வணக்கம்..முதலில் என்னை இந்த தொடர்ப்பதிவுக்கு அழைத்த சூர்யாவுக்கு கோடானுக்கோடி வணக்கங்கள்..சூரியன் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது..அதுப்போல தான் இந்த 'ஆதவன்' இல்லாத பதிவுலகத்தை கற்பனைக்கூட செய்துப்பார்க்க இயலவில்லை..பதிவுலகத்தின் முதல் வெளிச்சம் நமது 'ஆதவன்'..சிலப்பதிகாரத்தில் கூட சூரியனை பற்றி 'ஏதோ' சொல்லியுள்ளார்கள்.அது என்னானு அடுத்தப்பதிவில் சொல்கிறேன்..
சூர்யாவின் மேல் இருக்கும் மரியாதையின், அன்பின்ப்பால் இந்த தொடர்பதிவை தொடர்கிறேன்..பட்..இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்..தொடர்ப்பதிவில் கலந்துக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள்..ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.
Let us move to our topic..
ஒரு 15 வயசு இருக்கும்
"டேய் இது அவுட் இல்லடா..சொன்னா கேக்கமாட்டிங்கலே 96 நாட்அவுட் செஞ்சுரி அடிச்சப்பிறகு நானே பேட்டை வச்சிட்டு போயிறேன்டா..சின்னபசங்க கூட இதுக்குதான் விளையாடக்கூடாது..போடுற போடுற போடா.." ..நான்.
"இதான் லாஸ்ட் சான்ஸ் இதுக்கப்புறம் பேட்டை கொடுக்கல..நாளையிலருந்து தயவுசெஞ்சு எங்ககூட விளையாட வராத..போய் உன் வயசு பசங்களோட விளையாடுப்போ.."..என் தம்பி.
"டேய் உங்க அண்ணன் சரியா ஓசி காஃச்சி அடிக்கறான்டா..நாமலே பாக்ஸ் போட்டு விளையாடுறோம்..இதுலயும் ஆறு தடவை அவுட்டாகி செஞ்சுரி போடுறான்..அவனுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இருக்காதா.." என் தம்பியின் நண்பன்.
இதையெல்லாம் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'செஞ்சுரியை' நோக்கி வேகமாக பயணப்பட்டு கொண்டிருப்பேன்.
"டேய்..உன் கிளாஸ்ல இருக்குற ஃ பிகர்ங்க பேரெல்லாம் சொல்லு"..சீனியர்.
"அண்ணன் அது எப்படி அண்ணன் நான் போய்..எல்லாம் சிஸ்டர்ஸ் மாதிரின.."
''டேய் மச்சான்..ஃ பிகர்ங்க பேரை சொல்லுரவன கூட நம்பிடலாம்..இதமாதிரி பசங்க சரியான மொள்ளமாரியா இருப்பானுங்க இவன விடாத"..இன்னொரு சீனியர்.
"டேய் சொன்னா இந்த இடத்தை விட்டு போகலாம்..இல்லை சாயங்காலம் வரைக்கும் இங்க தான் நிக்கணும் என்ன சொல்லுற.."..சீனியர் .
"அது ஒரு ஆறு, ஏழு பேரு இருக்காங்க..'க..தா', 'ப்..யா' அப்புறம் 'ஜெ..ந்தி'..".
"இன்னமோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அக்கா தங்கச்சின்னு டயலாக் எல்லாம் விட்ட..இன்னிமே உன்னை இந்த ஏரியாலையே பார்க்கக்கூடாது ஓடிபோடா.." ..சீனியர்.
18 வயசு இருக்கும்னு நினைக்கிறேன் !!
'மச்சான்..அந்த அண்ணன் ரொம்ப வேண்டப்பட்டவர்டா..நான் போய் எப்படிடா அவர்கிட்டப்போய் கேட்ப்பேன்..'..குமார்.
'டேய்..நீ கேக்கிறியா இல்லை உன் பெயரை சொல்லி நான் போய் கேட்கவா'..நான்.
'டேய்..நல்லா யோசிச்சியா 'அந்த பொருளோட' விலை வேற எழுபது ருபாய்..'.குமார்.
'மச்சான்..உன் ஷேர் வேணாலும் நான் தரேன்..இந்த விஷயத்தில் நான் காம்பிரமைஸ் பண்ணிக்க தயாரில்லை..நான் இன்னிக்கு பார்த்தே தீரனும்..இந்த சந்தர்ப்பத்தை விட்ட வேற சந்தர்ப்பம் கிடைக்காது ..ரகு வீட்டுல எல்லோரும் நாளைக்கு வந்துடுவாங்க சொல்லிட்டேன்..இன்னிக்கே பார்த்தா தான் உண்டு.." ..நான்.
