Sunday, June 7, 2009

அமீரக பதிவர்கள் சந்திப்பு..05.06.2009

காலையில் 8:30 மணிக்கு அடிக்க தொடங்கிய அலாரத்தை 9:30 மணிக்கு ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து கிளம்பி தயாராகி பஸ் பிடித்து துபாய் சத்வா பஸ் ஸ்டாப்பில் போய் இறங்கிய பொழுது மணி ஓன்று.அதன் பிறகு வந்த கண்ணா என்னை அடையாளம் கண்டுக்கொண்ட பின் அவருடன் அவர் அறைக்கு சென்றேன்.

அதன் பிறகு ஐந்து மணிக்கு நங்கள் இருவரும் கிளம்பி கரமா பார்க்கை சென்று அடைந்தோம்..எங்களை கவனிக்கும் முன்பு தூரத்தில் நின்று கொண்டு இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்த கலை நாங்கள் வருவதை பார்த்தபின் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை போல் உக்கார்ந்து இருந்தார்..

அதன்பிறகு சுந்தர் சார் வடையுடன் வந்து சேர்ந்தார்..அது வரை என்னுடன் பேசிக்கொண்டு இருந்த வெங்கியும்,கலையும் அதன் பிறகு தங்கள் முழுகவனத்தையும் வடையின் மீது செலுத்த ஆரம்பித்தனர்..

அப்புறம் ஒரு அரை மணிநேர கேப்பில் குசும்பன்,சிவராமன்,பிரதீப்..இவர்களும் வந்து சேர்ந்தனர்..

அப்புறம் நம்ம ஆசாத் அண்ணாச்சி, அயனார், ஜெயக்குமார், லியோ சுரேஷ் அண்ணாத்தே,அசோக்குமார், செந்திவேலன்,நாகா என்று வந்தபின் கச்சேரி களைக்கட்டியது..

பின்னுட்டம்,அரசியல், இலக்கியம்,பதிவர்கள் என்று பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கரமா பார்க்கில் இருக்கும் மரங்களின் கிளையில் தொங்கப்போட்டோம்..

அப்புறம் எனக்கும் நேரம் ஆனதால் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதாலும் சொல்லிவிட்டு விடை பெற்றேன்..

அண்ணன் ராகவன் நைஜீரியாவில் இருந்து வர இருப்பதால் அனைத்து பதிவர்களும் மறுபடியும் சந்திக்க உள்ளதால் அனைவரும் அப்பொழுது வந்து விடவும்..

மேலும் இதில் தீவிரமாக இறங்கி பதிவர் சந்திப்பை ஏற்ப்பாடு செய்த கலை மற்றும் வெங்கிக்கு நன்றிகள்..



கலந்துகொண்ட பதிவர்கள் -

1. குசும்பன்
2. அயனார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. வினோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன்
11. லியோ சுரேஷ்
12. அஷோக் குமார்
13. தியாகு என்கிற நாகா
14. ஜெயக்குமார்..

அனைவருக்கும் நன்றிகள்..

சில துளிகள்..

1. சுந்தர் சார் வந்தவுடன் "அது சரி யாரு அது அந்த சிம்ரன்" என்று கேட்டார்..சிம்ரனின் தீவிர விசிறியான கண்ணாவின் இதயம் இதை கேட்டவுடன் படார் என்று வெடித்தது..

2. குசும்பனார் மனைவி ஊருக்கு போய் இருக்கும் சந்தோஷதில் போட்டோவில் பார்த்ததை விட ஒரு சுற்று பெருத்து இருந்தார்..அதுவும் அவர் முகத்தில் இன்ச் பய் இன்ச் பூரிப்பு கலை கட்டி இருந்தது..

3. பிரதீப் மிகுந்த சாதுவாக அமர்ந்து இருந்தார்..நான் வந்தப்பின் தான் தெரிந்தது கலை & கோ..அவரை அழைத்து சென்று அஞ்சப்பரில் தண்டம் அழுவ வைத்தது..

