Tuesday, June 9, 2009

குற்றங்கள்..('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' )

கலையின் ஏ.கே-7 துப்பாக்கியில் இருந்து வந்த கடைசி ரவுண்டு புல்லட்டுக்கள் சரமாரியாக அந்த இளைஞனின் உடம்பில் துளைத்தது..

அந்த இளைஞன் கடைசியாக கடவுளின் பெயரில் உச்சரித்த நாமங்கள் காதில் பட்டும் படாமல் ஒலித்து சென்றது..

பாரமுல்லா மாவட்டத்தின் சில்க் பகுதயில் ஏறத்தாழ பதினெட்டு மணி நேரமாக நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்து இருந்தது..

அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களின் முன்னால் இறந்த தீவிரவாதிகளின் உடல்கள் கம்பளி போர்வையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது..

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஜெனரல் விடாமல் பதில் அளித்து கொண்டு இருந்தார்..
கலை கிடத்தி வைக்கபட்டு உடல்களை விடமால் வெறித்து பார்த்தப்படி நின்று இருந்தான்..

கண்ணாவும் அருகில் நின்று கொண்டு இருந்து மேஜர் பதில் அளிக்கும் விதத்தை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான்..
கண்ணா கலையையும் கவனிக்க தவறவில்லை..

கண்ணா மற்றும் கலை இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தமிழக கம்மேண்டோக்கள்..

வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் அணைத்து ராணுவ வீரர்களும் கேம்பை நோக்கி பயணித்தனர்..

கண்ணா குளித்து முடித்து கொஞ்சம் ஓய்வு எடுத்தபின் காஷ்மீர் குளிரில் நடுங்கி கொண்டே கலையின் அறையை நோக்கி சென்றான்..

கலை அவன் அறையில் அமைதியாக கையில் எதோ புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்து கொண்டு இருந்தான்..

"டேய் வரியா..கான்டீன் வரைக்கும் போயிட்டு டீ சாப்பிட்டு வருவோம்"..கண்ணா..

"ம்ம்ம்..போலாம்.."..கலை..

காண்டீனில் கையில் டீ கோப்பையை பிடித்துகொண்டு இருந்த கலையிடம்..

"டேய்..என்ன ஆச்சு உனக்கு காலையில இருந்து நான் பார்கிறேன்..எப்பொழுதும் ஆபரேஷன் முடிஞ்சவுடனே இருக்கிற சந்தோசம் உன் முகத்தில் டோட்டல் மிஸ்ஸிங் அதன் கேக்குறேன்..ஊருக்கு போயிட்டு வந்தியே வீட்டுல எதாச்சும் பிரச்சனையா.."..கண்ணா.


"அது எல்லாம் ஒன்னும் இல்லைடா..இன்னிக்கு சண்டையில செத்த ஆளுங்கள பார்த்தியா எல்லாம் சின்ன பசங்க.."..கலை..

"அதான் அவங்க விதிடா..சின்ன வயசுல மூளை சலவை செய்யப்பட்டு இப்படி ஆகிடுறாங்க..நம்ம என்ன பண்ண முடியும்.."..கண்ணா..

"இல்லை அவங்க கொள்கையை பற்றி பேசல..அவங்க உயிரை எடுக்குற நம்ம எப்படி எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லமா இருக்க முடியுது.."..கலை.

"யே, லூசு மாதிரி பேசாத அவங்கள சாவடிகிறதுக்கு எதுக்கு குற்ற உணர்ச்சி வரப்போகுது..அவன் ஒரு தீவிரவாதி..அவன் கதையா நம்ம முடிக்கல நாளைக்கே அவன் பலப்பேர் கதையை முடிச்சுடுவான்..அதுக்கு எல்லாம் பார்க்க முடியுமா..நம்ம நாட்டுக்கு பண்ணுறோம் அப்படின்னு திருப்தி ஒன்னு போதும்டா.."..கண்ணா..

"அப்ப ராணுவம்கிற பேர்ல நமக்கு கொடுத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு பண்ணும் உயிர் வதத்துக்கு நம்ம மனச்சாட்சி பீல் பண்ணவே பண்ணதுன்னு சொல்றியா.."..கலை..

"டேய்..அப்படி பார்த்த நம்ம கும்பிடுற சாமியே புராணத்தில கெட்டவங்களுக்கு எதிரா சண்ட போட்டு வதம் பண்ணி இருக்கு..கான்செப்ட் கெட்டது ஒழியனும் அவ்வளவு தான்..அப்ப கடவுளுக்கு மனச்சாட்சி இல்லங்க்ரியா.."..கண்ணா.

