Tuesday, January 26, 2010

எங்கே செல்லும்... பாகம் - 5

தொடர் பதிவுகள் மாதிரி போரடிக்காமல், இதுவொரு தொடர் கதை. ஒவ்வொருஅத்தியாயத்தையும் ஒவ்வொருவர் எழுதுறாங்க. கதை எப்படி வேண்டுமானாலும், அந்த எபிஸோடை எழுதுபவரின் மனதைப் பொருத்து பயணிக்கலாம். ஸோ.. யாராலும் எதையும் கணிக்க முடியாது. இதற்கு முன், கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார்-பிகேபி-சுபா செய்த முயற்சி. இப்பொழுது பதிவுலகில்.

விசா-வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை.. பலா-வும், பின் பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் தொடர.நாலாவது பாகம் என் பொறுப்பில்...அந்த கதையோட விதி..இல்லை அடுத்து எழுத போறவங்களோட கஷ்டகாலம் இப்ப என் ''கையுல'' மாட்டிகிச்சு..
என்ன பண்ணுறது..'குரங்கு கையில் பூமாலைன்னு' நீங்க நினைத்தாலும் வேறவழி இல்லை ..

மொத்த கதையை படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிஸோட் எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.
...................................................................

கைவிலங்கை பார்த்தவுடன் கன்னபின்னவென்று 'கத்தியவன்' சிறிது நேரத்தில் மயக்கமானான்.

"இது முடியும்னு நினைக்கிறிங்களா"..திவ்யா.

"பாப்போம்..ப்ரபோனோனல்750 xmg தான் கொடுத்து இருக்கேன்..அவனுக்கு முழுசா அவன் யாருன்னு தெரிய குறைஞ்சது ஒரு 36 மணி நேரமாச்சும்ஆகும்..ஆனா அதுக்குள்ள அவன் ஏற்கனவே கடந்து வந்த விஷயங்களை மறுப்படியும் பார்த்தானா அவனால சில விஷயங்களை நியாபகப்படுத்த முடியும்.."

"ஆனா அவன பார்கிறதுக்கு ரொம்ப பாவமா இருக்குப்பா..'இது' எப்ப தான்முடியும்"..திவ்யா.

"எனக்கும் தெரியாது..ஆனா 'அவங்க' எதிர்ப்பார்க்கிற விஷயம் கிடைக்கிற வரைக்கும் இவனை நிம்மதியா விடமாட்டாங்க..இதுக்கு அவன் போலீஸ் கஸ்டடில இருந்திருக்கலாம்..தப்பிச்சு வந்து இவங்ககிட்டேயே மாட்டிக்கிட்டான்.."
.........................................................................

"யேய்..இது சரியாப்ப்படும்னு நினைக்கிறியா..நம்ம குரூப்ல இல்லாத ஆளுங்களா 'இவன' எதுக்கு செலக்ட் பண்ண.."..ராஜேஷ்.

"இல்லை..இவன் தான் சரிப்பட்டு வருவான் ..எனக்கு தெரியும்..''டீல்" முடிஞ்சவுடனே பாரு உனக்கே தெரியும்..ஆமாம் தலையுல எதாச்சும் 'ஆப்ரேட்' பண்ண தழும்பு தெரியுதா..".. Mr.X

"இல்லை"..ராஜேஷ்..

"குட்..ஓகே..நான் சொல்றத கவனமா கேளு..அவன விட்டு ரொம்ப தூரம் போனா அவன் தலையுல இருக்குற 'சிப்'ல இருந்து வர சிக்னல் உன்னால ரிசிவ் பண்ணமுடியாது..ஸோ, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நீ இருக்கிற மாதிரி பார்த்துக்கோ..ஆனா தப்பிதவறி கூட அவன் பக்கத்தில் எந்த காரணத்தை கொண்டும் போகாத..அவன் 'அதை' எடுத்து முடிக்கிற வரைக்கும்..நீ அவன 'அங்க' விட்டுட்டு விலகிடு..நீ விலகின நேரத்தில் இருந்து அவனுக்கு சுயநினைவு வரஒரு பத்து மணி நேரமாச்சும் ஆகும்..ஸோ, நீ அவனை விட்டு விலகின நிமிடத்தில் இருந்து அவன ஷார்ப்பா வாட்ச் பண்ணு..அவனுக்கு 'சுய நினைவு' வந்துருச்சுன்னு அவன் நடவடிக்கையை வச்சு உனக்கு எப்ப சந்தேகம் வருதோஅப்ப இருந்து இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணு..அதை விட ரொம்ப முக்கியம் அதுவரைக்கும் நீ அவன் கண்ணுல படவே கூடாது.."..Mr.X