4. செந்தில்வேலன்லின் ஒவ்வொரு அனுகுமுறையிலும் ஒரு நேர்மை தெரிந்தது..

5. ஆசாத் மற்றும் அய்யனார் தீவிர இலக்கியம் பற்றி விவாதித்து பொளந்து கட்டி கொண்டு இருந்தனர்..

6. கண்ணா மற்றும் கலையும் வடையை காலி செய்வதில் குறியாக இருந்தனர்..

7. கண்ணாவின் ரூமில் தான் மதியம் சாப்பிட்டேன்..அருமையாக மோர்குழம்பு அப்புறம் உருளை பொறியல் செய்து இருந்தார்..எனக்கு ரொம்ப நாள் கழித்து வீட்டில் சாபிட்டது போன்ற உணர்வு..(எப்பா..அடுத்த தடவை போனாலும் சாப்பாடு உறுதி)..

8. லியோ சுரேஷ் அண்ணாத்தே என்னை பர் துபாய் பஸ் ஸ்டாப்பில் விடுவதற்கு தன்னுடுய காரில் அவ்வளவு டிராபிக்யும் பொறுதுப்படுதமல் வந்து விட்டு சென்றார்..

9. சிம்ரன் ஆப்பகடை என்று சொல்லிவிட்டு கடைசி வரை எனக்கு ஆப்பத்தையும் கண்ணில் காட்டவில்லை சிம்ரனையும் கண்ணில் காட்டவில்லை..:((

10. கிளம்பும் நேரத்தில் உலக திரைப்படங்கள் அடங்கிய இரண்டு CD க்களை கலை என் கையில் கொடுத்தார்..உண்மையில் உலக திரைப்படங்கள் தாங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை..

மேலும் விவரங்களுக்கு மற்றும் புகைப்படங்களுக்கு..

http://venkatesh-kanna.blogspot.com/2009/06/05062009.html

http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_07.html


42 comments:

வினோத் கெளதம் said...

Post tis1 in Tamilers..

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்களை கவனிக்கும் முன்பு தூரத்தில் நின்று கொண்டு இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்த கலை நாங்கள் வருவதை பார்த்தபின் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை போல் உக்கார்ந்து இருந்தார்..//

நடிகர் திலகம் கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//அதன்பிறகு சுந்தர் சார் வடையுடன் வந்து சேர்ந்தார்..அது வரை என்னுடன் பேசிக்கொண்டு இருந்த வெங்கியும்,கலையும் அதன் பிறகு தங்கள் முழுகவனத்தையும் வடையின் மீது செலுத்த ஆரம்பித்தனர்..//

சாப்பாட்டு ராமன்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வர இருக்கும் அமீரக பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பு வாழ்த்துகள் நண்பா

Suresh said...

டேய் மச்சான் சூப்பர் டா நிறையா பேர் வந்து இருக்காங்க வாழ்த்துகள்

இதை ஒருகணைத்து நடத்திய நண்பர்கள் அனைவருக்கு நன்றிகள் மச்சான்

அப்புறம் புகைப்படம் போடலையா

கண்ணா உன்னை தேடுகிறேன் வா :-)

Suresh said...

//வந்த கண்ணா என்னை அடையாளம் கண்டுக்கொண்ட பின் அவருடன் அவர் அறைக்கு சென்றேன்/

ஹீ ஹீ உன்னை பார்த்தவுடன் கண்டு பிடிச்சிட்டாரா ;) மச்சான் இப்படியா அப்பாவியா அவரு ரூம்க்கு போவ கண்ண கிண்ண நோண்டி புடாவாங்க டா பார்த்து பத்திரமா இரு :-)


கலை காலையிலே வந்து விட்டாரோ..

