Wednesday, December 16, 2009

பாசில் ..(பாகம்-1 )

தமிழ் படங்களில் எத்தனை படங்கள் காதலை மையப்படுத்தாமல் நம் மனதை விட்டு அகல மறுக்கும் திரைப்படங்களாக வந்து உள்ளன என்று தெரியவில்லை. அப்படியே வந்து இருந்தாலும் ரசிக்கும் விதத்தில், ஜனரஞ்சகமாக, மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தில் இருந்து ஓடிய படங்கள் குறைவு தான். அப்படி தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் காதலை மட்டும்மெயின் தீமாக எடுத்துக்கொள்ளாமல்..ஆனால் படத்தோடு நம்மை உணர்வுபூர்வமாக ஒன்றசெய்து தனக்கென ஒரு தனி பாணியை ஏற்ப்படுத்திக்கொண்டவர் 'டைரக்டர்' பாசில். மலையாளப்பட இயக்குனரான இவர் தமிழில் பிரவேசம் செய்தது "பூவே பூச்சுடவா" முலமாக. இவர் தமிழில் இயக்கிய படங்கள் முக்கால்வாசி இவரே ஏற்கனவே மலையாளத்தில் இயக்கியதாக தான் இருந்தது ஒருசில படங்கள் தவிர்த்து.ஆனால் இவர் தமிழில் அதை கொடுத்தப்பொழுது அதை தமிழ்படுத்துக்கிறேன் பேர்வழி என்று அதன் ஜீவனை கெடுக்காமல் அழகாக தமிழ் சமுதாயத்திற்கு எற்றமாதிரியே படத்தினை அளித்தார்.

http://4.bp.blogspot.com/_0QqUGZQM3vA/Srn7ghnKciI/AAAAAAAABT0/UxF5mxvfTWc/s400/fazil.jpg

அதற்கு காரணம் தமிழிலும் அவரே இயக்கியதால் கூட இருக்கலாம்..அநேகமாக எந்த தயரிப்பாளரும் அவருடுய பணியில் குறுக்கிடாத காரணத்தினால் அவரால் சுதந்திரமாக செயல்ப்பட்டிருக்க முடியும். மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் வெற்றிக்கரமாக இருந்த ஒரே இயக்குனர் இவராக தான் இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். தமிழில் அவருக்கு பிரமாதமாக எல்லாம் படங்களிலும் கைகொடுத்தவர் 'இசைஞானி' இளையராஜா( ஒரு நாள் ஒரு கனவு படம் தவிர்த்து). பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசை ஆகட்டும் ராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார். இன்று அளவும் அந்த படங்களை நம் தொலைக்காட்சியில் பார்கும்ப்பொழுது அந்த இசை நம்மை அப்படியே உருக்கும். அதே மாதிரி பாசில்க்கு என்று தனியாக ஒரு நடிகர் பட்டாளம் தமிழில் அமைந்தது அல்லது அவர் தேர்வு செய்தார். சத்யராஜ், ஜனகராஜ்
, வீ.கே.ராமசாமி இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர்.

மலையாளத்தில் 'மஞ்சில் விரிந்த பூக்கள்' தான் இவர் இயக்கிய முதல் படம். மோகன்லாலை அந்த படத்தின்
மூலம் அறிமுகப்படுத்தியவர்.
இன்று அளவும் இவருடுய பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சந்திரமுகியின் ரியல் வெர்ஷனான 'மணிசித்திரதாழ்' இவர் இயக்கியது தான். தமிழில் இவர் இயக்கிய படங்கள்..

பூவே பூச்சுடவா (1985 ) :

ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசப்பிணைப்பை மிக மிக அருமையாக சொன்ன படம். நகைச்சுவையோடு கலந்து அந்த உணர்ச்சி போராட்டதையும் அழகாக படமாக்கி இருப்பார். அதுவும் நதியா, எஸ்.வீ.சேகர், சார்லி, வீ.கே.ராமசாமி மற்றும் அந்த சின்ன பசங்க காமெடியில் கலக்கி இருப்பார்கள். இறுதிக்காட்சிகளில் மனம் கனத்துப்போகும். இந்தப்படத்தின் மூலம் நதியாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாசில். இதே கேரக்டரை மலையாளத்திலும் நதியா&பத்மினியே பண்ணி இருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு நதியாவிற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு நாம் அறிவோம்.ராஜாவின் உருக்கும் இசை இந்த படத்தில் பாசில்க்கு பேருதவியாக இருந்தது.
நல்லதொரு சித்திரம்.

