Monday, July 27, 2009

தீதும் நன்றும்

சங்கர் சோற்றை பிசைந்து விட்டு கையை பார்த்தான்..
மாயா உள்ளே நுழைந்தான்.

"எலே..சங்கரு..நான் சொல்றத கொஞ்சம் கேளுடா..வேலை முடிஞ்சு ஒழுங்கா வீட்டுக்கு வந்தருப்ப..அந்த பசங்க சகவாசம் வேணாம்ப்பா.."..சங்கரின் அம்மா.

"எம்மா..சோத்த போடுறியா..உபதேசம் அப்புறம் பண்ணு.."..சங்கர்.

"சங்கர் அண்ணா இப்ப தான் S.I கிட்ட பேசுன்னேன்.. சேத்தியாதோப்பு, மீன்சுருட்டி ரெண்டு செக்போஸ்டும் பயங்கர அலேர்டா இருக்கு.. காடுவெட்டி பாலம் வரைக்கும் ஒரு வண்டியுல போய்..கிழ்பக்கம் ஆத்தோட நடந்து போய்..அங்க இருந்து வேற வண்டியுல போவ சொன்னாரு..வண்டி ஏற்பாடு பண்ணிட்டேன்.."..மாயா.

"வக்கீல்கிட்ட பேசுனியா.."..சங்கர்.

"பேசுனேன்..அவரும் அதன் சொல்றாரு..ஜாமீன் கிடைக்காது..தஞ்சவூர் கோர்ட்ல சரண்டர் ஆகுறது தான் நல்லதுன்னு சொல்றாரு.."

"சரி நான் வரேன் போ.."..சங்கர்.

மறுபடியும் சோற்றை பிசைய ஆரம்பித்தான்.

மாரியப்பன் சமாதி முன்பு எருக்கன்னும் அவனுடுய வக்கீலும் நின்று கொண்டு இருந்தனர்..

"சின்ன பையன் அண்ணன் இவன்..என்கிட்ட மோத வேண்டியது தானே பொட்டை பசங்க..த்தா அந்த புருஷோதம்மன் கதை நாளைக்கு ஊரு பாக்கணும்"..எருக்கன்.

"நாளைக்கு சங்குமரம் பக்கத்துல பாண்டியன் கடை 8 மணிக்கு புருஷோத்தமன் வருவான்.. அவன் தம்பியும் அவனும் மட்டும் தான்..முடிச்சிட்டு..பெரியமடு கிட்ட வண்டி நிக்கும்.. க்வாலிஸ்..பச்ச கலர்..மெட்ராஸ் வண்டி..நான் தான் லோக்கல் வண்டி வேணாம்னு சொன்னேன்..எறிடுங்க..மூணு மணி நேரத்துல மெட்ராஸ்..அங்க நான் கொடுத்த அட்ரஸ்ல தங்கிகுங்க..அப்புறம் நான் போன் பண்ணதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.." ..வக்கீல்.

கோபி அவன் கூட சங்கரை அழைத்து கொண்டு வந்தான்..

"டேய்..இவன் பொட்டலம் போடுற பையன் தானே இவன எதுக்கு கூப்பிட்டு வந்த.."..எருக்கன்.

"அண்ணா..ஷார்ப் கை..நாளைக்கு வரேன் ஒத்துகிட்டன்..எல்லாம் பேசிட்டேன்..நீ ஒன்னும் பயப்புட வேணாம்.."

"டேய்..நாளைக்கு பெரிய வேலை தெரியும்ல..எஸ்கேப் ஆச்சு அதுக்கு அப்புறம் பையன் உஷார் ஆயுடுவான்.."..வக்கீல்.

"அது பாத்துக்கலாம் எல்லாம் பேசியாச்சு..பையன் நம்ம பையன்.."

சங்கர் சாப்பிட மனது இல்லாமல் சோற்றையே பார்த்து கொண்டு இருந்தான்.

"அண்ணா இந்த தடவை சரண்டர் ஆனோம்னா லைப் நிச்சயம்னு வக்கீல் சொல்றாரு..கொஞ்சம் கஷ்டாமா தான் இருக்கு.." ..மாயா.

சங்கர் மாயவை பார்த்தான்.

சங்கு மரத்திற்கு கீழ் தெளிவான போதையில் சங்கர், கோபி கூட நின்று கொண்டு இருந்தான்.

"பொருளா பின்னாடி வைக்காத சங்கரு..இடுப்புக்கு சைடுல வை.. என்னை மட்டும் பாலோ பண்ணு..நான் சொல்றத மட்டும் செய்.."..கோபி.

