Tuesday, June 23, 2009

நகைச்சுவை நடிகைகள் பற்றி ஒரு சின்ன பார்வை..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் உள்ளார்கள்..ஆனால் நகைச்சுவை நடிகைகள் என்று பார்க்கும் பொழுது அவர்களின் பட்டியல் சிறியதே..நடிகைகள் நடிப்பதற்கே வாய்ப்பு குறைவாக உள்ள நம் படங்களில் சில நடிகைகள் நகைச்சுவையின் முலம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தங்களுக்கு என்று தனி முத்திரை பதித்தனர்..அப்படி நான் பார்த்த என்னை கவர்ந்த நகைச்சுவை நடிகைகள் பற்றியும் நகைச்சுவை காட்சிகள் பற்றிய ஒரு தொகுப்பு தான் இது..

இந்த லிஸ்டில் யாரை கேட்டாலும் கண்டிப்பாக அவர்கள் சொல்லும் முதல் பெயர் இவரின் பெயராக தான் இருக்கும்..நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்து தனித்து நிற்பவர்..ஆம் ஆயிரம் சினிமாவிற்கு மேல் கண்ட நம் "ஆச்சி" மனோரமா தான் அவர்..


அற்புதமான நடிகை..நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்ப்படுத்தி மக்கள் மனதில் அழிய இடம் பெற்றவர்.. நாகேஷ் தொடங்கி பல நகைச்சுவை நடிகர்களோடு இணைந்து நடித்து விட்டார்..
இடைப்பட்ட காலத்தில் சின்ன தம்பிக்கு பிறகு என்று நினைக்கிறேன்..அம்மா வேடம் என்றால் மனோரமா தான் என்ற நிலைமையை ஏற்படுத்தியவர்..

சில படங்களில் பாடியும் உள்ளார்..அவரோடைய திறமைக்கு சான்றாக எனக்கு தெரிந்து ரெண்டு பாடல்கள் சொல்வேன்.."வா வாத்தியாரே வூட்டாண்டா..நீ வரான்காட்டி நான் விட மாட்டேன்"..படம் பெயர் தெரியவில்லை..
அப்புறம் மே மாதம் படத்தில் வரும் "மெட்ராஸ்சை சுத்தி காட்ட போறேன்" பாடலில் இடையில் வரும் அந்த குரல் ..
இந்த பாடல்கள் உடனடியாக நியாபகத்தில் வரும்..

படம் என்று எடுத்துக்கொண்டால் சொல்லிகொண்டே போகலாம்..
ஆனால் உண்மையில் "தில்லானா மோகனம்பாள்" படத்தில் வரும் அந்த கதாப்பாத்திரம் "ஜில் ஜில் ரமணி" தான் மாஸ்டர் பீஸ்..கொஞ்சம் ஏமாந்து இருந்தால் சிவாஜி பத்மினி இவர்களை எல்லாம் தன் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு இருப்பார்..அவ்வளவு படு இயல்பாக அந்த பாத்திரத்தை கையாண்டிருப்பார்..
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் அம்மாவாக அவர் சொல்லும் வசனம் "அய்யோயோ அய்யோ"..அந்த வசனம் மறக்க முடியுமா..அப்புறம் நடிகன் படத்தில் அட்டகாசம் செய்து இருப்பார்..பின் "பாட்டி சொல்லை தட்டாதே" படத்தின் பிரதான பாத்திரமே இவர் தான்..
"சம்சாரம் அது மின்சாரம்"..படத்தில் அவர் சொல்லும் "கம்முனு கிட" இன்று வரை நம் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது..

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் அவர் படத்தை பற்றி சொல்வது என்றால்..

கோவை சரளா :


மனோரமாவுக்கு பிறகு நமக்கு தெரிந்து நல்ல நகைச்சுவை நடிகையாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் "கோவை சரளா" மட்டுமே..
ஆச்சி மாதிரி பலத்தரப்பட்ட கேரக்டர்கள் இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த பாத்திரத்தை எல்லாம் அழகாகவே கையாண்டார்..
கமல் இவரை சதி லீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக போட்டப்பொழுது அனைவரும் ஆச்சரியப்பட்டனர் ஆனால் கமல் இவரின் முழு திறமையும் அறிந்தே இந்த கதாப்பாத்திரத்தை அவருக்கு கொடுத்தார் என்று படம் வெளி வந்தப்பின் அனைவரும் தெரிந்து கொண்டனர்..தன்னுடுய அலட்சியமான உடல் மொழியாலும்,
நக்கலான கோவை வட்டார மொழி வழக்கிலும் அந்த படத்தில் நகைச்சுவையில் பின்னி இருப்பார்..
அதன் பிறகு வடிவேலோடு இணைந்து நடித்த பல படங்கள் இவருக்கு பெயர் வாங்கி தந்தன..மாயி படத்தை உதாரணத்திற்கு சொல்லலாம்..இரண்டு பேருக்கும் கவுண்டமணி செந்தில் மாதிரி இவர்களின் டைமிங் ஓரளவுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது..

