Saturday, June 27, 2009

அஜித், விஜய் அப்புறம் கொஞ்சம் பியர்..பாகம் 1


"இன்னிக்கு செகண்ட் ஷோ போய் தான் ஆகணுமா "..அஜித்.

"போய் தான் ஆகணுமா .. கண்டிப்பா போறோம்.. "..விஜய்.

"சொன்ன கேக்க மாட்டியே ..மொக்க படம்னு கேள்விபட்டேன். மவனே படம் மட்டும் நல்ல இல்லன்னு வையு அதோட நீ தீர்ந்த.."

"அட இது வரைக்கும் நம்ம மொக்க படம் பார்த்ததே இல்லையா என்னமூடிக்கிட்டு வாடா.."

"வரேன் சரி.. ..அதுக்கு முன்னாடி..ஒரு பீர் அடிச்சிட்டு போன நல்ல இருக்கும்னு ஃபீல் பண்றேன்.."

"என்னது பீரா... உன்ன படத்துக்கு கூப்ப்ட்டு போறதே அதிகம் ..இதுல பியர் வேறயா.."

"சொல்லுவடா உன்ன பாக்குறத்துக்கு அவசரம் தஞ்சவூர்ல இருந்து சென்னை போற நான் நேரா போகமா சிதம்பரம் வந்துட்டு போறன் பாரு இதுவும் பேசுவஇதுக்கு மேலயும் பேசுவடா நீ.."

"மச்சான் கோவிச்சிக்காத டா உனக்கு பீர் தானே வேணும் வா பார்க்கு போலாம் .."

"என்னது பாருக்கா அங்க எல்லாம் வேணாம்.. டைம் ஆயிடும்.. பக்கத்துலஇருக்குற டாஸ்மாக்ல வாங்கு.. அங்கேயே மறைவுல நின்னு அடிச்சிட்டுஅப்படியே படத்துக்கு போயருலம்.."

"டேய் எவனாச்சும் பாத்த பிரச்சனைடா .."

"யாரும்
பாக்க மாட்டாங்க.. அப்டியே அடிச்சிட்டு படத்துக்கு போய்ருவோம்"

"கேக்க மாட்டியே நீ"..விஜய்.

"நீ மட்டும் கேட்டுருவ பாரு.."அஜித்.

இருவரும் மாரியப்பா தியேட்டர் சந்தில் பீர் அடித்து விட்டு படத்துக்கு செல்கின்றனர்..

"டேய் படமா டா இது.." அஜித் புலம்ப ஆரம்பித்தான்..

"மச்சான் கொஞ்ச நேரம்டா படம் முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுலாம்.." விஜய்..

"வீட்டுல நிம்மதியா தூங்கி இருப்பேன் அதையும கெடுத்த நீ.."

"ஆமாம் இதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் செகண்ட் ஷோ பாத்ததே இல்ல பாரு.."

"அதுக்கு சொல்லல நான் தான் முன்னாடியே சொன்னேன் படம் நல்லஇல்லைன்னு கேள்வி பட்டேன் வேணாம்னு"


"சரி விடு வந்து தொலைச்சிட்டோம் பாத்துட்டு போய்ருவோம்.."

அஜித்தால் இடைவேளைக்கு பிறகு கட்டுப்படுத்தவே முடியவில்லை..

"மச்சான் நீ வர்றியா இல்ல நான் ஆட்டோ புடிச்சு போய்ரவா"..அஜித்

"டேய் கொஞ்சம் பொறுத்துக்கோ டா..படம் இன்னும் அரை மணி நேரத்துல முடிஞ்சுரும் உயிர வாங்காத.."..விஜய்.

விஜயலும் உக்கார முடியவில்லை அந்த அளவுக்கு மொக்க படம்..படம் முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வண்டியை எடுத்துகொண்டு இருவரும் கிளம்பினர்..

விஜய் ஓட்ட அஜித் அமர்ந்து கொண்டான்..

"டேய்
நாயே
வண்டியுல தூங்காத டா "..விஜய் சப்தம் போட்டான்..

"இல்லைடா ச்ச்செரி"..

விஜயின் வீட்டுக்கு ஒரு அரை கிலோமீட்டர் முன்பு ஒரு வளைவில்..

http://www.d.umn.edu/~gril0026/5250/revision/police_night.jpeg


"மச்சான் எதோ ஜீப் நிக்குற மாதரி தெரியுல.."விஜய்..

