Sunday, November 15, 2009

திங்கள் இனிதே -3

அண்ணன் கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
....................................................................................................................................................................

ஒரு இருபது நாளுக்கு மேலேயே அலுவலகத்தில் இணைய தொடர்பு இல்லை கொஞ்சம் பிரச்னை. ஆனா பாருங்க இப்ப தான் வேலை எல்லாம் ஒழுங்கா செய்யுற மாதிரி ஒரு ஃபீலிங்..இதுவும் நல்லா தான் இருக்கு(டேய் கதை விடுறியா அப்படின்னு சொல்றது காதுல கேக்குது) அப்ப அப்ப வீடியோ கேம்ஸ் விளையாதடறோடு சரி. ரூம்க்கு வந்து அதுக்கப்புறம் முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடித்து விட்டு தூங்குவதற்கு 12 மணி ஆகுது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூக்கம்.(ஏழு மணி நேரத்துக்கு குறைவா தூங்குற தூக்கம் எல்லாம் தூக்கமே இல்லைங்க அப்படி என்ன பெருசா சாதிக்க போறோம்) இப்பயும் 24 மணி நேரமும் இந்த கணினியை கட்டிக்கொண்டு அழுவதைப்போல் ஒரு ஃபீலிங். ஊரில் இருந்தப்பொழுது வெறும் டிவி பார்ப்பதோடு சரி இங்க வந்து கிட்டதட்ட இதுக்கு(கணினி) கொஞ்சம் 'அடிக்ட்' ஆனா மாதிரியே இருக்கு.ஆனாலும் வேறு வழி இல்லை. என்னை கேட்டா நான் இதை தான் "இடியட் பாக்ஸ்" என்பேன்.
....................................................................................................................................................................

தினம் இரவு 11:30 மணிக்கு(இந்திய நேரம்) ..வசந்த் டீவியில் "ரகசிய கேள்விகள்" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகின்றது. Dr.காமராஜ் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்..
அவ்வளவு உபயோகமாக இருக்கின்றது. கண்டிப்பாக நேரம் கிடைத்தால் பாருங்கள் தனியாக.கல்யாணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. எவ்வளவோ தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வாரம் "இன்டர்நெட்டால் எவ்வாறான பிரச்சனைகள்" டீன்-ஏஜ் பசங்களுக்கு ஏற்ப்படுகின்றது என்பதை பற்றிய டாபிக்.ஆனால் டாபிக் அது சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை..நீங்களே பார்த்த தெரிஞ்சிங்க.

அவர் சொன்ன ஒரு விஷயம்..

"குழந்தை இல்லை என்ற பிரச்னை என்றால் பெண்களையும், "உறவு" சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்..இது ஒரு மாதிரி 'ட்ரிக்கி'யான விஷயம்"..எந்த பிரச்னை என்றாலும் இருவரும் சேர்ந்தே வர வேண்டும்"..என்றார். யோசிச்சிப்பார்தால் அப்பட்டாமான உண்மை தான்.
....................................................................................................................................................................
நாணயம் ட்ரைலர் பார்த்தேன். மேக்கிங் அசத்தி இருக்கிறார்கள்..எதோ ஒரு ஆங்கில படம் உல்ட்டா மாதிரி தெரிஞ்சாலும்..பார்க்க நல்லா இருக்கு..எப்படி இருந்தாலும் படம் வெளியே வந்தப்பிறகு நம்மோட சில பதிவர்கள் அந்த படத்தை கிழிகிழி என கிழித்து காயப்போட்டு தொங்கவிட்டு அது என்ன "ஆங்கில படம்" என்று சொல்வார்கள் அப்பொழுது தெரிந்துக்கொள்கிறேன். S.P சரண் ஓரளவு வித்தியாசமான கதை களத்தையே தேர்ந்து எடுத்து படம் பண்ணுகிறார்.


.......................................................................................................................................................................

இது ஒரு பதிவர் பற்றிய "புதிர்" மாதிரி சின்னதா ஒரு "ட்ரை"..வார வாரம் எழுதுலம்னு இருக்கேன்..என்னா மேட்டர்ன்னா அது யார்னு நீங்களே கண்டுப்பிடிச்சிக்க வேண்டியது தான்..

CATக்கு படிக்கிறேன்னு சொல்லுவாரு
ஆனா எப்பொழுதும் Mouseம் கையுமா தான் உக்கார்ந்து இருப்பாரு..

படிக்கிற மேஜைக்கு பக்கத்துலையே Window இருந்தாலும்
இவரு நூலு விடுறது எல்லாம் Windows வழியா தான்..

GOD பற்றி எழுத ஆரம்பிச்சிட்டாலும்..
இவரு Blog மேட்டர்ல ஒரு பெரிய Devil..

இவரு எழுதறதை பார்த்தா Futureல பெரிய விஞ்ஞானியா வருவார்னு எல்லாம் நினைக்கலாம்
ஆனா நான் இன்னமோ இவர்
"அனு" விஞ்ஞானியா வருவார்ன்னு தான் நினைக்கிறேன்.