//சுந்தர் சார் வடையுடன் வந்து சேர்ந்தார்..//

ஹா அங்கயும் பாட்டி சுட்டாங்களா இல்லை சிம்ரனா

//அது வரை என்னுடன் பேசிக்கொண்டு இருந்த வெங்கியும்,கலையும் அதன் பிறகு தங்கள் முழுகவனத்தையும் வடையின் மீது செலுத்த ஆரம்பித்தனர்..//

உன் மூஞ்சியை எவ்வளவு நேரம் தான் பார்த்து பேசுறது வந்த வேளை பார்க்க வடையை பார்த்து விட்டார்கள் :-)

வெங்கி, கலை :-)

//அரை மணிநேர கேப்பில் குசும்பன்,சிவராமன்,பிரதீப்..இவர்களும் வந்து சேர்ந்தனர்../

அண்ணேன் குசும்பன் எப்போதும் சைக்கிள் கேப்பிலே பிளேன் ஓட்டுவாரு ...( தூபாய் அதுனால லாரி இல்லை பிளேன் தான்)

அதான் கேப்பிலே வந்துட்டாரு

//ஆசாத் அண்ணாச்சி, அயனார், ஜெயக்குமார், லியோ சுரேஷ் அண்ணாத்தே,அசோக்குமார், செந்திவேலன்,நாகா என்று வந்தபின் கச்சேரி களைக்கட்டியது../

ரொம்ப சந்தோசம் வீடியோ போடுங்க இல்லை போடோஸ்..

யாரு அதில் ஊறுகாயான அப்பாவிங்க :-)

//அப்புறம் எனக்கும் நேரம் ஆனதால் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதாலும் சொல்லிவிட்டு விடை பெற்றேன்..//

வடையே சாப்பிட்ட வுடனே வந்த வேளை முடிச்சு போச்சுனு கிளம்பி இருப்பியே


//அண்ணன் ராகவன் நைஜீரியாவில் இருந்து வர இருப்பதால் அனைத்து பதிவர்களும் மறுபடியும் சந்திக்க உள்ளதால் அனைவரும் அப்பொழுது வந்து விடவும்..//

தங்கமான மனிதர் அவர்.. பார்த்துட்டு சொல்லுங்க ( தங்கம்னு சொல்லிட்டேனு கடத்திடாதிங்க டா பாவி பசங்களா)

//மேலும் இதில் தீவிரமாக இறங்கி பதிவர் சந்திப்பை ஏற்ப்பாடு செய்த கலை மற்றும் வெங்கிக்கு நன்றிகள்../

ஒரு வடை வாங்கி கொடுத்தற்க்கு இவ்வளவு நன்றியா :-)

ரொம்ப சந்தோசம் கலை மற்றும் வெங்கி ரொம்ப நல்ல விஷியம், கொஞ்சம் சிரமமும் கூட எல்லாத்தையும் ஒரு இடத்தில் மீட் செய்ய வைப்பது வாழ்த்துகள்

Suresh said...

//பிரதீப் மிகுந்த சாதுவாக அமர்ந்து இருந்தார்..நான் வந்தப்பின் தான் தெரிந்தது கலை & கோ..அவரை அழைத்து சென்று அஞ்சப்பரில் தண்டம் அழுவ வைத்தது..
//

ஹீ கலைக்க்கு எவனாச்சும் நல்லவன் மாட்டிட்டா உடனே ஆப்பா ..

தூபாய் அஞ்சப்பரில் டீரிட்டா இனி அவர் பதிவர் சந்திப்பு வருவார

Suresh said...

//கலந்துகொண்ட பதிவர்கள் - 1. குசும்பன்
2. அயனார்
3. ஆசாத்
4. கண்ணா
5. சுந்தர்ராமன்
6. வினோத் கெளதம்
7. பிரதீப்
8. செந்தில்வேலன்
9. சிவராமன்
10. கலையரசன்
11. லியோ சுரேஷ்
12. அஷோக் குமார்
13. தியாகு என்கிற நாகா
14. ஜெயக்குமார்..அனைவருக்கும் நன்றிகள்..சில துளிகள்..//


வாழ்த்துகள் நண்பர்களே

Suresh said...

