Thursday, December 24, 2009

முற்பகல் செய்யின்..

டிசம்பர் 23 காலை 6 மணி :

ஒரு நாளிதழ் : ஒரு பெண், ஒரு வாலிபர் அடித்து கொலை..கள்ளகாதல் காரணமா..சென்னையை சேர்ந்த வாலிபர் கைது.

டிசம்பர் 22 மாலை 6 மணி :

கேமராக்களில் இருந்து வெளிப்பட்ட பிளாஷ்க்கள் என் முகத்தில்ப்பட்டு கண்களை கூச செய்தன..உண்மையில் கண்களை மட்டும் அல்ல..விதியின் செயல் என்று கூச்சப்படாமல் என்னால் பொய் சொல்லமுடியவில்லை..விருப்பபட்டு செய்த காரியத்தின் விளைவுகள் விபரிதமாக போகும்பொழுது விதியின் மீது பழியை போட்டு செல்ல நான் விரும்பவில்லை.. ஆம் இது நான் விருப்பபட்டே செய்த கொலைகள் தான்..அதற்க்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராகி விட்டேன்.

டிசம்பர் 22 மதியம் 12:30 மணி :

எதிர்ப்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த என்னை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க வாய்ப்பில்லை..கற்பனை கூட செய்துப்பார்க்க முடியா காட்சியை அன்று நேரில் கண்டதும் என்னுள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கொலைவெறி..கையில் அப்பொழுது கிடைத்த அந்த இரும்பு தடியால் அவனை கண்மூடிதனமாக தாக்கினேன்..அவன் ரத்தவெள்ளத்தில் மிதக்கும் வரை..அடுத்து என் கோபமும் வெறியும் என் மனைவியின் மேல் சென்றது..உறைந்துப்போனஅவளை பேசுவதற்கு கூடவிடாமல் அவளையும் தாக்கினேன்..நிமிடங்கள் கரைந்தது..அங்கேயே மணிக்கணக்காக உக்கார்ந்து இருந்தேன்..போலீஸ் வந்து என் தோள்களை உலுக்கியப்பொழுது தான் மறுபடியும் சுயநினைவு வந்தது.

டிசம்பர் 10 இரவு 11:30 மணி :

ரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.

நவம்பர் 15 மதியம் :

தி.நகரில் அன்று சவாரிக்காக நின்றுகொண்டு இருந்தப்பொழுது தான் ஏரியா டாக்டரை எதிர்ப்பாராமல் சந்தித்தேன். சவாரியின் பொழுதே அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது..நான் இதுவரையில் 'எதிர்ப்பாராத' நடந்த சம்பவம் என்று நினைத்தது எதிர்பாராமல் நடந்தது இல்ல..அவள் வேண்டுமென்றே செய்துக்கொண்ட கருக்கலைப்பு தானென்று.இதைப்பற்றி அவளிடம் கேக்கலாமா.
ஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.

நவம்பர் 2 இரவு 8 மணி :

வீட்டுக்குள் நுழைந்தபொழுது அழுதுக்கொண்டு இருந்தாள்..என்னவென்று கேட்டபொழுது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அவள் 'கலைந்துவிட்டது' என்று சொன்னபொழுது..கொஞ்சம் நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்தினேன்..ஒருவேளை அன்று செய்த செய்கையின் வினையோ என்றுகூட யோசிக்க தோன்றியது.

செப்டம்பர் 4 :

அன்று தான் அந்த வீட்டுக்கு புதுசாக குடியேறி இருந்தேன்..வீடு என்று சொல்லமுடியாது வீட்டில் ஒரு பகுதி..நானும் அவளும் என்பதால் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளலாம் ஒன்றும் பிரச்னை இல்லை..மேல்வீட்டை மூன்றாக பிரித்து வாடகை விட்டு இருந்தனர். இன்னொரு குடும்பமும் இருந்தது. அப்புறம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பையன் ஒருவனும் தங்கி இருக்கிறான். அவனே வந்து முதல்நாள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். இடம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று தான் தோன்றுகிறது.

ஆகஸ்ட் 29 :

சென்னைக்கு வந்ததில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தெரிந்த நண்பன் ஒருவனின் அறையிலேயே கழித்துவிட்டோம்.அவனுக்கு எங்க கதை தெரியும் ஒன்னும் பிரச்னை இல்லை..அடுத்தமாதம் இந்த ஏரியாவிலியே வீடு கிடைத்துவிடும் என்று சொல்லி இருக்கான் பார்ப்போம்..எனக்கும் இந்த ஏரியா தான் ஆட்டோ சவாரிக்கு எல்லாம் வசதியாக இருக்கும்னுப்படுது.

