Saturday, January 9, 2010

சாலை விதிகளை பின்ப்பற்றுவோம் (நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க)..

2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2010 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

என்ன பண்றது..அந்த பாதுகாப்பு வாரமே முடிஞ்சுருச்சு..அதுக்காக விட்டுடவும் முடியாது..அட்வைஸ் தானே எப்ப கொடுத்த என்னா..
அப்பா, அம்மா, அண்ணன்,தம்பி, தங்கை,அக்கா எல்லாம் வீட்டுல அடிக்கடி சொல்லுவாங்க ''வேகமா போவதா வண்டில பொறுமையா போ'' அப்படின்னு..அவங்கெல்லாம் சொல்லுறப்பவே சிலபேர் கேக்கமாட்டிங்க..நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க..;)

இருந்தாலும் தொடர்பதிவுக்கு வடலூரான் அவர்களால் அழைக்கப்பட்டேன் என்று தார்மிக காரணத்தினால் சில விஷயங்களை உங்கள் முன் எடுத்துரைப்பது என் கடமையாக்கப்பட்டுள்ளது இந்த சபையினிலே. நான் பேசமால் போனால் தொடர்ப்பதிவுக்கு இழைத்த துரோகம் ஆகிவிடும்..அதனால் சில கடுப்புகளை நீங்கள் சமாளித்துகொண்டாலும் பேசிவிட்டே செல்கிறேன் பெருமையோடு (உலகநாயகன் கவனிக்க )..

வண்டி ஒட்டி விபத்துக்கு உள்ளாகாரிவர்கள் பெரும்பாலும் வாலிபர்களா தான் இருப்பாங்க..கல்யாணம், குடும்பம்ன்னு வந்தப்பிறகு 'எதாச்சும் ஆயிடப்போதோ' அப்படிங்கிற பயமே ஒரு கட்டுப்பாட கொண்டு வந்தரும்..அதனால நான் அந்த பெரும்பாலான வாலிபர்களை குறி வைச்சே சில அட்வைஸ்களை வாரி வழங்குகிறேன்..புடிச்சுக்குங்கோ..

1. வீட்டுல, ரோட்ல, கோவில்ல, பெட்ரூம்ல ஏன் பாத்ரூம்ல கூட அந்த 'இழவெடுத்த' மொபைலை காதுல வச்சிக்கிட்டு தான் இருக்கீங்க..ஏன் வண்டில போறப்ப கூடவா பேசணும்..தயவுசெஞ்சு ஒரு ஓரமா வண்டிய நிறுத்தி பேசுங்க இல்லை மொபைலை எடுக்காதிங்க. எதுக்கு சொல்லுறேனா எதாச்சும் ஏடாகூடமா ஆச்சுனா நாளைக்கு பேசுறதுக்கு மொபைல் இருக்கும் கேக்குறதுக்கு காது தான் இருக்காது.

2.வண்டினா அது ரெண்டு "வீல்"ல ஓடுனா தான்ப்பா பார்கிறதுக்கு அழகா இருக்கும்..நீ பாட்டும் 'ஃபிகர்' பாக்குதுன்னு சொல்லி அது முன்னாடி ஒத்தை வீலை தூக்கிகாட்டி "வீலிங்" பண்ணுறனு வை..அடிப்பட்டு வண்டி உன்மேல விழுந்து இருக்கிறதா ஊரே வேடிக்கை பார்க்கும்..அப்பயும் அந்த 'ஃபிகர்' அங்கேயே நின்னு வேடிக்கை தான் பார்த்துக்கிட்டு இருக்கும் அதையும் நல்லா புரிஞ்சிக்கோ.

3.சிக்னல்ல சிகப்பு போட்ட நிக்கணும், மஞ்ச கலர் போட்ட தயாராகனும், பச்சை போட்ட போய்க்கிட்டே இருக்கணும். ஆனா நீங்க எப்ப கிளம்புவிங்க, எப்ப நிப்பிங்க எல்லாமே ஒரே கன்ப்யுஷன்..சரி நீங்க தான் அப்படி இருக்கிங்கனு பார்த்தா பெருசங்களும் அதான் பண்ணுதுங்க..தயவுசெஞ்சு போலீஸ் நிக்குதோ இல்லையோ சிக்னல்க்கு ஒரு மரியாதையை கொடுங்கப்பா..

