Saturday, June 20, 2009

தளபதிக்கு தலயின் சார்பில் வாழ்த்து..


http://www.extramirchi.com/wp-content/uploads/2007/11/vijay_27main.jpgஅண்ணாத்தே வணக்கம்,

நான் தான் தல ரசிகன் பேசுறேன்..

முதல்ல இந்தா வாழ்த்து புடி..நீ இன்னும் பல ஆண்டுகள் வாழனும்..இன்னும் நிறையா வெற்றி படங்கள் தரனும்..

என்னடா தலயோட பேன் அப்படிங்கிறான் நம்மள வாழ்த்துரானே அப்படின்னு பாக்குறியா..
தல பாலிசி தான்ப்பா நமக்கும்..யாரா இருந்தாலும் நல்லா இருக்கணும் என்னிக்கும் சந்தோசமாகினும்....

நீயும் தலையும் இப்ப நல்லா தோஸ்தாகிறீங்க..பாக்க சொல்ல சந்தோசமா தான்கீது..ஆனா பாரு நீங்க ரெண்டு பெரும் கட்டி பிடிச்சு போஸ் கொடுத்தாலும் அது இன்னமோ உன் ரசிகர்களும், நம்ம தல ஆளுங்களும் கட்டி பிடிச்சு உருண்ட தான்ப்பா ஒரு மன திருப்தி..
உன் படம் ரிலீஸ் ஆகா சொல்ல நாங்க சீண்டுறது, இங்க ரிலீஸ் ஆகா சொல்ல அங்க வெறுப்பு ஏத்துறது அது ஒரு குஜால் தான்..

சரி எதோ சொல்ல வந்து எங்கயோ போறன் பாரு..அது இன்னமோ உன்னை பத்தி இப்படி சொல்றப்ப எனக்கு கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது..என்ன மேட்டர்ன்னு கேக்குறியா..
அப்பா உதவி இல்லாமா நீ இந்த அளவுக்கு வந்துருக்க முடியாதுன்னு..அது எல்லாம் சும்மா உன்ன வெறுப்பேத்த சொல்றது அவ்வளவு தான்..

எத்தனையோ பேரு..அவங்க அப்பா ஹெல்ப் பண்ணியும் இன்னும் பப்பு வேலைக்கு ஆகாம இருக்காங்க..எதோ ஆரம்பத்துல உனக்கு உன் நைனா சப்போர்ட் கொடுத்து இருக்கலாம்..ஆனா அதுக்கப்புறம் வந்தது எல்லாம் உன் திறமை தான் பாஸ்..

எத்தனை பேன், சின்ன பசங்கள்ள இருந்து வீட்டு பெருசு வரைக்கும் உன் படத்தை டிவீ ல
காட்டுனா வச்ச கண்ணு வாங்கமா பாக்குதுங்க..அவங்க மனச சும்மா புடிச்சுற முடியுமா..
உன் பாட்டு வந்தாலே அல்லாம் எதோ நாடி நரம்பு எல்லாம் முறுக்கு ஏறி ஆடுதுங்க..என்னவா காமெடி வேற பண்ணுற..அது போதுமே எல்லோரு மனசையும் லீஸ் எடுக்க..

எனக்கும் உன்னோட கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாம் புச்ச படம் தான்..அப்படியே கெலிச்சிட்டு போய்க்கினே இரு வாத்தியாரே..நீயும் இருக்கணும் தலயும் இருக்கணும் அப்ப தான் நமக்கு ஒரு திரில்..இப்ப கொஞ்சம் படம் சரியா போலனு மெர்சல் ஆயிடாத..தல கொடுக்காத பிளாப்பா..நாங்க எல்லாம் தல இப்ப நடிக்கிறத விட்டுட்டு இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு ஆக்ட் கொடுத்தாலும் அப்படியே தல பின்னாடி தான் நிப்போம் அதே மாதிரி தான் உன்ன பிடிச்சவங்களும் உன் பின்னாடி தான் எப்பொழுதும்..

எதோ உன்ன பத்தி நம்ம ஏரியவாணட ஒரு டாக் அடிப்படுது..அரசியலுக்கு வரப்போரியமே..
வேணாம் நைனா நிம்மதி போய்டும்..நீ அரசியலுக்கு வா வேணாமுன்னு சொல்லல நல்லது பண்ணனும்னு நினைக்கிற யாரையும் மக்க ஏத்துக்கும்..ஆனா இப்ப வேணாம்..எல்லார் மாதிரியும் நடிச்சு முடிச்சு ஆஞ்சு ஓஞ்சு அதுக்கப்புறம் என்ட்ரி கொடு..

கூட இருக்குற ஜால்ரா பசங்க நின்டி வுட்டுக்குனே இருப்பானோ..அவனுங்க பேச்ச கேக்காத..நீயா முடிவு பண்ணி வா..

இந்த பொறந்த நாள் இல்ல எல்லா நாளும் நீ சந்தோசமா இருக்கணும்..
அதான் இந்த தல ரசிகனோட வாழ்த்து..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

18 comments:

Muniappan Pakkangal said...