பூவிழி வாசலிலே (1987 ) :

தமிழில் வந்த மிகசில "திரில்லரில்" இந்த படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. தன் தாய் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த வாய்பேச முடியாத, காது கேளாத ஒரு குழந்தை. அந்த குழந்தையை 'எதேச்சையாக' எடுத்து வளர்க்கும் ஒருவன், அந்த குழந்தை எங்கே சாட்சியாக மாறிவிட போகிறதோ என்று அந்த குழந்தையை அவனிடம் இருந்து 'மீட்க' நினைக்கும் கொலையாளிகள். இது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதம்..கடைசி வரை என்ன ஆகபோகிறதோ என்று ஒரு 'பதைபதைப்பு' இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அந்த குழந்தையின் நடிப்பு எளிதில் மறக்க முடியாத ஓன்று.(சுஜி?!). இளையராஜாவின் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களோடு வந்து இருக்கும். இதில் சிறிதாக ஒரு காதலை சொல்லி இருப்பார் பாசில். ஆனால் கிளைமாக்ஸ்ல் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து இருக்கலாம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( 1988 ) :

இந்த பதிவை எழுததூண்டிய படம். இன்றளவும் அந்த படத்தை பார்க்கும்பொழுது நம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது .
தன் குழந்தை இறந்தப்பிறகு ஒரு சிறுமியை ஆஸ்ரமத்தில் இருந்து தத்தெடுக்கும் ஒரு பெற்றோர். அதன்ப்பிறகு அந்த சிறுமியை எதிர்பாராதவிதமா பிரிந்து சென்ற தாயை அந்த பெற்றோர்கள் சந்திக்க நேரிடும்ப்பொழுது நடக்கும் உணர்சிப்போரட்டங்கள் தான் படம்.
சத்யராஜ் முதற்கொண்டு அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் ரகுவரன் குறைந்த காட்சிகளே வந்தாலும் கலக்கி எடுத்திருப்பார் மனிதர். ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமாக இழந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
இந்தப்படத்திலும் ராஜாவின் இசை நம்மை கலங்க செய்து இருக்கும்..

(தொடரும்)

34 comments:

சென்ஷி said...

அருமையான ஆரம்பம் வினோத்.. இவரது புகைப்படம் ஒன்றுகூட பத்திரிக்கையில் பார்க்காமல் இவர் எப்படி இருப்பாரென்ற ஆவலில் காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளிவரும் வரை அலைந்தது உண்டு. கண்ணுக்குள் நிலவு படத்திற்கான சிறப்புப் பேட்டியில் இவரது புகைப்படம் பார்த்த ஞாபகம். மிகச்சிறந்த இயக்குனர்.

KISHORE said...

அழகான பார்வை.. பாசில்.. நெகிழ வைக்கும் கதைகளத்தில் மனதை வருடும் காதலை மெல்லியதாக சொல்வதில் அவருக்கு நிகர் அவரே..

மூன்று படங்களும் தனி தனி முத்திரை படைத்தவை.. இருந்தாலும் நான் மிகவும் ரசித்தது . "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
சுகாசினி குழந்தைய ரேகாவிடம் விட்டு செல்லும் காட்சியில் சுகாசினி சத்யராஜிடம் பேசும் வசனங்கள் .. தாய்மையின் வலியை அழகாக சொல்லி இருப்பார். ஹீ இஸ் ரியல்லி கிரேட்..
அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்கிறேன்.

shabi said...

கனகராஜ்..../// இல்ல ஜனகராஜ்

நாஞ்சில் பிரதாப் said...

