Wednesday, July 15, 2009

என்னை பார்த்தா எப்படிங்க தெரியுது..

அது ஏன் எனக்கு மட்டும் இப்படி..இல்லை நான் மட்டும் தான் எல்லோருக்கும் இப்படி தெரியுரனா..என்னன்னு கேக்குறிங்களா..இருங்க சொல்றேன்..

முதல்ல
லவ் மேட்டர்ல இருந்து ஆரம்பிப்போம்.

நான்
பாட்டும் காலேஜ்ல படிக்கிறப்ப செவ்வனேன்னு ஹாஸ்டெல்ல படுத்து தூங்கிட்டு இருப்பேன் அங்க இருந்து நம்ம பய வருவான்..வந்த வேகத்துலேயே என்க்கிட்டசொல்லமாட்டன் ஆர்டர் தான் போடுவான் "மச்சான் கிளம்பு போகலாம்"..

"எங்கடா"..நான்.

"அகிலாண்டேஸ்வரி காலேஜ் வரைக்கும்"..(அது நாங்கள் படித்தகாலேஜில் இருந்து ஒரு பத்து மைல் தள்ளி உள்ளது)

"டேய்..உன் ஆள பார்க்க நீ போற நான் எதுக்குடா"..நான் .
"மச்சான் நீ வந்த தாண்டா ஒரு கெத்தா இருக்கும்..எனக்கு ஒரு சப்போர்ட்தான்..ஒரு பிரச்சனைனு வந்த கூட நீ ஒரு ஆள சமாளிப்ப இல்ல அதான்.."


இதுக்கு அப்புறம் நான் போவாம இருக்க முடியுமா அதான் வாயே திறக்கமுடியாதப்படி வாயுல ஐஸ் கட்டிய வச்சி தினிச்சிட்டானே..

ஆனா அங்கபோனப்பிறகு தான் தெரியும் அவன் காதல் பிரகாசமா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு மாதிரி எரியறதுக்கு நம்மள 'ஃபியுஸ்' போன பல்பு ஆக்கி மூலையில உக்கார வச்சு இருப்பான்னு..அட அவன் ஆளு அதுக்கு சப்போர்ட்ட்டா என்னை மாதிரி ஒரு "அல்லகையை" (பெண்ப்பால்) அது கூட கூப்பிட்டு வரும் அவன் ஆளு என்ன பார்த்த உடனே என்ன நினைக்குமுன்னு தெரியாது உடனே "உனக்கு டைம்ஆயுடுச்சில நீ போனு" அதை கிளப்பி விட்டுரும்..என்ன வில்லத்தனம் இல்ல.


இது மாதிரி சம்பவம் காலேஜ் படிச்சு முடிச்சப்புறம் கூட என்னை விடமா தொரத்திட்டு வந்து இருக்குங்க..


வீட்டுல அமைதியா உக்கார்ந்து இருப்பேன்..ஒரு கால் வரும்..


"மச்சான் என் ஆளை பார்க்க தஞ்சாவூர் வரைக்கும் போறேன் கூட வாடா அப்படின்னு"..கூப்பிடுவான் "இவன்" சிதம்பரத்துல இன்னொரு ஃப்ரென்ட்..


"டேய்..உன் ஆளு இருக்குறது தஞ்சாவூர்..நீ இருக்கிறது சிதம்பரம்..நீஅங்கே இருந்து போக வேண்டியது தானே..இதுக்கு எதுக்குடா பாண்டிச்சேரில இருந்து நான் வரணும்.."


"இல்லை..மச்சான் நம்ம செட்ல நீ தான் ரொம்ப நல்லவன்..மத்தவன் எல்லாம் வந்தா எதாச்சும் பிரச்னை பண்ணுவானுங்க..உன்ன மாதிரி டிசென்ட்டா வரமாட்டனுங்க அதாண்டா உன்னை கூப்பிடுறேன்..வந்தா திருப்பி வரப்ப வேணா பார்க்கு போலாம்டா"..அப்படின்னு ஒரு பிட்டு சேர்த்து ஓட்டுவானுங்க..இதுக்கு அப்புறம் நான் போகம்மா இருப்பன ஏன்னா அடிப்படையா எனக்கு ரொம்ப இளகின மனசு வேற..அதனால போயுடுவேன்..


