Thursday, May 21, 2009

இந்த பிரபலங்கள் எல்லாம் பதிவர்களா இருந்தா..

சில பிரபலங்கள் நம்மை போல பதிவர்களாக இருந்தால் என் கேள்விக்கு எப்படி பதில் அளிப்பார்கள்:

முதலில் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித்:

நான்: தல நீங்க பிரபல பதிவரா இருந்தாலும் உங்களின் சில பதிவுகள் பயங்கர மொக்கையா இருக்கே..அதுக்கு காரணம் என்ன..?

அஜித்: சரித்திரத்தை ஒரு முறை திருப்பி பாருங்க இன்னிக்கு சூப்பர் பதிவர்னு பேர் எடுத்தவங்க எல்லாம் ஒரு காலத்துல மொக்கை பதிவு போட்டவங்க தான்..


நான்: அப்புறம் நீங்க விரும்பி படிக்கும் பதிவர் யாராச்சும் இருக்காங்கள..

அஜித்: ம்ம்..ஒருத்தர் இருக்காரு பேரு வினோத்கெளதம்..அமெரிக்க அதிபர் ஒபாமாவே அவரோட ப்ளாக் பால்லோவார்..ஆனா பாருங்க துரதிர்ஷ்டவசமா அவரோடைய ப்ளாக் காணாம போய்டுச்சு..

நான் மனதுக்குள்: அது உங்களுக்கு தான் துரதிர்ஷ்டம் மத்தவங்க எல்லாம் ரொம்ப பாக்கியம் பண்ணி இருக்கோம்..


அப்புறம் நம்ம இளைய தளபதி விஜய்:

நான்: உங்களோடயோ பல பதிவுகள ஒரே மாதிரி இருக்குன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே அத பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..

விஜய்: ன்னா..இங்க பாருங்கன்னா எனக்கு என்ன வருதோ அத தான்னா நான் எழுதறேன்..மத்தபடி என் வாசகர்களும் அத தான்னா விரும்புறாங்க..எதுக்கு தேவை இல்லமா ரிஸ்க் எடுக்கணும்ன்னா..

நான்: நீங்களே புதுசா ஒரு திரட்டி ஆரம்பிச்சு அதுக்கு தலைவரா வேற ஆகா போறிங்கன்னு ஒரு விஷயம் பலமா அடிப்படுதே..இது உங்களுக்கு தேவையா..

விஜய்: ன்னா..இது என் விருப்பம் இல்லனா..என் வாசகர்கள் விரும்புறாங்க..அதுக்கு அப்புறம் என் டாடி..நல்லவேளை இந்த கேள்வி அவரு இல்லாதப்ப கேட்டிங்க இல்லனா நீங்க பலமா அடிப்பட்டு இருப்பிங்க..

அப்புறம் நம்ம ராமநாதபுரம் எம்.பி அண்ணன் ரித்தீஷ் அவர்கள்..

நான்: வாழ்த்துக்கள் தெலுங்குமணம் ஸ்டார் ஆனதற்கு..

ரித்தீஷ்: தம்பி முதல்ல வாழ்த்து சொல்றிங்க இந்தாங்க புடிங்க ஐந்நூறு ரூபா..

நான்: அது இருக்கட்டும், உங்க பதிவுக்கு பால்லோவர் எல்லாம் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து கூப்பிட்டு வரிங்கன்னு ஒரு புரளி இருக்கே அது வேற இல்லமா நீங்களே அனானியா மாத்தி மாத்தி வந்து உங்கள புகழ்ந்து கம்மென்ட் போட்டுக்ரிங்க அப்படினும் ஒரு பேச்சு இருக்கே உண்மையா..

ரித்தீஷ்: அட வேலை வெட்டி இல்லாத பரதேசி பசங்க அப்படி தான் தம்பி பேசிக்கிட்டு திரிவானுங்க..நான் எல்லாம் பிறவி எழுத்தாளன் தெரியும்ல..

நான்: அப்ப நான் கிளம்புறேன் அண்ணே..

அடுத்து நம்ம சுப்ரமணிய சாமி..

நான்: நீங்க ஏன் எப்ப பாத்தாலும் சூப்பர் பதிவர்களா பார்த்து எப்பொழுதும் குற்றம் சொல்லுரிங்க..