"ஒருவேளை அவர் கடவுளுங்கரதலேயே மனச்சாட்சி பெண்டுலம் மாதிரி ஆடமா குற்ற உணர்ச்சி இல்லாம இருந்துட்டாரு ஆனா என்னால முடியுலடா.."..கலை..


"ஏய் என்ன ஆச்சுடா உனக்கு..இதுக்கு முன்னாடி பல ஆபரேஷன் பண்ணி முடிஞ்ச அப்புறம் நீ தான் ரொம்ப திருப்தியா இருப்ப..இப்ப இன்னமோ இப்படி பேசுற.."..கண்ணா.

"இல்லடா போன மாசம் ஊருக்கு போய் இருந்தப்ப பைக்ல போறப்ப ஒரு பையன் மேல மோதி ஆக்சிடேன்ட் பண்ணிட்டேன்..பையன் ரொம்ப சீரியஸா போய்டான்..அன்னிக்கு அவன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு அவனுக்கு என்ன ஆகுமோன்னு நான் அனுபவிச்ச நரக வேதனை எனக்கு தான் தெரியும்..நல்லா வேளை பையன் பொழச்சிக்கிடான்..இப்படி தெரியாத ஒரு விஷயத்தை பண்ணி வருத்தப்பட்ட எனக்கு தெரிஞ்சே பல உயிரை எடுத்து இருக்குமேனே நினைச்சப்ப வந்த குற்ற உணர்ச்சி இன்னிக்கு வரைக்கும் அடங்குல.."..கலை.

"டேய்..அந்த பையன் உயிரும் நாம கொல்லுற தீவிரவாதி உயிரும் ஒண்ணுனு நினைக்கிறியா.."..கண்ணா..

"இல்லைடா..ஆனா அந்த சம்பவத்திற்கு பிறகு என்னால உயிரை வேறுப்படுத்தி பார்க்க முடியுல..குற்ற உணர்ச்சி என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது..இப்படியே போன பைத்தியக்காரன் மாதிரி ஆகிடுவேன்..ஒரே வழி வேலைய விட்டு போயடலாமுனு இருக்கேன்..அப்ப தான் அதுல இருந்த மீள முடியும்னு நம்பிக்கை இருக்கு.."..கலை..

"டேய்..ஊருக்கு போன நல்லா வேலை கிடைக்குமா..சரி..நீ இத முடிவு பண்ணதுக்கு அப்புறம் ஊர்ல இருந்து ஏன் வந்த அங்கேயே இருந்து இருக்க வேண்டியது தானே..."கண்ணா..

"அது ஜெனரல் என் பேர்ல வச்சி இருந்த நம்பிக்கைக்கு வந்தது..வலியோட தான் இந்த ஆபரேஷன்ல கலந்துக்கிட்டேன்..ஜெனரல்க்கு என்னோட ராஜினமா கடிதத்தை பார்வர்ட் பண்ணிட்டேன்..தகுந்த காரணங்கோளோடு..அவரு கண்டிப்பா விடுவிப்பர்னு நம்பிக்கை இருக்கு..அப்புறம் வேலை டிகிரி படிச்சு இருக்கேன்..கண்டிப்பா நல்ல வேலை கிடைக்குமுன்னு நம்பிக்கை இருக்கு..அதனால இன்னும் அதிகபட்சம் ஒரு வாரத்துல கிளம்பிடுவேன்.."


"சரி கிளம்புலமா..டைம் ஆகிடுச்சு.."..என்று எழுந்த கலையை பார்வை விலகாமல் ஆச்சரியத்துடன் கண்ணா பார்த்து கொண்டு இருந்தான்..

டிஸ்கி: சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள எழுதியது..படித்துவிட்டு வோட்டு போட்டுவிடுங்கள்..

45 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு வினோத். வெற்றி பெற வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

அப்ப ராணுவம்கிற பேர்ல நமக்கு கொடுத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு பண்ணும் உயிர் வதத்துக்கு நம்ம மனச்சாட்சி பீல் பண்ணவே பண்ணதுன்னு சொல்றியா.."

ரொம்ப டச்சிங்கா இருந்தது

அது ஒரு கனாக் காலம் said...

அடுத்த மாதம் வரப் போகிற உண்மை செய்தி...

..... தீவிரவாதிகளால் மும்பை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு, 40 உயிர்கள் பலி...

இந்த மாதிரி செய்திகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் ..கலையின் சேவை, இந்த நாட்டுக்கு தேவை



கதை நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் .

கலையரசன் said...