இது எல்லாம் கூட பொறுத்து போலமுங்க சில நாதாரிங்க நான் வீட்டுல பெரும்பாலும் தனியா இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டு..


"மச்சான்..ஏன் ஆளு கூட பேசணும்டா வெளியே கூப்டிக்கிட்டு போன பிரச்னை ஆகிடும்..உங்க வீடு ச்சும்மா தானே இருக்கு..ஒரு அரை மணிநேரம் பேசிட்டு ஓடி போய்டுவோம்டா மச்சி.."


"டேய்..இங்க என்ன நான் வீட்டுக்கு வெளியே எதாச்சும் போர்டு மாட்டி தொங்க விட்டுருக்கான..என்ன நினைச்சிட்டு இருக்க.."


"மச்சி..சத்தியமா சொல்றேன் அரை மணி நேரம் தான்டா..பேசிக்கிட்டுதான் இருப்போம்..நீ வேணா பக்கத்துல உக்கார்ந்து பாரு"


"டேய்..அப்புறம் வாயுல எதாச்சும் வந்துற போகுது..சான்சே இல்லை வேற வீடு பாரு..ச்சே வேற ஆளு பாரு..."


"சரிடா..நாளைக்கு அவ ஃபிரென்ட் மீனா வேற ஏன் ஆளு கூட வரேன்னு சொன்ன..அவ வேற எதோ உன்னை பத்தி விசரிச்சாலம் "வினோத் எப்படி நல்ல பையனா"..அப்படினு..ஏன் ஆளு சொன்னஅதுக்கப்புறம் உன் இஷ்டம்டா.
" ..

"டேய்..அரை மணி நேரம் தானே பேசப்போற சரிடாப்போ.,ஆமாம் மீனா எப்படி இருப்பா.."..நான்.


இதுக்கு அப்புறம் ஒரு கோஷ்டி இருக்கு..வருவானுங்க கிளம்பி பாண்டிக்கு வந்து மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்ப ஏன் பாக்கெட்ல ஒருமூநூறு ரூபா வச்சிட்டு..


"மச்சான் வரப்ப ரெண்டுபுல் புடிச்சிட்டு வந்துரு "


"ஏன்,நீங்க ஊருக்கு தானே போறீங்க நீங்க வாங்கிட்டு போகமாட்டிங்களோ.."..நான்.


"டேய்..இருந்தாலும் உனக்கு தானே செக் போஸ்ட் தாண்டி எப்படி எடுத்துட்டு வரர்தன்னு அந்த நேக்கு போக்கு தெரியும்.."


"டேய்..நான் என்ன கள்ளகடத்தல் பிசினஸ் பண்ணுரனா என்னா.."


"அதுக்கு இல்லை மச்சான் நீ தான் நம்ம செட்ல ரொம்ப தைரியசாலி,திறமையானவன்..எந்த பிரச்னை வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சமாளிப்ப அதான் சொல்றேன்.."


"..."..நான்.


இவ்வளவு ஏங்க இப்ப வேலை பாக்குற இடத்துல ஆபீஸ்பாய் ஆயிரம் பக்கத்துக்கு மேல மத்தவங்க சொல்ரங்கனு ஜெராக்ஸ் போடுவான்..இதே நான் ஒரு பத்து பக்கத்துக்கு போய் நின்ன கூட..


"பத்து பக்கம் தானே..நீயே போட்டுக்கோ வினோத்..இதை நான் வேற யாருக்கிட்ட சொல்லமுடியும் சொல்லு உன்கிட்ட தான் சொல்லமுடியும்..ஏன்னா எனக்கு தெரியும் நீ ரொம்ப நல்லவன்..அப்படியேஎனக்கு ஒரு பத்து பக்கம் போடணும் அதையும் போட்டு கொடேன்.."


இப்ப சொல்லுங்க இவங்களுக்கு எல்லாம் என்ன பார்த்த எப்படிங்க தெரியுது.

64 comments:

பித்தன் said...

kenaiyannu un netthilaye eluthi ottirukkathu therinchipocchi pola.

