Wednesday, February 3, 2010

தண்டனை காலங்கள்

இந்த பெருமழை எதையும் கரைக்கும் வல்லமை பெற்றதாக இருப்பின் என்னுள் நான் கரைத்துவைத்து இருக்கும் பாவத்தை அடியோடு கரைத்துவிட நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெகுநேரம் அடித்து சாய்க்கும் பேய் மழையில் நனைந்துக்கொண்டு இருந்தேன்..மழையோடு சேர்ந்துக்கொண்டு என்னை வாட்டி வதைக்கும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டு இருந்தது..எனையறியாமல் கடவுளை கூப்பிடுகிறேன்..செய்த பாவத்துக்கு மனமாற அவனிடம் மண்டியிட்டு கதறியழுகிறேன்..கொஞ்சம் ஆறுதல் கிடைப்பதைப்போல் இருந்தாலும் மறுப்படியும் பாவசிந்தனைகள் வலுப்பெறுகின்றன..

உண்மையில் கடவுள் இருந்திருந்தால் என்னை அந்த காரியத்தை செய்ய வைத்திருப்பானா, நான் செய்த தப்புக்காக இத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தப்பின்னும், 'இல்லை, நீ மனம்மாற அனுபவிக்க வேண்டிய தண்டனை இதுவல்ல..சிறையை விட்டு வெளியேப்போ இதை விட பெரிய தண்டனையை உலகம் உனக்கு கொடுக்கும்' என்று ஆண்டவன் முன்னாடியே தீர்மானித்து வைத்திருப்பான்போல்..இந்த இடத்தில தான் ஒருவனை இந்தளவு வதைக்கும் கடவுளின் இருப்பின்மேல் இன்னும் சந்தேகம் வலுக்கிறது..சிந்தனைகள் மறுப்படியும் பின்னோக்கி நகர்கின்றன..

வயலுக்கு வரப்பு வெட்டுவதில் ஆரம்பித்தது 'அவனுடுனான' என்னுடுய பிரச்னை..நாளொரு வண்ணமாக பலரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து என்னில் இருந்த வன்மத்தை இன்னும் ஆழமாக வேர்ப்பிடித்து வளர செய்திருந்தது. எல்லாத்துக்கும் மேலாக மோட்டார் ரூமிற்கு திருட்டு மின்சாரம் எடுத்த விஷயத்தில் கையும் களவுமாக பிடிபட்டப்பொழுது..அவன் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றிய எண்ணங்கள்..மூளையின் ஒவ்வொரு செல்லிலும் அவன் மீதான குரோதத்தை படிய செய்திருந்தது..மேலும் கூட்டாளிகள் போதையின் உச்சத்தில் எரிந்துக்கொண்டிருந்த நெருப்பை இன்னும் ஊதி பெருதாக்கி இருந்தார்கள்..எப்பொழுது வயலுக்கு மறுப்படியும் போனேன் என்றுக்கூட நினைவில்லை..அனால் அவன் தலையை என் மம்பட்டி பிளந்துது மட்டும் நினைவிருக்கிறது..போலீஸ் பிடித்தது..கோர்ட்..ஆயுள்..சிறை..இதோ கொஞ்ச நாட்களுக்கு முன் விடுவித்து வெளியே வந்தும் விட்டேன்..

மரண தண்டனையே கொடுத்திருக்கலாம் இப்பொழுதுப்படும் என் வேதனையை விட என்று நினைக்க ஆரம்பித்து சில நாட்கள் முடிந்துவிட்டன..ஒரு விடுதலையான கைதியை சமூகம் பார்க்கும் பார்வையை சிறையிலிருக்கும் பொழுதே ஓரளவு யூகித்து வைத்திருந்தேன்..ஆனால் குடும்பத்திலிருந்தே முற்றிலுமாக நிரகரிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.பெற்றோர்கள் என்னைபெற்ற பாவத்தை என்றோ மரணத்தை தழுவி போக்கிகொண்டனர்.இருப்பவன் தம்பி மட்டுமே,அவன் மட்டும் என்ன விதிவிலக்கா, என் தம்பியின் சிறு வயது மகன் கூட என்னை 'கொலைக்காரனாக' தான் அறிந்து உள்ளான்..

நான் சமுகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்து வந்தப்பின் கூட குற்றவாளியாக தான் தெரிகிறேன் என்ற வலியை விட..'அவனி'ன் குடும்பத்தின் இன்றைய நிலைமை எனக்கும் ஏற்ப்படுத்தும் வலி தான் என்னை நிலைகுலைய செய்தது..