உரையாடல் நன்று!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
(என் பேரு வேற போட்டு எழுதிட்ட..
வேற என்னத்த சொல்றது)

பாரமுல்லா மாவட்டத்தின் "சில்க் பகுதயில்"
யப்பா, சாமி! வேற பகுதியே
உனக்கு கிடைக்கலையா..

(நல்லவேளை, என்னை கமெண்டோ வாக்கிட்ட,
இல்லனா.. என்னை காமெடி ஆக்கியிருப்பாங்க!)

கண்டிப்பா, ரூமுக்கு போய் ஓட்டு போடுறேன்!
ஹே, பிலீஈவ் மீஇ யா!

கார்த்திகைப் பாண்டியன் said...

கலை? கண்ணா? எல்லாம் நண்பர்கள் பேரா? நல்லா இருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)

கண்ணா.. said...

//கண்ணா மற்றும் கலை இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தமிழக கம்மேண்டோக்கள்..//

ஒரு நாள் மோர்குழம்பு கொடுத்ததுக்கே எனக்கு கமெண்டோ போஸ்ட்டா....நல்லாயிரு...!!

என்ன இருந்தாலும் கலையை கமெண்டோ சொன்னத என்னால ஜீரணிக்கவே முடியலை.....

கண்ணா.. said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு....ஆனா..இந்த கிஷோருக்கும், சுரேஷுக்கும் வில்லன் ரோல் குடுத்துருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.......

வினோத் கெளதம் said...

@ S.A. நவாஸுதீன் said

//நல்லா இருக்கு வினோத். வெற்றி பெற வாழ்த்துக்கள்//

//ரொம்ப டச்சிங்கா இருந்தது//

ரொம்ப நன்றி நண்பரே...

கண்ணா.. said...

குற்றங்கள் என்று தலைப்பு வைத்து விட்டு கலை, கண்ணா என்று பெயர் வைத்து உள்குத்தா....!! அமீரக அஜுத்தே..இது நியாயமா...?!!!

வினோத் கெளதம் said...

@ அது ஒரு கனாக் காலம் said..

//இந்த மாதிரி செய்திகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் ..கலையின் சேவை, இந்த நாட்டுக்கு தேவை//

ஆமாம் சுந்தர் சார்..கண்டிப்பா அவர்கள் தேவை நம் நாட்டிற்கு தேவை..அது அந்த பாத்திரத்தின் இயல்பு அவ்வளவு தான்.,.

//கதை நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் .//

ரொம்ப நன்றி..:)

வினோத் கெளதம் said...

@ கலையரசன் said...

//உரையாடல் நன்று!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
(என் பேரு வேற போட்டு எழுதிட்ட..
வேற என்னத்த சொல்றது)//

நன்றி கலை..உன் பேர வச்ச கதை நல்லா இருக்கும்னு சொன்னாங்க..

//பாரமுல்லா மாவட்டத்தின் "சில்க் பகுதயில்"
யப்பா, சாமி! வேற பகுதியே
உனக்கு கிடைக்கலையா.. //

உனக்காக "நமீதா" மாவட்டம்னா வைக்க முடியும்..

//கண்டிப்பா, ரூமுக்கு போய் ஓட்டு போடுறேன்!
ஹே, பிலீஈவ் மீஇ யா!//

Ya..sure..Still hav some belief..

வினோத் கெளதம் said...

@கார்த்திகைப் பாண்டியன் said...
//கலை? கண்ணா? எல்லாம் நண்பர்கள் பேரா? நல்லா இருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..:-)//

ஆமாம் ச்சும்மா..தமாசுக்கு வச்சது...பேரு தான் காமெடி..ஆனா கதை சீரியஸ்..
நன்றி நண்பா..

வினோத் கெளதம் said...

@ Kanna..

//ஒரு நாள் மோர்குழம்பு கொடுத்ததுக்கே எனக்கு கமெண்டோ போஸ்ட்டா....நல்லாயிரு...!!//

ஒரு கமாண்டோ மோர்க்குழம்பு கொடுத்தாரு, ஒரு கமாண்டோ சீடி கொடுத்தாரு..

//என்ன இருந்தாலும் கலையை கமெண்டோ சொன்னத என்னால ஜீரணிக்கவே முடியலை.....//

என்ன பண்ணுறது..வேற வழி..

//கதை ரொம்ப நல்லாயிருக்கு....ஆனா..இந்த கிஷோருக்கும், சுரேஷுக்கும் வில்லன் ரோல் குடுத்துருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...//

நன்றி கண்ணா..போன கதையுலையே அவர்கள் இருவரையும் போதுமான அளவுக்கு டேம்ஏஜ் ஆகியாச்சு..அதனால் இந்த கதையில் விட்டு விட்டேன்..

வினோத் கெளதம் said...