தல சூப்பர் ஆரம்பம்தான். பாசில் மிகச்சிறந்த இயக்குனர் இவரது படங்களில் ரொம்ப பிடித்தது பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பிடிக்காதது ஒருநாள் ஒரு கனவு, பாசில் இயக்கிய படமான்னு கேள்விகேட்க வைத்த்து அப்படி ஒரு மொக்கை. கிளிபேச்சுகேட்கவா கூடநல்லாருக்கும் ஆனா சரியா போகல... ஆரம்பிங்க..

pappu said...

பூவிழி வாசலிலே (1987 )////

ஆல்டைம் பேவரைட்.

அப்புறம் அரங்கேற்ற வேளை- சொல்லவே தேவையில்லை.

காதலை மற்றும்/// மட்டும் பாஸ்! :)

என்ன, எல்லாரும் இப்படி இறங்கிட்டோம்!

பா.ராஜாராம் said...

அருமையாய் பிரசன்ட் பண்றீங்க வினோ.ஆதர்ச இயக்குனரும்.தொடரட்டும்.

வினோத்கெளதம் said...

@ சென்ஷி

நன்றி சென்ஷி..

//கண்ணுக்குள் நிலவு படத்திற்கான சிறப்புப் பேட்டியில் இவரது புகைப்படம் பார்த்த ஞாபகம்.//

காதலுக்கு மரியாதையை சமயத்திலேயே அவரது புகைப்படங்கள் கொஞ்சம் பரிச்சயம்.

@ KISHORE

நன்றி கிஷோர்..

//சுகாசினி குழந்தைய ரேகாவிடம் விட்டு செல்லும் காட்சியில் சுகாசினி சத்யராஜிடம் பேசும் வசனங்கள் .. தாய்மையின் வலியை அழகாக சொல்லி இருப்பார்.//

ஆமாம் நெகிழ வைக்கும் காட்சி அமைப்பு..அதுவும் அந்த "பைனல் டச்" ராஜா இசை..கிளாசிக்கல்.

@ shabi

நன்றி ஷாபி..மாற்றி விட்டேன்..

வினோத்கெளதம் said...

@ நாஞ்சில் பிரதாப்

நன்றி பிரதாப்..

//பிடிக்காதது ஒருநாள் ஒரு கனவு, பாசில் இயக்கிய படமான்னு கேள்விகேட்க வைத்த்து அப்படி ஒரு மொக்கை. //

ஆமாம் செம்ம மொக்கை..நான் பார்க்கவே இல்லை..
இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்..

//கிளிபேச்சுகேட்கவா கூடநல்லாருக்கும் ஆனா சரியா போகல... ஆரம்பிங்க..//

ஆமாம்..கிளிபேச்சுகேட்கவா கூட பார்க்குற மாதிரி தான் இருக்கும்..Not bad.அதுவும் 'சிவகாமி நினைப்பினிலே' பாடல் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது..

@ pappu

//அப்புறம் அரங்கேற்ற வேளை- சொல்லவே தேவையில்லை.//

ஆமாம் செம காமெடி..இந்தியில் கூட அந்த அளவுக்கு இல்லை..தமிழில் பட்டைய கிளப்பிருக்கும்..

//காதலை மற்றும்/// மட்டும் பாஸ்!/

மாத்திடேன்..மாத்திடேன்..:)

//என்ன, எல்லாரும் இப்படி இறங்கிட்டோம்!//

சினிமாவை பத்தி எழுதுறதுக்கு சுவாரஸ்யமா இருக்கு இல்ல..:) (ஹாலி பாலியின் பாதிப்போ !! )

@ பா.ராஜாராம்

நன்றி தல..என்னோட பிடித்த இயக்குனர்களில் ஒருவரும் கூட..:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

மிக நல்ல இடுகை குரு.
இவரின் எல்லா படமும் எனக்கு பிடிக்கும்,இசைஞானி இவருக்கு மிகவும் ஸ்பெஷலாக இசைஅமைப்பார்.
நல்ல கதையமைப்பு இருக்கும்.

ஹாலிவுட் பாலா said...

இவர் ஒவ்வொரு படத்திலும்... ஒரு ‘பொருளை’ முக்கிய விஷய்மா உபயோக்கிப்பார்.