"அதுசரி நடுவுல 'இவன்' எதுவும் எங்கிட்ட கேக்கமாட்டான்ல யாருக்காச்சும் சந்தேகம் வரப்போகுது"..ராஜேஷ்.

"நீ போய் சேருற வரைக்கும் ஒரு வார்த்தை பேசமாட்டான்..நீ பண்ண வேண்டியது எல்லாம் அவன கைய பிடிச்சு கூப்பிட்டுப்போ அது போதும்''...Mr.X

"சரி நான் பார்த்துக்கிறேன் இதுக்கபுறம்.."..ராஜேஷ்.

" விசா,பாஸ்போர்ட் எல்லாம் சரியாய் இருக்குல..எல்லாத்தையும் செக் பண்ணிட்டியா.."...Mr.X

"எல்லாம் ஓகே..நான் உனக்கு 'கேப் டவுன்' போய் சேர்ந்தவுடனே கால்பண்ணுறேன்..இப்ப 'கட்' பண்ணுறேன்.."..ராஜேஷ்.

சுயநினைவற்ற நிலையில் அவனும், ராஜேஷும் ஏர்போர்ட்க்குள் நுழைந்தனர். எதிர்ப்பர்த்தப்படியே 'செக்கிங்கில்' எந்த கெடுப்பிடியும் இல்லாமல் விமானத்தை அடைந்து அமர்ந்தனர்..அவனும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் ராஜேஷ் பின்னாடி கைபிடித்து வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை..

விமானம் சவுத் ஆப்ரிக்காவை நோக்கி பறக்க ஆரம்பித்தது..
.....................................................................
சுவாதி குழப்பத்தில் இருந்தாள்..அவள் மொபைல் அலறியது..
"ஹலோ..சுவாதி"

"சொல்லுங்க சுவாதி தான் பேசுறேன்"..

"என் பேரு ஆவுடையப்பன்..சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்..நாளைக்கு கமிஷனர்ஆபீஸ் வரை வந்து என்னை பார்க்க முடியுமா..உங்ககிட்ட சில கேள்விகள்இருக்கு..ஜஸ்ட் ஒரு இருபது நிமிஷம்"..

"...?"

(தொடரும்)

................................................................................
யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.
...................................................................................

அடுத்த பகுதி இங்கே எங்கே செல்லும் - பாகம் 6 ..எழுதியது கிஷோர்..

42 comments:

வினோத் கெளதம் said...

இதை எழுதி முடிப்பதற்குள் ஒரு வழியாகி விட்டேன்..HTML Codingல் பிரச்னை மேல் பிரச்னை..
மற்றவை நாளை முடித்து விடுகிறேன்..

@ பலா பட்டறை..

தல..பெட்ரூம்ல இருந்து தூக்கிட்டு வந்து வெளிநாட்டில் விட்டு விட்டேன்..எதோ என்னால் முடிந்தது..:)

வினோத் கெளதம் said...

எதாச்சும் தப்பு
இருந்தால் மெயில் பண்ணுங்க..நாளைக்கு தான் இனிமேல்..

Gud nite..

பாலா said...

இதுக்குதான் அந்த ‘சூர்யா’ படம் பார்க்காதீங்கன்னேன். கேட்டீங்களா? :)

இப்ப கேப் டவுன்ல விட்டுட்டீங்களே! :) :) சூப்பர். நல்லா மாட்டி விட்டேன்னு நினைச்சேன். :( :(

---

நசரேயன் said...

