Monday, July 20, 2009

பதிவர் சந்திப்பு-துபாய்.

முதல் நாள் இரவு :

துபாயில் பதிவர் சந்திப்பு அண்ணாச்சி தலைமையில் நடைப்பெறுகிறது என்று பதிவை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன்..இந்த தடவையும் போய் விடுவது என்று..
முதல் நாள் இரவே ஆப்பரசன் ச்சே கலையரசன் அறையில் போய் தங்கிவிட்டேன்.நான் வருவதை முன்னாடியே தெரிந்து வைத்து இருந்ததால் என்னை எப்படி சீக்கிரம் துரத்தவது என்று அவர் செய்த பிரியாணியை கொடுத்து முதல் அஸ்திரத்தை எனக்கு எதிராக வீசினார்..அசருவேனே நான் அசால்ட்டா ஒரு முழு ப்ளேட் அடிச்சிட்டு அப்புறம்னு திரும்பினேன்..இரண்டாவது அஸ்திரமாக அவர் தனக்கு தானே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எல்லாம் தன்னுடுய கணினியை திறந்து எனக்கு போட்டு காட்டினர்..இந்த தடவை சற்று கிர் அடித்தாலும் சுதாரித்து கொண்டேன்..அதற்கு அப்புறம் எனக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் இங்கேயே தங்கி தொலை என்று மனதில் நினைத்து கொண்டார்..

பதிவர் சந்திப்பு நடந்த நாள்..

சாயங்காலம் கிளம்பி நின்று கொண்டு இருந்த என்னையும் கலையையும் சுந்தர்ராமன் சார் வந்து அழைத்து கொண்டார்..அவரின் வீட்டுக்கு சென்ற பின்னர் அங்கு இருந்து கிளம்பி கரமா பூங்காவை சென்று அடைந்தோம்..நாங்கள் வருவதற்கு முன்பே செந்தில்வேலனும், கார்த்திகேயனும் வந்து இருந்தனர்.

அதன்ப்பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கினர்..அண்ணாச்சி என்று சொன்னவுடன் நான் எதோ பெரியவர் என்று நினைத்து எதிர்ப்பார்த்து வந்தவுடன் பார்த்தால் வந்தவர் 'யூத்'..சரி தான் என்று நினைத்துக்கொண்டு வடை டப்பாவை பார்த்தால் கலை கையில் கெட்டியாக பிடித்து இருந்தார் ஆனால் குசும்பன் 'கால்' செய்து தான் வரும் வரை யாரும் அதை திறக்க கூடாது என்று சொல்லி இருந்ததால் அவர் வந்தப்பிறகு தான் திறந்தனர்.. அதன்ப்பிறகு விவாதிக்க தொடங்கினோம்..

முக்கியமான துளிகள் சில..

* இனிமேல் யாரும் மொக்கை போடுவதாக இருந்தால் கூட அதை வேறு தளத்தில் மொக்கை போடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

* புது பதிவர்கள் பழைய பதிவர்கள் என்று யாரும் கிடையாது..உங்களுக்கு எதாவது பண உதவி தேவைப்பட்டால் கூட நான் மூத்த பதிவர் தானே என்று எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் என்னை அணுகலாம் என்று அண்ணாச்சி ஒருஅதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

* குசும்பர் ரொம்ப வேர்த்ததால் அங்கே ஆசாத் அண்ணாச்சி எடுத்து வந்து ஒரு புஸ்தகத்தில் ஒரு புத்தகத்தை தேடி கண்டுப்பிடித்து ரொம்ப வேகமாக விசிறினார்..அந்த புஸ்தகம் எந்த புஸ்தகம்ன்னு சொல்லி பதிவு 'உலகில்' நான் 'விளம்பரம்' தேடி கொள்ள விரும்பவில்லை.

* "கிழை ராசா" எல்லாரையும் வளைத்து வளைத்து படம் பிடித்து கொண்டுஇருந்தார்..அதே மாதிரி படம் எடுத்த வேகத்தில் முதல் பதிவை போட்டு தான் 'கில்லி' என்பதை நிருபித்து விட்டார்..

* அய்யனார் எப்பொழுதும் போல் "எதாவது உருப்படியா பண்ணுவோம்" என்றுசொல்லி கொண்டு இருந்தார்..ஆனால் அதை 'என்னை' தவிர யாரும் காதுகொடுத்து கேட்டதாக தெரியவில்லை..

