Wednesday, June 3, 2009

கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் கவிதை-3


சீட் பெல்ட்..

நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளது..இரவில் நேரம் கிடைக்கும் சமயங்களில் அங்கு சென்று எதாவது வாங்கி வருவேன்..அப்படி செல்லும் சமயங்களில் அங்கு கவுண்டேரில் உக்கார்ந்து இருக்கும் நடுத்தர வயது பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் எல்லா வாடிக்கையாளரிடமும் அன்பாக சகஜமாக சிரித்து பேசி நலம் விசாரிப்பார்.நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு சென்ற பொழுது அவரை இரண்டு நாட்களாக காணவில்லை..அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் எங்க அவங்க விடுமுறையில் போய் இருக்காங்கள என்று கேட்டேன்.

அதற்கு அவர் அவங்க இறந்து ஒரு வாரம் ஆகுதுன்னு சொன்னார்..எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி என்று கேட்டபொழுது ..காரில் இன்னொருவருடன் பயணம் செய்த பொழுது சீட் பெல்ட் அணிய மறந்து..ஒரு சிக்னலில் நின்று இருந்த பொழுது..பின்னாடி வேகமாக கட்டுபாடின்றி வந்த இன்னொரு கார் இடித்து..முன்னாடி உக்கார்ந்து இருந்த இவர் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியில் தூக்கி ஏறியப்பட்டு இருக்கிறார்..ஸ்பாட் அவுட்..காரை ஒட்டி கொண்டு சென்றவர் பெல்ட் அணிந்து இருந்ததால் பலத்த அடியுடன் மட்டும் தப்பித்து விட்டார்..

நான் எப்பொழுதும் டாக்ஸியில் போனாலும் சரி..இல்லை வேலை நிமித்தமாக சைட் சென்றாலும் சரி..ஏதோ கடமை என்றும், இங்கு இருக்கும் சட்ட விதிமுறைகளுக்கு பயந்து தான் பெல்ட் அணிவேன்..ஆனால் இப்பொழுது நான் காரில் எப்பொழுது அமர்ந்தாலும் என் கை தானாக பெல்டை தேடி செல்கிறது..ஏன் என்றால் அவர் மரணம் உணர்த்திய செய்தி இது தான்..இது தான் நான் அவருக்கு செய்யும் அஞ்சலி..


கொஞ்சம் சினிமா..
Savior என்று ஒரு படம்..நான் ஊரில் இருந்த பொழுது Zee சேனல்லில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள்..அவர்கள் ஒளிப்பரப்பும் பொழுது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்து அந்த படத்தின் காட்சி அமைப்புகளுக்காக பிற்ப்பாடு முழுமையாக பார்தேன்..