@Kanna said...
//குற்றங்கள் என்று தலைப்பு வைத்து விட்டு கலை, கண்ணா என்று பெயர் வைத்து உள்குத்தா....!! அமீரக அஜுத்தே..இது நியாயமா...?!!!//

ஹீ..ஹீ.ஹீ..புரிஞ்சிகிடகலே..

//அமீரக அஜுத்தே..இது நியாயமா...?!!!//

இதுக்கு ஒரு நாளு என்னை ரவுண்டு கட்டி அடிக்க போறாங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு மனிதன் இரத்தம் சிந்துவான் என்று நினைத்தால் அறுவை சிகிச்சை செய்யமுடியாது தல

தீயவை அழிய வேறுவழி இல்லை.

போர்வீரர்களின் உணர்வுகளை அழகாக வடித்துள்ளீர்கள்

இதே போல் ரயில் ஓட்டுநர்கள் பல்ர் தங்கள் கண்முன் நிகழும் தற்கொலை நிகழ்வுகளைப் பார்த்து
மனநோயாளிகளாக மாறியிருக்கிறார்கள்.

நம்மை அழிக்கவரும் விஷ ஜந்துகளை அழிப்பது தவறில்லை தல்

Anonymous said...
This comment has been removed by the author.
ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் நண்பா.
அப்புறம் வந்து படித்துச் சொல்றேன்!!

kishore said...

நல்லா இருக்கு மச்சான்... வாழ்த்துக்கள்...
கலை அண்ட் கண்ணா இருவருக்கும் எனது வணக்கங்கள்..

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு வினோத்...

//ஒருவேளை அவர் கடவுளுங்கரதலேயே மனச்சாட்சி பெண்டுலம் மாதிரி ஆடமா குற்ற உணர்ச்சி இல்லாம இருந்துட்டாரு ஆனா என்னால முடியுலடா.."//

கலக்கியிருக்கீங்க பாஸ்..

வெற்றிபெற வாழ்த்துகள்..

ஷண்முகப்ரியன் said...

அருமையான களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்,வினோத்.
கருத்தில் மட்டும் கவனம் செலுத்தியதனால் கதைகளுக்கே உரிய ’டிராமாடிக் எலிமெண்ட்’சற்றே மிஸ்ஸிங்.
இருப்பினும் தரமான முய்ற்சி.வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஒரு மனிதன் இரத்தம் சிந்துவான் என்று நினைத்தால் அறுவை சிகிச்சை செய்யமுடியாது தல

தீயவை அழிய வேறுவழி இல்லை.

நம்மை அழிக்கவரும் விஷ ஜந்துகளை அழிப்பது தவறில்லை தல்//

ஆமாம் தள கரெக்ட் தான்..அது ஒரு கேரக்டர் வெளிப்பாடு தான்..அப்படி பார்த்தல் நீங்கள் சொல்வது மாதிரி ஒரு அறுவை சிகிச்சை கூட பண்ண முடியாது என்பது தான் நிஜம்..

//இதே போல் ரயில் ஓட்டுநர்கள் பல்ர் தங்கள் கண்முன் நிகழும் தற்கொலை நிகழ்வுகளைப் பார்த்து
மனநோயாளிகளாக மாறியிருக்கிறார்கள்.//

பாருங்க இங்க இதே மாதிரி ஆககூடதுனு கலை எடுத்த முடிவு தான் இது..

//போர்வீரர்களின் உணர்வுகளை அழகாக வடித்துள்ளீர்கள்//

நன்றி தல..

வினோத் கெளதம் said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//வாழ்த்துக்கள் நண்பா.
அப்புறம் வந்து படித்துச் சொல்றேன்!!//

சரி நண்பா..

வினோத் கெளதம் said...

@ KISHORE said...

Thanks Machi..Plz vote for us..

வினோத் கெளதம் said...

@ தீப்பெட்டி said...
//நல்லாயிருக்கு வினோத்...//

நன்றி கணேஷ்.

வினோத் கெளதம் said...

@ ஷண்முகப்ரியன் said...

//கருத்தில் மட்டும் கவனம் செலுத்தியதனால் கதைகளுக்கே உரிய ’டிராமாடிக் எலிமெண்ட்’சற்றே மிஸ்ஸிங்.//

நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி சார்..

//இருப்பினும் தரமான முய்ற்சி.வாழ்த்துகள்.//

நன்றிகள் பல..

வெற்றி-[க்]-கதிரவன் said...

கதை கரு சூப்பர், ஆனா டச்சிங் மிஸ்ஸிங்....

வெற்றி-[க்]-கதிரவன் said...

