் "மிஸ்" மட்டும் தான் இருக்காங்க...
வாத்தியாரெல்லாம் மிஸ்ஸிங்...
@ Sarathy..
வாத்தியார் யாரும் சொல்ற மாதிரி இல்லை நண்பா அதான் மிஸ்ஸிங்.
ஆரம்பம் அதகளம்...!
யோவ்..இன்னாயா நானும் பாத்துகுனே இருக்கேன்..!
வெறும் பொம்ப்ள டீச்சர்களப் பத்தியே சொல்லீட்டு இருக்கீங்க...!
இன்னா நெனைச்சிட்டு இருக்கீங்கோ..?
\\ஆறாவது வரை ஒரே ஸ்கூல், ஒரே டியூஷன், ஒரே வேன், வேற வேற கிளாஸ்..\\
அப்பறம்..தங்கச்சின்னா ஒரே கிளாஸில படிக்கக் கூடதில்ல..!
:)
@ டக்ளஸ்
//ஆரம்பம் அதகளம்...!//
நன்றி டக்..
//யோவ்..இன்னாயா நானும் பாத்துகுனே இருக்கேன்..!
வெறும் பொம்ப்ள டீச்சர்களப் பத்தியே சொல்லீட்டு இருக்கீங்க...!
இன்னா நெனைச்சிட்டு இருக்கீங்கோ..?//
யோவ் நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன் ஒரு ஆம்பளை வாத்தியார் கூட எழுதுற மாதிரி நியாபகத்தில் வரவில்லை..
//அப்பறம்..தங்கச்சின்னா ஒரே கிளாஸில படிக்கக் கூடதில்ல..!
:)//
அதே அதே..
ha...ha...naan kooda 3vayasula idhe maadhiri appa cycle pinnaala ukkaandhu ponen.Appuramdhaan therinjadhu schoolukkunu.Vittenaa....appa sattaiya pallaala kadichi kudharittenla.Enna nenachchaaro appa veetukku thirumba koottitu vandhuttaar.Aduthu 5vayasuladhaan ponen.Annaa ennamo theriyalai,adhukkappuram naan oru naal kooda schoolukku leave pottadhille.(appave cricket match pakkalaam.leave podunnu kenjinappa kooda podalai.Leave podalainaa avardhaane ennai schoolukku kondu poi vidanum.Adhudhaan indha thaaja)
Post a Comment