விவேக் கூட சாஜகான் படத்தில் வரும் அந்த பிச்சைக்காரி பாத்திரம் மறக்க முடியுமா..
அப்புறம் தெலுங்கு பக்கம் கொஞ்ச நாள் வலம் வந்தார்..இன்று வரை நடித்து கொண்டு தான் இருக்கிறார்..

இவர்கள் இருவரை தவிர்த்து நகைச்சுவை நடிகைகளாக மட்டும் மற்றவர்களை அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினம்..
இருந்தும் இவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னை வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் தன் நடிப்பின் முலம் வெளிப்படுத்தி கொண்டவர் காந்திமதி..


நல்ல உடல் மொழி, அலட்சியமான பேச்சு , அசால்ட்டான பார்வை என்று பல படங்களில் வந்து உள்ளார்..குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "சின்ன தம்பி பெரிய தம்பி" படத்தில் வரும் பாத்திரம் நல்ல டைமிங்கோடு செய்து இருப்பார்..அப்புறம் மண் வாசனை படத்தில் வரும் வயதான கேரக்டர் இதுவும் பெயர் வாங்கி தந்தது..

முத்து,விருமாண்டி போன்ற படங்களிலும் குறிப்பிடும் படியான பாத்திரங்களில் வந்து போனார்..

இதன் பிறகு நியாபகத்தில் வருவது ஊர்வசி மட்டுமே..அவரும் நகைச்சுவை நடிகை மட்டும் அல்ல..கதாநாயகியாக பல படங்களில் நடித்து உள்ளார்..


அதுவும் "வனஜா கிரிஜா " படத்திற்கு பிறகு கேயார் இயக்கத்தில் இவர் நடித்து வந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன..எல்லா படத்திலும் தனக்கு என்று ஒரு பாணியை கையாண்டிருப்பார்..குறிப்பாக பேசும் விதம் ஒரு மாதிரி மழலைத்தனம் கலந்து இருந்ததால் அப்பொழுது சின்ன பசங்க மத்தியில் நல்ல ரீச் ஆனார்..அப்புறம் மகளிர் மட்டும் கேரக்டர் கூட சொல்லலாம்..
அதன் பிறகு ஆளை காணவில்லை..
இவர் நினைத்தால் இப்பொழுது கூட ஒரு குணசித்திர நடிகையாக ஒரு ரவுண்டு வரலாம்..


டிஸ்கி: வேறு யாரவது குறிப்பிடும் படியான நடிகை என்றால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்துங்கள் NSK அவர்களின் மனைவி மதுரம் கூட நகைச்சுவை நடிகை தான் ஆனால் அந்த அளவுக்கு அவர்களில் படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை..

37 comments:

S.A. நவாஸுதீன் said...

நான்கு முதல்வர்களுடன் (அறிஞர் அண்ணா, கலைஞர், M.G.R., ஜெயலலிதா) நடித்த பெருமை நம்ம ஆச்சிக்குதான் சேரும். இதில் அண்ணாவுடனும், கலைஞருடனும் மேடை நாடாகத்தில் நடித்திருக்கிறார், இது ஒரு விழாவில் கலைஞர் சொன்னது)

வினோத் கெளதம் said...

Thanks for ur Information Nawas sir..:))

கண்ணா.. said...

நல்ல அலசல்..வினோத்..

ஆனா ஆச்சி மனோரமா, கோவை சரளா, ஊர்வசின்னு பழைய டேஸ்ட்ல போற.....

இந்த வார அழகின்னு சப்ப பிகர் வேகா போட்டோ போட்ருக்க....

என்னாச்சுமா..? அலைன் அந்த அளவுக்கா காஞ்சு போய் கிடக்கு..?

வால்பையன் said...

//"வா வாத்தியாரே வூட்டாண்டா..நீ வரான்காட்டி நான் விட மாட்டேன்"..படம் பெயர் தெரியவில்லை..//

டோண்டு சார் பதிவில் இந்த கேள்வியை போடுங்கள், பதில் உடனே கிடைக்கும்!

வால்பையன் said...

காந்திமதி ஒருபடத்தில் சுருளிராஜனுக்கு ஜோடியாக வருவார், சுருளிராஜன் கஞ்சனாக நடித்திருப்பார் அதுவும் நல்லாயிருக்கும்!

