Thursday, May 28, 2009

தடுமாறும் பயணங்கள்..

சுரேஷும் கிஷோரும் திண்டிவனம் பேருந்து நிலையத்தில் மிதமாக குளிரும் பனியில் காலையில் ஆறு மணிக்கே நின்று கொண்டு இருந்தனர்..

"அப்ப இன்னிக்கு சொல்லிடறதா முடிவு பண்ணிட்ட"..சுரேஷ்.

"ஆமாம்டா நிச்சயமா அதுல எந்த வித சந்தேகமும் வேணாம் உனக்கு.."..கிஷோர்.

"டேய்..நம்ம காலேஜ்ல அத்தனை பொண்ணுங்க இருக்கு..அதுங்க மேல எல்லாம் இல்லமா இப்படி பஸ்ல போறப்ப வரப்ப இன்ட்ரோ ஆனா பொண்ணு கூட எப்படிடா.."

"மச்சான் அது தாண்டா லவ்ஸ்..எங்க வேனாலும் எப்படி வேனாலும் வரலாம்.."

"உன் விஷயத்துல இன்னொரு வரி கூட சேத்துக்கலாம், எத்தனை முறை வேணாலும் வரலாம்னு ரொம்ப பொருத்தமா இருக்கும்.."..சுரேஷ்.

"டேய், கொஞ்சம் மூடுறியா, நடக்க போறதா மட்டும் பாரு"..கிஷோர்.ரெட்டனை பஸ் ஆடி அசைந்து வந்து நின்றது..அதில் இருந்து இறங்கி அன்ன நடை போட்டு வந்த பிரியா இவர்களை பார்த்தவுடன் ஹாய் என்று கை காட்டினாள்..

"மச்சான் பார்த்தியா பாக்குற பார்வையே ஆயிரம் அர்த்தம் சொல்லுது.."..கிஷோர்.

"ஆயிரம் அர்த்தம் எல்லாம் இல்ல, ஒரே அர்த்தம் தான் இன்னிக்கும் வந்துடான லூசு பய அப்படின்னு பாக்குது.."..சுரேஷ்.

மூவரும் சேர்ந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறினார்..பஸ்சில் கூட்டம் அள்ளியது..காலியாக இருந்த ஒரு இடத்தை காட்டி ப்ரியாவை அமரும் படி நடத்துனர் சைகை காட்டினர்..

ப்ரியாவும் சென்று அமர்ந்தாள்..

"பார்த்தியாடா உலகத்தை அவள விட அதிக நேரம் நின்னுக்கிட்டு போக போறோம் ஆனா இந்த கண்டக்டர் அவள கூப்பிடு உக்கார சொல்றாரு..ஏன் நம்மக்கு மட்டும் ஆண்டவன் காலை இரும்புலையா படைச்சி இருக்கான்.."..சுரேஷ்.

"விடுறா பொம்பளை பசங்க உக்காந்துக்கிட்டு வரட்டும் தப்பு இல்ல.."..கிஷோர்.

டீவியில் வடிவேல் காமெடி ஓடி கொண்டு இருந்தது..

" மச்சான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ இருக்குற கூட்டம் எல்லாம் தெள்ளார் கற்பகம் காலேஜ் வந்ததும் இறங்கிடும் அதுல இருந்து அடுத்து இருபத்து நிமிடம் வந்தவாசி போய் சேர்கிற வரைக்கும் உன் டைமிங், சரியா சொல்லிடு சொதப்பிடாத"..

"தம்பிகளா ரொம்ப நேரமா கூப்பிடிறேன் உயிரை வாங்கமா டிக்கெட்டா வாங்கி தொலைங்க"..கண்டக்டர்..

"நல்லா குத்தலத்தல நிக்க வேண்டியது எல்லாம் இங்க வந்து நின்னுக்கிட்டு நம்ம உசுர வாங்குதுங்க.."..டீவியில் வடிவேல் கத்தி கொண்டு இருந்தார்..

இருவரும் டிக்கெட்டை வாங்கினர்..வண்டி தெள்ளார் வந்தவுடன் கூட்டம் எல்லாம் இறங்க ஆரம்பித்தது..

