Tuesday, July 28, 2009

எங்க ஆயாகிட்ட பிடிக்காத பத்து..

எங்க ஆயாவுக்கு என்கிட்ட பிடிக்காத ஐந்து விஷயங்கள் :

1 அவங்க டீவி சீரியல் பாக்குறப்ப கண்டமேனிக்கு சேனலை மாற்றுவது..

2 அவங்க சாப்பிடுரப்ப "வயசானா கம்மியா சாப்பிடனும் இப்படி ரைஸ் மெஷின் மாதிரி
அரைச்சு தள்ள கூடாது"..அப்படின்னு கண்ணு வைக்கிறது.

3 எதாச்சும் பூஜை நடக்குறப்ப வரிசையா மாட்டி இருக்குற எல்லா ஃபோட்டோவையும் தொட்டு கும்பிட்டு விட்டு இறந்துப்போன தாத்தா ஃபோட்டோவ மட்டும் கும்பிடமா நக்கலா திரும்பி எகத்தாளமா அவங்களை பார்த்து சிரிக்கிறது.

4 எங்க அப்பா அம்மா வீட்டுல இல்லாதப்ப என்கிட்டே அவங்கள பத்தி பொலம்ப்பரப்ப.."அய்ய..நான் என்ன உன் புருஷன்னா என்கிட்டே இன்னமோ உன் மாமியார் மாமனாரை கொற சொல்லுற மாதிரி பொலம்புற"..என்று பொறியறது.

5 பக்கத்து வீடு கிழவிக்கிட்ட என்ன பத்தி பெருமையா "வினோத் ரொம்ப அமைதியான மரியாதை தெரிஞ்ச பையன்" என்று சொல்லும்பொழுது "ஏய் கிழவி டிவி ரிமோட் எங்க வச்ச"..என்று நான் கேக்குறது.

எனக்கு எங்க ஆயாகிட்ட பிடிக்காத ஐந்து விஷயங்கள்..

1 எல்லா பசங்களும் பொதுவா விளையுடுரப்ப என்ன மட்டும் தனியா கூப்பிட்டு வாயுல லட்டு, ஜிலேபின்னு திணிக்கிறது..எவனாச்சும் அதை உற்று பார்த்தான் என்றால்.."கொள்ளியுல போறவன் வளருற புள்ள சாப்பிடறத இப்படியா பார்ப்பான்"..என்று அவங்களை திட்டுறது.

2 நான் வீட்டுக்குள் நுழைவதை பார்த்தவுடன் ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பது.

3 யாராச்சும் பொண்ணுங்க தப்பி தவறி வீட்டுக்குள் வரப்ப அவங்க கேக்குற மாதிரி "ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" என்று தெளிவாக சொல்லுவது.

4 டீவில எதாச்சும் "முக்கியமான" அக்ஷன் படங்கள் இரவு நேரங்களில் பார்க்கும் பொழுது "டக்" என்று விளக்கை போட்டு என்னை "திக்" ஆக்குவது..

5 "அய்யயோ அந்த ரவி பயலுக்கு இப்படி ஆயிடுச்சே" என்று சீரியல்லில் வரும் பாத்திரங்களை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டு புலம்புவது.

டிஸ்கி: எது எப்படி இருந்த என்ன மொத்தமா பத்து வருது இல்ல அதான் மேட்டர்..

31 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

எழுதுறத நிறுத்திடுங்க விநோத்துன்னு ஒரு பதிவு போட்டாதான் சுத்தப்பட்டு வரும்

கலையரசன் said...

ஹய்யா.. எல்லா ஆயாவும் அப்படிதானா?

நானும் ஒரு பதிவு போடபோறேன்..
"ஆயா வேணுமா? பாயா வேணுமா?"

S.A. நவாஸுதீன் said...

நீங்களுமா வினோத்? இதுக்கு யாராவது பாயாக்கு பத்து போடாம இருக்கனுமே!!

S.A. நவாஸுதீன் said...

ஆனா பத்தும் ரசிக்கும்படி இருக்கு வினோத்.

அப்துல்மாலிக் said...

ஹா ஹா அடுத்து பட்டய கிளப்புறாங்கையா பத்து.........

வால்பையன் said...

//"ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" //

அதே தான் என் கேள்வியும்!?

sakthi said...

யாராச்சும் பொண்ணுங்க தப்பி தவறி வீட்டுக்குள் வரப்ப அவங்க கேக்குற மாதிரி "ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" என்று தெளிவாக சொல்லுவது.

அது சரி

sakthi said...

எதாச்சும் பூஜை நடக்குறப்ப வரிசையா மாட்டி இருக்குற எல்லா ஃபோட்டோவையும் தொட்டு கும்பிட்டு விட்டு இறந்துப்போன தாத்தா ஃபோட்டோவ மட்டும் கும்பிடமா நக்கலா திரும்பி எகத்தாளமா அவங்களை பார்த்து சிரிக்கிறது.

