Sunday, June 14, 2009

வேலைக்கு போறவங்க Vs வேலையே இல்லாத வெட்டிபய..

(முழுக்க முழுக்க ஒரு மொக்கை பதிவு)..

வேலை கிடைக்காம ராஜேஷ் படுற கஷ்டம் இருக்கே. கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க.இந்த வேலைக்கு போற பசங்க மத்தியுல வேலைக்கே போகமா வேல கிடைக்காம ஒருத்தன் இருப்பான் பாருங்க.. அவன் பாடு எப்பா சொன்ன புரியாதுங்க..பட்டா தான் தெரியும்..கிட்டதட்ட அதே மாதரி ஒரு கேரக்டர் தான் நம்ம ராஜேஷ்.

ரகுவும் பழனியும் பீச்ல் காந்தி சிலைக்கு சற்று தள்ளி அமர்ந்து இருந்தார்கள்.ரகு,பழனி இருவரும் ஒரு MNC கம்பெனியின் நல்ல வேலையில் ஓரளவு நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள்.

ரகு " மச்சான் எங்கட இவனுங்கள இன்னும் காணோம்"..
பழனி" டேய் இப்ப தான் கால் பண்ணேன் ஆன் த வே"..
"விஜயும் வரான் இல்ல"
"ம்ம்ம்..ராஜேஷும் அவனும் தான் வந்துகிட்டு இருக்குங்க"
"டேய் ராஜேஷ் எதோ Interview இன்னிக்கு போறன்னு சொன்னனனே என்ன ஆச்சு கேட்டியா"..
"இல்லடா வந்த தான் கேக்கணும்"..சொல்லி முடிக்கும் பொழுது ராஜேஷ் எதிரில் பைக்கை பார்க் செய்து கொண்டு இருந்தான்.

விஜயும் ராஜேஷும் இவர்கள் அருகில் வந்தனர்.

"டேய் எவளோ நேரம்டா வெயிட் பண்ணறது"..பழனி எகிறினான்..
ராஜேஷ் " ஏய் என்கிட்ட இன்னமோ எகிறுற..இவன் வீட்டுல அரை மணி நேரம் உக்காந்து இருந்தேன்..ஆபீஸ்ல இருந்து வந்து அரை மணி நேரம் மூஞ்ச கழுவுறான்..
ரகு.."சரி விடு கண்டிப்பா உன்னால லேட் அயிருக்காதுனு தெரியும்..சரி எதோ Interview போறன்னு சொன்னியே.. என்ன கம்பெனி, என்ன ஆச்சு.."
ராஜேஷ் " ஆமாம்டா காலையுல தான் போயிட்டு வந்தேன்..ஒரு சின்ன திருத்தம் கம்பெனி இல்ல காலேஜ்.."

"என்னது காலேஜ்க்கு Interview போனியா..என்னடா சொல்லுற.." மூவரும் கோரசாக கேட்டனர்..

"ஆமாம் ஆமாம் ஒரு Lecturer போஸ்ட் தெரிஞ்சவரு ஒருத்தரு சொல்லி இருந்தார் அதான் போய் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்.."
"என்ன ஆச்சு..""We will call u backனு சொல்லி இருக்காங்க பாப்போம்."
"இதுவும் புட்டுக்குச்சா"..பழனி..
"த்தூ வாய Phenol ஊத்தி கழுவுடா..கிடைக்கும்னு நினைக்குறேன்..பாப்போம்.."

"என்னடா ஆச்சு திடிர்னு லெக்ச்சரர் அது இதுனு..வீனா ரிஸ்க் எடுக்காதா..வேணாம்..நீ நினைக்குற மாதரி இல்ல அந்த வேலை..கிளாஸ் எடுக்கணும்..பசங்க நடுவுல வேணும்னே கேள்வி கேப்பானுங்க..அவன் என்ன கேள்வி கேட்டான்னு உனக்கு புரியறத்துக்கே ஒரு மணி நேரம் ஆயிடும்..இதுல நீ அவனக்கு பதில் சொல்லி அவனுக்கு புரிஞ்சு பாஸ் ஆகி..இதுல்லாம் நடக்குற கதையா டா"...ரகு.