Wishing with u gilly a Happy Birthday Vinoth Gowtham.

பிரியமுடன்.........வசந்த் said...

தல சார்பா தளபதிக்கு வாழ்த்துக்கள் கூறிய தங்களுக்கு தளபதியின் சார்பாக
நன்றிகள்

அப்பிடியே தளபதிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் பக்கம் said...

அட்வைசு........

இங்க பார் : ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்.......

நீ யாரு...............

☀நான் ஆதவன்☀ said...

இங்க பார்றா....

ஒரு தல ரசிகன்

தளபதிக்கு

விஷ் பண்ணுதே!(ஆச்சர்யகுறி)

எனிவே எவனோ இரண்டு பேருக்காக அசிங்கமா சண்டை போட்டுகிறதுக்கு இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி பாராட்டத்தக்கதே....

வெல்டன் வினோத்

Anonymous said...

இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

கார்க்கி said...

:))))

thanks machi

தீப்பெட்டி said...

இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

பதிவிட்டதில் மகிழ்ச்சி வினோத்..

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப வித்தியாசமான வாழ்த்து. அதோட ரொம்ப நல்லாவும் இருக்கு.

கலையரசன் said...

ஏதோ, தள ய்க்கு வாழ்த்து சொன்னதுனால தப்பிச்சே...

இல்லன்னா.. தப்பு,தப்பா தமிழ் எழுதினத்திற்கு "கொமட்டுலேயே" குத்தியிருப்பேன்!

வினோத்கெளதம் said...

@ Muniappan Pakkangal..

Thanks sir..

@ பிரியமுடன்..வசந்த

//தல சார்பா தளபதிக்கு வாழ்த்துக்கள//

நன்றி வசந்த்..

@ என் பக்கம்..

பிரதீப் ஊருக்கு கிளம்பிடிங்கள..

@ நான் ஆதவன்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதவன்..

@ தமிழரசி..

நன்றி தமிழ்..

@ கார்க்கி..

நன்றி மச்சி..:)))

@ தீப்பெட்டி..

நன்றி கணேஷ்..

@ S.A. நவாஸுதீன் ..

நன்றி நண்பரே..

@ கலையரசன்..

அது கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணேன் அது ரொம்ப வித்தியாசமா போய்டுச்சு..

வால்பையன் said...

உங்களுக்கும் கட்சியில ஒரு சீட்டு உண்டு!

சப்ராஸ் அபூ பக்கர் said...

நைனா...அப்படியே நம்ம தலக்கி வலையுலக ரசிகர்கள் சார்பா வாழ்த்த சொல்லிடுங்க....

Anonymous said...

லொள் லொள்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

குமரை நிலாவன் said...

S.A. நவாஸுதீன் said...
ரொம்ப வித்தியாசமான வாழ்த்து. அதோட ரொம்ப நல்லாவும் இருக்கு.REPEATTU

KISHORE said...

நல்லா தாண்டா எழுதிரிங்க...

தலையாம், தளபதியாம்... டேய் ங்கப்பா உங்க அழும்பு தாங்க முடியல..

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இது சொல்றதுக்கு எவ்ளோ நல்லா இருக்கு இருக்கு? அத விட்டுட்டு ..

துபாய் ராஜா said...

//"இந்த பொறந்த நாள் இல்ல எல்லா நாளும் நீ சந்தோசமா இருக்கணும்..
அதான் இந்த தல ரசிகனோட வாழ்த்து..பிறந்தநாள் வாழ்த்துக்கள்"//

ரிப்பீட்டே.........

ஆ.முத்துராமலிங்கம் said...

இன்னாமா ஒரு வாழ்த்து பார்ரா...!!

தல சும்மா சொல்ல கூடாது
நல்லாதாக்கீதுபா!! காதுல விழுதா பாப்போ!!!

வினோத்கெளதம் said...

@ வால்பையன்..

// உங்களுக்கும் கட்சியில ஒரு சீட்டு உண்டு!//

கொடுத்த ரொம்ப சந்தோஷப்படுவேன்..

@ சப்ராஸ் அபூ பக்கர்..

வாங்க சப்ராஸ் கண்டிப்பா சொல்லிடுவோம்..

@ "நாய்" சேகர் said...

// லொள் லொள்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//

நன்றி..உண்மையான பெயரே இது தானுங்கள.:))

@ குமரை நிலாவன் said...

நன்றி நண்பா..

@ KISHORE ..

//தலையாம், தளபதியாம்... டேய் ங்கப்பா உங்க அழும்பு தாங்க முடியல..//

ச்சுமா ஜாலிக்கு மாப்பு இது எல்லாம் இல்லன்னு வை கிக்கே இல்லை..


@ துபாய் ராஜா ..

வாங்க துபாய் ராஜா நன்றி..

@ ஆ.முத்துராமலிங்கம்..

//இன்னாமா ஒரு வாழ்த்து பார்ரா...!!

தல சும்மா சொல்ல கூடாது
நல்லாதாக்கீதுபா!!//

தேங்க்ஸ்ப்பா வாத்தியாரே..