சுப்பு: நோக்கு ஒன்னும் தெரியாது அம்பி..நேத்து தான் கிளிண்டன் கூட பேசினேன்..அவர் என்கிட்டே இருக்குற ஆதரங்கள் எல்லாம் கேட்டு இருக்காரு..நீ வேன்னா பாரு இந்த புஷ் பயல் கம்பி என்ன போறான்..அப்புறம் இந்த பதிவர் கிஷோர்க்கும் பின்லேடன்க்கும் உள்ள தொடர்பு ரகசிய டேப் எனக்கிட்ட இருக்கு..நம்ம பதிவர் ஜும்பலக்கடி பம்பாவோட சுவிஸ் அக்கௌன்ட் டீடைல் எல்லாம் இப்ப என்கிட்டே தான் இருக்கு..இந்த பான்-கீ-முன் என்ன பெரிய யோக்கியசீலனா அவனோட வண்டவாளம் நாளைக்கு தண்டவாளம் ஏறுதா இல்லையானு பாரு..

அடுத்து நம்ம மருத்துவர் அய்யா ராமதாசு..

நான்: சமிபத்துல நீங்க எழுதுன பதிவுக்கு யாருமே வரலனும், வழக்கம் வர்ற மூணு நாலு பேரு கூட எட்டிப்பாக்குல அப்படின்னு ஒரு பேச்சு இருக்கே..

ராமதாசு: தம்பி அது நான் வழக்கம் போல் எழுதின பதிவு தான் ஆனா பாருங்க இடையுல இந்த இங்க்தளிஷ் அப்புறம் தெலுங்குமணம் இவங்க இரண்டு பேரும் வேற யாரு பேச்சையோ கேட்டுகிட்டு பண்ண தில்லலங்கடி பித்தலாட்டம் தான் இந்த அளவுக்கு ஆனதுக்கு காரணம் ஆனா வாழ்க்கை வட்டம் தம்பி அத நியாபகம் வச்சுக்குங்க..

அடுத்து நம்ம தங்கர்பச்சன்:

நான்: மற்ற பதிவர்கள் பற்றி நீங்க என்ன நினைக்கறிங்க..

தங்கர்:
என்னங்க நடக்குது இங்க..ஆள் ஆளுக்கு பதிவு எழுதுறேன்னு கூத்து அடிக்கறாங்க..இல்ல நீங்களே சொல்லுங்க என்ன மாதிரி இங்க எவனாச்சும் ஒருத்தனாவது எழுதுறானா..
நான் கஷ்டப்பட்டு பதிவு எழுதுறேன்..எவ்வளவு நேர்மையானது எனது படைப்பு அதுக்கு ஒருத்தனும் வரமாட்டன்கிரன்..எவனாச்சும் மசாலா தடவி பதிவு எழுதுனா அவன் பின்னாடி கும்பல் கும்பலா ஓடுறானுங்க..
தமிழர்கள் எல்லாம் சோற்றால் அடித்த பிண்டம் ஆகிடங்க தம்பி..

வெல்..ம்ம்..அடுத்து நம்ம உலக நாயகன் கமல்..:

நான்: சார் நீங்க பதிவு எழுத வரலைனா என்னவா ஆகி இருப்பிங்க..

கமல்: ம்ம்..நான் எழுதிய எனது படைப்பு கூறும் எனது இலக்கிய பயணம்..ஜெயகாந்தன் கூட அதன் சொன்னாரு..அவரோடைய பார்வை வேறு..ஒரு சாமனியனா வேறு ஒரு பார்வையில் நிச்சயம் என்னால் ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் தான இது என்பது கேள்விக்குறி..பல நகரங்கள் சுற்றி திரிந்தாலும் நான் ஒரு கிராமத்தான் எனபதால் என்னால் நிச்சயாமாக அந்த கோணத்திலும் பார்க்க முடியும்..எனக்கு ஜல்லிக்கட்டு பிடிக்கும்..நான் அந்த காளையை அடக்கும் வீரனாக கூட வேலை பார்த்து கொண்டு இருக்கலாம்..

கமல் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே பக்கத்தில் இருந்த அவர் நண்பரிடம்.."அங்க ஒருத்தரு தலை தெறிக்க ஓடுறாரே யாரு அவரு.."

அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த:

நான்: நீங்க ரொம்ப நாளா சொந்தமா ஒரு திரட்டி ஆரம்பிக்க போறிங்கன்னு ஒரு பேச்சு இருக்கே..??

ரஜினி: கண்ணா ஆரம்பிக்கனும் ஆனா கட்டாயம் ஆரம்பிக்கணுமா..ஆரம்பிக்க வேண்டிய நேரத்துல அதுக்கான கட்டாயம் இருந்து வர வேண்டிய இடத்தில இருந்து கட்டளையும் வந்துச்சுனா..ஆரம்பிச்சிருலாம்..