4.எங்கயாச்சும் திரும்ப போறிங்களா இன்டிகேட்டர் போடுங்க அட்லீஸ்ட் கைய காட்டுங்க..இது எதுவுமே இல்லமா 'டக்குனு' திரும்பி எங்களை டரியல் ஆக்குரிங்க..யாருமே இல்லாத டீக்கடயுல யாருக்குடா 'டீ' ஆத்துற அப்படிங்கிற மாதிரி சிலப்பேர் யாருமே இல்லாத ரோட்ல கூட இன்டிகேட்டர் போடுவாங்க அவங்களை பார்த்து கத்துகங்கயா..

5.டபுள்ஸ் போறீங்க சரி..அது ஏன் "த்ரிப்ல்ஸ்" போறீங்க..மூணுபேரும் 'ஹாஸ்பிடல்ல' கூட ஒருத்தர்க்கு ஒருத்தர் துணையா இருக்கருத்துக்கா..முடிந்தவரை அதை தவிர்க்க பாருங்கள் சகோதரர்களே..

6. அப்புறம் முக்கியமா 'ஹெல்மெட்'ன்னு ஒன்னு எல்லோரும் வச்சி இருக்கீங்க அது முன்னாடி பெட்ரோல் tank மேல வைக்கிறதுக்கோ இல்லை பின்னாடி உக்கார்ந்து இருக்கிற 'ஃபிகர்' மூஞ்சை மறைக்கிறத்துக்கோ இல்லை..உங்க 'மண்டையில்' போடுறதுக்கு தான்..அட்லீஸ்ட் மண்டயுல அதுவாச்சும் இருக்கட்டும்.

7. ரொம்ப முக்கியமா ..குடிச்சிட்டு வண்டிய ஓட்டடதிங்க..எனக்கு 'கன்னாபின்னா'ன்னு குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஒட்டுரவங்களை பார்த்தாலே கோபம் கோபமா வரும்..முடியுல..இல்லை குடிச்சிட்டு போலீஸ்கிட்ட மாட்டி "கோர்ட்ல" போய் பைன் தான் காட்டுவனு அடம்ப்பிடிசிங்கனா போய் கட்டுங்க போங்க.
........................................................................................................................................................................................................

இன்னும் ரெண்டே ரெண்டு சொல்லிக்கிறேன் ப்ளீஸ் (கொஞ்சம் சீரியஸா ) :

1. பெரும்பாலான விபத்துக்கள் நம் நாட்டில் 'ஓவர்டேக்' பண்ணுவதால் தான் நிகழ்கிறது என்பது என் கருத்து..அதனால் 'ஓவர்டேக்' பண்ணுரப்ப கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..வளைவுகளிலும், எதிர்ல வர வண்டி மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் 'ஓவர் டேக்' பண்ணவே வேண்டாம்.

2. குழந்தைகளை, சின்ன பசங்களை வெளியே அழைத்து செல்லும்ப்பொழுது அவங்களை உங்களுக்கு 'உள்வாக்கா' கைப்பிடித்து அழைத்து செல்லவும்.. சாலை இருக்கிற பக்கம் அவங்களை நடக்க வைக்கதிங்க.

42 comments:

kishore said...

எல்லா கருத்தும் சும்மா குவாட்டர்ல கோக் கலந்த மாதிரி ஜிவ்வுன்னு இருக்கு மச்சி.. அதுலயும் அந்த ஏழாவது கருத்து தொட்டு நக்க ஊறுகாய் ஓசில குடுத்த மாதிரி இருக்கு.. ஆமா இது எல்லாமே நீ.. ச்சே.. நாம செய்யுறது தான ?

பாலா said...

பாருங்க... ,

உயிர் கொடுக்கும் நண்பன் போட்டுக் கொடுக்கறதை!!! :) :)

--

என்ன வினோத்...., நீங்க சொல்லிட்டா.. நாங்க கேட்டுடுவோமா?