வால்பையன் said...

சர்மிளி என்ற நடிகை சமீபத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக சக்கை போடு போட்டவர்,

வினித் நடத்த படமொன்றில்(ஆவாரம்பூ!?) பயில்வான் ரங்கநாதனுக்கு மனைவியாகவும், கவுண்டமணிக்கு ஆசை நாயகியாகும் வருவார். அவரது பல படங்கள் அவர் கலைக்கு திறந்தே செய்த சேவையை பாராட்டும்!

(என்னா சைஷுப்பா)

வினோத் கெளதம் said...

@ கண்ணா
//நல்ல அலசல்..வினோத்//

நன்றி கண்ணா..

//இந்த வார அழகின்னு சப்ப பிகர் வேகா போட்டோ போட்ருக்க.//

சினிமாத்தனம் இல்லாத ஒரு அழகு..அதுக்காக சப்ப பிகர்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்..

//என்னாச்சுமா..? அலைன் அந்த அளவுக்கா காஞ்சு போய் கிடக்கு..?//

காஞ்சி போய் கிடக்குறது உண்மை தான்..

வினோத் கெளதம் said...

@ வால்பையன்..

//டோண்டு சார் பதிவில் இந்த கேள்வியை போடுங்கள், பதில் உடனே கிடைக்கும்!//

போட்டா போச்சு..

//காந்திமதி ஒருபடத்தில் சுருளிராஜனுக்கு ஜோடியாக வருவார், சுருளிராஜன் கஞ்சனாக நடித்திருப்பார் அதுவும் நல்லாயிருக்கும்!//

மாந்தோப்பு கிளியே..?!

//சர்மிளி என்ற நடிகை சமீபத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக சக்கை போடு போட்டவர்,//

ஆமாம் நிறைய படங்களில் மிக பெரிய கலை சேவைகள் புரிந்தார்..
கிஷோர் அவன் வீட்டுல அவங்களோட பெரிய சைஸ் படம் எல்லாம் மாட்டி இருப்பான்..

கலையரசன் said...

பழைய லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்

டி பி முத்துலட்சுமி
ஈ வி சரோஜா
சச்சு
கல்பனா

புதிய லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்

ஆர்த்தி
தேவதர்ஷினி
தீபா வெங்கட்

லூசுதனமான கேரக்டரில் நடித்த நடிகைகளின் லிட்ஸ் தரமுடியுமா வினோத்?

குமரை நிலாவன் said...

நல்ல அலசல் நண்பா

வினோத் கெளதம் said...

@ கலையரசன்..
//பழைய லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்

டி பி முத்துலட்சுமி
ஈ வி சரோஜா
சச்சு
கல்பனா..//

இவர்கள் மனோரமா காலத்தில் இருந்தாலும் நம்மால் சுலபமாக நினைவு கூற முடிவது ஆச்சி மட்டும் தானே..

சச்சு-காதலிக்க நேரமில்லை
டி பி முத்துலட்சுமி-?
ஈ வி சரோஜா-கல்யாண பரிசு.
கல்பனா-யார்..?

புதிய லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்

//ஆர்த்தி
தேவதர்ஷினி
தீபா வெங்கட் //

இவங்க எல்லாம் நடிக்கிறாங்க அவ்வளவு தான்..ஆர்த்தி OK போக போக தான் பார்க்க வேண்டும்..

தேவதர்ஷினி-பார்த்திபன் கனவு மட்டும் தான் நியாபகத்தில் உள்ளது..

//லூசுதனமான கேரக்டரில் நடித்த நடிகைகளின் லிட்ஸ் தரமுடியுமா வினோத்?//

எல்லாமே அப்படி தானே நடிக்குதுங்க..நந்தா,பிதாமகன் லைலா ஆரம்பிச்சு வச்சது இன்னிக்கு வரைக்கும் தொடறது..

வினோத் கெளதம் said...

@ குமரை நிலாவன்
//நல்ல அலசல் நண்பா//

நன்றி நண்பா..

kishore said...

அருமையான பதிவுடா..
எல்லோரும் சொன்ன மாதிரி.. நிறைய நகைசுவை நடிகைகள் நம்ம தமிழ் சினிமாவில் இருந்து இருக்கிறார்கள் இப்போதும் இருகிறார்கள் .. அவர்களுக்கு தங்கள் திறமைய வெளிப்படுத்த சரியான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை...