* பதிவர் நாகா இப்பொழுது தான் எழுத தொடங்கி..அவரின் எழுத்து நடையின்முலம் குசும்பன் மாதிரி சற்று வயதான,அனுபவ பதிவரில் இருந்து என்னைமாதிரி இளைய பதிவர் வரை கவர்ந்து உள்ளார் என்பதை ஒருமனதாக எல்லோரும் ஒத்துக்கொண்டோம்..அவரோடைய வாசிப்பனுபவம்(கொஞ்சம்சீரியஸ்ஸா தாங்க சொல்றேன்) தான் இதற்கு காரணம் என்று அய்யனார் சொன்னார்.

* செந்தில்வேலனின் எழுதிய 31 பதிவுகளில் 24 பதிவுகள் யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கும் பொழுதே அவரின் பதிவு தரத்தை நம்மால் உணர முடிகிறது என்று பேசிக்கொண்டோம்.

* தினேஷ் என்ற இலங்கை தமிழ் அன்பரும் வந்து இருந்தார்..அவரின் தமிழ் கேக்க அழகாக இருந்தது.

* ராஜேந்திரன் என்ற அன்பரும் இந்த பதிவர் சந்திப்பு விஷயத்தை தெரிந்துக்கொண்டு கலந்துக்கொண்டார்.

* நான் ஆதவன்,கோபிநாத் அப்புறம் சென்ஷியும் ஒரு குருப்பாக வந்துஇறங்கினார்கள்..நான் சென்ஷி வயதானவராக இருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு இருந்த எனக்கு பெரும் அதிர்ச்சி.. "சற்று வயதானவர்" அவ்வளவே மடை திறந்த வெள்ளம் போல் பேசி கொண்டு இருந்தார்..

* ஆசாத் அண்ணாச்சி நமக்கு தெரிந்ததில் ஒரு 10% தான் பதிவாக எழுத வேண்டும் என்றார்..அப்படி பார்த்ததால் நான் எல்லாம் ஒரு இடுகைக்கு ஒரு வரி மட்டும் எழுதிவிட்டு ஓடி விட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டேன்.

* ஆசிப் அண்ணாச்சி "யாராச்சும் எதாச்சும் பேசுங்கப்பா, அட வாய திறந்து பேசுங்கப்பா " என்று சொல்லியும் யாரும் பேச முன் வராததால் அவர் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தது போல் எனக்கு ஒரு பிரமை..(பிரமை தான் உண்மைஅல்ல.)

* படகு என்ற பெயரில் எழுதும் ஒரு பெண் பதிவரும் கலந்துக்கொண்டார்.

* ஆப்பு மற்றும் ஆப்பரசன் யாராக இருக்கும் என்று பயங்கரமாக விவாதம் நடைப்பெற்றது..கடைசி வரை என்னால் யூகிக்க கூட முடியவில்லை.

* கிளியனூர் இஸ்மத்
தன்னுடுய முந்தைய ப்ளாக் தொலைந்து விட்டது என்று வருத்தப்பட்டார். என்னோட ப்ளாக் கூட தொலஞ்சு போச்சு தல என்று சொல்ல நினைத்தேன் ஆனால் மறந்து விட்டேன்.

* ஜுபேர் அவ்வபொழுது அனைத்து பதிவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார்.

* சுல்தான் அண்ணாத்தே கடைசியா வந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார்..

* இன்னும் சில பதிவர்கள் க்ருப்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

* யார் பேராவது விடப்பட்டு இருந்தால் மனிக்கவும்.

டிஸ்கி: கலையரசன் சுந்தரராமன் சார் வீட்டிலேயே ஒரு வடை டப்பாவை காலி செய்து விட்டார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

48 comments:

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படங்கள் இல்லையா நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பாக இருந்திருக்கின்றது, வாழ்த்துகள் நண்பா

இராகவன் நைஜிரியா said...

அருமையான தொகுப்புங்க...

'இனியவன்' என். உலகநாதன் said...

வாழ்த்துக்கள்.

படங்களையும் போடுங்களேன்.

KISHORE said...

வாழ்த்துக்கள்.. படங்களுடன் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்..

கோபிநாத் said...

\நான் எதோ பெரியவர் என்று நினைத்து எதிர்ப்பார்த்து வந்தவுடன் பார்த்தால் வந்தவர் 'யூத்'..சரி தான்\\

ம்ம்ம்..ரைட்டு நீயும் ஒரு அமீரக பதிவர் தான் என்பதை நிருபித்துவிட்டாய் கண்ணே!!..;))

நல்லாயிருடே..;)

கோபிநாத் said...