முன்னாடி... மிகச் சிறந்த இயக்குனராய் பார்த்து..., இப்பொழுது பொம்முக் குட்டி & பூவிழி வாசலிலே தவிர.. மத்த எந்தப் படங்களும்.. வேலைக்காகாதுன்னு தோணுது.

இப்பல்லாம் காதலுக்கு மரியாதையை பார்த்தா... பாஸில் மேல மரியாதை வர மாட்டேங்குது! :) :) :)
=====

ஆனாலும்.. தன்னுடைய கதையையே... எந்த அளவுக்கு வேணும்னாலும்.. ‘கெடுத்து’, அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாத்தி... எடுப்பதற்கு இவர் தயங்கினதே இல்லை. வருஷம் 16 ஒரு உதாரணம்.

அடுத்த பதிவில் நீங்க எழுதப் போகும் படத்தையெல்லாம் இங்கேயே குறிப்பிட்டுட்டேன். ஸாரி.

கண்ணா.. said...

சும்மா கலக்கறே வினோத்து,


நான் 1993 அல்லது 1994 திருவனந்தபுரத்தில் இவரது மணிசித்ரதாழ் பார்த்து இவரின் பரம விசிறி ஆனேன்..

ஆனால் சந்திரமுகி பார்த்துவிட்டு அதைபார்த்தால் கதை மிகவும் கெடாமல் எவ்வளவு கமர்ஷியல் சேர்த்திருக்கலாம் எனத்தோன்றியது.

பாசிலை பொறுத்தவரை அவரது கதைக்கு கமர்ஷியல் வேல்யூவை விரும்புவராகத்தான் அவரது படங்கள் காட்டுகிறது.


ராஜாவின் இசையை பற்றி பேசினால் பேசி கொண்டே இருக்கலாம்.. ஒரு நாள் ஒரு கனவிலும் “காற்றில் வரும் கீதமே.....” வில் கலக்கி இருப்பார்.

thenammailakshmanan said...

பாசிலை கேரள பாக்கிய ராஜ் என்றும் சொல்வார்கள் வினோத்

எனக்கு இந்த ரெண்டு படங்களுமே பிடிக்கும் நிறைய யதார்த்தம் இருக்கும்

அதுவும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்

ரகுவரன் நடிப்பு அருமை அவர் சொல்லும் ஒரு வசனம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கு

"என் மெர்ஸிக்கு நான் கர்த்தர் கொடுத்த கணவனாய் இருக்கணும்"

வினோத்கெளதம் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

நன்றி குரு..ஆமாம் இவரடோய எல்லா படங்களும் நல்ல கதையம்சம் உள்ள படமாக இருக்கும்..வீட்டில் இப்பொழுது டிவியில் ஒளிபரப்பினால் கூட குடும்பத்துடன் பார்க்கலாம்..சொன்ன மாதிரி ராஜாவுக்கு இவர் எப்பொழுதும் ஸ்பெஷல் தான்.

@ ஹாலிவுட் பாலா

//இவர் ஒவ்வொரு படத்திலும்... ஒரு ‘பொருளை’ முக்கிய விஷய்மா உபயோக்கிப்பார்.//

அது என்ன பொருள் தல..!!

//இப்பொழுது பொம்முக் குட்டி & பூவிழி வாசலிலே தவிர.. மத்த எந்தப் படங்களும்.. வேலைக்காகாதுன்னு தோணுது.//

மற்ற படங்கள் சரி..பூவே பூச்சுடவா கூட இல்லையா..

//இப்பல்லாம் காதலுக்கு மரியாதையை பார்த்தா... பாஸில் மேல மரியாதை வர மாட்டேங்குது//

தல நிறையா படங்கள் அந்த காலத்தோடு பார்க்கும் பொழுது நமக்கு பிடிச்சு இருக்கும்..ஆனா ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்க்கும் பொழுது இந்த படத்தையா அப்ப ரசிச்சு பார்தோம்னு நினைப்போம்..(sum exceptions r thr) இப்ப நமக்கு பிடிக்கிற படம் கூட பின்னொரு காலத்தில் 'இதெல்லாம் ஒரு படமா' என்று நினைக்க கூடிய வாய்ப்பு உண்டு..அப்ப உங்களக்கு 'காதலுக்கு மரியாதையை' பிடிக்காமல் போய் இருந்தால் தான் ஆச்சரியம்.

