முகம் எங்கும் வியர்வை துளிகள்..
"என்ன ஆச்சு.. ஏன் மூணு நாளா தொடர்ந்து இதே மாதிரி கனவு..."
புரியவில்லை ..
கடிகாரத்தை பார்த்தான் மணி 5:45.
இனிமேல் தூங்குவது கடினம் தான்..
பக்கத்தில் விமல் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான்.
சரி எதிர்ல போய் டீ சாப்பிட்டு வருவோம்.
எழுப்புலாம இவனை..வேணாம் தூங்கட்டும்.. நேத்து இரவு கூட லேட்டா தான்வந்தான்.
வெளியில் எழுந்து போனான்..சாலை அமைதியாக இருந்தது..
நாம் 8 மணிக்கு மேல் தினம் பார்க்கும் சாலை தானா இது என்று ஒரு சந்தேகம்..
எதிரில் ராஜா டீ ஸ்டால் இருந்ததை பார்த்து உறுதி செய்து கொண்டான்.
"அண்ணா ஒரு டீ"
"என்ன சிவா இவ்வளவு சீக்கிரம் கடை பக்கம்"
"தூக்கம் கலஞ்சிருச்சு அண்ணா அதான்"
"வேலை எல்லாம் எப்படிப்பா போது"
"அப்படியே போது அண்ணன் ஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்ல"
"ஊருக்கு போனியா"
"இல்ல அண்ணன் போய் 5 மாசத்துக்கு மேல ஆகுது பொங்கலுக்கு
போனதோடசரி இப்ப லீவ் எடுக்கறது கொஞ்சம் கஷ்டம்"
டீயை குடித்தான்.
டீயை குடித்து கொண்டே சிறிது பேப்பரை மேய்ந்தான்.
சற்று நேரத்தில் மனம் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தது.
ரூம் திரும்பிய பொழுது FM அலறி கொண்டு இருந்தது.
விமல் எதிரில் நின்று கொண்டு இருந்தான் .
" என்னடா சீக்கிரம் எழுந்துட்ட போல "
" ஆமாம் டா தூக்கம் கலஞ்சிருச்சு அதான் ..போய் டீ குடித்து வந்தேன் "
" என்னாச்சு நானும் கேக்கணும்னு நினைச்சேன் ஆளே 2 நாளா வித்தியாசமாஇருக்க "
"ஒன்னும் இல்லடா"
" நேத்து கூட கம்பெனில இருந்து சீக்கிரம் வந்துட்ட .. நீ ஆளே சரி இல்லையே "
"ம்ம் .. ரெண்டு நாளா கொஞ்சம் குழப்பம் அதான்"
" ஏன் ஆரண்யா கூட எதாச்சும் பிரச்சனயா "
" அதெல்லாம் ஒன்னும் இல்லடா..ஸ்மூத்தா தான் போய்கிட்டு இருக்கு"
" பின்ன என்ன பிரச்னை.."
" தொடர்ந்து மூணு நாளா காலைல ஒரே மாதிரி கனவுடா"
" என்ன கனவு "
" ரங்கபிள்ளை வீதி இருக்குல்ல அங்க ரோட்ல ஒரு ஆளு ரத்த வெள்ளத்துலஅடிப்பட்டு கிடக்குற மாதிரி அவன் மூஞ்ச சரியா பாக்க முடியுல இதான் முந்தா நேத்தி வந்த கனவு"
"டேய் இதே கனவு தான் மூணு நாளா வருதா என்ன.."
"இல்லடா நேத்து நீயும் நானும் அந்த தெருவுல போற மாதிரி ..உன்னோட பைக் கிழ விழுந்து கிடக்குது நீ கத்துற ..எனக்கு சரியா புரியுல "
விமல் திகிலடைத்து போய் நின்றான் .
" டேய் என்னை பத்தி ஒரு கனவு அதுவும் இதே மாதிரியா .."
" டேய் அது நீ இல்ல பயப்படதா"
" பயப்படுல..இருந்தாலும் காலைல கண்ட கனவு..இன்னிக்கு காலைல என்ன கனவு"
சிவா விமலை தீர்க்கமாக பார்த்தான் .
"இன்னிக்கும் அதே ரத்த வெள்ளம் தான்.. எல்லாம் பாக்குறாங்க ..பக்கத்துல ஒரேகூட்டம்..நம்ம ரூம் காலண்டர் ஜூலை 5 ..அக்ஷய திரிதை.."