இவன்" -> enakku theriyum :) antha chidambaratthu kaaranai

kishore vanthu pathil solludaa.

கார்த்திகைப் பாண்டியன் said...

மீள்பதிவா வினோத்? ஏற்கனவே படிச்ச ஞாபகம்..:-)))

KISHORE said...

நீ சொல்றத பார்த்த நீ ரொம்ப.... நல்ல....வன்னு... தெரியுது...

மச்சான் எனக்கு கூட ஒரு ஹெல்ப் செய்யணும்டா... நீ அல்அய்ன் ல தான இருக்க... என் அக்கா வீடு இதோ.. பக்கத்துல கூப்டுர தூரத்துல ஓமென்ல தான் இருக்கு.. அக்கா வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு சூப்பர் பிகர் இருக்காம்.. நீ நாளைக்கு காலைல போய் பார்த்து உங்க கிஷோர் மச்சான் அடுத்த வாரம் வந்து பாக்குறேன்னு சொன்னாருன்னு சொல்லிட்டு உடனே திரும்பி வந்துடு.... போகும் போது...போடா இதுக்கு மேல என்ன வேலை செய்ய சொல்வேன்னு உனக்கு தெரியாதா ?
எவ்ளவோ பண்ணி இருக்க இத பண்ண மாட்டியா ?

KISHORE said...

புது பதிவு தான் கார்த்திகை பாண்டியன் ..

அவனுக்கு இது மாதிரி தொண்டு செய்யுறதே வேலையா இருக்குறதுனால ... இந்த தாக்கம் வேற பதிவுல உங்களுக்கு தெரிஞ்சி இருக்கலாம்..

KISHORE said...

ஆமா... யாரு அந்த "இவன்"... பச்ச புள்ளைய போட்டு என்ன பாடுபடுத்தி இருக்கான் பாரு அந்த "இவன்.."

KISHORE said...

சரி விடு அந்த "இவன்" எவனோ ஒருத்தன்.. ஒருத்தர் ரெண்டு பேருக்கு இந்த வேலை செஞ்சி இருந்தனா உனக்கு நியாபகம் இருக்கும்..

வால்பையன் said...

ஏம்பா தைரியசாலி, துபாய்ல இருந்து வரும்போது ஒரு அஞ்சுகிலோ தங்கத்த கைல புடிச்சிட்டு வந்துரு!

ஏன்னா நம்ம செட்டுலயே நீதான் தைரியமான ஆளு!

தேவன் மாயம் said...

நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே!

KISHORE said...

இதுல இருந்து ஒன்னு மாட்டும் நல்லா தெரியுது.. 40 ரூபாவுக்கு சரக்கு குடுக்குற ஊர்ல இருக்கும் போதே.. ஓசில கிடைக்குதுனா உலகத்துல எந்த மூலைக்கு வேனாலும் போனவன்னு நல்லா தெரியுது...

KISHORE said...

//உன்ன மாதிரி டிசென்ட்டா வரமாட்டனுங்க அதாண்டா உன்னை கூப்பிடுறேன்..//
நீங்க ரொம்ப டிசென்ட் போல இருக்கு...

ச.செந்தில்வேலன் said...

//
இல்லை..மச்சான் நம்ம செட்ல நீ தான் ரொம்ப நல்லவன்..மத்தவன் எல்லாம் வந்தா எதாச்சும் பிரச்னை பண்ணுவானுங்க..//

அவன் என்னய, "வினோத் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்.. ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாம்மா.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

நல்ல எழுதியிருக்கீங்க வினோத் :))

பிரியமுடன்.........வசந்த் said...

//"அதுக்கு இல்லை மச்சான் நீ தான் நம்ம செட்ல ரொம்ப தைரியசாலி,திறமையானவன்..எந்த பிரச்னை வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சமாளிப்ப அதான் சொல்றேன்.."//

அதான் சொல்லிட்டாங்கள்ள வினோத்...

பின்ன என்ன ?

sarathy said...

ரகளை...

இனிமேலாச்சும் டெரரா இருக்க முயற்சி
பண்ணு வினோத்...

KISHORE said...