ஆனா.. அது ஏன்... எல்லோருமே.. வாகனத்தை வச்சிருக்கறவங்களை பார்த்தே குறை சொல்லுறோம்?

kishore said...

ரோட்ல போறவங்கள சொல்லலாம் பாலா.. ஆனா.. பண திமிரு.. நாலு வண்டி, அஞ்சி வண்டின்னு அது இதுன்னு. பேச ஆரம்பிச்சிடுவாங்க.. :)))

Prabhu said...

கிஷோர் சொல்வது சரிதான். அப்படி பேசுனா சம்பந்தமே இல்லாமல் சிவப்பு கொடி வரை கொண்டு வந்து விடுவார்கள்! :)

எனக்கென்ன ரொம்பவும் சிரிப்பு சிரிப்பா வந்தது. ஏன்னு தெர்ல.

நாங்களாம் முட்டு சந்திலயும் இண்டிகேட்டர் போடுறவனுங்க!

தமிழ் உதயம் said...

எல்லாம் சரி. இதையும் சேர்த்துகங்க. சிறுவர்களுக்கு டூவிலரை கொடுக்கறதை தவிர்த்து விடுங்கள். நாம வம்பை விலைக்கு வாங்கற மாதிரியான செய்கை அது.

கோபிநாத் said...

ரைட்டு மச்சி ;))

puduvaisiva said...

"ரொம்ப முக்கியமா ..குடிச்சிட்டு வண்டிய ஓட்டடதிங்க..எனக்கு 'கன்னாபின்னா'ன்னு குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஒட்டுரவங்களை பார்த்தாலே கோபம் கோபமா வரும்..முடியுல..இல்லை குடிச்சிட்டு போலீஸ்கிட்ட மாட்டி "கோர்ட்ல" போய் பைன் தான் காட்டுவனு அடம்ப்பிடிசிங்கனா போய் கட்டுங்க போங்க."

வினோத் இந்த அட்வைஸ் தமிழ்நாடுக்குதானே நம்ப ஊருக்கு இல்லையே!

:-)))))))

பாலா said...

ய்ய்யாய்ய்..

யாருய்யா.. இங்க கம்யூனிசத்தை இழுக்கறது???

கூப்பிடுயா.. நம்ம பொட்டீக்கடையை..!!

பாலா said...

பப்பு...

எப்ப பார்த்தாலும்.. இண்டிகேட்டர் போட்டுகிட்டே இருக்காரு?? என்னா மேட்டரு?

எதுனா.. பின்னாடி வர்ற ஃபிகருக்கு சிக்னலா??

வினோத் கெளதம் said...

@ kishore

//எல்லா கருத்தும் சும்மா குவாட்டர்ல கோக் கலந்த மாதிரி ஜிவ்வுன்னு இருக்கு//

இந்த மாதிரியும் அடிச்சு பார்த்து இருக்க..கெட்டபுள்ள நீ..

//அதுலயும் அந்த ஏழாவது கருத்து தொட்டு நக்க ஊறுகாய் ஓசில குடுத்த மாதிரி இருக்கு.. ஆமா இது எல்லாமே நீ.. ச்சே.. நாம செய்யுறது தான ?//

பப்ளிக்..பப்ளிக்..எதா இருந்தாலும் போன்ல பேசுவோம்..:)

@ ஹாலிவுட் பாலா

//உயிர் கொடுக்கும் நண்பன் போட்டுக் கொடுக்கறதை//

உயிர் கொடுக்கறதா !!..உயிரை எடுக்கமா இருந்தா சரி ..:)

//ஆனா.. அது ஏன்... எல்லோருமே.. வாகனத்தை வச்சிருக்கறவங்களை பார்த்தே குறை சொல்லுறோம்?//

அதுக்கு உங்க ஏரியாவிலையே பொட்"தீ" கடை வச்சி இருக்குருவரு ஒரு நல்ல விளக்கம் கொடுத்து இருக்காரு கவனிக்கலையா..:)

@ KISHORE

//நாலு வண்டி, அஞ்சி வண்டின்னு அது இதுன்னு. பேச ஆரம்பிச்சிடுவாங்க.//

அதே அதே..ஆனா என்கிட்டே ஒரே வண்டி தானப்பா இருக்கு "ஹாலி" அளவுக்கு நான் பெரிய கை இல்லை..:)

பாலா said...