கிஷோர் கொஞ்சம் நடுக்கத்துடன்.."மச்சான் சொல்லலங்க்ரியா, அவ தப்பா எடுத்துக்க மாட்டாளே, அனாவசியமா தப்பா போய்ட போகுது..".

"நீ புடுங்கறது பூராவுமே தேவை இல்லாதது தான் போய் புடுங்கு போ.."..டீவியில் வடிவேல்.

"டேய், சாவடிச்சிருவன்..ஒழுங்கா போய் சொல்லுற..அப்புறம் காலேஜ் வந்துட்டு என் உசிர வாங்குவ.."..சுரேஷ்..

கிஷோரும் தைரியத்தை வரவழைத்து கொண்டு ..அவள் அருகில் போய் அமர்ந்து சுற்றி வளைக்காமல் "நான் உன்ன லவ் பண்ணுறேன் பிரியா"..அப்படின்னு மெதுவான குரலில் தைரியமாக சொல்லி முடித்தான்..

அடுத்த கணமே.."கிஷோர் நான் உங்கள இன்னமோ நினைச்சேன்..நீங்க இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துப்பிங்கனு நினைக்குல சாரி எனக்கு உங்கள பிடிக்கில இதுவே உங்களை சந்திப்பது கடைசி தடவையா இருக்கட்டும்.." என்று பொட்டில் அறைந்தது போல் சொல்லிவிட்டு வந்தவாசி பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் இறங்கி நடந்து சென்றாள்..

சுரேஷ் கிஷோரிடம் .."மச்சான் பீல் பண்ணாத பார்துக்குலம் விடு.."

"டேய், பீல் பண்ணல என்ன பேசிட்டேன்னு ரொம்ப ஓவரா பேசிட்டு போற அவ..அதன் வேற ஒன்னும் இல்லை.."..

"சரி என்ன முடிவு பண்ணி இருக்க.."..சுரேஷ்..

"இதுக்கு அப்புறம் இவ பின்னாடி வர்றது சுத்த வேஸ்ட்..இந்த பஸ் இன்றே கடைசி..காலேஜ்ல அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் வீணா இருக்குல..இனிமே அதான் முடிவு பண்ணிட்டேன்.."..கிஷோர்.

"டேய்..உடனே முடிவ மாட்டிடா.."..சுரேஷ்..

"மச்சான் உருகு உருகுனு உருகருது எல்லாம் அந்த காலம் ஒன்னு சரி பட்டு வரலியா சரி தான்னு போய்கிட்டே இருக்கணும்..இனிமே இவ்வள நினைக்கிறது கூட வேஸ்ட்..சரி வா காஞ்சிபுரம் பஸ் நிக்குது ஏறலாம்..

வழியில் பிரியா தன் மொபைலில் கணேஷுடன் "டேய், உன் கூட கார்த்திக் கூட பழகுற மாதிரி ஒரு பையன் கூட எதர்த்தமா பழகினேன் பார்த்த இன்னிக்கு ப்ரொப்ஸ் பண்ணுறான்.."..

கணேஷ்.."அப்படியா சொன்னான்.."

பிரியா.." ஆமா செல்லம், இந்த பசங்க சாதரணமா பேசுனா கூட தப்பா எடுத்துக்கிரனுங்க.."

காஞ்சிபுரம் செல்லும் பஸ்சில் சுரேஷ் நீண்ட சிந்தனையில் வந்து கொண்டு இருந்தான்."நம்ம நினைச்ச மாதிரியே பிரியா ஒத்துக்கில..இன்னும் ரெண்டே வாரத்துல அவள எப்படியாச்சும் நம்ம ப்ரொபோஸ் பண்ணி கவுத்திடனும்..அடுத்த வாரமே அடிய போட்டுட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டே
கிஷோர் கூட சிரித்து பேசிக்கொண்டு வந்தான்..


49 comments:

vinoth gowtham said...

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..

sakthi said...

மச்சான் அது தாண்டா லவ்ஸ்..எங்க வேனாலும் எப்படி வேனாலும் வரலாம்.."