ஒ.. இப்படி எல்லாம் வேற ஓடிகிட்டு இருக்கா

kishore said...

நல்லா இருக்கே .. நான் தொடர போறேன்..

Paleo God said...

இருக்கற கேப்ப ரொப்ப டவுன்ல ஓடவிட்டுகிட்டு இருந்தோம், தூக்கிட்டு கேப்டவுன்ல விட்டுட்டீங்க..

இந்த பாகத்துல தான் ஏகப்பட்ட பெயர் அறிமுகம்...


---

எங்கே செல்லும்....!!??

Paleo God said...

நல்லா கொண்டுபோயிருக்கீங்க வினோத்..:))

புலவன் புலிகேசி said...

அட இது கூட நல்லா இருக்கே..

Unknown said...

பட்டையக் கிளப்புது..

அடுத்து என்ன நடக்கப்போவுதுன்னு நெனக்கக் கூட முடியலை.


காப்பிரைட் போட்ருவோம்.. யாராவது டைரக்டர் சுட்டுறப் போறாங்க.. :)))

(எவ்வளவு நம்பிக்கை நம்ம மேல )

Prathap Kumar S. said...

ஆஹா... இடைல ஸ்வாதி கூட ஒரு டூயட் வச்சுருக்கலாமே தல... இப்படி சிரியஸா கொண்டு போனா படம் பார்க்கறவன் டரியலாயிடுவான்...

அடுத்தது யாருப்பா...எனக்கு ஒரு முடிவு தெரிஞசேயாகணும்...
கூகுள் இருக்கறவரைக்கும் இதுவும் போய்கிட்டே இருக்குமோ???

கண்ணா.. said...

ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..

ஆனா இன்னும் தமிழிஷ்ல இணைக்காம என்னை ஜனநாயக கடமை ஆற்ற விடாம பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆகா... பல்லழகி துண்டு போட்டு இடம் பிடிச்சுடுச்சா.... ரைட்டு அப்போ அடுத்த பார்டு ஷகிலா படம் பார்த்த எபெஃக்ட் கிடைக்கும்...

:)

கண்ணா.. said...

வினோத் வேர்ட்டில் டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணலாமே....அது ஓண்ணும் கஷ்டம் கிடையாதே...

S.A. நவாஸுதீன் said...

////மொத்த கதையை படிக்க இந்த பக்கம் போங்க..////

இங்கே லின்க் கொடுத்திருங்க நண்பா.

S.A. நவாஸுதீன் said...

மத்த பகுதிகளை முழுவதுமாக படித்துவிட்டு மீண்டும் இங்கு வருகிறேன் நண்பா. (சங்கரோடது மட்டும் படிச்சேன்)

geethappriyan said...

பலத்த கரகோஷங்கள்
மிக அருமையாய் தொடர்ந்தாய் குரு
வாக்குகள் சேர்த்துவிட்டேன்

geethappriyan said...

தல ஹாலி பாலாவின் கதையும் படித்தேன்.கலக்குறீங்கப்பா.
நல்ல ஐடியாவா இருக்கு.இதுக்கு பேர் தான் டீம் வொர்க்

கோபிநாத் said...

மச்சி..இந்த வாரம் வந்துடு மச்சி ;))

ப்ரியமுடன் வசந்த் said...

தல ப்ரொஃபசனல் ஸ்டோரி ரைட்டர்ன்றத கதைக்கூடேயான கதா பாத்திர உருவாக்கத்தின் மூலம் நிரூபிச்சுட்டீங்க இந்த கதைப்பயணம் சிறக்க வாழ்த்துகள் தொடரும் தொடரப்போகும் அனைவருக்கும் சேர்த்து

பின்னோக்கி said...

என்னங்க இது. மருந்து பேர் எல்லாம் போட்டு பயமுறுத்திறீங்க. உண்மையாலுமே அந்த மருந்து அதுக்குத்தானா ?. கதைய அருமையா தொடர்ந்துட்டீங்க. பார்ப்போம் யார் என்ன பண்றாங்கன்னு.

செ.சரவணக்குமார் said...

