நம் கூடவே இருக்கும் மனிதர்களை விடவும் சில சமயம் வினாடிகளில் நம்மை கடக்கும் மனிதர்கள் கூட அவர்களின் செய்கைகளினால் நம் மனதில் அழமாக இடம்பிடித்து விடுவர்.
எல்லா இடத்திலும் நல்ல மனிதர்கள் நிறைந்து இருக்க தான் செய்கின்றனர் என்ன சிலப்பேர் அவர்களின் நல்ல செய்கைகளை வெளிப்படுத்தி கொள்வதில்லை இல்லை அதற்கான வாய்ப்புகள் அமையமால் போய் விடுகின்றது. வெளிப்படுத்துப்பவர்கள் காலங்களை தாண்டி நிற்கின்றனர்.
அப்படி நான் கடந்து வந்த சில நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் என் மனதில் தங்கிவிட்ட 'சில பெயர் தெரியா' மனிதர்களை பற்றிய பதிவு தானிது.மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் இங்கே ஆண்டுகளின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்..
1995
குடும்பத்தோடு உறவினர்கள் சிலரும் சேர்ந்து ஒரு நான்கு நாட்கள் சுற்றுலாவிற்கு சென்றிருந்த சமயம். வால்பாறை, டாப்-ஸ்லிப்பை பார்த்துவிட்டு பழனிக்கு சென்றுக்கொண்டு இருந்தோம்.
தளி என்ற ஊரின் அருகில் செல்கையில் சரியாக நாங்கள் சென்ற வேனின் மீது வந்து மோதியது ஒரு லோக்கல் பஸ். எங்கள் வேன் ஓட்டுனரின் சாதுர்யமான டிரைவிங்னால் பெரும் விபத்தை தவிர்த்து விட்டாலும். எங்கள் எல்லோருக்கும் சில காயங்களும் அடிகளும் ஏற்ப்பட்டு இருந்தது.சென்ற வண்டியும் மிகுந்த சேதம் அடைந்து இருந்தது.
அப்பொழுது அந்த ஊர்காரர்கள் காட்டிய வேகமும் அன்பும் மறக்கமுடியாது என்றாலும் குறிப்பாக எங்கள் எல்லோரையும் அவர் வீட்டில் கொண்டுப்போய் தங்கவைத்து எங்களுக்கு வேண்டிய உதவிகளையும், சாப்பாடும் அளித்த ஒரு பெண்மணியும் அவரோடைய மகனையும் (அப்பொழுது சிறுவன்) மறக்கவே முடியாது. நாங்கள் யார் எந்த ஊர் என்று கூட அவர்களுக்கு தெரியாது ஆனால் அவர்கள் அந்த சமயத்தில் வெளிப்படுத்திய அன்பும் எங்களிடம் காட்டிய பரிவும் சத்தியமாக வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நாங்கள் கிளம்பும்வரை அந்த அம்மாவும், சிறுவனும் உடனிருந்து எங்களை உடுமலைக்கு பஸ் ஏற்றிவிட்டு தாங்கள் வந்த மிதிவண்டியில் திரும்பி சென்றனர்.அப்பொழுது இருந்த தொலைதொடர்பு வசதியினாலும், அதன்பின் அந்த பக்கம் போவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு இல்லாமல் போனதாலும் அந்த நல்ல உள்ளங்களை மறுப்படியும் காணும் வாய்ப்பு எங்களுக்கு இல்லாமலே போனது.
2001
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு கோர்ஸ் பண்ணி கொண்டிருந்த சமயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நங்கநல்லூர் செல்வதற்கு முன்பு அருகிலிருந்த கடையில் 'டீ' சாப்பிட்டு கொண்டிருந்தேன். சற்றே வயதான ஆணும்,பெண்ணும்(தம்பதியர்!!) அங்கே நின்று கொண்டிருந்த அனைவரிடமும் "நாங்க வெளியூர் காசை தொலைத்துவிட்டோம் "எதாச்சும் சாப்பிடனும்" காசு இருந்தால் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.