"உன் விஷயத்துல இன்னொரு வரி கூட சேத்துக்கலாம், எத்தனை முறை வேணாலும் வரலாம்னு ரொம்ப பொருத்தமா இருக்கும்.."..சுரேஷ்.

அருமையான நகைச்சுவை

vinoth gowtham said...

@ Sakthi..

சிஸ்டர் இவ்வளவு வேகமான பின்னுட்டம்..ரொம்ப நன்றிங்க.

Suresh said...

மச்சான் ஹா ஹா சூப்பர்

Suresh said...

//இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..//

டேய் இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு

Suresh said...

//

"மச்சான் அது தாண்டா லவ்ஸ்..எங்க வேனாலும் எப்படி வேனாலும் வரலாம்.."


"உன் விஷயத்துல இன்னொரு வரி கூட சேத்துக்கலாம், எத்தனை முறை வேணாலும் வரலாம்னு ரொம்ப பொருத்தமா இருக்கும்.."..சுரேஷ்.//

அவ் :-) ஹா ஹா

Suresh said...

//"மச்சான் பார்த்தியா பாக்குற பார்வையே ஆயிரம் அர்த்தம் சொல்லுது.."..கிஷோர்.

"ஆயிரம் அர்த்தம் எல்லாம் இல்ல, ஒரே அர்த்தம் தான் இன்னிக்கும் வந்துடான லூசு பய அப்படின்னு பாக்குது.."..சுரேஷ்.//

ஹா ஹா ஹா ஹா

Suresh said...

//"பார்த்தியாடா உலகத்தை அவள விட அதிக நேரம் நின்னுக்கிட்டு போக போறோம் ஆனா இந்த கண்டக்டர் அவள கூப்பிடு உக்கார சொல்றாரு..ஏன் நம்மக்கு மட்டும் ஆண்டவன் காலை இரும்புலையா படைச்சி இருக்கான்.."..சுரேஷ்.

"விடுறா பொம்பளை பசங்க உக்காந்துக்கிட்டு வரட்டும் தப்பு இல்ல.."..கிஷோர்.//

ஹா ஹா

Suresh said...

//கிஷோர் கொஞ்சம் நடுக்கத்துடன்.."மச்சான் சொல்லலங்க்ரியா, அவ தப்பா எடுத்துக்க மாட்டாளே, அனாவசியமா தப்பா போய்ட போகுது..".

"நீ புடுங்கறது பூராவுமே தேவை இல்லாதது தான் போய் புடுங்கு போ.."..டீவியில் வடிவேல்.

"டேய், சாவடிச்சிருவன்..ஒழுங்கா போய் சொல்லுற..அப்புறம் காலேஜ் வந்துட்டு என் உசிர வாங்குவ.."..சுரேஷ்..

//

இதுல டிவி காமெடி சூப்பர் டைமிங் ஹா ஹா ஹா

Suresh said...

//அடுத்த கணமே.."கிஷோர் நான் உங்கள இன்னமோ நினைச்சேன்..நீங்க இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துப்பிங்கனு நினைக்குல சாரி எனக்கு உங்கள பிடிக்கில இதுவே உங்களை சந்திப்பது கடைசி தடவையா இருக்கட்டும்.." என்று பொட்டில் அறைந்தது போல் சொல்லிவிட்டு வந்தவாசி பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் இறங்கி நடந்து சென்றாள்..

சுரேஷ் கிஷோரிடம் .."மச்சான் பீல் பண்ணாத பார்துக்குலம் விடு.."//

ஆமாம் இது இல்லாடி இன்னொனு ;) வாழ்கையில் முயற்சி ரொம்ப முக்கியம்

Suresh said...

//காஞ்சிபுரம் செல்லும் பஸ்சில் சுரேஷ் நீண்ட சிந்தனையில் வந்து கொண்டு இருந்தான்."நம்ம நினைச்ச மாதிரியே பிரியா ஒத்துக்கில..இன்னும் ரெண்டே வாரத்துல அவள எப்படியாச்சும் நம்ம ப்ரொபோஸ் பண்ணி கவுத்திடனும்..அடுத்த வாரமே அடிய போட்டுட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டே
கிஷோர் கூட சிரித்து பேசிக்கொண்டு வந்தான்..//

மச்சான் ரெண்டு வாரம் ஜாஸ்தி ;) டா ஆமாம் உன் ரெண்டு கேரக்டரும் உவ் லூசு பசங்க ;) இன்னைக்கு டிரெண்டில் இருக்காங்க

ஐ லைக் கிஷோர் கேரக்டர்

அப்புறம் ப்ரியா கிஷோர் கிட்டயும் செல்லம்னு என்று தான் பிரண்ட்லியா பேசுச்சா

Suresh said...