//செந்தில்வேலன்லின் ஒவ்வொரு அனுகுமுறையிலும் ஒரு நேர்மை தெரிந்தது..//

அம்புட்டு நல்லவரா அவரு, உனக்கு வடை வாங்கி கொடுத்ததுக்கு ;) இப்படியா பேசுறது..

அவரு நல்லவரு அவரு புகைப்படம் பார்த்தாலே தெரியும்

//ஆசாத் மற்றும் அய்யனார் தீவிர இலக்கியம் பற்றி விவாதித்து பொளந்து கட்டி கொண்டு இருந்தனர்..//

இங்கயுமா

//கண்ணா மற்றும் கலையும் வடையை காலி செய்வதில் குறியாக இருந்தனர்..//

கரகெட்டா இருக்காங்க ஐ லைக் யூ பாய்ஸ் :-)

// கண்ணாவின் ரூமில் தான் மதியம் சாப்பிட்டேன்..அருமையாக மோர்குழம்பு அப்புறம் உருளை பொறியல் செய்து இருந்தார்..எனக்கு ரொம்ப நாள் கழித்து வீட்டில் சாபிட்டது போன்ற உணர்வு..(எப்பா..அடுத்த தடவை போனாலும் சாப்பாடு உறுதி).. //

அடுத்த சாப்பாட்டுக்கு இப்போவே பிட்டா .. கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொங்ய்யால

//லியோ சுரேஷ் அண்ணாத்தே என்னை பர் துபாய் பஸ் ஸ்டாப்பில் விடுவதற்கு தன்னுடுய காரில் அவ்வளவு டிராபிக்யும் பொறுதுப்படுதமல் வந்து விட்டு சென்றார்..//

சுரேஷ்னு பெயரு வச்சனால அவரை ஒன்னும் சொல்ல முடியவில்லை

ந்ல்லவர் மச்சான் அவர் :-)


//சிம்ரன் ஆப்பகடை என்று சொல்லிவிட்டு கடைசி வரை எனக்கு ஆப்பத்தையும் கண்ணில் காட்டவில்லை சிம்ரனையும் கண்ணில் காட்டவில்லை..:((//

அதான் வடை கொடுத்தாங்கள பாட்டி சூட்டது,..

// கிளம்பும் நேரத்தில் உலக திரைப்படங்கள் அடங்கிய இரண்டு CD க்களை கலை என் கையில் கொடுத்தார்..உண்மையில் உலக திரைப்படங்கள் தாங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை..
மேலும் விவரங்களுக்கு மற்றும் புகைப்படங்களுக்கு..//


ஹீ ஹீ இந்த சந்திப்பில் ஆக்ஷன் படங்கள் பரிமாற்றாங்கள் வேறையா நடக்கட்டும்.. அந்த உலக படங்களில் ஒன்லி ஆக்ஷனாமே

//http://venkatesh-kanna.blogspot.com/2009/06/05062009.html
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_07.html//

நன்றி நல்லவனே இதே பர்ஸ்ட்டே சொல்லி இருந்தா உன் பதிவில் இருந்து எஸ்கேப் ஆகி அங்கு போய் இருப்பேன்..

இனி பின்னாடி இருந்து தான் படிக்கனும் :-)

Suresh said...

லிங்கா கொடுத்தா தான் என்ன இஸியா இருக்கும் அல்லவா

ஆ.சுதா said...

வாழ்த்துகள் நண்பா!! சந்திப்பு இனிதாய் நடைபெற்றதில் சந்தோசம்.

ஷண்முகப்ரியன் said...

உங்கள் அனைவரது நட்பும் மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்,வினோத்.

Raju said...

வட போச்சே...!

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டையக் கிளப்பி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் நண்பா :-))))))

கலையரசன் said...

டேய்.. பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடந்தது, சந்திப்ப பத்தி பேசாம.. என்னைய போட்டு ஏன்டா,
நொங்குறீங்க? அவ்வ்வ்வ்..