"டேய் என்ன நினைச்ச நீ..மாமா காலேஜ்ல செமினார் எடுத்து நீ பாத்தது இல்ல.." ராஜேஷ்..
"உங்க மாமாவும் உன் கூட தான் படிச்சாரா சொல்லவே இல்ல"..பழனி.
" ஹலோ என்ன தான் சொன்னேன்"..ராஜேஷ்.

" இந்த உலகத்துலேயே தன்ன மாமான்னு ஒருத்தன் ஒத்துக்கிறனா அது நீயா தாண்ட இருப்பே மச்சான்"..பழனி.
"டேய் பேசுங்கடா எப்படியும் செலக்ட் ஆவ போறேன் அப்ப என்ன சொல்றிங்கனு பாப்போம்.."
"கண்டிப்பா நடக்க போறது இல்ல"..பழனி..

"டேய் எங்க மேனேஜர்க்கு உன்னோட Resume பார்வர்ட் பண்ண சொன்னனனே பண்ணியா"..விஜய்.
"பண்ணேன் பண்ணேன்.. 20வது தடவையா நீ சொல்ற ஆளுக்கு பார்வர்ட் பண்ணேன்.."
"டேய் ரொம்ப சல்லிச்சிக்காத எப்படியும் கூப்பிடுவங்க.."

ராஜேஷ் " எப்ப 50 வயசுலையா.. மச்சான் என் அனுபவத்துல ஒன்னு சொல்றேன்.. Interviewல" I will call u backன்னு சொல்றவன கூட நம்பலாம் ஆனா Resume பார்வர்ட் பண்ணுங்க முடிச்சிர்லாம்ம் கிழிச்சிர்லாம்ம்னு சொல்ல்ரானுங்க பாரு அவனுங்கள மட்டும் நம்ப கூடாது..நான் முடிவு பண்ணிட்டேன் லெக்ச்சரர் வேலை கிடைச்ச்சிச்சுனா கண்டிப்ப போய் சேந்துருவேன்.."

"மச்சான் லெக்ச்சரர் வேலை எதிர் காலத்தை நினைச்சு பாத்தியா"..ரகு.
"ஏன் லெக்ச்சரர் வேலைக்கு என்ன நல்ல Future தான்.."
" உன் Future தான் பின்னாடி ஒளிவட்டமா பிரகாசமா தெரியுதே..அத பத்தி சொல்லுல.. நீ பாடம் நடத்த போறியே அந்த பசங்க Future பத்தி சொல்றேன்.."
"பேசுங்க இன்னும் கொஞ்சம் நாளைக்கு தான்.."

"நான் ஒன்னு சொல்றேன் கோச்சிக்க மாட்டியே.." பழனி..
"எப்படி இருந்தாலும் எதாச்சும் மொக்கத்தனமா தான் சொல்லுவா சொல்லு"..ராஜேஷ்.
"நீ எதுக்குடா வேலைக்கு போற இப்பயே பிஸியா தான் இருக்க..காலையில அப்பாவ போய் பஸ் ஸ்டாண்ட்ல விடுற..அம்மாவ ஆபீஸ்ல விடுற..தம்பிய ஸ்கூல்ல விடுற..தம்பிக்கு மதியம் சாப்பாடு கொடுக்க போற..அநேகமா வீட்டுல கூட்டி பெருக்கறது கூட நீயா தான் இருக்கணும்ங்க்கறது என்னோட ஒரு கணிப்பு..மதியம் தோட்டத்துல தண்ணி ஊத்துற..அன்னிக்கு ஒரு நாளு பாத்தா உங்க வீட்டு நாயா புடிச்சிக்கிட்டு ரோட்டுல திரியுற..அத கூட Veterinary Hospital கூப்பிட்டு போறன்னு கூட கேள்வி பட்டேன்..பேசாம உங்க அம்மாகிட்ட ஒரு 1500 ரூபா அப்பாகிட்ட ஒரு 1500 ரூபா வாங்கிட்டு இந்த வேலையே தொடர்ந்து பண்ணா என்ன.."
ராஜேஷ் " வேலை வாங்கி குடுக்க துப்பு இல்ல இந்த நக்கல்க்கு ஒரு கொற மயுரும் இல்ல.."
ரகு.." மச்சான் தம்பிக்கு சாப்பாடு கூட நீ தான் ஸ்கூல்ல கொண்டு போய் தரியா..உன் தம்பி தோஸ்துங்க எல்லாம் பாத்துட்டு அண்ணன் என்ன பன்றார்ன்னு கேப்பங்கலே டா என்னடா சொல்லுவான் அவன்.."