என்னையும் சேர்த்து அவர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று எண்ணியும் அங்கே 'பிச்சை' போடும் மனநிலையில் யாருமே இல்லாதிருந்த காரணத்தினால் யாரும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப்பக்கம் ரயில்நிலையத்தில் இருந்து வந்த பெண்மணி அவர்களை பார்த்து 'காசு எல்லாம் கொடுக்கமாட்டேன்' வேண்டுமென்றால் நானே சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி தந்தார்.
அதன்ப்பிறகு அந்த வயதான ஆளை பார்த்து "இப்படி ஒரு வயதான பொம்பளையும் உடன் வைத்துகொண்டு போறவங்க வரவங்ககிட்ட காசு கேக்குறிங்க?!.நீங்க சொன்னத உண்மைன்னு நம்பிதான் உங்களுக்கு சாப்பாடு வாங்கிதந்து இருக்கேன்..இதுக்கபுறம் உங்க ரெண்டு பேரையும் நான் இப்படி பார்க்கக்கூடாது என்று சொன்னவர் அவர்கள் கையில் ஊருக்கு போவதற்கு கொஞ்சம் காசும் கொடுத்துவிட்டு சென்றார். சொல்வது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவரை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.
என்னையும் சேர்த்து அவர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று எண்ணியும் அங்கே 'பிச்சை' போடும் மனநிலையில் யாருமே இல்லாதிருந்த காரணத்தினால் யாரும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப்பக்கம் ரயில்நிலையத்தில் இருந்து வந்த பெண்மணி அவர்களை பார்த்து 'காசு எல்லாம் கொடுக்கமாட்டேன்' வேண்டுமென்றால் நானே சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி தந்தார்.
அதன்ப்பிறகு அந்த வயதான ஆளை பார்த்து "இப்படி ஒரு வயதான பொம்பளையும் உடன் வைத்துகொண்டு போறவங்க வரவங்ககிட்ட காசு கேக்குறிங்க?!.நீங்க சொன்னத உண்மைன்னு நம்பிதான் உங்களுக்கு சாப்பாடு வாங்கிதந்து இருக்கேன்..இதுக்கபுறம் உங்க ரெண்டு பேரையும் நான் இப்படி பார்க்கக்கூடாது என்று சொன்னவர் அவர்கள் கையில் ஊருக்கு போவதற்கு கொஞ்சம் காசும் கொடுத்துவிட்டு சென்றார். சொல்வது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவரை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.
2003
வட இந்தியா கல்லூரி சுற்றுலா சென்று இருந்த சமயம். சண்டிகரில் 'பிஞ்சூர்' பூங்காவில் எங்களின் சில மாணவர்களுக்கும் அங்கே பணிப்புரிந்து கொண்டு இருந்த சில அடாவடி பணியாளர்களுக்கும் இடையில் 'ஒரேயொரு மாங்காய்' தெரியாமல் பறித்ததற்காக செம ரகளை.
எங்களை அடிக்க வந்ததோடு இல்லாமல் கத்தியை கொண்டு மிரட்டும் அளவுக்கு போனது. அந்த சமயத்தில் அங்கே சுற்றிப்பார்க்க வந்த ஒரு குரூப் டெல்லி பசங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணி அவர்களோடு கிட்டத்தட்ட ரத்தம் வருமளவுக்கு சண்டை போட்டு..எங்களை பூங்காவின் வெளியே பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்து விட்டனர்..நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்தும் வராமல் "நாங்க லோக்கல் பசங்க தான் எங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..இனிமே நாங்க பாத்துக்கிறோம்..நீங்க கிளம்புங்க..உங்க சுற்றுலா இதனால் பாதிக்ககூடாது என்று சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தனர். அவர்களையும் மறக்க முடியாது.