"டேய் நம்ம வாரத்துக்கு ஒரு தடவை அந்த பக்கம் போறோம் ..டிவில வேற அடிக்கடி அக்ஷய திரிதை வரர்த்தால தங்க நகை வாங்கலையான்னு விளம்பரம் வேற ..அதோட பாதிப்பு தான் இது எல்லாம் ஒரு DEJA VU தான் விட்டு தள்ளுடா"
"இல்ல மச்சான் இதுக்கு முன்னாடி இது மாதிரி வந்ததே இல்ல ..இது எல்லாத்துக்கும் லிங்க் இருக்குற மாதிரியே ஒரு ஃபீல் டா "
"இங்க பாரு குழப்பிக்காத வெறும் கனவு தான் ..விட்டு தள்ளு..இன்னிக்குஆரான்யா கூப்டிக்கிட்டு பீச்க்கு போய்ட்டு வா எல்லாம் சரி ஆகிடும் "
"பாப்போம்.."
சிவா வேலைக்கு கிளம்பி போனான்.
வேலையின் பளுவால் ஏறத்தாழ எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு திரும்பி இருந்தான்.வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில்..
ஆரன்யாவிடம் இருந்து போன்.
பேசி முடித்ததும் ரிலாக்ஸ் ஆக இருந்தது.
ரூம்க்கு திரும்பி சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று நினைத்து கொண்டே விமலுக்கு கால் பண்ணினான்.
மொபைல் அணைத்து இருந்தான்..
"எத்தனை மணிக்கு வருவான்னு தெரியலையே.."
அவன் சாப்பிட்டு விட்டு தூங்கினான். நல்ல தூக்கம்.
"ஐயோ கடவுளே எவ்வளவு ரத்தம்"
"யாராச்சும் காப்பாத்துங்க ப்ளீஸ்.."
"கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.." சிவா கதறினான்.
"இந்த எழவு எதுக்கு நமக்கு வந்த வேலைய பாப்போம்.." பக்கத்தில் ஒரு பெண்.
இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்தது.
மொபைல் அலறியது..
சிவா திடுக்கிட்டு எழுந்தான்..
பக்கத்தில் விமல் தூங்கி கொண்டு இருந்தான்..
அலாரத்தை அணைத்தான்.
தொடர்ந்து நான்காவது நாள் இதே மாதிரியே..
என்ன ஆச்சு..ச்சே..இந்த கனவால நிம்மதி தான் போகுது..
இதுக்கு என்ன தான் தீர்வு..
விமலும் முழித்து கொண்டான்.
"என்னடா ஆச்சு.."
"ஒன்னும் இல்லடா"
"டேய் சொல்லு.. முகம் எல்லாம் பயங்கரமா வேர்த்து விட்டு இருக்கு..என்ன திரும்ப அந்த கனவா.."
"ஆமாம் டா.."
"என்ன அதே ரத்த வெள்ளம்..அக்ஷ்ய திரிதையா.."
"ம்ம்ம்.."
"இந்த டீவில போடுற விளம்பரத்தை முதல்ல நிறுத்தனும் "
சிவா காலெண்டரை பார்த்தான்..இன்னிக்கு..
"ஜூலை 5 ..ஞாயிறு..அக்ஷ்ய திரிதை..''
"டேய் இன்னிக்கு கடை எல்லாம் எத்தனை மணிக்கு ஓப்பன் பண்ணும்.." சிவா.
"இன்னிக்கு சண்டே..பொதுவா எல்லா கடையும் மூடி தான் இருக்கும்.. என்ன இன்னிக்கு அக்ஷ்ய திரிதை..அதனால நகை கடை எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் திறந்திரும்.." விமல்.
"சரி கிளம்பு.."
"எங்கடா.."..விமல்.
"ரங்கபிள்ளை வீதி"
" டேய்.. எதுக்கு டா.."
"இல்ல மச்சான் இது என்னனு தான் பாத்துருவோம்..வா போலாம்.."
"டேய்..இன்னிக்கு சண்டே..டீவி பாக்கலாம் டா..மேட்ச் வேற இருக்கு.."
"பயப்படுறியா என்ன.."