நான்: தலைவா இதே டயலாக் தான் பதினைந்து வருடமா பேசுறிங்க..

ரஜினி: ஹா..ஹா.ஹா..கண்ணா நமக்கு இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு இல்ல எப்பொழுதும் ஒரே பேச்சு தான்..நீ இன்னும் பத்து வருஷம் கழிச்சு இந்த கேள்விய கேட்டாலும் இதே பதில் தான்..


50 comments:

Anonymous said...

Pls do not say anything about our Thalavar - SUPER STAR.

He will come oneday on rightday.

Note : Sorry i do not have any Id. So, i come as Anonymous.

I am Anand from Bamako, Mali.

vinoth gowtham said...

Hi anand,

I said anything wrongly about him..nothing naa..hez also one of my fav man..

கலையரசன் said...

அப்புறம் நம்ம வினோத்கெளதம் அவர்கள்..

நான்: வாழ்த்துக்கள்! பிளாக் தொலைஞ்சாலும் தொடர்ந்து பதிவு போட்டு ஸ்டார் ஆகறத்துக்கு..

வினோத்: கலை.. முதல்ல வாழ்த்து சொல்றிங்க இந்தாங்க புடிங்க ஐந்நூறு ரூபா..

(நாளைக்கு நேர்ல வந்து வாங்கிக்கிறனுங்கோவ்...)

vinoth gowtham said...

//வினோத்: கலை.. முதல்ல வாழ்த்து சொல்றிங்க இந்தாங்க புடிங்க ஐந்நூறு ரூபா..

(நாளைக்கு நேர்ல வந்து வாங்கிக்கிறனுங்கோவ்...)//

ஹா ஹா ஹா..

சூரியன் said...

."அங்க ஒருத்தரு தலை தெறிக்க ஓடுறாரே யாரு அவரு.."

அது நான் தான் முடியல...

pappu said...

தல, இன்னொரு ஸ்பேர் ப்ளாக்கில ஆரம்பிச்சிட்டீங்களா?

சென்ஷி said...

:-))

எல்லாமே நல்லாயிருக்குது. ஆனாலும் அந்த தங்கர் பச்சான் அல்டிமேட்!

♫சோம்பேறி♫ said...

/*முதல்ல வாழ்த்து சொல்றிங்க இந்தாங்க புடிங்க ஐந்நூறு ரூபா..*/

தலைவர் ரித்தீஷ் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக வலைப்பூ எழுத வரவும்.

(உங்களுக்கு வாழ்த்து சொன்னா நூறு ரூபாயாவது கிடைக்குமா வினோத்?)

Anonymous said...

ஹாஹஹாஹாஹா
கலக்கல்!
எல்லாமே சூப்பருங்க!

வெங்கிராஜா said...

யப்பா! அட்டகாசம்.. குறிப்பா அந்த ஜே.கே.ஆர் மேட்டரு! அப்புறம் நண்பர் கிஷோருக்கும் உங்களுக்கும் அப்படி என்னங்க ஜென்மப்பகை?

vinoth gowtham said...

@ சூரியன்..

சூரியன் ஒடதிங்க நில்லுங்க..:))

vinoth gowtham said...

@ பப்பு..

//தல, இன்னொரு ஸ்பேர் ப்ளாக்கில ஆரம்பிச்சிட்டீங்களா?//

அப்புறம் என்ன பண்ணுறது பப்பு for Time being..

vinoth gowtham said...

@ சென்ஷி ..

நன்றி தல..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..

vinoth gowtham said...

@ ♫சோம்பேறி♫..

//தலைவர் ரித்தீஷ் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக வலைப்பூ எழுத வரவும்.

(உங்களுக்கு வாழ்த்து சொன்னா நூறரூபாயாவது கிடைக்குமா வினோத்?)..

மணி ஆர்டர்ரில் அனுப்பபடும்..:))

vinoth gowtham said...

// கவின் said...

ஹாஹஹாஹாஹா
கலக்கல்!
எல்லாமே சூப்பருங்க!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவின்..

vinoth gowtham said...

// வெங்கிராஜா said...

யப்பா! அட்டகாசம்.. குறிப்பா அந்த ஜே.கே.ஆர் மேட்டரு! அப்புறம் நண்பர் கிஷோருக்கும் உங்களுக்கும் அப்படி என்னங்க ஜென்மப்பகை?//

நன்றி வெங்கி..