எனக்கு தெரிந்து சச்சு, காந்திமதி, s.n. லக்ஷ்மி(மகாநதி படத்தில் பாட்டியாக வருவார் .. ).. அப்பறம் ஒரு நடிகை பெயர் தெரியவில்லை...தங்கவேலு கூட நடித்திருப்பார்... சப்பாத்தி செய்வது பற்றி அவர் சொல்ல "அதான் எனக்கு தெரியுமே "என்று சொல்லி கொண்டே இருப்பார்...

இருந்தாலும் கோவை சரளா மற்றும் ஆச்சி இருவரும் நன்றாக மக்களிடம் ரீச் ஆனவர்கள்...
கமலஹாசன் முடிந்த வரை... மனோரமா, s.n. லக்ஷ்மி. காந்திமதி.. இவர்கள் மூவரில் ஒருவரை தன் படத்தில் பயன்படுத்தி கொள்வார்...

பெரிய பெரிய நடிகார்கள் கஷ்டபட்டு ரசிகர்களை சிரிக்க வைக்க முயலும் போது.. இவர்கள் "ஜஸ்ட் லைக் தட்" வந்து அசத்தி பெயர் வாங்கிடுவாங்க...

அதிலும் "ஆச்சி" என்றுமே ஒரு சகாப்தம்...

kishore said...

//ஆமாம் நிறைய படங்களில் மிக பெரிய கலை சேவைகள் புரிந்தார்..
கிஷோர் அவன் வீட்டுல அவங்களோட பெரிய சைஸ் படம் எல்லாம் மாட்டி இருப்பான்..//
அவங்க சைஸ் போட்டோ மற்ற அளவுக்கு எங்க வீடு பெருசு இல்ல நண்பா...

☀நான் ஆதவன்☀ said...

////"வா வாத்தியாரே வூட்டாண்டா..நீ வரான்காட்டி நான் விட மாட்டேன்"..படம் பெயர் தெரியவில்லை..//

"பொம்மலாட்டம்" என்று நினைக்கிறேன். ஜெய்சங்கர் தான் கதாநாயகன்

sakthi said...

அருமையான பதிவு

ஆ.சுதா said...

நல்ல அலசல் வினோத்.
அருமையான தொகுப்பு.

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாருமே நகைச்சுவை திலகங்கள்

அழகான விரிவான பதிவு வினோத்

அது ஒரு கனாக் காலம் said...

லேட்டாயிடுச்சு வரதுக்கு ....வோட்டை அப்பயே போட்டுட்டேன்

நல்லா இருக்கு, ஆனால் குமாரி சச்சுவை மறந்துடீங்களே, கிட்ட தட்ட மனோரமா மாதரியே நிறைய படம் , அதுல நிறய நல்ல காமிடி படம் பண்ணிருக்காங்க ( காதலிக்க நேரமில்லை ).... இப்ப படத்ல காணோம், ஆனா சின்ன திரைல வராங்கன்னு நினைக்கிறேன் ...

வினோத் கெளதம் said...

@ Kishore..
//கமலஹாசன் முடிந்த வரை... மனோரமா, s.n. லக்ஷ்மி. காந்திமதி.. இவர்கள் மூவரில் ஒருவரை தன் படத்தில் பயன்படுத்தி கொள்வார்...//

ஆம் கமல் முடிந்தவரை தன்னுடுய படங்களில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்..

//அவங்க சைஸ் போட்டோ மற்ற அளவுக்கு எங்க வீடு பெருசு இல்ல நண்பா...//

ஹா ஹா ஹா..

நன்றி நண்பா விரிவான பின்னுடதிற்கு..

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀..

//"பொம்மலாட்டம்" என்று நினைக்கிறேன். ஜெய்சங்கர் தான் கதாநாயகன்//

நன்றி நண்பா..
வருகைக்கும் தகவலுக்கும்..

வினோத் கெளதம் said...

@ sakthi..

//அருமையான பதிவு//

நன்றி சக்தி..

வினோத் கெளதம் said...

@ ஆ.முத்துராமலிங்கம்..

//நல்ல அலசல் வினோத்.
அருமையான தொகுப்பு.//

நன்றி நண்பா..

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன் வசந்த்..

//எல்லாருமே நகைச்சுவை திலகங்கள்
அழகான விரிவான பதிவு வினோத்//

ஆம் நண்பா எல்லோரும் நல்ல நடிகைகள்..நன்றி..

வினோத் கெளதம் said...

@ அது ஒரு கனாக் காலம்..
// லேட்டாயிடுச்சு வரதுக்கு ....வோட்டை அப்பயே போட்டுட்டேன் //

நன்றி சார்..:)

//நல்லா இருக்கு, ஆனால் குமாரி சச்சுவை மறந்துடீங்களே, கிட்ட தட்ட மனோரமா மாதரியே நிறைய படம் , அதுல நிறய நல்ல காமிடி படம் பண்ணிருக்காங்க (//

ஆமாம் சார் அவங்கள எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியுல..அருமையான நடிகை..