டேனிஸ் குவைட் தான் படத்தின் பிரதான பாத்திரம்..ஒரு தீவிரவாத தாக்குதலில் தன் குடும்பத்தை இழந்து அதனால் ஏற்பட்ட விரத்தியினால்..செர்பியா ராணுவத்தில் ராணுவ வீரராக வாடகை முறையில் அவர் மனைவியின் மரணத்தினால் ஏற்பட்ட உந்துதலினால் சேருவார்..போஸ்னியா யுத்ததின் ஒரு பகுதியாக கண்முடித்தனமாக கண்ணில்ப்படும் இஸ்லாமிய மக்களை எல்லாம் கொன்று வதம் புரியும் செர்பியா ராணுவத்தின் செய்கையால் அதுவும் உடன் இருக்கும் ஒரு ராணுவ வீரன் ஒரு கர்ப்பிணி பெண்ணிடம் மிகவும் அரக்கத்தனமாக நடந்து கொள்ளும் வேளையில் அவனின் செய்கை பிடிக்காமல் அவனை கொன்று விட்டு அந்த பெண்ணை காப்பற்றி மனம் மாறுவார்..அதன்பின் ஒரு கட்டத்தில் அந்த பெண் பிரசிவித்த பின் அவளை எப்படியாவது அந்த நாட்டில் இருந்து வெளியேற்றி அவளையும் அவள் குழந்தையும் காப்பாற்ற முயற்சி செய்வார்..ஆனால் இவரின் கண் முன்னாலே அந்த பெண்ணும் இன்னும் சில பேரும் மர சுத்தியலால் அடித்து சாக அடிக்க படுவார்கள்..அந்த வெறிபிடித்த கும்பலில் இருந்து தப்பிக்க ஒரு சிதிலம் அடைந்த ஒரு படகின் உள்ளே ஒளிந்து இருப்பார்..அதே சமயம் அந்த குழந்தை அழுவ ஆரம்பிக்க அந்த அழுகை சத்ததை கேட்டவுடன் அந்த வெறிப்பிடித்த கும்பல் இவர்களை நோக்கி வர அந்த குழந்தையின் அழுகை வெளியில் வரமால் இருக்க இவர் அந்த குழந்தையின் வாயை அடைத்து பிடித்து இருப்பார்..அவர்களும் அங்கு யாரும் இல்லை என்று கிளம்பி போய் விடுவார்கள்..அவர்கள் போன பின்பு குழந்தையை கவனிக்கும் பொழுது தான் தெரியும் குழந்தை மூர்ச்சை அடைந்து இருக்கும்..அதன் பிறகு வரும் காட்சிகளில் நமக்கும் உயிர் போய் வந்து விடும்..இந்த ஒரு காட்சி தான் பிற்ப்பாடு அந்த படத்தை என்னை முழுவதுமாக பார்க்க வைத்தது..

போரில் ஒரு சமுகத்தின் மீது பல பரிமாணங்களில் காட்டப்படும் வெறுப்பை இயக்குனர் படம் பிடித்து இருப்பார்..


ஒரு கவிதை இல்லை ஹைக்கு இல்லை ஒரு வரி..
Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..


64 comments:

தினேஷ் said...

/"சுப்பர் பிகரு"..//
சூப்பர் பதிவு..

மயாதி said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//

எந்த station எண்டு சொல்லுப்பா நானும் வாங்கணும்..

வினோத் கெளதம் said...

@ சூரியன் said...

/"சுப்பர் பிகரு"..//
//சூப்பர் பதிவு..//

நன்றிங்க சூரியன்..

வினோத் கெளதம் said...

@ மயாதி said...

//எந்த station எண்டு சொல்லுப்பா நானும் வாங்கணும்..//

அது நானா தான் இருக்கும்னு முடிவே பண்ணிடங்களா..:))

கவிதைங்க இது கவித..கவித..
(தூ..இது எல்லாம் கவிதையா அப்படி என்று துப்புவது எனக்கு தெரிகிறது)..

வித்தியாசமான பேரு தலைவா உங்களுக்கு..

சென்ஷி said...

//காரில் இன்னொருவருடன் பயணம் செய்த பொழுது சீட் பெல்ட் அணிய மறந்து..ஒரு சிக்னலில் நின்று இருந்த பொழுது..பின்னாடி வேகமாக கட்டுபாடின்றி வந்த இன்னொரு கார் இடித்து..முன்னாடி உக்கார்ந்து இருந்த இவர் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியில் தூக்கி ஏறியப்பட்டு இருக்கிறார்..ஸ்பாட் அவுட்..//

:(((((((

ப்ரியமுடன் வசந்த் said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//

வினோ சார் சூப்பர்

sakthi said...

Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு".

இவ்ளோ பெரிய பதிவுல இது தான் நிறைய பேருக்கு பிடித்து இருக்கு போல

sakthi said...

அவர்கள் போன பின்பு குழந்தையை கவனிக்கும் பொழுது தான் தெரியும் குழந்தை மூர்ச்சை அடைந்து இருக்கும்..அதன் பிறகு வரும் காட்சிகளில் நமக்கும் உயிர் போய் வந்து விடும்.

படிக்கும் போதே பக்ன்னு இருக்கு வினோத்

Muniappan Pakkangal said...