ஆகஸ்ட் 3 இரவு 10:30 :

ரொம்பநேரம் நின்றுகொண்டு இருந்தேன் ஆரப்பாளையம் பஸ்-ஸ்டாப்பில்..நேரம் இப்பொழுதே பத்து ஆகிடுச்சு..ஒருவேளை எதாச்சும் பிரச்னை ஆகியிருக்குமோ..இருக்காது..ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..ஆனால் நான் எதிர்ப்பார்க்காமல் கையில் குழந்தையுடன் வந்து இருந்தாள்..அவக்கிட்ட 'நம்ம ஆரம்பிக்கப்போறது புது வாழ்க்கை, நீ எதுக்கு கையில் குழந்தையே வேற தூக்கிட்டு வந்த, புருஷனையே விட்டுட்டு வந்துட்ட அப்புறம் எதுக்கு குழந்தை வேற'.. என்று குழந்தையை பறித்தேன். அவளிடமும் எதிர்ப்பு இல்லை. இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.



46 comments:

நினைவுகளுடன் -நிகே- said...

மனிதம் அற்ற மனிதர்கள்
மண்ணில் வாழ்வதால்தான்
கடவுளே கண்திறக்க மறுக்கிறார் போலும்
சம்பவங்களை கோர்த்த விதம் அழகு

இராகவன் நைஜிரியா said...

அருமையான நடை. சொல்லியவிதம் ஈர்த்தது.

Anonymous said...

மனிதம் அற்ற மனிதர்கள்
மண்ணில் வாழ்வதால்தான்
கடவுளே கண்திறக்க மறுக்கிறார் போலும்
சம்பவங்களை கோர்த்த விதம் அழகு

AAM AAMOTHIKIREN

கலையரசன் said...

ஒரு கதையை எழுதி.. அதை தலைகீழா போட்டா????

பாராட்டுவோம்!

பாராட்டுவோம்!!

பாராட்டுவோம்!!!

கலையரசன் said...

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்...

கதை சூப்பரு விகொ!!

கண்ணா.. said...

அடப்பாவி எத்தனை பேருடா இப்பிடி கிளம்பி இருக்கீங்க.....


நல்ல வேலை இந்த கதைக்கு கலை,கிஷோர், கண்ணான்னு பேர் கொடுத்து கேவல படுத்தாம இருந்ததுக்கு... ரொம்ப நன்றிங்கோ....

Prabhu said...

எங்க வினோத்தா? நான் கிள்ளுறது எங்கம்மாவுக்கு வலிக்குது. நிஜம் தான்.

நல்லா இருந்துச்சுங்க!

Prabhu said...

அடிச்ச கமெண்ட் எங்க போச்சு?

Prabhu said...

மாடரேஷனா? ஓவரா இல்ல? கும்மி முடியாதே!

Prabhu said...

என்னவோ அவன் பொண்டாட்டியை பிக்கப் செஞ்ச மாதிரி ஃபீல் பண்ணுறான்.

பின்னோக்கி said...

வித்தியாசமான கதை சொல்லும் பாணி. குழப்பமில்லாமல் முதல் தடவை படித்தவுடனே புரிவதில் உங்களின் எழுத்தின் நேர்த்தி தெரிகிறது. அருமை.

Prathap Kumar S. said...

அப்பாடா எனக்கு கதை புரிஞசிடுச்சு... நல்லாருக்குப்பா...
தினத்தந்தி நிறையபடிப்பீங்களோ

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு இர்ரிவர்சிபல் ஞாபகம் வருது.. நல்லாயிருக்குப்பா..:-)))

kishore said...

சூப்பர் மச்சி.. உண்மையாவே செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்துச்சி.. [சொந்த வாழ்க்கைல இருந்து லீட் எடுத்தா சுவாரசியமாத்தான் இருக்கும் போல இருக்கு:) ]

வினோத் கெளதம் said...

@ நினைவுகளுடன் -நிகே

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

@ இராகவன் நைஜிரியா

நன்றி தல..

@ தமிழரசி

நன்றி தமிழ்..ஊர்ல தான் இருக்கிங்களா..அடிக்கடி எழுதுறது இல்லை..!!

Thenammai Lakshmanan said...

நிஜமாவே வினோத்தானா
அருமையா இருக்கு கதை
எழுத்தில் முதிர்ச்சி தெரியுது பாராட்டுக்கள் வினோத்

வினோத் கெளதம் said...

@ கலையரசன்

//பாராட்டுவோம்!//
//கதை சூப்பரு//

எதாச்சும் போதையில் இருக்கியா..!!

//விகொ//

வி கௌ..!