26 comments:

பிரியமுடன்...வசந்த் said...

என்னாச்சு வினு?

கதை ??????????????????????????...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வினோத் உங்கள் திங்கள் குறிப்புகள் நல்லாவே இருக்கு.. அதென்ன நிகழ்ச்சி.. எங்கெங்கோ தேடிப்பிடிக்கறீங்க போல... ;-)

என் பக்கம் said...

நல்லா இருக்கு வினோத்

வினோத்கெளதம் said...

@ பிரியமுடன்...வசந்த்..

என்ன கதை வசந்த் !!

@ ச.செந்தில்வேலன்..

நன்றி தல..எல்லாம் டீவியில் பார்ப்பது தான்..

@ என் பக்கம்..

நன்றி பிரதாப்..எங்க இருக்கிங்க..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஹலோ குரு இப்படி சப்பையாவா புதிர் போடுறது? நம்ம பப்பு தானே? அது.
நாங்க எல்லாம் அப்புடி கண்டுபுடிப்போம்ல, வழக்கம் போல திங்கள் இனிமை, ஓட்டுக்கள் போட்டாச்சு

ஹாலிவுட் பாலா said...

////யோசிச்சிப்பார்தால் அப்பட்டாமான உண்மை தான்./////

இதையெல்லாம் யோசிக்கனுமா? :) :)

=======

ஓஹோ... அவரு அனு விஞ்ஞானியா?

நான் என்னென்ன விஞ்ஞானியா.. அந்த காலத்துல இருந்தேன்னு யோசிச்சா......

ஹும்.. லிஸ்ட் பெரிசா போவுது!

♠ ராஜு ♠ said...

ஏற்கனவே யாரோ "நாணயம்"ஒரு இங்கிலீஷ் பட உல்டான்னு சொன்ன ஞாபகம்..!
டாக்டர்.காமராஜ் வசந்த் டிவி மட்டுமல்ல, எல்லா டிவிலயுமே வருவாப்ல..!
:)

அப்பறம்,. அந்த புதி பதிவர் 'பப்பு' வா..?

☀நான் ஆதவன்☀ said...

யோவ் ஞாயித்துகிழமை போட்டுருக்கே. தலைப்பு மட்டும் திங்கள் இனிதேன்னு வச்சிருக்க?

நாணயம் இதுவரை வந்த வந்த சுமார் 1000 பேங்க் ராப்ரி ஹாலிவுட் படங்களையும் மிக்ஸ் பண்ணி வந்திருக்கும். அதனால எந்த படம்னு கண்டுபிடிக்க கஷ்டமா தான் இருக்கும்

கலையரசன் said...

அண்ணன் கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் பதிவு செய்கிறேன்!!

கலையரசன் said...

//ஒரு இருபது நாளுக்கு மேலேயே அலுவலகத்தில் இணைய தொடர்பு இல்லை கொஞ்சம் பிரச்னை. //

வாரத்துக்கு 4 பதிவு போடறதுலேயே தெரியுது பாஸ்.. உங்க பிரச்சனை!

// Dr.காமராஜ் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்..//

(காம)ராஜ்!! இவங்களுக்கு எல்லாம் எப்டிடா கரைக்டா பேரு வைக்கிறாங்க பாரு வீட்டுல...

//S.P சரண் ஓரளவு வித்தியாசமான கதை களத்தையே தேர்ந்து எடுத்து படம் பண்ணுகிறார்.//

எப்டி வித்தியாசமா பண்ணாலும் நீ கரைக்டா முடிவை கண்டுபுடிச்சிடுவியே!! டேய்.. கொய்யால.. அது ஹாலிவுட் படம் இல்லடா! Bankன்னு தெலுங்கு படம் ரீமேக்கு!!!!

KISHORE said...

//CATக்கு படிக்கிறேன்னு சொல்லுவாரு
ஆனா எப்பொழுதும் Mouseம் கையுமா தான் உக்கார்ந்து இருப்பாரு..//

படவா பப்பு..

//படிக்கிற மேஜைக்கு பக்கத்துலையே Window இருந்தாலும்
இவரு நூலு விடுறது எல்லாம் Windows வழியா தான்..//

இங்க தான் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்..

KISHORE said...

//நான் என்னென்ன விஞ்ஞானியா.. அந்த காலத்துல இருந்தேன்னு யோசிச்சா...... //
எந்த காலம்.. 1950?

கோபிநாத் said...

மச்சி இந்த மாசம் மட்டும் நீ 5 பதிவு போட்டுயிருக்க...உனக்காடா நெட் பிரச்சனை!!!?? ;))

\\எப்டி வித்தியாசமா பண்ணாலும் நீ கரைக்டா முடிவை கண்டுபுடிச்சிடுவியே!! டேய்.. கொய்யால.. அது ஹாலிவுட் படம் இல்லடா! Bankன்னு தெலுங்கு படம் ரீமேக்கு!!!!\\

ஆகா...தெலுங்கு படத்தை கூட விடவில்லையா நீ...கலக்கு ராசா ;))

thenammailakshmanan said...