--------------------------------------------------------------------------------
13 to 19 'டீன்-ஏஜ்' அனுபவங்கள், நல்லவேளை அதுக்குமேல தான் பல அழிச்சாட்டியங்கள் நான் ஆரம்பிச்சது..அது வரைக்கும் 'எதையும்' வெளிப்படையா சொன்னதோ இல்லை செஞ்சதோ இல்லை..'டீன்'ல பெரும்பாலும் கழிந்தது பள்ளிக்கூட மற்றும் டிப்ளோமா அனுபவங்கள்,புதுவையில். அதன்பின் 'படித்தது' 'சுத்துனது' எல்லாம் வெளியூரில் தான்..
படிப்பு, கிரிக்கெட் மிஞ்சிப்போனா தியேட்டர், பீச் இப்படியே போனது 'டீன்' முழுவதும்..தைரியமா ஒரு பெண்ணை 'சைட்' கூட அடித்ததில்லை..அப்புறம் எங்கிருந்து பேசியிருப்பேன்..சின்ன சின்ன தப்புகள் பண்ணியிருந்தால் கூட எல்லாவற்றையும் மீறி ஒரு 'குழந்தைத்தனம்' எப்பொழுதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் அந்த வயதில் நம் அனைவருக்கும்.அந்த நினைவுகளை நினைக்கும்ப்பொழுது இப்பொழுதும் இனம்புரியாத சந்தோஷம் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.
ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..என்ன பண்றது யாராச்சும் ஒரு டைம் மெஷின் செஞ்சு கொடுந்திங்கனா நல்லாயிருக்கும்.
மேலும் இந்த தொடர்ப்பதிவுக்கு கிஷோர் மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் அழைக்கிறேன்.
35 comments:
வா... தல. இந்த தீபவாளிக்கு பதிவு எழுதச்சொன்ன அடுத்த தீவாளிக்குத்தான் எழுதுவ போலருக்கு.
ஆனாலும் வாங்குன காசுக்கு ஆதவனுக்கு நல்லாவே முதுகு சொறிஞ்சுவிட்டுட்ட... நல்லாருடே...
கிரிக்கெட்ல செஞ்சுரி அடிச்ச மேட்டரு டாப்பு... அப்படிப்பார்த்தா நான் ட்ரிபுள் செஞ்சுரியே அடிச்சுருக்கேன்...
ஆஹா திரும்பவும் தொடரா.. அதுவும் டீன் ஏஜ் ஆ ? ரைட்டு ..
//படிப்பு, கிரிக்கெட் மிஞ்சிப்போனா தியேட்டர், பீச் இப்படியே போனது 'டீன்' முழுவதும்..தைரியமா ஒரு பெண்ணை 'சைட்' கூட அடித்ததில்லை..//
டாய் ஏண்டா இப்பிடி உன்னை கொல்வேன் ஒழுமா உண்மை பேசல நீ...
//எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.
//
வந்துட்டார்யா சின்ன அசீத் சூப்பர் மச்சி மனசில இருக்கிறத அப்பிடியே சொல்லிட்ட...
ஏற்கனவே அசீத்து மிரட்டுராய்ங்கன்னு சொல்லிதான் காத்த புடுங்கி விட்ருக்காங்க....
இப்ப நீ வேறயா...
ரைட்டு நடத்து...
அதுசரி இன்னும் கிஷோரு ஊருலதான் இருக்கானா....
//சின்ன சின்ன தப்புகள் பண்ணியிருந்தால் கூட எல்லாவற்றையும் மீறி ஒரு 'குழந்தைத்தனம்' எப்பொழுதும் ஒட்டிக்கொண்டு இருக்கும்//
இப்ப மட்டும் என்னவாம்.....
ஏலேய்ய்ய் நீ மட்டும் இங்க உன் ஆட்களோட வந்து கல்ல விட்டு என் ஜன்னல் கண்ணாடிய உடைக்கிறயே? இது நியாயமா?
எனிவே என்னைப் பத்தி உனக்கு தான் முழுசா தெரிஞ்சிருக்கு. அடுத்த வாரம் வா. ஸ்பெஷலா கவனிக்கிறேன் :))
எப்படியோ பதிவை ஒப்பேத்திட்ட போல :) இதுக்கு தான் வீட்ல இருக்குறவங்களுக்கு உன் சைட் அட்ரஸ தரகூடாதுன்னு சொல்றது :) இப்ப பாரு வெளிப்படையா ஒன்னுமே எழுதமுடியல் :))
அட... என்னைக் கூப்பிடாமயே.. நானும் டீனேஜ் மேட்டரைத்தான் எழுதியிருக்கேன்! :) :)
ஹாலி பாலி.. அதான் அதுக்கு விளம்க்கம் என்னோட ப்ளாக் குடுதாச்சிள்ள அப்பறம் என்ன அதே கேள்வி.. ?