@ கண்ணா

//அடப்பாவி எத்தனை பேருடா இப்பிடி கிளம்பி இருக்கீங்க//

இப்போதைக்கு நான் ஒருத்தன் தான்..

//கலை,கிஷோர், கண்ணான்னு பேர் கொடுத்து கேவல படுத்தாம இருந்ததுக்கு... //

அட இது எனக்கு தோனவே இல்லை..ஆனா ரொம்ப கேவலமா இருந்து இருக்கும்..:)

வினோத் கெளதம் said...

@ pappu

//எங்க வினோத்தா?//

இல்லை அவரு ஊருக்கு போய் இருக்கார்..இவரு வேற..

//நான் கிள்ளுறது எங்கம்மாவுக்கு வலிக்குது. நிஜம் தான்.//

இப்படியே வீட்டுல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் கிள்ளி வைக்கப்போற..:)

//மாடரேஷனா? ஓவரா இல்ல? கும்மி முடியாதே!//

அது வேற ஒன்னும் இல்லை
Moderation ஒழுங்கா வேலை
செயுதானு பார்த்தேன்..

@ பின்னோக்கி

ரொம்ப நன்றி தல..

@ நாஞ்சில் பிரதாப்

புரிஞ்சுசினா சரி தான் :)
ஓஹோ இது தினத்தந்தி மேட்டர் இல்ல..:)

வினோத் கெளதம் said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//எனக்கு இர்ரிவர்சிபல் ஞாபகம் வருது..//

நான் இன்னும் பார்க்கல கார்த்தி ஆனா பார்க்கணும்..
நன்றி..:)

@ KISHORE

//சொந்த வாழ்க்கைல இருந்து லீட் எடுத்தா சுவாரசியமாத்தான் இருக்கும் போல இருக்கு//

ஆமாம் ஆமாம் சிதம்பரத்தில் உள்ள ஒரு நண்பனுக்கு கூட இதே மாதிரி ஆனா மாதிரி நியாபகம் இருக்கு..:)


@ thenammailakshmanan

//நிஜமாவே வினோத்தானா //

நானே நானே..
நன்றிங்க..:)

Prabhu said...

அது வேற ஒன்னும் இல்லை
Moderation ஒழுங்கா வேலை
செயுதானு பார்த்தேன்..///

ஆமா, மெக்கானிக் ஐயா சரி பார்க்கிறார். பாலா ப்ளாக் பக்கமே ஆளைக் காணோமே! வர வர மனுஷனைக் கும்மியில் காணக் கிடைப்பதில்லை.

வினோத் கெளதம் said...

ப்ளோரிடால மணி 4 PM இருக்குமா..தல இன்னிக்கு X-MAS Party இருக்குனு சொன்னுச்சு..
அதுக்கு போயிருப்பாரு..அது வேற இல்லாம Sherlock homes பார்த்துதாரனு தெரியுல..ஒரு வேலை அங்க போய் இருந்தாலும் இருக்கலாம்..
இரு நானும் ஹாலி பக்கம் வரேன்..டேய் மணி ஒன்னு ஆகுது ஆமாம் நீ என்ன பண்ணுற..!!

Prabhu said...

ஹி.. ஹி.. சும்மா தான்!

வினோத் கெளதம் said...

ஒரு மணிக்கு என்ன ஹி..ஹி..ஹி..

Prabhu said...

மீ கதை ரிலீசிங்! ரிசல்ட்?

வினோத் கெளதம் said...

எங்க உன் ஏரியால தான் இருக்கேன் புதுசா ஒன்னும் கண்ணுல படலையே..

Prabhu said...

இப்ப?

geethappriyan said...

இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.//

என்னக்கொடுமை இது?இவ்ளோ டெரரா இக்கே?

kishore said...

//நல்ல வேலை இந்த கதைக்கு கலை,கிஷோர், கண்ணான்னு பேர் கொடுத்து கேவல படுத்தாம இருந்ததுக்கு... ரொம்ப நன்றிங்கோ....//

யோவ்.. சும்மா இருக்குறவன நீயே சொறிஞ்சி விடுற..

வினோத் கெளதம் said...

@ கார்த்திக்கேயனும்

//என்னக்கொடுமை இது?இவ்ளோ டெரரா இக்கே?//

வன்முறை அதிகமா போய்டுச்சோ..!!

பாலா said...

யோவ்... நேரா எழுதுங்கய்யா..!! :)

முயற்சி ஓகே வினோத். ஆனா மெமண்டோவில்.. கதை இப்படி போகும்போது... ஒவ்வொரு முறை கதை மாறும்போதும்.. சஸ்பென்ஸ் இருக்கும். இதில் முதல்லயே அது போய்டுதுங்கறது மட்டும்தான் குறை.