கிஷோர் பதிவுலகிற்கு வரும் முன்பே என் நண்பன் அதனால் அவன் மேல் இருக்கும் உரிமையில் தான்..

KISHORE said...

நல்லா இருக்கு மச்சான்... குறிப்பா ரித்திஷ் மேட்டர் கலக்கல்..
சு.சாமி மேட்டர் வழக்கம் போல் காமெடி.. பின்லடேன் கிட்ட சொல்லி அல் அய்ன் ல ஒரு குண்டு போட சொல்றேன்...
இன்னும் சில பேர் இருகாங்க... விஜயகாந்த், சரத், கார்த்திக்,,, அவங்களையும் இழுத்து விட்டா இன்னும் ரகளையா இருக்கும்....

SUREஷ் said...

blog காணாம போயிருமா தல...

Suresh said...

எல்லாமே நலமா இருக்கு... ஜீலை காற்றில்னு மே மாச மொட்ட வெயில பெயர வச்சியே சோறு வச்சியா ;) மாதிரி .. நல்லா தாண்டா இருக்கு..

அப்புறம் எல்லாம் சூப்பர், ஆனாலும் நீங்க நம்ம தலைவர அப்படி எல்லாம் சொல்லக்கூடாது... சரி நீ மொக்க போட்டனால தப்பிச்ச

புது பிளாக், சிரிச்ச போஸ்... என்ன விணோ புது பெண்ணு பாக்குறாங்களா ;)

நீ ஸடார் தான் ஓபாமவெ உங்கள பாலோ பண்ணுறாராம் ;) டேய் தீவிரவாதிகள்னா பாலோ பண்ண தாண்டா செய்வாங்க ;)

சரி மச்சான் மேட்டர்க்கு வருவோம்..

சூப்பாரா எத்துனை தடை கற்கள் வந்தாலும்.. சும்மா நின்னு அதை தலைவர் சொன்ன மாதிரி படி கற்களா மாத்தி கல்க்குற மச்சான்

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கலக்கல்

Nagendra Bharathi said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

Anonymous said...

கற்பனை ஓட்டம் அபாரம் கெளதம்...புதுசா சிந்தித்து சிரிக்க வச்சி இருக்கீங்க...

vinoth gowtham said...

@ Kishore..

நன்றி மச்சான்..

அல்-அய்ன்ல குண்டா அதை பண்ணு முதல்ல..
அப்புறம் நீ சொன்னவங்கள லிஸ்ட்ல சேர்த்து இருக்கலாம் ஆனா ஏற்கனவே பதிவு பெருசு ஆயிடுச்சு அதன்..

vinoth gowtham said...

//SUREஷ் said...
blog காணாம போயிருமா தல...//

காணமா தான் போய்டுச்சு தல..:((
இப்பயே அந்த HTML Settings download பண்ணி வச்சிக்குங்க..

vinoth gowtham said...

@ Suresh..

//அப்புறம் எல்லாம் சூப்பர், ஆனாலும் நீங்க நம்ம தலைவர அப்படி எல்லாம் சொல்லக்கூடாது... //

மச்சான் நன்றி..
நான் தலைவரா தப்பா சொல்லுல மச்சான் சும்மா ஒரு தமாசு அவ்வளவு தான்..

//புது பிளாக், சிரிச்ச போஸ்... என்ன விணோ புது பெண்ணு பாக்குறாங்களா ;)//

பாத்துடாலும்..:))

//நீ ஸடார் தான் ஓபாமவெ உங்கள பாலோ பண்ணுறாராம் ;) டேய் தீவிரவாதிகள்னா பாலோ பண்ண தாண்டா செய்வாங்க //

ஹா ஹா ஹா ..நல்ல காமெடி..

//சூப்பாரா எத்துனை தடை கற்கள் வந்தாலும்.. சும்மா நின்னு அதை தலைவர் சொன்ன மாதிரி படி கற்களா மாத்தி கல்க்குற மச்சான்

வாழ்த்துகள்//

நன்றி மச்சி உன் வாழ்த்துக்கு..:-)

வேத்தியன் said...

அண்ணாத்தே...
சூப்பர் பதிவு...

வாழ்த்துகள் நண்பா...

vinoth gowtham said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல கலக்கல்//

நன்றி தல..

vinoth gowtham said...

//@ Nagendra Barathi..

a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there.//

Thanks 4 visiting my blog barathi..
surely i will come..

vinoth gowtham said...