"எங்கடா.."

டேய் போலீஸ் டா...என்று சொல்லும் போதே..ஜீப் அருகில் நெருங்கி விட்டு இருந்தனர்..

கான்ஸ்டபிள்..
"நில்லுப்பா" ..விஜய் வண்டியயை நிறுத்தினான்..
" தம்பி எங்க போயிட்டு வாரிங்க."

"சினிமாவுக்கு சார்.."..விஜய்.
"எங்க டிக்கெட் காட்டு "..

"இந்தாங்க சார்.."விஜய் ரொம்ப பயபக்தியோடு எடுத்து நீட்டினான்..

"லைசென்ஸ்..??".. அதையும் காட்டினான்..

அதற்குள் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்து இறங்கினார்..

"படம் எப்படிப்பா இருக்கு".. நக்கல் தொனிக்கும் பாணியில் கேட்டார்..

"நல்ல இருக்கு சார்" விஜய்..

அடப்பாவி என்று அஜித் மனசுக்குள்ளேயே கருவினான்..

"என்ன பண்றீங்க"

"சார் நான் Universityல வொர்க் பண்றேன்.."விஜய்..

"தம்பி நீப்பா"

உண்மைய சொல்ல கூடாது என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அவர் கேட்ட வேகத்தில் கரெக்டா.."சார் நான் தஞ்சாவூர்ல வொர்க் பண்றேன்".. என்று அஜித் உளறி கொட்டினான்.

"அதெல்லாம் சரி உங்க ரெண்டு பேரையும் பாத்த எதோ தப்பு பண்ணிட்டு வந்த மாதரியே தெரியுதே.."..இன்ஸ்.

"சார் படத்துக்கு தான் போயிட்டு வரோம்"..விஜய்..
கொஞ்சம் விட்ட காலில் விழுந்து இருப்பான்.அப்படி ஒரு பணிவு அவன் வார்த்தையில் தெரிந்தது.

"தம்பி இங்க வா வாய ஊது"

விஜய்க்கு அடி வயுறு கலங்கியது..இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

"ஊதுப்பா"..விஜய் கிட்டே போய் ஊதினான்..


"அதன்ன பாத்தேன்..
ஏன்டா டேய் குடிக்கரிங்க சரி..குடிச்சிட்டு ஏன்டா ஊர சுத்துரிங்க..எங்கயாச்சும் அடிப்பட்டு செத்திங்கினா..எவன்டா பதில் சொல்றது"..

விஜய் அழுதே விடுவான் போல் இருந்தது..

அஜித் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "சார் நாங்க ரெகுலர் கிடையாது எப்பயச்சும்"..

"எப்பயச்சும் அடிச்சிட்டு ஊர சுத்துவிங்க போற வரவன் மேல எல்லாம் வண்டியை வுட்டு ஏத்துவிங்க அதானே.."

"இல்ல சார்.. சாரி சார்.."..விஜய்.

"இன்னத்துக்கு சாரி உங்கள எல்லாம் உள்ள புடிச்சு உக்கார வச்சா தான்அடங்குவிங்க.."

"சார் இல்லை சார்.."..அஜித்.

"
என்ன இல்லை நொல்லைநு..தம்பி வண்டி ஓட்டிட்டு வந்த தம்பி வந்து ஜீப்புல ஏறு..உக்கந்துட்டு வந்த தம்பி நீ கிளம்பரதுனா கிளம்பு"

விஜய் மனசுக்குள்ளேயே.." யோவ் அந்த நாய் தான் குடிக்க ஐடியாவே குடுத்துச்சு.."

"இல்ல சார் நானும் வரேன்"..அஜித்..

விஜய் அஜித்தை பெருமிதத்தொடு பார்த்தான்..
(தொடரும்)..

17 comments:

Venkatesh Kumaravel said...

யப்பப்பப்பப்பா!
பிரிச்சு மேஞ்சுட்டீங்கோ!
:DDDD

Venkatesh Kumaravel said...

ஹைய்யா!
மீ த பர்ஸ்ட்டு!

வினோத் கெளதம் said...

நன்றி வெங்கி..கொஞ்சம் பெரிய பதிவு இல்லை..

//ஹைய்யா!
மீ த பர்ஸ்ட்டு!//

நீ ரொம்ப நல்லவன்..எனக்கும் மீ த பர்ஸ்ட்டு போட்டு இருக்க பாரு..:))

கலையரசன் said...