//ஆனாலும்.. தன்னுடைய கதையையே... எந்த அளவுக்கு வேணும்னாலும்.. ‘கெடுத்து’, அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாத்தி... எடுப்பதற்கு இவர் தயங்கினதே இல்லை. வருஷம் 16 ஒரு உதாரணம்.//

வருஷம்16 மலையாளத்தில் சில காட்சிகள் பார்த்து உள்ளேன்.. ஆனால் தமிழில் பார்த்து விட்டு மலையாளத்தில் பார்க்கும் பொழுது பொறுமையை சோதிக்கும் விதமாக உள்ளது.
எனக்கு "சந்திரமுகியே" ரொம்ப பிடித்து இருந்தது..மணிசித்ரதாழ் சில காட்சிகள் பார்த்து உள்ளேன்..மலையாளத்தில் அந்த Creamy look கொஞ்சம் கம்மி தான்..(அதுசரி மலையாளத்தை பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் எப்படி குறை சொல்லுவிர்கள் :) ;0)

//அடுத்த பதிவில் நீங்க எழுதப் போகும் படத்தையெல்லாம் இங்கேயே குறிப்பிட்டுட்டேன். ஸாரி.//

தல யாருக்கும் தெரியதாதா என்ன..;)

@ கண்ணா..

//நான் 1993 அல்லது 1994 திருவனந்தபுரத்தில் இவரது மணிசித்ரதாழ் பார்த்து இவரின் பரம விசிறி ஆனேன்.. //

அங்க என்ன பண்ணிங்க..!!

//ஆனால் சந்திரமுகி பார்த்துவிட்டு அதைபார்த்தால் கதை மிகவும் கெடாமல் எவ்வளவு கமர்ஷியல் சேர்த்திருக்கலாம் எனத்தோன்றியது.//

absolutely rite..

//பாசிலை பொறுத்தவரை அவரது கதைக்கு கமர்ஷியல் வேல்யூவை விரும்புவராகத்தான் அவரது படங்கள் காட்டுகிறது.//

ஆமாம். ஆனா தமிழ்ல முடிந்த வரைக்கும் 'கொச்சைப்படுத்தாமல்' சில Commercial elements சேர்த்து உள்ளார்..

//ஒரு நாள் ஒரு கனவிலும் “காற்றில் வரும் கீதமே.....” வில் கலக்கி இருப்பார்.//

ஆமாம் நல்ல பாட்டு இல்ல அது..ஆனால் 'முகங்கள்' அன்னியமாக இருக்கும் .

வினோத்கெளதம் said...

@ thenammailakshmanan ..

//பாசிலை கேரள பாக்கிய ராஜ் என்றும் சொல்வார்கள் வினோத் //

பாலச்சந்திர மேனன்..!!!

//ரகுவரன் நடிப்பு அருமை அவர் சொல்லும் ஒரு வசனம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கு

"என் மெர்ஸிக்கு நான் கர்த்தர் கொடுத்த கணவனாய் இருக்கணும்"//

ரகுவரன் கலக்கி இருப்பார் இல்ல..அன்னிக்கு இந்த படத்தை Zee tamilல பார்க்கும்பொழுது கூட ரகுவரன் எப்பொழுது வருவார் என்று தான் ஆர்வமாய் இருந்தேன்.. பட்..இப்ப அந்த மனிதர் இல்லையே என்று நினைக்கும் பொழுது தான் :((

கலையரசன் said...

நான் குளத்தில் குளிக்க போனா எங்க சித்தி.. "டேய்! படியில இறங்குபோது பாத்து இறங்கு.. "பாசில்" இருக்கும் -ன்னு சொல்லுவாங்க.. அந்த பாசிலை பத்தியா எழுதியிருக்க?

இது.... அடுத்த பாகம் வரை வழுக்குமா?

வரதராஜலு .பூ said...

ஆரம்பம் நன்றாகவே உள்ளது.