\\வணக்கம்..முதலில் என்னை இந்த தொடர்ப்பதிவுக்கு அழைத்த சூர்யாவுக்கு கோடானுக்கோடி வணக்கங்கள்..சூரியன் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது..அதுப்போல தான் இந்த 'ஆதவன்' இல்லாத பதிவுலகத்தை கற்பனைக்கூட செய்துப்பார்க்க இயலவில்லை..பதிவுலகத்தின் முதல் வெளிச்சம் நமது 'ஆதவன்'..சிலப்பதிகாரத்தில் கூட சூரியனை பற்றி 'ஏதோ' சொல்லியுள்ளார்கள்.அது என்னானு அடுத்தப்பதிவில் சொல்கிறேன்..
சூர்யாவின் மேல் இருக்கும் மரியாதையின், அன்பின்ப்பால் இந்த தொடர்பதிவை தொடர்கிறேன்..பட்..இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்..தொடர்ப்பதிவில் கலந்துக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள்..ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.\\
போங்கடாங்க...;)
என்ன மச்சி படத்தோட நிருத்திட்ட...இனிமேல் தானாடா விஷயமே இருக்கு...என்னாமே போ..;)
maximum லூட்டியை minimise பண்ணி அழகா சொல்லியிருக்கீங்க...
//''டேய் மச்சான்..ஃ பிகர்ங்க பேரை சொல்லுரவன கூட நம்பிடலாம்..இதமாதிரி பசங்க சரியான மொள்ளமாரியா இருப்பானுங்க இவன விடாத"..//
ஹேய் வினு உண்மைதானா இது...
Nice..!
\\இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்..தொடர்ப்பதிவில் கலந்துக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள்..ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.\\
இன்னோர் தடவை ஹேக் பண்ணப் போறாங்கண்ணே.சூதானமா இருந்துக்குங்க.
:-)
//ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..//
ஆமாம். :(
அருமையான கொசுவத்தி. அந்த கிரிக்கெட் மட்டை போட்டதை மிகவும் ரசித்தேன். கடைசி வரிகள் நச் :)
ஒரு விசயத்துல மட்டும் கோடிங் காட்டியிருக்கீங்க. மிச்சது எல்லாம் எங்க.
//ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..என்ன பண்றது யாராச்சும் ஒரு டைம் மெஷின் செஞ்சு கொடுந்திங்கனா நல்லாயிருக்கும்.//
கலக்கல் வரிகள்.. ஸூப்பர்.::))
@ நாஞ்சில் பிரதாப்..
//வா... தல. இந்த தீபவாளிக்கு பதிவு எழுதச்சொன்ன அடுத்த தீவாளிக்குத்தான் எழுதுவ போலருக்கு.//
நானாச்சும் எழுதிட்டேன்..இன்னும் சிலப்பேர் எழுதவே இல்லை..:)
//கிரிக்கெட்ல செஞ்சுரி அடிச்ச மேட்டரு டாப்பு... அப்படிப்பார்த்தா நான் ட்ரிபுள் செஞ்சுரியே அடிச்சுருக்கேன்...//
கொஞ்சம் விட்டா சின்ன பசங்கள ஏமாற்றி 'லாரா' ரெகார்ட்யே பிரேக் பண்ணிருப்பிங்க..;)
@ Kishore
//ஆஹா திரும்பவும் தொடரா.. அதுவும் டீன் ஏஜ் ஆ ? ரைட்டு ..//
உன் கஷ்டம் புரியுது..இருபது, இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை எல்லாம் நியாபகப்படுத்தி எழுதுறது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்..:)
@ பிரியமுடன்...வசந்த்..
டேய் மச்சி அது உண்மை தான்..ரொம்ப வெட்கப்படுவேன் அப்பெல்லாம்..:)
நன்றி மச்சி..நீயும் எங்கயோ அஜித் தான் 'ரோல்மாடல்' அப்படின்னு சொல்லியிருக்கபோல..!!
@ கண்ணா..
//ஏற்கனவே அசீத்து மிரட்டுராய்ங்கன்னு சொல்லிதான் காத்த புடுங்கி விட்ருக்காங்க....//
அப்படியா எப்ப அது..