//நான் பாட்டும் காலேஜ்ல படிக்கிறப்ப செவ்வனேன்னு ஹாஸ்டெல்ல படுத்து தூங்கிட்டு இருப்பேன்//

இப்போவும் நீ அதுதாண்டா பண்ற

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

"மச்சி..சத்தியமா சொல்றேன் அரை மணி நேரம் தான்டா..பேசிக்கிட்டுதான் இருப்போம்..நீ வேணா பக்கத்துல உக்கார்ந்து பாரு"

இப்புடிதாங்க அந்த சீனு ராஸ்கல் பக்கத்து வீட்டு பொண்ண உஷார் பண்ணி
மாடிக்கு கூடிப்போய் .என்ன காவலுக்கு நில்லுன்னு சொல்ல.
கூடவே வேணும்னா ஒளிஞ்சு பாத்துக்கோடா மச்சான்னு சொல்ல
நான் ஒளிஞ்சு பாக்க...
அந்த பொண்ணு பேயின்னு நினைச்சு மயக்கம் போட்டு விழுந்திடுசுங்க...
என்ன கொடுமைன்ங்க
இவிங்களுக்கு நம்மளையெல்லாம் பாத்தா எப்புடி தெரியுதாம்?

pappu said...

ஹேய்... என்னப்பா இது.... யோவ், கிஷோர் இப்படியா வினோத் அண்ணனப் படுத்துறது. ச்சே... பாவம்பா?

வினோத் அண்ணே, உங்க ஊர்ல லேப் டாப் மலிவாமே!டாக்ஸ் கட்டாம ஒண்ணு வாங்கிட்டு வாங்களேன்!

KISHORE said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
யோவ் அவன் தான் சொன்னான்னா நீயும் ஒளிஞ்சி நின்னு பார்த்து இருக்க... உன்னை எல்லாம்...

KISHORE said...

@ பப்பு..
ஆமாடா.. உன் அண்ணனுக்கு ஒன்னுமே தெரியாது..

sakthi said...

மச்சான் நீ வந்த தாண்டா ஒரு கெத்தா இருக்கும்..எனக்கு ஒரு சப்போர்ட்தான்..ஒரு பிரச்சனைனு வந்த கூட நீ ஒரு ஆள சமாளிப்ப இல்ல அதான்.."

அவ்வளவு தைரியசாலியா நீங்க

sakthi said...

நம்மள 'ஃபியுஸ்' போன பல்பு ஆக்கி மூலையில உக்கார வச்சு இருப்பான்னு..அட அவன் ஆளு அதுக்கு சப்போர்ட்ட்டா என்னை மாதிரி ஒரு "அல்லகையை" (பெண்ப்பால்) அது கூட கூப்பிட்டு வரும் அவன் ஆளு என்ன பார்த்த உடனே என்ன நினைக்குமுன்னு தெரியாது உடனே "உனக்கு டைம்ஆயுடுச்சில நீ போனு" அதை கிளப்பி விட்டுரும்.


ஒரு எச்சரிக்கை உணர்வு தான்

sakthi said...

டேய்..அரை மணி நேரம் தானே பேசப்போற சரிடாப்போ.,ஆமாம் மீனா எப்படி இருப்பா.."..நான்.


அது சரி

sakthi said...

"அதுக்கு இல்லை மச்சான் நீ தான் நம்ம செட்ல ரொம்ப தைரியசாலி,திறமையானவன்..எந்த பிரச்னை வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சமாளிப்ப அதான் சொல்றேன்.."
"..."..நான்.

ம்ம்ம்ம்

நடக்கட்டும் நடக்கட்டும்

இராகவன் நைஜிரியா said...

தங்களின் 25 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

என்னப்பா
அறிவாளி கிசோறு ...
முன்னே பின்னே பழக்கமில்லாதவனிடம் அறிவிரிருக்கான்னு கேக்குற?
நான் என் கருத்தை பகிர்ந்தது கவுதம் கிட்ட..
never again

நாகா said...

நைனா, நீ இம்பூட்டு நல்லவனா??

அபுஅஃப்ஸர் said...

