
எனக்கு இந்த 'விருது' "பிரியமுடன் வசந்த்" அவர்களால் கொடுக்கப்பட்டு ஒரு பத்து நாட்களுக்கு மேலேயே ஆயிடுச்சுன்னு நினைக்குறேன். அதுக்கப்புறம் நம்ம ஜெகநாதன் வேற கொடுத்தாரு. என்னா அப்படி யாரும் கொடுக்காமா இருந்து இருந்தாங்கனு (அப்படி ஒரு நிலைமை வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன் ஏன்னா ஆரம்பிச்சி வச்சதுமே ஜெட் வேகத்துல எல்லோரிடமும் போய் சேர்ந்துடுட்டுச்சு) நானே யாருக்காச்சும் 'மெயில்' அனுப்பி கேட்டு வாங்கி இருப்பேன்..
ரூல்ஸ்ப்படி பார்த்திங்கனா இந்த விருதை ஒரு ஆறு பேருக்காவது கொடுக்கனுமா..நான் யாருக்கு கொடுக்க வேண்டும்னு நினைக்கிறப்பவே நிறையா பேர் 'துண்ட' போட்டு அந்த இடத்தை பிடிச்சிடாங்க..ஆஹா இப்படியே போச்சுனா நம்மாலே "ஆறு ப்ளாக்" ஆரம்பிச்சு அதுக்கு தான் கொடுக்கணும்னு நிலை வந்த்ருச்சுனா என்ன பண்ணுறதுன்னு உடனடி முடிவு எடுத்து த்தோ ஆறு பேரு செலக்ட் பண்ணிட்டேன்..
நல்ல வேளை இதுவரைக்கும் அங்க யாரும் துண்டு போடலுன்னு நினைக்குறேன்..
செந்தழல் ரவி..
இது என்னடா சூரியனுக்கே 'டார்ச்' காட்டுறியானு கேக்கலாம்..அவர் தான் இந்த விருது வைபோகத்தை ஆரம்பிச்சது..அதுக்காக அவருக்கு கொடுக்க கூடாதுன்னு ஆயிடுமா..
அதனால் "வலையுலகின் முடிச்சுடா மன்னன்", "டெக்னிகல் சமச்சரங்களின் அண்ணன் ", "பதிவுலகின் வேலை வாய்ப்பு மையம்", "கலாய்த்தல் கண்ணன்"..எங்கள் அண்ணன் "செந்தழல் ரவி" அவர்களுக்கு வழங்குகிறேன்.."வாழ்க்கை ஒரு வட்டம்" ஆரம்பிச்ச இடத்துல முடியனும்மில அதான்.
கிஷோர்..
பதிவுலகத்திற்கு வரும் முன்னரே என் நண்பன்..நக்கல், நையாண்டி மற்றும் நகைச்சுவை கலந்து எழுதுரதானாலையே அவன் சீரியஸ் பதிவு போட்ட கூட அது "நகைச்சுவையாவே" தெரியுது..இப்ப வேலையுல மும்முரமா இருக்கறதால முன்போல் எழுதுவது இல்லை (என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க)..மறுபடியும் அதே வேகத்துல எழுத ஆரம்பிச்சானா நல்லா இருக்கும் (அவ்வளவு சீக்கிரத்துல பதிவுலகை விட்டு வெளியே போய் உருப்பட விட்ருவோமா)..இருந்தாலும் அவனோட இந்த நேர்மையையும், திறமையையும் மற்றும் ...(அவசரத்துக்கு வார்த்தை வாயுல சீக்கிரம் சிக்க மாட்டுதே ம்ம்ம்...ரைட்டு) அவனோட இந்த அர்பணிப்பு உணர்வையும் கண்டு இந்த விருதை அவனுக்கு கொடுக்குறேன் (அய்..அடுத்த வாரம் சிதம்பரம் சாரதாராம்ல ட்ரீட் நிச்சயம்).
முனியப்பன் சார்..