அப்புறம் இட்லி எல்லாம் கொண்டு வந்திங்கன்னு கேள்விப்பட்டேன்..நமக்கு இல்லையா..:))

Muniappan Pakkangal said...

Nalla pathivu Vinoth Gowtham.Sachcu & Maadahavi need mention.I've posted an article on Comedy in tamil cinema abt male & female comedy actors in my very old post.

ஷண்முகப்ரியன் said...

நகைச்சுவை நடிகைகளில் தமிழை மிஞ்சி நான் வேறெங்கும் பார்த்ததில்லை..
நல்ல பதிவும்,பின்னூட்டங்களும்,வினோத்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

what is you name?

my name is poongavanam

வசனத்தை நினைவு படுத்துங்களேன் தல....,

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் நண்பா

வினோத் கெளதம் said...

@ Muniappan..

THanks sir..yA, I forgot to mention abt sachu..

வினோத் கெளதம் said...

@ ஷண்முகப்ரியன்..
//நகைச்சுவை நடிகைகளில் தமிழை மிஞ்சி நான் வேறெங்கும் பார்த்ததில்லை..//
ஆமாம் சார் உண்மை தான் தமிழில் இருப்பதை போல் வேறு மொழியில் இருக்கிறார்கள என்பது சந்தேகமே..

//நல்ல பதிவும்,பின்னூட்டங்களும்,வினோத்./

நன்றிகள் பல..

வினோத் கெளதம் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)..

//what is you name?
my name is poongavanam
வசனத்தை நினைவு படுத்துங்களேன் தல....,//

எந்த படம் தல..ஆனா இந்த வசனம் அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கு..

வினோத் கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன்
//நல்ல அலசல் நண்பா//

நன்றி நண்பா..

IKrishs said...

Manorama saravar sundaram la rangarao,nagesh kilapi iruppangha..Yenna porutha sachu comediyangalukku jodi avlodhan..Muthulaksmi "arivali" padathula pinni iruppangha..Devadharshini "Ramani vs Ramani" la yum,"annamalai" serial la yum comedy la kalaki iruppangha..Iswarya(lakshmi daughter) kooda comedy nalla pannuvangha...(petigalin podhu )...

UM.krish

Unknown said...

சம்சாரம் அது மின்சாரம் வேலைக்காரி பாத்திரம் விட்டுட்டிங்களே.... தெலுங்கில் சொவ்கார் ஜானகி நடித்திருப்பார் அந்த பாத்திரத்தில். ஆனால் மனோரமா மாதிரி இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.

வினோத் கெளதம் said...

@ UM.krish..

//Devadharshini "Ramani vs Ramani" la yum,"annamalai" serial la yum comedy la kalaki iruppangha..//

ரமணி Vs ரமணில தேவதர்ஷினி இருந்தங்கள..சரியாய் நியாபக படுத்த mudiyavillai நண்பா..ஆனால் அண்ணாமலையில் தேவதர்ஷினி நடிப்பு கொஞ்சம் அதிகமான Overacting போல் தோன்றியது எனக்கு..

//Iswarya(lakshmi daughter) kooda comedy nalla pannuvangha...(petigalin podhu )...//

ஆமாம் ஐஸ்வர்யா நல்லா காமெடி பண்ணுவாங்க ஆனால் அவரை யாரும் சரியாக பயன்ப்படுத்தி கொள்ளவில்லை..அதுவும் நியூ படத்தில் அவங்களோட Rough ஹஸ்கி வாய்ஸ்ல இழுத்து இழுத்து பேசுவாங்க சரி காமெடியா இருக்கும்..

தகவலுக்கு நன்றி நண்பா..

வினோத் கெளதம் said...

@ Krishna Prabhu ..

//சம்சாரம் அது மின்சாரம் வேலைக்காரி பாத்திரம் விட்டுட்டிங்களே.... //

ஹா..நிஜமா இந்த படத்தை நான் சேர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்..ஆனால் வேகமாக போஸ்ட் பண்ணியதால் மறந்து விட்டேன்..சேர்த்து விடுகிறேன்..:)

//தெலுங்கில் சொவ்கார் ஜானகி நடித்திருப்பார் அந்த பாத்திரத்தில். ஆனால் மனோரமா மாதிரி இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.//

நான் Telugu version பார்க்கவில்லை நண்பா..ஆனால் தில்லு முல்லு படத்தில் ஜானகி பிரமாத படுத்தி இருப்பார்..:)