நல்லா இருக்கு ;0

Suresh said...

டேய் இந்த் கம்பெனிக்கு மாடுரேஷன் வேறையா

Suresh said...

சரி தமிழர்ஸில் தமிழிஷ் வோட்டு போட்டாச்சு

ஆ.ஞானசேகரன் said...

//"ஆயிரம் அர்த்தம் எல்லாம் இல்ல, ஒரே அர்த்தம் தான் இன்னிக்கும் வந்துடான லூசு பய அப்படின்னு பாக்குது.."..சுரேஷ்.//

அப்படியா நண்பா..

//இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..//

பாத்திரங்கள் மட்டுதானே கற்பனை! கதை உண்மையா நண்பா? அதுல நீங்க எந்த பாத்திரம்....?

Muniappan Pakkangal said...

Kooda irunthu kuzhi parikira velai,Sursh-karpanaiyaa,nijamaa?

S Senthilvelan said...

//மச்சான் உருகு உருகுனு உருகருது எல்லாம் அந்த காலம் ஒன்னு சரி பட்டு வரலியா சரி தான்னு போய்கிட்டே இருக்கணும்..இனிமே இவ்வள நினைக்கிறது கூட வேஸ்ட்..சரி வா காஞ்சிபுரம் பஸ் நிக்குது ஏறலாம்..
//

இன்னிக்கு என்ன நடக்குதுனு சூப்பரா படம் போட்டுக் காட்டீட்டீங்க..

vinoth gowtham said...

@ Suresh..

//இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..//

//டேய் இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு//..

வில்லங்கம் எல்லாம் ஒன்னும் இல்லை மச்சான்..இது கிஷோர் கடைசியா போஸ்ட் பண்ண கதைக்கு முன்னாடியே நான் எழுதினது..என்ன நான் லேட்டா போஸ்ட் பண்ணுறேன்..இதே மாதிரி பிரபலங்கள் பெயரை சேர்க்கும் பொழுது ஒரு சுவாரசியம்..

//ஐ லைக் கிஷோர் கேரக்டர்

அப்புறம் ப்ரியா கிஷோர் கிட்டயும் செல்லம்னு என்று தான் பிரண்ட்லியா பேசுச்சா//

ம்ம்ம்...அப்படி தான் பேசி இருக்கும்னு நினைக்கிறேன்..

//ஆமாம் இது இல்லாடி இன்னொனு ;) வாழ்கையில் முயற்சி ரொம்ப முக்கியம்//

ரொம்ப வாஸ்தவம்..

//டேய் இந்த் கம்பெனிக்கு மாடுரேஷன் வேறையா//

இல்ல மச்சான் வைச்ச தான் எனக்கு கம்மென்ட் வந்து இருக்கிறதை சுலபமா தெரிஞ்சிக்க முடியுது அதான்..

//நல்லா இருக்கு ;0//
//சரி தமிழர்ஸில் தமிழிஷ் வோட்டு போட்டாச்சு//

நன்றி நன்றி நன்றி..

vinoth gowtham said...

@ ஆ.ஞானசேகரன் said..

பாத்திரங்கள் மட்டுதானே கற்பனை! கதை உண்மையா நண்பா? அதுல நீங்க எந்த பாத்திரம்....?

அதுல நான் எந்த பாத்திரமா..ஆவ்வ்வ்வ்...நான் ஒரு சொக்க சில்வர் பாத்திரம்..

vinoth gowtham said...

// Muniappan Pakkangal said...

Kooda irunthu kuzhi parikira velai,Sursh-karpanaiyaa,nijamaa?//

சார் சுத்தமான கற்பனை கேரக்டர் அது..

vinoth gowtham said...

