Monday, June 29, 2009

அஜித்,விஜய் அப்புறம் கொஞ்சம் பியர்..பாகம்-2


இருவரும் ஜீப்பில் ஏறி அமர்ந்தனர்..கான்ஸ்டபிள் வண்டிய ஒட்டி கொண்டு வந்தார்.
"நீ போயிருக்கலாமே டா"..விஜய் கேட்டான்.
"போயிருப்பேன்.. உங்க வீட்டுக்கு நான் தனியா போக முடியாது..ஊருக்கு போலாம்னு பார்த்தா கூட முப்பது ரூபா தான் இருக்கு அதான் ஜீப்லையே ஏறிட்டேன்.."


"த்த்தூ.."

"டேய் இப்படி மாட்டிகிட்டோமே என்னடா பண்றது..கொஞ்சமாச்சும் பீல் பண்றியா நீ.."..விஜய்.

"நான் அப்பயே சொன்னேன் படத்துக்கு போனுமானு..கேட்டியா"..அஜித்.
"டேய் பரதேசி குடிக்கலாம்னு சொன்னது நீ தாண்டா வென்ன"
"சரி விடு..இந்த 30 ரூபாவா லஞ்சமா வச்சிகுங்க சொல்லி கொடுத்து பாரு..என்ன சொல்ரங்கனு பாப்போம் "
"டேய் இந்த சமயத்துல எப்படிடா காமெடி பண்ற..அசிங்கமா இருக்குடா.."
"இரு எதாச்சும் யோசிப்போம்"
"நீ யோசிச்சு முடிக்றத்துகுள்ள ஸ்டேஷன் வந்துடுடும்.."

ஜீப் ஸ்டேஷன்ல் நின்றது..

கான்ஸ்டபிள் விஜயை பார்த்து "இங்க பாருப்பா உண்மைய ஒத்துக்கோ நாளைக்கு கோர்ட்ல வந்து பைன் கட்டு..வண்டிய எடுத்துக்கோ "

"சார் தெரியமா பண்ணிடோம் சார்.."

"தெரியமா பண்ணிங்களோ தெரிஞ்சு பண்ணிங்களோ..ஆனா ஒரு தடவ ஃபைன் கட்டுன தான் புத்தி வரும்..கான்ஸ்டபிள் அந்த பையன் மேல சார்ஜ் சீட் போட்டுகொடுங்க..தம்பி இங்க பாருங்க நாளைக்கு வந்து கோர்ட்ல பைன் கட்டிட்டு வண்டிய ஸ்டேஷன் வந்து எடுத்துக்கோ இப்ப வீட்டுக்கு கிளம்புங்க"..
எப்பா வீட்டுக்கு கிளம்புலமா.. அஜித் பெருமூச்சு விட்டான்..

இருவரும் ஆட்டோவை பிடித்து கிளம்பினார்.

"டேய் அசிங்கமா இருக்குடா..நாளைக்கு கோர்ட்ல பைன் கட்டுரப்பா எவனாச்சும் பாத்தான்னு அவளோ தான் கதையே முடிஞ்சு போச்சு"..விஜய்.
"அப்ப ஃபைன் கட்ட போறியா..அது சரி உன் வண்டி நீ கட்டுற ..காலையில என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு அதுக்கு அப்புறம் தானே கோர்ட்கு போவ..இல்ல வண்டிய எடுத்துட்டு வந்து விடுறியா.."..அஜித்.
"என்னது நாளைக்கு நீயும் தாண்டி கோர்ட்கு வர"
"வரேன் வரேன் குடிகாரன் கூட சேர்ந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..நேர ஊர பாத்து போய் இருக்கனும் தப்பு பண்ணிட்டேன்.."
"சொல்லுவடா சொல்லுவ"
"வீட்டுல வண்டி எங்கனு கேட்டா என்னடா சொல்றது"..அஜித் கேட்டான்.
"பஞ்சர் அதுனால ப்ரென்ட் வீட்டுல வச்சிட்டு வந்தோம்னு சொல்லி சமாளிப்போம் வேற வழி இல்ல.."
வீடு போய் சேர்ந்து இருவரும் உறங்கினார்..