//இப்ப சொல்லுங்க இவங்களுக்கு எல்லாம் என்ன பார்த்த எப்படிங்க தெரியுது.
//

என்னா நினக்க தோணுது மக்கா க்யூ கட்டி வந்து சொல்லுங்க.....இந்த பதிவை முழுதும் படிச்சிட்டு

வினோத்கெளதம் said...

@ பித்தன்..

//kenaiyannu un netthilaye eluthi ottirukkathu therinchipocchi pola.//

அப்படியா எழுதி ஒட்டி இருக்கு..கண்ணாடில பார்த்தா தெரியுலையே.

வினோத்கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//மீள்பதிவா வினோத்? ஏற்கனவே படிச்ச ஞாபகம்..:-)))//

கார்த்தி இல்லை ..இது புதுசு கண்ணா புதுசு..;)

வினோத்கெளதம் said...

@ KISHORE..
//நீ சொல்றத பார்த்த நீ ரொம்ப.... நல்ல....வன்னு... தெரியுது...//

நீ இழுத்து சொன்னாலும் அதான் கண்ணா உண்மை..

//எவ்ளவோ பண்ணி இருக்க இத பண்ண மாட்டியா ?//

பண்ணுறேன்..பண்ணுறேன்..ஒரு வழி பண்ணுறேன்.

//ஓசில கிடைக்குதுனா உலகத்துல எந்த மூலைக்கு வேனாலும் போனவன்னு நல்லா தெரியுது...//

ம்ம்ம்..அப்படி கூட சொல்லலாம்.

//நீங்க ரொம்ப டிசென்ட் போல இருக்கு...//

சொல்லி தான் தெரியுனுமா என்னா..

வினோத்கெளதம் said...

@ வால்பையன்..
//துபாய்ல இருந்து வரும்போது ஒரு அஞ்சுகிலோ தங்கத்த கைல புடிச்சிட்டு வந்துரு!//

அது மட்டும் போதுமா இல்லை வைரம், அபின் ,கஞ்சா இப்படி எதாவது..
இன்டெர்போல்ல மாட்டி விட்டுடிவிங்க போல ..:))

வினோத்கெளதம் said...

@ தேவன் மாயம்..
//நல்லா சொல்லியிருக்கீங்க நண்பரே!//

நன்றி தல..

வினோத்கெளதம் said...

@ ச.செந்தில்வேலன்..

//ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாம்மா//

அதான் தல உண்மை..:))

//நல்ல எழுதியிருக்கீங்க வினோத் :))/

நன்றி செந்தில்.

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன் வசந்த்

//அதான் சொல்லிட்டாங்கள்ள வினோத்...
பின்ன என்ன ?//

இப்படி சொல்லி சொல்லி தானே முதுகுல டன் கணக்குல டின் கட்டுரங்க..

வினோத்கெளதம் said...

@ sarathy

//ரகளை...
இனிமேலாச்சும் டெரரா இருக்க முயற்சி
பண்ணு வினோத்...//

அதுக்கு தான் நண்பா முயற்சி பண்ணுறேன்.

வினோத்கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

//இப்புடிதாங்க அந்த சீனு ராஸ்கல் பக்கத்து வீட்டு பொண்ண உஷார் பண்ணி
மாடிக்கு கூடிப்போய் .என்ன காவலுக்கு நில்லுன்னு சொல்ல.//

இப்படி தாங்க யாரயாச்சும் ஒருத்தன பிடிச்சி வச்சிக்கிரனுங்க இந்த லவ் பன்னுருவனுங்க..

//இவிங்களுக்கு நம்மளையெல்லாம் பாத்தா எப்புடி தெரியுதாம்?//

அதான் கார்த்தி தெரியுல..

வினோத்கெளதம் said...

@ Pappu ..
//வினோத் அண்ணே, உங்க ஊர்ல லேப் டாப் மலிவாமே!டாக்ஸ் கட்டாம ஒண்ணு வாங்கிட்டு வாங்களேன்!//

எவ்வளவோ பண்ணுறோம் இதை பண்ண மாட்டமா..

வினோத்கெளதம் said...

@ sakthi..