எங்களை அடிக்க வந்ததோடு இல்லாமல் கத்தியை கொண்டு மிரட்டும் அளவுக்கு போனது. அந்த சமயத்தில் அங்கே சுற்றிப்பார்க்க வந்த ஒரு குரூப் டெல்லி பசங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணி அவர்களோடு கிட்டத்தட்ட ரத்தம் வருமளவுக்கு சண்டை போட்டு..எங்களை பூங்காவின் வெளியே பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்து விட்டனர்..நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்தும் வராமல் "நாங்க லோக்கல் பசங்க தான் எங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..இனிமே நாங்க பாத்துக்கிறோம்..நீங்க கிளம்புங்க..உங்க சுற்றுலா இதனால் பாதிக்ககூடாது என்று சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தனர். அவர்களையும் மறக்க முடியாது.
34 comments:
மக்கா..!! என்னையையே யோசிக்க விட்டுட்டீங்களே?? ரொம்ப தப்பு! :(
இப்படி யாரெல்லாம் எனக்கு உதவி பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சா... பதிவுவில்லை..., முற்றுப் புள்ளி கூட தேறாது போல இருக்கு.
காலம்.. கெட்டதை மட்டுமில்ல.. நல்லதையும் மறக்க வச்சிடுது! :(
--
இப்பல்லாம் ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. வரிசையா 18+ எழுதி மழுங்கடிக்க வேண்டியதுதான்.
அனுபவங்கள் நிறைய வாழ்க்கைப்பாடங்கள் கற்றுக்கொடுக்கின்றன... நல்ல பகிர்வு வினோத்...!
அம்புட்டு மிரட்டியும்.. இந்த பப்பு.. ஓட்டு போடுறதில்லை.
என்ன பண்ணலாம்???
நல்ல பதிவு வினோத்,
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இதுபோல உதவியர்களை நானும் பல நேரம் கண்டு வியந்திருக்கிறேன்.
:)
1995லேருந்து ஒரே ஜம்பா 2001க்கு வந்துட்ட??
நடுவுல என்னை மாதிரி நல்லவனை யாரையும் பாக்கலையோ??
//அவரோடைய மகனையும் (அப்பொழுது சிறுவன்) மறக்கவே முடியாது//
அடங்கோ.. அப்ப நீயே பால் குடிக்கிற பாலகன்தானேடா!
//ஆணும்,பெண்ணும்(தம்பதியர்!!)//
பிராகேட் போட்டு விளக்குறாரரரராராம்..
அவங்க இரண்டு பேரும் தம்பதின்னு எப்டி சொல்ற?
அவங்க கல்யாணத்துக்கு போனியா?
பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்பவர்களை எனது வாழ்க்கையிலும் சந்தித்து இருக்கிறேன்.. நல்லதொரு பகிர்வு.. நன்று.. :)
சரிங்க ஆஃபீசர்.. 2009துல சந்தித்த ஒரு நல்ல மனிதரை பற்றி எழுதவே இல்லை??
அவர்தான் நம்ம வடையெழு வள்ளல் சுந்தர் சார்!!
(அப்பா.. கோத்துவிட்டாச்சு! இனி நம்மதியா போவேன்.. வர்டா! பை,பை..)
பாவங்க. அவரு எதோ.. ரொம்ப சீரியஸ்ஸா. பதிவெழுதினா.. அங்கயும் வந்து... லூட்டி அடிச்சிடுறோம்! :(
என்னய்யா... என்னைய விட்டுட்டீங்க. பதிவுல நல்லது கெட்டதுன்னா நாங்கதான வர்றோம்?
வாழ்க்கையில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் வருவதுண்டு. அதை மறக்காமல் நினைவுகூர்ந்து எழுதியிருப்பது சிறப்பு வினோத்.
மிக நல்ல/நெகிழ்வான பகிர்வு.
மச்சி நல்ல பதிவுடா...கொசுவத்தி சுத்த வச்சிட்ட..!
@ கலை ;)
\\பிராகேட் போட்டு விளக்குறாரரரராராம்..
அவங்க இரண்டு பேரும் தம்பதின்னு எப்டி சொல்ற?