யாருய்யா.. இங்க கேபிடலிசம் பேசுறது..??

கூப்புடுயா.. பொட்டீக்கடையை..!!! :)

--

வினோத் கெளதம் said...

@ Pappu..

//எனக்கென்ன ரொம்பவும் சிரிப்பு சிரிப்பா வந்தது. ஏன்னு தெர்ல.//

இதெல்லாம் ஒரு பதிவுன்னு நினைச்சு சிரிச்சியா..இல்லை பதிவா பார்துட்டு சிரிச்சியா..இல்லை 'படிக்கமா எல்லோரும் கமெண்ட் மட்டும் போட்டுட்டு போறாங்க பாரு' அப்படிங்கிரத நினைச்சு சிரிச்சியா எதா இருந்தாலும் முழுசா சொல்லு..

//நாங்களாம் முட்டு சந்திலயும் இண்டிகேட்டர் போடுறவனுங்க!//

அதான் சொல்லுற மாதிரி எதாச்சும் பிகர்க்கு சிக்னல் கொடுக்கரதக்க இருக்கும்..;)

@ tamiluthayam

//சிறுவர்களுக்கு டூவிலரை கொடுக்கறதை தவிர்த்து விடுங்கள். நாம வம்பை விலைக்கு வாங்கற மாதிரியான செய்கை அது.//

எங்க தல இந்த காலத்துல சின்ன பசங்க சொன்னா கேக்குறாங்க..அந்த காலத்திலேயே ஒரு 'பெரியவரு' வீட்டுக்கு தெரியமா சாவியை எடுத்து வண்டிய ஒட்டி இருக்காரு..

@ கோபிநாத்..

மச்சி ஏரியால தான் இருக்கியா..Passport எங்கே விடமாட்டோம் நாங்க..:)

பாலா said...

///ஒரு 'பெரியவரு' வீட்டுக்கு தெரியமா சாவியை எடுத்து வண்டிய ஒட்டி இருக்காரு..///

இது ஆவறதுக்கு இல்லை!! மொதல்ல ஃப்ரொஃபைலை மாத்தப் போறேன்.

வினோத் கெளதம் said...

@ ♠புதுவை சிவா♠..

//வினோத் இந்த அட்வைஸ் தமிழ்நாடுக்குதானே நம்ப ஊருக்கு இல்லையே!//

என்னா தல..இன்னும் சின்னகுழந்தையாவே இருக்கீங்க..அட்வைஸ் எல்லாம் கேக்குறவங்களுக்கு மட்டும் தான் சொல்லுறவங்களுக்கு இல்லை..:)

@ ஹாலிவுட் பாலா

//யாருய்யா.. இங்க கம்யூனிசத்தை இழுக்கறது???கூப்பிடுயா.. நம்ம பொட்டீக்கடையை..!!//

தல நீங்க ஏரியா தெரியமா சவுண்ட் விடுறிங்க..அவங்க எல்லாம் 'பெரிய ஆளு' தொகுதியில் தான் பிரசாரம் பண்ணுவாங்க..நீங்க நம்ம ஏரியாவாண்ட கூப்பிட்டா எப்படி வருவாங்க..

//யாருய்யா.. இங்க கேபிடலிசம் பேசுறது..??//

யாருயா..அது ஏன் ஏரியால வந்து 'தோனி'ய பத்தி பேசுறது..

வினோத் கெளதம் said...

@ ஹாலிவுட் பாலா

//இது ஆவறதுக்கு இல்லை!! மொதல்ல ஃப்ரொஃபைலை மாத்தப் போறேன்.//

சீக்கிரம் மாத்துங்க..எதாச்சும் சந்தேகம்னா Contact Kalaiarasan..;)

Prabhu said...