ஹாலிவுட் பாலா முடித்த இடத்திலிருந்து அருமையாகத் தொடர்ந்திருக்கிறீர்கள் வினோத். கதையும் நன்றாகப் போகிறது. வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

சார் ஒரு ஆட்டோகிராப் போட்டு கொடுங்க சார் நெக்ஸ்ட் டைம்!

பிரபாகர் said...

நண்பா, கதையை நல்லா முடிக்கி விட்டுட்டீங்க. அருமை. அடுத்து எழுதறத படிக்க ஆர்வமா இருக்கு!

பிரபாகர்.

வினோத் கெளதம் said...

@ ஹாலிவுட் பாலா..

//இதுக்குதான் அந்த ‘சூர்யா’ படம் பார்க்காதீங்கன்னேன். //

இதுக்கு நீங்க நேரடியாவே 'அயன்'ன்னு சொல்லி இருக்கலாம்..;)
இதைவிட முன்னாடி வேற மாதிரி யோசிச்சேன் அது அப்பட்டமா ஒரு 'தமிழ்படம்' மாதிரி தான் இருந்துச்சு..அதனால தான் கொஞ்சம் மாற்றி எழுதினேன்..(மாத்தி எழுதிட்டாலும்)..

//இப்ப கேப் டவுன்ல விட்டுட்டீங்களே! :) :) சூப்பர்.//

இல்லை தல..திருப்பி return back to chennai..!!

@ நசரேயன்

//ஒ.. இப்படி எல்லாம் வேற ஓடிகிட்டு இருக்கா//

நீங்க வேற இதைவிட கொடுமை எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கு..:)

@ பலா பட்டறை

//தூக்கிட்டு கேப்டவுன்ல விட்டுட்டீங்க..//

தல திரும்பவும் சென்னை தான்னு நினைக்கிறேன்..:)

//இந்த பாகத்துல தான் ஏகப்பட்ட பெயர் அறிமுகம்...//

இதுக்கபுறம் எழுதுறவங்க மண்டைய பிச்சிப்பாங்க இல்லை..;)

வினோத் கெளதம் said...

@ Kishore..

//நல்லா இருக்கே .. நான் தொடர போறேன்..//

ஆஹா..அருமை..அற்புதம்..:)

@ பலா பட்டறை

நன்றி தல..

@ புலவன் புலிகேசி

நன்றி புலவரே..

@ முகிலன்..

//காப்பிரைட் போட்ருவோம்.. யாராவது டைரக்டர் சுட்டுறப் போறாங்க.. :)))//

ஓஹோ..நான் எழுதுனதை படிச்ச பிறகும் இப்படி ஒரு நம்பிக்கையா உங்களக்கு..:)

நன்றி தல..

வினோத் கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப்

//ஆஹா... இடைல ஸ்வாதி கூட ஒரு டூயட் வச்சுருக்கலாமே தல...//

காசா..பணமா..வச்சிடுவோம்..இனிமல் எழுத போகிறவர்கள்..நாஞ்சிலரின் இந்த ஆசையை கொஞ்சம் நிறைவேற்றுங்கள்..:)

//இப்படி சிரியஸா கொண்டு போனா படம் பார்க்கறவன் டரியலாயிடுவான்...//

கொஞ்சம் காமெடியா ட்ரை பண்ணி இருக்கலாமோ..(டேய்..நீ எழுதுனதே பெரிய காமெடி தான்)..

//கூகுள் இருக்கறவரைக்கும் இதுவும் போய்கிட்டே இருக்குமோ???//

I hope so..:)

@ கண்ணா..

//ஆகா... பல்லழகி துண்டு போட்டு இடம் பிடிச்சுடுச்சா.... //

கண்ணா..பதிவ கொஞ்சம் படியா..பதிவு மொக்கையா இருந்துச்சுனா கமெண்ட் மட்டும் படிச்சிட்டு அப்படியே ஓடி போயிடுறது..;)
ராஸ்கல் எவன்கிட்ட கத்துகிட்ட இந்த பழக்கத்தை..:)

//வினோத் வேர்ட்டில் டைப் பண்ணி காப்பி பேஸ்ட் பண்ணலாமே//

கண்டிப்பா மாத்தனும்..நேத்து அவ்வளோ அவஸ்தை பட்டேன்..