புருஷோத்தமன் தன் தம்பியுடன் பாண்டியன் கடைக்குள் நுழைந்தான்.
ஒரு நிமிடம் கழித்து பக்கத்தில் இருந்த இருட்டு சந்தில் இருந்து எருக்கன் நான்கு பேரோடு திடிரென்று பாண்டியன் கடைக்குள் நுழைய..
கோபியும் சங்கரும் சங்கு மரத்தில் இருந்து வேகம் எடுத்து பாண்டியன் கடைக்குள் நுழைந்தனர். "..த்தா சாவுடா.." .. எருக்கன் பாண்டியனை சரமாரியாக வெட்டி கொண்டு இருந்தான்.

கடைக்குள் நுழைந்த வேகத்தில் கோபி சங்கரை பார்த்து..
"இடுப்புக்கு கிழ சொருகுடா..மவனே பொழைக்கவே கூடாது அவன்.."..கோபி.

சங்கர் கோபி சொன்னதை போல் இடுப்புக்கு கிழே விலா எலும்பின் சற்று மேலே குத்தினான். புருஷோதமன்னும் அவன் தம்பியும் கிழே ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

எருக்கணும் மற்றவர்களும் வக்கீல் சொன்ன மாதிரி பச்ச கலர் வண்டியில் ஏறியவுடன் வண்டி சிட்டாக பறந்தது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு.. கோபி இட்லி பொட்டலத்தை பிரித்து சங்கரிடம் நீட்டினான்..

"சாப்பிடு மாமு..முதல் தடவை பீலிங்கா தான் இருக்கும்..அப்படியே பழகிடும்.. பயபுடாத வக்கீல் பாத்துப்பாரு..எல்லாம் துட்டு மாமு.."

சங்கர் கையை கழுவி விட்டு இட்லியை எடுத்தான்.. அவனுக்கு கையில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது..
கையயை உற்று நோக்கினான்.

ரத்தகறை அப்படியே இருப்பதாய் போல் இருந்தது.

மாயா சங்கரை பார்த்து.."அண்ணா சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிங்கனா கிளம்பிடலாம்.. அண்ணா அப்புறம் அம்மாவிற்கு நாளைக்கு நினைவு நாள் நியாபகப்படுத்த சொன்னிங்க.."

"ம்ம்ம்.."..சங்கர்.

அவனால் சாப்பிட முடியவில்லை..பத்து வருடங்களுக்கு முன்னால் பண்ண முதல் கொலையின் ரத்தகறை இன்னும் அவன் கையில் படிந்து இருந்தது.

டிஸ்கி: கொஞ்சம் Non-Linear அடிப்படையில் ட்ரை பண்ணி இருக்கேன்.

21 comments:

Raju said...

நல்லாருக்கு தல..
சில இடங்களில் புரியவில்லை.
கதையில கேரக்டர்ஸ் அதிகமோன்னு நினைக்கத் தோணுது.

ஆ.ஞானசேகரன் said...

//டக்ளஸ்... said...

நல்லாருக்கு தல..
சில இடங்களில் புரியவில்லை.
கதையில கேரக்டர்ஸ் அதிகமோன்னு நினைக்கத் தோணுது.//

ரிபீட்ட்ட்ட்

வினோத் கெளதம் said...

கதையின் Main Character ஷங்கர் மட்டும் எடுத்துங்க..
அப்புறம் Red colorல இருக்குறது மட்டும் நிகழ்காலத்தில் நடப்பது போல் படிக்கவும்..
Sorry 4 d confusion.

கார்த்திக் said...

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை..

கலையரசன் said...

அப்பாடா.. நல்லவேளை! Non-Linear அடிப்படையில் ட்ரை பண்ணியிருக்கேன்னு சொல்லி தொலஞ்ச.. இல்லனா உன்னைய டாராகிருபேன்! அருமையான கதை எனக்கு இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் புரிஞ்சிது! குட் பட் நாட் பெஸ்ட். அடுத்த தடவை முயற்சி செய்தால் வேறு ஒரு தளத்திற்க்கு நீ முன்னேறலாம்..

அப்புறம்,
சங்கர் கோபி என்பது ஒரு ஆளா இரண்டான்னு குழப்பம் (கமா சேரு!)
சங்கு மரம் என்பது ஒரு ஆளா? அல்லது சங்கு என்பவன் மரத்துக்கு கீழே நிக்குறானா?
நாளைக்கு சங்குமரம் பாண்டியன் கடை 8 மணிக்கு புருஷோத்தமன் (இதுதான் பெருங்கொழப்பம்)

வினோத் கெளதம் said...