அவங்க கல்யாணத்துக்கு போனியா?\\
கிரகம் பிடிச்ச மச்சி...அவனே ரொம்ப கஷ்டபட்டு பீல் பண்ணி எழுதியிருக்கான். அங்கையும் உன்னோட திருவிளையாடல வெளங்கிடுவோம் டா...;)))
ஆனா மச்சி நீ ஹாலிவுட் பாலா தல பதிவுல சந்திச்ச ஒரு பெண்ணை பத்தி சொல்லியிருக்ல்ல அந்த மாதிரி சந்திச்சவுங்களை பத்தி ஒரு பதிவு போடேன் ;))
@ ஹாலிவுட் பாலா
//எனக்கு உதவி பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சா... பதிவுவில்லை..., முற்றுப் புள்ளி கூட தேறாது போல இருக்கு. //
ஏன் தல இதுவரை உதவின்னு ஒருத்தர் கூட பண்ணதில்லையா..!!
//காலம்.. கெட்டதை மட்டுமில்ல.. நல்லதையும் மறக்க வச்சிடுது! :(//
தத்துவம் நம்பர் : 10248 :)
//இப்பல்லாம் ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க.//
இன்னும் வித்தியாசமா திங் பண்ணி எழுதுவேன்..அப்புறம் பாவப்பட்டு, இரக்கப்பட்டு வர ரெண்டு, மூணு பேரும் ஓடிபோய்டுவாங்க அதான்..அதையெல்லாம் அடக்கியே வச்சி இருக்கேன்..:)
//அம்புட்டு மிரட்டியும்.. இந்த பப்பு.. ஓட்டு போடுறதில்லை.//
எங்க தல..சொன்னாலும் கேக்கமாட்டது பயபுள்ள..:)
@ பிரியமுடன்...வசந்த்
//அனுபவங்கள் நிறைய வாழ்க்கைப்பாடங்கள் கற்றுக்கொடுக்கின்றன//
Exactly..இப்ப கிடைக்குற அனுபவங்கள் நிறைய பாடங்களை சொல்லி தருது..நன்றி மச்சி..
@ கண்ணா..
//எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இதுபோல உதவியர்களை நானும் பல நேரம் கண்டு வியந்திருக்கிறேன்.//
ம்ம்..இதே மாதிரி மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கவே செய்கின்றர்கள் கண்ணா..நன்றிப்பா.
@ கலையரசன்
//1995லேருந்து ஒரே ஜம்பா 2001க்கு வந்துட்ட??
நடுவுல என்னை மாதிரி நல்லவனை யாரையும் பாக்கலையோ??//
உன்ன மாதிரியா ஆளையா கேக்குறா..இல்லை நல்லவேளை ஊர்ல இருந்தவரை அதேமாதிரி அசம்பாவிதம் எதுவும் ஏற்ப்படவில்லை ;)
//அவங்க இரண்டு பேரும் தம்பதின்னு எப்டி சொல்ற?
அவங்க கல்யாணத்துக்கு போனியா?//
நல்லா வருது வாயுல..:)
//2009துல சந்தித்த ஒரு நல்ல மனிதரை பற்றி எழுதவே இல்லை??
அவர்தான் நம்ம வடையெழு வள்ளல் சுந்தர் சார்!! //
சுந்தர் சாரை பத்தி சொல்லரதுனா ஒரு தனிபதிவே போடனும்..அவரை மாதிரி மனிதர்களை பார்ப்பது 'அரிது'..
இன்றுவரை அவருக்கு நான் 'கடன்ப்பட்டவன்'..
@ KISHORE
//பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்பவர்களை எனது வாழ்க்கையிலும் சந்தித்து இருக்கிறேன்..//
போ மச்சான் என்னை பத்தி பாராட்டி எதாச்சும் சொல்லட்டினா உனக்கு தூக்கமே வராது..
@ ஹாலிவுட் பாலா
//பாவங்க. அவரு எதோ.. ரொம்ப சீரியஸ்ஸா. பதிவெழுதினா.. அங்கயும் வந்து... லூட்டி அடிச்சிடுறோம்!//
தல அதெல்லாம் எதையும் தாங்கும் இதயம் இது..:)
@ Pappu..