ஆரம்பத்தில் இருந்தே என்னை ஊக்குவிக்கும் நல்ல மனிதர் மற்றும் பதிவர்..இவருடுய பல பதிவுகள் அனுபவ பதிவுகள் தான்..மருத்துவராய் இருப்பதால் அவருக்கு மருத்துவ உலகில் நேர்ந்த அனுபவங்கள், அப்புறம் அவரிடம் சிகிச்சைக்கு வரும் அன்பர்களிடம் ஏற்படும் அனுபவங்கள், அவர்களின் நோய்களை பற்றிய குறிப்பு, நோயின் தீவிரத்தை அவர்களின் வாழ்கையில் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி கூறி அதை எளிதாக நம் மனதில் ஏற்றுவது போல் பதிவிடுகிறார்.அப்புறம் அவரின் "நீதிபதி" அப்பாவை பற்றியும், குடும்பத்தை பற்றியும் அவ்வபொழுது எழுதுகிறார்.கவிதையிலும் அவ்வபொழுது கலக்குகிறார். இந்தாங்க நீங்களும் பிடிங்க விருதை.
ச.செந்தில்வேலன்..
அமீரக பதிவரான இவரின் ப்ளாக்கை திறந்தாலே "பட்டாம்பூச்சி" பறப்பதை போல் உணர்விர்கள்..அவ்வளவு நேர்த்தியாக,அழகாக இருக்கும்.அழகு தமிழில் எழுதி வருகிறார்..அவரின் பல பதிவுகள் கண்டிப்பாக பல பேருக்கு உபயோகமா இருக்கும்..குறிப்பா "நமது பயன்பாட்டில் தமிழ்" அப்படிங்கிற ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்காரு..அவ்வளவு தமிழ் வார்த்தைகள் அதுல கொட்டி கிடக்கு..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி இந்த ஒரு இடுகை போதும் நம் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள.தொடர்ந்து எழுதுங்க "வாழ்க தமிழ்".
புதுவை சிவா..
எங்க ஊருக்காரரு..அதனால மட்டும் இல்லை விருது..இவர் தொடர்ந்து வெளியிடும் ஈழம் மற்றும் ஈழத்து மக்களை சார்ந்த செய்திகள் தான் காரணம்..அவர் அதில் காட்டும் ஈடுப்பாடு, அதற்காக அவர் சேகரிக்கும் செய்திகள்,செலவிடும் நேரம் எல்லாமே காரணம்..அதனால கண்டிப்பா இந்த விருதை நீங்க வாங்கி தான் ஆகணும்.
???
இவரு ரொம்ப நாளா நல்லா எழுதிக்கிட்டு இருந்தாரு..நான் யாரு பதிவை திருப்பி திருப்பி படிக்கிறேனோ இல்லையோ இவர் பதிவை விழுந்து விழுந்து, முட்டி மோதி திரும்ப திரும்ப படித்து இருக்கிறேன்..இவர் இருக்கருதால தான்(!!!) இன்னும் நான் அடிக்கடி எதாச்சும் பதிவு போடுறேன்..ரொம்ப நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவரு..இப்படி இருந்தவரு கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாம போய்ட்டாரு..அவர் யாரும் இல்ல நம்ம "வினோத்கெளதம்" தான்..(த்தூ) அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம துப்பக்கூடாது.
24 comments:
வாழ்த்துக்கள் பாஸ்.....
//அவர் யாரும் இல்ல நம்ம "வினோத்கெளதம்" தான்..(த்தூ) அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம துப்பக்கூடாது.//
செம டெரரா இருப்பீங்க போல...
;))
வாழ்த்துக்கள் பாசு.....
விருது பெற்றதற்க்கும்.. விருதை பெற்றவற்களுக்கும் வாழ்த்துக்கள்!!
(இன்னம் நாலு பிளாக்குக்க இதையேதான் காப்பி பேஸ்ட் பண்ணனும்)
வாழ்த்துக்கள் வினு
"வாழ்க்கை ஒரு வட்டம்" ஆரம்பிச்ச இடத்துல முடியனும்மில அதான்.
என்ன ஒரு தத்துவம்
அழகு தமிழில் எழுதி வருகிறார்..அவரின் பல பதிவுகள் கண்டிப்பாக பல பேருக்கு உபயோகமா இருக்கும்..குறிப்பா "நமது பயன்பாட்டில் தமிழ்" அப்படிங்கிற ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்காரு..அவ்வளவு தமிழ் வார்த்தைகள் அதுல கொட்டி கிடக்கு..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி இந்த ஒரு இடுகை போதும் நம் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள.தொடர்ந்து எழுதுங்க "வாழ்க தமிழ்".