ராஜேஷ்..".............."

"மச்சான் எங்க அக்கா கூட பாவம் அவங்க பையனுக்கு மதிய நேரத்துல கஷ்டப்பட்டு சாப்பாடு கொடுத்துட்டு வராங்க..நாளையுல இருந்து அந்த சாப்படயும் வாங்கிட்டு அப்படியே போய் கொடுத்துட்டு வந்துறேன்.."..ரகு.

ராஜேஷ்.."....".

"மச்சான் கோச்சிகிட்டியா என்ன..பேசவே மாட்டுற.."..பழனி.

ராஜேஷ்.."என்னடா கேட்ட கவனிக்கல..ஒரு மஞ்சள் கலர் சுடிதார் கிராஸ் பண்ணுச்சு பாத்தியா". "உருப்படவே மாட்ட.."விஜய்..

சரி அத விடு இன்னிக்கு சனிக்கிழமை வேற என்ன பிளான்"..ரகு
"வழக்கம்போல தான் அப்புறம் என்ன பண்றது" விஜய்..
"ஓகே டார்கெட் 200 ஆளுக்கு 50 ரூபா போதும் ''
ராஜேஷ் தயங்கினான்.

"என்ன மச்சான் யோசிக்கிற வர விருப்பம் இல்லையா"..பழனி.
"அது இல்ல மச்சான் 20 ரூபா தான் இருக்கு.." ராஜேஷ்.
"சரி 20 ரூபாய குடுத்து தொல.." ரகு..
"தம்பி அப்படி ஒன்னும் சகிச்சிக்க வேணாம்..உங்களக்கு காசு தானே வேணும் நாளைக்கு தரேன்.."
"எது நாளைக்கு பெட்ரோல் போட வீட்டுல 50 ரூபா கொடுப்பாங்க அதை எங்ககிட்ட கொடுப்பா..எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போறப்ப பைக் நின்னுரும்..எங்க வண்டியுல இருந்து கொடுத்த காச மறுபடியும் டுயுப் போட்டு பெட்ரோலா உறிஞ்சுருவ''..ரகு.

"மச்சான் என்ன அமைதியா சிரிக்கிற"..விஜய் ராஜேஷை பார்த்து..
"ம்ம்..உலகத்த நினைச்சு சிரிக்கிறேன் டா"..ராஜேஷ்.
"அதான் உன்னை நினைச்சு உங்க ஏரியாவே சிரிப்பா சிரிக்குதே இதுல நீ வேற சிரிக்கிறியா"..ரகு.

நால்வரும் அரட்டையை முடித்து கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவார்கள்.
ராஜேஷ் சொன்ன மாதிரியே அவனுக்கு வேலை கிடைத்தது..ஆனா லெக்ச்சரர் வேலை சேர்ந்து அவன் அடிச்சா கூத்து இருக்கே அதுக்கு தனியா ஒரு பதிவு போட வேண்டும்..

டிஸ்கி: முழுக்க முழுக்க கற்பனை கதை..

31 comments:

Kanna said...

ராஜேஷ் = கிஷோர் ?????!!!!

Kanna said...

//மச்சான் கோச்சிகிட்டியா என்ன..பேசவே மாட்டுற.."..பழனி.
ராஜேஷ்.."என்னடா கேட்ட கவனிக்கல..ஒரு மஞ்சள் கலர் சுடிதார் கிராஸ் பண்ணுச்சு பாத்தியா".//

கன்பார்ம்டு.....கிஷோர்தான்....

:)))


என்னா கொல வெறி

Kanna said...

அப்ப நாளைக்கு காலைல கும்மி இங்கதானா...?

வினோத்கெளதம் said...

இங்க தான் கண்ணா இங்க தான் எல்லோரும் மறக்காம வந்துடுங்க :)))

வினோத்கெளதம் said...

அது கிஷோர் இல்ல வேற ஒரு விளங்காதவன்...

ஆ.ஞானசேகரன் said...