@ S Senthilvelan said..

//இன்னிக்கு என்ன நடக்குதுனு சூப்பரா படம் போட்டுக் காட்டீட்டீங்க..//

இதே போல் சம்பவங்கள் நான் பார்த்து இருக்கிறேன் செந்தில் அதான்..நன்றி.

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல கலகலப்பா எழுதியிருக்கீங்க வினோத், படிக்க சுவாரசியமா இருக்கு.

ஷண்முகப்ரியன் said...

இன்றைய இளைய தலை முறையின் வேதனையான நடைமுறை.நன்றாக இருந்தது வினோத்.

Kanna said...

//இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..//

ஹா..ஹா இதுதான் பயங்கர காமெடி...

என்னதான் சுரேஷ், கிஷோர் மேல கோவம் இருந்தாலும் அதுக்காக இப்படியா பழிவாங்குறது..

எப்படியோ போங்க....

நான் இன்னைக்கு இங்க கும்மி அடிக்கலாம்னு நினைக்குறேன்..

கிஷோர்...கிஷோர்...எங்கப்பா போய்ட்ட ...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Kanna said...

// Suresh said...

ஐ லைக் கிஷோர் கேரக்டர் //

புரொடியூசரும் ஹீரோவும் ராசி ஆயிட்டாங்களா....

ஆககூடாதே......

இதுக்கு ஏதாவது பண்ணனும் பாஸ்.....

vinoth gowtham said...

@ ஆ.முத்துராமலிங்கம் said..

//நல்ல கலகலப்பா எழுதியிருக்கீங்க வினோத், படிக்க சுவாரசியமா இருக்கு.//

நன்றி நண்பா..

vinoth gowtham said...

ஷண்முகப்ரியன் said...
//இன்றைய இளைய தலை முறையின் வேதனையான நடைமுறை.நன்றாக இருந்தது வினோத்.//

ஆமாம் சார் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது இதே மாதிரி சில நண்பர்களை சந்தித்து உள்ளேன் அதனின் தாக்கம் தான் இது ..

S.A. நவாஸுதீன் said...

கலகலப்பான கதைக்கு இடைச்சொருகலாக வடிவேல் வசனங்கள் சூப்பர்.

அது என்ன "இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே" முதல் பின்னூட்டம். இதுல ஏதோ குசும்பு தெரியுதே வினோத். ஹலோ யாருப்பா இங்க கிஷோர்?, யாருப்பா இங்க சுரேஷ்?

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

நன்றி
தமிழ்ர்ஸ்

கலையரசன் said...

உன்னை எவன் நடிக்க கூப்பிட்டான்? அவன உதைக்கனும் மொதல்ல..
எவ்வளவு அழகா மொக்க.. சாரி, கதை எழுதுற.. நீதான்டா டையரடக்கரு!

அப்படியே என்னையும், மொக்கசாமி கண்ணாவையும் வச்சு ஒரு கதை எழுது!
அத பார்த்துட்டு சாரு, மோரு, பீரு எல்லாம் கோவணத்தை உதறி தோலுல போட்டுட்டு
"எஸ்" ஆயிடனும் ஆமா!

கலையரசன் said...

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..
உன் சொந்த கதையும்..
அதுல நீ நொந்த கதையும்..
சூப்பரோ சூப்பர்!

NEXT RELEASE
என்னையும் கண்ணாவை வச்சி நீ எழுதபோற கதை பேரு..
"தாருமாரு பயணங்கள்"

ஸ்டார்ட்டிங்கும் நானே சொல்லுறேன்..
கலையும், கண்ணாவும் நியூயார்க் சிட்டியில், போர்ச் காரில், மிதமாக குளிரும் பனியில் காலையில் எட்டு மணிக்கு..

vinoth gowtham said...

@ Kanna..

//என்னதான் சுரேஷ், கிஷோர் மேல கோவம் இருந்தாலும் அதுக்காக இப்படியா பழிவாங்குறது..//

அவங்க மேல எனக்கா கோபமா ச்சே ச்சே வாய்ப்பே இல்லை கண்ணா..இருவரும் என் ஆருயிர் தோழர்கள்..