நன்றி கலை..உங்கள் விமர்சனத்திற்கு.
சங்கு மரம் என்பது சங்கு ஒலிப்பான் பொருத்தப்பட்ட இரும்பு மரம்.
அப்புறம் நீங்க சொன்னதை எல்லாம் மாற்றி விட்டேன்..
அடுத்த தடவை இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.

வினோத் கெளதம் said...

@ கார்த்திக் ..

//தாயிற் சிறந்த கோவிலும் இல்லை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்தி..

கார்த்திகைப் பாண்டியன் said...

வித்தியாசமான நல்ல முயற்சி நண்பா

அப்துல்மாலிக் said...

ஒரு மாதிரியாதான் கெளெம்பிருக்கேள்

வித்தியாசமா கதை சொல்லிருக்கிங்க தல்

நல்லா இருக்கு

3 தடவைக்கு மேலே படிச்சாதான் புரியுது

Suresh said...

super machan appala tempalte kalakal and 50 followers kku valthukkal da summa ninu adu :-)

நாகா said...

கத...:)

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த ரெட் கலர் மேட்டர முன்னாடியே சொல்லிருந்தா ரெண்டுவாட்டி படிச்சுருக்க மாட்டேன்ல...

கதை இன்னும் கொஞ்சம் கதா பாத்திரங்கள் குறைத்திருக்கலாமோ....

தமிழ்ப்பிரியா said...

நல்ல இருக்கு. ரெண்டு தடவ வாசிச்சா தான் புரியுது........

வால்பையன் said...

//ஜாமீன் கிடைக்காது//

எல்லா பக்கமும் தேடி பார்த்தாச்சு!

கெழுத்தி மீன் இருக்குன்றான்
கொறவை மீன் இருக்குன்றான்!
வஞ்சிரம் மீன் இருக்குன்றான்!

ஆனா ஜாமீன் மட்டும் எங்கயுமே இல்ல!


கடல்ல கூட இல்லையாம்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத் அருமையா எழுதியிருக்கீங்க.. இது உங்களுக்கு நல்லாவே வருது. பிடிச்சுக்குங்க.

அப்புறம் இந்த NON-LINEARனா என்னன்னு தெரியல (மடையா இது கூடவா தெரியல??) :((

கோபிநாத் said...

நல்ல முயற்சி கவுதம் ;)

வாழ்த்துக்கள் ;)

குறைகள் இருந்தாலும் முதல் முயற்சி ரசிக்கும் படியாக இருக்கு.

தொடருங்கள் ;)

Muniappan Pakkangal said...

Ratha vaadai,payama irukkuppa.

☀நான் ஆதவன்☀ said...

கொஞ்சம் குழப்பாக இருந்தது வினோத். இருமுறை படித்தேன். கேரக்டர்கள் அதிகமாதலால் குழப்பம் வந்ததென்று நினைக்கிறேன்.

நல்ல முயற்சி. வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன்..

நன்றி நண்பா..

@ அபுஅஃப்ஸர்..

நன்றி நண்பரே..
மூன்று முறை படிச்சிங்களா..

@ Suresh..

Thanks Machi..
Welcome Back.

@ நாகா..

நன்றி நாகா.

@ பிரியமுடன் வசந்த்..

நன்றி வசந்த பொறுமையாக படித்ததற்கு..
கதை பாத்திரங்கள் கொம்சம் அதிகம் தான சொன்ன மாதிரி ..
கவனமாக சொல்லி இருக்க வேண்டும்..கோட்டை விட்டு விட்டேன்..

@ தமிழ்ப்பிரியா ..

நன்றி தமிழ்பிரியா..

@ வால்பையன் ..

வால்ஸ் ஏன் இந்த கொலைவெறி..:)

@ பித்தன் ..

நன்றி பித்தன்.

@ ச.செந்தில்வேலன்..

நன்றி செந்தில்..பிடிசிக்கறேன்..:))

Non-Linear என்பது ஒரே வரிசையில் கதை சொல்லமால் மாறி மாறி சொல்லுவது..(உதாரணம்: விருமாண்டி, ஆயுத எழுத்து)

@ கோபிநாத்..

நன்றி கோபி கருத்துக்கு..

@ Muniappan Pakkangal ..

சார் உங்களுக்கு பயமா..!!

@ ☀நான் ஆதவன்☀ ..

நன்றி சூர்யா..
அடுத்த தடவை குழப்பாமல் சொல்ல முயற்சிக்கிறேன்..

Muniappan Pakkangal said...

Kolaihara oorla piranthu ippa thaampa ratha vaadai illaama irukken.Pona varusham murder aana bodya adutha thottathula vachikittu enga thottathai uzhuthu pottu vanthempa.