நீ பண்ணறது ஒருபக்கம்
இருந்தாலும், அந்த சுரேஷ் வேற 10 பஞ்ச் போட்டு
கொல்றன்டா!

கலையரசன் said...

நடிகர் திலகம் கலை!
சாப்பாட்டு ராமன் கலை!
போட்டோவை ஒளிச்ச கலை!
நல்லவனுக்கு கலை வச்ச ஆப்பு!
கலை என் கையில கிடைச்சா!

நீயும், கண்ணாவும் பதிவ போட்டு..
எனக்கு கிடைச்ச பதிவு தலைப்புகள்!
நல்லா இருங்க!!

கண்ணா.. said...

//எங்களை கவனிக்கும் முன்பு தூரத்தில் நின்று கொண்டு இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்த கலை நாங்கள் வருவதை பார்த்தபின் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை போல் உக்கார்ந்து இருந்தார்..//

இதை நீயும் கவனிச்சயா...?


// பிரதீப் மிகுந்த சாதுவாக அமர்ந்து இருந்தார்..நான் வந்தப்பின் தான் தெரிந்தது கலை & கோ..அவரை அழைத்து சென்று அஞ்சப்பரில் தண்டம் அழுவ வைத்தது..//

ரொம்ம்ம்பப......நல்லவரு நம்ம பிரதீப்

கண்ணா.. said...

//எங்களை கவனிக்கும் முன்பு தூரத்தில் நின்று கொண்டு இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்த கலை நாங்கள் வருவதை பார்த்தபின் எதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதை போல் உக்கார்ந்து இருந்தார்..//

இப்பிடி தப்பா சொல்லாத....

கலை இந்திய பெண்களை மட்டுமல்லாமல் பிலிப்பைன் பொண்ணுங்களையும் சேத்துதான் சைட் அடிச்சான்..

கண்ணா.. said...

//5. ஆசாத் மற்றும் அய்யனார் தீவிர இலக்கியம் பற்றி விவாதித்து பொளந்து கட்டி கொண்டு இருந்தனர்..//

ஆமா கரெக்ட்..நாந்தான் தப்பான இடத்துக்கு வந்துட்டமோன்னு ஆ ன்னு வாயை பிளந்து வேடிக்கை பாத்துகிட்டு இருந்தேன்..


//6. கண்ணா மற்றும் கலையும் வடையை காலி செய்வதில் குறியாக இருந்தனர்..//

எங்க போனாலும் கடமையை கரெக்டா செய்யணுமா இல்லையா...?


//7. கண்ணாவின் ரூமில் தான் மதியம் சாப்பிட்டேன்..அருமையாக மோர்குழம்பு அப்புறம் உருளை பொறியல் செய்து இருந்தார்..எனக்கு ரொம்ப நாள் கழித்து வீட்டில் சாபிட்டது போன்ற உணர்வு..(எப்பா..அடுத்த தடவை போனாலும் சாப்பாடு உறுதி)..//

நன்றி...
நான் சமைச்சதையும் நல்லாருக்குன்னு சொல்லிட்ட ...அதனால நீ எப்ப வந்தாலும் சாப்பாடு உண்டு


//9. சிம்ரன் ஆப்பகடை என்று சொல்லிவிட்டு கடைசி வரை எனக்கு ஆப்பத்தையும் கண்ணில் காட்டவில்லை சிம்ரனையும் கண்ணில் காட்டவில்லை..:((//

நான் முதல்லயே சொன்னேன்....மீட்டிங் அப்புறம் வச்சுகலாம்..முதல்ல போய் சாப்பிட்டு வந்துரலாம்...யாராவது கேட்டாதான...

வினோத் கெளதம் said...

Yeppa,

Finally Iam bac after one week.

வினோத் கெளதம் said...

Talaivargaley

Tayavu senju vote Podunga..

வினோத் கெளதம் said...

@பிரியமுடன்.........வசந்த் said...

//வர இருக்கும் அமீரக பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்//

நன்றி வசந்த்..