//புரொடியூசரும் ஹீரோவும் ராசி ஆயிட்டாங்களா....
ஆககூடாதே......
இதுக்கு ஏதாவது பண்ணனும் பாஸ்.....//

நானும் அதில் ஒரு ஹீரோ என்பதை நியாபகத்தில் வைத்து கொள்ளவும்..

vinoth gowtham said...

@ S.A. நவாஸுதீன் said...

//கலகலப்பான கதைக்கு இடைச்சொருகலாக வடிவேல் வசனங்கள் சூப்பர்.

அது என்ன "இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே" முதல் பின்னூட்டம். இதுல ஏதோ குசும்பு தெரியுதே வினோத். ஹலோ யாருப்பா இங்க கிஷோர்?, யாருப்பா இங்க சுரேஷ்?//

நன்றி நண்பா..

என்னாது யாரு சுரேஷ், யாரு கிஷோரா..பதிவுலகின் இளம் சிங்கங்கள், முரட்டு காளைகள்..

S.A. நவாஸுதீன் said...

என்னாது யாரு சுரேஷ், யாரு கிஷோரா..பதிவுலகின் இளம் சிங்கங்கள், முரட்டு காளைகள்

அப்ப கற்பனையில்லை நிஜம்னு சொல்லுங்க வினோத். குசும்பு

vinoth gowtham said...

@ கலையரசன் said...

//எவ்வளவு அழகா மொக்க.. சாரி, கதை எழுதுற.. நீதான்டா டையரடக்கரு!//

நன்றி நண்பா..என்ன இயக்குனர வச்சி ஒரு படம் தயாரிக்கிற சொல்லிபுட்டேன்..

//அப்படியே என்னையும், மொக்கசாமி கண்ணாவையும் வச்சு ஒரு கதை எழுது!
அத பார்த்துட்டு சாரு, மோரு, பீரு எல்லாம் கோவணத்தை உதறி தோலுல போட்டுட்டு
"எஸ்" ஆயிடனும் ஆமா!//

அடுத்து நான் எழுத போகும் மொக்கையில்..ச்சே..சாரி கதையில் நீங்கள் இருவரும் தான் பிரதான கதைப்பாத்திரங்கள்..


//அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..
உன் சொந்த கதையும்..
அதுல நீ நொந்த கதையும்..
சூப்பரோ சூப்பர்!//

என் கதயா இது..அது இந்த அளவுக்கு கூட இருக்காது ரொம்ப கேவலமா இருக்கும்..
நான் நொந்து வெந்து நூடுல்ஸ்ஸா போனது தான் மிச்சம்..


//ஸ்டார்ட்டிங்கும் நானே சொல்லுறேன்..
கலையும், கண்ணாவும் நியூயார்க் சிட்டியில், போர்ச் காரில், மிதமாக குளிரும் பனியில் காலையில் எட்டு மணிக்கு..//

நியூயார்க்ல ஆரம்பிச்சி மெல்போன்ல முடிச்சிரலாம் கொஞ்சம் காஸ்ட்லி பட்ஜெட் தான்..

vinoth gowtham said...

//S.A. நவாஸுதீன் said.. //

//அப்ப கற்பனையில்லை நிஜம்னு சொல்லுங்க வினோத். குசும்பு//

அயோ..அந்த கேரக்டர் பெய்ர்கள் மட்டும் தான் நிஜம்..மத்தப்படி காட்சியமைப்புகள் கதை எல்லாம் கற்பனை..

பித்தன் said...

போன மாசம் கிஷோருக்கும் சுரேசுக்கும் நடந்த உண்மை சம்பவத்த கதை மாதரி சொல்லிருக்க.

பத்த வச்சிடியே பரட்ட

Suresh said...

வாயா பித்தா ;) பத்தவச்ச பரட்டையே

ஆமா ... உன்னை ஹீரோவாக்கூட போடலாம்னு இருந்தேன்.. :-)

இப்போ வில்லன் தான் ;) அவ்

vinoth gowtham said...