Seat belt importance is nice.Savior also good film.Super figaru thaan-unmai sambavam,eppo?

வினோத் கெளதம் said...

@ சென்ஷி said...

என்ன சார் பண்ணுவது :((

வினோத் கெளதம் said...

@ பிரியமுடன்.........வசந்த் said...

//வினோ சார் சூப்பர்//

நன்றி வசந்த்..சார் இல்லை வெறும் வினோத் தான்..:))

வினோத் கெளதம் said...

@ sakthi said...

//இவ்ளோ பெரிய பதிவுல இது தான் நிறைய பேருக்கு பிடித்து இருக்கு போல//

:))


//படிக்கும் போதே பக்ன்னு இருக்கு வினோத்//

அதை எடுத்த விதம் இன்னும் பக்குன்னு இருக்கும் சக்தி..

வினோத் கெளதம் said...

@ Muniappan Pakkangal said...

// Seat belt importance is nice.Savior also good film.Super figaru thaan-unmai sambavam,eppo?//

நன்றி சார்..

சார் அது உண்மை இல்லை..ச்சும்மா தமாசு..

Anonymous said...

கவிதை!:)

kishore said...

கலக்கல் காம்பிநேஷன் மச்சி... அன்னிக்கு நீ அறை வாங்குன போலீஸ் அக்காவ இன்னும் மறகலயா ?

ஆ.ஞானசேகரன் said...

//சுப்பர் பிகரு"..//

சூப்பர் பதிவோட சூப்பர் பிகரா நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//இப்பொழுது நான் காரில் எப்பொழுது அமர்ந்தாலும் என் கை தானாக பெல்டை தேடி செல்கிறது..ஏன் என்றால் அவர் மரணம் உணர்த்திய செய்தி இது தான்..இது தான் நான் அவருக்கு செய்யும் அஞ்சலி..//

உருக்கமாக இருக்கு நண்பா.. அந்த பெண்மணிக்கு என் அஞ்சலியும்

ஆ.சுதா said...

முதல் செய்தி உருக்கையும், எச்சரிக்கையும் கலந்து சொல்லிட்டீங்க.

அடுத்த ஒரு நல்ல படத்தை அறிமுகப் படுத்திட்டீங்க... அப் படத்தை பார்த்தில்லை, பார்க்க ஆவலை ஏற்படித்து விட்டது உங்கள் எழுத்து.

கவிதை சூப்பர் மொக்கை!!

தேவன் மாயம் said...

Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..
//

கலக்கல்!!

கண்ணா.. said...

கொஞ்சம் சீரியஸ்
---------------

:(

அதுவும் பிலிப்பைன் புள்ள இறந்ததை நினைச்சா :((((


கொஞ்சம் சினிமா
----------------

துரை இங்கிலிபீசு படமெல்லாம் பாக்குது....

கொஞ்சம் கவிதை
----------------


//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//

UAE ல பெண் போலீஸ் கிடையாதே....

இது ஊர்ல வாங்குன அடியோ......

Anbu said...

கலக்கல் பதிவு அண்ணா..

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவுப்பா.. அந்த படத்தோட கதை கேக்கும்போதே பகீர்னு இருக்கு.. கடைசி லொள்ளு தூள்..:-)

தீப்பெட்டி said...

//காரில் இன்னொருவருடன் பயணம் செய்த பொழுது சீட் பெல்ட் அணிய மறந்து..ஒரு சிக்னலில் நின்று இருந்த பொழுது..பின்னாடி வேகமாக கட்டுபாடின்றி வந்த இன்னொரு கார் இடித்து..முன்னாடி உக்கார்ந்து இருந்த இவர் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியில் தூக்கி ஏறியப்பட்டு இருக்கிறார்..ஸ்பாட் அவுட்..//

வருத்தங்கள்..

:(((

S.A. நவாஸுதீன் said...