@ ஆ.ஞானசேகரன் said...
//நல்ல சந்திப்பு வாழ்த்துகள் நண்பா//

நன்றி நண்பா..

@ Suresh..

//இதை ஒருகணைத்து நடத்திய நண்பர்கள் அனைவருக்கு நன்றிகள் மச்சான்//

நன்றி மச்சான்..

//அப்பாவியா அவரு ரூம்க்கு போவ கண்ண கிண்ண நோண்டி புடாவாங்க டா பார்த்து பத்திரமா இரு//

ஆமாம் ஆமாம் நான் வேற சின்ன புள்ள வேற..

//வடையே சாப்பிட்ட வுடனே வந்த வேளை முடிச்சு போச்சுனு கிளம்பி இருப்பியே//

அதுக்கப்புறம் இரும்பு அடிக்குற இடத்துல எறும்புக்கு என்ன வேலை..

//தங்கமான மனிதர் அவர்.. பார்த்துட்டு சொல்லுங்க ( தங்கம்னு சொல்லிட்டேனு கடத்திடாதிங்க டா பாவி பசங்களா)//

Pure Gold..


//அடுத்த சாப்பாட்டுக்கு இப்போவே பிட்டா .. கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொங்ய்யால//

பின்ன அப்படி எல்லாம் சொன்ன தான் அடுத்த தடவை ரூம் உள்ளயச்சும் விடுவாரு..

//ஹீ ஹீ இந்த சந்திப்பில் ஆக்ஷன் படங்கள் பரிமாற்றாங்கள் வேறையா நடக்கட்டும்.. அந்த உலக படங்களில் ஒன்லி ஆக்ஷனாமே //

டேய் உண்மையில் உலக திரைப்படங்கள்..

@ ஆ.முத்துராமலிங்கம் said...

//வாழ்த்துகள் நண்பா!! சந்திப்பு இனிதாய் நடைபெற்றதில் சந்தோசம்.//

நன்றி நண்பரே..:))

@ ஷண்முகப்ரியன் said...
//உங்கள் அனைவரது நட்பும் மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்,வினோத்.//

நன்றி சார் உங்கள் வாழ்த்துக்கு..:)

@ டக்ளஸ்....... said...

//வட போச்சே...!//

அதனால் என்ன டக்லஸ்..அடுத்த தடவை கொரியர்ல அனுப்பிடறோம்..:)

@ கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டையக் கிளப்பி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் நண்பா :-))))))//

நன்றி நண்பா..

@ கலையரசன் said...

//என்னைய போட்டு ஏன்டா,
நொங்குறீங்க? அவ்வ்வ்வ்.. //

அப்புறம் எங்களக்கு டைம் பாஸ் ஆகா வேணமா..
யோவ் முதல வோட்டு போடு அப்புறம் பேசு..

//நீ பண்ணறது ஒருபக்கம்
இருந்தாலும், அந்த சுரேஷ் வேற 10 பஞ்ச் போட்டு
கொல்றன்டா!//

அவன் ரொம்ப நல்லவன்..

//எனக்கு கிடைச்ச பதிவு தலைப்புகள்!
நல்லா இருங்க!!//

ஹீ..ஹீ.ஹீ..


@ Kanna said...

//இதை நீயும் கவனிச்சயா...?//

பார்க்கமா இருப்பனா..பிகர இல்லை அவர..

//ரொம்ம்ம்பப......நல்லவரு நம்ம பிரதீப்//

மங்களம் பாடி அனுப்பிடிங்க..

//கலை இந்திய பெண்களை மட்டுமல்லாமல் பிலிப்பைன் பொண்ணுங்களையும் சேத்துதான் சைட் அடிச்சான்..//

அது சொல்லி தான் தெரியுனுமா..:)

//நன்றி...
நான் சமைச்சதையும் நல்லாருக்குன்னு சொல்லிட்ட ...அதனால நீ எப்ப வந்தாலும் சாப்பாடு உண்டு//

குசும்பன் said...