\\முதல் நாள் இரவு :\\

ஒஒ...இந்த வடைக்கு நீ ராத்திரியே வந்துட்டியா ராசா ;))

\\ஆனால் அதை 'என்னை' தவிர யாரும் காதுகொடுத்து கேட்டதாக தெரியவில்லை..
\\

இது மட்டும் உண்மை என்றால் நீ இப்படி பதிவே போட்டுயிருக்கமாட்டாய் செல்லம் ;))

\\நான் சென்ஷி வயதானவராக இருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு இருந்த எனக்கு பெரும் அதிர்ச்சி.. "சற்று வயதானவர்" அவ்வளவே மடை திறந்த வெள்ளம் போல் பேசி கொண்டு இருந்தார்..
\\

காதுல ரத்தம் அதிகமா!!!..இதுக்கே மடை திறந்த வெள்ளம் என்றால் இன்னும் எம்புட்டு இருக்கு தெரியுமா!!! ;))

☀நான் ஆதவன்☀ said...

இங்க கும்மி அடிக்கலாமா வினோத்?

☀நான் ஆதவன்☀ said...

ஆகா ஒரு பதிவர் சந்திப்புக்கு இத்தனை பதிவுகள் வந்தது இது தான் முதல் தடவையா இருக்கும்..

ஆமா வளைச்சு வளைச்சு நீங்க படம் எடுத்தீங்களே? அத போடலையே?

வினோத்கெளதம் said...
This comment has been removed by the author.
டக்ளஸ்... said...

\\* இனிமேல் யாரும் மொக்கை போடுவதாக இருந்தால் கூட அதை வேறு தளத்தில் மொக்கை போடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.\\

எப்பிடி, Mobile BLogging ஆ...? இல்லை மொட்டை மாடியில உக்காந்துகிட்டா.. ?

\\
* புது பதிவர்கள் பழைய பதிவர்கள் என்று யாரும் கிடையாது..உங்களுக்கு எதாவது பண உதவி தேவைப்பட்டால் கூட நான் மூத்த பதிவர் தானே என்று எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் என்னை அணுகலாம் என்று அண்ணாச்சி ஒருஅதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.\\

அண்ணாச்சி, அந்த ஊரு ஒரு ரூவாய்க்கு இந்திய மதிப்பு எவ்ளோ..?

\\"கிழை ராசா" எல்லாரையும் வளைத்து வளைத்து படம் பிடித்து கொண்டுஇருந்தார்..அதே மாதிரி படம் எடுத்த வேகத்தில் முதல் பதிவை போட்டு தான் 'கில்லி' என்பதை நிருபித்து விட்டார்..\\

என்னாது, அவரு கில்லியா..?
அப்பறம் எப்டி உங்ககூட அவருக்கு செட்டாச்சு...?
:)

வினோத்கெளதம் said...

புகைப்படங்கள் எர்கனவே நண்பர்கள் நான் ஆதவன், கிழை ராசா, கிளியனூர் இசாத், குசும்பனார் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.என் Templateல் கொஞ்சம் பிரச்னை நண்பர்களே புகைப்படங்கள் இணைக்க முடியவில்லை.

//இங்க கும்மி அடிக்கலாமா வினோத்?//

இது என்ன கேள்வி..நம்ம எல்லாம் எதுக்கு வலைப்பக்கம் வைத்து இருக்கிறோம்..:)

Anonymous said...

ஆமாம் நானும் கேட்கிறேன் புகைப்படங்கள் இல்லையா வினு.... நல்லா இயல்பா தொகுத்து அளித்து இருக்கிறாய்...வினு..

கலையரசன் said...

//"எதாவது உருப்படியா பண்ணுவோம்"//

காதுகொடுத்து கேட்டுயிருந்தா.. இன்நேரம் பிளாக்கை டெலீட் பண்ணிட்டு ஓடிபோயிருப்பியே டா!!

கலையரசன் said...

//'உலகில்' நான் 'விளம்பரம்' தேடி கொள்ள விரும்பவில்லை//

இதுக்கு நீ "ஓப்ப்ப்பபனாவே" சொல்லியிருக்கலாம்..