சீட் பெல்ட் குறித்து கூறியிருப்பது ரொம்ப நல்ல விஷயம். இங்கு (சவுதி) ஓட்டுனரின் அருகில் இருப்பவர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் நூறு ரியால் (இந்திய மதிப்பு Rs 1,250/-) அபராதம் விதிக்கப்படும்.

Savior - இதுவரை பார்க்கவில்லை. உங்களின் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. வாங்கணும்.

Eve Teasing - சூப்பர்

Unknown said...

நல்லா இருக்குங்க.பட்டதான் தெரியும்
நமக்கு.ஹெல்மெட் அணிவோம்.சீல் பெல்ட் அணிவோம்.

சினிமாவும் ஓகே.நிறைய shock value
loaded?

போலீஸ்காரியின்
முன்பக்கம் பின்பக்கம் பார்த்தபடி
Eveteasing கைதி

Anonymous said...

konjam serious ரொம்ப கஷ்டமா போச்சு பாவம் அந்த அம்மா.....
நாம் அலட்சியமாக இருக்கும் அந்த சில நிமிடங்களில் எதுவும் நடக்கும் என்பதற்க்கு மேலும் இது ஒரு சான்று மற்றும் இந்த பதிவை பார்த்து careless ஆக இருக்கும் நம் நண்பர்கள் இனியேனும் உஷாராக இருக்கனும்.....

கலையரசன் said...

சீரியஸ் - என்னையும் சீட் பெல்ட் போட வச்சிட்ட..

சினிமா - பாருடா... விமர்சனம் எல்லாம் எழுதுறாரு(!)
ஹாலிவுட் மாமா ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சிடு!!

கவிதை - விடு.. மாமு! புண்பட்ட
நெஞ்சை எழுதி எழுதி ஆத்திக்கற?

kishore said...

கலை... ஹாலிவுட் மேட்டர் மாமா.. அது தான் விநோத்கு கரெக்ட் ...

விக்னேஷ்வரி said...

ஆமாங்க, சீட் பெல்ட் இவ்வளவு முக்கியமானது தான்

Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு".. //

அடப் பாவி.... :O

வெற்றி-[க்]-கதிரவன் said...

:)

வினோத் கெளதம் said...

கவின் said...

//கவிதை!:)//

நன்றி கவின்..:))

வினோத் கெளதம் said...

@ KISHORE said...

//கலக்கல் காம்பிநேஷன் மச்சி... அன்னிக்கு நீ அறை வாங்குன போலீஸ் அக்காவ இன்னும் மறகலயா ?//

நன்றி மச்சி..என்ன அடிச்சது கூட கொஞ்சம் தான் நியாபகத்துல இருக்கு..ஆனா உன் மூஞ்சுல பூட்ஸ் கால்ல நச்சி நச்சினு மிதிசிசுச்தே அதா மட்டும் மறக்க முடியாது..

வினோத் கெளதம் said...

//ஆ.ஞானசேகரன் said...

//சுப்பர் பிகரு"..//

சூப்பர் பதிவோட சூப்பர் பிகரா நண்பா//

தொடர் ஆதரவுக்கு நன்றி நண்பரே..

வினோத் கெளதம் said...

ஆ.முத்துராமலிங்கம் said...

//முதல் செய்தி உருக்கையும், எச்சரிக்கையும் கலந்து சொல்லிட்டீங்க.

அடுத்த ஒரு நல்ல படத்தை அறிமுகப் படுத்திட்டீங்க... அப் படத்தை பார்த்தில்லை, பார்க்க ஆவலை ஏற்படித்து விட்டது உங்கள் எழுத்து.

கவிதை சூப்பர் மொக்கை!!//

நன்றி நண்பா..அது கவிதை ஈளை நீங்க சொன்ன மாதிரி மொக்கை தான் ..ச்சும்மா தமாசுக்கு போட்டேன்..

வினோத் கெளதம் said...

thevanmayam said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..
//

//கலக்கல்!!//

நன்றி தல..

வினோத் கெளதம் said...

@ Kanna said...