//தமிழரசி said...
கற்பனை ஓட்டம் அபாரம் கெளதம்...புதுசா சிந்தித்து சிரிக்க வச்சி இருக்கீங்க...//

நன்றி தமிழரசி..:)

vinoth gowtham said...

//வேத்தியன் said...
அண்ணாத்தே...
சூப்பர் பதிவு...

வாழ்த்துகள் நண்பா...//

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்..

கே.ரவிஷங்கர் said...

இந்த குங்குமம் 28-05-09 இதழில் உங்கள் blogspotபற்றி வந்திருக்கிறதே.

நீங்கள்தான vinothgowtham.blgospot.com ?

தலைப்பு: சில பருவங்கள் சில பார்வைகள்.

vinoth gowtham said...

தல..என்ன சொல்றிங்க..ஆச்சரியம்..
தெரியப்படுட்டியதக்ற்கு நன்றி தல..
ஆனா என்னோட அந்த ப்ளாக் இப்ப இல்ல..காணாம போய்டுச்சு..:((

கே.ரவிஷங்கர் said...

வாழ்த்துக்கள் வினோத்!

நானும் அதைத்தான் தேடினேன்.

//Sorry, the blog at vinothgowtham.blogspot.com has been removed.// என்று வந்தது.

தீப்பெட்டி said...

கலக்கல் வினோத்..

வால்பையன் said...

கமல் பேட்டி அருமை அப்படியே இருந்தது!

SUREஷ் said...

//vinoth gowtham said...

//SUREஷ் said...
blog காணாம போயிருமா தல...//

காணமா தான் போய்டுச்சு தல..:((
இப்பயே அந்த HTML Settings download பண்ணி வச்சிக்குங்க..
//

எப்படி டௌன்லோட் பண்ணுவது தல..,

vinoth gowtham said...

// கே.ரவிஷங்கர் said...

வாழ்த்துக்கள் வினோத்!//

நன்றி தல..

vinoth gowtham said...

//தீப்பெட்டி said...

கலக்கல் வினோத்..//

நன்றி கணேஷ்..

vinoth gowtham said...

//வால்பையன் said...

கமல் பேட்டி அருமை அப்படியே இருந்தது!//

நன்றி வால்ஸ்..

vinoth gowtham said...

//எப்படி டௌன்லோட் பண்ணுவது தல..,//

தல

Edit Html

போய்ட்டு அங்க download option irukkum..pannikunga..

Muniappan Pakkangal said...

Nalla pathivu,Rithish pathi ivalavu pothumaa?

Kanna said...

அடுத்த கலக்கல் பதிவு வினோத்..

சாரி.. ரெண்டு நாளா உன் புது ப்ளாக்கை கண்டுபிடிக்க முடியலை அதான் லேட் ரிப்ளை...

போட்டோ சூப்பரா இருக்கு....

குங்குமத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..

ஓரு ப்ளாக்கே காணாம போனாலும் தொடர்ந்து தன் சேவையை இந்த பதிவுலகத்திற்கு அளிக்கும் தல வினோத் வாழ்க....

vinoth gowtham said...

@ Muniappan sir..
Thanks sir..

vinoth gowtham said...

@ Kanna..

Thanks kanna..

Enathu Sevayaa..
Todarnthu Torture Pannuraney Appadinu sullunga..:))

ஷண்முகப்ரியன் said...

ஹா ஹா ஹா..SUPER SATIRE,VINOTH.
ஆமாம்,எப்படி உங்கள் பதிவு காணாமல் போகும்,புரியவில்லையே.

vinoth gowtham said...

நன்றி சார்..

நான் N-Tamil என்ற ஒரு திரட்டிக்கு லிங்க் கொடுத்து இருந்தேன் அதனால் வந்த வினை..
கூகிள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை..சொல்லாமல் கொள்ளமல் தூக்கி விட்டார்கள்..

KISHORE said...

prabala ezhuthalar, ezhuthulagin mudi suuda mannan, ulam muzhuthu than ezhuthukkalal katti potta kavia thalaivan...sssssss appa mudiyala

congrats machan

vinoth gowtham said...

நான் என் வாசகர்களுக்கு சொல்லி கொள்வது எல்லாம் ஓன்று தான் வீண் வதந்திகளை நம்ப வேண்டம்..

நன்றி மச்சி..

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

vinoth gowtham said...

@ Kripa..

ஆவ்வ்வ்வ்..