//"யாராச்சும் எதாச்சும் பேசுங்கப்பா, அட வாய திறந்து பேசுங்கப்பா "//

அடிங்... உன்னையை பாத்துதான்டா அண்ணாச்சி 10 தடவ சொன்னாரு...
அங்க மூடிட்டு இங்க தொர தொறக்குது!!

டிஸ்கி: ரகசியத்தை சொன்னதுக்கு தண்டனை.. புதுசா 10 போட்டோ எடுத்துருக்கேன், இப்ப மெயில்ல அனுபுறேன் பாத்துட்டு சாவு!

ச.செந்தில்வேலன் said...

கலக்கல் பதிவு வினோத்.. அப்படியே நகைச்சுவையை அள்ளித் தெளித்துள்ளீர்கள்..

//
முதல் நாள் இரவே ஆப்பரசன் ச்சே கலையரசன் அறையில் போய் தங்கிவிட்டேன்.//

:))

//ஆசாத் அண்ணாச்சி நமக்கு தெரிந்ததில் ஒரு 10% தான் பதிவாக எழுத வேண்டும் என்றார்..அப்படி பார்த்ததால் நான் எல்லாம் ஒரு இடுகைக்கு ஒரு வரி மட்டும் எழுதிவிட்டு ஓடி விட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டேன்.
//

:))

//கலையரசன் சுந்தரராமன் சார் வீட்டிலேயே ஒரு வடை டப்பாவை காலி செய்து விட்டார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்//

கடைசியா வந்தவங்களுக்கு வடை கிடைக்கலையேப்பா...

சென்ஷி said...

//அதற்கு அப்புறம் எனக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் இங்கேயே தங்கி தொலை என்று மனதில் நினைத்து கொண்டார்..//

பார்த்து வினோத். இல்லைன்னா கலை அந்த அல் அய்ன் பார்ட்டிங்க கிட்ட சொல்லி மறுபடி வாட்டர் சர்வீஸ்ன்னு ஆப்பு அடிச்சுடப்போறாரு :)))


நல்லா எழுதியிருக்கீங்க வினோத்!

நாகா said...

வழக்கம் போல் வினோத். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

குசும்பன் said...

யோவ் பேசுய்யா பேசுய்யான்னு சொன்னா அப்படியே ஆஆஆஆன்னு வாய் பார்த்துக்கிட்டு இருந்துட்டு இங்க போட்டு கொடுக்குற???

இருடீ நீ செஞ்சுட்டு போன காரியத்துக்கு மகனே கையில மாட்டின உன்னை கொன்னேபுடுவேன்!!!

சென்ஷி said...

// குசும்பன் said...

யோவ் பேசுய்யா பேசுய்யான்னு சொன்னா அப்படியே ஆஆஆஆன்னு வாய் பார்த்துக்கிட்டு இருந்துட்டு இங்க போட்டு கொடுக்குற???

இருடீ நீ செஞ்சுட்டு போன காரியத்துக்கு மகனே கையில மாட்டின உன்னை கொன்னேபுடுவேன்!!!//

’பிரபல பதிவர்’ குசும்பனின் பகிரங்க எச்சரிக்கை :)

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேய் சூப்பர்பா....

நல்லா வர்ணிப்பு

அந்த வடையரசன கேட்டதா சொல்லவும்

வால்பையன் said...

//அந்த புஸ்தகம் எந்த புஸ்தகம்ன்னு சொல்லி பதிவு 'உலகில்' நான் 'விளம்பரம்' தேடி கொள்ள விரும்பவில்லை.//

கிசுகிசு நல்லா வருது ட்ரை பண்ணுங்க!

குசும்பன் சென்னை வரும்போது அதிர்ஷ்டம் இருந்தா தப்பிக்க முடியாதுன்னு சொல்றாங்களே!

கரவைக்குரல் said...

ஒரு வரி மட்டும் எழுதிவிட்டு ஓடி விட வேண்டியது தான் ஹிஹீஹிஹீ
எனக்கு அருகில் இருந்தாலும் ஒரே மாதிரித்தான் சிந்தனை என்ன?
என் தமிழில் என்ன தான் அழகு கண்டீர்களோ எனக்குத்தெரியவில்லை நண்பா
நன்றி பகிர்வுக்கு
வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆஹா!! நல்ல புள்ளை மாதிரி அமைதியா இருந்துட்டு ஊமை ஊரைக் கெடுக்கும் கதையா இப்படி போட்டு தாக்கிடுச்சே இந்த கைப்புள்ள :-)

வாட்டர் சர்வீசுக்கு சொல்லிட வேன்டியதுதான் :-)

ஆனாலும் நீங்க சொன்னதுலேருந்து இப்பல்லாம் அந்த 'பிரபல பதிவர்' கிட்ட பேசவே தயக்கமா இருக்குதுங்க" :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய சந்திப்பு.. வாழ்த்துகள் வினோத்..

கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI said...

தல...கலக்கிட்டீங்க...கோபமிருந்தா ரெண்டு அடி அடிச்சுடங்க...இப்படி இஸ்மத்க்கு இஷாத்ன்னு போட்டு பேரால அடிக்காதிங்க.....வாழ்த்துக்கள்

வினோத்கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன்..


நன்றி நண்பரே..
புகைப்படங்கள் மற்ற நண்பர்கள் வெளியிட்டு இருகிறார்கள் நண்பா..
என் பக்கத்தில் கொஞ்சம் பிரச்னை..
வேண்டும் என்றல் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்( இந்த கொடும வேறயா என்று தானே கேக்குறிங்க..:) )

@ இராகவன் நைஜிரியா..

நன்றி தல..

@ 'இனியவன்' என். உலகநாதன்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..


@ Kishore..

நன்றி கிஷோர் அவர்களே..

வினோத்கெளதம் said...

@ கோபிநாத்

//ம்ம்ம்..ரைட்டு நீயும் ஒரு அமீரக பதிவர் தான் என்பதை நிருபித்துவிட்டாய் கண்ணே!!..;))//

பின்ன தலையின் போர்ப்படை தளபதிகள் அல்லவா நாம்..:)

//ஒஒ...இந்த வடைக்கு நீ ராத்திரியே வந்துட்டியா ராசா ;))//

Public..Public..:))


//இது மட்டும் உண்மை என்றால் நீ இப்படி பதிவே போட்டுயிருக்கமாட்டாய் செல்லம் ;))//

அது தான் இருந்தாலும் என்ன பன்னுவது..

//காதுல ரத்தம் அதிகமா!!!..இதுக்கே மடை திறந்த வெள்ளம் என்றால் இன்னும் எம்புட்டு இருக்கு தெரியுமா!!! ;))//

மனுஷன் எதாச்சும் FMல வேலைக்கு சேர ட்ரை பண்ணலாம்..நல்ல வாய்ஸ்..:)

@ ☀நான் ஆதவன்☀

//ஆமா வளைச்சு வளைச்சு நீங்க படம் எடுத்தீங்களே? அத போடலையே?//

வெறும் Flash மட்டும் தாங்க அடிச்சேன்..:)

வினோத்கெளதம் said...

@ டக்ளஸ்...

//எப்பிடி, Mobile BLogging ஆ...? இல்லை மொட்டை மாடியில உக்காந்துகிட்டா.. ?//

நீ யோசிப்பனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு வெறித்தனமா யோசிப்பனு தெரியுல..

//அண்ணாச்சி, அந்த ஊரு ஒரு ரூவாய்க்கு இந்திய மதிப்பு எவ்ளோ..?//

13.75 காசு குத்துமதிப்பாக..

//என்னாது, அவரு கில்லியா..?
அப்பறம் எப்டி உங்ககூட அவருக்கு செட்டாச்சு...?//

கில்லி..அது ஒரு ல வந்த்ருச்சு..இல்ல நானாச்சும் அத சொல்ரதச்சும்..

வினோத்கெளதம் said...

@ தமிழரசி..

நன்றி தமிழ்..
புகைப்படங்கள் இணைப்பதில் கொஞ்சம் பிரச்னை அதான்.

@ கலையரசன்..

//இன்நேரம் பிளாக்கை டெலீட் பண்ணிட்டு ஓடிபோயிருப்பியே டா!!//

வாழ்க வளர்க..

//புதுசா 10 போட்டோ எடுத்துருக்கேன், இப்ப மெயில்ல அனுபுறேன் பாத்துட்டு சாவு!//

என் பாஸ்போர்ட் இருந்தா கொடுங்கப்பா நான் திரும்பி ஊருக்கே ஓடிட்டுரன்..

அது ஒரு கனாக் காலம் said...

இங்கே எதோ நடக்குது போல ... ஆஜர் ப்ளீஸ்

அது ஒரு கனாக் காலம் said...