"யாரு நானா..சரி வா கிளம்புலாம்".. விமலுக்கு சற்று உதறலாக தான் இருந்தது.
இருவரும் விமலின் பைக்கில் ஏறி அமர்ந்தனர்..விமல் ஒட்ட சிவா பின்னால்அமர்ந்தான்.
ரங்கபிள்ளை வீதி..பெரும்பாலும் நகை கடை தான்..
நல்ல கூட்டம்..அக்ஷ்ய திரிதை முன்னிட்டு நகை கடைகளில்.
"இன்னிக்கு யாரயாச்சும் கூப்பிட்டு தர்மம் பண்ண அந்த புண்ணியம் பல மடங்கு பெருகும்னு சொல்லுவாங்க..ஆனா பாரு..இந்த தங்க நகை வியாபாரம் பண்ணுறவங்க இனிக்கு கால் பவுனு வாங்குனா கூட செல்வம் பல மடங்கு பெருகும்னு ஒரு பீட்ட போட்டு இதை கூட கமர்ஷியல் ஆக்கிடாங்க..அதனால நகை கடை எல்லாம் வருஷா வருஷம் கூட்டம்.."
சிவா விமல் சொன்னதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை.
"டேய் உங்கிட்ட தான் சொல்றேன்..நின்னுக்கிடே கனவு கானுரியாஎன்ன..இன்னிக்கு டைம் வேஸ்ட் இங்க வந்து நின்னுக்கிட்டு..
என்று சொல்லி முடிக்கும் முன்பே டமால் என்று ஒரு சப்தம்..
இவர்கள் நின்று கொண்டு இருந்த கடைக்கு 25அடி தள்ளி ரோட்டில் ஒரு லாரி ஒருவனை அடித்து போட்டு விட்டு
சென்று கொண்டு இருந்தது.
சிவாவும் விமலும் திகைத்து போய் அதிர்ச்சியில் அவன் அருகில் ஓடினர்..
சரியாக சைடு ஸ்டாண்ட் போடவில்லை என்பதால் விமலின் பைக் ரோட்டில் விழுந்தது.
அவன் அருகில் சென்று பார்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தான்.
அவனை சுற்றி ஒரு ஆறு பேர் தான் நின்று கொண்டு இருந்தனர்.
மக்கள் எல்லாம் கடையில் நின்றவாறே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.
சிவா ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தான்.
விமல் நிற்காமல் சென்ற லாரி நம்பரை குறித்து கொண்டான்.
எதிர் கடையில் இருந்து ஒரு பெண் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தால்.
"ஐயோ கடவுளே..வண்டிய எதிர்ல பார்க் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு போன்னாரே..அதுக்குள்ள..ப்ளீஸ் யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.."
"பாவம் புது மண தம்பதி.."
"நமக்கு எதுக்கு இந்த எழவு..வாங்க போலாம்.."..ஒரு நடுத்தர வயது பெண்மணி அவள் கணவனை கையை பற்றி இழுத்து கொண்டு இருந்தால்..
அதற்குள் டிராபிக் போலீஸ் அந்த இடத்திற்கு விரைந்து இருந்தார்.
ஆம்புலன்ஸ் வந்தது.
சிவாவும் ஆம்புலன்சில் ஏறி கொண்டான்..ஒரே ரத்த வெள்ளம்..அவன் மனைவியை பார்க்க முடியவில்லை..அவள் ஏறக்குறைய மயக்க நிலையில்இருந்தால்..
விமல் போலீசிடம் நம்பரை கொடுத்து விட்டு..பேசி விட்டு..ஆம்புலன்சை பின்தொடர்ந்தான்.
பொது மருத்துவமனை.
"பயப்படாதிங்க ஒன்னும் ஆகாது..உங்க வீட்டுக்கு போன் செஞ்சிட்டேன்..வந்துட்டு இருக்காங்க.."
அவள் எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லை.
டாக்டர் வெளியே வந்து சிவாவை அழைத்தார்.
"நீங்க யாரு ரீலேட்டிவா "..
"ஆமாம் சார் சொல்லுங்க.."