//அதுவும் பிலிப்பைன் புள்ள இறந்ததை நினைச்சா :((((//

ஆமாம் வருத்தம் தான்..

//துரை இங்கிலிபீசு படமெல்லாம் பாக்குது....//

எப்பயாச்சும் பாக்குறது தான்..


//UAE ல பெண் போலீஸ் கிடையாதே....

இது ஊர்ல வாங்குன அடியோ......//

அது நான் இல்லைப்பா.

வினோத் கெளதம் said...

// Anbu said...

கலக்கல் பதிவு அண்ணா..//

நன்றி அன்பு தம்பி..

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன் said...

//நல்ல பதிவுப்பா.. அந்த படத்தோட கதை கேக்கும்போதே பகீர்னு இருக்கு.. கடைசி லொள்ளு தூள்..:-)//

நன்றி நண்பா..
ஓரளவு நல்ல படம் தான்..வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்..

வால்பையன் said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//

துபாய்ல வேற மாதிரி தண்டனைன்னு சொன்னாங்களே?

வினோத் கெளதம் said...

@ தீப்பெட்டி said...

//வருத்தங்கள்..//

:(((

என்ன பன்னுவது கணேஷ் பாவம் தான்..இரண்டு குழந்தைகள் வேறு அவருக்கு..

வினோத் கெளதம் said...

@ S.A. நவாஸுதீன் said...

//இங்கு (சவுதி) ஓட்டுனரின் அருகில் இருப்பவர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் நூறு ரியால் (இந்திய மதிப்பு Rs 1,250/-) அபராதம் விதிக்கப்படும்.//

இங்கு அமீரகத்தில் 500 திர்காம் அபராதம் கட்ட வேண்டும்..

வினோத் கெளதம் said...

//Savior - இதுவரை பார்க்கவில்லை. உங்களின் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. வாங்கணும்.

Eve Teasing - சூப்பர்//#

நன்றி நண்பரே தொடர் ஆதரவுக்கு..

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...

vinoth gowtham said...

கே.ரவிஷங்கர் said...

// நல்லா இருக்குங்க.பட்டதான் தெரியும்
நமக்கு.ஹெல்மெட் அணிவோம்.சீல் பெல்ட் அணிவோம்.//

கண்டிப்பாக அணிய வேண்டும்..

//சினிமாவும் ஓகே.நிறைய shock value loaded?//

பாக்குறப்ப இன்னும் Impact அதிகம் இருக்கும்..

வினோத் கெளதம் said...

//போலீஸ்காரியின்
முன்பக்கம் பின்பக்கம் பார்த்தபடி
Eveteasing கைதி//

இது நன்னா இருக்கே கதை..

வினோத் கெளதம் said...

தமிழரசி said...

//konjam serious ரொம்ப கஷ்டமா போச்சு பாவம் அந்த அம்மா.....
நாம் அலட்சியமாக இருக்கும் அந்த சில நிமிடங்களில் எதுவும் நடக்கும் என்பதற்க்கு மேலும் இது ஒரு சான்று மற்றும் இந்த பதிவை பார்த்து careless ஆக இருக்கும் நம் நண்பர்கள் இனியேனும் உஷாராக இருக்கனும்.....//

ஆமாம் தமிழ் ஒரு Awareness கண்டிப்பா எல்லோருக்கும் இருக்கணும்..என்ன ஆயிட போகுதுன்னு நினைக்குறது தான் ஒரு உயிர் இழப்புக்கு காரணம் ஆயிருக்கு..

வினோத் கெளதம் said...

@ கலையரசன் said...

//சினிமா - பாருடா... விமர்சனம் எல்லாம் எழுதுறாரு(!)
ஹாலிவுட் மாமா ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சிடு!!//..

ஹாலிவுட் சித்தப்பா பெரியப்பா அண்ணாத்தே இப்படி எதாச்சும் பட்டம் கொடுக்க வேண்டியது தானே..அது என்ன மாமா.

வினோத் கெளதம் said...

// KISHORE said...