வசந்த் படம் மாதரி இருக்கு ஆனா தரமான படம்

Suresh said...

மச்சான் வாழ்த்துகள் டா சும்மா நச்சுனு இருக்கு

Suresh said...

வெற்றி பெற வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

@ பித்தன் said...

//கதை கரு சூப்பர், ஆனா டச்சிங் மிஸ்ஸிங்....//

நன்றி மச்சி..கதையின் நீளம் கருதி சில விஷயங்களை தவிர்த்து விட்டேன்..

//வசந்த் படம் மாதரி இருக்கு ஆனா தரமான படம்//

வசந்த் படம் மாதிரி தான் இந்த கதையும் ஆகா போகுது..நல்லா இருக்கு ஆனா ஓடுல..வோட்டு போடுடா டேய்..

வினோத் கெளதம் said...

@ Suresh..

//மச்சான் வாழ்த்துகள் டா சும்மா நச்சுனு இருக்கு//

நன்றி மச்சி..

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பா!

ஆ.சுதா said...

முழுதும் படித்தேன் கதை நல்லா இருக்கு கௌதம். வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

நன்னாயிருக்கு...

பேஷ் பேஷ்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

கதையில் நல்ல அழுத்தம் இருக்கு நண்பா

வினோத் கெளதம் said...

@ வால்பையன் said...

//வாழ்த்துக்கள் நண்பா!//

நன்றி நண்பா..:))

@ ஆ.முத்துராமலிங்கம் said...

//முழுதும் படித்தேன் கதை நல்லா இருக்கு கௌதம். வாழ்த்துக்கள்.//

நண்ணி நண்பா..

@ ஆ.ஞானசேகரன் said...

//வாழ்த்துகள் நண்பா//

சுக்ரியா..:))

@ பிரியமுடன்.........வசந்த் said...

//நன்னாயிருக்கு...

பேஷ் பேஷ்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//

Merci ami..

வினோத் கெளதம் said...

@ ஆ.ஞானசேகரன் said...

//கதையில் நல்ல அழுத்தம் இருக்கு நண்பா//

நான் இன்னும் கொஞ்சம் நல்லா எழுத முயற்சி பண்ணி இருக்கலாம் வேகமா போஸ்ட் பண்ணிட்டேன்..நன்றி நண்பரே..

Joe said...

கொலை செய்வது பாவம், அது தீவிரவாதி செய்தாலும், ராணுவ வீரன் செய்தாலும், மரண தண்டனை என்ற பெயரால் அரசாங்கம் செய்தாலும்.

நல்ல கருத்துள்ள கதை. சுவாரஸ்யமாக இருந்ததா என்று கேட்டால் ....

வாழ்த்துக்கள்.

வினோத்குமார் said...

good story....

finally u changed the bhagavat geeta concept...

in that arjuna enter into the war after krishna's advice...

but here kalai return back even after the kanna's advice...

nice. twist.

सुREஷ் कुMAர் said...

கதை நல்லா இருக்கு..
சிறுகதை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் வினோத்..

வினோத் கெளதம் said...

@ Joe said...

//கொலை செய்வது பாவம், அது தீவிரவாதி செய்தாலும், ராணுவ வீரன் செய்தாலும், மரண தண்டனை என்ற பெயரால் அரசாங்கம் செய்தாலும். //

கண்டிப்பாக அதற்கு உண்டான அதிகாரத்தை மக்களே எடுத்துக்கொண்டார்கள்..என்ன பண்ண முடியும்..

//நல்ல கருத்துள்ள கதை. சுவாரஸ்யமாக இருந்ததா என்று கேட்டால் ....

வாழ்த்துக்கள்.//

நன்றி ஜோ..இன்னும் மெருகேத்தி போஸ்ட் பண்ணி இருக்கலாம் ஆனா அவசர பட்டுட்டேன்..:))

வினோத் கெளதம் said...

@ வினோத்குமார் said...

// good story....

finally u changed the bhagavat geeta concept...

in that arjuna enter into the war after krishna's advice...

but here kalai return back even after the kanna's advice...

nice. twist.//

நன்றி வினோத்..அந்த பகவத் கீதை நானே எதிப்பர்காத ஓன்று..நீங்க சொல்லி தான் தெரிகிறது..

வினோத் கெளதம் said...

@ சுரேஷ் குமார் said...

//கதை நல்லா இருக்கு..
சிறுகதை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் வினோத்.//

நன்றி சுரேஷ் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

Unknown said...

உங்கள் கதையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது. விவாதங்கள் சரியானவை.

எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

வேறு ஒரு யதார்த்தமான முடிவை யோசித்திருக்கலாம்.


வாழ்த்துக்கள்!