அன்று ஓரளவு நன்றாக இருந்த குடும்பம்..இன்று சிதைந்துப்போய் உள்ளது..அவனின் பெண் தையல் வேலைக்கு போவதும், ஊதாரியான பையன் ஊரை சுற்றி வருவதும் அவர்களின் வறுமையை பறைசாற்றியது..அவன் மனைவி வீட்டினுள் முடங்கி போயிருக்ககூடும்.

அன்றுகூட நான் தெருவில் நடந்துபோய் கொண்டு இருக்கையில் அவனிடம் ஒரு பெரியவர் 'உங்க குடும்பம் சீரழிஞ்சதுக்கு காரணமே இவன் தான்'..என்று என்னை கைகாட்டியது அவன் வன்மத்தை மேலும் வளர்த்திருக்கும்..அந்த வன்மமே என்னை அவனிடம் ஒரு உதவிக்கு கூட நெருங்க விடாது என்பதை நான் நன்கு அறிவேன்..இந்த சிந்தனை தான் நான் செய்தது தப்பு என்பதை தாண்டி ''மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்'' என்பதை மறுப்படியும் மறுப்படியும் எனக்கு உணர்த்திகொண்டு இருந்தது.

ஆறுதல் சொல்ல நண்பர்கள் கூட இல்லாத இந்த இரவில் மழையோடு சேர்ந்து நானும் அழுதுக்கொண்டு இருக்கிறேன்..நடுமண்டையில் விழுந்த அடி சிந்தனையை கலைத்து இருந்தது..திரும்பவதற்குள் மின்னல் கழுத்துக்குள் இறங்குவதைப்போல் சுளிரென்று ஒரு வெட்டு..ரத்தம் வழிந்தோடும் என் பார்வையில் மங்கலான உருவத்தில் 'அவனின்' மகன் இன்னும் ரெண்டு பேரோடு அவன் பகையை தீர்த்து கொண்டிருந்தான்..சாவை நோக்கி வெகு வேகமாக விரைந்துக்கொண்டு இருந்தேன்..'நாளை இதேப்போல் நீயும் குற்றத்தை உணரும் ஒரு தருணம் வந்தால்'..என்று நினைத்தபொழுது எனக்கு அவன் மேல் பரிதாபமே வந்தது..



இருந்தும் ஒன்றை உணர்ந்தேன்..எல்லா
மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட.எனக்கு பாவ விமோசனம் தந்த 'ரட்சகன்' அவனின் மகன்..கடவுள் இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.

33 comments:

நசரேயன் said...

ரசித்தேன்

ப்ரியமுடன் வசந்த் said...

மச்சி சினிமாக்கதை ஹாலிவுட் கூட சேர்ந்து சேர்ந்து கெட்டு போயிட்டடா நீ.. சினிமா கம்மியா பாரு...

பாலா said...

ய்ய்யாய்ய்ய்.... யாருப்பா.. இங்க என்னை வம்புக்கு இழுக்கறது?? :) :)

பாலா said...

இன்னாபா... தம்பி.. தமிழ் விளையாடுது?? எங்க ப்ராக்டீஸ் எடுத்துக்கிறீங்க?? அதான்.. எங்க ஏரியா பக்கம் ஆளைக் காணாமா?

சரி.. ‘அவனுக்கு’ மகன் இருந்தான். பழிவாங்கிட்டான். ‘இவனுக்கு’ யாருமில்லையே?? அவன் மகன் திருந்தும் போது.. யாரு.. வெட்டுவா??

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குங்க..கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு, புத்தியால் தெளிவு

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்கு நண்பரே...

☀நான் ஆதவன்☀ said...

கத அடிபுலி மாமே :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

சீக்கிரமே புத்தகம் வெளிவர வாழ்த்துகள் . . அடி தூள் கிளப்புங்க . . :-)

கண்ணா.. said...

கதையும், தேர்ந்தெடுந்த வார்த்தைகளும், நடையும் அருமை....

ஆனா வரிகள்ல இலக்கிய வாடை அடிக்குதே.....இன்னா மேட்டரு....

கண்ணா.. said...

//ஹாலிவுட் பாலா said...

சரி.. ‘அவனுக்கு’ மகன் இருந்தான். பழிவாங்கிட்டான். ‘இவனுக்கு’ யாருமில்லையே?? அவன் மகன் திருந்தும் போது.. யாரு.. வெட்டுவா??//

பாரு பயபுள்ள எப்பூடி கோர்த்து விடுதுன்னு............

Anonymous said...

இருந்தும் ஒன்றை உணர்ந்தேன்..எல்லா மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட..

இந்த வரிகள் பிடிச்சிருக்கு வினு....

Thenammai Lakshmanan said...