//(முழுக்க முழுக்க ஒரு மொக்கை பதிவு)..//

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//ஆனா லெக்ச்சரர் வேலை சேர்ந்து அவன் அடிச்சா கூத்து இருக்கே அதுக்கு தனியா ஒரு பதிவு போட வேண்டும்..//

அடுத்த மொக்கையும் எதிப்பார்க்கலாம் .... நல்லா படிக்கும்படி இருக்கு நண்பா

KISHORE said...

//Kanna said...

//மச்சான் கோச்சிகிட்டியா என்ன..பேசவே மாட்டுற.."..பழனி.
ராஜேஷ்.."என்னடா கேட்ட கவனிக்கல..ஒரு மஞ்சள் கலர் சுடிதார் கிராஸ் பண்ணுச்சு பாத்தியா".//

கன்பார்ம்டு.....கிஷோர்தான்....

:)))


என்னா கொல வெறி//


உனக்கு ஏன்டா இந்த ரத்த வெறி?

KISHORE said...

//வினோத்கெளதம் said...

அது கிஷோர் இல்ல வேற ஒரு விளங்காதவன்...//

இதுக்கு விளக்கம் வேற...

KISHORE said...

அருமையா இருந்துச்சி மச்சான்..

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Kanna said...

டேய் எங்க சங்கத்து ஆள ( கிஷோர்) அடிச்சவன் எவண்டா..??!

வினோத்கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன் said...
//(முழுக்க முழுக்க ஒரு மொக்கை பதிவு)..//
//வாழ்த்துகள்//

நண்பா இதுக்கும் வாழ்த்துக்கள்லா..:))

//அடுத்த மொக்கையும் எதிப்பார்க்கலாம் .... நல்லா படிக்கும்படி இருக்கு நண்பா//

சீக்கிரம் களத்தில் இறக்கப்படும்..நன்றி நண்பா..

@ KISHORE said...
//அருமையா இருந்துச்சி மச்சான்..//

டேய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை..


@ Kanna said...

//டேய் எங்க சங்கத்து ஆள ( கிஷோர்) அடிச்சவன் எவண்டா..??!//

என்ன சங்கம் "வீட்டில் இருந்து விரட்டப்படோர் சங்கமா.."

தீப்பெட்டி said...

நல்லா ஜாலியா போகுதே.. வினோத்..

நிஜமாவே முழுக்க முழுக்க கற்பனைதானா?

கலையரசன் said...

கண்ணா ஒரு லூசு பயலா இருப்பானோ?
பின்ன, அந்த ராஜேஷ் வேற யாரு..
நம்ம அண்ணன் வின்னர் விநோத் தான்!

எப்டி எல்லாம் ரவுன்டு கட்டி அடிச்சிருக்கானுவ...
பாவம்! புண் பட்ட நெஞ்சை பதிவெழுதி ஆத்துறாரு
நம்ம அண்ணாரு!

கலையரசன் said...

பெருசா கண்டுபுடிச்சுட்டாரு அப்டின்னு சொல்லபோற...
அப்டி சொன்னா.. கீழே இருக்குற பதில படிச்சிக்க..
அப்டி சொல்லலன்னா... நீதான் ராஜேசுன்னு ஒத்துக்க!

மொச புடிக்கிற நாய, மூஞ்ச பாத்தா தெரியதா?
இதுக்கு நாங்க என்ன சைலேந்தர் பாபு கிட்டயா
டிரெய்னிங் போயிட்டு வரமுடியும்..

கண்ணா || Kanna said...

ஏண்டா கலை....

உண்மையிலேயே நீதான்டா லூசு..

அதான் கிஷோருன்னு ஈஸியா கண்டுபிடிக்கதான லெகசரர்ன்னு க்ளு குடுத்துருக்கான்..

இதுக்கு மேல சொல்லணும்னா பேரைதான் போடனும்..

கண்ணா || Kanna said...

என்க்கு என்னமோ கிஷோரோட போன பதிவுக்கு எதிர் வினைன்னு நினைக்குறேன்...

பொறுமையா வேடிக்கை பாரு...இந்த மாதிரி சண்டைலதான் பல உண்மைகள் வெளிய வரும்...

வினோத்கெளதம் said...

@ தீப்பெட்டி said...
//நல்லா ஜாலியா போகுதே.. வினோத்..//

நன்றி கணேஷ்..

//நிஜமாவே முழுக்க முழுக்க கற்பனைதானா?//

கொஞ்சம் கற்பனை..நிறையா உண்மை..