ஏன்டா டேய்! விஜயையும், அஜீத்தையும்
வச்சி காமெடி பதிவு எழுதியிருப்பன்னு
நினைச்சு வந்தா..
நீயும், கிஷோரும் குடிச்சிட்டு
கும்மியடிச்ச கதையை எழுதி
வச்சியிருக்க? உங்க போதைக்கு
நாங்க ஊறுகா ஆனாலும் பரவாயில்ல..
ஆனா கசக்கி போட்ட
யூஸ் & துரோ கப் ஆக்கிட்டியேடா!!

மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்
யோசிக்க சொல்லும்..
இரு! கட்டிங்பிளேயர் எடுத்துட்டு வரேன்.

Muniappan Pakkangal said...

Alcohol, Police,eppadippaa kasu vangaama vittaanga,ithu uttalakkadiaa /

வினோத் கெளதம் said...

@ கலையரசன்..

இதுவும் காமெடி ஆனா நீ நினைக்கிற மாதிரி இல்லை முழுக்க முழுக்க கற்பனை..

//மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்
யோசிக்க சொல்லும்..
இரு! கட்டிங்பிளேயர் எடுத்துட்டு வரேன்.//

ஓஹோ..

வினோத் கெளதம் said...

@ Muniappan Pakkangal..

//Alcohol, Police,eppadippaa kasu vangaama vittaanga,ithu uttalakkadiaa //

அன்னிக்கு அந்த கற்பனை கதைல அந்த பசங்க எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பார்த்தும் இன்ஸ்பெக்டர் மசியவில்லை..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நடத்துங்க.., நடத்துங்க..,


தண்டம் கட்டுனது இதுக்கு மட்டும்தானா..? இல்லை..........,

ஆ.ஞானசேகரன் said...

//முதல் ஆளே விஜய் தான்..

ரெண்டாவது ஆளு அந்த பக்கத்து வீட்டுக்காரர்..

இருவருக்குமே மூஞ்சில் ஈயாடவில்லை..//

ஹிஹிஹி... நல்லா இருக்கே

அது ஒரு கனாக் காலம் said...

அட பாவிங்களா... இப்படி கூட யோசிப்பீங்களா.... அதாவது..இவ்வளவு நீ........ளமா

S.A. நவாஸுதீன் said...

என்ன படம் அது வினோத் - வில்(ஆ)ழ்வார்?

நல்லா மாட்டிகிட்டீங்க போல, கடைசியில காப்பாத்தினது யாரு விஷ்ணுவா, ஆஞ்சநேயரா?

நாகா said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

கார்க்கிபவா said...

இத ஏற்கனவே படிச்ச ஞாபகம் இருக்கே

வினோத் கெளதம் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து)..

//தண்டம் கட்டுனது இதுக்கு மட்டும்தானா..? இல்லை.//

பின்ன எதுக்குன்னு கேக்குறிங்க..:)

@ ஆ.ஞானசேகரன் ..

நன்றி நண்பரே..


@ அது ஒரு கனாக் காலம்..
//அட பாவிங்களா... இப்படி கூட யோசிப்பீங்களா.... அதாவது..இவ்வளவு நீ........ளமா//

கொஞ்சம் பெருச்சா தான் போய்டுச்சு சார்..இப்ப ரெண்டு பாகமா பிரிச்சிடேன்..

@ S.A. நவாஸுதீன்..

//என்ன படம் அது வினோத் - வில்(ஆ)ழ்வார்?//

அது எல்லாம் இல்லை தலைவா அது ஒரு அழகப்பன் நடித்த இந்திரலோகம் படம்..


@ நாகா..
//ஆஆஆஆஆஆஆஆஆஆஆ...//

இ இ இ இ இ இ இ இ ...

@ கார்க்கி..

ஆமாம் சகா பழைய சரக்கு கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இறக்கி இருக்கேன்..

வால்பையன் said...

அஜித்தும் விஜயும் சரக்கடிச்சிட்டு சினிமாவுக்கு போனாங்களா ஆச்சர்யமா இருக்கே!

வினோத் கெளதம் said...

@ வால்ஸ்..

ஆச்சரியம் ஒன்னும் இல்லை வால்ஸ் எப்பொழுதும் நடக்கிறது தான்..

kishore said...

ஹாய் மச்சான்.. எப்படி இருக்க?