//'நாளை இதேப்போல் நீயும் குற்றத்தை உணரும் ஒரு தருணம் வந்தால்'..என்று நினைத்தபொழுது எனக்கு அவன் மேல் பரிதாபமே வந்தது..//

ரொம்ப அருமையான கதை வினோத் ஏதாவது பத்ரிக்கைக்கு அனுப்பி இருக்கலாமே

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்கு. நல்லா இருக்கு வினோத். எழுத்துப் பிழைகள் குறைந்தால் வாசிப்பு இன்னும் எளிதாகும்.

S.A. நவாஸுதீன் said...

எனக்கு பிடிச்சிருக்கு வினோத்.

////'நாளை இதேப்போல் நீயும் குற்றத்தை உணரும் ஒரு தருணம் வந்தால்'..என்று நினைத்தபொழுது எனக்கு அவன் மேல் பரிதாபமே வந்தது..////

////எல்லா மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட.எனக்கு பாவ விமோசனம் தந்த 'ரட்சகன்' அவனின் மகன்..கடவுள் இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.////

நல்லா வந்திருக்கு வினோத்.

கோபிநாத் said...

ஏலேய் என்ன ஆச்சு....இம்புட்டு கொலைவெறி...;))

புக் ஏதாச்சும் போட ஆசை வந்துடுச்சா மச்சி ;)))

நல்லாயிருக்கு மச்சி..விளையாடி இருக்க போ ;-))

கோபிநாத் said...

நம்ம கலை இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம் போட்டுயிருப்பான் ஒரு கற்பனை

@கலை

ஏலேய் வினோத்து அவன் என்ன உன் சோத்துல விஷத்தை வச்சானா!!!?? ;))

geethappriyan said...

குரு
பழிவாங்கும் சம்பிரதாயம் தான் சமூகத்தில் எப்படி புரையோடிக்கிடக்கிறது?
நிச்சயம் இவனை குத்தி சாய்த்தவன் இன்னொரு நாள் எவனாளோ வெட்டிவீழ்த்தப்படலாம்.காலம் தான் நீதிபதி.

PPattian said...

நல்ல கதை.. சொல்லியிருக்கும் விதம் கதையின் கருவுக்கு பொருத்தமா இருக்கு.. அதாவது வட்டார வழக்கு மொழியை விட இப்படி தூய தமிழில் சொல்லும்பொது உறைக்கிறது.. வாழ்த்துகள் வினோத்.

//சரி.. ‘அவனுக்கு’ மகன் இருந்தான். பழிவாங்கிட்டான். ‘இவனுக்கு’ யாருமில்லையே?? அவன் மகன் திருந்தும் போது.. யாரு.. வெட்டுவா?? //

:))

கார்ல்ஸ்பெர்க் said...

என்ன தல, அசல் ரிலீஸ் ஆகப் போற effect'ஆ? :)

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...

@ நசரேயன்

நன்றி தல..

@ பிரியமுடன்...வசந்த்

என்னாது சினிமா கதையா..இந்த கதைய ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி சில பேருக்கிட்ட சொன்னது தப்பா போச்சி..சினிமாவாவே வந்துடுச்சா..யாரையும் நம்ப முடியலப்பா..:)

//ஹாலிவுட் கூட சேர்ந்து சேர்ந்து கெட்டு போயிட்டடா நீ//

ம்ம்ஹ்ஹும்ம்..ஹாலி என்னைக்கு தமிழ்ப்படம் எல்லாம் பார்த்திருக்கு அது ஒன்லி ''பீட்டர்'' மட்டும் தான்..:)

@ ஹாலிவுட் பாலா

Cool Cool :)

//இன்னாபா... தம்பி.. தமிழ் விளையாடுது??//

ரொம்ப ஓவரா கூவிடேனோ..:)

//சரி.. ‘அவனுக்கு’ மகன் இருந்தான். பழிவாங்கிட்டான். ‘இவனுக்கு’ யாருமில்லையே?? அவன் மகன் திருந்தும் போது.. யாரு.. வெட்டுவா??//

அதாவது மகன் வந்து வெட்டுனா தான் தண்டனையா..அந்த தப்பை ஏண்டா செஞ்சோம்னு ஒருத்தன் யோசிக்க ஆரம்பிசிட்டாலே தண்டனை தான்..ம்ம்ஹும்..இங்கிலிபிஸ் படத்துல லாஜிக் பார்காதிங்க..''தமிழன்'' எதாவது செஞ்ச இது எப்படி வந்துச்சு..அது என்ன அப்படி இருக்குன்னு கேக்க வேண்டியது..நீங்க தமிழின விரோதி..:))

@ புலவன் புலிகேசி..

நன்றி நண்பா..தீர்ப்புக்கு..:)

@ Sangkavi..

நன்றி நண்பரே வருகைக்கு..

ஷண்முகப்ரியன் said...

எல்லா மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட.//

புதுமையான அருமையான கருத்து,வினோத்.

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀

நன்னி மாப்பி..