//இப்பயும் 24 மணி நேரமும் இந்த கணினியை கட்டிக்கொண்டு அழுவதைப்போல் ஒரு ஃபீலிங். ஊரில் இருந்தப்பொழுது வெறும் டிவி பார்ப்பதோடு சரி இங்க வந்து கிட்டதட்ட இதுக்கு(கணினி) கொஞ்சம் 'அடிக்ட்' ஆனா மாதிரியே இருக்கு.ஆனாலும் வேறு வழி இல்லை. என்னை கேட்டா நான் இதை தான் "இடியட் பாக்ஸ்" என்பேன்.//

In my case also its true vinodh

thenammailakshmanan said...

//அண்ணன் கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//


ஆழ்ந்த அனுதாபங்களை நானும் தெரிவித்துக்கொள்கிறென் வினோத்

வினோத்கெளதம் said...

@ ♠ ராஜு ♠ ..

//டாக்டர்.காமராஜ் வசந்த் டிவி மட்டுமல்ல, எல்லா டிவிலயுமே வருவாப்ல..!//

அப்படியா ஆனா நான் முதல் முறையா வசந்த்ல தான் பார்கிறேன்..!!

//அப்பறம்,. அந்த புதி பதிவர் 'பப்பு' வா..?//

இதில் என்னபா சந்தேகம்..பப்புவை இந்த பக்கமே காணோம் கோசிக்கிடானா..!!

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்..

நன்றி குரு..நீங்க யாரு எந்த புதிரா இருந்தாலும் சொடுக்கு போடுறதுக்குள்ள
கண்டுப்பிடிச்சிடிவிலேய்..

@ ஹாலிவுட் பாலா..

இன்னும் நிறையா யோசிச்சேன்..ஆனா கொஞ்சம் தான் எழுதுனேன்..அது வரைக்கும் தப்பிச்சிங. :))

//ஹும்.. லிஸ்ட் பெரிசா போவுது!//

அந்த லிஸ்டயும் 18+ல சேர்க்கவும்..

வினோத்கெளதம் said...

@ ☀நான் ஆதவன்☀..

//யோவ் ஞாயித்துகிழமை போட்டுருக்கே. தலைப்பு மட்டும் திங்கள் இனிதேன்னு வச்சிருக்க?//

திங்கள்ன்னா நாளுன்னு ஒரு அர்த்தம் இருக்கு நண்பா..(எப்பா தப்பிச்சேன்).

@ கலையரசன் ..

//வாரத்துக்கு 4 பதிவு போடறதுலேயே தெரியுது பாஸ்.. உங்க பிரச்சனை! //

யோவ்..என்னோட பொறுப்புணர்ச்சியை பார்த்து பொறமை படுயா..

//அது ஹாலிவுட் படம் இல்லடா! Bankன்னு தெலுங்கு படம் ரீமேக்கு!!//

அதுவே BANGIYANGUனு
ஒரு இத்தாலிய பட ரீமேக்கு அது தெரியுமா உனக்கு..

//எப்டி வித்தியாசமா பண்ணாலும் நீ கரைக்டா முடிவை கண்டுபுடிச்சிடுவியே!!//

இறைவன் கொடுத்த வரமப்ப வரம் ..:))

வினோத்கெளதம் said...

@ Kishore..

//இங்க தான் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்..//

ஜெர்க் ஆகுற அளவுக்கு அங்க ஒன்னும் இல்லையே..

//எந்த காலம்.. 1950?//

அவர் சொன்னது அவங்க தாத்தாவ பத்தி இல்லை ..:)

@ கோபிநாத் ..

அடடா கண்ணு வைக்கிறங்கலே இந்த பசங்க..:)

வினோத்கெளதம் said...

@ thenammailakshmanan ..

//In my case also its true vinodh//

பெரும்பாலானவங்க அப்படி தான் இருக்கோம் போல..!!

பா.ராஜாராம் said...

intresting வினோ!

pappu said...

யப்பா, முதல் நாளே நான் தான் கிடைச்சேனா? CATங்கிற வார்த்தைய கேட்டதும் எல்லாரும் Dog ஆ வந்து என்னய கவ்விட்டாங்க.

நல்ல வேளை god பத்தி எழுதின dogனு சொல்லலயே!

வினோத்கெளதம் said...

@ பா.ராஜாராம்..

நன்றி தல..:)

@ Pappu..

//யப்பா, முதல் நாளே நான் தான் கிடைச்சேனா? //

அது இன்னமோ நீ தான் முதல்ல மாட்டுன..:)

KISHORE said...

//திங்கள்ன்னா நாளுன்னு ஒரு அர்த்தம் இருக்கு நண்பா..(எப்பா தப்பிச்சேன்).//
உனக்கு தமிழ் சொல்லி குடுத்த வாத்தியார் நாக்குல ஆசிட் ஊத்த.. " திங்கள்"னா மாதம் டா

வினோத்கெளதம் said...

Oho Ritu Mr.Kishore

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே கவணிக்கரமாதுரி சொல்லியது அருமை

வினோத்கெளதம் said...

நன்றி தல..:)