மறுநாள் காலையில் அரக்க பரக்க விஜய் கிளம்பினான்.

அஜித்தை எழுப்பி " எப்படிடா எந்த கவலையும் இல்லாம தூங்குற..எழுந்திரு கோர்ட்க்கு போலாம்"..
அஜித் " மச்சான் நான் ஊருக்கு கிளம்புலம்னு நினைக்கிறேன் அத பத்தி நீ என்ன நினைக்குற"..
"செருப்பு பிஞ்சிக்கும்"

இருவரும் முதலில் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தனர்..

இன்ஸ்பெக்டர் பார்த்து விட்டு வாங்கப்பா என்றார்..

கான்ஸ்டபிள் பார்த்து "இவங்களை கோர்ட்க்கு கூப்ட்டு போங்க பைன் கட்டுனஅப்புறம் வண்டிய கொடுத்துங்க". கோர்ட்க்கு போவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டது..

"மச்சான் உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்த கூப்ட்டு வந்து சொல்லிட்டு வண்டிய இப்படியே எடுத்துட்டு போக முடியாதாடா"..அஜித் கேட்டான்.
"வேற எதாச்சும் மேட்டரா இருந்தாலும் பரவா இல்லடா DRUNKEN டிரைவ்மேட்டற்கு எப்படிடா நான் தெரிஞ்சவங்கள கூப்ட்டு வர முடியும் வேற வழியேஇல்ல கோர்ட்டுக்கு போய் பைன் கட்டி தான் ஆகணும்..நீ சும்மா கூட வாடா அதுபோதும்"
"சரி வரேன்"..
"எவனாச்சும் தெரிஞ்சவன் கோர்ட்ல பார்த்தானா அசிங்கமா போய்டும்டா"
"இத நேத்து குடிக்கறப்பவே யோசிச்சு இருக்கனும்" விஜய் முறைத்து பார்க்க அஜித் திரும்பி கொண்டான்.

விஜய் பதுங்கி பதுங்கி கோர்ட்க்குள் சென்றான்.
விஜய் அஜித்தை பார்த்து " டேய் இங்க வந்து நில்லுடா"..
"மச்சான் நீ என்ன தான் பதுங்கி நின்னாலும் ஜட்ஜ் உள்ள உன் பேரை சொல்லி கூப்புடுற அப்ப எல்லார் முன்னடியும் போய் தான் ஆகணும்..அப்ப என்ன தலைல துண்டா போட்டுகிட்டா போவ.."
"டேய் நேத்து வண்டிய நீ ஓட்டி இருக்கனும்..இப்ப இதே மாதரி காமெடி டயலாக் உன் வாயுல இருந்து வந்து இருக்கும்..எல்லாம் எம் நேரம்"
"அதான் நானும் நினச்சேன் நல்ல வேல வண்டிய நேத்து நான் ஒட்டுல்ல..God is Great.." "ச்சே இனிமே குடிக்கவே கூடாதுடா"
"பாத்தியா என்ன காமெடி பண்ண வேணாம்னு சொல்லிட்டு நீ காமெடி பண்ற.."
கான்ஸ்டபிள் வேற எங்கப்பா அந்த DD கேஸ்ல மாட்டுன தம்பினு எல்லோர் முன்னடியும் கேட்டு அடிக்கடி கடுப்பு ஏற்றி கொண்டு இருந்தார்..
திடிர் என்று விஜய் அலறினான்..