"தலையில பலமா அடிப்பட்டு இருக்கு..நிறைய ப்ளீட் ஆகி இருக்கு..ஒரு சின்னஆபரேஷன் பண்ணியே ஆகணும்.. ரத்தம் தேவைப்படுது..ஆனா பாருங்க blood bankல செக் பண்ணிட்டேன்..எங்க தொடர்புல இருக்குற எல்லா blood bankலையும்சொல்லி இருக்கேன்.. கிடைக்குல ரொம்ப Rare group.."
"என்ன குரூப் சார்.."
"O -Ve.."
" சார்God grace, நானும் O -Veதான்.."
"Really..very good. சீக்கிரம் லேப்க்கு போங்க..''
சிவா லேப்க்கு விரைந்தான்.
விமல் வெளியே கையை பிசைந்து கொண்டு இருந்தான்..
அதற்குள் அந்த பையனின் மற்றும் பெண்ணின் உறவினர்களும் வந்து அந்த இடத்தை உண்டு இல்லை என்று பண்ணி கொண்டு இருந்தனர்.
ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்து.."இனிமே ஒன்னும் பிரச்னைஇல்லை அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.."
அந்த பெண்ணின் உயிரும் திரும்பி வந்தது..
லேப்பில் இருந்து வெளியே வந்த சிவாவை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பற்றிகொண்டனர்.
எல்லாவற்றையும் முடித்து கொண்டு சிவா விமலை நோக்கி வந்தான்.
"டேய் என்னால நம்பவே முடியுலடா"..விமல்.
"ஆமாம் டா என்னாலையும் தான் ஆனா எதோ ஒரு விஷயம் தான் என்னை உன்னை இங்க இழுத்துட்டு வந்து இந்த நல்ல காரியத்தை பண்ண வச்சு இருக்கு..
அது Sixth sense,இல்ல Final destination, இல்ல Deja vuவோ..எதோ ஒன்னு..ஆனாஅந்த விஷயம் தான் ஒரு உயிரை காப்பாத்தி இருக்கு மச்சான்..
"நம்ம எல்லாத்தையும் மீறி எதோ ஒன்னு இருக்குல"..சிவா.
"ஆமாம்டா சத்தியமா"..
இருவரும் பைக்கில் ஏறி அமர்ந்தனர்.
சிவா ஒரு வாரம் கழித்து ஒரு வித மகிழ்ச்சியான அமைதியை அனுபவித்தான்.

25 comments:
நல்லாயிருக்கு கௌதம்..
எழுத்து நடை மெருகேறிக்கொண்டே
போகிறது...
வாழ்த்துகள் நண்பா..
ரோம்ப நல்லா இருக்கு கெளதம்... வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசேகரன்
super machan nalla iruku.. ippo ellam innum nalla eluthura
good machan
சலிப்பில்லாமல் எழுதி இருக்கீங்க கௌதம். ATM மின் தாக்கம் நீங்கள் அமைத்திருக்கும் நடை விருவிருப்பா இருக்கு.
ATM முன்ன பணம் எடுக்குற மிஷின்தானே!
அதோட தாக்கமாடா?
நல்லாயிருக்கு மக்கா.. இன்னும்
எத்தனை பதிவுதான் வச்சிருக்க?
அருமை நண்பா. நடையில் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு போவது நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
good ...very good ..keep it up
Kathai nalla irukku,ithu uttalakkadiyaa ?
@ சென்ஷி..
நன்றி தல..
@ sarathy..
//நல்லாயிருக்கு கௌதம்..
எழுத்து நடை மெருகேறிக்கொண்டே
போகிறது//
நன்றி நண்பா ஊக்கத்திற்கு..
ஆ.ஞானசேகரன்..
//ரோம்ப நல்லா இருக்கு கெளதம்.//
நன்றி நண்பரே தொடர் ஆதரவிற்கு..
@ Suresh
//super machan//
Thanks machan for ur support.:))
@ KISHORE
//good machan//
Thanks Machi..:)
@ ஆ.முத்துராமலிங்கம்..
//சலிப்பில்லாமல் எழுதி இருக்கீங்க கௌதம். //
நன்றி நண்பா.
ATM தாக்கம் இருக்கிறதா..ஆமாம் இல்ல..!
@ கலையரசன்..
//ATM முன்ன பணம் எடுக்குற மிஷின்தானே!
அதோட தாக்கமாடா? //
அது ஒரு தமிழ் படம் நண்பா..
உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை..