நல்லவேளை என் படத்தை நீங்க போட்டு இன்னும் டேமேஜ் ஆக்கவில்லை!:)

RAGUL said...
This comment has been removed by the author.
வெற்றி-[க்]-கதிரவன் said...

மச்சி நீ மாப்புள்ள மாதரி டிரஸ் பண்ணிட்டு போனது எல்லாம் வெஸ்ட்டா போச்சே :(

பரவால விடு அடுத்து அசின் காப்பி கடைக்கு முன்னாடி நின்னு பாரு :)

வினோத் கெளதம் said...

@ குசும்பன் said...

//நல்லவேளை என் படத்தை நீங்க போட்டு இன்னும் டேமேஜ் ஆக்கவில்லை!:)//

எல்லாத்துக்கும் காரணம் கலை என்ற மாமனிதன்..(கூர்ந்து படிக்கவும்)..:))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குசும்பன் said...
நல்லவேளை என் படத்தை நீங்க போட்டு இன்னும் டேமேஜ் ஆக்கவில்லை!:)
//

கல்யாணம் ஆனாலும் இந்த குசும்பு மட்டும் போகல :)

வினோத் கெளதம் said...

@ Ragul..

ராகுல் நாளைக்கு நான் உங்களுக்கு கால் பண்ணுறேன்..
நீன்ன்களும் பதிவர் சந்திப்பிற்கு வந்து இருந்தால் ஒரு ஐடியா கிடைத்து இருக்கும்..

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கலையரசன் said...
டேய்.. பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடந்தது, சந்திப்ப பத்தி பேசாம.. என்னைய போட்டு ஏன்டா,
நொங்குறீங்க? அவ்வ்வ்வ்..

நீ பண்ணறது ஒருபக்கம்
இருந்தாலும், அந்த சுரேஷ் வேற 10 பஞ்ச் போட்டு
கொல்றன்டா!
//

எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நீ ரொம்ப நல்லவன் மச்சி :)

வினோத் கெளதம் said...

@பித்தன் said...

//பரவால விடு அடுத்து அசின் காப்பி கடைக்கு முன்னாடி நின்னு பாரு :)//

சரி சரி விட்டு தள்ளு மச்சி இது எல்லாம் பப்ளிக்ல பேசப்புடாது..:))

அது ஒரு கனாக் காலம் said...

வருங்கால கதாநாயகனே, நல்லா எழுதி இருக்கீங்க ..

தீப்பெட்டி said...

கலக்கியிருக்கீங்க...
வாழ்த்துகள் பாஸ்..

வினோத் கெளதம் said...

@ அது ஒரு கனாக் காலம் said...

// வருங்கால கதாநாயகனே, நல்லா எழுதி இருக்கீங்க ..//


தல நீங்களே இப்படி சொன்ன எப்படி..:))

வினோத் கெளதம் said...

தீப்பெட்டி said...

//கலக்கியிருக்கீங்க...
வாழ்த்துகள் பாஸ்..//

நன்றி நண்பா..

kishore said...

வாழ்த்துக்கள் மச்சி...

kishore said...

வாழ்த்துக்கள் மச்சி...

கலையரசன் said...

ஓட்டு போட்டாச்சி பாஸ்!

//எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நீ ரொம்ப நல்லவன் மச்சி :)//

என்னை நல்லவன்னு சொன்ன பித்தனுக்கு ஒரு டக்கீலா...!

என்னை கும்மிய கண்ணாவுக்கும், வினோத்துக்கும் ஒரு ஷக்கீலா!!
(கட்டிப்பிடி வைத்தியம் செய்யக்கடவது!!)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இது ஒரு வகையான வர்ணனை..

டிட்-பிட்ஸ் மாதிரி... :)

வினோத் கெளதம் said...

நன்றி செந்தில்..

வால்பையன் said...

ம்ம்

கடல் கடந்து நட்பு பாராட்டுறிங்க!

வினோத் கெளதம் said...

Thanks vaals..Natpu illama enga ponalum kashtam thaan..