நீஙகள் குறிப்பிட்டதில் பூவிழி வாசலிலே மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன். செம த்ரில்லர். மற்றவை இரண்டையும் எப்பொழுதாவது கேபிள் டீவியில் கொஞ்சம் கொஞ்சம் பாத்துள்ளேன். முழு படம் இன்றுவரை பார்த்தது இல்லை.

வரதராஜலு .பூ said...

விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல ஆரம்பம் :)

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க வினோத்

அடுத்த முயற்சி சிறப்பா எழுதியிருக்கீங்க..!

பாசில் எனக்கும் ரொம்ப பிடித்த டைரக்டர்...அவரோட மவுனமான வசனங்கள் படம்பிடிக்கும் வித்தை என் பொம்முகுட்டி அம்மாக்கு படத்தில் அந்த குழந்தையின் நடிப்பில் தெரியும்

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

-:))))

கண்ணா.. said...

//பிரியமுடன்...வசந்த் said...


அவரோட மவுனமான வசனங்கள்//

என்னாது... மவுனமான வசனங்கள்..ளா.......

வசந்த் நீங்க இந்த இளக்கியவாதிகள், பின்நவீனத்துவவாதிகள் கூடல்லாம் ரொம்ப பழக்கம் வச்சுக்காதீங்க..

:)

கோபிநாத் said...

மச்சி என்டா ஆச்சு....இப்படி கலக்கு கலக்குன்னு கலக்குற ;)))

அட்டகாசமான பதிவு மச்சி ;)

பாசில் அவர்களை பற்றி நீ சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் வழிமொழிக்கிறேன்.

இந்த இதை நேரம் கிடைக்கும் போது கேளு...இந்த தொகுப்பில் நிறைய இசை பாரு மச்சி ;)

இவர் படங்களில் என்னை பொறுத்த வரை முதல் இடம் பூவே பூச்சுடவா தான்.அப்படி ஒரு கதை களத்தை இனிமேல் யாராலும் படமாக்குவது மிகவும் கடினமான ஒன்று.

பூவே பூச்சுடவா

http://www.youtube.com/watch?v=oPzH_TD324M

கோபிநாத் said...

இவர் படங்களில் இசைஞானியின் உழைப்பை கூட பல பதிவுகள் எழுதலாம். அப்படி ஒரு அருமையான பாடல்கள் பின்னானி இசையும் கொடுத்திருப்பாரு ராஜா இவருக்கு.

வாழ்த்துக்கள் மச்சி ;)

tamiluthayam said...

பாசில்... மறக்க முடியாத, மறக்க கூடாத இயக்குனர்.

வினோத்கெளதம் said...

@ கலையரசன்

//இது.... அடுத்த பாகம் வரை வழுக்குமா?//

நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு நாளு தூங்கமாட்ட டோய்.. :)

@ வரதராஜலு .பூ

//முழு படம் இன்றுவரை பார்த்தது இல்லை.//

நன்றி தல..நேரம் கிடைக்கும்பொழுது பாருங்கள் அருமையான படங்கள்..

@ ☀நான் ஆதவன்☀ ..

//நல்ல ஆரம்பம் :)//

மச்சி தெளிவா இருக்கும்போது போட்ட கம்மென்ட் தானே :)

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்

நன்றி வசந்த்..
உனக்கு காதலுக்கு மரியாதை ரொம்ப பிடித்து இருக்குமே இவரோட இயக்கத்தில்..எத்தனை தடவை பார்த்த..:)

@ [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]

நன்றி மச்சி ..

@ கண்ணா..

//வசந்த் நீங்க இந்த இளக்கியவாதிகள், பின்நவீனத்துவவாதிகள் கூடல்லாம் ரொம்ப பழக்கம் வச்சுக்காதீங்க..//

ஆமாம் ஆமாம்..பழக்கம் வழக்கம் எல்லாம் பார்த்து இருக்கணும் சொல்லிப்புட்டேன்..:)

வினோத்கெளதம் said...