"டேய் எங்க பக்கத்து வீட்டுக்காரன் வரான்டா"
"எங்கடா.."
"அங்க பாரு".. ஒரு பெரிய மனிதர் நாலைந்து பேர் புடை சூழ வந்து கொண்டு இருந்தாரு.. "டேய் அவரு எதுக்குடா இங்க வராரு"..அஜித் கேட்டான்.
"டேய் அவரு மா.மூ.தீ.கல இருக்காரு டா.இப்படி தான் கோர்ட் கேஸ்னுஅலைஞ்சிக்கிட்டு இருப்பாரு..அய்யோ சனியன் சுத்தி சுத்தி அடிக்குதே"..
"சரி விடு அந்த ஆளு கன்னுல படாத இப்படி வந்து நில்லு" ..
அந்நேரம் பார்த்து கான்ஸ்டபிள் விஜயை கூப்பிட்டார்.. "தம்பி எங்கயும் போய்ட போற இன்னும் 20 நிமிஷத்துல Magistrate கூப்பிடுவாரு".. விஜய் கான்ஸ்டபிள் கூட பேசி கொண்டு இருந்ததை அந்த பெரிய மனிதர் பார்த்துவிட்டு சரியாக அவனருகில் வந்தார்..

தம்பி என்னப்ப இங்க..டக்கென்று ஒரு பொய்யை உதிர்த்தான்..
"சார் ஃபிரென்ட் லைசென்ஸ் இல்லாம மாட்டிக்கிட்டான்.அதான் பைன் கட்ட வந்தோம்".. "ஏன்பா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல எதுக்கு கோர்ட்க்குல்லாம் வர நான் இன்ஸ்பெக்டர்க்கிட்ட பேசி அப்படியே வண்டிய வாங்கி கொடுத்து இருப்பேனே"..
"இல்ல சார்..சரி பைன் கட்டிர்லாம்னு அவன் சொன்னதால தான் இங்கேயேவந்துடோம்"
"சரி விடு அடுத்த தடவ எதாவது பிரச்சனைனா சொல்லுப கூச்ச படாத என்று சொன்னவர் திரும்பி தனது சகாக்களிடம் நல்ல பையன் என்று சொன்னார்.
அஜித்க்கு சிரிப்பு அடக்க முடியவில்லை..

இருவரும் அவர் கண்ணில் படாமல் ஒதுங்கி நின்றனர். 10 நிமிடம் கழித்து DD கேஸ்ல மாட்டுனுவங்கள Magistrate கூப்பிட்டார்.. முதல் ஆளே விஜய் தான்.. ரெண்டாவது ஆளு அந்த பக்கத்து வீட்டுக்காரர்.. இருவருக்குமே மூஞ்சில் ஈயாடவில்லை.. அஜித் வெளியில் தூண் மறைவில் நின்று கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.. விஜய் பைன்ஐ கட்டி விட்டு வெளியே வந்தான்..அஜித் சிரித்து கொண்டே எதிரில்வந்து..
" என்ன மச்சான் என்ன சொன்னாரு பக்கத்து வீட்டு பெரிய மனுஷன்.."
"ஏன்டா எனக்கு ஒரு நிமிஷம் ஹார்ட் அட்டாக் வராத கொற..நீ இங்க சிரிக்கிறியா.." "பயப்படாதடா கண்டிப்பா அந்த ஆளு சொல்ல மாட்டாரு..திருடனுக்கு தேள் கொட்டுன மாதரி தான்.."
"சொல்ல மாட்டார்னு தான் நினைக்கிறேன்"..
"ஏன்டா உங்க ஏரியால எல்லோருக்கும் இதான் பொழப்பா"..அஜித் நக்கலாக கேட்டான்.

இருவரும் ஸ்டேஷன் வந்து வண்டியை எடுத்தனர்.. விஜய் " எப்ப இப்ப தாண்டா நிம்மதியா இருக்கு காலைல இருந்து நாயா பேயா அலைஞ்சிடேன்"

"எதோ என்ன மாதரி ஆளு இருந்தா தால எல்லாம் பட் பட்னு முடிஞ்சு போச்சு.."
"தயவு செஞ்சு என்கிட்ட இருந்து அசிங்கமா திட்டு வாங்காத டா"..
"சரி உன்ன பஸ் ஸ்டாண்ட்ல விட்ருவா"..விஜய் அஜித்திடம் கேட்டான்.

"என்ன மச்சான் இவளோ பெரிய சாதனை பண்ணிட்டு வந்து இருக்க பார்ட்டிஎல்லாம் இல்லையா.."
விஜய் அஜித்தை பஸ்சில் ஏற்றி விட்டு தான் வீட்டுக்கு திரும்பினான்.