//என்னய்யா... என்னைய விட்டுட்டீங்க. பதிவுல நல்லது கெட்டதுன்னா நாங்கதான வர்றோம்?//
வோட்டு போட்டதால இப்ப நீ பேசுற இந்த பேச்சுக்கு சும்மா விடுறேன்..;)
@ S.A. நவாஸுதீன்
//வாழ்க்கையில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் வருவதுண்டு. அதை மறக்காமல் நினைவுகூர்ந்து எழுதியிருப்பது சிறப்பு வினோத்.//
ஆமாம் தல எல்லோரும் இதேப்போல் நல்ல மனிதர்களை கடந்துதான் வருகிறோம்..
நன்றி..;)
@ கோபிநாத்
//கொசுவத்தி சுத்த வச்சிட்ட..!//
Tortoise or Martin :)
//அவனே ரொம்ப கஷ்டபட்டு பீல் பண்ணி எழுதியிருக்கான். //
நான் எழுதுறது எல்லாமே கஷ்டப்பட்டு தான் எழுதுறேன்..ஆனா நீங்க தான் படிச்சிட்டு ரொம்ப ஃபீல் பன்னுவிங்கன்னு நினைக்கிறேன்..
//பாலா தல பதிவுல சந்திச்ச ஒரு பெண்ணை பத்தி சொல்லியிருக்ல்ல அந்த மாதிரி சந்திச்சவுங்களை பத்தி ஒரு பதிவு போடேன் ;))//
அதேமாதிரி மட்டும் ஒரு பதிவு போட்டானு வை..அவன் பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்..:)
சுவாரஸ்யமான அனுபவங்கள்! :-)
நல்லவங்க எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்காங்க வினோத் ..நல்ல பகிர்வு
வினோத், அது தாளி இல்ல.. தளி. எங்கூருக்குப் பக்கம் தான் இருக்கு அந்த ஊரு. நல்ல நினைவு கூறல்.
எங்கூருக் காத்தாடிகள் படங்கள் அழகு!!
@ Joe..
நன்றி ஜோ..:)
@ thenammailakshmanan
நன்றிங்க..:)
@ ச.செந்தில்வேலன்
//வினோத், அது தாளி இல்ல.. தளி. எங்கூருக்குப் பக்கம் தான் இருக்கு அந்த ஊரு.//
மாத்திட்டேன் செந்தில்..
அழகான ஊரு அது..:)
குரு,
அன்னிக்கு அந்த ட்ரைவருக்கு தான் நன்றி சொல்லனும்,
அப்போ டெல்லியில் உனக்கு விரோதி இருக்கினறனரா?ரைட்டு.
ஆதம்பாக்கத்தில் அந்த வயசானபார்டிகளுக்கு உதவியது நீதானே? பரவாயில்லயே வயசானவங்களுக்கு உதவற?:)
ஓட்டுக்கள் போட்டாச்சிம்மா
தல என்னாச்சு...ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா? நல்லவிசயங்களை மறக்காம வச்சுரக்கியே...நீ நல்லாருடே..
//இப்பல்லாம் ரொம்ப வித்தியாசமா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. வரிசையா 18+ எழுதி மழுங்கடிக்க வேண்டியதுதான் //
ஆமா...ஆமா... இப்படியேவுட்டா எல்லா நல்ல புள்ளைகளாயிடப்போவுது..தல அடுத்தது ஆரம்பிச்சுருங்க...
//ரயில் நிலையத்தில் இறங்கி நங்கநல்லூர் செல்வதற்கு முன்பு அருகிலிருந்த கடையில் 'டீ' சாப்பிட்டு கொண்டிருந்தேன். //
அந்த ஏரியாவுல அப்படி ஒரு டீ கடை இல்லயே...ஒரு டாஸ்மாக்தான இருக்கு...
//'ஒரேயொரு மாங்காய்' தெரியாமல் பறித்ததற்காக செம ரகளை//
ஒரு மாங்காவுக்கு இம்புட்டு சண்டை...உண்மையைச்சொல்லு மாங்கவை மட்டும்தான் ஆட்டையைபோட்டீங்களா... இல்ல...