அதுக்கப்புறம் சாதாரண கதை மாதிரி தெரிய ஆரம்பிச்சிடுச்சி.

கடைசி/முதல் முடிவு/ஆரம்பத்தைத் தவிர!!! :) :) :)

இதுக்கு முன்னாடி எழுதின கதையை அப்படியே டீல்ல விட்டுட்டீங்களே.

பாலா said...

நிறைய பேரை ஃபாலோ பண்ணுறேனா.. ஒவ்வொரு நாளும் 70-80 புதுப் பதிவு இருக்கும். ஸ்கொர்ல் பண்ணும்போது.. மிஸ் பண்ணிடுறேன்.

ரியல்லி சாரி!!!!!!!!!!

வினோத் கெளதம் said...

//ஆனா மெமண்டோவில்.. கதை இப்படி போகும்போது... ஒவ்வொரு முறை கதை மாறும்போதும்.. சஸ்பென்ஸ் இருக்கும். இதில் முதல்லயே அது போய்டுதுங்கறது மட்டும்தான் குறை.//

தல என் கதைய மெமெண்டோ அளவுக்கு பேசுறிங்களே..அழுகாச்சியா வருது..:)
இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணுறேன்..

//இதுக்கு முன்னாடி எழுதின கதையை அப்படியே டீல்ல விட்டுட்டீங்களே.//

அது வேற மாதிரி யோசிச்சேன்..இருந்தாலும் ஒழுங்கா வரல..கண்டிப்பா எழுதிடுறேன்..

//நிறைய பேரை ஃபாலோ பண்ணுறேனா.. ஒவ்வொரு நாளும் 70-80 புதுப் பதிவு இருக்கும். ஸ்கொர்ல் பண்ணும்போது.. மிஸ் பண்ணிடுறேன்.//

உங்க கஷ்டம் எனக்கு தெரியும்..;)
இல்லை இதுக்கு உங்க கம்மென்ட் இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைத்தேன்..
இதுக்கு எதுக்கு சாரி..உங்களுக்கு நேரம் கிடைக்கும்ப்பொழுது வந்தால் போதும்..

geethappriyan said...

அடடே மிஸ்பண்ணிட்டேனே,
இப்போ வாக்களித்துவிட்டேன்

பா.ராஜாராம் said...

:-)

சென்ஷி said...

நல்லாருக்குது மாம்ஸ்..

☀நான் ஆதவன்☀ said...

கலக்கிட்ட மாம்ஸ் :) தெரிந்த யுக்தி ஆனாலும் கதை சொன்ன நேர்த்தி பிடிச்சிருக்கு.

வினோத் கெளதம் said...

@ கார்த்திக்கேயனும்..

//அடடே மிஸ்பண்ணிட்டேனே,
இப்போ வாக்களித்துவிட்டேன்//

ரொம்ப பாஸ்ட் நீ..:)

@ பா.ராஜாராம்

நன்றி தல..:)

@ சென்ஷி..

நன்றிப்பா..

@ ☀நான் ஆதவன்☀..

நன்றி சூர்யா..

வால்பையன் said...

இருக்கலாம்!

Thenammai Lakshmanan said...

வினோத் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

@ வால்பையன்..

//இருக்கலாம்!//

வால்ஸ்..என்ன இருக்கலாம்..!! கிஷோர் கதையா கூட இருக்கலாம்னு சொல்லுறிங்களா..

@ thenammailakshmanan

புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
வாழ்த்துக்கள் கொஞ்சம் சீக்கிரமா இருக்கு ஊருக்கு போறிங்களா.!

நாட்டாமை விஜயக்குமார் said...

நாட்டாமை நான் இங்க இருக்குறப்ப, என்னை கேக்காம யாருடா கமெண்டை டெலீட் பண்ணது?

Thenammai Lakshmanan said...

இங்கதான் சுத்திகினே இருக்கேன்

விட்டுப் போயிரக்கூடாதுன்னு ஒரு வாரம் மின்னாலேர்ந்து ஒவ்வொருத்தருக்கா வாழ்த்து சொல்லிகினு இருக்கேன் வினோத்

நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வினோத் கெளதம் said...

@ thenammailakshmanan
@ நேசமித்ரன்..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..:)

அன்புடன் மலிக்கா said...

சூப்பர், மிக தெளிவான கருத்துக்களை சொல்லிய விதம் அருமை..
சம்பவங்களை கோர்த்த விதமும் அழகு.

http://niroodai.blogspot.com

வினோத் கெளதம் said...

@ அன்புடன் மலிக்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..:)