16 comments:

வினோத் கெளதம் said...

Mudhal paagam Perithaga irunthataal irandaga pirithu viten..

S.A. நவாஸுதீன் said...

நல்லாதான் தல இருக்கு.

குமரை நிலாவன் said...

நல்லா இருக்கு நண்பா

வலசு - வேலணை said...

நல்லா போகுதுங்கு.
தொடர்ந்து எழுதுங்க

அது ஒரு கனாக் காலம் said...

நீள் பதிவுக்கு பதில் ஒரு நீள் கதையா !!!!!!. நல்லா எழுதறீங்க, நிஜமாகவே

வினோத் கெளதம் said...

@ S.A. நவாஸுதீன்..

நன்றி தலைவா..

@ குமரை நிலாவன்..

//நல்லா இருக்கு நண்பா//

நன்றி நண்பா..

@ வலசு - வேலணை..

//நல்லா போகுதுங்கு.
தொடர்ந்து எழுதுங்க//

நன்றி குருஜி..

@ அது ஒரு கனாக் காலம்..

// நீள் பதிவுக்கு பதில் ஒரு நீள் கதையா !!!!!!. நல்லா எழுதறீங்க, நிஜமாகவே//

தல நீங்க சொன்ன சரி தான்..:))

கலையரசன் said...

நீ அடங்க மாட்ட போலயிருக்கே!!
வந்ததுக்கு சொல்லிட்டு போவோம்,
நல்லா எழுதுறீங்க வினோத்!
அருமையான நடை, தொடருங்கள்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத்து.. கலாச்சிப்புட்டமா... இத மட்டும் உங்க வருங்கால மாமனார் பார்த்தார்னா, "மருமவன் எப்படினு நல்லா புரிஞ்சுக்குவார் (?)" :))

வினோத் கெளதம் said...

@ கலையரசன்..

நம்ம பேசுறதுக்கு முன்னாடியே நான் பாகம் ரெண்டு போஸ்ட் பண்ணிட்டேன்..
அதேயே ரெண்டாக பிரித்து விட்டேன்..
இருந்தாலும் நன்றி..:))

@ ச.செந்தில்வேலன்..

//இத மட்டும் உங்க வருங்கால மாமனார் பார்த்தார்னா, "மருமவன் எப்படினு நல்லா புரிஞ்சுக்குவார்//

அதோடு முடிந்தது கதை..:))

வால்பையன் said...

//இந்த 30 ரூபாவா லஞ்சமா வச்சிகுங்க சொல்லி கொடுத்து பாரு..என்ன சொல்ரங்கனு பாப்போம் " //

எப்படி இப்படியெல்லாம்!?

வெற்றி-[க்]-கதிரவன் said...

அஜித் ---> வினோத்

விஜய் ---> கிஷோர்

இதை மறுக்கும் பட்சத்தில் ஒரு நாள் முழுக்க அமிரகத்தில் வெய்யிலில் அலையக்கடவது

வினோத் கெளதம் said...

@ வால்பையன்..

அதுவா வருது வால்ஸ்..:)

@ பித்தன்..

//இதை மறுக்கும் பட்சத்தில் ஒரு நாள் முழுக்க அமிரகத்தில் வெய்யிலில் அலையக்கடவது//

நீ சொன்னாலும் சொல்லடாலும் ஒரு ரெண்டு நாளா வெயில்ல நாயா பேயா அலைய விடுறானுங்க..

kishore said...

ஹாய் மச்சான்.. எப்படி இருக்க? எப்படி போகுது பொழப்பு.. ?

வினோத் கெளதம் said...

Hi,

How Waz ur trip man..?

வினோத் கெளதம் said...

என்னாது இந்த Profile Pic ..

சஞ்சய் காமசாமி மாதரி..

நல்லா தான் இருக்கு..(எப்பா இந்த Blog எழுத ஆரம்பிச்சதுல இருந்து எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு..)

kishore said...

dai..