@ S.A. நவாஸுதீன்..

படியுங்கள் தல..தமிளிஷ்'ல் இணைத்ததற்கு நன்றிகள் பல..:))

வினோத் கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

வா குரு..வோட்டுக்கு நன்றிகள் பல..தொடர்க்கதை மற்றவர்கள் பார்வையில் விரிந்துக்கொண்டே போகும்..கண்டிப்பா படியுங்கள்..எழுதுங்கள்..;)

@ கோபிநாத்..

மச்சி வந்துடுறேன்..எல்லோரும் ரெடியா..!!

@ பிரியமுடன்...வசந்த்

//தல ப்ரொஃபசனல் ஸ்டோரி ரைட்டர்ன்றத கதைக்கூடேயான கதா பாத்திர உருவாக்கத்தின் மூலம் நிரூபிச்சுட்டீங்க //

மச்சி இது எதோ கிண்டல் பண்ணுற மாதிரியே இருக்கே..:)
நன்றி மச்சி..

வினோத் கெளதம் said...

@ பின்னோக்கி

நன்றி தல..

//உண்மையாலுமே அந்த மருந்து அதுக்குத்தானா ?. //

தல நீங்க வேற..அது சும்மா உட்டாலக்கடி..:)

@ செ.சரவணக்குமார்

நன்றி தல வருகைக்கு..எல்லாம் 'ஹாலி' போட்டு கொடுத்த பாதை தான்..

@ குசும்பன்

//சார் ஒரு ஆட்டோகிராப் போட்டு கொடுங்க சார் நெக்ஸ்ட் டைம்!//

எங்க போனாலும் குசும்பு..:)

@ பிரபாகர்..

நன்றி தல..நீங்கள் எல்லாம் போட்டு கொடுத்த பாதையில் சும்மா ஒரு நடை அவ்வளவு தான்..;)

Paleo God said...

வாழ்த்துக்கள் கிஷோர்..::)

Paleo God said...

வாழ்த்துக்கள் கிஷோர்..::)

Paleo God said...

நாஞ்சில் பிரதாப் said...
ஆஹா... இடைல ஸ்வாதி கூட ஒரு டூயட் வச்சுருக்கலாமே தல... இப்படி சிரியஸா கொண்டு போனா படம் பார்க்கறவன் டரியலாயிடுவான்...//

இன்னும் நான் போட்ட சோலோக்கே பாராட்ட காணோம்..இதுல ஸ்வாதியோட டூயட்டா..??

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத்.. இது புது விளையாட்டா இருக்கே.. கலக்கறீங்க.. முன்னாடியோடத இன்னும் படிக்கல.. ஆன உங்க கதை நல்லாவே இருக்கு.. மற்றதையும் படிக்கறேன்.

பாலா said...

///இதுக்கு நீங்க நேரடியாவே 'அயன்'ன்னு சொல்லி இருக்கலாம்..;)///

அந்தப் படம் பேரு நியாபகம் வரலை. இப்ப சொல்லிடுறேன். அயன்.

நட்புடன் ஜமால் said...

நல்லா எடுத்துகிட்டு போறீங்க எல்லோரும்

அடுத்த வாட்டி களத்துல குதிச்சிர வேண்டியது தான்.

ஒரு வித்தியாசமா ரிவர்ஸ்ல படிச்சிட்டு வாறேன் - இஃகி இஃகி

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு நடத்து ராசா :)) புதுசு புதுசா கலக்குறீங்க

வினோத் கெளதம் said...

@ பலா பட்டறை

//இன்னும் நான் போட்ட சோலோக்கே பாராட்ட காணோம்..//

அது என்ன சோலோ..!!

@ ச.செந்தில்வேலன்

நன்றி செந்தில்..எல்லா பாககங்களையும் படித்துவிட்டு சொல்லுங்கள்..