@ கோபிநாத்

நன்றி மச்சி..
இன்னிக்கு தான் உன்னை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

//இந்த இதை நேரம் கிடைக்கும் போது கேளு...இந்த தொகுப்பில் நிறைய இசை பாரு மச்சி ;)//
ஆமாம் இல்ல ராஜாவோட BGM எல்லாம் சான்சே இல்ல பின்னி எடுத்து இருப்பார் மனிதர்..

//அப்படி ஒரு கதை களத்தை இனிமேல் யாராலும் படமாக்குவது மிகவும் கடினமான ஒன்று. //
ஆமாம்..அப்படி ஒரு கதைகளத்தை படமாக்க ஒரு தைரியம் வேண்டும்..ஏன் என்றால் வணிகரீதியாக சரிப்பட்டு வராது.

ஆமாம் மச்சி ராஜாவின் இசையில் இவரின் படங்களை பற்றியே தனியாக ஒரு பதிவு போடலாம்..அவ்வளவு அற்புதமான இசையை தந்து இருப்பார்..அந்த லிங்க் சான்சே இல்ல..அருமை.

@ tamiluthayam ..

நன்றிங்க வருகைக்கு..;)

மகா said...

நல்ல பதிவு ... வாழ்த்துக்கள் .....

Raji said...

Arumaiyaana pathivu. Padithu mudipatharkul, en ilam vayathinul senru vitten.

வினோத்கெளதம் said...

@ மகா

நன்றி மகா..வருகைக்கும் வாழ்த்துக்கும்..

@ Raji..

நன்றி raji வருகைக்கு.

Muniappan Pakkangal said...

Fazil is a nice creator,you are providing much info abt him Vinoth Gowtham.

வினோத்கெளதம் said...

Thanks Doctor..:)

நாடோடி இலக்கியன் said...

அருமையான பதிவுங்க.

ஃபாசிலின் பெரும்பான்மையானப் படங்களில் அன்பு என்பதைவிடவும் பாசம் என்கிற உணர்வு மேலோங்கி நிற்கும்.

ஃபாசில் இயக்கிய பூவிழி வாசலிலே,என் பொம்மு குட்டி அம்மாவுக்கு இரு படங்களிலும் சிறிதும் மிகை நடிப்பில்லாத சத்யராஜை ரசிக்கலாம்.

என்டே மாமாட்டு குட்டியம்மேக்கு மலையாள வர்ஷனிலும் பாட்டுகள் அசத்தல் ரகம்.

பூவே பூச்சூட வாவின் மலையாள வெர்ஷன் ”நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு”வில் மோகன்லால்(எஸ்.வி.சேகர் கேரக்டர்) செம்ம காமெடி பண்ணியிருப்பார்.

நான் எழுத நினைத்திருந்த விஷயம்(வட போச்சே)

வினோத்கெளதம் said...

//ஃபாசில் இயக்கிய பூவிழி வாசலிலே,என் பொம்மு குட்டி அம்மாவுக்கு இரு படங்களிலும் சிறிதும் மிகை நடிப்பில்லாத சத்யராஜை ரசிக்கலாம்.//

அதே தான்..அந்த காலகட்டத்தில் சத்யராஜை இவர் எப்படி சரியாக இந்த படங்களுக்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சரியம்..
சத்யராஜ் இரண்டு படங்களிலும் அசத்தி இருப்பார்..

//என்டே மாமாட்டு குட்டியம்மேக்கு மலையாள வர்ஷனிலும் பாட்டுகள் அசத்தல் ரகம்.

பூவே பூச்சூட வாவின் மலையாள வெர்ஷன் ”நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு”வில் மோகன்லால்(எஸ்.வி.சேகர் கேரக்டர்) செம்ம காமெடி பண்ணியிருப்பார்.//

இந்த இரண்டு படங்களும் மலையாளத்தில் கொஞ்சம் கொஞ்சம் பார்த்து இருக்கிறேன்..மோகன்லால் காமெடி காட்சிகளையும் பார்த்து உள்ளேன்..நன்றாக பண்ணி இருப்பார்..

//நான் எழுத நினைத்திருந்த விஷயம்(வட போச்சே)//

தல மலையாளத்தில் பாசில் திரைப்படங்கள் பற்றி ஒரு பதிவு எழுதி விடுங்கள்..:)