யோவ், வயித்தெரிச்சல கெளப்பாதீங்கய்யா... அப்படி ஃபிகர் பின்னாடி வர்ற மாதிரி இருந்ததுன்னா.. இங்க வந்து பொட்டி தட்டறவங்கட்டயும், எண்ணெயடுக்கறவங்கட்டயும் எனக்கு என்ன வேலை?

அவங்கள்ளாம் நல்லா விளம்பரம் கிடைக்கிற இடங்களில்தான் சண்டை போடுவாங்க!

கலையரசன் said...

//வாலிபர்களை குறி வைச்சே//

டேய்.. லீனா கவிதை படிச்ச பாதிப்போ??

கலையரசன் said...

//வீட்டுல, ரோட்ல, கோவில்ல, பெட்ரூம்ல ஏன் பாத்ரூம்ல கூட அந்த 'இழவெடுத்த' மொபைலை காதுல வச்சிக்கிட்டு தான்//

நைட்டு 1 மணி ஆனாலும் குடிக்கும்போது கூட மொபைலை கைய்ல புடிச்சிகிட்டே இருக்குறதை விட்டுட்ட...

கலையரசன் said...

//ப்ளீஸ் (கொஞ்சம் சீரியஸா ) ://

அப்ப முன்னாடி சொன்னது எல்லாம் காமடின்னு பிராக்கெட்ல ஏன் போடல.. சிரிச்சிருப்போமுல்ல??

ரைட்டு... அட்வைசுக்கு நன்றி!! ஃபாலோ பண்ண டிரை பண்றோம்!! நன்றி.. வணக்கம்!!

Anonymous said...

கருத்துக்களை எளிமையா தெளிவா சொல்லியிருக்க வினு...

பெரும்பாலும் வண்டி ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது..இது ஒன்னும் சொல்லிக்கிற அளவு ஃபேஷனோ ஃப்கரை கரைட் பண்ணவோ இது தேவையில்லை..உயிர் விலைமதிப்புள்ளாத ஒன்று கவனிக்கவும் இளைஞர்களே...

☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி உங்களையெல்லாம் பழி வாங்க தொடர் பதிவுக்கு தான் இனி கூப்பிடனும்.

பப்பு சொன்ன மாதிரி எனக்கும் படிக்கும் போது சிப்பு சிப்பா வந்துச்சு மச்சி.. ஹி ஹி

வடுவூர் குமார் said...

எங்கயாச்சும் திரும்ப போறிங்களா இன்டிகேட்டர் போடுங்க அட்லீஸ்ட் கைய காட்டுங்க..
This is the dangerous system but still followed here.When u take one hand out of handlebar u will loose the balance esp on pot holes.All signals should be on light only.

கண்ணா.. said...

பைக் ரேஸ் பிரியர் அஜித்தை திட்டி பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.


இவண்

அமீரக அஜித் ‘வினோத்’ கொலைவெறி கழகம்

அமீரகம்

S.A. நவாஸுதீன் said...

இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் சென்ற ஆண்டில் அதிகமென்று நினைக்கிறேன்.

எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துக்கள் நண்பா. நல்ல இடுகை.

குசும்பன் said...

RTA ஆபிசர் வினோத் வாழ்க வாழ்க!

Thenammai Lakshmanan said...

ஹா ஹா ஹா

2 ,5 ,6, எல்லாம் உங்களுக்குத்தானே சொல்லிக் கிட்டீங்க வினோத் ..நல்லா புரிஞ்சுருச்சு ..

பின் குறிப்பு ரொம்ப அவசியமான ஒண்ணு வினோத் ..

இந்த இடுகைக்கு உங்களுக்கு சென்டம்தான்

வினோத் கெளதம் said...

@ Pappu..

//இங்க வந்து பொட்டி தட்டறவங்கட்டயும், எண்ணெயடுக்கறவங்கட்டயும் எனக்கு என்ன வேலை?//

அதானே இந்த பக்கமே வரமாட்டியே..