//அவ்வளவு தைரியசாலியா நீங்க//

ஊருக்குள்ள அப்படி ஒரு பேச்சு இருக்குங்க..:))

//ஒரு எச்சரிக்கை உணர்வு தான்//

நல்ல எச்சரிக்கை உணர்வு..

//அது சரி//

ஆனா கடைசி வரைக்கும் கண்ணுல காட்ட மாட்டனுங்க..அப்படி ஒரு கேரக்டர் இருக்கனு கூட தெரியாது ..:)

வினோத்கெளதம் said...

@ இராகவன் நைஜிரியா..
//தங்களின் 25 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே...//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தல..

வினோத்கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
//என்னப்பா அறிவாளி கிசோறு ...//

கார்த்தி கிஷோர் என்னது நண்பன் தான்..
என் மேல் இருக்கும் உரிமையில் உங்களையும் அவர் நண்பர் என்ற தோரணையில் சொல்லி விட்டார்..
நீங்கள் தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்..

வினோத்கெளதம் said...

@ நாகா
//நைனா, நீ இம்பூட்டு நல்லவனா??//

அப்படி தான் நைனா ஊராண்ட ஒரு பேச்சுக்கீது.

வினோத்கெளதம் said...

@ அபுஅஃப்ஸர் ..

//என்னா நினக்க தோணுது மக்கா க்யூ கட்டி வந்து சொல்லுங்க.....இந்த பதிவை முழுதும் படிச்சிட்டு//

க்யூல ஒழுங்கா நிக்கணும் சொல்லிபுட்டேன் ..அடிச்சிக்க பிடாது..:)

KISHORE said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

என்னப்பா
அறிவாளி கிசோறு ...
முன்னே பின்னே பழக்கமில்லாதவனிடம் அறிவிரிருக்கான்னு கேக்குற?
நான் என் கருத்தை பகிர்ந்தது கவுதம் கிட்ட..
never again//
மன்னியுங்கள் திரு. கார்த்திகேயன்... முன்ன பின்ன பழக்கம் இல்லாதவரிடம் அதிகபடியான உரிமை எடுத்ததை எண்ணி வருந்துகிறேன் .. உங்கள் கருத்தை கெளதம் கிட்ட பகிர்வதில் எந்த தவறும் இல்லை.. நீங்க தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தால் அதை யாரும் பொருட்படுத்த போவதில்லை.. ஆனால் இப்படி பொதுவாக ஒரு கருத்தை சொல்லும் போது இதை மற்றவர்களும் படிப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
i know.. i committed mistake.. it will happen never again..

KISHORE said...

machan u got "INTRESTING BLOG" award..
http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

பிரியமுடன்.........வசந்த் said...

இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

கலையரசன் said...

//இப்ப சொல்லுங்க இவங்களுக்கு எல்லாம் என்ன பார்த்த எப்படிங்க தெரியுது.//

மாமா மாதிரி இருக்குற..

சத்தியமா உன் போட்டாவை பார்த்தா,
சிதம்பரத்துல உள்ள என்னுடைய
மாமாவை பாக்குறது போலவே
இருக்குபா..
(பார்த்தா எப்படி இருக்குன்னுதானே கேட்ட?)

கலையரசன் said...

நைட்டே ஓட்டாச்சு!!

S.A. நவாஸுதீன் said...

எத்தனை பேர் கூப்பிட்டாலும் போறீங்களே. உங்கள பார்த்தா ரொம்ப நல்லவன்னு தெரியுது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

சுவாரசியமா இருக்கு வினோத்.

S.A. நவாஸுதீன் said...

sarathy said...

ரகளை...

இனிமேலாச்சும் டெரரா இருக்க முயற்சி பண்ணு வினோத்...

ஆமா. சாரதி வினோத்த எங்கயோ துணைக்கு கூப்பிடப்போர மாதிரி தெரியது.

S.A. நவாஸுதீன் said...

KISHORE said...

machan u got "INTRESTING BLOG" award..
http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ஆமா மீனா மேட்டர் கடைசியா என்னாச்சுன்னு சொல்லலியே வினோத்

தமிழ்ப்பிரியா said...

வினோத், உங்கள வச்சு காமெடி,கீமெடி பண்ணலயே?

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன் வசந்த்..