@ பித்தன் said...
//போன மாசம் கிஷோருக்கும் சுரேசுக்கும் நடந்த உண்மை சம்பவத்த கதை மாதரி சொல்லிருக்க.

பத்த வச்சிடியே பரட்ட..//

போன மாசமா நீ வேற இது சுரேஷ் காலேஜ் படிக்கிறப்ப நடந்தது..
இது எப்படி இருக்கு..

@ சுரேஷ்..

//ஆமா ... உன்னை ஹீரோவாக்கூட போடலாம்னு இருந்தேன்.. :-)

இப்போ வில்லன் தான் ;) அவ்//

நான் அந்த ஹீரோ பாத்திரம் ரொம்ப நல்ல பண்ணுவேன் அப்படின்னு நான் சொல்லல பொதுமக்கள் பேசிக்குறாங்க..

Suresh said...

@ வினோத்

நான் காலேஜ்னு சொன்னது வேணா ஒக்கே ;)

அப்போ எல்லாம் நாங்க ரவுடி வடிவேல் சொல்லுற மாதிரி நானும் ரவுடி நானும் ரவுடி ஒரே ராவடி தான்

@பித்தன்

//நான் அந்த ஹீரோ பாத்திரம் ரொம்ப நல்ல பண்ணுவேன் அப்படின்னு நான் சொல்லல பொதுமக்கள் பேசிக்குறாங்க.. //

மச்சான் வினோத்துக்கு ஹீரோ வேஷம் கொடுத்துவிட்டு

முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை ஹீரோவை அடிக்கிற வில்லனா எல்லதையும் போட்டு அடி நவுத்திடுவோம் சரியா

சும்மா ஒர்சினால் அடி தான் கேட்டா எங்க ஹீரோ ரிலா ரிஸ்க் எடுத்து பைட் பண்ணி இருக்காருனு விளம்பரம் ;)

vinoth gowtham said...

//முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை ஹீரோவை அடிக்கிற வில்லனா எல்லதையும் போட்டு அடி நவுத்திடுவோம் சரியா //

கண்ணா நான் முதல்ல வாங்கிப்பேன் அப்புறம் தான் திருப்பி கொடுப்பேன்..
இக்கடு ச்சூடு..இப்படி எதாச்சும் வசனம் நான் பேசுற மாதிரி வருமா..

Suresh said...

//கண்ணா நான் முதல்ல வாங்கிப்பேன் அப்புறம் தான் திருப்பி கொடுப்பேன்..
இக்கடு ச்சூடு..இப்படி எதாச்சும் வசனம் நான் பேசுற மாதிரி வருமா.. //

இப்படி கேட்க நீ கண்ணா வை தான் கேட்க்கனும்...

நீ திரும்ப அடிக்கிறியாய் ..அதுக்குள்ள படம் முடிஞ்சு போய்டும்

vinoth gowtham said...

//நீ திரும்ப அடிக்கிறியாய் ..அதுக்குள்ள படம் முடிஞ்சு போய்டும்//

நான் அட்லீஸ்ட் செகண்ட் பார்ட்ல அடிக்குற மாதிரி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் மணிரத்தினம் கிட்ட ரெடி பண்ண சொல்லி இருக்கேன்..

பித்தன் said...

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/06/2.html

இது எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லு

பித்தன் said...

come to online

KISHORE said...

ஹாய் வினோத் ... சாரி கொஞ்சம் பிஸி... அதன் உடனே கமென்ட் பண்ண முடியல..
உன்னோட ரொம்ப நாள் ஆசைய தீர்த்துகிட்ட.. எப்படியோ நீ சந்தோசமா சந்தோசமா சந்தோசமா இருக்கனும்...

Suresh said...

//எப்படியோ நீ சந்தோசமா சந்தோசமா சந்தோசமா இருக்கனும்... //

இது சபிக்கிற மாதிரி இல்லை சபிக்கிறது தான்

KISHORE said...

என் நண்பன போய் நான் சபிகிறதா ? சுரேஷ்... நான் ஒன்னும் அவ்ளோ கேவலமானவன் இல்ல... எதோ கோபத்துல அவன ரெண்டு தடவ கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கேன் அவ்ளோ தான்...