....எங்க வீட்டு பக்கம் வாங்க

வினோத்கெளதம் said...

@ செந்தில்வேலன்

//கலக்கல் பதிவு வினோத்.. அப்படியே நகைச்சுவையை அள்ளித் தெளித்துள்ளீர்கள்..//

நன்றி செந்தில்வேலன்..:)

@ சென்ஷி..

நன்றி இளைய தளபதி சென்ஷி..

@ நாகா..

நன்றி நாகா.

வினோத்கெளதம் said...

@ குசும்பன்..

//இருடீ நீ செஞ்சுட்டு போன காரியத்துக்கு மகனே கையில மாட்டின உன்னை கொன்னேபுடுவேன்!!!//

பிரபல பதிவர் கைய்யால் மரணம் கிடைப்பதக்ற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..

@ சென்ஷி..

//’பிரபல பதிவர்’ குசும்பனின் பகிரங்க எச்சரிக்கை :)//

நீங்களே பாத்துக்குங்க..

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன் வசந்த்..

நன்றி வசந்த்..

@ வால் பையன்..

நன்றி வால்ஸ்..

//குசும்பன் சென்னை வரும்போது அதிர்ஷ்டம் இருந்தா தப்பிக்க முடியாதுன்னு சொல்றாங்களே!//

எதோ என்னால முடிஞ்சது..

@ கரவைக்குரல்..

நன்றி தினேஷ்..
உண்மையில் நீங்கள் பேசிய நடை அழகு..

வினோத்கெளதம் said...

@ ஆசிப் மீரான்

//நல்ல புள்ளை மாதிரி அமைதியா இருந்துட்டு//

மாதிரி எல்லாம் இல்லை தல அதான் உண்மை..:)

//வாட்டர் சர்வீசுக்கு சொல்லிட வேன்டியதுதான் :-)//

அப்படின என்ன தல..

//ஆனாலும் நீங்க சொன்னதுலேருந்து இப்பல்லாம் அந்த 'பிரபல பதிவர்' கிட்ட பேசவே தயக்கமா இருக்குதுங்க" :-)//

உங்களுக்கே இப்படினா எங்களுக்கு எல்லாம் எப்படி..:)

@ கார்த்திகைப் பாண்டிய..

நன்றி நண்பா..

@ கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI

//தல...கலக்கிட்டீங்க...கோபமிருந்தா ரெண்டு அடி அடிச்சுடங்க...இப்படி இஸ்மத்க்கு இஷாத்ன்னு போட்டு பேரால அடிக்காதிங்க.....வாழ்த்துக்கள்//

நன்றி தல..மாத்தி விடுகிறேன்..:)


@ அது ஒரு கனாக் காலம்..

கண்டிப்பா வரேன் சார்..

கீழை ராஸா said...

எல்லோரையும் வம்புக்கு இழுத்துட்டீங்க...ரசிக்கும் படி இருக்கிறது...வாழ்த்துக்கள்

srinivasan said...

Like a Minites of meeting..interesting too

ஜெகநாதன் said...

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதி​வைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

வினோத்கெளதம் said...

@ கீழை ராஸா ..

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி தல..

@ Srinivasan..

Thanks seenu for ur first visit..

@ ஜெகன்..

ரொம்ப நன்றிங்க..:)

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

sakthi said...

அருமையான பகிர்விற்கும் வாழ்த்துக்கள்

வினோத்கெளதம் said...

நன்றிகள் பல சக்தி..:))

Subankan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்!!!

ஆ.ஞானசேகரன் said...

நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வினோத்கெளதம் said...

தங்கள் அன்புக்கு எப்பொழுதும் கடமைப்பட்டு இருப்பேன் சுபங்கன் & ஞானசேகரன்..
நன்றிகள் பல..

Muniappan Pakkangal said...

Piantha naal vazhtukkal Vinoth gowtham.

ஜெகநாதன் said...

//ஆப்பு மற்றும் ஆப்பரசன் யாராக இருக்கும் என்று பயங்கரமாக விவாதம் நடைப்பெற்றது..கடைசி வரை என்னால் யூகிக்க கூட முடியவில்லை//
அது நீங்க இல்லியே???? சும்மா ஜாலிக்குத்தான் ​கேட்டேன்.
ஊக்கமும் உற்சாகமுமாய் இருந்திருக்கும் ​போல துபாய் பதிவர் சந்திப்பு! வாழ்த்துக்கள்!