ம்ம்ம்ம்
படித்திருக்கிறேன் நிஜமாகவே பயனுள்ள தொடர் தான்
@ kathir..
கதிர் நொம்ப நன்றி நண்பா..50வது நபராய் பின் தொடர்வதற்கு ..
//செம டெரரா இருப்பீங்க போல...//
யாரு நானா..நானே சொல்லிகிட்ட தான் உண்டு.
@ பிரியமுடன் வசந்த்..
நன்றி நண்பா..
@ கலையரசன்..
நன்றி வடலுரான்..
//(இன்னம் நாலு பிளாக்குக்க இதையேதான் காப்பி பேஸ்ட் பண்ணனும்)//
எப்பொழுதும் ஒரே தமாசு தான்,..
@ Sakthi..
நன்றி சக்தி..
//என்ன ஒரு தத்துவம்//
அதுவா வருதுங்க..
வினோத், விருதளித்தமைக்கு நன்றி :))
விருது பெற்றதற்க்கும்.. விருதை பெற்றவற்களுக்கும் வாழ்த்துக்கள்!!
(இன்னம் நாலு பிளாக்குக்க இதையேதான் காப்பி பேஸ்ட் பண்ணனும்)
உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
//நான் யாருக்கு கொடுக்க வேண்டும்னு நினைக்கிறப்பவே நிறையா பேர் 'துண்ட' போட்டு அந்த இடத்தை பிடிச்சிடாங்க..ஆஹா இப்படியே போச்சுனா நம்மாலே "ஆறு ப்ளாக்" ஆரம்பிச்சு அதுக்கு தான் கொடுக்கணும்னு நிலை வந்த்ருச்சுனா என்ன பண்ணுறதுன்னு உடனடி முடிவு எடுத்து த்தோ ஆறு பேரு செலக்ட் பண்ணிட்டேன்.//
ஏன் ஒருத்தருக்கே 6 விருதை கொடுக்க குடாதா?
அட உங்களுக்கு தாங்க.
Viruthu ellam sari thambi,atha aaru perukku kodukkanume-athukku oru vazhi solluppaa.Nandri Vinoth Gowtham for keeping me in ur mind.
வாழ்த்துகள் நண்பா..
உங்களுக்கும்..
உங்களிடம் பெற்றவருக்கும்
50 க்கு வாழ்த்துக்கள் வினோத்...
(கவலபடாத.. இனி 50துக்கும் வாழ்த்துக்கள் வரும்)
விருது பெற்றதற்க்கும்.. விருதை பெற்றவற்களுக்கும் வாழ்த்துக்கள்!!
நன்றி வினோத்
என் தளத்திற்கு கிடைக்கும் இரண்டாவது விருது இது
மற்றும் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்துகள்.
வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற மற்றவர்களுக்கும்.
வாழ்த்துகள் vinoth..:-))))
வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களுக்கு
இந்த விருது கொடுத்து இன்ன்னும் ஓயலியா சுத்தி சுத்தி வருது ஆஆஆஅங்
@ ச.செந்தில்வேலன்..
நன்றி செந்தில்..
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
@ கோபிநாத்..
நன்றி நண்பர்களே..
@ என் பக்கம்..
பிரதீப் எங்க ஆளையே ரொம்ப நாளா காணோம்..
@ Muniappan Pakkangal..
Thanks sir.
@ ஆ.ஞானசேகரன்..
நன்றி நண்பரே..
@ கலையரசன் ..
//50 க்கு வாழ்த்துக்கள் வினோத்//
நன்றி கலை..:))
@ அது ஒரு கனாக் காலம்..
நன்றி சுந்தர் சார்..
@ ♠புதுவை சிவா♠ ..
நன்றி நண்பரே..
@ S.A. நவாஸுதீன்..
@ கார்த்திகைப் பாண்டியன்..
நன்றி நண்பர்களே..
@ அபுஅஃப்ஸர்..
//இந்த விருது கொடுத்து இன்ன்னும் ஓயலியா சுத்தி சுத்தி வருது ஆஆஆஅங்//
இதுக்கே இப்படியா இன்னும் எதனை விருது இருக்கு எத்தனை தொடர்பதிவு இருக்கு :))
அல்லாத்துகும் வாழ்த்துக்கள்பா..!
ha ha ha viruthukka virutha ada unaku than sonnan appala senthazal nanbarukkum virutha kalakal
thanks dude..
Post a Comment