@ கலையரசன்

//டேய்.. லீனா கவிதை படிச்ச பாதிப்போ??//

அது யாரப்பா லீனா..

//நைட்டு 1 மணி ஆனாலும் குடிக்கும்போது கூட மொபைலை கைய்ல புடிச்சிகிட்டே இருக்குறதை விட்டுட்ட//

சென்ஷியா இங்க கூடவா வந்து போட்டு கொடுக்கணும்..

//அப்ப முன்னாடி சொன்னது எல்லாம் காமடின்னு பிராக்கெட்ல ஏன் போடல.. சிரிச்சிருப்போமுல்ல??//

நான் எழுதுறப்ப நீ என்ன கேப்பனு நினைத்தேனோ..அதை அப்படியே வார்த்தை மாறாமல் கேட்டுவிட்டாய் தேவகுமரா..:)

//ரைட்டு... அட்வைசுக்கு நன்றி!! ஃபாலோ பண்ண டிரை பண்றோம்!! நன்றி.. //

...அதனால நான் அந்த பெரும்பாலான வாலிபர்களை குறி வைச்சே சில அட்வைஸ்களை வாரி வழங்குகிறேன்..புடிச்சுக்குங்கோ....

இந்த வரிகளை நீ சரியா படிக்கலன்னு நினைக்கிறேன்..மறுப்படியும் உனக்காக..;)

@ தமிழரசி

//பெரும்பாலும் வண்டி ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.//

கண்டிப்பா தமிழ்..ஒரு ஐந்து நிமிடம் ரோட்டின் ஓரமாக நின்று பேசுவதில் ஒன்றும் ஆகிவிட போவதில்லை..:)
நன்றி.

வினோத் கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀

//பப்பு சொன்ன மாதிரி எனக்கும் படிக்கும் போது சிப்பு சிப்பா வந்துச்சு மச்சி.. ஹி ஹி//

அதான் எதுக்கு சிரிசிங்கனு யாருமே சொல்லமாட்டுரிங்கலே..யாராச்சும் சொல்லுங்கப்பா..

@ வடுவூர் குமார்

//When u take one hand out of handlebar u will loose the balance esp on pot holes.All signals should be on light only.//

நன்றி குமார்..எல்லோருமே இன்டிகேடர் உபயோகித்தார்கள் என்றால் நல்லது தான்..

@ கண்ணா

//அமீரக அஜித் ‘வினோத்’ கொலைவெறி கழகம்//

உனக்கு ஏன் இந்த கொலைவெறி அதை சொல்லு முதல்ல..;)

வினோத் கெளதம் said...

@ S.A. நவாஸுதீன்

//இயல்பான மரணத்தைவிட சாலைவிபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் சென்ற ஆண்டில் அதிகமென்று நினைக்கிறேன். //

ரொம்ப அதிர்ச்சிக்குரிய செய்தி..கண்டிப்பாக சாலை விதிகளை மதிப்பதன் மூலம் இதேப்போல் செய்திகளை தவிர்க்கலாம்..:(

@ குசும்பன்

//RTA ஆபிசர் வினோத் வாழ்க வாழ்க!//

தலைவா..ஏன் திடிர்னு..இப்படி..ஒழுங்கா தானே போயிட்ருக்கு வண்டி..:))

@ thenammailakshmanan

//2 ,5 ,6, எல்லாம் உங்களுக்குத்தானே சொல்லிக் கிட்டீங்க வினோத் ..நல்லா புரிஞ்சுருச்சு ..//

முடிவே பண்ணிடிங்கள நான் தான்னு..:))

Prathap Kumar S. said...

//அட்லீஸ்ட் கைய காட்டுங்க//

தல கையை காட்டுறதும் தப்பு தல...

//ரொம்ப முக்கியமா ..குடிச்சிட்டு வண்டிய ஓட்டடதிங்க..எனக்கு 'கன்னாபின்னா'ன்னு குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஒட்டுரவங்களை பார்த்தாலே கோபம் கோபமா வரும்.//

இதெல்லாம் உனக்கே ஓவரா தெரில... அநியாயத்துக்கு நல்லவனாறியே... சரிப்பா நம்பிட்டோம் போ...