//அதுசரி இன்னும் கிஷோரு ஊருலதான் இருக்கானா....//
உயிரோட தான் இருக்கானான்னு கேக்க நினைச்சத இப்படி கேட்டுட்ட..:)
@ ☀நான் ஆதவன்☀
Actually உன் மேல தான் கல் எறிந்தேன் அது மாறிப்போய் கண்ணாடி மேல் பட்டுவிட்டது...:)
//அடுத்த வாரம் வா. ஸ்பெஷலா கவனிக்கிறேன் :))//
இதைதான் எதிர்ப்பார்த்தேன்..;)
//இதுக்கு தான் வீட்ல இருக்குறவங்களுக்கு உன் சைட் அட்ரஸ தரகூடாதுன்னு சொல்றது//
என்ன பண்றது ஒரு ஆர்வகோளார்ல தந்துட்டேன்..
@ ஹாலிவுட் பாலா..
//நானும் டீனேஜ் மேட்டரைத்தான் எழுதியிருக்கேன்!//
தல உங்கள் டீன்-ஏஜ் 'அனுபவத்தை' எழுதவும்..
அப்புறம் முக்கியமா கிஷோர் கம்மென்ட் படிக்கவும் :)
@ கோபிநாத்
//என்ன மச்சி படத்தோட நிருத்திட்ட...இனிமேல் தானாடா விஷயமே இருக்கு...என்னாமே போ..;)//
ஏன்..நான் நல்லாயிருக்கறது புடிக்கலையா..:)
@ தமிழரசி..
நன்றி தமிழ்..
//ஹேய் வினு உண்மைதானா இது...//
ஏங்க..அது அப்ப அந்த சீனியர் சொன்னது..அதை அவர்க்கிட்ட தான் கேக்கணும்..;)
@ ♠ ராஜு ♠
நன்றி ராஜு..
//இன்னோர் தடவை ஹேக் பண்ணப் போறாங்கண்ணே.சூதானமா இருந்துக்குங்க.//
இது வேறயா..! ;)
@ வரதராஜலு .பூ
நன்றி தல..
@ ச.செந்தில்வேலன்
நன்றி செந்தில் கருத்துக்கு..;)
@ ஜீவன்பென்னி
//ஒரு விசயத்துல மட்டும் கோடிங் காட்டியிருக்கீங்க. மிச்சது எல்லாம் எங்க.//
மிச்சது எல்லாம் போட்டா நான் மிச்சம் இல்லாம போய்டுவேன்..:)
@ 【♫ஷங்கர்..】
நன்றி தல..;)
வினோத் டீனேஜைப்பத்தி உண்மைக்குப் புறம்பில்லாமல் எழுதி இருக்கீங்க நல்ல பதிவு :-)
//நானாச்சும் எழுதிட்டேன்..இன்னும் சிலப்பேர் எழுதவே இல்லை..:)
//
நானும் இந்த லிஸ்ட்ல வரேன்
இதை ஆரம்பித்த புண்ணியவான் யாரு?
@ thenammailakshmanan
நன்றிங்க..:)
@ வரதராஜலு .பூ
ஆமாம் நீங்களும் இருக்கீங்க..;)
@ Pappu
//இதை ஆரம்பித்த புண்ணியவான் யாரு?//
ம்ம்ஹும்..நாங்கெல்லாம் மட்டும் எல்லா தொடர்பதிவுக்கும் தெரிஞ்சிகிட்ட எழுதுறோம்..:)
ஆஹா திரும்பவும் ......................................................................
//ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் //
உண்மை... :(
//எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..என்ன பண்றது யாராச்சும் ஒரு டைம் மெஷின் செஞ்சு கொடுந்திங்கனா நல்லாயிருக்கும்.//
டைம் மெஷின் உங்க கைக்கு வந்தா சொல்லி அன்னுப்புங்க... இரவல் வாங்கத் தான்... ;P
Welcome bogy..:)
@ தியாவின் பேனா
என்னங்க பண்ணுறது திரும்பவும் தான்..:)
@ Yoganathan.N
வாங்க யோகநாதன்..
//டைம் மெஷின் உங்க கைக்கு வந்தா சொல்லி அன்னுப்புங்க... இரவல் வாங்கத் தான்...//
கண்டிப்பாங்க கொடுத்து அனுப்புறேன்..;)
ஆஹா திரும்பவும் தொடரா.. அதுவும் டீன் ஏஜ் ஆ ?
சொன்னதெல்லாம் உண்மையா...?
@ நினைவுகளுடன் -நிகே
திரும்பவும் தானுங்க..பதிவுலகம் இருக்கும் வரை தொடர்ப்பதிவும் இருக்கும்..;)
@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
அத்தனையும் உண்மை தான் பிரகாஷ்..:)
//ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்//.....இப்படி எல்லாம் கூட நடக்குமா!?!
@ Priya..
//இப்படி எல்லாம் கூட நடக்குமா!?!//
அது ச்சும்மா பகடிக்காக எழுதியது ப்ரியா..
வருகைக்கு நன்றி..:)
Post a Comment