@ கலையரசன் said...
//கண்ணா ஒரு லூசு பயலா இருப்பானோ? //

எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு..:)))

//பின்ன, அந்த ராஜேஷ் வேற யாரு..
நம்ம அண்ணன் வின்னர் விநோத் தான்!//

கலைக்கே முதல் பரிசு..

@ கண்ணா || Kanna said...
//என்க்கு என்னமோ கிஷோரோட போன பதிவுக்கு எதிர் வினைன்னு நினைக்குறேன்...//

எதிர்வினை பதிவு..அதுவும் அவன பத்தினா நான் இப்படி எழுத மாட்டேன்..வச்சு கிழி கிழினு கிழிச்சு இருப்பேன் பாவம் சின்ன பய பொழச்சு போகட்டும்..

KISHORE said...
This comment has been removed by a blog administrator.
KISHORE said...

உண்மைய சொன்னா இந்த கேடு கெட்ட உலகம் ஏத்துக்க மறுக்குது... என்ன உலகமடா இது ? என் பக்கத்து நியாயத்த கேக்க யாருமே இல்லையா?

கண்ணா || Kanna said...

//KISHORE said...
உண்மைய சொன்னா இந்த கேடு கெட்ட உலகம் ஏத்துக்க மறுக்குது... என்ன உலகமடா இது ? என் பக்கத்து நியாயத்த கேக்க யாருமே இல்லையா?//

ஏண்டா நீ சொல்லுறதெல்லாம் உண்மையா..?

ஹி..ஹி...ஹி...

வினோத்கெளதம் said...

@ KIshore..

என் ப்ளாக் சென்சார் செய்யப்பட்டது..:))

வினோத்கெளதம் said...

@ Kishore..

உன்னுடுய கருத்துக்கள் மிகவும் ஆபாசமாக உள்ளதால் தணிக்கை செய்யப்பட்டு உள்ளது..:))

என் பக்கம் said...

//வினோத்கெளதம் said...

எமேன் நாட்டில் எப்படி வெள்ளம் வந்தது..!!//

கீழே இருக்குற இரண்டு சுட்டியை பாருங்க.

http://news.bbc.co.uk/2/hi/7689795.stm

http://ynotoman.wordpress.com/2008/10/25/yemen-floods/

நன்றி வினோத்கௌதம்

பித்தன் said...

மச்சி கோவமா இருந்தா ரெண்டு அடி அடிச்சிடு அதுக்காக இப்படி செம்ம மொக்க போடாத :)

KISHORE said...

//வச்சு கிழி கிழினு கிழிச்சு இருப்பேன்//

மேல இருப்பது பிரபல பதிவர், அஞ்சாநெஞ்சன் ,அமீரக அஜித் , பாண்டிச்சேரி 'குடி'மகன், 'பார்' போற்றும் பிதாமகன் திரு வினோத்கெளதம் எழுதிய பினூட்டம்..

இவரு எதை கிழ்ச்சி இருக்காருன்னு நான் எழுதுனா அதை ஆபாசம்னு சொல்றாரு.. அசிங்கம்னு சொல்றாரு.. அறிவு இல்லையானு கேக்குறாரு.. அழிச்சும் போடுறாரு...

ஏன்னு கேட்டா ? அவர் ப்லோக் சென்சார் செய்யபட்டதுனு சொல்றாரு ,உங்க கமெண்ட் செக்ஸ்ஷுவல்னு சொல்றாரு , செகண்டரி கமெண்ட்னு சொல்றாரு...

என்ன நியாயம்ங்க இது... ? ஒருத்தன் அவனோட கருத்த சொல்றதுக்கு இந்த பாரத தேசத்துல உரிமை இல்லையா?

KISHORE said...

நான் திரும்ப அவரு எதை கிழிச்சருனு சொன்ன நிச்சயம் அவரு அதை டெலிட் பண்ணிடுவாரு ... அவர் எதை கிழிச்சாருன்னு தெரிஞ்சிக்க விரும்புறவங்க.. er.kishoremail@gmail.com என்ற முகவரிய தொடர்புகொள்ளுங்கள்..

வால்பையன் said...

அப்படியா!

KISHORE said...

அப்படிதான் ...

ஷண்முகப்ரியன் said...

Realistic.Good.