@ கருந்தேள் கண்ணாயிரம்

//சீக்கிரமே புத்தகம் வெளிவர வாழ்த்துகள்//

அது எல்லாம் ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் வாரம் வாரம் வந்துக்கிட்டு தான் இருக்கு..ஒன்னும் பிரச்சனை இல்லை..;)

@ கண்ணா..

//ஆனா வரிகள்ல இலக்கிய வாடை அடிக்குதே.....இன்னா மேட்டரு.//

என்னாது இலக்கியமா..அதுயெல்லாம் கடைசியா பத்தாவது கோனார் நோட்ஸ்ல படித்ததோடு சரி..:)

நன்றி மாப்பி கருத்துக்கு..

@ தமிழரசி..

நன்றி தமிழ்..

@ thenammailakshmanan

//ரொம்ப அருமையான கதை வினோத் ஏதாவது பத்ரிக்கைக்கு அனுப்பி இருக்கலாமே//

நன்றிங்க ..
நீங்க எதாச்சும் பத்திரிக்கை ஆரம்பிச்சு பாவப்பட்டு பப்ளிஷ் பண்ணா உண்டு..

வினோத் கெளதம் said...

@ விக்னேஷ்வரி

நன்றி விக்கி கருத்துக்கு..
நீங்க அடுத்த தடவை எதாச்சும் அதே மாதிரி பிழைகள் பார்த்திர்கள் என்றால் தனியாவே அதை குறிப்பிட்டு சொல்லிவிடுங்கள்..நிறையா பிழைகள் வருதுன்னு தெரியுது..ஆனா எனக்கே தெரியமா நான் எழுதிடுறேன்..(தெரிஞ்சிட்டாலும்)..;)
இதுல தலைப்பிலேயே எனக்கு சந்தேகம் இருந்துச்சு அதுல சந்திப்பிழை இருக்கா..!!

@ S.A. நவாஸுதீன்..

ரொம்ப நன்றி தல..:)

@ கோபிநாத்

நன்றி மச்சி..

//புக் ஏதாச்சும் போட ஆசை வந்துடுச்சா மச்சி//

புக் ஏதாச்சும் கையுல எடுத்து கொடுத்திங்கனா கிழே வேணா தூக்கிபோடுறேன்..:)

கற்பனை கலக்கல்..:)

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

//நிச்சயம் இவனை குத்தி சாய்த்தவன் இன்னொரு நாள் எவனாளோ வெட்டிவீழ்த்தப்படலாம்.காலம் தான் நீதிபதி.//

நன்றி குரு..கருது பின்னி பட்டய கிளப்புது..சொன்ன மாதிரி காலம் தான் நீதிபதி..

@ PPattian : புபட்டியன்..

நன்றி தல..

//அதாவது வட்டார வழக்கு மொழியை விட இப்படி தூய தமிழில் சொல்லும்பொது உறைக்கிறது.. //

வட்டார மொழியில் எழுதும்பொழுதும் இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் தல..ஆனா எனக்கு தான் வராது..
இது சும்மா ஒரு ட்ரை..;)

வினோத் கெளதம் said...

@ கார்ல்ஸ்பெர்க்..

//என்ன தல, அசல் ரிலீஸ் ஆகப் போற effect'ஆ? :)//

எங்க போனிங்க ஆளையே காணோம் ரொம்ப நாளா..!!
படம் ரிலிஸ் ஆகட்டும் அப்புறம் தெரியும் நாங்கெல்லாம் ஆருன்னு..:)

@ ஷண்முகப்ரியன்..

நன்றி சார் கருத்துக்கு ..:)

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு வினோ.அசாத்தியமான நடை!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு நண்பா.. நடை அருமை..

Prabhu said...

//ஹாலிவுட் பாலா said...

சரி.. ‘அவனுக்கு’ மகன் இருந்தான். பழிவாங்கிட்டான். ‘இவனுக்கு’ யாருமில்லையே?? அவன் மகன் திருந்தும் போது.. யாரு.. வெட்டுவா??//

எல்லாம் சீக்வல் 8 வந்தாலும் பாக்குற கேசு! வேற எப்படி யோசிப்பாரு!

வினோத் கெளதம் said...

நன்றி பா.ரா சார்

நன்றி கார்த்தி..

பப்பு ரைட்டு ரைட்டு விட்டு தள்ளு..

Muniappan Pakkangal said...

Murders are always revenged.Nice story Vinoth Gowtham

kishore said...

superungo...

ஜீவன்பென்னி said...

எழுத்து நடை சூப்பரா இருக்கு. கதையும் நல்லாயிருக்கு.

வினோத் கெளதம் said...

நன்றி டாக்டர் சார்..

நன்றி Mr.கிஷோர்

நன்றி ஷபீர்..