ஊக்கத்திற்கு நன்றி வசந்த் :))))))))

வினோத்கெளதம் said...

@ கலையரசன்..

//சத்தியமா உன் போட்டாவை பார்த்தா, சிதம்பரத்துல உள்ள என்னுடைய
மாமாவை பாக்குறது போலவே
இருக்குபா.. //

18 வயசுல உனக்கு ஒரு மாமா இருக்கறா ஆச்சரியமா இருக்கு..

//நைட்டே ஓட்டாச்சு!!//

எப்பா..கொஞ்சம் புரியுற மாதிரி வார்த்தைகளை பிரித்து போடு.

வினோத்கெளதம் said...

@ S.A. நவாஸுதீன்

//சுவாரசியமா இருக்கு வினோத்.//

நன்றி தல..

//ஆமா. சாரதி வினோத்த எங்கயோ துணைக்கு கூப்பிடப்போர மாதிரி தெரியது.//

ஏங்க..இதுக்கு அவசரம் நான் சவுதிக்கு எல்லாம் வரமுடியாது..:)

//ஆமா மீனா மேட்டர் கடைசியா என்னாச்சுன்னு சொல்லலியே வினோத்//

மீனாவுக்கு ஒரு மூணு நாளைக்கு முன்னாடி தாங்க கல்யாணம் ஆச்சு..ஆமாம் நடிகை மீனவ தானே கேட்டிங்க..

வினோத்கெளதம் said...

@ தமிழ்ப்பிரியா..
//வினோத், உங்கள வச்சு காமெடி,கீமெடி பண்ணலயே?//

ஏங்க அது நான் சொல்லி தான் தெரியனுமா..:))
வருகைக்கு நன்றிங்க..

நிலாமதி said...

அநியாயத்துக்கு அப்பாவியாய் இருகாயேடா என்னு சொல்ல தோனுது . இப்ப்டிஎலாம் பண்ணி உனக்கும் ஒரு நாள் வரும்ல .அப்போதுஜமாய்ச்சிடல்முங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ரொம்ப வெள்ளந்தியாக இருக்கீங்களே சகா..சரி உங்க வீட்டு அட்ரசை கொடுங்க பாண்டிச்சேரி வந்தா சரக்கு வாங்கி உங்க கிட்ட கொடுக்கணும் இல்ல.

வினோத்கெளதம் said...

@ நிலாமதி..
//அநியாயத்துக்கு அப்பாவியாய் இருகாயேடா என்னு சொல்ல தோனுது//

அதே தான்..

//இப்ப்டிஎலாம் பண்ணி உனக்கும் ஒரு நாள் வரும்ல .அப்போதுஜமாய்ச்சிடல்முங்க. வாழ்த்துக்கள்.//

நல்லா தான் இருக்கும்..
ரொம்ப நன்றிங்கோ..

வினோத்கெளதம் said...

@ இங்கிலீஷ்காரன்..
//ரொம்ப வெள்ளந்தியாக இருக்கீங்களே சகா..//

ஆமாங்க என்ன பண்றது அப்படியே வளர்ந்துட்டேன்..

//சரி உங்க வீட்டு அட்ரசை கொடுங்க பாண்டிச்சேரி வந்தா சரக்கு வாங்கி உங்க கிட்ட கொடுக்கணும் இல்ல.//

நீங்களுமா சகா..:))

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Muniappan Pakkangal said...

Nanbarhalukkaaha maada uzhaichu-ippaiyum appadithaan irukkiyaappaa ?

வினோத்கெளதம் said...

நன்றி டாக்டர் சார்..

கோபிநாத் said...

\\ஆனா அங்கபோனப்பிறகு தான் தெரியும் அவன் காதல் பிரகாசமா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு மாதிரி எரியறதுக்கு நம்மள 'ஃபியுஸ்' போன பல்பு ஆக்கி மூலையில உக்கார வச்சு இருப்பான்னு..\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ் ;(

நீயும் ஃபியுஸ் போன பல்பு தானா ராசா...;)

Anonymous said...

Very interesting.Idhu pola silrai paarthirukkiren."ippadi usuppethi usuppethiye udambai ranakalam pannittaangale" type-dhaanaa neengalum.