@ ஹாலிவுட் பாலா

//அந்தப் படம் பேரு நியாபகம் வரலை. இப்ப சொல்லிடுறேன். அயன்.//

தமிழ் படங்களின் பெயரை கூட நியாபகத்தில் வைத்து கொள்ளாத தமிழ் படங்களின் 'ஒரே எதிரி' ஹாலி பாலி ஒழிக ஒழிக ..:)

@ நட்புடன் ஜமால்..

சீக்கிரம் களத்தில் புகுங்கள் ஜமால்..:)

//ஒரு வித்தியாசமா ரிவர்ஸ்ல படிச்சிட்டு வாறேன் - இஃகி இஃகி//

நான் எழுதிருக்கிற கதையை நேரா படித்தாலே புரியாது இதுல ரிவர்ஸ்ல வேறயா..:)

@ ☀நான் ஆதவன்☀

//புதுசு புதுசா கலக்குறீங்க//

என்னத்த கலக்குறோம்..நாங்க என்ன காபியா கலக்குறோம்..
மனசாட்சிய தொட்டு சொல்லு "இந்த கதையை" நீ படிச்ச..:)

Paleo God said...

என்ன சோலோ வா? அப்ப என் கதைய படிக்கவே இல்லையா..??

--

சரி ஒரு சப்போர்ட் குரல்..
(ஹாலி)...க..க

thiyaa said...

ஆஹா...

Thenammai Lakshmanan said...

என்ன வினோத் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ்., அகதா கிறிஸ்டி ரேஞ்சுக்கு கலக்குறீங்க... அட்டகாசம்!!!

பாலா said...

////என்ன வினோத் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ்., அகதா கிறிஸ்டி ரேஞ்சுக்கு கலக்குறீங்க... அட்டகாசம்!!!///

ஏங்க.. இது உங்களுக்கே ஓவரா தெரியல?? எதோ பாவம் புள்ள ட்ரை பண்ணுச்சே... பாராட்டுவோம்னு இல்லாம.. இப்படியா.. அவரை ஓட்டுறது??

ஒரு வேளை வினோத்.. மானம் ரோசம் இருக்கற பையனா இருந்திருந்தா.. என்ன ஆகியிருக்கும் யோசிச்சிப் பாருங்க???

என்ன வினோத்.. சரிதானே?!! :)

எலே.. கிஷோரு.. எங்கலே.. ஆளைக் காணாம்???

பாலா said...

//சரி ஒரு சப்போர்ட் குரல்..
(ஹாலி)...க..க//

இன்னுமாங்க... படிச்சிட்டுத்தான் பின்னூட்டம் போடுறோம்னு நினைச்சிட்டு இருக்கீங்க பலா??? :)

உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு! :))

Muniappan Pakkangal said...

Nice start & finish Vinoth Gowtham

வினோத் கெளதம் said...

@ பலா பட்டறை

//என்ன சோலோ வா? அப்ப என் கதைய படிக்கவே இல்லையா..??//

ஒஹோ அது தான் சோலோவா..:)

@ தியாவின் பேனா..

நன்றிங்க ..

@ thenammailakshmanan

//என்ன வினோத் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ்., அகதா கிறிஸ்டி ரேஞ்சுக்கு கலக்குறீங்க... //

என் குலதெய்வம் மேல சத்தியமா இவங்க ரெண்டு பேரும் எனக்கு யாருன்னு தெரியாது..(எதோ ஆங்கில எழுத்தாளர்கள்ன்னு மட்டும் தெரியுது..தமிழ் நாவலே அரைகுறையா தான் புரியும்..இதுல எங்கயிருந்து இங்க்லிபிஸ்..):)
என்னை போய் இப்படி..:)

@ ஹாலி பாலி

//ஒரு வேளை வினோத்.. மானம் ரோசம் இருக்கற பையனா இருந்திருந்தா.. என்ன ஆகியிருக்கும் யோசிச்சிப் பாருங்க???//

விடுங்க விடுங்க..இதையெல்லாம் வெளியுல சொல்லிக்கிட்டு.(பப்ளிக்..பப்ளிக்)

@ Muniappan Pakkangal

Thanks Doctor..

@ தியாவின் பேனா

மறுபடியும் நன்றிங்க..:)