//அட்லீஸ்ட் மண்டயுல அதுவாச்சும் இருக்கட்டும்//

அது...

தல சும்மா நாட்டுச்சரக்கை ராவா அடிச்ச மாதிரி நச்சுன்னு இருந்துச்சு பதிவு... ப்சக் ப்சக்..ஊறுகாய் தொட்டுகிறேன்...

கலையரசன் said...

என்னது லீனாவை தெரியாதா??

http://www.vinavu.com/2010/01/06/leena/

லிங்கை படிச்சிட்டு வந்து என் கமெண்டை திரும்ப படி!!

geethappriyan said...

உன் அட்வைசையும் பிடித்துக்கொண்டேன்
வாக்குகள் சேர்க்கப்பட்டன

வினோத் கெளதம் said...

@ நாஞ்சிலார்

//தல கையை காட்டுறதும் தப்பு தல.//

தப்பு தான்..இருந்தாலும் நான் ஊர்ல ரெண்டுத்தையும் பண்ணுவேன்..அப்பயும் சில நாதாரிங்க கவனிக்காம வரும்..

//இதெல்லாம் உனக்கே ஓவரா தெரில... அநியாயத்துக்கு நல்லவனாறியே... சரிப்பா நம்பிட்டோம் போ...//

நம்புங்க..நம்பிக்கை தான் வாழ்கை..
நன்றி தல..:)

@ பிரியமுடன்...வசந்த்

நன்றி மச்சி..அடிக்கடி போட்டோவ மாத்திடுற நீ..:)

@ கலையரசன்

படிச்சிட்டேன்..பார்த்துட்டேன்..

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

குரு லேட்டா வந்தாலும் உன் கடமைய பண்ணிட்டு போயுடுற..:)

பாலா said...

குறி சொல்லும் மேட்டரைத் தவிர ஒன்னும் இண்ட்ரஸ்ட்டிங்கா இல்லை. நான் அப்பாலிக்கா வர்றேன்.

thiyaa said...

நல்ல கருத்துகள்

வினோத் கெளதம் said...

@ ஹாலி..
என்ன குறி..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

@ தியாவின் பேனா..
நன்றிங்க..:)

பாலா said...

கலையரசன் பின்னூட்டத்தை படிச்சீங்க இல்ல??! :) :)

லீனா மணிமேகலை கவிதையை தெரியாதவங்க இப்ப யாராவது இருக்காங்களா என்ன?

http://www.vinavu.com/2010/01/06/leena/

http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai/

வினோத் கெளதம் said...

தல பொதுவாவே எனக்கு அந்த வினவு பதிவை படித்தால் பத்திக்கொண்டு வரும்..பைத்தியக்காரன் மாதிரி எழுதுவான்..

அதனால லூஸ்ல விடுங்க..அப்புறமா படிச்சிக்கிறேன்.. :)

Muniappan Pakkangal said...

Raasa kannu padapohuthuppa,nalla suthipodu.Really nice article Vinoth Gowtham.Most of the accidents occur on carelessnessabt the safety.Nee sonna maathiri,mobile irukkum-ketka kaathu irukkaathu.Well done boy.

வினோத் கெளதம் said...

Thank U verY mUCh doCToR SIr..:)

சாமக்கோடங்கி said...

உங்களை பின் தொடர்பவரின் பட்டியலில் நான் சேர்ந்து உள்ளேன்.டால்பின் கொலை பற்றிய உங்களின் கருத்தைப் படித்தேன். மிருகங்களைப் பற்றி மிகவும் கவலைப்படும் உங்களைப் போல் தான். நானும். எனக்கும் உங்களுக்கும் மன அலை வரிசை ஒன்றாக இருப்பதால் வந்தேன். உங்களது இந்த இடுகை மிக அருமை. நிறைய எழுதுங்கள். நல்ல நடை.,.

வினோத் கெளதம் said...

நன்றி பிரகாஷ்..ஒரே அலைவரிசையில் பயணிப்பதில் சந்தோசம் நண்பா..;)