முன்றுசம்பவமும் நெகிழ்வையும் மனித நேயம் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதையும் காட்டுகிறது..
மூன்றாவது நிகழ்வு ஒரு மாங்காய்காக கத்தியை காட்டி இப்படி பட்ட அல்பங்களும் இருக்கிறது..இந்த வீரத்தை வேறு எங்கும் காட்டுவார்களா என்பது சந்தேகமே...
நெகிழ வைக்கும் பதிவு வினோத். முகம் தெரியாதோர் செய்த உதவியை ஞாபகம் வைத்திருப்பது சிறப்பு.
எனக்கும் இதுபோல கடுங்குளிரில் ரயிலில் உடல் சுருக்கி தூங்கிய நான் எழும்போது மொத்தமான பிளாங்கெட் கதகதப்பில் எழுந்த அனுபவம் உண்டு.
ஆதுரமான கடந்து வந்த நிழல்களை ஒரு பாலையில் நின்று நினைவுறும் போது மனம் மழைத்து விடுகிறது.
அருமை!
நல்ல பகிர்வு நண்பா
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
//அன்னிக்கு அந்த ட்ரைவருக்கு தான் நன்றி சொல்லனும்,//
கண்டிப்பா குரு..அன்னிக்கு அந்த டிரைவர் இல்ல..இன்னிக்கு நாங்க இல்ல..
//பரவாயில்லயே வயசானவங்களுக்கு உதவற?:)//
ஏன் உதவகூடதா..:)
@ நாஞ்சில் பிரதாப்
//அந்த ஏரியாவுல அப்படி ஒரு டீ கடை இல்லயே...ஒரு டாஸ்மாக்தான இருக்கு...//
அந்த ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வரப்பா சந்துல இருக்குமே அந்த'டாஸ்மாக்'சொல்லுறிங்களா...
இல்லை அந்த சப்-வே பக்கத்துல இருக்கே அந்த'டாஸ்மாக்' சொல்லுறிங்களா..நான் எங்க அதெல்லாம் பார்த்தேன்..
@ தமிழரசி
நன்றி தமிழ்..வெறும் மாங்கவுக்காக தான் அந்த அல்பங்கள் அப்படி நடந்துக்கொண்டன..
@ PPattian : புபட்டியன்
நன்றிங்க..எல்லோருக்குமே சில சம்பவங்கள் இதேப்போல் உண்டு இல்ல..
@ ஜெகநாதன்
//ஆதுரமான கடந்து வந்த நிழல்களை ஒரு பாலையில் நின்று நினைவுறும் போது மனம் மழைத்து விடுகிறது.//
தல இந்த வாக்கியம் தான் மிக அருமை..
@ குமரை நிலாவன்
நன்றி நண்பா..எப்படி இருக்கீங்க..
Ouiet interesting Vinoth Gowtham,u r posting nicely.Keep it up boy.
பார்க்க,பார்க்க சலிக்க மாட்டார்கள் வினோ,இந்த மனிதர்கள்!
தலைப்பு தொடங்கி மொத்த பதிவும் மிக நெகிழ்வு!
தொடருங்கள்..
மனிதத்தின் அனுபவங்கள் நன்று
@ Muniappan Pakkangal.
Thanks Doctor..;)
@ பா.ராஜாராம்..
நன்றி தல..
@ புலவன் புலிகேசி
நன்றி நண்பா..
என்னய்யா ஆச்சு உனக்கு? ரொம்ப ஃபீல் பண்ணி நல்ல பதிவா கொடுத்திருக்க!
யோவ் ஊர்ல இருந்து எப்படி வந்த..
நன்றி..:)
கதை தொடர வாழ்த்துக்கள் வினோத்..:)
எப்படினா பெட் ரூம்லேர்ந்து வெளில கொண்டு வந்துடுவீங்களா::))
@ பலா பட்டறை..
தல வாங்க...
வெளியே கூப்பிட்டு வர முடிந்த வரை முயற்ச்சிக்கிறேன்..:)
Post a Comment