அடப்பாவமே

ஆபிரகாம் said...

நல்ல அம்மா-புள்ள!

ஈரோடு கதிர் said...

ஆயா வாழ்க

kishore said...

"எனக்கு ஆயா வச்ச ஆப்பு" ன்னு தலைப்ப மாதிடுடா.. வருசையா வச்சிருகாங்க ஆப்பு உனக்கு உங்க ஆயா ..

தினேஷ் said...

ஆயா பத்து கெத்து ..

geethappriyan said...

super

Raju said...

அண்ணே, கல்யாணத்துக்கு பதிவு போட சொன்னா, வலைகாப்புக்கு போடுறீங்களே..!
:)

Prabhu said...

டீவில எதாச்சும் "முக்கியமான" அக்ஷன் படங்கள் இரவு நேரங்களில் பார்க்கும் பொழுது "டக்" என்று விளக்கை போட்டு என்னை "திக்" ஆக்குவது..
///////

அது என்ன "ஆக்ஷ்ன்" படம், இருட்டுல பாக்குற அளவு?

Unknown said...

// "அய்யயோ அந்த ரவி பயலுக்கு இப்படி ஆயிடுச்சே" என்று சீரியல்லில் வரும் பாத்திரங்களை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டு புலம்புவது.//

ஒருமுறை எங்க அம்மா நாடகம் பாத்துட்டு இருந்தாங்க அப்போ நாடகத்துல ஒருத்தன் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது நான் என்ன பாவம் பண்ணேன்" புலம்ப, உடனே எங்கம்மா எதோ வேற நாடகத்தின் பேர் சொல்லி நீ அதுல எவ்வளவு பாவம் பண்ண உனக்கு நல்ல வேணும்ன்னு திட்ட ஆரம்பிச்சுட்டங்க.....................

நல்லா இருக்கு உங்க ரெண்டு x ஐந்து

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத்து ஹாஹாஹான்னு சிரிக்க வச்சுட்டியேப்பா..

உங்க ஆயா லட்டு ஊட்டி விடறது எனக்கு, "ஏக் காவ் மே ரகதாத்தா" தான் நினைவுக்கு வருது.

உன்னப்பத்தி பெருமையா சொல்றப்ப, உங்க ஆயாவ நீ கால வாரி விடறது கொஞ்சம் அதிகம்..

நீ பாத்தது ஆக்ஷன் படங்களா... இல்ல வேற மாதிரியான படமா? பாட்டிக்கு எல்லாம் தெரியும்பா...

சம்பத் said...

/////3 யாராச்சும் பொண்ணுங்க தப்பி தவறி வீட்டுக்குள் வரப்ப அவங்க கேக்குற மாதிரி "ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" என்று தெளிவாக சொல்லுவது.///

இன்னமும் உங்க ஆயா இந்த மாதிரிதான் திட்டுறாங்களா? :)

Nice post..

சம்பத் said...

இனி நானும் உங்க "நலம் விரும்பிகள்" ல ஒருத்தன்...

Muniappan Pakkangal said...

Aayava inga anuppi vaippa.Neraya solli koduthu anuppividuren

ஆ.ஞானசேகரன் said...

இப்படியுமா?????????? நடத்துங்கோ நண்பா

கோபிநாத் said...

என்ன திடிரென்னு ஆயா ஞாபகம்!!? ;)

எனக்கும் இந்த மாதிரி பத்து உண்டு ;))

தேவன் மாயம் said...

ஆயா பாத்தா முதுகுல்அ பத்துத்தான்!

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))

யாரோ ஒருவர் said...

என்ன பதிவுத் தலைப்ப பார்த்தாலே பத்து பத்தா தெரியுதே! இந்த வார ராசி எண் பத்து போலிருக்கே!

ரெட்மகி said...

டாப் 10.....

அமுதா கிருஷ்ணா said...

நல்ல வேளை என் பையனுக்கு முதலில் gowtham என்று பேர் வைத்து பின் நகுல் என்று மாற்றி விட்டேன்..

ஷண்முகப்ரியன் said...

யாராச்சும் பொண்ணுங்க தப்பி தவறி வீட்டுக்குள் வரப்ப அவங்க கேக்குற மாதிரி "ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" என்று தெளிவாக சொல்லுவது.//

ஹா!ஹா! வாழ்க்கைக்குத்தான் எத்தனை கோணங்கள்!
எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதன் அழகே அழகு.

புதிய பார்வைக்கு வாழ்த்துகள் வினோத்

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... ரொம்ப நல்லாருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

20-20 மாதிரி இப்போ 10-10 ஆயிருச்சு போல :-))

Nathanjagk said...

பத்து வாட்டி சிரிச்சேன்!! பயங்கரப் பத்து!!