கலை... ஹாலிவுட் மேட்டர் மாமா.. அது தான் விநோத்கு கரெக்ட் ...//

தோ வந்துட்டாருடா..

வினோத் கெளதம் said...

@ விக்னேஷ்வரி said...

// ஆமாங்க, சீட் பெல்ட் இவ்வளவு முக்கியமானது தான்//

ஆமாங்க கண்டிப்பா..

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு".. //

அடப் பாவி.... :O//

ச்சும்மா..தமாசுங்க..

வினோத் கெளதம் said...

//பித்தன் said...

:)//

பித்தா..

வினோத் கெளதம் said...

@ வால்பையன் said...

//துபாய்ல வேற மாதிரி தண்டனைன்னு சொன்னாங்களே?//

வால்ஸ் அது நான் இல்லை..துபாய்ல என்ன தண்டனை தெரியுலையே..:))

kishore said...

//கலக்கல் காம்பிநேஷன் மச்சி... அன்னிக்கு நீ அறை வாங்குன போலீஸ் அக்காவ இன்னும் மறகலயா ?//

//நன்றி மச்சி..என்ன அடிச்சது கூட கொஞ்சம் தான் நியாபகத்துல இருக்கு..ஆனா உன் மூஞ்சுல பூட்ஸ் கால்ல நச்சி நச்சினு மிதிசிசுச்தே அதா மட்டும் மறக்க முடியாது..//

நான் என்ன பண்றது மச்சி... அவங்கள பாத்து பணத்த வச்சிகிங்கனு சொல்றதுக்கு பதிலா வச்சிகிங்கனு மட்டும் சொல்லி தொலச்சிட்டேன்...

kishore said...
This comment has been removed by a blog administrator.
kishore said...

உண்மைய சொன்னா கமெண்டஅ டெலிட் பண்ணிடுவ... என்ன உலகமடா இது...

Viji said...

Vinoth, extremely nice write up...Infact you were able to present 3 different topics in an interesting way!

Hey, ur "eve teasing" poem, is simply the BEST!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் மணத்தில் 2வது ஓட்டு, தமிழீஷில் இருபதாவது ஓட்டு என்னோடது. என்ன ஒரு ஒற்றுமை.

முதலுக்கும் அடுத்ததற்கும் ஒரு 0 மட்டுமே கூடுதல்..,

வினோத் கெளதம் said...

@ KISHORE said...

//உண்மைய சொன்னா கமெண்டஅ டெலிட் பண்ணிடுவ... என்ன உலகமடா இது...//

Dei..Athan naan thaan solrenla unakku konjam sensor tevai paduthu..

வினோத் கெளதம் said...

@ Viji..

//Vinoth, extremely nice write up...Infact you were able to present 3 different topics in an interesting way!

Hey, ur "eve teasing" poem, is simply the BEST!//

Thanks viji..Tx 4 ur continuous support..Infact the encouraging people like u are d reason behind tis things..

வினோத் கெளதம் said...

@ SUREஷ் (பழனியிலிருந்து) said...

//தமிழ் மணத்தில் 2வது ஓட்டு, தமிழீஷில் இருபதாவது ஓட்டு என்னோடது. என்ன ஒரு ஒற்றுமை.

முதலுக்கும் அடுத்ததற்கும் ஒரு 0 மட்டுமே கூடுதல்..,//

Tala enna solven anbuku nantri..palaniku vantha murugana paarpeno illayo ungalai paarpathu uruthi..

ச.பிரேம்குமார் said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//

அடப்பாவீகளா :))))

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Joe said...

நல்ல பதிவு வினோத்.

தொடர்ந்து கலக்குங்க!

வினோத் கெளதம் said...

@Prem..
நன்றி பிரேம்..

@ Joe..
வாங்க..ஜோ..நன்றி..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//Eve Teasing கேஸ்ல் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
சும்மா சொல்லக்கூடாது ..
"சுப்பர் பிகரு"..//


ippo solren.. nee thaan unmayana youthu......