//நல்லாயிருக்கு மக்கா.. இன்னும்
எத்தனை பதிவுதான் வச்சிருக்க?//
இதுக்கே இப்படியா..
இன்னும் அக்கௌன்ட்ல நிறையா Balance இருக்கு..
@ S.A. நவாஸுதீன்..
//அருமை நண்பா. நடையில் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு போவது நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்//
நண்பரே தொடர் ஊகத்திற்கு நன்றி..
@ அது ஒரு கனாக் காலம்..
//good ...very good ..keep it up//
Thanks Sundar sir..
@ Muniappan Pakkanga.
//Kathai nalla irukku,ithu uttalakkadiyaa ?//
உத்தலக்கடி தான் தல..
உங்க கிட்ட இன்னும் forceசா எதிர்பாக்கறேன் :) நல்ல நடை..
நானும் O -Veதான்
நல்ல திருப்பம்!
நாங்கூட விமல் தான் புட்டுகுவானோன்னு நினைச்சிட்டேன்!
நல்ல வித்தியாசமான கதை வினோத்
அருமை
@ நாகா..
//உங்க கிட்ட இன்னும் forceசா எதிர்பாக்கறேன் :) நல்ல நடை..//
அடுத்த தடவை Full Forceல பண்ணறேன்..:)
@ பித்தன்..
//நானும் O -Veதான்//
Really.:!!
@ வால்பையன்..
//நல்ல திருப்பம்!
நாங்கூட விமல் தான் புட்டுகுவானோன்னு நினைச்சிட்டேன்!//
நன்றி வால்ஸ்..
@ sakthi..
//நல்ல வித்தியாசமான கதை வினோத்
அருமை//
நன்றி சக்தி..
கதையை திகிலாகக் கொண்டுபோய் ஒரு
திடீர் ட்விஸ்ட் கொடுக்காமல் பாசிட்டீவாக முடித்து உள்ளீர்கள்.
எல்லோரும் வழக்கமான திடீர் ட்விஸ்ட்
எதிர்பார்த்து ஏமாந்தி்ருப்பார்கள்.
ஆமாம் சார்..பாசிடிவாக முடிக்க வேண்டும் என்று தான் முடித்தேன்..
இந்தக் கதையால என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல எனக்கு.
ஆனா நல்லா முயற்சி பண்ணியிருக்கீங்க.
@ விக்னேஷ்வரி..
//இந்தக் கதையால என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல எனக்கு.//
கருத்து ஒன்றும் இல்லை..
நெகடிவா ஆரம்பிச்ச ஒரு கதை பாசிடிவ் நோக்கில் முடியுது அவ்வளவு தான்..
(நல்லவே சமாளிக்கிற வினோத் :) )
நண்பர் வினோத்
அருமையான சினிமா கத கட்டுரை பல நல்ல விஷயங்களை எழுதி வரும் தங்கள் வலையை இவ்வளவு நாள் பார்ராமல் போனேனே?
நல்ல பணி.
உங்களைபோல "COMPUTER SAVVY" கள் ,சமூகத்திற்கு மேலும் நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.நணபர் கலை அனுப்பிய படி துபாய் பதிவர்களை டேஷ் போர்டில் இணைக்கிறேன்.உங்கள் முகவரியை ஏற்கனவே இணைத்துவிட்டேன்.
நாளை உங்கள் விட்டுப்போன கதைகளை படிக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமா பெரிய எழுத்தாளராகிட்டு வரீங்க சார்........
நடை நல்லா இருக்கு...!!!
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..
ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பா..
அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம்..:))
@ செந்தழல் ரவி..
//கொஞ்சம் கொஞ்சமா பெரிய எழுத்தாளராகிட்டு வரீங்க சார்........
நடை நல்லா இருக்கு...!!!//
நிஜமா தான் சொல்றிங்களா..
நான் சீரியஸ்சவே எடுத்திக்கிட்டு நன்றி சொல்றேன்..:))
புதுமனை புகுவிழாவா?
நல்லாயிருக்கு டெம்ப்ளேட்.
நல்லாயிருக்கு கதை.உரையாடல்கள் சுவாரசியமாக உள்ளன. தொடர வாழ்த்துக்கள்! ஈஎஸ்பி பற்றிய கதையா இதை எடுத்துக்கிறேன்.
Post a Comment